Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 28 1

        28

    தன் நண்பன் ரிஷியுடன் பேசிக் கொண்டிருந்த போதும், ‘அவ என்ன திட்டினா?! ஏதோ பத்மாஸ்ன்னு சொல்லித் திட்டினாளே! அப்படின்னா என்னவாயிருக்கும்?!’ என்று எண்ணி எண்ணியே மண்டையை குழப்பிக் கொண்டான் ரஞ்சன்.

     “டேய் விட்றா… சும்மா அதையே நினைச்சிக்கிட்டு!” என்று ரிஷி அவன் எண்ணத்தை மாற்றப் பார்க்க, அவனோ,

     “இல்லடா… அப்படின்னா என்னன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்! அது… அவ பேசினது ஹிந்திதானே..?!” என்று அவன் யோசனையாய் கேட்க,



Advertisement

     “ஆமாம் அவ திட்டும் போது நான் பக்கத்துல இருந்து கேட்டேன்!” என்று அலுத்துக் கொண்டான் ரிஷி.

     “சே மும்பை வந்து ரெண்டு வருஷம் மேல ஆகிடுச்சு! இத்தனை நாள் ஹிந்தி கத்துக்காம விட்டது தப்பா போச்சு…!” என்று ரஞ்சன் புலம்ப,

     “டேய்… விட்றா…!” என்றான் ரிஷி அழாத குறையாக.

Advertisement

     “இல்லடா என்னைப் பார்த்து எப்படிடா அவ திட்டலாம்?!” என்றான் ரஞ்சன்.

Advertisement

     ‘ஆமாம் இவரு பெரிய மினிஸ்ட்டர்! இவர யாரும் ஒரு வார்த்தை  சொல்லிடக் கூடாது!’ என்று ரிஷி அவனை தெனாவட்டாகப் பார்த்தபடியே மனதுள் கவுண்டர் கொடுக்க,

     “என்னடா அப்படிப் பார்க்கிற..?!” என்றான் ரஞ்சன்.

     “ம்ம்! நீ இப்படியே புலம்பிகிட்டே இரு! நான் கிளம்பறேன்” என்று சொல்லி அவன் கிளம்பியே விட்டான்.

Advertisement

     “டேய் டேய் வண்டிய கூட சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன் டா இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போகாத…! என் ரூம் வரைக்கும் வந்து ட்ராப் பண்ணுடா..” என்று ரஞ்சன் கத்த,

      “அப்படின்னா வாயை மூடிக்கிட்டு பேசாம வரணும்!” என்றான் ரிஷி.

     “ம்ம்!” என்று முறைத்தபடியே ரிஷியின் வண்டியில் ஏறியவன், சில நொடிகள் மட்டுமே அமைதிகாத்தான்.

     “ஆமாம் மச்சி.. நம்ம காலேஜ்ல நிறைய ஹிந்திக்காரப் பசங்க படிப்பாங்க இல்ல..?! என்றான் நீண்ட யோசனைக்குப் பின்.

     “ஏன்?! அவங்ககிட்ட போய் ஹிந்தி கத்துக்கப் போறியா?” என்றான் ரிஷி கடுப்பாக.

     “சே! சே! நான் எல்லாம் படிக்கறதுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணவே யோசிக்கிறவன்! இதுல ஹிந்தி கத்துக்க வேற டைம் வேஸ்ட் பண்ணுவேனா?!” என்று தோள் குலுக்கினான் ரஞ்சு.

     “அப்புறம்!” என்று ரிஷி கேட்க,

     “இல்ல… அதுல யாரையாவது ஒருத்தரை மடக்கி அவ சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சிக்கலாமேன்னு தான்!” என்று அவன் சொல்ல,

     “மகனே நீ அடிவாங்காம ஓயப் போறதில்லைன்னு நினைக்கறேன்!” என்றான் ரிஷி வண்டியின் கண்ணாடி வழியே அவனை முறைத்து.

     “விட்றா.. விட்றா…!” என்றான் ரஞ்சு அலட்சியமாய்.

