Skip to content
Post Views: 9,223
அன்பில் இணைந்த இதயங்கள்….13
கயல்விழி தனது மடிக்கணினியில் வேலையில் இருந்தாள்.தன் வீட்டிற்கு வந்ததில் இருந்து நல்ல உணவு,உறக்கம் அத்துடன் தாய்,தந்தையின் அரவணைப்பு என்று கயல்விழி மீண்டும் பழைய கயலாக மாறியிருந்தாள்.அவள் தனது வேலையில் கவனமாக இருக்க அப்போது உள்ளே வந்த பார்வதி,
“கயல் இந்தா இந்த ஜுஸ்ஸை குடிச்சிட்டு வேலைய பாரு….”என்று ஒரு பெரிய டம்பளரில் பழச்சாருடன் வந்து நிற்க,
“ம்மா…..இப்ப தான சாப்பிட்டேன்….வயிறு புல்லா இருக்கு மா….இப்ப வேண்டாம்…”என்று அவள் மறுக்க,
Advertisement
“என்ன சாப்பிட்ட நீ….வெறும் நாலு இட்லி….அது அப்பவே செரிச்சு போயிருக்கும்….இதை குடி முதல்ல….”என்றவர் அவளின் கையில் டம்பளரை திணித்துவிட்டு நிற்க,கயல் பாவமாக அன்னையை பார்க்க,
“குடி முதல்ல அப்புறம் வேலையை பார்க்கலாம்….ம்ம்….சீக்கிரம்….எனக்கு அடுத்து சமையல் வேலை இருக்கு….”என்று மிரட்ட,அவரை பொய்யாக முறைத்தவள் குடித்துவிட்டு டம்பளரை அவரிடம் நீட்டினாள்.அவர் அதை வாங்கிக் கொண்டு நகர போக அவரின் கையை பிடித்து தன் அருகே அமர வைத்தவள்,
“ம்ம்மா….நீ என்னை மன்னிச்சிட்ட தான….என் மேல கோபம் இல்லையே….”என்று இதோட நூறாவது முறையேனும் கேட்டிருப்பாள்.பார்வதிக்கே மகளின் இந்த மாற்றம் ஆச்சிரியத்தைக் கொடுத்தது.முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கோபப்படுபவள் இன்று மிக மிக நிதானமாக யோசித்து தான் பேசவே செய்கிறாள்.அதுவும் குருமூர்த்தியிடம் அவள் இன்னும் இயல்பாக பேச ஆரம்பிக்கவில்லை என்பது அவளின் அணுகு முறையிலேயே தெரிந்தது பார்வதிக்கு.
Advertisement
பார்வதிக்கு கயல்விழியின் இந்த மாற்றம் ஒருவிதத்தில் சந்தோஷம் தான் என்றாலும் மற்றுமொரு விதத்தில் மகள் தன் சுயத்தை இழந்து நிற்கிறாளோ என்ற பயமும் இருந்தது.தாய் அல்லவா அவரின் மனது மகளிற்காக வருந்த தான் செய்தது.
Advertisement
“ம்ம்மா…..என்ன ம்மா???”என்று கயல் அழைக்க,
“ஆங்….ஒண்ணுமில்லடீ….நீ அதையே நினைச்சு உடம்பை கெடுத்துக்காத….எனக்கு உன்மேல வருத்தம் தான் இல்லைனு சொல்லல அதுக்காக உன்னை வெறுக்கல்லாம் இல்லை….எனக்கு எல்லா பொண்ணும் ஒண்ணு தான்….தப்பு செஞ்சிட்ட இனி அது மாதிரி எந்த தப்பும் செய்யாம இரு…ஆம்பளை பிள்ளைங்க தப்பு செஞ்சா பெரிசா எடுத்துக்காத இந்த சமூகம் பொம்பளைங்க தப்பு செஞ்சா அதையே தான் குத்தி குத்தி காட்டும்….அதுக்கு தான் உன்கிட்ட சொல்லுறேன்….”என்றவர் கயலின் தலை கோத,கயல் தாயின் மடியில் படுத்து,
“ம்ம்….புரியுது மா….இனி ஒழுங்கா இருப்பேன்…..”என்று கூறினாள்.
