“அச்சோ பாப்பாக்கு டால் பூவ்வா வேணுமா அது இங்க இல்லடா செல்லம் கீழ இருக்கு ஆண்டி போய் எடுத்துட்டு வரேன் நீங்க கொஞ்சம் வெயிட் பண்றீங்களா”? என்று குழந்தையிடம் சொல்ல.
குழந்தை சரி என்று தலை ஆட்டியது.
Advertisement
“ஒரு நிமிஷம் சார் கீழே போய் எடுத்துட்டு வந்துடுறேன்” என்றவள். ஆதியிடம் “உனக்கு என்னப்பா வேண்டும்” என்று கேட்க..
அவன் சில டிஷ்களை கை காட்டினான். அதை அவன் பிலேட்டில் பரிமாறியவள் கீழே செல்ல பார்க்க குழந்தையோ மீனாட்சியின் புடவை பிடித்து இழுத்தது, என்ன என்று மீனாட்சி பார்க்க.
Advertisement
Advertisement
“தூக்கு” என்று
கை காண்பிக்க.
Advertisement
மீனாட்சிக்கு ஆண்டாள் ஞாபகம் வந்தது, குழந்தையை வாரி அணைத்துக்கொண்டவள், அவளிள் பட்டு கன்னத்தில் முத்தம் வைத்தவள், அவளை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே கீழே சென்றாள்.
இந்த காட்சியை பார்த்த வீராவுக்கு மனம் பாரமாக இருந்தது தன் மனைவி கல்பனா இருந்திருந்தாள் தன் குழந்தைகளை இதே மாதிரி தான் ஆசையாக தூக்கி வளர்த்திருப்பாளோ என்று..
அதற்கு எனக்கு கொடுத்து வைக்கவில்லையே கொரோனா வந்து அவள் உயிரை வாரி சுருட்டி சென்று விட்டதே.
இனி வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்று நினைத்தவனுக்கு மனம் பாரமாக இருந்தது..
விராவின் மனைவி கல்பனா சிவாலி பிறந்து ஒரு மாதத்திலேயே கொரோனாவில், அவள் உயிரை பழி வாங்கியிருக்க அன்னையிலிருந்து குழந்தைகளை சாவித்திரி பாட்டி உதவியோடு தான் வளர்த்து வருகிறான் வீரா.
இரண்டாவது திருமணத்தை பற்றி அவன் எப்பொழுதும் நினைக்கவில்லை.
இன்று ஏனோ மீனாட்சியை பார்த்ததும், அவனுக்கு மனம் தரம் புரண்டது..
முதல் பார்வையிலே அவனை ஈர்த்தாள் மீனாட்சி. அவள் புடவை கட்டி இருந்த வீதம் அப்படியே கல்பனாவை ஞாபகப்படுத்தியது அவனுக்கு.
அவளும் இப்படித்தான் எங்கேயாவது சென்று வந்தால் கூட.அவசரமாக அவனையும் ஆதியையும் பார்த்து, பார்த்து கவனிப்பாள்.
கல்பனா மடித்து போட்டது போல் தான் மீனாட்சி புடவை மடித்து தோளில் போட்டு இருக்க, அவனுக்கு என்னவோ கல்பனாவின் ஞாபகம் வந்தது.
எப்பொழுவதும் உண்டு விட்டு அவன் அறைக்கு சென்று விடுவான். இன்று ஏனோ செல்ல மனம் வரவில்லை ஆதி பார்த்துக் கொண்டே அங்கே தான் அமர்ந்திருந்தான்.
மீனாட்சி சிவாலியை தூக்கிக்கொண்டே அறைக்கு வந்தவள்.
கையில் பருப்பு சாத பாத்திரம் இருந்தது..
ஆதி பக்கத்தில் உள்ள சேரில் சிவாலியை அமர வைத்தவள் ஆதிக்கு என்ன வேண்டும் என்று கேட்க.
” அவன் போதும் ஆன்டி” என்று சொல்ல.
