Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

6.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி

 அவளின் வலது பாத விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்து முடித்தவன் இடது பாதத்தை மடியில் ஏந்தி அதற்கும் நெயில் பாலிஷ் இட தொடங்கினான்…..அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஆரதி மெல்ல தன் பேச்சினை ஆரம்பித்தாள்.

“ஆழி….!”



Advertisement

 வேலையில் மும்முறமாக இருந்தவனும் அவள் அழைப்பில். “ம்ம் சொல்லு ஆதி” என்றான்.

“ஆழி… … நான் அந்த அம்மாவுக்கு உதவி செய்யவா…..” என்றவளை கண்ணன் முறைத்துப் பார்க்க,

Advertisement

Advertisement

“இல்ல ஆழி… அவங்கள பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு. என்ன தான் நீ பேசி இருந்தாலும்… இத்தனை நாள் சும்மா தானே இருந்தாங்க அங்க இருக்க போலீஸ்காரங்க. அவங்கள தண்டிக்காம எப்படி இருக்க முடியும். அந்த பொண்ணுக்கு இப்போ என்ன ஆச்சுன்னு தெரியலை. முதல்ல உயிரோடு இருக்குறதே சந்தேகம்தான். அந்த பொண்ணு பத்தின விஷயங்களை கண்டுபிடித்துக் கொடுத்தா அந்த அம்மா மனசு நிம்மதியாகும்… ஆழி. அதுமட்டுமில்ல அவங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. ப்ளீஸ்! ப்ளீஸ்! ஆழி … இதுக்கு மட்டும் சம்மதம் சொல்லு. இனிமே எந்த பிரச்சினையிலும் தலையிட மாட்டேன்.” என அவனை பார்க்க…,

“இந்த வீட்டுல ஒருத்தன் இருக்கானே உன்னோட பாடிகாட் அவனைக்கு போன் பண்ணி ரூமுக்கு வரச் சொல்லு….”கண்ணன்.

Advertisement

எதுவோ எதிர்ப்பார்த்து வந்த சித்துவின் கண்களுக்கு… கம்பீரமான தன் அண்ணன் கீழே அமர்ந்து  ஆரதியின் பாதம் பற்றி கொண்டிருக்கும் காட்சி விழ … கால்கள் இரண்டும் வேகத்தடையில் சிக்கிக் கொண்ட வாகனம் போல் அதிர்ந்து நின்றது. வந்தவன் அப்படியே நிற்பதைக் கண்ட ஆரதி..,

“பித்து எதுக்கு அங்கேயே நின்று எங்களை வாய பிளந்துட்டு பாக்குற உள்ள வா.” என்றாள்.

“ஆதி யாரோ ஒருத்தர் வெளியில அவ்ளோ கோபமா பேசிட்டு இருந்தாரே அவர யாருன்னு உனக்கு தெரியும். நான் கூட அந்த கோபத்தை பார்த்து… இனிமே உன்னை வெளியே போக விடாம கால உடைச்சு வைப்பாங்க’ ன்னு நினைச்சேன். ஆனா இங்க என்னடான்னா காலுக்கு ஆயில் மசாஜ் கொடுத்து சேவகம் பண்ணிட்டு இருக்காங்க….” என தன் அண்ணனைப் பற்றி அறிந்தும் வாயை விட,

கண்ணனோ, திரும்பி அவனை முறைத்தபடி..”பேசாம வாய மூடிட்டு வந்தேன்னா நல்லது. ஏற்கனவே நீ பண்ண வேலைக்கு கொடுக்க வேண்டிய அடி மிச்சம் இன்னும் இருக்கு. இவளை இந்த அளவுக்கு ஏத்தி விடுறதே நீதான்.”  என்றான்.

அதற்கு சித்துவோ..,  “ஆமா ஆமா நாங்க தான் நீ எந்த பிரச்சனையும் பண்ணாத ன்னு சொல்லிட்டு. அவளுக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கோம்.” என்றவனை புரியாது பார்த்த ஆரதி… “டேய்! பித்து என்ன சொல்ற. சொல்றத தெளிவா சொல்லு.”

