Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிர் தேடும் உன்னை

உயிர் தேடும் உன்னை 3 1

உயிர் தேடும் உன்னை…

 அத்தியாயம் -3



Advertisement

Advertisement

 தம்பி போன் செய்ததும் மீனாட்சிக்கு மனது தாங்கவில்லை.

Advertisement

 ஐயோ நேத்தே ரொம்ப பீவரா இருந்ததே,  என்று வேகமாக டாக்ஸி பிடித்து வந்தாள்.

Advertisement

 அவள்  அந்த வீட்டிற்கு நுழையும் போது உள்ளே இருந்து ஓடி வந்தாள்.

ஒரு சின்ன சிட்டு.

 குழந்தை  கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள் மீனாட்சி.

 குழந்தையோ கீழே விழுந்து விடுவேன் என்று கண்ணை மூடிக்கொள்ள குழந்தையை விழாமல் பிடித்த மீனாட்சி.

 “பார்த்து விளையாடுங்கடா” என்று சொல்ல.

  குழந்தையோ, மீனாட்சி பார்த்து சிரித்து விட்டு ஓடி விட்டாள்.

 சிவா இருக்கும் அறைக்கு வந்தாள் மீனாட்சி சிவாவுக்கு உடம்பு நெருப்பாக கொதித்தது.

 “ஏண்டா இப்படி உடம்பு சரியில்லாத நேரத்துல   வேலை பார்க்கிற” என்று  தம்பியை திட்டிக்கொண்டே அவனுக்கு காய்ச்சலுக்கு ஊசியைப் போட்டவள் “சாப்டியா? எப்ப சாப்பிட்ட?” என்று கேட்டாள்.

 அவன் இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி  என்று சொல்ல.

 கிச்சன் சென்றவள் 10 நிமிடத்தில் கஞ்சியை வைத்து ஆற்றிக் எடுத்து கொண்டு வந்து, தம்பியை  குடிக்க வைத்து,  மாத்திரை விழுங்க சொல்லிவிட்டு. அவன் தலை தொட்டு பார்க்க  சூடாக  இருக்க.

ஈர துணியை நனைத்து  அவன் நெத்தியில் வைத்தாள்..

சிவாவுக்கு  இப்போ கொஞ்சம் சூடு குறைந்தது,  கண்ணை திறந்து அக்காவை  பார்த்தவன்.

 “என்னக்கா எங்க போயிட்டு வந்த” என்றான்  அவளை பட்டு புடவை கட்டி இருந்ததை பார்த்து.

 ‘”நம்ம கஸ்டமர் ஒருத்தருக்கு முருகர் கோயில்ல கல்யாணம் டா அங்க போயிட்டு வந்தேன்.

 நீ போன் பண்ண உடனே அப்படியே ஓடி வந்துட்டேன்” என்றான்.

 “அக்கா எனக்கு ஒரு ஹெல்ப்” என்றான்.

“அடி வாங்குவ என்ன செய்யணும் சொல்லு” என்றாள் மீனாட்சி.

“நான் ஆல்ரெடி குக் பண்ணிட்டேன் ஒரு பத்து பேருக்கு, அதை தனியா எடுத்து வச்சிருப்பாங்க,  அதை நீ மாடியில் இருக்கிற டைனிங் டேபிளுக்கு  கொண்டு போய் வச்சிட்டு வந்துடுறியா?,

 இங்க பாரு… என் போன்ல இருக்கு பாரு இதுல இருக்குற ஐட்டம்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணி மட்டும் வச்சிட்டு வந்துரு கா” என்றான்.

 ” சரிடா, நான் பாத்துக்குறேன் நீ தூங்கு” என்று அவள் கதவை சாத்திவிட்டு தன் புடவை  இடுப்பில் சொருகி விட்டு.கிச்சன் நோக்கி சென்றாள், ..

 அங்கே உள்ளவர்கள் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருக்க.

 மீனாட்சியை  பார்த்தவர்கள் “எப்படி இருக்கீங்க மீனாட்சி ,  சிவா சார பார்த்தீர்களா?  இப்ப பரவாயில்லையா சிவா சாருக்கு” என்று விசாரிக்க.

