Skip to content
Post Views: 8,929
எஸ்டேட் பங்களா சென்ற ஜெகன் நேரே உள்ளே செல்ல ஹால் சோபாவில் விழிகள் மூடி படுத்திருந்தார் அச்சுதன் , யாரோ வரும் அரவம் கேட்டு பார்த்தவர் , அவர்களை கண்டவுடன் மெல்ல எழுந்து அமர.
“ராஜீவ் மேனேஜர் யாரு வர சொல்லுங்க” என்றான் ஜெகன்.
அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றார் மேனேஜர் “இந்த எஸ்டேட் பங்களா யார் பேர்ல இருக்குனு தெரியுமா” என்க.
அவர் தயக்கமாக அச்சுதனை பார்த்துக்கொண்டே “சாரோட பொண்ணு பேர்ல…” என்க “இல்ல.. வருண் ஜெகன்நாதன் மனைவி கார்தும்பி பேர்ல” என்றான்.
Advertisement
அவருக்கு அடுத்து பேச்சே வரவில்லை , அச்சுதன் விழிகள் நிறைந்து கண்ணீர் கையில் பட்டு தெறித்தது , ஒரு நொடி அவரை பார்த்து இரக்கம் கொண்டவன் மறுநொடியே நந்தினிக்கும் தன்னவளுக்கும் நடந்த கொடுமைகளை நினைத்து இறுகினான்.
இவர் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் ஒரு தந்தையாக நடந்திருந்தால் அவள் இத்தனை வேதனைகளை சுமந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
வீட்டை விட்டு வெளியில் வந்தவன் “ராஜீவ் உங்க சித்தப்பாவுக்கு ஏதாவது வேல ஏற்பாடு பண்ணுங்க , இல்ல இங்கயே கூட வேல பக்கட்டும் ஆனா அவர் முதலாளி இல்ல , அவருக்கான சம்பளத்தை சரியா பேசிடுங்க” என்றன்.
Advertisement
மேனேஜரிடம் “இங்க அவர் தங்க கூடாது , அவருக்கு தங்க ஏற்பாடும் பண்ணிடுங்க” என்றவன் மாமனுடன் எஸ்டேட்டை சுற்றி பார்க்க சென்றுவிட்டான்.
Advertisement
எதற்குமே பதில் பேசாத அச்சுதன் ராஜீவுடன் அந்த பங்களாவில் இருந்து வெளியேறினார் , கிட்டத்தட்ட அவருடைய முப்பத்தியைந்து வருடங்களை அவர் இங்கேதான் கழித்தார்.
இந்த சொத்துக்களுக்காக எத்தனை எத்தனை பாவங்கள் செய்தனர்,
அனைத்தும் சாபமாக இப்பொழுது தங்கள் தலையில் விழுந்ததை அவர் உணர்ந்திருந்தார்.
Advertisement
அதேயே தான் மருமகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் துரைசெல்வம், அமைதியாக ஜீப்பில் வந்து கொண்டிருந்தவனை பார்த்தவர் “என்ன மாப்ள யோசிக்கிற” என்க.
“இந்த சொத்து…. இது மேல எனக்கு எந்த விருப்பமும் இல்ல மாமா, ஆனா இத இவங்க அனுபவிக்க கூடாது , இது எதையும் என் தும்பியும் வாங்க மாட்டா , அந்த மனுஷனை பாக்கும்போது மனசு கொஞ்சம் தடுமாறுது”.
“ஆனா என்னால மன்னிக்க முடியல மாமா , அவர் கொஞ்சமாவது என் தும்பிக்கு நல்லது பண்ணியிருக்கலாம்” என்றவனை பார்த்தவர் அவன் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்து “விடு மாப்ள அவன் செஞ்ச பாவக்கணக்குக்கு இப்போ வட்டி கட்டறாங்க”.
“அந்த சொத்து நமக்கு வேண்டாம் மாப்ள அது முழுசும் ஒரு குடும்பத்தோட ஒரு அப்பாவி பொண்ணோட கண்ணீர் விழுந்தது, சாபம் கிடைச்சது அது நம்ம புள்ளைக்கு வேண்டாம் , என்ன பண்றதுனு பொறுமையா யோசிப்போம்” என்றார்.
இவர்கள் திரும்பி சென்றபோது அச்சுதனுக்கு அங்கே பாக்ட்ரியில் சூப்பர்வைசர் வேலையும் அருகே தங்குவதற்கும் ஏற்படு செய்யப்பட்டது.