Advertisement
“பார்வதி….பார்வதி…..”என்று சத்தமிட்டபடி வந்தார் குரு,
“இவருக்கு வேற வேலையே இல்லை எப்ப பாரு என் பெயரை ஏலம் விடறது தான் வேலை….”என்று திட்டிக் கொண்டே அவர் செல்ல அவரின் பின்னே சிரித்துக் கொண்டே கயலும் சென்றாள்.
“எங்க இருக்க பார்வதி….”என்று குரு பொறுமையில்லாமல் கத்த,
“வரேன்….வரேன்….ஏன் இப்படி கத்துறீங்க….”என்று கூறியபடியே வர கயலும் பின்னே வந்தாள்.குருவிற்கு மகளிடம் இருந்து கண்னை எடுக்கமுடியவில்லை.இப்போது தான் பார்பதற்கு கொஞ்சம் தெளிந்து இருந்தாள்.
“கயலம்மா….இங்க வாடா…அப்பா கிட்ட வா….”என்று வாஞ்சையாக அழைக்க,அவரின் அருகே சென்றவள் அமைதியாக நின்றாள்.குருவிற்கு மகளின் மாறுதல் புரிகிறது தான் இதே பழைய கயலாக இருந்தாள்,துள்ளி குதித்து வந்து என்ன விஷயம் என்று கேட்டு தெரிந்து கொள்ளும் வரை விட்டிருக்க மாட்டாள்.
“ஏங்க எங்களை கூப்பிட்டுட்டு இப்ப எதையோ யோசிகிட்டு இருக்கீங்க….”என்று பார்வதி பொரிய,
“ஒண்ணுமில்ல பாரு….நம்ம கயல் தான இதுனு யோசிக்குறேன்….”என்று அவர் கூற,கயலின் முகத்தில் இளநகை மட்டுமே.அவளை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தவர்,
“கயல் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….அது….”என்று அவர் கூற தயங்க,
“என்னப்பா….எதுவாயிருந்தாலும் சொல்லுங்க….”என்று அவள் கூற,அவளின் தலையை ஆதரவாக தடவியவர்,
“ம்ம்….அது உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்….அது விஷயமா தான் பேசனும்…..”என்று குரு போட்டுடைக்க,கயல்விழிக்கு திருமணம் என்றவுடன் சத்யாவின் முகம் கண் முன்னே வந்து போனது.அவள் வார்த்தைகள் அற்று அமர்ந்திருக்க,பார்வதிக்கும்,குருவிற்கும் மனதில் பய பந்து உருண்டது.
என்றைக்கு குருவிற்கு மகளை கடத்தி விற்க முயற்சி செய்துள்ளனர் என்று தெரிந்ததோ அதில் இருந்து தூக்கம் என்பதே இல்லை.தான் நல்ல முறையில் இருக்கும் போதே இவளையும் கரை சேர்த்துவிட வேண்டும் என்று மனது தத்தளிக்க தொடங்கியது.அதனால் அவர் எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மகளை ஒருவனின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.
“என்ன கயல் ஏன் அமைதியா இருக்க….”என்று பார்வதி தான் மகளின் மௌனம் கண்டு கேட்க,
“ஆங்….அது ஒண்ணுமில்ல ம்மா….அது….அது நான் இப்ப தான வீட்டுக்கு வந்துருக்கேன்…..இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கேனே….இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே…..”என்று கேட்க,குருவிற்கு மனது உருகியது.மகள் தங்களின் அன்புக்காக ஏங்குகிறாள் என்று புரிந்தது.