” தூங்குறான்” என்றவள்.

“எந்தெந்த ஐட்டம்ஸ் மாடிக்கு எடுத்துட்டு போகணும்” என்று கேட்க.

“அது அங்க இருக்கு பாருங்க” என்று சொல்ல.

 அங்கே ஒரு  பெரிய  தள்ளும் மாடல்   ட்ரேயில் அணைத்தையும்   எடுத்து வைத்திருக்க.

” இது  தான் மேலே  எடுத்துட்டு போகறதா? என்றாள்.

 “ஆமாம் மா  இருங்க நானும் வரேன்” என்று ஒருவர்  சொல்ல.

 அவர்கள்  அங்கே பரபரப்பாக வேலை செய்வதை பார்த்த மீனாட்சி.

“நீங்க இங்க கீழ பார்த்துக்கோங்க நான் மேல ரூம்ல வச்சுட்டு வரேன்” என்றவள்.

உணவு ட்ரேயை தள்ளிய படியே  லிப்ட்டில்  மாடிக்கு சென்றாள்.

அந்த மாடியில் உள்ள  டைனிங் அறை சுத்தமாக இருக்க.

 டேபுளின் மீது அழகாக உணவு ஹாட் பாக்சை ஒவ்வொன்றையும்  எடுத்து  வைத்தவள், அவர்கள்  உண்ணுவதற்கு ஏற்றவாறு டேபுளில்  பிளேட்  வைத்து செட் செய்தாள்.

 சிவா கொடுத்த ஈமெயிலில் உள்ள ரெசிபிகள் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும்  ஓபன் செய்து சரி பார்த்துக்கொண்டிருந்தாள்

 சரியாக அந்த நேரம்  அந்த டைனிங் ரூமை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் வீரா..

 கதவை திறந்த சத்தம் கேட்டது. மீனாட்சிக்கு பக் என்றிருந்தது.

ஏற்கனவே சிவா சொல்லி இருந்தான்  யாராவது வருவதற்கு முன்பே  அனைத்தையும்  செட் செய்து வைத்து, கீழே  வந்துவிட வேண்டும் என்று.

 யார் கதவை திறந்தது என்று வீராவை நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சி.

 ஆறடி உயரத்தில் சாட்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து ஒருவர் வந்து நிற்க.

 தலையை குனிந்து கொண்டாள் மீனாட்சி.

 அப்பொழுதுதான் மீனாட்சிக்கு ஞாபகம் வந்தது.

 தண்ணீர் எடுத்து வைக்கவில்லை..

தண்ணீர்  எங்கே  என்று திரும்பி  சுத்தி பார்த்தாள், அங்கே  ஒரு ஜக்கில் தண்ணீர்  இருக்க, அதை எடுக்க போனவளை.

ஆராய்ச்சி பார்வை பார்த்த படியே உள்ளே  வந்தான் வீரா,

அவன் இந்த இடத்தில் இப்படி ஒரு பொண்ணை எதிர் பார்கக வில்லை,.

அதுவும்  பட்டு புடவை கட்டி, உணவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவளை.

ஒருவேளை நம்ம சொந்த கார பொண்ணாக இருக்கோம் தாத்தா சொல்லி  உணவை எடுத்து மேலே வந்து இருப்பாளோ என்று யோசித்த படியே டைனிங் டேபளில் வந்து அமர்ந்தாள்.

அமர்ந்தவன் மீனாட்சியை தான் பார்த்தான், இவளை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே, நம் சொந்தமா இவள்.

சத்தியமா அவளை கேட்டரிங் ஆள் என்று வீராவுக்கு தெரிய வில்லை.

பின்பு விலை உயர்ந்த பட்டு உடுத்தி அளவான நகை அணிந்த, எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாக இருந்த பெண்ணிடம் இருந்த பார்வையை திருப்ப முடியுமா என்ன.

