Skip to content
Post Views: 9,409
அன்பில் இணைந்த இதயங்கள்….16
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை மலைக்கோவிலில் கயல்விழி-சத்யாவின் திருமணத்திற்கு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருந்தது.சத்யாவின் அம்மா அமிர்தா கோவிலில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் வைத்ததால் திருமணம் அவர் விருப்படியே ஏற்பாடு செய்யப்பட்டது.சின்ன மேடை போன்ற அமைப்பு அதை சுற்றி வண்ண வண்ண மலர்கள் அலங்கரிக்க பட்டிருக்க,அதன் நடுவில் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் சத்யா.
“ப்பா….பார்த்தீங்களா இவனை ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படி இருந்தான் இப்ப எப்படி இருக்கான் பாருங்க…நம்மளை எப்படி பாடாபடுத்தி எடுத்தான்….ம்ம்….இவனை கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு இவனுக்கு….”என்று தன் உள்ள குமுறலை கலைவாணனிடம் கொட்டிக் கொண்டிருந்தான் நவீன்.
“ம்ம்….”என்று பக்கத்தில் நின்றிருந்த கலைவாணனும் தலையாட்டினார்.அவரின் கண்கள் முழுவதும் சத்யாவின் மீது தான் முகம் மலர்ந்து சிரித்தபடி அமர்ந்து திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்தான் உள்ளத்தின் மகிழ்ச்சி முகத்திலும் பிரதிபலித்து அவனை மேலும் அழகனாக காட்டியது.அவரது மனதும் நவீன் கூறுவது போல் ஒருவாரம் முன்பு அவன் இருந்த நிலையை நினைத்து பார்த்தது.
Advertisement
கலைவாணன் சத்யாவின் வீட்டிற்கு வந்து முழுதாக ஒருநாள் ஆனது.சத்யாவோ எழுவான் சாப்பிடுவான் தனது அறையில் அடைந்து கொள்வான்.கலைவாணன் அவனிடம் பேச முயற்சி செய்தால் காதில் வாங்காமல் சென்றுவிடுவான்.ஒரு நாளில் சத்யா என்பவன் முற்றிலுமாக மாறியிருந்தான்.சோர்ந்து போன முகம் கையில் இன்னும் நடுக்கம் இருந்தது.பணியில் இருந்து இருவாரம் விடுமுறை எடுத்திருந்தான்.மனது எதிலும் நிலைக்கவில்லை அனைத்திலும் தடுமாற்றம்.
கலைவாணனிற்கு தான் மீண்டும் பதட்டமாகவே இருந்தது.இவன் கோபமாக கத்தினால் கூட மனதில் என்ன நினைக்கிறான் என்று தெரிந்துவிடும்.ஆனால் இப்படி அமைதியாக இருந்தால் பிரச்சனை பெரிதாக தான் வாய்ப்பு என்று புரிந்தவர் சத்யாவின் அறைக்குள் சென்றார்.அறையில் சத்யா விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.அவனை அப்படி பார்க்கவே கலைவாணனிற்கு மனது பாரம் ஏறிய உணர்வு.
“டேய்….மகனே….”
Advertisement
“…….”
Advertisement
“டேய்….டேய்…..”என்று கலை சத்யாவின் தோள்களை உலுக்க,அப்போதும் சத்யா விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க,கலைக்கு பொறுமை பறந்தது,
“சத்யா….டேய்…சத்யா….”என்று கத்தியபடி அவனின் கன்னங்களை மாறி மாறி அடிக்க அப்போதும் அவனின் நிலையில் மாறுதல் இல்லை.வெளியில் சென்றிருந்த நவீன் சத்தம் கேட்டு உள்ளே வர,கலை சத்யாவை அடிக்கவும்,
“ப்பா….ப்பா…கொஞ்சம் அமைதியா இருங்க…ப்பா….”என்று அவரை பிடித்து இழுத்து அமர வைத்தான்.
