Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 19

19.

மஞ்சம் – 19

ஆதி மூலையில் சுருண்டு கிடந்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் மன நிலையில் கூட அவர் இல்லை.

வாழ்வில் போராட்டமும் கஷ்டமுமாக சென்று கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் சொல்ல கூட தோன்றவில்லை.



Advertisement

அதிலும் என்ன ஆறுதல் சொல்வார்?. அம்மா கொஞ்ச நாளைக்கு வெளியூர் போயிருக்காங்க. வந்துடுவாங்கன்னு சொல்வாரா? முடியாது. தங்கை மீண்டும் வர முடியாத இடத்துக்கு சென்று விட்டாள். ஏற்கனவே தந்தையே இல்லாத பிள்ளைகள். இப்போது இருந்த ஒரே ஆதரவாக தாயையும் இழந்து நிக்கும் போது அவருக்கும் வலிக்க தான் செய்கிறது.

அவரும் திண்ணையில் சுருண்டு படுத்து கொண்டார்..

சொந்தங்கள் அனைவரும் வாசலில் தான் அமர்ந்து இருந்தனர். யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

Advertisement

இறந்தவளை நினைத்து அழுவதா? இல்லை காணாமல் போனவளை நினைத்து அழுவதா? ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கும்.

Advertisement

அக்னி தோட்டத்தை விட்டு நகரவே இல்லை. இரவும் வந்தது விட்டது. அந்த காரிருளில் தன்னந்தனியாக படுத்து கிடந்தான்.

அவன் கண்கள் மட்டும் இருண்ட வானத்தை வெறித்து கொண்டிருந்தது.

“அமர் அக்னி எங்க இருக்கான்?”

Advertisement

“கொல்லையில்.”

“வா போகலாம்.” என மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

இவர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட வைதேகி இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.

“இந்த இருட்டுல அக்னி என்ன பண்றான்? ஒரு பக்கம் அம்மா வேற முகத்தை திருப்பி கிட்டு கிடக்குறாங்க. இவன் ஒரு பக்கம் வந்துட்டான். இவன் நல்லதுக்கு தானே எல்லாம் பண்றோம். அது ஏன் அவங்க ரெண்டு பேருக்கும் புரிய மாட்டேங்குது?” என புலம்பி கொண்டே ஃபோன் டார்ச் உதவியுடன் வந்தவர், மகன் வெறும் தரையில் படுத்து கிடப்பதை கண்டு, “அக்னி!” என பதறி ஓடி வர,

அவனோ அப்போதும் கற்சிலையாக கிடந்தான். அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பார்க்கவும் அவனுக்கு பிடிக்கவில்லை.

“அக்னி எழுந்து வா.” என மகன் கை பிடித்து அழைக்க,

அவர் கையை உதறி விட்டு எழுந்து நின்றான்

சூடாமணி அதிர்ந்து நின்றார்.

“அக்னி…..!” என அவர் கத்த,

அவனோ அவரை மதிக்காமல் அங்கிருந்து விலக பார்க்க,

அவருக்குள் கோபம் பெருகியது, ‘அவளுக்காக என் மகன் என்னை உதாசீனம் செய்கிறானா? அவள் அவ்வளவு முக்கியமானவளாக மாறிட்டாளா?’ என சினம் கொண்டவர்,

“அக்னி அம்மா சொல்றேன் நில்லு.” என்றார்.

அவன் அதை காதில் வாங்காமல் செல்ல, அவன் கை பிடித்து இழுத்து திருப்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட,

“அம்மா….” என அமர் தான் அதிர்ந்தான்.

அக்னி அடி வாங்கி விட்டு அப்போதும் விலகி சென்றான்.

“அம்மா அண்ணனை எதுக்கு அடிச்ச? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு?” என அமர் தாயிடம் கத்த,

“ஆமா எனக்கு பைத்தியம் தான். நான் தொடக் கூடாதுன்னு உதறி விடுறான். இவனை பெத்து வளர்க்க நான் எவ்வளவு போராடி இருப்பேன். வளர்த்த என் நெஞ்சில் மிதிக்கிறான். நான் பைத்தியம் தான். அக்னி நில்லு. நம்ம குடும்பத்தை விட அந்த கேடுகெட்டவள் உனக்கு முக்கியமா?” என அவர் கத்த,

“இன்னொரு முறை அவளை தப்பா ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்.” சிங்கமென கர்ஜித்து நிற்பவனை கண்டு இருவரும் அரண்டு போனார்கள்.

அந்த காரிருளில் அவன் கண்களில் சிவப்பு அவர்கள் இருவருக்கும் பயத்தை கொடுத்தது.

