Skip to content
Post Views: 8,640
அன்பில் இணைந்த இதயங்கள்….19
ஒரு மாதம் கடந்துவிட்டது கயல்விழி,சத்யாவின் திருமணம் முடிந்து.கயல் இப்போது வேலைக்கும் செல்ல தொடங்கிவிட்டாள்.அவளுக்கு என்று இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துவிட்டான் சத்யா.சத்யா கூறியதை போல தனது பணியில் சேர்ந்த பின்பு இருவரின் உரையாடல்கள் சற்று குறைந்து தான் போனது.ஆனால் கயல் சத்யாவை நன்கு புரிந்து கொண்டதால் பிரச்சனை இல்லாமல் சென்றது.தன் கணவன் தனித்துவமானவன் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.ஆம் ரகசியம் தான் சத்யா மற்றவர்களிடம் எப்படியோ கயலிடம் முற்றிலும் வேறுவிதமாக தான் இருப்பான்.
யாரிடமும் வணங்காத அவனின் தலை அவளிடம் மட்டும் தாழ்ந்து போகும்.ஆனால் கயலும் லேசுபட்டவள் அல்ல வாழ்க்கையில் பல அடிகளை பட்டு தானே வந்திருக்கிறாள்.தன்னிடம் பொக்கீஷமாக கிடைத்த அவனின் அன்பை அவள் இழக்க விரும்பவில்லை அதனால் அவனை எதற்கும் தன்னிடம் மண்டியிட வைக்க மாட்டாள்.அவனின் கயல் அவனுக்காக மட்டுமே கிடைத்தாள்.ஆம் கயல் அவனிடம் மட்டுமே தன் இயல்பை மீட்டிருந்தாள் என்பதைவிட மீட்டு எடுத்துவிட்டான் சத்யா என்பது தான் உண்மை.
திருமணத்திற்கு பிறகான வாழ்வில் புரிதல் என்பது மிக முக்கிய ஒன்று அது இருந்தால் கணவன்,மனைவி இருவருக்குமே பலம்.சத்யாவின் அன்பும் கயலின் புரிதலும் அவர்களின் வாழ்வை செழுமையாகவே வைத்திருந்தது.இந்த ஒரு மாதத்தில் ஒருமுறை மட்டுமே கோவை சென்று வந்திருந்தனர்.அமிர்தாவும்,கயலும் இந்த ஒரு மாதத்தில் மனதளவில் நெருங்கிவிட்டனர்.அமிர்தாவிற்கு கயலின் படபட பேச்சு பிடித்துவிட அவளுடன் தான் பேசியில் அரட்டை அடிப்பார்.மாமியார்,மருமகள் கூட்டணியில் சில நேரத்தில் மாமனாரும் கலந்துவிடுவார்.ஆக மொத்ததில் கயல் சத்யாவின் குடும்பத்துடன் நன்கு தன்னை பொருத்திக் கொண்டாள்.
Advertisement
அன்று கயல் மாலை வேலை விட்டு வந்தவள் இரவு உணவிற்கு என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்க வெளியில் ஜீப் சத்தம்.
“சண்முகம் எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது இன்னும் அரைமணி நேரத்தில அந்த பைல் என்கிட்ட இருக்கனும்….போங்க…”என்று சத்யா காட்டு கத்தலாக கத்திக் கொண்டே வீட்டின் உள்ளே வர,
“அச்சோ இன்னைக்கு சத்து மாத்திரை ரொம்ப கோபமா இருக்கார் போலவே….கயலு வாயை அடக்கி வாசி இல்லை உன் தலை தான் உருளும்….”என்று தனகுக் தானே எச்சரிக்கை செய்து கொண்டாள்.சத்யாவின் ஒரே பலவீனம் அவனின் கோபம் வேலை விஷயத்தில் ஏதாவது குலறுபடிகள் நடந்துவிட்டால் அவனிடம் வேலை பார்ப்பவர்கள் அனைவரையும் பிழிந்து எடுத்துவிடுவான்.