“வளர்ர பையன் இன்னும் கொஞ்சம் சாப்பிடு, பா” என்று வேற உணவை எடுத்து காண்பிக்க.
அவன் கேட்டதை பரிமாறினாள் மீனாட்சி.
அவனோ மீனாட்சியை ஏக்கமாக பார்த்தபடியே உண்டான்.
அவன் கிளாசில் தண்ணீர் காலியாக இருப்பதை பார்த்தவள் தண்ணீர் ஊற்றி அவன் பக்கத்தில் வைத்து விட்டு,,தண்ணீர் குடிச்சிட்டு சாப்பிடு என்று சொல்ல.
ஆதி ஏக்கமாக மீனாட்சியை பார்த்தான், அவன் கண்ணீல் என்ன கண்டாளோ மீனாட்சி.
அவன் தலையை வருடி விட்டவள்.
“சாப்பிடு தம்பி” என்றவளுக்கு, கண் கலங்கி இருந்தது, ..
சிறிது நேரத்துக்கு முன்புதான் கீழே சிவாலிடம் மீனாட்சி கேட்டு இருந்தாள்.
தன் கணவரை முகத்தை பார்த்து இந்த பொண்ணு யார் என்பது போல் பார்க்க..
“நமக்கு கேட்டரிங் ஆர்டர் கொடுத்திருக்கோமே அந்த பையனோட அக்கா. அந்த பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால பார்க்க வந்திருக்காங்க” என்றார்.
சாவித்திரி மீனாட்சி பார்த்து சிரித்தவர்.
“உன் பெயர் என்னம்மா?” என்று கேட்க.
” மீனாட்சி மா” என்று சொல்லி விட்டு அவள் சிவாலி ஊட்டி முடித்தவள்.
“உங்களுக்கு பரிமாறவா”? என்று கேட்க.
“இல்லம்மா நாங்களே போட்டு சாப்பிடுகிறோம், நீ உன் வேலையை பாரு” என்ற சாவித்திரி கூறிவிட..
மீனாட்சி சிவாலிக்கு ஊட்டி முடித்து, ஒரு தலை அசைப்போடு கீழே சென்று விட்டாள்.
வீராவின் பார்வை மீனாட்சியை பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி, இது சரிவராது என்று அவளை அனுப்பி இருந்தார்..
பேரனை பத்தி நன்கு தெரியும் அவருக்கு அவன் எவ்வளவு ஸ்டேட்டஸ் பார்ப்பான் என்று.
அவருக்கு தெரியவில்லை அவனுக்கு பிடித்து விட்டால் என்ன வேண்டுமானால் செய்வான் என்று.
அன்று இரவும் மீனாட்சி பார்க்க வேண்டும் என்று வீராவுக்கு தோன்ற சரியாக எட்டு மணிக்கு டின்னர் ரெடியாக இருக்கும், அவனோ மீனாட்சியை பார்க்க வேண்டும் என்று 7.30 மணிக்கே அந்த டைனிங் ரூம் வந்திருந்தான்.
டின்னர் இன்னும் கொண்டு வைக்ககாமல் இருக்க, ஐந்து நிமிடம் அவன் அறைக்கு சென்று வரலாம் என்று அவன் செல்ல.
அதற்க்குள் அவனுக்கு ஒரு முக்கியமான போன் கால் வர..
வீரா பேசி முடித்து வரும்போது டின்னர் ரெடியாக டைனிங் டேபளில் இருந்தது.
மீனாட்சி அவன் போன் பேசிக்கொண்டு இருக்கும் போதே உணவை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்…
அவளுக்கு வீராவின் பார்வை பிடிக்கவில்லை. தன்னை ஆராய்ச்சி பார்க்கும் பார்வை பார்க்கிறான்.
மேலும் அவன் பார்வை அவளுக்கு வேறு கதை சொல்ல.
அவன் நினைத்தது என்றைக்கு நடக்காது என்று மனதில் நினைத்திருந்தாள்,..