“நீங்க பெத்து வளர்த்தது என்னை தான். என் பொண்டாட்டியை கிடையாது. எனக்கு அம்மாங்குற ஒரே காரணத்துக்காக என் பொண்டாட்டியை அசிங்க படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என சீற்றம் கொண்ட எரிமலையாக வெடித்து சிதறின.

“அக்னி.. நீயா பேசுற?” சூடாமணி நம்ப முடியாமல் கேட்டார்

“ஆமா நான் தான் பேசுறேன். உங்க கிட்ட எதையும் பேச விரும்பல. சின்ன வயசுல இருந்து உங்க மேல வைத்திருந்த பாசம் நம்பிக்கை எல்லாத்தையும் சுக்கு நூறாக நொறுக்கிட்டீங்களே. உங்க சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்க. கிளம்புங்க. இனி உங்களை பார்க்கவும் விரும்பல. பேசவும் விரும்பல. இனி அவள் இல்லாத அந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன்.” என உறுதியாக கூறிய மகனை கண்டு நொறுங்கிப் போனார்.

இதுவரை அம்மா என்று மூத்த மகன் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.

“அக்னி நம்ம குடும்பத்தை விட நம்ம குடும்பத்தை கெடுத்தவள் உனக்கு முக்கியமா?” என அவர் அவனை தாண்டிய கோபத்தில் வெடிக்க,

அக்னி கூர்ந்து அன்னையை பார்த்தவன், “ஒவ்வொன்றையும் பொறுமையா சொல்லி உங்களுக்கு புரிய வைக்க முடியும்னு நம்பி அவள் கழுத்துல தாலி கட்டினேன். ஆனா என் நம்பிக்கை பொய். இனி உங்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்க நான் விரும்பல. எனக்கு எந்த குடும்பமும் இல்லை. என் குடும்பம் என் மனைவி, என் பிள்ளை. மட்டும் தான்.” என்று இறுகிய முகத்தோடு கூற,

அமருக்கு ஆத்திரம் மூளையை மழுங்க செய்தது.

“அண்ணா எவனுக்கோ உருவான பிள்ளையை சுமந்துகிட்டு….” என அவன் அசிங்கமாக பேச முயல, அடுத்த கணம் அவன் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னே அமர் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை கையில் பிடித்தான்.

“உங்களுக்கு அதிகமான இடம் கொடுத்துட்டேன். அதனால் தான் இன்னைக்கு கையாலாகதவனா நிக்கிறேன். பல குடும்பங்கள் சீரழிந்து போறதே சொந்த குடும்பத்தால் தான். அது எவனுக்கோ உருவான குழந்தை கிடையாது. என் குழந்தை. என்னுடைய குழந்தை. எனக்கு உருவான குழந்தை. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. என் முகத்திலும் முழிக்காதீங்க.” என்றவன் சர சரவென அங்கிருந்து சென்றான்.

இருவரும் உச்சந்தலையில் ஆணி அடித்தார் போல் அதிர்ந்து நின்றனர்.

‘அவன் குழந்தையா?’

‘இதை தான் முன்னாடியும் சொன்னான். ஆனால் அந்த குழந்தை இவனால் எப்படி உருவாகி இருக்க முடியும்? இது தவறான உறவா?’ மூச்சு குழாய் அடைத்து போய் சூடாமணி நின்று இருந்தார்.

அமரன் விழி பிதுங்கி என்ன யோசிப்பது என்று கூட தெரியாமல் நின்றான்.

“அம்மா வா போகலாம். அண்ணன் கோபம் குறைந்ததும் அவனே வருவான். இப்போ நம்ம பேசுற எதுவும் அவன் மண்டையில் ஏறாது.” என தாயை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அவரும் தனக்குள் உருவாகும் பேரலையால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாமல் மகன் இழுத்த இழுப்புக்கு சென்றார்.

அக்னி உயிர் இல்லாத கூடாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். “சாகவும் முடியல வாழவும் முடியல டி. திரும்ப திரும்ப தனி மரமா நிக்கிறேன். ஆனா முன்னை விட இது பரவாயில்லை.

