உணவை உண்டு கொண்டிருந்த அனைவருக்கும் அடுத்த வாய் உணவு உள்ளே செல்ல வில்லை. அவனைத் தான் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“உண்மையா தான் சொல்றேன். நான் அந்த பொண்ணைக் கட்டிக்கிட்டா மதன் கல்யாணம் நடக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை தானே? ஒரே நாள்ல ரெண்டு கல்யாணமும் வச்சிக்கலாம். அவங்க வீட்ல பேசுங்க”, என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினான் அருள்மாறன்.
Advertisement
அவன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னது அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அது பூர்வி என்னும் போது அதிக அளவு சந்தோஷம் தான். கூடவே அவர்கள் நினைத்தது நடக்கப் போகிறது என்று ஆனந்தம் வேறு.
Advertisement
அருள்மாறனும் இந்த விஷயத்தில் நிறைய யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தான். திருமணத்தை விரும்பாத பெண். அவளுக்கு தேவையான சுதந்திரத்தைக் கொடுத்து விட்டால் அவள் அவனை எந்த தொந்தரவும் செய்யமாட்டாள். வாரிசுக்கு மதனுடைய குழந்தை இருக்கும்.
Advertisement
அவனையும் யாரும் தொல்லை செய்ய மாட்டார்கள். அலுவலகத்தில் கன்னி சாமியார் என்று யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். இந்த சமூகத்தில் திருமணம் ஆகாதவன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தான். அவன் திருமணத்துக்கு சம்மதம் சொல்ல இத்தனை காரணங்கள் இருந்தது.
Advertisement
அது தெரியாமல் அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் இருக்க “உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்குறது அவ்வளவு
“அப்படி மட்டும் பண்ணிறாத மா. கல்யாணம், நிச்சயம், பூ வைக்கிறதுன்னு எதுக்குமே எங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே ஒண்ணா எடுக்க கூடாது. நான் தனியா தான் தெரியணும். இவளை மாதிரி எல்லாம் நான் போட்டுக்கிட்டு நிக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் ஷிவானி.
அவள் சென்ற பிறகும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்ற மூத்த மகளைக் கண்ட லதா “பூர்வீ என்ன டா? என்ன அமைதியா இருக்க? இந்த விஷயம் கேட்டு அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். அவர் தான் பாயாசம் செய்ய சொல்லிட்டு கோவிலுக்கு போயிருக்கார். உன் கிட்டயும் அவரே தான் சொல்லுவேன்னு சொன்னார், நான் தான் உளறிட்டேன். எனக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்குது. நீ எங்க போனாலும் நல்லா இருப்ப டி. மாப்பிள்ளையும் அவ்வளவு அழகு. உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தமா இருக்கும். ஷிவானிக்கு தெரிய வேண்டாம். அவளுக்கும் சின்ன மாப்பிள்ளைக்கும் இருக்குற பொருத்தத்தை விட உங்க பொருத்தம் அவ்வளவு அழகு. சரி அண்ணன் போன்ல மாப்பிள்ளை போட்டோ இருக்கு காட்டச் சொல்லவா?”, என்று கேட்டாள்.
“இல்ல மா, நான் நேர்லே பாத்துக்குறேன். திடீர்னு சொன்னதும் ஷாக் ஆகிருச்சு. வேற ஒண்ணும் இல்லை”, என்று சொல்லி சமாளித்தாள். ஆனால் அவள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போராட்டம் அவள் மட்டும் அறிந்ததே.
“வேற ஒண்ணும் இல்லை தானே மா? உனக்கு சந்தோஷம் தானே டா?”
“உனக்கும் அப்பாவுக்கும் சரினா எனக்கும் ஓகே தான் மா. வேற ஒரு பிரச்சனையும் இல்லை. நான் சந்தோஷமா தான் இருக்கேன்”, என்று எப்போதும் போலவே அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்தாள். எந்த மாப்பிள்ளையை அவர்கள் காட்டி இருந்தாலும் அவள் சரி என்று சொல்லியிருப்பாள் தான். ஆனால் இந்த வரனில் அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு அதிருப்தி ஷிவானி தான்.