அவளுக்கும் வேலைகள் வரிசை கட்டி இருந்தது..சமையல் வேலை மேற்பார்வை பார்க்க வேண்டும் சிவாவுக்கு ரொம்ப உடம்பு முடியாமல் இருக்க, ஆண்டாளையும் அழைத்து வந்து விட்டாள் பெரியவர் வீட்டிற்கு .
சிவாவின் அறையிலே ஆண்டாளை விட்டவள். ஹோட்டலுக்கு சென்று இருந்தாள், அங்கே ஹோட்டலில் சேல் எப்படி நடந்து இருக்கிறது என்று பார்த்து விட்டு வந்தவள்.
சில சமையல் பொருட்கள் பத்தாமல் இருக்க, அதையும் கடையில் ஆர்டர் போட்டு இருந்தாள், பொருள்களை வாங்கி வர நடு இரவானது.
உடல் வலி பயங்கரமாக இருந்தது தம்பி தனியா எப்படி இவ்வளவு நாள் இதை பார்த்தான் என்று நினைத்தவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களும் வீராவின் கண்ணில் மீனாட்சி படவே இல்லை.
கல்யாண வேலைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்க.
நாளைக்கு கல்யாணம் என்று இருக்க வீட்டில் இருந்த கொஞ்சம் பேரு மட்டுமே.
வெளியில் இருந்து அதிகம் பேர் வரவில்லை ஒரு 100, 150 பேர் மட்டுமே இருந்தனர். வீட்டின் பக்கத்திலேயே கல்யாணத்துக்காக பந்தல் போட்டிருந்தனர்,.
உணவு பரிமாற என்று சில இடங்கள் அழகழகாய் ஜோடித்த வண்ணம் இருக்க.
மீனாட்சிக்கு அதை எல்லாம் பார்க்க நேரமில்லை அவளின் வேலையை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிவாவுக்கு ஒரளவிற்க்கு உடல்நிலை தேறி இருந்தது.அவனும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் இருந்தாலும் தம்பியை தனியே விட்டு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை..
கல்யாணம் முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் தானே தம்பியை சேர்த்து அழைத்துச் சென்று விடலாம் என்று ஆண்டாளுக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டவள் அந்த வீட்டில் தங்கி கொண்டாள்..
பெரியவர் கல்யாணத்திற்க்கு அனைவருக்கும் உடை எடுத்து கொடுத்திருந்தார் சிவாவுக்கு, மீனாட்சிக்கும் அங்கே வேலை செய்யும் அனைவருக்கும் கூட அவர் உடை எடுத்துக் கொடுத்திருந்தார்…
கல்யாணம் என்பதால் அதிக டிஸ்களை சமைக்க வேண்டும் என்று இருந்தது.
மீனாட்சிக்கும், சிவாவுக்கும் வேலை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
இருந்தாலும் அனைத்தையும் பார்த்துக் கொண்டனர்.
அதிகாலை கல்யாணம் என்பதால் பறபறப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாள் மீனாட்சி.
திடீரென்று அனைவரும் பதட்டமாக பெரியவர் ரூம்பிற்கு செல்வதை பார்த்த மீனாட்சியை..
என்னவென்று கேட்க..
கல்யாண பொண்ணு மயங்கி விழுந்துட்டாங்களாம் என்று சொல்ல.
அப்படியா என்றவள் வேகமாக சென்றாள்.
ஒரே கூட்டமாக பெரியவர் அறையில் இருக்க. கூட்டத்தை கொஞ்சம் விளக்கியவள்.
“எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க” என்றாள் மீனாட்சி.
அங்கு யாரோ மயங்கி படுத்திருப்பது போல் தெரிய “கொஞ்சம் தள்ளிப் போங்க” என்று பாதி பேரு வெளியே போகச் சொன்னாள்.
மயங்கி கிடந்தவரின் அருகில் செல்ல.
சாவித்திரி பாட்டி?.
கல்யாண பொண்ணு தானே மயங்கி விழந்தத சொன்னாங்க பாட்டி மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க என்று நினைத்தவள்.
