தனக்கு முன் நின்றிருந்த அஸ்வத்தையும் அஜயும் கண்டு, இவர்கள் யாரென புருவத்தை சுருக்கிய யோசித்த ஜித்தேஷிற்கு சற்று நேரத்திலே கீதாவைப் பற்றி சேகரித்த விபரங்கள் அடங்கிய கோப்பில் இவர்களின் முகத்தை கண்டிருப்பது நினைவில் வர, கோபத்துடன் அவர்களை நெருங்கியவன்,
Advertisement
“ஹவ் டேர் யூ *****?? என்கிட்டயே அந்த கீதாக்காக மோதிப் பார்க்குறீங்களா?? நான் யாருன்னு தெரியுமா??” என்று அவன் சினம் கொண்ட சிங்கம் போல் கர்ஜிக்க,
Advertisement
அதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் அஸ்வத்தோ, “ஏன் நீ யாருன்னு நீயே மறந்துட்டியா எங்ககிட்ட கேட்குற??” என்று சிரியாமல் கேட்க, அஜய் அவனைக் கண்டு வியப்பாய் புருவத்தை உயர்த்தியவன், “வாவ் நல்ல இம்ப்ரூவ்மென்ட் ப்ரோ” என அவனை பாராட்டினான்.
Advertisement
தன் கோபத்தை சட்டை செய்யாமல் இருவரும் தன்னை கேலி செய்து கொண்டிருந்ததில் ஜித்தேஷின் கோபம் பெட்ரோல் விலையை விட வேகமாக எகிற, அஸ்வத்தின் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டவன் அவனைத் தாக்க முயல,
Advertisement
அவனை ஒரே அடியில் கீழே சாய்த்திருந்தான் அஸ்வத்.
நேற்றிலிருந்து சாப்பிடாத சோர்வும், இத்தனை மாடி ஏறி வந்த கிறக்கமும் ஜித்தேஷை பலவீனமாக்க, அஸ்வத்தின் ஒரே அடிக்கே கீழே விழுந்து சுருண்டிருந்தான்.
அவனை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்த அஸ்வத், “உன்னோட காதலிக்கு ஒன்னுன்னுனதும் உள்ள துடிக்குதோ.. இப்படி பதறிப்போய் ஓடி வர… இதே மாதிரி தான உன் தம்பியால சீரழிஞ்ச பொண்ணுங்களோட குடும்பமும் பதறிருக்கும்… அது உனக்கு புரியலையா?? நீ உன் தம்பியை கண்டிச்சு ஒழுங்கா வளர்த்திருந்தா இன்னைக்கு எத்தனையோ பொண்ணுங்களும் அவங்க குடும்பங்களும் நிம்மதியா இருந்திருக்கும்.. ஆனா நீ அவனை ஒழுங்கா வளர்க்கவும் இல்லாம அவன் பண்ண தப்பையெல்லாம் உன் பணத்தால மூடி மறைச்சு அவனை இன்னும் தப்பு பண்ண தூண்டியிருக்க.. பெண்கள் வாழ்க்கையை நாசம் பண்ண உன் தம்பி ஒரு குற்றவாளின்னா அவன் தப்பு பண்ண ஊக்குவிச்ச நீ அவனை விட பெரிய குற்றவாளி… உன்னோட தம்பி ஒருவேளை இப்போ உயிரோட இருந்தா நிச்சயம் அண்ணின்னு கூட பார்க்காம உன்னோட ஷ்ராவனி பேபியையும் சூரையாடிருப்பான்.. அப்போவும் உன் தம்பிக்கு சப்போர்ட் பண்ணுவியா ஜித்தேஷ்??? சொல்லு!!! ஆன்சர் மீ நவ்” என அஞ்சலிக்கு நடந்த கொடுமையை எண்ணி இத்தனை நாளாய் தன் மனதில் வைத்து குமுறிக் கொண்டிருந்ததை அவன் கேட்டுவிட,
ஜித்தேஷிற்கு யாரோ தன்னை சாட்டையால் அடிப்பதைப் போல் இருந்தது.