அவளை இன்னும் உற்று பார்த்தான். சிமெண்ட் கலர் புடவை, மெருன் கலர் பார்டர், அதே கலர் வேலைப்பாடு கொண்ட ப்ளாவுஸ்,  சேலையை ஒன் சைடு பின் பண்ணி இருந்தவள், அதை இரண்டாக மடித்து ஏனோ, தானோ என்று தோளில் மடித்து  போட்டிருந்தாள், அது கூட அவ்வளவு அழகாய் தெரிந்தது வீராவுக்கு..

பின்பு அவள் முகத்தை பார்த்தான், சாந்தமான முகம், நெத்திமுலுங்க குங்குமம், சந்தனம், திருநீர் என்று வைத்திருந்தாள், சின்ன தாக ஜிமிக்கி போட்டிருக்க, அவளின் கழுத்தை பார்த்தான் வீரா.

ஒரு வேளை திருமணமான  பொண்ணோ என்று, கழுத்தில் தாலி இல்லை நெத்தில் வகுட்டி குங்குமம் இல்லை,  என்று அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்,, வீரா மீனாட்சி அவன் அருகில் வந்து தண்ணீர்  கிளாசில் ஊற்றி வைக்கும் போது அவள் காலை பார்த்தான், கால் விரலில் மெட்டி இல்லை அப்பாடா இன்னும் இவளுக்கு திருமணம் ஆக வில்லை என்று உறுதி செய்தவன்.

மீனாட்சியை பார்க்க.

அவளோ வந்த வேலை முடிந்தது என்று  வெளியே செல்ல பார்க்க.

.

அவள் இங்கே இருந்து கிளம்புவதை பார்த்தவன்.

“பரிமாறு” என்றான் ஆங்கிலத்தில்.

அவனின் குரலை  கேட்டவளுக்கு, கொஞ்சம் பயம் வர.

சிவா ஏற்கனவே இந்த மாதிரி இடத்தில்  எப்படி இருப்பவர்கள், எப்படி உண்பார்கள் என்று,   சொல்லி கொடுத்திருக்க.

வீரா சர்வ்…  மீ என்று சொன்னதும், தனது கைகளை கழுவி வந்தவள் கைக்கு க்கிளாவுஸ் மாட்ட,..

மீனாட்சி யார் என்று புரிந்து கொண்ட வீராவுக்கு, உடலில் ஒரு இறுக்கம் வந்து விட்டது.

சமையல் வேலை செய்யும் பெண்ணையா நான் இவ்வளவு நேரம் ரசித்து பார்த்தேன் என்று தன்னை தானே நொந்து கொண்டான்..

ஏன்டா வீரா  உனக்கு யாரு சமையல் செய்பவர்கள், சொந்தகாரர்கள் என்று வித்தியாசம் தெரியாத, என்று அவன்  மனசாட்சி கேட்க.

ஒரு மனமோ,  ஏன்டா எந்த சமையல் காரங்கள் இந்த  மாதிரி  காஸ்ட்யும் போட்டு சமைப்பாங்க, என்றவன்.

அவளை மறுபடியும் பார்க்க தொடங்கிவிட்டான்.

மீனாட்சி வீராவின் அருகில் வந்தவள்.

மட்டன் சூப்பை ஒரு பௌலில் ஊற்றி வீரா முன்னாடி ஒரு பிளேட்டில் வைத்து , டிசூ, பேப்பரை அவன் அருகில் வைத்தவள், கிளம்ப பார்க்க.

“வெய்ட்” என்றான்  வீரா.

ஐயோ என்னடா வந்தது உனக்கு, நீயே போட்டு சாப்பிட வேண்டியது  தானே,, கேட்டிரிங் மட்டும் தான் நாங்க, சர்வ் பண்ண முடியாது டா, போடா பனை மரம் என்று  மனதில் வீராவை இவள் திட்ட.

அவனோ சூப்பை ரசித்து, ருசித்து மெதுவாக  குடித்தான்,..

இந்த பனை மரம் எப்போ நம்மலை விடுமோ என்று அவள் புலம்பிய படியே நிற்க.

ஹலோ என்றான் மீனாட்சியை.

அவளோ அவனை ம்ம் என்று பார்க்க.

சூப் காலியாக இருக்க.

பரிமாறு என்று கன்ஜாடை காட்டினான்.