     மறுநாள் தன் கல்லூரி வராந்தாவின் வழியே தன் புத்தகத்தை தூக்கிப் போட்டுப்போட்டு பிடித்தபடியே தன் வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்த ரஞ்சன், அந்த வகுப்பறையைக் கடக்கும் போது கலீரென்று ஓர் சிரிப்பொலி! அது அவன் செவிகளை வெகுவாய் ஈர்க்க, அப்புறம் திரும்பினான். அங்கே அவள் தன் முத்துப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

     ‘ப்பா… யார்றா இது?!’ என்று அவன் மனம் விஜய் சேதுபதி எபெக்ட் கொடுக்க,   

     ‘அடங்குடா..!’ என்றது மைண்ட் வாய்ஸ்.

     ‘அழகை ரசிக்கலாம் ப்பா… அனுபவிக்கனும்னு நினைச்சாதான் தப்பு!’ என்று வேதாந்தம் பேசிய மனதைக் கலைக்கவென, அங்கே வந்த ரிஷி, “டேய்… இங்க என்னடா பண்ற?!” என்று அவன் தோளில் கைபோட,

     ‘டேய்… இந்தப் பொண்ணைப் பார்த்தா ஹிந்திக்காரப் பொண்ணு மாதிரிதான் இருக்கு! இவகிட்ட கேட்டுப் பார்ப்போமா!?’ என்று கேட்டுவிட்டு, அவன் வார்த்தைக்குக் காத்திராமல், அந்த வகுப்பறை வாயிலை நோக்கிச் சென்றான்.

     “டேய் வேணாம்டா.. டா ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது!” என்று ரிஷி சொல்லச் சொல்லக் கேட்காமல்,

     அவ்வகுப்பறை வாசலருகே சென்ற ரஞ்சன், அப்பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, “ஏய் பொண்ணு… இங்க வா…!” என்றான் மிரட்டலாக.

     அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் முகம் அவனைப் பார்த்ததும் ரத்தம் சுண்டி வெளிறிப் போனது.

     ‘இ இவனா?!’ என்று அவள், ‘பே…??!!’ என்று விழிக்க,

     “ஏய் உன்னதான் கூப்ட்டேன்!” என்றான் அவன் மறுபடியும்.

     “எ என்னையா…?!” என்று அவள் தன் நெஞ்சில் கைவைத்து திக்கித் திணறிக் கேட்க,

     “செவிடா நீ..?! உன்னைதான்னு எத்தனை முறை சொல்றது!” என்றான் அதிகாரமாக.

     ‘அய்யோ நான்தான் அவனைத் திட்டினேன்னு கண்டுபிடிச்சிட்டானா?! போச்சு போச்சு..!’ என்று அவள் புலம்பியபடியே அடிமேல் அடி வைத்து அவனை நெருங்க,

     “ஏய் உன்னை என்ன கல்யாணம் செஞ்சுக்கவா கூப்பிட்டேன்! இப்படி ஆடி அசைஞ்சு வர்ற…?! வேகமாக வா!” என்றான் கட்டளையாக.

     ‘மூஞ்சியைப் பாரு! பந்தர்! கல்யாணம் செய்துக்க வேற கூப்பிடுவானா இவன்?!’ என்று மனதுள் அவனைப் பூஜித்தபடியே வேகநடையிட்டு அவனை நெருங்கினாள்.

     “நீ ஹிந்திக்காரப் பொண்ணு தானே?!” என்று அவன் கேட்க,

     ‘ம்ம்! பார்த்தா தெரியலை!’ என்று முனகியவள், “ம்ம்!” என்று மண்டையை ஆட்டினாள்.

     “உனக்கு ஹிந்தி தெரியும் தானே?!” என்றான் அவன் லூசுத்தனமாய்.

     ‘என்னடா கேள்வி இது?!’ என்பது போல் அவள் பார்த்து வைக்க,

     “சரி சரி விடு! எனக்கு ஒரு ஹிந்தி வார்த்தைக்கு தமிழ்ல அர்த்தம் தெரியனும்! சொல்றியா?!” என்றான்.

