Skip to content
Post Views: 9,454
ஜெகனின் முன் அமைதியாக நின்றிருந்தான் ராஜீவ் “உங்க அம்மாவை பத்தி யோசி , உங்க அப்பாவை ரெம்யாவை நெனச்சு தினம் தினம் வேதனைப்படுறாங்க , அவங்களுக்கு கொஞ்சமாவது நிம்மதிய குடுக்கலாம் யோசி” என்க.
அவனையே பார்த்தவன் “உனக்கு என் மேல கோவம் இல்லையா” என்க.
“ஏன் இல்லாம , நீ கொஞ்சம் உருப்படியா இருந்திருந்தா என் தும்பி இன்னும் நல்லா இருந்திருப்பா , நீயும் அவளை உன் குடும்பத்துல இருந்து ஒதுக்கி தான வெச்சிருந்த” என்றவன்.
“உனக்காக நான் எதையும் பண்ணல என் தும்பிக்காக , அவளோட பெரியம்மாவுக்காக… யோசிச்சு சொல்லு” என்றவன் மேலே அறைக்கு சென்றான்.
Advertisement
மகனிடம் ஜெகன் பேசியதை ஷ்யாமா கேட்டுக் கொண்டு தான் இருந்தார் , அவருடன் கார்தும்பியும் நின்றிருந்தாள்.
ராஜீவிடம் உத்தமப்பாளையம் செல்வதை பற்றி விவாதிதான் ஜெகன், துரைசெல்வம் தனி ஆளாக அனைத்தையும் பார்க்கிறார் , இவன் ஷ்யாமா மற்றும் லக்ஷ்மியம்மாவுடன் அங்கு சென்றால் தும்பிக்கு பெரியம்மாவும் பாட்டியும் உடன் ஊருக்கும் சந்தோஷம் கிட்டும்.
அவர்களுக்கு ஒரு மாற்றமும் வரும் , அதோடு இவனுக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பு வரும் என்று முடிவு செய்து அவனிடம் பேசினான்.
Advertisement
ராஜீவுக்கு அங்கு போவதில் விருப்பம் இல்லை , இத்தனை நடந்த பிறகு அவர்களிடம் சென்று நிற்பது ஏனோ மனதிற்கு ஒப்பவில்லை.
Advertisement
தாயை அழைத்துக்கொண்டு வேறு எங்காவது சென்று வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான் , ஜெகன் இவ்வளவு பொறுமையாக பேசியதே அவனுக்கு குற்றஉணர்ச்சியாக இருந்தது.
என்ன முடிவு செய்ய என்று தெரியாமல் அவன் தடுமாற , அவன் அருகில் வந்து தலை கோதினார் ஷ்யாமா.
“நீ என்ன முடிவு எடுக்குரியோ எடு நான் உன் கூட இருக்கேன் , இனிமே எனக்குன்னு யார் இருக்கா , ஆனா கொஞ்ச நாளாவது அம்முகூட இருக்கணும்னு ஆசைப்படுறேன்”.
Advertisement
“ஜெகனும் வேலைக்கு போயிடுவான் போன தடவ குழந்தய தனியா அனுப்பி நெறய கஷ்டப்பட்டுட்டா , இந்த தடவ அவ புருஷன் திரும்பி வர வரைக்கும் அவ கூட இருக்கணும் , அம்முக்கு அங்க கொஞ்சம் பழகுன அப்பறம் நாம எங்க போகணும்னு நீ முடிவு பண்ணு” என்றார்.
ஏனோ அவர் பேச்சை தட்ட முடியவில்லை , இந்த நான்கு வருடங்களாக அவர் குடும்பத்தில் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை, தன்னிடம் அவர் பேசியதே அவன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது “சரிம்மா” என்றான் உடனே.
அறைக்குள் நுழைந்தவன் தன்னுடைய பொருட்ட்களை சரி பார்த்துக்கொண்டான் , கிஷோர் அழைப்பில் வர எடுத்தவன் “டேய் எங்க இருக்க” என்றான்.
“வந்துட்டே இருக்கேன்னா இன்னும் பத்து நிமிஷம்” என்றான் கிஷோர்.
அவனுடன் தான் இந்தமுறை கொச்சின் செல்கிறான் , அவனிடம் பேச வேண்டிய ஒப்படைக்க வேண்டிய பொறுப்புகள் சிலது இருக்கிறது அதனால் அவனை வர சொல்லியிருந்தான்.
அனைத்தையும் எடுத்து வைத்தவன் வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான் , அறை வாயிலில் தயங்கி நின்றிருந்தாள் கார்த்தும்பி, ஷ்யாமா அனுப்பி வைத்திருக்கிறார் என்று புரிந்தது.
நேற்று முகம் வாடி அழுதுகொண்டே சென்றவள் இந்த நேரம் வரை அவன் விழிகளில் படவில்லை “தும்பி” என்றவன் அழைப்பில் உடல் இறுகியது.