Advertisement
“நான் எதுக்குடா பொறுமையா இருக்கனும்….இவன்…இவனை பார்த்தியா…..எப்படி இருக்கான் பாரு….ஏன்டா இவனுக்கு மட்டும் இப்படி நடக்குது….”என்று கலைவாணன் உடைந்துவிட,நவீனிற்குமே வருத்தம் தான் நண்பனின் இந்த நிலைக் கண்டு.அவன் மெல்ல சத்யாவின் அருகில் சென்று அவனது முகத்தை தன் பக்கம் திருப்பி,
“டேய்….மச்சான்….இங்க பாரு….அப்பா எப்படி கஷ்டபடுறாரு பாரு….”என்று அவனின் முகத்தை கலைவாணனை பாரக்குமாறு திருப்பி காட்ட,சத்யாவின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது.
“டேய்…..சத்யா…உனக்கு எதுக்குடா அவ….அவளை பத்தி யோசிக்காதடா…அவ எல்லாம் உனக்கு ஏத்த ஆளே கிடையாது….”என்று தன் முன்னே முகம் கலங்கி அமர்ந்திருந்த நண்பனை தேற்றிக் கொண்டிருந்தான் நவீன்.
“…….”
“டேய் மச்சான் இப்படி இடிஞ்சி பேகாதடா….எனக்கு பயமா இருக்கு….நீயாடா இப்படி காதல் பைத்தியாமா இருக்குறது….எங்களை எல்லாம் திட்டுட்டு இப்ப நீ என்ன மச்சான் பண்ணிக்கிட்டு இருக்க….”என்று நவீன் மேலும் திட்ட,எதிரில் இருப்பவனோ மனது முழுவதும் வெறுமையுடன் விட்டத்தை வெறித்தபடி இருந்தான்.
“அவன் கேட்க மாட்டான் ப்பா….நாம இத்தனை பேரு இவனுக்காக போராடுறோம்….ஆனா இவனுக்கு நம்ம எல்லாரையும் விட இவனை விட்டு போன அவ தான் வேணும்…இன்னும் அமிர்தாவுக்கும்,லிங்காவுக்கும் இவன் நிலைமை தெரியாது தெரிஞ்சா…என்ன நடக்குமோ நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு….”என்று கலைவாணன் வேதனையாக கூற,சத்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.அப்போது கலைவாணனின் கைபேசி இசைக்க எடுத்தவர் முகத்தில் கலவரம்,பேசியை பார்த்தவர் சத்யாவை ஒரு முறை பார்த்துவிட்டு ஸ்பீக்கரில் போட்டார்.
“சார்….நான் தீனா….பேசுறேன்…..”
“சொல்லு தீனா….ஏதாவது முக்கிய விஷயமா….”என்று கலை கேட்க,
“சார்…..அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தாங்கனு சொன்னேல்ல….இப்ப என்ன பிரச்சனைனு தெரியலை சார் தடை பட்டு போச்சு….அதோட அவங்க அப்பாக்கும் கொஞ்சம் உடம்புக்கும் முடியலை போல ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க…..”என்று தீனா கூற,
“ரொம்ப தேங்க்ஸ் தீனா…எனக்காக ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க….”என்று கலைவாணன் கூறி வைக்க.
“என்ன ப்பா…யார் தீனா….எந்த பொண்ணை பத்தி சொல்லுறாரு….”என்று நவீன் புரியாமல் கேட்க,
“ம்ம்….எல்லாம் உன் பிரண்ட் விரும்புற பொண்ணை பத்திதான் சொல்லுறான்….”என்று கலைவாணன் சத்யாவை கூர்மையாக பார்த்தபடி கூற,
“கயலா…கயலை பத்திதான் சொன்னானா….ஆங்….சொல்லு மாமா….சொல்லு….”என்று சத்யா என்ற சிலைக்கு உயிர் பெற்றது போல் கலையின் அருகில் வந்து அவரின் கைகளை பிடித்தபடி கேட்க,அவனை பார்த்த கலைக்கு அத்தனை வேதனை,அந்த கண்களில் தான் எத்தனை பரிதவிப்பு மன்றாடல் அனைத்தும் ஒரு சேர பிரதிபலித்துக் கொண்டிருந்தது சத்யாவின் கண்கள்.அவனின் கன்னங்களில் கலையின் கை தடம் இருக்க,அதை மெல்ல வருடியவாரே,
“ஏன்….அப்படி என்ன காதல் உன்னோடது….இந்த பரிசுத்தமான அன்புக்கு அவ ஏத்தவளா…”என்று கலை கேட்க,
“தெரியலை….தெரியலையே மாமா….ஏன் என் மனசு இப்படி துடிக்குது எனக்கு தெரியலை….அளவுக்கு அதிகமான அன்பு கூட நல்லதுக்கு இல்லை அப்படி தான மாமா….”என்றவன் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்து கொண்டு விட்டத்தை வெறிக்க,
“டேய்….நல்லவனே….இப்ப எதுக்குடா திரும்பியும் விட்டத்தை வெறிக்குற….”என்று நவீன் அவனின் தலையில் கொட்ட,அவனின் கைகளை தட்டிவிட்டவன்,
“ப்ச்…விடுடா….”
