Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் காதல் – 17.2

“இப்போவே இங்க இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு நாள பின்ன இங்க யார் சாப்புட வருவாங்க? இது அவனோட தொழிலுக்கு தானே அடியாகும். அவன் பார்ட்னர்ஸ் வந்து கேள்வி கேட்டா என்னால என்னமா பதில் சொல்ல முடியும்?”

“அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க அங்கிள். இப்போ இந்த பாடி எடுத்து கூட பின்னாடி இருக்க இடம் தான். அந்த இடத்தை மட்டும் விட்டுட்டு மத்த இடத்துல ரிசார்ட் கட்டுனா ப்ராப்லம் வராது. ப்ளீஸ் அங்கிள் அவர்கிட்ட இந்த விசயத்த மட்டும் கொண்டு போகாதீங்க. தெரிஞ்சா ஒடனே கெளம்பி வந்துடுவார், உங்க எல்லாரோட எதிர்ப்பையும் மீறி போயிருக்காருன்னா அவருக்கு அது மேல ரொம்ப விருப்பம் இருந்துருக்கணும்” கண்கள் சுருங்க கெஞ்சிய வைஷ்ணவியை நிராகரிக்கவும் அவருக்கு மனம் வரவில்லை.

“எனக்கு இந்த ஊர்ல உதவிக்கு கூப்புட கூட யாரையும் தெரியாது ம்மா” என்றார் சுருங்கிய முகத்துடன்.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல அங்கிள். தோ அங்க நிக்கிறார் பாருங்க”



Advertisement

தூரத்தில் நின்று கைபேசியில் தீவிரமாக பேசிய ஜேம்ஸை கை காட்டினாள், “அவர் நமக்கு தெரிஞ்ச பையன் தான். எதுனா சொன்ன செஞ்சிடுவார். இந்த கேஸ் கூட அவர் பொறுப்புல தான் இருக்காம். வாங்க பேசலாம்” என சுப்ரமணியை ஜேம்ஸ் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.

சுப்ரமணியை பார்த்ததும் ஒரு நிமிடம் என சைகை செய்தவர் பேசி முடித்து, “சார் பாடி பாத்தா ஆறு மாசம் முன்னாடி பொதச்ச மாதிரி இருக்கு. முக்கால்வாசி அழுகி போச்சு. நீங்க இந்த ஊருக்கே வந்து மூணு மாசம் கூட ஆகலானு பாப்பா சொல்லுச்சு. இடத்தோட ஓனர் சிங்கப்பூர்ல தான் அஞ்சு வருசமா இருக்காராமே” – ஜேம்ஸ்

“ஆமா சார். இடத்தை பேசி முடிக்கிறப்ப சைன் பண்ணிட்டு ஒடனே கெளம்பிட்டதா தம்பி சொன்னான்” – சுப்பிரமணி

Advertisement

“ம்ம்ம்… இடம் காலியா இருக்குறத பாத்து ஏதோ ஒரு திருட்டுப்பைய தான் இந்த வேலைய பாத்துருப்பான். சோ கவலை படாதீங்க. நான் பாத்துக்குறேன்” – ஜேம்ஸ்

Advertisement

“ரொம்ப தங்க்ஸ் சார். பையன எதுவும் வர சொல்லனுமா?”

வைஷ்ணவியை பார்த்த ஜேம்ஸ் கண்கள் பிறகு மீண்டும் சுப்ரமணியிடம் சென்றது, “வேணாம் சார். அப்றம் என் மேல யாரவது கேஸ் போட்டுடுவாங்க. ஆமா நீங்க என்ன வேலை பாக்குறீங்க?”

“நம்ம கவெர்மென்ட் ஸ்கூல் ஹச்.எம்” மாமனாருக்காக இங்கிருந்து பதில் சென்றது. “சரி சார். நான் சொல்றப்ப ஸ்டேஷன் வரைக்கும் மட்டும் வந்துட்டு போக வேண்டி வரும்” – ஜேம்ஸ்

Advertisement

“அது…”

சுப்பிரமணி பேசும் முன்பே, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள். நீங்க வேலைல பிஸியா இருந்தா அவர் வீடு நம்ம வீட்டு பக்கம் தான். அவரே வந்து விசாரிச்சிட்டு போயிடுவார். என்னங்க போலீஸ்கார்?”

வைஷ்ணவிக்கு குறும்பு சற்று அதிகம் இருக்க ஜேம்ஸ் ஒரு காவல்துறை அதிகாரி என்பதை கூட மறந்து பல முறை தோழியுடன் சேர்ந்து செய்த சேட்டையை எல்லாம் ஊக்குவித்தவருக்கு இப்பொழுதும் அவளை எதுவும் பேச முடியவில்லை. தன் தந்தையிடம் பேசும் அதே உரிமை பேச்சை அவரிடமும் காட்டுபவளுக்கும் வம்பிற்கு இழுக்க தயக்கமே இருந்ததில்லை.