துரை வாயை திறந்து சொல்ல மாட்டாறோ, திமிர் பிடிச்சவங்க, எல்லாம் பண திமிர் என்று நினைத்தவள்.

மட்டன் பிரியாணி இருந்த ஹாட்பாக்சை திருந்து அவனுக்கு காண்பிக்க.

தலையாட்டினான்,, அவள் கொஞ்சமாக வைக்க.

“போதும்” என்பது போல் கை காண்பித்தான், பின்பு அவள் சிக்கன், மீன், முட்டை இருந்த பாக்ஸை திருந்து அவன் முகத்தை பார்க்க.

அவன் கண்களாலே,  மீனாட்சியிடம் பேசினான்  இது வேண்டாம், அது வேண்டும் என்று, அவன் முகத்தை பார்த்தே அவனுக்கு பரிமாறியவள். விலகி செல்ல பார்க்க.

“ஸ்டாப்” என்று அவளை நிக்க சொன்னவன்

அங்கே இருந்த ஒரு டிஸ்சை எடுத்து தர சொல்லி, அவளை போக விடாமல் மீண்டும், மீண்டும் எதையாவது கேட்டு அவளை வெளியே போக விடமால் இம்சை பண்ண.

மீனாட்சிக்கு கடுப்பாக இருந்தது, நான் என்ன இவன் பொண்டாட்டியா இவனுக்கு பக்கத்திலே இருந்து பரிமாற, ஏய் கருவாப் பயலே என்று மனதில் திட்டினாள் வீராவை.

 பார்ப்பதற்கு வீரா கருப்பாக இருப்பான், 6 அடிக்கு மேல் உயரம், ஜிம் பாடி, கையில்லாத டிசர்ட் சாட்ஸும் அணிந்திருக்க.

அவனை வசை பாடிக்கொண்டே அவன் உண்ணும் வரை ஒரு வார்த்தை பேசாமல்,  கண் ஜாடையில் இருவரும் பேச…

அவன் உண்டு முடிக்கும் நேரம் அந்த ரூம்பின் கதவு திறந்தது, சிவாலி ஓடி வந்தவள் “டாடி’ என்று வீரா மேல் ஏறி அவன் கழுத்தை கட்டி கொள்ள.

“பேபி சாப்டீயா”? என்றான் வீரா மகளிடம்.

“நோ டாடி” என்றதும்…

 குழந்தை பின்னாடி 14 வயதில் ஒரு ஆண்மகன் வர, அவன் பார்ப்பதற்கு குட்டி வீரா போலவே இருந்தான்.

 மீனாட்சி  இருவரையும் பார்த்தபடி இருந்தாள். இவனுக்கு இரண்டு பிள்ளைகளா அப்போ திருமணம் ஆனவனா என்றவளின்  முகத்தில் புன்னகை.

 இவ்வளவு நேரம் வீரா திருமணமாகாதவனா இருப்பானா என்று நினைத்தவளுக்கு. இப்போ  அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது  என்று பார்த்தவளுக்கு.

 மனதில் ஒரு சந்தோஷம் ஒரு புன்னகையோடு குழந்தைகளை பார்க்க.

 வீரா அவள் பார்வை மாற்றத்தை கவனித்தான்.

 இவ்வளவு நேரம் உற்றென்று இருந்தவள் தன் பிள்ளைகளை  பார்த்து சிரித்ததும் அவனுக்கும் மனதில் சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்.

 ஆதியை பார்த்த வீரா “சிட் டௌவுன்  ஆதி சாப்பிடு”  என்று சொன்னவன். மீனாட்சியை  பார்த்து “பிள்ளைகளுக்கு  சாப்பாடு குடுங்க” என்றான்.

 அவன் சொன்னதற்கு “ஓகே சார்” என்றவள் ஆதிக்கு சூப்  ஊற்றி பௌவுலில் வைத்து  கொடுத்துவிட்டு.

சிவாலி  பாப்பாவை பார்த்து , “உனக்கு என்ன வேணும் டா” என்று மீனாட்சி கேட்க.

 அவளோ ஒன்று தெரியாமல் முழித்தவள் “எனக்கு பாட்டி செய்கிற டால்  ரைஸ்  வேணும்”  என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!