“என்ன எதுக்கு மேடம் கேக்குறீங்க. அதோ உங்களுக்கு கீழ உக்காந்துட்டு காலுக்கு சேவகம் பண்ணிட்டு இருக்காரே அவரு கிட்ட கேளுங்க. உங்களுக்கு வேலை வைக்காம… ஆட்கொணர்வு மனு போடுற  திட்டத்தோட இருக்காரு.”என்று சித்து கூறியதும் “உண்மையா” என்ற ஆச்சரியத்தோடு கண்ணனை பார்க்க, அவனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவளின் பாதத்தில் வண்ணம் இடும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் எப்படி இருந்தாலும் பதில் சொல்ல மாட்டான் என்பதை அறிந்த ஆரதி சித்துயிடம்  கண்களாலே கேள்வி எழுப்ப… அவனும் சிறிது நேரத்துக்கு முன்பு தனது கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியை பற்றி அவளுக்கு விவரிக்க தொடங்கினான்.

ஆரதியிடம் பேசி விட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு குறுஞ்செய்தி ஓசை வந்ததற்கான அறிவிப்பை காட்ட, அதைத் திறந்து பார்த்தான். அதில் ,

நாளை நீயும்,ஆரதியும் உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஆட்கொணர்வு மனு போடும் படியும், ராசாத்தி அம்மாவை நம் வீட்டுல் தங்கவைக்க ஏற்பாடு செய்யும் படியும், அனிதா வேலைபார்க்கும் இடத்திற்கு சென்று…. அவளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வருமாறு தன் அண்ணன் அனுப்பி இருக்க, அதை வாசித்தவனின் முகத்தில் வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் ஒரே நேரத்தில் பார்த்த மகிழ்ச்சி. (காலையில் நடந்த சம்பவத்தில் சித்து மிகவும் கோபம் அடைந்தது உண்மை. பொதுவாகவே சித்து கோபப்படும் ரதம் இல்லை. ஆனால் அவனே காலையில் மிகவும் கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் ராசாத்தி அம்மாவிற்கு நியாயம் கிடைக்கவும் ஆசைப்பட்டான்.) அதேநேரம் இவ்விருவருக்கும் நடுவில் ரகசியமாக ஓடிக்கொண்டிருக்கும் காதல் விளையாட்டும் நன்றாக புரிந்தது.

சற்று முன்னர் வரை  எந்த கர்வமும் இல்லாமல் ஒரு பெண்ணின் பாதத்தைத் தொட்டு அவளின் ஆசையை நிறைவேற்றும் அவளுக்கானவனை காதலுடன் பார்த்தவள் … இப்பொழுது தன் பார்வையில் காதலையும் தாண்டி பெருமிதத்தோடு பார்த்திருந்தால் கண்ணனை. இதுவரை அவனை பிடித்ததை விட இந்த நிமிடம் அதன் அளவு பெருகி இருந்ததைப் போல் உணர்ந்தாள் ஆரதி. அவளின் எண்ணத்தை படித்தவன் போல.. அவனும் மெல்லிதாய் மேனியை தழுவும் கற்றாய்  போல் சிறு சிரிப்பை அவள் மனதில் பதிய வைக்க தொடங்கியிருந்தான்.

கண்ணன் தரையில் அமர்ந்து கொண்டு ஒரு கையால் அவள் பாதத்தையும் , மறுகையால் நக பூச்சியையும் பிடித்துக்கொண்டு ஆரதியை பார்வை உயர்த்தி பார்த்திருக்க… அவளோ தன் இரு கைகளையும் பஞ்சனையின் மேல் ஊன்றிக்கொண்டு மைவிழி கண்ணால் கீழே பார்த்திருந்தால்.  இவர்களின் பார்வையில் முழு காதலையும் உணர்ந்த.. சித்து இந்த நினைவை பொக்கிஷமாக மாற்ற  தனது கைப்பேசியை எடுத்து  அழகான புகைப்படமாய் சேமித்தான்.