Advertisement
இம்மாதிரியான நேரங்களில் வீட்டிலும் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் அதன் வெளிபாடு கயலின் மேல் தான் விழும்.அன்று முழுவதும் அவள் என்ன செய்தாலும் குத்தம் சொல்லிக் கொண்டு தான் இருப்பான்.என்ன விஷயம் என்று கேட்டாலும் கோபப்படுவான்,கேட்டகவில்லை என்றாலும் கோபம் வரும் ஆக கயலுக்கு அந்த நாளை கடப்பது மிக கடினமாக தான் இருக்கும்.
Advertisement
“கயல்….கயல்…..எங்கடீ இருக்க…”என்று அடுத்தது கயலுக்கு அழைப்பு வர,
“அடியே அடுத்தது தீபாவளி உனக்கு தான் பார்த்து எல்லாத்துக்கும் தலையை மட்டும் ஆட்டு…”என்று கூறிக் கொண்டே அவனுக்கான காபியை கலந்து கொண்டு தங்கள் அறைக்கு செல்ல,அவன் அதற்குள் குளித்து முடித்திருந்தான்.
“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்…எங்கடீ போன….”என்று எரிச்சலாக கத்திக் கொண்டே டீஷர்ட்டை மாட்ட,கயல் எதுவும் பேசாமல் அவனிடம் காபியை நீட்ட,அதை வாங்கி கொண்டே,
Advertisement
“கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாத உனக்கு….”என்று கேட்க,மறுபக்கம் மௌனம் மட்டுமே பதிலாக வர கையில் இருந்த கோப்பை பறந்தது.
“என்னடீ….நினைச்சுக்கிட்டு இருக்க நீ…மனுஷன் கேட்டுக் கிட்டு இருக்கேன்…பதில் சொல்லுறீயா நீ….ஆங்…”என்று அவளின் தாடயை அழுத்தமாக பிடிக்க,கயலின் கண்கள் கோபத்தை கக்கியது.வேகமாக அவனின் கைகளை தட்டிவிட முயன்றாள் ஆனால் முடியவில்லை அவனின் இரும்பு பிடி இறுக தாடை தனியாக வந்துவிடும் போல் இருக்க அவளின் கண்கள் கண்ணீரை சுரக்க,அவளின் கண்ணீரை கண்டவுடன் சற்று இறங்கியவன் அவளை விடுவித்து,
“ஆவுனா அழுதுடு…”என்று அதற்கும் காய கயல் பதில் ஏதும் பேசாமல் அவன் விசிறி எறிந்த கோப்பை சுத்தம் செய்துவிட்டு நகர போக அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் கை வளைவிற்குள் நிற்க வைக்க,அவளும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக நின்றாள்.
“ம்ம்…இப்ப எதுக்கு இப்படி பேசாம என்னை நீயும் படுத்துறடீ….”என்றவன் குரல் சலிப்பாக வர,அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நான் பேசுனாலும் நீ சத்தம் தான் போடுவ அதான்…பேசலை….”என்று கூற,அவளை மேலும் இறுக்கிக் கொண்டவன்,
“ம்ம்…நான் சத்தம் போட்டாலும் நீ பேசனும்…”என்று குழைந்த குரலில் கூற,
“ம்ம்ம்….இப்ப என்ன கோபம் போயிடுச்சா…”என்று கயல் கேட்க,
“ம்ஹம்…இல்லை…ஆனா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு…உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறேனா….”என்று சத்யா கேட்க,கயல் அவனின் கன்னங்களில் கை கொடுத்து அவனின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவனின் அதரத்தை தன் அதரத்தால் பூட்டினாள்.பின் மெல்ல தன் அதரத்தை பிரித்து எடுத்தவள்,
“நீ எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்கலை…நான் பேசி நீயும் பேசி பெரிய வாக்குவாதம் வேண்டாம்னு தான் பேசலை போதுமா…உன் கோபம் குறைஞ்சவுடனே உன்கிட்ட பேசலாம்னு இருந்தேன்….”என்று கயல் கூற,
“ம்ம்ம்…ஆனா பேசாம இருக்காத….”என்று கூற,
“ஓய் சத்து மாத்திரை….எனக்கு உன்கிட்ட பேசாமா இருக்கமுடியாது….நீ ஏன் இவ்வளவு யோசிக்குற….நான் எப்போதும் போல தான் இருக்கேன்….நான் உன்கூட சந்தோஷமா,நிம்மதியா இருக்கேன்…”என்றவள் முடிக்கும் முன் அவளின் அதரங்களை வன்மையாக சத்யாவின் அதரங்கள் விழுங்கியிருந்தது.இருவரும் மெல்ல தங்களின் நிலை இழந்தனர் சத்யாவின் வன்மையில் கயல் தடுமாறி தவித்து அவனிடமே அடைக்கலம் புக தன்னில் புகுந்தவளை தனக்குள்ளே பொத்தி வைத்துக் கொண்டான் சத்யா.