முன்னாடி நீ முழுசா என்னை விட்டு போன. இனி என் வாழ்வில் நான் நடை பிணம் தான்னு வாழ்ந்துட்டு இருந்தேன். இப்படியே கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு சாகனும்னு இருந்தப்போ தான் நீ சாக பிறக்கல டா வாழ பிறந்தவன் சொல்ற மாதிரி நம்ம குழந்தை உருவாச்சு. அந்த நாய் பத்தின உண்மையை புரிய வச்சேன். உன் கழுத்தில் தாலி கட்டி என் உயிராக மாற்றி நிம்மதியா இரண்டு நாள் வாழல டி. அதுக்குள்ள இன்னொரு பிரிவு. இந்த முறை முழு நம்பிக்கை இருக்கு. நீயும் என் பிள்ளையும் பத்திரமா தான் இருப்பீங்க. உங்களுக்காக நான் காத்திருப்பேன். உங்க ரெண்டு பேரையும் தேடிட்டு இருப்பேன். என்னைக்கா இருந்தாலும் நீ என் பொண்டாட்டி தான். அது மாறாது. உன் மனசு என்னை தவிர வேறு ஒருத்தனை ஏற்காது. அந்த நம்பிக்கையோடு உயிர் வாழ்வேன் டி.”
என அவளுக்காக காத்திருந்தான்.

சூடாமணி வீட்டிற்கு வந்தாலும் உள்ளே செல்லாமல் “நீ போ அமர். நான் வரேன்.” என்றவர் வெளியே படிக்கட்டில் அமர்ந்து கொண்டார்.

மனம். அரித்து கொண்டே இருந்தது.

‘எப்படி அந்த குழந்தை இவனுடையதா இருக்க முடியும்? அவளுக்கு கல்யாணம் ஆகி போயிட்டா. அதுவும் ரொம்ப தூரம். இவன் இங்க இருந்தான். இவனுக்கு எப்படி அந்த பிள்ளை உருவாகி இருக்க முடியும்? இவன் பொய் சொல்றான். என் மகன் என் வளர்ப்பு. அவன் தப்பு பண்ண மாட்டான்.’ என அவர் அதையே யோசித்துக் கொண்டிருக்க,

“இந்த செருப்பு வேற எங்க போச்சுன்னு தெரியல. திடீரென காணும்.” என அமர் கூறவும் அவருக்குள் ஒரு நடுக்கம்.

அவருக்கு அப்போது நினைவு வந்தது.
நிவேதிதா திருமணம் ஆனதில் இருந்து அக்னி நடைபிணமாக தான் வாழ்ந்தான். கொஞ்ச நாளில் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட, வெளியூர் சென்று மருந்து வாங்கி வருவதாக தானே கூறினான்.

‘அப்போ அவள் கூட தான் இருந்தானா? இவன் ஊருக்கு வந்த கொஞ்ச நாளில் தான் அவளும் வாழா வெட்டியா வந்தாள். அப்போ என் மகன் தப்பு பண்ணிட்டானா? அவங்க ரெண்டு பேருக்குள்ளே தப்பான உறவு இருக்கா? உண்மையாகவே அந்த பிள்ளை என் மகனுடையது தானா? தப்பான உறவில் உருவான குழந்தையா? அதனால் தான் என் கிட்ட கூட சொல்லாமல் அவசரம் அவசரமாக திருட்டு தாலி கட்டினான் போல. இதுக்கு அந்த கேடு கெட்ட குடும்பமும் உடந்தையா? எல்லாரும் சேர்ந்து திரும்பவும் என்னை ஏமாத்தி இருக்காங்க.

என் மகனா இப்படி? இவ்வளவு மட்டமாக நான் அவனை வளர்க்கவில்லையே. நாலு பேர் மதிக்கும் படி தானே நான் அவனை வளர்த்தேன். எதுக்கு இப்படி ஒரு மட்டமான புத்தி என் மகனுக்கு. எங்கிருந்து வந்தது? அக்னி நீயா இப்படி? பெண்ணாசை பிடித்து இன்னொருவன் மனைவியுடன் தவறாக உறவில் இருந்தாய். அதனால் தான் அவள் வாழா வெட்டியாக வந்தாலா? அதான் அவனும் அவன் அம்மாவும் இந்த ஊருக்கே வரவில்லையா? அசிங்கம் தாங்காமல் தான் வரலையா?

என் மகனுக்கு இப்படி ஒரு கொடூரம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? என்ன தான் என் மகனாக இருந்தாலும் அவனும் சராசரி ஆண் தானே? அதான் இப்படி அசிங்கம் செய்து அவளையே கொண்டு வந்து இந்த வீட்டில் வைத்து இருக்கிறான். என்னை எவ்வளவு கேவலமாக ஏமாற்றி இருக்கிறான்.’ என அவர் மூலை கண்டபடி யோசித்தது.

பெற்ற மகனை நம்பாமல் சந்தேகப்பட்டார். அக்னி அப்படிப்பட்டவன் கிடையாது என்று அவர் மனம் நம்பவில்லை. பெற்ற மகனையே சந்தேகப்பட்டு எதிர்கால சந்ததியைப் கேவலப்படுத்தி விட்டார்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!