புகைப்பட ஒளியில் தன்னை உணர்ந்து கொண்ட இருவரும்.. எதுவும் நடவாதது போல் பார்வையை மாற்றிக் கொள்ள… சித்துவும் அதை அறிந்து மௌனமாகச் சிரித்துக்கொண்டான்.

வாகன நெரிசலுக்கு பஞ்சமில்லாத மேம்பாலத்திற்கு கீழே பல வருட காலமாக… நிலைத்து நிற்கும் மிகப்பெரிய அடையாறு கூவம் ஆறு அது. இரவு நேர இருட்டை கிழித்துக்கொண்டு வாகனங்கள் மேம்பாலத்தின் மேலே சென்று கொண்டிருந்தது.

அதற்கு மாறாக கீழே… கூவ ஆற்றின் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஒரு புறம் குவிந்து கிடக்க, அவர்களை தள்ளி நிற்க வைக்கும் வேலையில் காவல்துறை இறங்கி இருந்தது. பத்திரிக்கை நண்பர்களும் தங்கள் பங்கிற்கு அங்கே ஆரவாரம் இட்டுக்கொண்டு இருக்க, அவர்களைத் தாண்டி… இன்னும் சில காவலர்கள் நாசியில் வெள்ளை கைக்குட்டையை வைத்து முகத்தை மூடியபடி தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.

அந்நேரம் வெள்ளை  சட்டை மற்றும் காக்கி கால் சட்டை அணிந்து கொண்டு ஆர்ப்பரிக்கும் மக்களை அடக்கி கொண்டிருக்கும் காவல்துறை களை நோட்டம் விட்டவாறு… சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருந்தான் ஆழிக் கண்ணன்.

“என்ன சார் சம்பவம் எப்ப நடந்துச்சு? ஏதாச்சும் தகவல் கிடைத்ததா உங்களுக்கு! யாரு முதல்ல தகவல் சொன்னது? என்ற கேள்வியில் கண்ணன் நிறுத்த,

அருகில் நின்றிருந்த… 40 வயது மதிக்கத்தக்க  அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர்… “இவர் பெயர் மாரியப்பன் சார். இவர் தான் முதல்ல சம்பவத்தை பார்த்து இருக்காரு. இவர்தான் முதல் வாக்குமூலமும் கூட. ” என பதிலளித்தார்.

“மாரியப்பன் சார்! நீங்க எதுக்காக இந்த நேரத்துல இந்த பக்கம் வந்தீங்க.”கண்ணன்.

“நான் தினமும் இந்த வழியா தான் சார் வேலை முடிச்சுட்டு வருவேன். இயற்கை உபாதை கழிக்க தான் இந்த  கூவத்துக்கு பக்கமா வந்தேன். வரும்பொழுது வழக்கமா இருக்க துர் நாற்றத்திற்கும் இன்னைக்கு இருக்க துர் நாற்றத்திற்கும் ரொம்ப வித்தியாசம் உணர்ந்தேன் சார். எதுவோ ஒன்று என்ன ரொம்ப உறுத்திக் கிட்டு இருந்துச்சு. ஏன்னா நான் ஆரம்ப காலத்துல மருத்துவமனையில் இருக்க பிணவறையில   கொஞ்சம் வேலை பார்த்து இருக்கேன் சார். அங்க இதுமாதிரி நிறைய நாள் துர்நாற்றம் அடிக்கும். அதனால தான் என்னோட போன்ல இருந்து.. டார்ச் லைட் அடித்து ஏதாச்சும் இருக்கான்னு பார்த்தேன் சார். அப்போதான் எதுவோ ஒன்று மீதந்துட்டு இருக்க மாதிரி தெரிஞ்சுது. நான் சந்தேகப்பட்ட மாதிரி இருக்கறதால உடனே காவல்துறைக்கு தகவல் சொல்லிடேன் சார்.’ என்றார் மாரிமுத்து.

அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்த கண்ணன்.. இன்ஸ்பெக்டரிடம் திரும்பி, ” டெட் பாடிய மேல எடுத்தாச்சா சார். என்ன நிலைமையில இருக்கு.” என்று கேட்டான்.