நாட்கள் அதன் போக்கில் நகர தொடங்கியது கயல்விழிக்கு சத்யவுடனான வாழ்க்கை இனிமையாக செல்ல தொடங்கியது.அவனின் செல்ல சேட்டைகளை கூட இப்போது கயல் சமாளிக்க கத்துக் கொண்டாள்.அன்று கயல் சீக்கிரம் தனது பணியில் இருந்து வந்துவிட்டாள்.
இரவிற்கான உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தனது பேசியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்க,அப்போது வேகமாக வந்த சத்யா தனது அலுவலக அறையில் ஏதோ எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் செல்லும் முன்,
“கயலம்மா…எனக்கு முக்கிய வேலை இருக்கு….நான் வர லேட்டாகும் நீ எனக்காக வெயிட் பண்ணாத…”என்று சென்று கொண்டே சொன்னவன் மீண்டும் வேகமாக உள்ளே வந்து,
“ஏய் ஒழுங்கா கதவை பூட்டிக்கிட்டு தூங்கு….என்கிட்ட வேற சாவி இருக்கு நான் அதை வச்சு திறந்துப்பேன்…புரியுதா….”என்றுவிட்டு அவளின் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்தான்.இப்போது எல்லாம் வேலையில் ஏற்படும் கோபத்தை வீட்டில் காட்டாமல் குறைத்துக் கொண்டான்.அவனின் கயலம்மாவிற்காக ஆம் அன்று அவளின் அழுத முகம் பார்த்த பின் அவளுக்காக தன்னை கொஞ்சம் மாற்றி கொண்டான்.
“ம்ம் சரிப்பா…நான் பத்திரமா இருப்பேன்….நீ பார்த்துக்கோ…”என்றவள் நெற்றியை மெல்ல முட்டிவிட்டு சென்றான்.சத்யா சென்றவுடன் கயல் அவன் கூறியதை போல கதவை அடைத்துவிட்டு வந்தவள் மீண்டும் தன் பேசியில் கவனமாக அப்போது தான் அவன் அலுவலக அறையை அவசரத்தில் பூட்டாமல் சென்றிருந்தான் என்பதை பார்த்தாள்.அவள் திருமணம் ஆனதில் இருந்து இதோ இன்று வரை அந்த அறைக்கு சென்றதில்லை.உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியவள் பின் சென்று பார்ப்போம் என்று உள்ளே நுழைந்துவிட்டாள்.
அறையின் உள்ளே ஒரு பெரிய மேஜை அதில் சில பேப்பர்கள் இருந்தன அனைத்தும் அவன் வேலை சம்மதப்பட்ட பொருட்கள்.அறையின் ஓரத்தில் ஒரு பெரிய கண்ணாடி அலமாரி அதில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
“ப்பபா….எவ்வளவு புக்ஸ் இருக்கு….”என்றுவிட்டு அதில் இருந்த புத்தகங்களை பார்வையிட,அதில் சில ஆங்கில நாவல்கள்,சில தமிழ் புராண நாவல்கள் மற்றும் அவனின் வேலை சம்மத்தப்பட்ட புத்தகங்கள் என்று நூறு புத்தகங்களுக்கு மேல் இருந்தது.அனைத்தையும் மேலோட்டமாக பார்வையிட்டு வந்தவள் பார்வை கடைசியாக இருந்த ஒரு பெரிய நோட்டின் மீது விழுந்தது.அதை எடுக்க,அது பாதி எரிந்த நிலையில் இருந்தது.பிரித்து பார்த்தவளுக்கு கண்கள் விரிய தொடங்கின அதன் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்தவளுக்கு மனது பழையபடி கலங்க துவங்கியது. அவனின் வாழ்வை கயலுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று படங்களாக வரைந்திருந்தான் அந்த நோட்டு புத்தகத்தில்.தங்கள் வாழ்வின் தொடக்கம் முதல் தங்களின் முதுமை வரை வரைந்து வைத்திருந்தான்.அதிலும் பிரசவ அறையின் முன் அவன் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்த ஓவியத்தை கண்டவளுக்கு கண்கள் உடைப்பெடுக்க தொடங்கின.