“ப்ச்….கயல் இங்க பாரு…ஏற்கனவே நான் உனக்கு முன்னாடி நந்துவுக்கு முடிச்சிட்டோமேனு வருத்ததுல இருக்கேன்….அதனால அப்பா சொல்லுறத கேளு….உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது….”என்று பார்வதி பிடிவாதமாக இருக்க,கயல் தந்தையின் முகத்தை ஒருநிமிடம் பார்த்தாள்.அதில் ஒருவித பரிதவிப்பு இருக்க தன் கண்களை ஒருநிமிடம் மூடி திறந்தவள் ஒரு முடிவுடன்,
“ஓகே ப்பா….பாருங்க….நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….”என்று கூற,பெற்றவர்களுக்கு ஒருபக்கம் சந்தோஷம் தான் என்றாலும் ஒருபுறம் மகளை வற்புறுத்துகிறோமோ என்ற பயம் இருந்தது.அதை கயலும் உணர்ந்தாளோ என்னவோ,
“ப்ச்…ம்மா…ப்பா….எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்க எனக்கு எது செஞ்சாலும் நல்லது தான் செய்வீங்க….அதனால சந்தோஷமா இருங்க….அப்புறம் உங்க மத்த பொண்ணுகளுக்கு என்ன எல்லாம் செஞ்சீங்களோ அது எல்லாமே எனக்கும் இருக்கனும் சொல்லிட்டேன்….”என்று சிரித்துக் கொண்டே கூற,
“வாய் கொழுப்புடீ உனக்கு….உன்னை….”என்று பார்வதி மகளை அடிக்க பாய,
“ப்பா…ப்பா…..காப்பாத்துங்க…..”என்று அவள் குருவின் பின்னே சென்று மறைந்து கொள்ள,
“விடு….பாரூ….அவ சரியா தான கேட்டா….அதெல்லாம் அப்பா உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டேன்டா….”என்று குருமூர்த்தி கூற,
“ப்பா….ப்பானா….ப்பா தான்….”என்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அன்னையிடம் முகம் காட்ட பார்வதிக்கும் வெகு நாட்களுக்கு பிறகு மகளின் மலர்ந்த முகம் மகிழ்ச்சியை கொடுத்தது.
தனது அறைக்குள் வந்த கயலுக்கு மகிழ்ச்சியில் மலர்ந்த முகம் மீண்டும் வாடி வதங்கியது போல் ஆனது.அவளின் நினைவுகள் மீண்டும் சத்யாவிடமே ஆக்கரமிக்க தொடங்க,
“கயல்….இது தப்பு….சத்யா இனி உன் லைப்ல இல்லை….வீணா நினைச்சு அம்மா,அப்பா சந்தோஷத்தையும் கெடுத்துடாத….”என்று தனக்குள் கூறிக் கொண்டாள் என்பதை விட அதை தன் மனதில் ஆழமாக பதிய வைக்க முயன்று ஆனால் முடியாமல் தன் மனதுடன் போரட தொடங்கினாள்.
%%%%%%%%%%%%%%%%
சென்னை,
சத்யா தனது வேலைகளை முடித்து அப்போது தான் வீட்டிற்கு திரும்பி இருந்தான்.தன்னை சுத்தபடுத்தி கொண்டு வந்தவன் சமையல் அறையில் தனக்கு தேனீர் தயாரிக்க தொடங்க சரியாக அவனது கைபேசி இசைத்தது.தன் போல் முகத்தில் ஒருவித எரிச்சல் பரவியது.பேசியை எடுக்காவிட்டால் அடித்துக் கொண்டே இருப்பார் என்று நன்கு தெரியுமே அதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசியை எடுக்க,
“என்ன மகனே எப்படி இருக்க????”என்று கலைவாணன் கேட்க,
“ப்ச்….என்ன விஷயம் சொல்லு மாமா…..எனக்கு வேலையிருக்கு….”என்று ஆரம்பத்திலேயே கத்தரித்து பேச,கலைவாணனிற்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு,
“அட….என் மகனுக்கு தெரிஞ்சுடுச்சு போலவே…சரி நேரா விஷயத்துக்கே வரேன்…..உனக்கு இப்ப ஒரு போட்டோ வரும் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணு….”என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் அவர் வைத்துவிட்டார்.அவர் கூறியது போல சற்று நேரத்திற்கு பின் குறுஞ்செய்தி வர சத்யா யோசனையுடன் தான் எடுத்து பார்த்தான்.அதில் ஒரு பெண்ணின் புகைப்படமும் அதன் கீழ் அவளின் பெயர் மற்ற விபரங்களும் இருக்க சத்யா கோபத்தில்,
“நினைச்சேன்….காலையிலேயே இந்த அமிர்தா போன் போட்டு சொன்னப்பவே நினைச்சேன்….இதுங்க எல்லாம் ஏதோ வேலை பார்க்குதுனு….”என்று திட்டியவன் சற்று நேரம் இதை எப்படி கையால்வது என்று தான் யோசித்தான்.
“இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னா கண்டிப்பா பிரச்சனை வரும்….இந்த பொண்ணை பிடிக்கலை சொன்னா உடனே அடுத்துக்கு தான் போவாங்க….ம்ஹம்…..இது சரிவராது….மாமா கிட்ட பேசிட வேண்டியது தான்….அது தான் சரி….”என்று தனக்குள் முடிவுக்கு வந்தவன் கலைவாணனிற்கு அழைத்தான்.அவர் அழைப்பை ஏற்றவுடன்,
“என்ன மகனே இந்த பொண்ணை உனக்கு பிடிக்கல…அதான….”என்று நக்கலாக கேட்க,
“இல்ல….அப்படி இல்ல….எனக்கு கயலை தவிர வேற யார் மேலேயும் ஈர்ப்பு வரலை…..”என்று போட்டு உடைத்துவிட்டான்.மறுபக்கம் அமைதி,
“மாமா….கேட்குதா….”என்று சத்யா கேட்க,
“ம்ம்ம்….இருக்கேன்….நீ…..நீ உன் முடிவுல உறுதியா இருக்கியா சத்யா….”என்று கேட்ட கலைவாணனின் குரலில் முன்பு இருந்த இலகு தன்மை இல்லை என்பதை சத்யா உணர்ந்தான்.
“ஆமா….”
“என்ன திடீர் மாற்றம்…..இது நாள் வரை இது மாதிரி எண்ணம் இருந்த மாதிரி தெரியலை….”என்று கலைவாணன் கேட்க,
“எண்ணம் இல்லாம இல்லை….எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையே இல்லை….இப்ப நீங்க வற்புறுத்துரீங்க…அவ தான் எனக்கு பொண்டாட்டினு முடிவு பண்ணிட்டேன்…இப்ப என்னால மாத்த முடியாது….”என்று சத்யா கூற,
“நாங்க எங்கடா உன்னை வற்புறுத்துரோம்????”என்று கலைவாணன் மடக்க,
“ப்ச்….இப்ப என்ன அவளை திரும்பி பார்த்துலேந்து எனக்கு தான் ஆசை….போதுமா….”என்று சத்யா கோபமாக கூற,
“சத்யா….இது விளையாட்டு இல்லை….உன் அம்மா,அப்பாக்கு இன்னும் கயலை பத்தி தெரியாது….அவங்களுக்கு தெரிஞ்சு…”என்று அவர் முடிக்கும் முன்,
“தெரிய வேண்டாம்…தெரியவும் விட மாட்டேன்….”என்று சத்யாவின் குரல் அழுத்தமாக வர கலைவாணனிற்கு புரிந்தது இனி அவன் தான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று.