சாவித்திரி அருகில் சென்று முதலில் பல்சை செக் செய்தாள், பின்பு பாட்டியின் கண்ணை திறந்து பார்க்க அது எல்லாம் சரியாகத்தான் இருந்தது, சிறிய மயக்கம் என்று நினைத்தவள்.
அங்கே பயந்து போய் இருந்த பெரியவரிடம்.
“ஒன்னும் பெரிய விஷயம் இல்ல தாத்தா, சின்ன மயக்கம் தான்” என்றவள் உடனே திரும்பிப் பார்க்க சிவாவும் வந்திருந்தான்.
“ஆம்புலன்ஸ் அவசியமில்லை சார் ஜஸ்ட் சின்ன மயக்கம் தான் ஒரு இன்ஜெக்ஷன் போட்டு டேப்லெட் போட்டா சரி ஆயிடும். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க போய்க்கலாம், இப்போ ஹாஸ்பிடல் போனா கல்யாணம் எப்படி நடக்கும்” என்றாள்.
“நீங்க என்ன பெரிய டாக்டரா சமையல்காரங்க தானே பெரிய டாக்டர் மாதிரி பேசுறீங்க”?.. என்றான்
மூன்று நாள் அவனை பார்க்க வராமல் இருந்த மீனாட்சியை முறைத்தபடியே அவன் பேச..
“நான் டாக்டர் இல்ல சார், நர்ஸ் முதியோர் இல்லத்தில் கொஞ்ச நாள் வேலை பார்த்து இருக்கேன் அதனால எனக்கு எல்லாம் தெரியும் சின்ன மயக்கம் தான் பாட்டிக்கு, 10 நிமிஷத்துல எழுந்து உட்கார்ந்துடுவாங்க கல்யாணம் முடிச்சதுக்கப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு.. நீங்க பாட்டியை கூட்டிட்டு போய் ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க” என்றாள்.
அவள் சொன்னது போலே சிவா அவளின் பேக்கை கொண்டு வந்ததும் அதில் இருந்து ஒரு இன்ஜெக்ஷனை பாட்டிக்கு போட்டவள்..
ஒரு மாத்திரை எடுத்து பாட்டியின் நாவில் வைக்க பாட்டி ஒரு நிமிடத்திலே எழுந்து அமர்ந்திருந்தார்.
பெரியவர் சாவித்திரி கண் முழித்ததும் “சாவித்திரி உனக்கு ஒன்னும் இல்லையே”? என்றும்.
“நான் நல்லா தான் இருக்கேன் திடீர்னு ஏதோ யோசனை யோசித்தபடி இருந்தேனா மயங்கிட்டேன்” என்றார்.
“பாட்டி வேற எதாவது தொந்தரவு இருக்கா”? என்று மீனாட்சி கேட்க.
“எனக்கு ஒன்னும் இல்லம்மா” என்றார்..
வீரா மீனாட்சியை பார்த்தபடி நின்றிருந்தவன், இவ சமையல்காரியா? இல்ல நர்ஸ்? என்று அவளை பார்க்க.
“பாட்டியை கொஞ்சம் ஃப்ரீயா காத்தோட்டமா இருக்க விடுங்க சரியாகி விடும்” என்றவள், வேலைகள் அதிகமாக இருக்க தம்பி அழைத்துக் கொண்டு அவள் கீழே செல்ல.
அப்பொழுதுதான் நிலா சிவாவை நிமிர்ந்து பார்த்தாள், இவர் அவர் தானே அவரே தான்.
என்றவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.
எத்தனை வருஷமா இவனை தேடி இருக்கிறாள்.
தேடியவன் இன்று அவள் பக்கத்திலேயே இருக்க.
தன்னை அவனுக்கு அடையாளம் தெரியுமா?. தன்னிடம் பேசுவாரா? இல்லை, நீ யார் என்று கேட்பாறா ” என்று தவித்து அவனை பார்த்தவள்.