இரவு உணவுக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் , இவர்கள் இங்கு இருக்கும் வரை அணைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ள ஆள் வைத்து கொண்டார்கள்.
அனைவரும் மனதாலும் சோர்ந்திருக்க எல்லோருக்கும் ஓய்வு கொடுக்கப் பட்டது , அனைவருக்கும் மாதவியே உணவு பரிமாறி வற்புறுத்தி உன்ன வைத்தார்.
மன்னிப்பை வேண்டி சென்ற ரெம்யா கன்னத்தில் விரல் தடங்களோடு வந்து அறையில் படுத்திருந்தாள் , அவர்கள் அடித்தது கூட அவள் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியை அளித்தது.
அனைவரும் உண்டு முடித்து அவர் அவர் அறையில் சுருண்டு கொண்டனர் , பாட்டியின் அறைக்கு வந்த அம்முவை அவர்கள் இருவரும் கேள்வியாய் பார்க்க.
“பெரியம்மா எனக்கு பயமா இருக்கு” என்றாள் கையை பிசைந்து கொண்டே .
“உன் புருஷனப் பார்த்து உனக்கு பயமா!! எதுக்கு” என்றார் அவர்.
அவரை பாவமாக பார்த்துக்கொண்டே திரு திரு என்று விழிக்க, பின்னில் வந்து நின்றவன் அவர்கள் இருவருக்கும் கண் காண்பித்து விட்டு , அவள் கைபற்றி அழைத்து சென்றான்.
அறைக்குள் சென்று கதவடைத்தவன் அவளை கட்டிலில் அமர வைத்தான் , அருகே அமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றோடு முகம் அழுத்தினான் , அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
சட்டென்று அவள் கைகள் அவன் முடி கற்றையை அழுந்த பற்றியது, அவள் வயிற்றில் முத்தம் வைத்தவனின் மீசை முடிகள் அவளுள் புது உணவுர்களை தட்டி எழுப்ப அவன் முகத்தை கைகளில் ஏந்தினாள்.
“தும்பி… உன்ன ரொம்ப தேடினேண்டி , என் கவலையை வேதனையை யார்கிட்டயும் சொல்ல கூட முடியல , நீ என் பக்கத்துல இருக்கணும்னு ரொம்ப ஏங்கினேன்”.
“ஆனா முடியல , உன்ன காயப் படுத்திடுவேனோனு பயமா இருந்தது, என்னால நிம்மதியா தூங்கவே முடியாது , அம்மாவும் வாஞ்சியும் அலர்ற சத்தம் எப்போவும் கேட்டுட்டே இருக்கும்”.
“அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு எதுவுமே பண்ண முடியாதவனா நின்னேன் , அப்பா ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் என்ன செய்யன்னு தெரியாம” என்றவனை தன் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாள்.
“வேண்டா நந்தேட்டா வேண்டா , எல்லாத்தையும் மறந்துடுங்க” என்க, நிமிர்ந்து அவளை பார்த்தவன் “இல்ல உன்ன நான் விட்டுட்டு போயிருக்க கூடாது”.
“ஏண்டி நீயும் தற்கொலை பண்ணிக்க பாத்த , உனக்கு ஏதாவது ஆயிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன் , நான் வரவே மாட்டேன்னு நெனச்சுட்டியா” என்க.
அமைதியாக இருந்தாள் “சொல்லு தும்பி ஏன் அப்படி பண்ண”.
“நான் எப்படி வேற ஒருத்தனை கல்யாணம்” என்றவள் தேம்ப அவளை தன்னோடு இறுக்கி அனைத்துக் கொண்டான்.
“என் தப்பு தாண்டா சாரி சாரி” என்க “இல்லை” என்று தலை ஆட்டியவள் “நந்தட்டனும் தப்பு இல்லை தும்பியும் தப்பு இல்லை , உங்கள மொத்தமா இழந்துட்டேன்னு நினைச்சு வாழவே பிடிக்காம….” என்று திக்கி திக்கி வார்த்தைகளை கோர்த்தாள்.
இந்த அணைப்பு கிடைக்காமலே போய்விடுமோ என்று தவித்த தவிப்பு இப்பொழுது அவள் வார்த்தைகளில் “ஷ்.. ஷ்.. போதும் நாம பழசை பேசவேண்டாம்” என்றவன்.