“தொழில் பண்ண போற இடம் கொஞ்சம் மீடியா-கு தெரியாம…” என சுப்பிரமணி இழுத்தார்.

“சரி சார். பிரச்சனை வராம நான் பாத்துக்குறேன்” அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடமே ஆள் அரவமே இல்லாமல் போனது.

சுந்தர் தான் அமைதியாக நிற்க, “பேருக்கு தான் சென்னைல பெரிய பிஸ்னஸ் மேன். ஆனா பாரு ஒரு போலீஸ சமாளிச்சு அனுப்ப முடியல” ஜாடையாக அருகில் வந்து நின்று ஷெர்லின் பேசினாள்.

“போலீஸ்கு காசு குடுத்து அனுப்பி வைக்க சொல்ல சொல்றியா?” – சுந்தர்

“ஏன் பண்ண முடியாதா?” – ஷெர்லின்

“பண்ணலாமே… உன் வீட்டுக்கு வர வைக்கவா?” குறும்பு சிரிப்புடன் அவளை பார்த்து புருவத்தை உயர்த்தி கேட்டான்.

“ஹெலோ… என் தோப்பனார் போலீஸ். தெரியுமா?”

“தெரியுமே” ஜேம்ஸ் இருந்த பக்கம் கண்ணை காட்டி கூறியவன், “போலீஸ் மகளை அர்ரெஸ்ட் பண்ணா தானே என் பவர் தெரியும்?”

“இது ப்ராடு என்ஜினீயரா இருக்கே” அதிர்ந்தவள் அந்த இடத்தை விட்டு செல்ல, அவள் கையை பற்றி நிற்க வைத்தவன்,

“ப்ராட சமாளிக்க நானும் ப்ராடா மாறி தானே ஆகணும்” கண் சிமிட்டி சிரித்தவன் கைகளை உதறியவள் ஓடி சென்று தோழியோடு நின்றாள். ஆனால் அப்பொழுதும் அவள் தன்னை பார்ப்பது அறிந்தவன் சிரிப்போடு சுப்பிரமணி இருக்கும் இடத்திற்கு சென்றான்.

“அங்கிள் பயப்பட வேணாம். இந்த இடம் உங்க பேர்ல தான் குத்தகைக்கு எடுத்ததா கார்த்திக் சொல்லிருக்கார். கடைசியா இருக்க அரை ஏக்கர் இடத்தை மட்டும் விட்டுட்டு மத்தத மட்டும் நாம லாயர் வச்சு மூவ் பணிக்கலாம் அங்கிள். நல்ல வேலை பின்னாடி இருக்குற இடத்தை பட்ஜெட் யோசிச்சு இப்போதைக்கு விட்டுடலாம்னு கார்த்தி சொன்னார்”

“அவனோட கனவு ப்பா இது. காலேஜ் போய் ஒரு வருசத்துல ராஜஸ்தான்ல ஒரு ட்ரிப் போய்ட்டு வந்து அதோட சின்ன வெர்ஷன்ல கட்டணும் ப்பா-னு சொல்லிட்டே இருப்பான். அது தான் இன்னைக்கு ஒரு புள்ளியா இங்க வளந்து நிக்கிது. இத கருக விட்டுட போறோம்னு மனசு இன்னும் அடிச்சுக்குது” வேதனை நிறைந்த குரலில் தன் தந்தைக்கு நிகரான ஒரு மனிதர் பேசவும் சுந்தர் மனம் கனத்தது.

“ரொம்ப யோசிச்சு உங்க ஒடம்ப கெடுத்துடாதீங்க அங்கிள். நாம நல்லபடியா இத கட்டி முடிக்கிறோம். கார்த்தி பார்ட்னர்ஸ் எல்லார்கிட்டையும் நான் இன்னைக்கு ரூம்கு போய் பேசுகிறேன். கார்த்தியை டிஸ்டர்ப் பண்ணிக்க வேணாம்”

“உனக்கு ஏன் ப்பா வீண் சிரமம்? நானே பேசுகிறேன் அந்த பசங்ககிட்ட” – சுப்பிரமணி

“இல்ல அங்கிள் நீங்க வீட்டுல இருக்கவங்கள சமாதானம் படுத்துங்க” அவரை சமாதானம் செய்து வைத்தான் சுந்தர்.

இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்ததை விளக்கமாக கூறி, மகனிடம் இது பற்றி பேசவே வேண்டாம் என்று உத்தரவை விட்டிருந்தார்.