“எந்த சமாதானத்தையும் ஏற்க கூடாது , இதோ இப்பொழுது போய்விடுவான் , கோபமாக இருப்பதாக கூட நாட்களை கடத்திவிடலாம் , மூச்சுமுட்டும் அவன் காதலை எண்ணி எண்ணி எப்படி நாட்களை கடத்த” என்று அவள் மனம் ஓலமிட்டது.
அருகில் வந்து அனைத்துக்கொள் உன்னில் என்னை புதைத்துக்கொள்ளடா என்றது ஒரு மனது , தள்ளி நில் நெருங்காதே உன் மூச்சுக் காற்றில் கூட நான் பற்றிக்கொள்வேன் என்றது ஒரு மனது.
இரண்டுக்கும் இடையில் கிடந்து அல்லாடினாள் பேதை , அருகில் நெருங்கி அவளை இழுத்து அனைத்தவன் “நான் என்னடி பண்ணட்டும், என்ன வேணும் என் தும்பிக்கு” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்.
“நீங்க தான் வேணும் , நீங்க மட்டும் தான் வேணும்” என்றாள் அடக்கப்பட்ட அழுகையுடன்.
அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் துடித்துக்கொண்டிருந்த அவள் அதரங்களை இழுத்துக்கொண்டான் தன்னுள் , அவனை விடாமல் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் தும்பி.
சில மணித்துளிகளில் அவளிடம் இருந்து விலக்கியவன் “சாரி குட்டிமா சீக்கிரம் வந்துர்றேன் டா” என்றவன் நில்லாமல் வெளியேற , உதடு கடித்து அங்கேயே அமர்ந்திருந்தாள் கார்த்தும்பி.
அறைக்குள் தரையில் சுருண்டு கொண்டாள் அம்மு , தனிமை இப்பொழுது அவளுக்கு மிக அவசியமாக தேவைப்பட்டது.
அறையில் எட்டிப் பார்த்த ரூபா அவள் படுத்திருப்பதை பார்த்து மற்றவர்களுக்கு கண் காண்பித்து அவளும் மறு பக்கம் படுத்துவிட்டாள், விழிமூடியவளின் மனம் மீண்டும் நாயகனின் நினைவுகளே.
இந்த நொடி இங்கிருந்தால் என்ன செய்திருப்பான் ?? தனக்கு எதைப் பற்றிய கவலையும் அண்டாமல் பார்த்திருப்பான் , அனைத்தையும் முன்னின்று நடத்தியிருப்பான் உன்ன வைத்திருப்பான் உறங்க வைத்திருப்பான்.
“ஏன் விட்டு சென்றாய்” என்பதிலே நின்றது மனது வெளியேறவா என்று கரை உடைக்க காத்திருந்த கண்ணீரை அதட்டி உள்ளிழுத்தாள் , அழ மாட்டேன் போதும் , இனி அழுது ஒன்றையும் மாற்ற இயலாது ஏதோதோ சிந்தனை.
மூளை சோர்வடைந்து தானே உறக்கத்தை அனைத்துக் கொண்டது.
அடுத்தநாளே அனைவரையும் அழைத்துக்கொண்டு உத்தமப்பாளையம் சென்றுவிட்டார் துரைசெல்வம்.
அங்கு வந்து வீட்டின் காம்பவுண்ட் உள்ளே நுழைந்ததும் மனதில் ஒரு இதம் பரவ தொடங்கியது , சில நினைவுகள் மெல்ல மேலெழுந்தது.
கோலம் இட்டது , பூக்கள் பறித்தது கதை கேட்டது என்று சுற்றிலும் இருந்த மரத்தில் இருந்து குளுமையான காற்று உடலை தழுவ விழிகளை மூடி அங்கேயே நின்றாள்.
குயிகளின் இசை , பெயர் அறியா பறவைகளின் ஓசை பழங்களின் மனம் பவிழமல்லி மனோரஞ்சிதத்தின் மனம் அனைத்தும் வந்து சேர்ந்தது.
மெல்ல இதழ்கள் புன்னகையில் விரிந்தது , அவள் நேசித்து ரசித்து வாழ்ந்த இயற்கையின் மனம் நாசியை துளைக்க அறியாமல் விழிநீர் கன்னம் நனைக்க.
இதெல்லாம் என்ன வாசனை உன்னை எப்பொழுதும் பரவசத்தில் ஆழ்த்தும் நான் இருக்கையில் உன் அருகில் வேறு யாரும் வரலாமா என்று மண் வாசனையை அவளுக்கு கடத்தி மொத்தமாக அவளை குளிர்வித்து பெய்திறங்கியது அவளின் ஆனந்த மழை.
உடலும் மனமும் குளிர இரு கை நீட்டி நின்றாள் வெகுநேரம் , உள்ளே நுழைந்தவளின் முகத்தில் ஒரு தெளிச்சம் இருந்தது ரூபா அவளை அழைத்து சென்று அவர்களின் அறையை காண்பித்தாள் “நீங்க குளிச்சுட்டு வாங்கக்கா” என்றவள் கீழே சென்றாள்.