“நீ இதை தான் சொல்லுவேன்னு அப்பா நேத்து சம்பந்தி கிட்ட சொன்னாங்க டி. அதே மாறி தான் சொல்ற. போற இடத்துல ஷிவானியை நீ தான் டி நல்லா பாத்துக்கணும். கூறு கெட்டவ. படிச்சிருக்கான்னு தான் பேரு. ஆனா விவரமே தெரியாது”, என்றாள்.
“அவளா விவரம் தெரியாதவ அவளை விட்டா உலகத்தையே வித்துட்டு வந்துருவா”, என்று எண்ணிய பூர்வி வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள். ஒரு துளி பாயாசம் கூட அவள் பல்லில் பட வில்லை. அப்படியே அவள் அதை அருந்தி இருந்தாலும் அவளுக்கு பிடித்த அந்த இளநீர் பாயாசம் கசப்பாக தான் இருந்திருக்கும்.
அறைக்குள் வந்தவளுக்கு மனதே ஆறவில்லை. ஆனாலும் இனி தப்பிக்க முடியாது என்று எண்ணி அமைதியாகி துறவி நிலைக்கு அவள் மனம் சென்று விட்டது.
“கடவுள் உனக்காக அனுப்புன மாப்பிள்ளை இவர் தான். நீ ஆசைபட்ட வாழ்க்கையை அவர் கூட வாழு. இப்ப என்ன கெட்டு போச்சு?”, என்று அவள் மனதை அவளே டியூன் செய்து கொண்டிருந்தாள்.
அடுத்த இரண்டு நாள் கழித்து, அருள்மாறன் வீட்டில் “நாளைக்கு நல்ல நாளா இருக்கு டா? பொண்ணு வீட்ல போய் பூ வச்சிட்டு வந்துருவோம்”, என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி.
“அம்மா விளையாடுறியா? அதுக்கெல்லாம் நான் எதுக்கு? எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நான் வரலை”
“நீ இல்லாம எப்படி டா உறுதி பண்ண முடியும்?”
“நிறைய வீட்ல மாப்பிள்ளையோட அக்கா இல்லைன்னா தங்கச்சி தான் பூ வைக்கிறாங்க. எனக்கு தான் கூடப் பிறந்தவங்க ரெண்டு பேர் இருக்காங்களே? அவங்களை கூட்டிட்டு போய் பேசி முடிச்சிருங்க. நான் வரலை”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் நின்றிருந்தால் கூட ஏதாவது பேசி அழைத்திருப்பார்கள். அது தெரிந்ததால் தான் அவனும் ஓடி விட்டானோ என்னவோ?
“என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான். இப்ப என்ன பண்ணுறது?”
“அவன் இந்த அளவுக்கு கல்யாணத்துக்கு இறங்கி வந்ததே பெருசு ராஜி. விடு டி சமாளிச்சிக்கலாம். நான் மாப்பிள்ளைகளுக்கும் பொண்ணுங்களுக்கும் தகவல் சொல்றேன். நீ அம்மா கிட்ட கேட்டு மத்த சொந்தக்காரங்க யாரை எல்லாம் கூப்பிடனும்ன்னு கேட்டு வை. நேரம் குறைவா தான் இருக்கு. நெருங்குன சொந்தம் மட்டும் கூப்பிடுவோம். முதல்ல பொண்ணு வீட்டுல சொல்லணும்”, என்று சொல்லி விட்டு அதற்கான வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டார் கிருஷ்ணன்.
ராஜிக்கும் கணவர் சொன்னது தான் சரி என்று பட்டது. திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் ஏதோ ஒரு காரணத்துக்காக சரி என்று சொல்லியிருக்கிறான். இப்போது சரி சரி என்று சொல்லி கடந்து விட்டாலும் அவன் வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு சரியாகி விடும் என்று எண்ணிக் கொண்டாள்.
கிருஷ்ணன் பெண் வீட்டினருக்கு சொன்னதும் அங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர்களும் கொஞ்சம் எதிர் பார்த்தே இருந்ததால் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.
இரு வீட்டுக்கும் கல்யாணக் களை வந்திருந்தது. அதுவும் பெண் கொடுத்து பெண் எடுப்பது என்றால் சும்மாவா? அதுவும் பட்டியல் வரிசை பணக்காரர்கள் இல்லாமல் போனாலும் ஓரளவுக்கு பணக்காரர்களான வையாபுரி குடும்ப திருமணம் என்றதும் நன்றாகவே பேசப் பட்டது.