அடிப்படையில் அவனும் நல்லவன் தான்.. ஆனால் தம்பி மீது கொண்ட அதீத பாசம் அவன் கண்களை மறைக்க, இத்தனை நாளும் இப்படி ஒரு கோணத்தில் அவன் மனம் சிந்தித்ததே இல்லை.
அஸ்வத் சொல்வதும் சரி தான், நிச்சயம் தன் தம்பி உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் அண்ணியென்று கூட பாராமல் அவன் ஷ்ராவனியையும் விட்டு வைத்திருக்க மாட்டான்.
அதை உணர்ந்து கொண்ட ஜித்தேஷும் பதிலேதும் பேச முடியாமல் மௌனம் காக்க,
“பேசு ஜித்தேஷ்!!! நீயும் உன் தம்பியை தண்டிக்க மாட்ட மத்தவங்க தண்டிச்சாலும் அவங்களை உயிரோட விடமாட்ட.. இப்படி இருந்தா இதுவரைக்கும் அவனால வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?? சப்போஸ் என்னோட அஞ்சலிக்கு நடந்த அதே கொடுமையை இப்போ உன்னோட ஷ்ராவனிக்கு நாங்க பண்ணிருந்தா நீ எங்களை அப்படியே விட்டிடுவியா?? அடுத்த நிமிஷமே கொன்னு போட்டிருப்ப.. அதே தான கீதாவும் பண்ணா அதை ஏன் உன்னால ஏத்துக்க முடியலை” என்று அஸ்வத் அவனை கேள்விக் கணைகளால் தாக்க,
ஜித்தேஷினால் தான் அவனின் கேள்வி ஒன்றிற்கு கூட பதிலளிக்க முடியவில்லை.
அஸ்வத் கூறுவது அனைத்தும் நூறு சதவிகிதம் சரி தான், இருந்தாலும் தான் தூக்கி வளர்த்த தம்பி மேல் கொண்ட பாசம் அவனை பேச விடவில்லை.
அஸ்வத் பேசட்டும் என கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஜய் பின் அங்கு தலையைத் தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ஜித்தேஷின் அருகில் சென்று ஒரு காலை மட்டும் மடக்கி அமர்ந்தவன் அவன் நாடியைப் பற்றி தூக்கி, “ஸ்கெட்ச் போட்டு தூக்குன எங்களுக்கு உன்னோட லவ்வரை என்னவேணா பண்ணியிருக்க ஒரு நிமிஷம் ஆகியிருக்காது.. ஆனா நாங்க அதுக்காக இந்த கடத்தலை பண்ணலை.. உன் தம்பியால எத்தனை பொண்ணுங்களும் அவங்க குடும்பமும் அனுபவிச்ச வலியை உனக்கு புரிய வைக்க மட்டும் தான் இந்த கடத்தலை பண்ணோம்.. இப்போவும் ஏதும் புரிஞ்சுக்காம உன் தம்பியை கொன்ன கீதாவை பழி வாங்கியே தீருவேன்னு சொன்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, அங்க தூங்கிட்டு இருக்க உன் லவ்வரை எழுப்பி உன் தம்பி பண்ண பழியெல்லாம் உன் மேல போட்டுவிட்டு போய்ட்டே இருப்பேன்.. அதுவும் பாவம் உலகம் அறியா பிள்ளை மாதிரி தான் இருக்கு நான் சொன்னதும் அதை உடனே நம்பி ஒன்னு உன்னை ‘ போடா அயோக்கிய ராஸ்கல் ‘ அப்படின்னு காரி துப்பிட்டு உன் உறவே வேண்டாம்னு போயிடும் இல்லை அப்படின்னா இப்படி ஒரு ரேப்பிஸ்டை போய் லவ் பண்ணிட்டோமேன்னு ஒரேடியா மேல போய் சேர்ந்திரும்.. ரெண்டுல எது நடந்தாலும் சேதாரம் உனக்கு தான் டா மாப்ள.. அதுனால இனிமேல் என் அவதார் குட்டி பின்னாடி நாலு தடியன்களை சுத்த விடுறதை நிப்பாட்டிட்டு உன்னோட ஆகாஷ்வாணியோ ஷ்ராவாணியோ ஏதோ ஒரு வாணி கூட டூயட் பாடுற வேலையை மட்டும் பாரு.. ரைட்டா???” என தன் பாணியில் அவனிற்கு மிரட்டல் விடுத்தான்.