“அடேய்….உன்னால நாங்க இங்க தவிச்சிக்கிட்டு இருக்கோம் நீ என்னடானா….அந்த பொண்ணை பத்தி பேச்சு எடுத்தவுடனே சிலைக்கு உயிர் வந்தது போல பேசுற…”என்று நவீன் கோபமாக கத்த,
“ம்ம்ம்…சாரி டா….உங்களை கஷ்டப்படுத்தனும் நினைக்கல…..என் மனசை திசை திருப்ப தான் நானும் போராடிக்கிட்டு இருக்கேன்….ஆனா….”என்று அவன் அமைதியாக,
“உன் கயலம்மா கிட்ட தான் உன் மொத்த நிம்மதியும் இருக்கு அப்படி தான….”என்று கலை கேட்க,சத்யா பதில் சொல்லவில்லை அவனின் அமைதியே உரைத்தது அது தான் உண்மை என்று.அந்த நிமிடம் கலைவாணன் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தவர்,
“நவீன் எனக்காக இன்னும் இரண்டு நாள் இவன் கூடவே இருக்க முடியுமா….”என்று கலை கேட்க,
“என்னப்பா இது இருனு சொன்னா இருக்க போறேன்….”என்று நவீன் கூற,கலை நவீனின் கட்டுப்பாட்டில் சத்யாவை விட்டுவிட்டு நேராக கோவை வந்து லிங்காவிடமும்,அமிர்த்தாவிடமும் சத்யாவின் திருமணத்தை பற்றி பேசியவர் தனக்கு தெரிந்த பெண் என்று கயல்விழியை பற்றி கூறினார்.அதே போல் கயல்விழியின் தந்தையிடமும் பேசிவிட்டார்.கயல்விழி தான் சத்யா காதலித்த பெண் என்பதை சத்யாவின் வீட்னரிடம் கூறவில்லை.கூறினால் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று மறைத்துவிட்டார்.இருவீட்டாரின் ஓப்புதல் உடன் நடக்கும் திருமணம் போல் ஏற்பாடு செய்துவிட்டு தான் அவர் சத்யாவிற்கே தகவல் அனுப்பினார்.
“மாமா….என்ன சொல்லுற நீ….கயல் வீட்டுல பேசிட்டியா….என்ன எனக்கு….இது நிஜமா…..”என்று சிறு குழந்தை போல் குதுகலித்தவனைக் கண்டு கலைக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி ஒரு பக்கம் கவலை என்று தான் இருந்தது.இது இந்த காதல் அவனை நல்லமுறையில் அவனை வாழ வைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ….”என்ற ஐயரின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தார் கலைவாணன்.
தங்கநிற பட்டு புடவையில் தங்க தாரகை போல வந்தாள் கயல்விழி.குருமூர்த்திக்கு மகளை காண காண அத்தனை நிறைவு.பார்வதிக்கும் கயல்விழிக்கு நல்ல குடும்பத்தில் திருமணம் அமைய வேண்டும் என்பது மட்டுமே வேண்டுதலாக இருக்க கோவையில் பெரும் புள்ளியாக இருப்பவர் சங்கரலிங்கம் அவரின் வீட்டில் மகள் வாக்கப்பட்டு போவதில் அத்தனை திருப்தி அவருக்கு.மனநிறைவில் கண்கள் கலங்கி நின்றிருந்தனர் இருவரும்.