அவளை அப்படியே தன் மடிக்கு மாற்றிக் கொண்டவன் , கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வாசத்தை தன்னுள் இழுத்து நிரப்பினான்.
“உன்கூட இருக்கவே முடியறதில்லை என்னால , இப்போவும் நான் போகணும் இன்னும் ரெண்டு நாள்ல” என்றவன் அவள் நெற்றி முட்டி விழிகள் மூடி அமர்ந்திருந்தான் எந்த பேச்சுக்களும் இல்லாமல்.
இரண்டு வாரங்கள் அவளும் அவனும் மட்டும் , அந்தமான் தீவில்… அவள் கடலையும் இயற்க்கையையும் ரசிக்க அவன் அவளை மட்டும் ரசிக்க என்று அணைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.
சீதாவின் முடிவு அனைத்தையும் மாற்றிவிட்டது , நீண்ட நான்கு வருடங்களாக அவளுடன் இருக்கும் நொடிகளுக்காக ஏங்குகிறான்
“நந்தேட்டா” என்றவள் அழைப்பில் அவன் நிமிர்ந்து அவளை பார்க்க, “நான் என்ன செய்யணும்” என்றாள் காதலோடு.
அவனுக்கு சிறிதாக புன்னகை மலர்ந்தது , அவள் கேட்க வருவது புரிந்து “உன் வேதனைகளை குறைக்கும் அமிர்தம் என்னிடம் இருக்கிறது என்றால் மொத்தமாக எடுத்துக்கொள்” என்கிறாள் முழு மனதோடு.
முகத்தில் சிதறி கிடந்த முடி இழைகளை ஒதுக்கியவன் “நடுக்கடல் போன அப்பறம் எதுவுமே தெரியாது , நீல வானம் நீலக்கடல், எங்கும் அமைதி , உன்னை பத்தின நினைப்பு மட்டும் தான் ஒவ்வொரு நாளையும் கடக்க துணையா இருந்தது”.
“உன்கூட இருக்கணும் தும்பி , இருக்குற ஒவ்வொரு நாளையும் நிமிஷத்தையும் பொக்கிஷமா சேகரிக்கணும் , இந்த ரெண்டு நாள் எனக்கு பத்தாது , என் கார்தும்பியோட கதைகளை கேக்கவே இந்த ரெண்டு நாள் போதாது”.
“என்கூட வாழ தனிமையை நீ பழகிக்கணும் , நாம சேர்ந்து இருக்குறது கொஞ்சநாளா தான் இருக்கும் , வருஷத்துல பாதிநாள் நான் ஒரு எடத்துல நீ ஒரு எடத்துல” என்க அவனோடு இன்னும் ஒன்றினாள்.
காதலித்து காத்திருந்து கைபிடித்தவளுடன் சேர்ந்துவிடும் நாளுக்காக இன்னும் எத்தனை மாதங்களை கடக்க வேண்டும் , அவள் விழி நீரில் தன் சட்டை நனைவதை உணர்ந்தான்.
என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும் இப்பொழுது , அவளுடைய வருத்தம் கோபம் அனைத்தும் நியாயமாகப் பட்டது கணவனுக்கு.
அவன் மனைவி தான் அதற்காக அவசர கதியில் தொடங்கி வெறும் காமத்தை ருசித்து மீண்டும் தனிமை சூழலில் இருவரும் சிக்கி கொள்ள வேண்டுமா.
அவளுடன் ஒவ்வொரு நொடியையும் ரசித்து கடக்க வேண்டும், அவளை தன்னில் இருந்து அகற்றியவன் “போ போய் பெரியம்மா கூட தூங்கு” என்றான் அவள் விழிகளை சந்திக்காமல்.
ஏன் எதற்கு யார்மீது என்று தெரியாமலே இயலாமையும் கோபமும் வெடித்தது உள்ளே , முகத்தை அழுந்த துடைத்தவள் அவனை பார்க்காமலே அறையில் இருந்து வெளியேறினாள்.
ஆணவ பேச்சுக்கள் , அகம்பாவ வார்த்தைகள்
இகழ்ச்சியான பார்வைகள் , இதயம் இல்லா மனிதர்கள்
அனைத்தையும் கடந்துவிட்டேன் ,
என் அருகாமையை யாசிக்கும்
உன் விழிகளின் ஏக்கத்தை
கடக்க இயலவில்லையடி என்னால்
error: Content is protected !!