அறையை சுற்றி பார்த்தவள் உடை எல்லாம் நனைந்திருக்க கதவடைத்து குளியல் அறை புகுந்தாள் , தண்ணீர் ஜில்லென்று உச்சியில் இறங்கியது குளித்து உடை மாற்ற நோக்க அவளுக்கு அத்தனை உடைகளை வாங்கி குவித்திருந்தான்.
அதில் அவள் எப்பொழுதும் அணியும் பாவாடை சட்டையும் அடக்கம், ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டவள் தலையை உலர்த்தி முடித்து அறையை நிதானமாக பார்வையிட்டாள்.
படுக்கையை மெல்ல தடவி பார்த்தவள் அவன் உறங்கும் இடம் தடவி அங்கே சிறிது நேரம் படுத்துக்கொண்டாள், அவனுடைய உடைகள் பொருட்கள் என்று பார்வையிட கட்டிலின் நேரே ஆளுயரத்திற்கு நின்றது அவர்கள் இருவரின் புகைப்படம்.
தாலி பிரித்து கோர்த்த அன்று இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
அவனின் மார்பில் சாய்ந்து ஒரு கை அவன் முதுகில் இருக்க ஒரு கை அவனின் நெஞ்சில் , அவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்து ஒரு கையை நெஞ்சில் இருக்கும் அவளின் கை மீது வைத்திருந்தான்.
உலகின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் சுமந்து அவள் நிற்க, அவளின் வதனத்தில் காதலோடு பார்வை பதித்து அவன் .
உள்ளதை அள்ளிச்சென்றது அந்த புகைப்படம் அருகில் சென்று வருடி பார்த்தவள் அவனுக்கு எண்ணிலடங்கா முத்தங்களை வைத்துக் கொண்டிருந்தாள்.
“அம்முக்கா” என்ற ரூபாவின் அழைப்பில் கதவை திறந்தவள் , அவளை உள்ளே அழைத்து புகைப்படத்தை காண்பித்து “எப்படி?” என்க.
“அன்னைக்கே இந்த போட்டோவை மாமா செலக்ட் செஞ்சு பெருசா பிரேம் பண்ண சொன்னார் , நேத்து தான் கொண்டு வந்தாங்க , போன் பண்ணாங்க நாம அங்க இருந்தோம் அதான் நர்ஸ் கிட்ட சொல்லி இங்க மாட்ட சொன்னோம்”.
“ரொம்ப அழகா இருக்கு இல்லக்கா” என்க.
“ஹ்ம்ம்” என்றாள் பூரிப்போடு.
ரூபாவுடன் கீழறங்கியவள் பூஜை அறை சென்று தொழுது ஹாலிற்கு வந்தாள் , அப்பொழுது தான் நினைவு வந்தது ஷ்யாமாவிற்கும் ராஜீவிற்கும் அறைகள் காண்பிக்கவில்லை , அவர்களை கவனிக்க வில்லை என்று.
“பெரியம்மா நான் யோசிக்காம மேல போய்ட்டேன்” என்று வருந்த, “ஒன்னும் இல்லடா நாங்க குளிச்சு தயார் ஆயிட்டோம் , நீ வருத்தப்படாத” என்றார்.
கீழே நான்கு அறைகள் இருந்தது , மேலே இரண்டு பெரிய அறைகள், கீழே இருந்த அறையில் அவர்களுக்கு அனைத்தும் ரூபா தயார் செய்து கொடுக்க , இருவரும் குளித்து வந்தனர்.
அதற்குள் அனைவருக்கும் சமயல் செய்பவர் தேநீர் கொண்டு வர, அனைவரும் குடித்து அமர்ந்திருக்க அம்மு எழுந்தவள் “நான் மாமாவை பாத்துட்டு வரேன்” என்றாள்.
“போமா” என்றார் மாதவி.
மனதை திடப்படுத்தியவள் மெல்ல பிரகாஷின் அறைக்குள் நுழைந்தாள், சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சர்யமாக அவளை பார்க்க அவர் அருகில் நெருங்கி அவரின் கையை பிடித்து அமர்ந்தவள்.
“மன்னிச்சுடுங்க மாமா , என் மேல கோவமா இருக்கீங்களா” என்க , “இல்லமா” என்று தலை ஆட்டியவர்.
அவளை அருகில் அழைத்து வார்த்தைகளை கோர்த்து மெல்ல மெல்ல சொல்லிமுடித்தார் “உன்மேல எனக்கு என்னடா கோவம் நீ வராமலே போய்டுவியோன்னு பயம் தான் இருந்தது”.
“நீ இல்லாம அவனுக்கு வாழ்க்கையே இல்லடா, ஏதோ எல்லார் மேலயும் கோவம் உன்மேலேயும் கோவமா இருக்கறதா அவனை அவனே நம்ப வெச்சுக்கிட்டான்”.
“அவன் மேல கோவப்படு அடி திட்டு என்னவென பண்ணு , உனக்கு எல்லா உரிமையும் இருக்கு , ஆனா அவனை விட்டுட்டு மட்டும் போகாதடா” என்றார் மிக சிரமப்பட்டு.
error: Content is protected !!