ராகவ்வின் அம்மாவிற்கு சற்று பொறாமை தான் தங்களை விட வசதியான இடம் கிடைத்துவிட்டதே இவளுக்கு என்று.ஆனால் எதுவும் செய்யமுடியவில்லை அவரால் சத்யாவிடமும் அவனின் குடும்பாத்தாரிடமும் நெருங்கவே முடியவில்லை.கலைவாணன் அனைத்தும் பார்த்துக் கொண்டார்.யாரும் கயலை எதுவும் கூற முடியாதபடி பார்த்துக் கொண்டார்.அதோடு சத்யாவும் போலீஸ் என்பதால் சற்று விலகி தான் இருந்தனர்.
சத்யாவிற்கு கயல்விழியிடம் இருந்து கண்ணை எடுப்பது கடினமாக இருந்தது.அவள் மெல்ல நடந்து வர வர அவனின் இதயம் தாளம் தப்பி துடித்தது.அவனின் அருகில் அவளை அமர வைத்ததும்,
“மேக்கப் போட இவ்வளவு நேரமா….இன்னும் எவ்வளவு நாள் தான் என்னை வெயிட் பண்ண வைப்ப….”என்று சத்யா கேட்க,
“நான் ஒண்ணும் மேக்கப் எல்லாம் போடலை….”என்றவள் தன்னை ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு சுற்றி பார்க்க,அவளின் பதட்டத்தை ரசித்தபடி,
“ஓய்…யாரை தேடுற….”
“ம்ம்ம்…..ம்ஹம்….நிஜமா மேக்கப் ஓவரா இருக்கா….”என்று திரும்பி கேட்க,அவனின் முகத்தில் தெரிந்த விஷம புன்னகையில் அவன் விளையாடுகிறான் என்று புரிந்தவள்,
“சத்யா….”என்று ஆசுவாசம் ஆக,
“பொண்ணும்,மாப்பிள்ளையும் இங்க கொஞ்சம் கவனிங்கோ…அப்புறம் நீங்க இரண்டு பேரும் பேசிக்கலாம்….”என்று ஐயர் கூற,சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க,
“இப்ப தான் பேச முடியும்….அப்புறம் பேச முடியாது இல்ல…”என்று சத்யா கயலைவிட்டு கண்ணை எடுக்காமலே அவரிடம் வம்பு வளர்க்க,கயல்விழிக்கு வெட்கமாக போனது.அந்த அழகான தருணத்தில் அவனின் கைகளில் மாங்கள்யம் கொடுக்கப்பட மங்கள நாணை கயல்விழியின் கழுத்தில் பூட்டி தன் சரிபாதியாக்கிக் கொண்டான் சத்யா.
திருமணம் முடிந்து அனைவரின் ஆசிர்வாத்தையும் பெற்றனர் தம்பதியர்.அமிர்தாவிற்கு அத்தனை மன நிறைவு மகனை திருமண கோலத்தில் காண அவரின் காலில் விழிந்து எழும் போது மகனின் தலையில் கை வைத்து,
“சத்துமா….ரொம்ப சந்தோஷமா இருக்குடா….எனக்கு….”என்று அவர் மகிழ்ச்சியில் தடுமாற அவரை அணைத்துக் கொண்டவன்,
“ம்மா…ம்மா….ப்ளீஸ்…”என்று அவரை சமாதான படுத்த முயல,கயல்விழிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அதான் உன் புள்ளை கல்யாணம் நீ நினைச்ச மாதிரி முடிஞ்சிடுச்சே…அப்புறம் என்ன அம்மு….”என்று தன் மனைவியை தட்டிக் கொடுத்தார் லிங்கம்.
“ம்ம….ஆமாங்க….நான் இப்ப தான் நிம்மதியா இருக்கேன்…”என்றார்.
“போதும் அவங்களை சைட் அடிச்சது….”என்று சத்யா கயல்விழியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப,
“இல்ல…அப்படி எல்லாம் இல்ல…”என்று கூறினாள் கயல்.அவளுக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை சத்யா அன்று வந்து கேட்டதும் தன் மனதை திறந்து கூறிவிட்டாள் தான் ஆனால் இன்னும் அவனிடம் பழையபடி நெருக்கம் வரவில்லை.