     “ம்!” என்று மண்டையை ஆட்டியவள், அப்படி என்ன கேட்கப் போறான் என்று அவனைப் பார்க்க,

     “பத்மாஸ் ன்னா என்ன!” என்றான் அவளை உற்று நோக்கி.

     அதைக் கேட்டதும் அவளுக்கு தன்னை மீறிச் சிரிப்பு வெளிப்பட்டுவிட, சிரித்துவிட்டாள்.

      “ஏய் எதுக்கு இப்ப சிரிக்கிற?! அப்படின்னா ஏதாவது தப்பான அர்த்தமா?!” என்றான் கோபத்துடன்.

     ‘அய்யோ லூசுத்தனமா சிரிச்சி வைச்சிட்டோமே?!’ என்று நினைத்தவள், ‘ஏன் ங்க.. யாராவது உங்களை அப்படிச் சொல்லித் திட்டினாங்களா?!” என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

     “ஹான்??!! அத எப்படி இவ கண்டுபிடிச்சா?!’ என்று நினைத்தவன்,

     “அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்! இருந்தாலும் சொல்றேன்!” என்றவன், ரிஷியைக் கைக்காட்டி,

     “அதோ என் பிரெண்ட், அங்க நிக்கிறானே… அவனைப் பார்த்து ஒரு பொண்ணு திட்டிடுச்சு! அதான் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்!” என்றான் அசால்ட்டாக.

     ‘அடப்பாவி என்னமா புழுகுறான்?!’ என்று அவள் கேவலமாக ஓர் லுக் விட,

     “ஏய்?! என்ன அப்படிப் பார்க்குற நான் சொல்றது பொய்ன்னு நினைக்கறியா?!” என்றான் ரஞ்சன்.

     ‘அது உனக்கே தெரியாதடா?!’ என்று நினைத்தவள், “ம் இல்லை இல்லை!! உண்மைதான்! உண்மைதான்!’ என்று ஒப்புக் கொள்வது போல் தலையாட்டினாள்.

     “சரி சொல்லு சொல்லு… பத்மாஸ் ன்னா என்ன?!” என்றான் அவன் அதிலேயே குறியாக.

     “அது அது வந்து அப்படின்னா… அதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு! ஒண்ணு நாட்டி… இன்னொன்னு…. இன்னொன்னு… பொறுக்கி..! அது திட்டின முறையைப் பொறுத்து யூகிச்சிக்கலாம்!” என்று அவள் முடிக்க,

     “அப்போ அப்போ! நான் நான் பொறுக்கியா?! திமிர்பிடிச்சவ என்னை… என்னைப் பார்த்தா பொறுக்கின்னு சொன்னா…?!” என்று அவன் கண்கள் கோபத்தில் ஜொலிக்க, அதற்கு மேலும் அவள் அங்கு நிற்பாளா என்ன..?!

     அவள் பயத்துடன் ஓடியதும்தான் அவன் புத்திக்கு ஒன்று  உரைத்தது. நேற்று முகத்திரையுடன் பேசிய அப்பெண்ணின் குரலும் இப்போது பேசிய இப்பெண்ணின் குரலும் ஒன்றே என்று!

     “அடிப்பாவி நீதானா அது?! இந்தக் காலேஜில தான் படிக்கிறயா?!” என்று அவன் வாய்பிளக்க, அந்நேரம் பார்த்து, அவ்வகுப்பின் பேராசியர் அங்கு வந்து,

     “வாட் டு யூ வான்ட் மேன்?! ஒய் ஆர் யூ ஸ்டான்டிங் ஹியர்?!” என்று கேட்க,

     “ஸ ஸாரி சார்! நத்திங் சார்!” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தான்.

     ‘இங்கதான இருக்க?! மாட்டாமளாப் போயிடுவ?!’ என்று போகும் போது அவளை ஒரு முறை முறைத்து விட்டு நகர்ந்தவனைப் பார்த்து அவள் மனம் கலக்கம் கொண்டது.