அதை முழுதாக பார்த்தவளின் கைகள் நடுங்க அதன் முகப்பில் சத்யாவின் கையெழுத்து அவனின் பெயர் மற்றும் வருடம் குறிப்பிட பட்டிருந்தது.அதில் இருந்த வருடத்தை பார்த்தவள் அந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்துவிட்டாள்.இந்த ஓவியங்களை எல்லாம் அவன் தங்களின் கல்லூரி காலத்திலேயே வரைந்திருந்தான்.கண்களில் கண்ணீர் ஊற்று போல் உடைப்பெடுக்க வாய்விட்டே கதறியவள் அந்த நோட்டை திருப்பி திருப்பி பார்க்க,மனதெங்கும் ரணம் கவ்வியது.அப்போது தான் அவளுக்கு சத்யாவை கடைசியாக சந்திக்கும் போது அவன் கூறியது நியாபகத்திற்கு வந்தது.
“கயல் உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன்டீ….ஆனா அதை இப்ப தரமாட்டேன் நம்ம கல்யாணம் முடியட்டும் உனக்கு தரேன்….உனக்கான ஸ்பெஷல் கிப்ட்…..”என்று கண்களில் கனவு மின்ன கூறிய சத்யா இப்போது கண் முன்னே வர கயலின் கைகள் தன் மார்புடன் அந்த நோட்டை இருக்கி கொண்டது.அந்த அறையிலேயே பிரம்மை பிடித்தது போல அமர்ந்துவிட்டாள்.எப்படிபட்ட அன்பை இழந்திருக்கிறேன் நான் என்னுடைய முட்டாள் தனத்தால் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவளுக்கு தொண்டை அடைத்தது.வரவேற்பறையில் கேட்ட பேசியின் ஒலியில் தான் நிகழ்வுக்கு வந்தாள் கயல்விழி.
தான் எடுத்த நோட்டை மீண்டும் அதே இடத்தில் வைத்தவள் வரவேற்பறைக்கு வர அவளின் பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.சத்யா தான் அழைத்திருந்தான் தன்னை சீர் படுத்தி கொண்டவள்,
“ஹலோ…”
“ஏய் தூங்கிட்டியா….”
“ம்ம்…லைட்டா….”
“சாரிடா….நான் காலையில தான் வருவேன்….நீ என்னை எதிர்பார்க்காத ஓகே வா….”என்றவன்,அவள் சரி என்று கூறியவுடன் வேலையிருப்பதாக கூறி வைத்துவிட்டான்.முதலில் அந்த அறையின் கதவை சத்யா எப்படி வைத்துவிட்டு போனானோ அப்படியே சாத்திவிட்டு வந்தவள் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.கண்கள் சிவந்து போய் இருந்தது.
மனதில் பல எண்ணங்கள் அவனிடம் இதை பற்றி கேட்போமா என்று நினைத்தவள் பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.ஆனால் மனதில் முன்பை விட அத்தனை காதல் வழிந்தது சத்யாவின் மேல் ஆனால் அவனின் அன்பிற்கு முன்னால் எனது அன்பு என்று வரும் போது தான் தடுமாற்றம் ஏற்றபட்டது.
இருந்தும் அனைத்தையும் துடைத்தெரிந்தவள் இனி அவனின் ஆசைகள் அனைத்தையும் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்க தொடங்கினாள்.ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடாதே,இனி தங்களுக்குள் பிரிவு என்பதே இல்லை என்று கயல் நினைத்திருக்க,அவள் மன்னவனே அவளை பிரித்து வைத்து அவளை வதைக்க போகிறான் என்பது அப்போது அவளுக்கு தெரியவில்லை.எந்த உண்மைகள் சத்யாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று கலைவாணன் நினைத்தாரோ அனைத்தும் அமிர்தாவின் முன் வெட்ட வெளிச்சமாகி மீண்டும் அவரின் முன்னே குற்றவாளியாக நிற்க போகிறாள் கயல்விழி.
error: Content is protected !!