“சார் ராத்திரி நேரமா இருக்கறதால கொஞ்சம் தாமதமாகுது . அதுவும் இல்லாம யாரு பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொன்னாங்கன்னு தெரியல அவங்களும், மக்களும் கூட்டம் சேர ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும் சார்.” என்றவருக்கு…

கண்ணன் தான், “மக்களும், பத்திரிக்கையாளர்களும் வரதை தடுக்க முடியாது சார். நம்ம வேலையில் மட்டும் தான் நம்ம கவனமா இருக்கணும். சீக்கிரமா ஆக வேண்டியதை பாருங்க.”

.

அடுத்தடுத்து  பணிகளில் வேகமெடுக்க.. அங்கிருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் முகம் சுளித்து மூச்சை நிறுத்தும் அளவிற்கு.. துர்நாற்றம் வீசி அவ்உடலை மேலே கொண்டு வந்ததற்கான சாட்சியாய் நின்றது.

அந்த உடலோ ..முழுவதும் ஆற்றின் கழிவுகள் நிறைந்த பாலீத்தின் பைகளால் கட்டப்பட்டிருந்தது.  உடல் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து இருக்கும் போல.. மேலே எடுத்து வருவதற்கு சிரமமாக இருந்தது அங்கு இருக்கும் தீயணைப்பு துறைக்கு. ஒருவழியாக அவர்கள் விடாமுயற்சியில் அவ்வுடல் வெள்ளை துணியில் அமர்த்தப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வேலையில் இறங்கி இருந்தார்கள் காவல்துறையினர்.

பின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக… அவ்வுடலை மருத்துவ பணியாளர்கள் தூக்கிச் செல்ல…. உடலோடு பல நாள் நீரில் ஊறிய நிலையில் எதுவோ ஒன்று வலது பக்கமாக விழ….

அங்கிருக்கும் காவல்துறையின் பார்வை அது மேல் விழுந்தது. அதைப் பார்க்க ஒரு மனித உடலில் உள்ள உறுப்பு போல் இருக்க.. கொலை செய்தவன் கத்தியால் குத்து இருக்கலாம்… அதனால் உடலில் உள்ள உறுப்பு வெளியே வந்திருக்கலாம் என்று முடிவுசெய்தனர். அதுவுமில்லாமல் அவ் உறுப்பு பாலிதீன் பையில் ஒட்டியவாறு தொங்க…. அங்கிருந்த அனைவருக்கும் சொல்ல முடியாத அருவருப்பு. கையில் எடுக்கவே மருத்துவ பணியாளர்கள் தயங்க.. கையுறை அணிந்து கொண்டு அதை எடுக்குமாறு கட்டளையிட்டான் கண்ணன்.

போலீஸ்காரரின் வார்த்தையில் , பணியாளர்களும் கையுறை அணிந்து கொண்டு அதை எடுக்க செல்ல… எடுக்க சென்ற இருவரில் ஒருவர் தன் நிலை இழந்து வாந்தி எடுக்கத் தொடங்கினார். அதை உணர்ந்த கண்ணன்… அவர்களை எதுவும் சாடாமல் வேறொரு கையுறை அணிந்து கொண்ட தானே அதை எடுக்க சென்றான். அங்கு இருந்தவர்கள் தடுத்தும் அதை கையில் எடுத்தவன் சொல்ல முடியாத நிலைக்கு ஆட்படுத்த பட்டான்.

பின் அதை எடுத்து தனியாக ஒரு பையில் அடைத்தவன்.. இறந்த உடலோடு அதையும் சேர்த்து பணியாளரிடம் கொடுத்துவிட்டு மேற்கொண்டு தன் வேலையைப் பார்க்கச் செல்ல… ஏனோ அவன் பார்வை மட்டும் அந்த உறுப்பின் மீதே இருந்தது.

பைங்(குழி)கிளி  விசாரணை தொடங்கும் இனி  ரதி ஆழியுடன்.

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!