     “மச்சி.. நேத்து பஸ் ஸ்டாண்ட்ல என்னைத் திட்டினாளே அவதான்டா இவ” என்று அவன் ரிஷியிடம் கூற,

     “அடப்பாவி அவகிட்டயே போய் அவ திட்டினதுக்கு அர்த்தம் கேட்டிருக்கியே?!” என்று ரிஷி கிண்டலடிக்க,

     “அது கூட பரவாயில்லைடா, அவதான்னு முதல்ல கண்டு பிடிக்காததுனால உன்னையெல்லாம் வேற கோர்த்து விட்டுட்டேன்டா..!” என்றான் பாவமாக.

     “அடப் பாவி என்னை என்ன டா சொன்ன?!” என்று அவன் அலற,

     “அது அது வந்து நேத்து திட்டு வாங்கினது நீதான்னு சொன்னேன்!” என்றான்.

     “உடனே அந்தப் பொண்ணு உன்னை பார்த்து கேவலமா ஒரு லுக்கு விட்டிருக்குமே?!” என்றான் ரிஷி பல்லைக் காட்டி.

     “விட்றா… விட்றா…” என்று அசடு வழிந்த நம் நாயகன், “சாயந்திரம் இருக்குடா அவளுக்கு!” என்றான் ஒரு முடிவோடு.

     “டேய் விட்றா… இதெல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு!” என்று ரிஷி சொல்ல,

     “ம்ம்! உன்னை பொறுக்கின்னு சொன்னா நீ சும்மா இருப்பியா?” என்று ரஞ்சு அவனை முறைக்க.

     “எப்படியோ போ! ஆனா காலேஜில வைச்சி எதுவும் வம்பு பண்ணிடாத!” என்ற ரிஷி, ‘என்ன சும்மா மிரட்டி வைப்பான்!’ என்று எண்ணி விட்டுவிட்டான். 

     அன்று மாலையே அவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று ரஞ்சன் காத்திருக்க, அவன் எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல், எளிதாக அவன் கண்ணுக்கு சிக்கியவள், கைக்கு மட்டும் சிக்கவே இல்லை!

     மாலையில் காலேஜ் விட்டு வெளியே வரும் வரை அவளின் நண்பர்கள் வட்டத்துடன் ஒட்டிக் கொண்டு வருபவள், கல்லூரி வாயிலின் அருகே காத்திருக்கும் தங்கள் காரில், ஏறி பறந்து விடுவாள். காலையிலும் வெகு சீக்கிரமாகவே கல்லூரிக்கு வந்து தனது வகுப்பில் சென்று அமர்ந்து கொண்டு, அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

     பதினைந்து நாட்களாக, அவள் இப்படியே வெறுப்பேற்ற, அவன் கோபம் அதிகரித்தது.

     அவன் கோபத்திற்கு வடிகாலாக ஒருநாள், அவள் வசமாக அவன் கையில் சிக்கினாள். அன்று அவர்கள் டிரைவருக்கு உடல்நிலை சரியில்லாது போனதால் அவளை அழைக்க வரமுடியாமல் போக, அவள் பஸ்ஸில் செல்லும்படி நேர்ந்தது.

     இத்தனை நாள் அவளைக் கண்கொத்திப் பாம்பாய் கவனித்து வந்த ரஞ்சனுக்கு இது வசதியாகிப் போயிற்று.

     அவளைப் பின்தொடர்ந்து சென்றவன், அவள் காலேஜை விட்டு சற்று தூரம் சென்றதும், அவள் முன்னே போய் வழிமறித்து நின்றான்.

     அவள் அரண்டு போய் நிற்க, அவள் முகத்தை மறைத்திருந்த துப்பட்டாவை எடுத்துவிட்டவன்,

     “அன்னிக்கு என்னடி சொன்ன?!” என்றான் அவள் கையை இறுகப் பற்றி…

     “நான் நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்!” என்றாள் பயந்த விழிகளுடன்.

     “என்ன சொன்னன்னு கேட்டேன்?!” என்றான் அழுத்தமாக.

     “அது அது வந்து பத்மாஸ்….!” என்று அவள் திக்கித் திணற,

     “தமிழ் தமிழ்..!” என்றான் மிரட்டலாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!