ஷ்ராவனியின் குழந்தை மனதைப் பற்றி அறிந்த ஜித்தேஷும், அஜய் ஏதும் அவன் சொன்னதை செய்துவிட்டால் நிச்சயம் அவன் சொன்னபடி தான் ஷ்ராவனி நடந்து கொள்வாள் என புரிந்து வைத்து தான் இருந்தான்.
அஜய் மிரட்டலுக்காக இல்லையென்றாலும், அஸ்வத் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அவன் மனதில் சாட்டையாக அடித்ததன் விளைவால் தன் தவறை உணர்ந்த ஜித்தேஷ், தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல், “எனிவே.. நடந்தது நடந்து போச்சு.. ஏதோ போனா போகுதுன்னு உங்களை சும்மா விடுறேன்.. இனி என் லைன்ல அந்த கீதாக்கு சம்பந்தப்பட்ட யாரும் க்ராஸ் ஆக கூடாது.. புரிஞ்சுதா??..ஆனா லிஃப்ட் வேலை செய்யலைன்னு சொல்லி இத்தனை மாடி என்னை ஏறவிட்டதுக்கு மட்டும் உங்களை நான் சும்மா விட மாட்டேன்.. யூ கைய்ஸ் ஹாவ் டூ பே ஃபார் திஸ்” என சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டவன் கடைசி வரியை மட்டும் கடுப்புடன் சொல்ல,
உடனடியாக தன் சட்டைப்பையை துலாவிய அஜய், “என் கிட்ட இப்போ கையில பணம் ஏதும் இல்லை.. அஷூ நீ ஏதும் வச்சிருக்க?? சார் பே(pay) பண்ண சொல்றாரு.. ” என சிரியாமல் ஜித்தேஷை சீண்டி வம்பிழுத்தான்.
அவனின் குறும்புத்தனத்தைக் கண்டு ஜித்தேஷிற்கே புன்னகை அறும்ப, ” யூ ஆர் இம்பாசிபிள் மேன்” எனக் கூறி நகைத்தவன்,
“ஆமா அவ்ளோ செக்யூரிட்டீஸ் தாண்டி என்னோட வனி பேபியை எப்படி கடத்துனீங்க?” என இத்தனை நேரமாய் தன் மனதை குடைந்து கொண்டிருந்த சந்தேகத்தை வினவ,
“அதுவா!!!!” என கோரசாக அஸ்வத்தும் அஜயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவர்களின் நினைவு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்னால் பயணித்தது.
அஞ்சலியைப் பற்றிய உண்மையை அறிந்தவுடனே ஜித்தேஷின் பிரச்சனையை தங்கள் திருமணத்திற்கு முன் தீர்க்க வேண்டும் என அஸ்வத்தும் அஜயும் முடிவெடுத்துக் கொள்ள, அதன் படி முதற்கட்டமாய் ஜித்தேஷைப் பற்றிய விபரங்களை சேகரிக்க மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகினர்.
அந்த டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பழக்கமாகியவன் தான் ‘ கார்த்திக் ‘ (அத்தை பெத்த பூங்குயிலே கதையின் நாயகன்) . அவனின் அற்புதமான திட்டம் தான் ஷ்ராவனியைக் கடத்தி ஜித்தேஷை அவர்களின் வழிக்கு கொண்டுவருவது.
அவனின் திட்டப்படி ஷ்ராவனி கோவிலுக்கு வரும்போது அவளுக்கு தன் மனைவி வர்ஷூவின் கைகளால் செய்த சர்க்கரை பொங்கல் பாஸ்தாவை பிரசாதம் என ஏமாற்றி ஷ்ராவனிக்கு கொடுத்து அவளின் வயிற்றிற்குள் கலவரம் ஏற்படுத்தி அவளை பலத்த பாதுகாப்பில் இருந்து விடுவித்தவன், தனியாக அவள் பாத்ரூம் செல்கையில் நைசாக கடத்திக் கொண்டு வந்திருந்தான்.