“எனக்கு இதுல விருப்பம் இல்லை….”என்று கூற,
“உன் விருப்பம் யாருக்கு வேணும் மாமா….கல்யாணத்துக்கு வந்து அட்சதை மட்டும் தூவு….இப்போதைக்கு நீ என்ன பண்ணுறேனா….உன் அன்பு பாசமலர் உனக்கு போன் பண்ணா….ஏதாவது சொல்லி சமாளி….நான் எப்போ கயல் வீட்ல பேச சொல்லுறேனோ அப்ப எல்லாரும் போய் பேசுங்க….இப்ப வைக்குறேன்….பை….”என்று கூறிவிட்டு அவரின் பதிலை எதிர்பாராது பேசியை வைத்துவிட்டான்.
சத்யாவிற்கு மீண்டும் கயல்விழியை சந்தித்திலிருந்து அவளின் நினைவுகளே ஆக்கரமித்துக் கொண்டிருந்தது.என்ன தான் அவளிடம் முகத்தை கோபமாக வைத்து திட்டிவிட்டு வந்தாலும் மனது ஏனோ அவளிடமே மீண்டும் மீண்டும் சென்றது.ஆனால் அவனின் மூளை அவளை நம்பாதே என்று கூற அதனால் தான் கயலிடம் வேண்டும் என்றே தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று பொய்யுரைத்து பார்த்தான்.அவளோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சென்றுவிட,
“எவ்வளவு கொழுப்பு அவளுக்கு நான் எனக்கு கல்யாணம்னு சொல்லுறேன்….கொஞ்சமாச்சும் கண்ணுள பயமோ,வருத்தமோ தெரியுதா….எப்படி எப்படி அவளாள இப்படி இருக்க முடியுது….என்னால முடியலையே….ச்சை….இவ வேணாம்னு ஒதுக்கவும் முடியலை ஏத்துக்கவும் முடியலை…..என் வாழ்க்கையே இப்படியே போயிடுமா….”என்று அவன் புலம்பிக் கொண்டிருந்த தருணம் தான் கயல்விழி காணாமல் போனது.
ஒரு நாள் முழுவதும் அவளை தேடி அலையும் போது தான் அவனிற்கு ஒன்று விளங்கியது.அதாவது கயலை தவிர வேறு யாரும் தன் வாழ்க்கையில் இல்லை.அவள் தான் தன் வாழ்வின் ஆரம்பம் முடிவு என்று புரிந்து கொண்டான்.
கயல்விழி காயம் அடைந்து மருத்துவமனையில் இருக்கும் போது அவனின் உடலும்,மனதும் ஒருங்கே துடித்து கொண்டிருந்தது.அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் சென்றது மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது.இதோ இரு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது அவள் கோவை சென்று இவன் அவளின் நினைவில் வாட தொடங்கினான். மனது ஒருநிலையில்லாமல் தவிக்க தொடங்கியது.
எங்கே தனக்கு முன்பு போல் மீண்டும் ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ என்ற பயம் வேறு அவனை ஆட்டி படைக்க தொடங்க.அந்த சமயத்தில் தான் அவனின் அன்னை அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்திருப்பதாக கூற அவனால் கயல் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண்ணை நினைக்க கூட முடியவில்லை.அன்னையிடம் கூறிவிடலாம் தான் ஆனால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் இருவருக்கும் வீண் விவாதம் தான் நடக்கும் அதனாலே அவன் மாமாவிடம் இன்று தன் மனதில் உள்ளதை போட்டு உடைத்தது.இனி மாமா பார்த்துக் கொள்வார் என்று அவனுக்கு நன்கு தெரியும்.
“அது எல்லாம் சரி சத்யா….ஆனா இந்த கயலம்மாவை எப்படி வழிக்கு கொண்டு வர….ம்ம்ம்…..பேசி பார்ப்போம் ஒத்துவரலை தூக்கிட வேண்டியது தான்…..”என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
அவன் நினைத்தது போல் அடுத்த வாரம் கயலும் சென்னை வந்தாள் ஆனால் தனியாக இல்லை அவளிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை பார்க்க வந்தாள்.கயலை மற்றொரு ஆடவனுடன் கண்ட சத்யா கோபத்தின் உச்சிக்கே சென்றான்.
error: Content is protected !!