அதற்கடுத்து வந்த ஒரு வாரத்தில் சுப்பிரமணி அரை மனதாய் பள்ளி செல்வது, மீண்டும் ஒரு குழப்பத்துடன் அமர்ந்திருப்பார். மெதுவாக அவர்கள் வீட்டிற்குள் வந்த வைஷ்ணவி மாமியாரிடம் சென்று சமயலறையில் நின்றுகொண்டாள் பெரிய சிரிப்போடு.

“என்னடா ஏன் இந்த பரபரப்பு?” பாத்திரங்களை அடுக்கி வைத்தவர் வைஷ்ணவியின் முகத்தை பார்த்து சிரிப்போடு கேட்டார்.

“ஆமா த்தை ஒடனே வெளிய வாங்க அம்மா வைட்டிங்… வீட்டுல சொல்லிட்டேன் உங்க பையன் விசயத்த”

மஹாலக்ஷ்மி விழி விரித்தார், “ஏண்டா சொன்ன? சூழ்நிலை வேற சரியில்ல… என்ன நினைப்பாங்க வீட்டுல?”

“அதெல்லாம் ஒன்னும் நினைக்கல. நான் உங்க பையன எந்த சூழ்நிலையையும் விட மாட்டேன்னு சொல்ல தான் எல்லாத்தையும் ஒடச்சேன். அம்மாவே ஆரம்பத்துல அந்த ஐடியால தான் இருந்தாங்க போல. உங்க அண்ணன் பொண்ணு இருக்கவும் தான் கேக்கலையாம்… அதுவும் இல்லாம நான் லவ் பன்றேன்னு தெரிஞ்சதும் முடிவுல ஸ்ட்ரோங்கா நிப்பாங்க. நீங்க கெத்தா பையன் வீட்டுக்காரங்க மாதிரி அம்மாகிட்ட வந்து பேசுங்க” கையேடு அவரை இழுத்து வாயிலுக்கு அழைத்து சென்றாள்.

அங்கு வைஷ்ணவிக்கு இருக்கும் அதே சிரிப்போடு மஹேஸ்வரி இருந்தார். மஹாலக்ஷ்மி அருகில் சென்றதும் அவர் கையை பற்றியவர், “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சுபி அம்மா. கார்த்தி மாதிரி ஒரு நல்ல பையன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு குடுத்து வச்சதுன்னு அடிக்கடி யோசிப்பேன். இப்போ பாவம் தம்பி, என் பொண்ணுகிட்ட மாட்ட போறாரா?”

“என்ன மஹேசு. என்னையவே பகைச்சுக்க போறியா? உன் பொண்ணு கிடைக்க தான் உன் மாப்பிள்ளை குடுத்து வச்சிருக்கணும்” அன்னையிடம் சண்டைக்கு நின்றாள் பெண்.

மஹாலக்ஷ்மியோ சங்கடத்தோடு, “இல்ல வைஷ்ணவி அம்மா, நிலைமை கொஞ்சம் சரியில்ல. பிரச்சனை ஓஞ்சதும் பேசலாம்னு நினைச்சோம்”

“இதுக்கு எதுக்கு யோசிக்கணும். பையன பத்தி தெரியும், குடும்பத்தை பத்தியும் தெரியும். இதுல நடுல வர்ற ஒரு சின்ன பிரச்னையை பாத்து பசங்க வாழ்க்கையை நாம தடை போட கூடாதுல” – மஹேஸ்வரி

“சரி தான் வைஷ்ணவி அம்மா… ஆனா இவங்க அப்பாக்கு அவனோட பார்ட்னர்ஸ் யாராவது பின் வாங்கிட்டாங்கனா என்ன பண்றதுன்னு ஒரே யோசனை” – மஹாலக்ஷ்மி

“பார்ட்னர் தானே வேணும்? என் அண்ணன் வருவான்… என்ன மம்மி?” – வைஷ்ணவி

“ஆமா அவனுக்கு-னு ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவங்க அப்பாக்கு ஆசை. அத உங்க கூட பண்றதுல அவருக்கு சந்தோசம் தான் இருக்கும். எதுக்கும் அவர்கிட்ட கேட்டுட்டு ஒரு வார்த்தை சொல்றேன். பிரச்சனை வந்தா பயப்பட வேணாம் வைஷ்ணவி அம்மா” ஆறுதல் வார்த்தைகள் கூறியவர் மேலும் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பினார்.

இரவு பதினோரு மணியளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தீவிரமாக அலசிக்கொண்டிருந்தவளுக்கு அவள் சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் கார்த்தி அழைத்திருக்க என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் சந்தோஷத்தில் துள்ளியவள் ஒருவழியாக மனதை நிதானமாகி காதில் வைக்க, “யாருங்க நீங்க என் விசயத்துல தலையிட?” காட்டமான அவனது அந்நிய குரலில் அப்படியே சிலையானாள் பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!