“இரண்டு பேரையும் சாப்பிட கூப்பிடுறாங்க….வாங்க….”என்று அவர்களை அழைக்க வந்தாள் நந்திதா.அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவே நேரம் இல்லை நேரம் இரக்கை கட்டி தான் பறந்தது.தம்பதியர் இருவருக்கும் கயலின் வீட்டில் பாலும்,பழமும் கொடுக்கப்பட்டு சற்று நேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்பினர்.சத்யாவின் வீட்டிற்கு வந்தவர்களை ஆரம் எடுத்து வரவேற்று கயல்விழியை விளக்கேற்ற சொன்னார் அமிர்தா.கயல்விழி விளக்கேற்றியதும்,
“இனி நீ தான் இந்த வீட்டோ அடுத்த மகாலட்சுமி….”என்று அவளின் கன்னத்தை செல்லமாக ஆட்டினார் அமிர்தா.
“அப்போ நான் இல்லையா….”என்றபடி வந்தாள் சத்யாவின் அக்கா ரஞ்சனி.
“நீ எங்க வீட்டு மகாலட்சுமி…”என்றார் ரஞ்சியின் கணவர் பிரசாத்.
“அச்சோ…விடுங்க…”என்று தன் கன்னத்தில் இருந்த கணவனின் கையை எடுத்த ரஞ்சிக்கு வெட்கமாகி போனது.அமிர்தா மகளை நிறைந்த மனதுடன் பார்க்க,கயலிற்கு இந்த வீட்டில் அனைவரும் ஒரு புரிதலுடன் தான் இருக்கின்றனர் என்று புரிந்தது.
“ரஞ்சி…கயலை சத்யா ரூம்முக்கு அழைச்சிட்டு போ…”என்றவர் கயலிடம் திரும்பி,
“போம்மா….போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு….”என்று கூறி அனுப்பி வைத்தார்.
“வா கயல்….”என்று ரஞ்சி கயலை சத்யாவின் அறைக்கு கூட்டி வந்தவள்,
“கயல் பிரஷ்ஷப் ஆகிட்டு வா….உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்….”என்றுவிட்டு ரஞ்சி செல்ல,கயல்விழி அந்த அறையை சுற்றி பார்த்தாள்.நல்ல விஸ்தாலமான அறை,சுவற்றில் சத்யாவின் சிறு வயது புகைப்படங்கள் ஒட்டப் பட்டிருந்தன.அதை பார்த்து கொண்டிருந்தாள்.பெரும்பாலான படங்களில் கலைவாணனும் சத்யாவும் தான் இருந்தனர்.இதிலிருந்தே அவளுக்கு புரிந்தது கலைவாணன் தான் சத்யாவிற்கு அனைத்தும் என்று.
“என்ன உன் புருஷன் போட்டோவையே பார்த்துக்கிட்டு நின்னுட்டியா….பிரஷ் அகிட்டு வா….நான் கீழ போறேன்….அதுக்குள்ள என் தம்பி ஏதோ பிரச்சனை கிளப்பிட்டான் போல எல்லாரும் ஏதோ டென்ஷனா பேசிக்கிட்டு இருக்காங்க…..”என்று ரஞ்சி கூற,
“அச்சோ…என்ன ஆச்சு….என்ன பண்ணாங்க….”என்று கயல் பதட்டப்பட,
“நீ இப்ப தான வந்திருக்க….போக போக பழகிடும்…..அவன் எப்போதும் இப்படி தான்….நாங்க ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணும் செய்வான்….இந்த கல்யாணம் மட்டும் தான் அம்மா விருப்படி செஞ்சிருக்கான்….சரியான ரௌடி…”என்று தம்பியை செல்லமாக திட்ட,கயல்விழிக்கு பயமாக தான் இருந்தது.இப்போது தான் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது என்று அவள் நினைத்திருக்க அவளின் கண்ணாளன் இனிதே ஒரு பிரச்சனை தொடங்கி வைத்திருந்தான்.
error: Content is protected !!