Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச-02

இரு விழி காதல் பேச

EPI-02



Advertisement

” ரஞ்சனி எல்லாம் எடுத்து வச்சிட்டியா? பூ ஃப்ரிட்ஜ் ல இருக்கு மறக்காம எடுத்து வச்சிடு… ம்ம் அப்புறம்…”

“மா…. ஏன் இவ்வளவு படபடப்பா இருக்க? முதல்ல நீ உட்காரு…. பவி-ய இங்க குடு… அமிழ்தா அம்மம்மாக்கு தண்ணீர் எடுத்து குடு..”

Advertisement

Advertisement

“அம்மம்மா இந்தாங்க தண்ணீ குடிக்க”

“ரொம்ப தேங்க்ஸ் டா அம்முக்குட்டி”

Advertisement

” எல்லாம் எடுத்து வச்சிட்டேன் மா…. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு நாம் கிளம்ப…. அண்ணா வீட்டுக்கு வந்த உடனே கிளம்பிடலாம் சரியா??”

“ம்ம்… பரிதி நேரத்தில் வந்துடுவானா ரஞ்சனி?? எனக்கு பயமா இருக்கு… உங்க அப்பா வேற இன்னும் கிளம்பிட்டே இருக்காரு… ஏதாவது பயம் தெரியுதா பாரு அவர்கிட்ட….”

” நான் ஏன் மா பயப்படனும்?? பரிதி சொன்னா சரியா வந்துடுவான். உன் பையன் பங்ச்சுவாலிட்டி உனக்கு தெரியாதா??”

” ஆமா மா…. நீ ரிலாக்ஸாக இரு.. அண்ணா வந்துடுவான். நான் பவி அம்மு இரண்டு பேரையும் ரெடி பண்ணுறேன்… வா அம்மு நாம கிளம்பலாம் “

********************************************

” மதி … சீக்கிரம் தயார் ஆகு மா… இந்த புடவை கட்டிக்கோ …. நான் பால் காய்ச்சி வச்சிடுறேன் அவங்க வந்ததுக்கு பிறகு டீ போட சரியா இருக்கும்…. “

விஜயா கதவருகே சென்றதும் நிறைமதி அவரை அழைத்தாள்.

“அம்மா…”

” என்ன மதி? ஏன் கண்ணு கலங்குது?”

நிறைமதி அழுகையுடன் வந்து தன் தாயை அணைத்துக் கொண்டாள்.

” மதிம்மா… அழக்கூடாது டா”

” இது சரியா மா? எனக்கு குழப்பமா இருக்கு மா… எல்லோரும் என்னை தப்பா பேசுவாங்க தானே… இதெல்லாம் வேண்டாம் மா.. பிளீஸ்….”

“மதி… முதல்ல அழுகைய நிப்பாட்டு… அப்பா அம்மா உன் நல்லதுக்கு தான் செய்வோம்னு நம்பிக்கை வை. யார் தப்பா பேசுவாங்க?? எத்தனை நாள் பேசுவாங்க?? நீ எப்படினு உனக்கு தெரிஞ்சா போதும்… யாருக்கும் நான் இப்படி தான் இருக்கேன்னு சான்று குடுக்க தேவையில்லை… நீ தயாராகு போ…. அப்பா வந்துவிட்டாரா பார்கிறேன் “

நிறைமதி இப்போதும் ஒரு குழப்பமான நிலையிலேயே தயாராக சென்றாள்.

***************************************

” பரிதி இந்தா டீ எடுத்துக்கோ..”

” ம்ம்.. மா எல்லோருக்கும் குடுங்க… பிரபாகரன் வந்துருக்காங்க பாருங்க”

“மச்சான் நாங்க எல்லாம் ஏற்கனவே குடிச்சாச்சு… நீங்க குடிங்க “

” ஆமாம் மாமா…. சீக்கிரம்… நம்ம எல்லாம் கார்ல் போறோம். நான் உங்க பக்கத்தில தான் உக்காருவேன் சரியா? “

கண்ணிற்கு எட்டாத சிரிப்புடன் தங்கை மகளுக்கு தலையசைத்தான் இளம்பரிதி.

********************************************

ஒரு வழியாக சென்னையின் போக்குவரத்து நெரிசலில் நீந்தி இளம்பரிதி யின் குடும்பம் நிறைமதி யின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

” வாங்க வாங்க வணக்கம் ” என்று வாசலிலே வந்து வரவேற்றனர் சுந்தரும் சரத்சந்திரனும்.

உள்ளே நுழைந்து அங்குள்ள நீள்விரிக்கையில் அமர்ந்தனர். பரஸ்பர அறிமுகத்திற்க்கு பிறகு சுந்தர் வைஷ்ணவியிடம்

“வைஷ்ணவி.. நீ போய் மதி-ய அழைச்சுட்டு வா மா… விஜீ நீ காபி பலகாரம் எடுத்துட்டு வா”

*************************

“என்ன மதி ரெடியா? “

“ம்ம் அண்ணி”

“இந்த குடும்பத்த விட பெட்டர் சாய்ஸ் உனக்கு கிடையாது.. சோ… கல்யாணம் பண்ணிட்டு கிளம்ற வழிய பாரு… நானும் உன் அண்ணனும் இனியாவது எந்த டென்சனும் இல்லாம இருப்போம் சரியா?”

“சரிங்க அண்ணி” என்று வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கியபடி கூறினாள்.

“சரி வா போகலாம்”

மனதை திடமாக்கி கொண்டு வரவேற்பறைக்கு சென்றாள் நிறைமதி.

***********************

நிறைமதி மிக நிதானமாக தலைகுனிந்தபடி வந்து நின்று அனைவரையும் கை கூப்பி வரவேற்றாள்.

இளம்பரிதி ஒரு கண நேரம் நிமிர்ந்து பார்த்தவன் பின் மடியில் இருந்த மகளிடம் கவனமானான்.

கோமளவள்ளி வரவேற்பாய் புன்னகைத்து

“வாம்மா நிறைமதி… இங்க வந்து உட்காரு”

” இல்ல பரவால்ல “

“அட என்னம்மா நமக்குள்ள ஃபார்மாலிட்டீஸ்? நீ வா”

நிறைமதி அமர்ந்ததும் அவளை இலகுவாக்குமாறு பேசினார் கோமளவள்ளி. இங்கு சுந்தர் இளம்பரிதியுடன் சிரிது நேரம் பேசினார்.

பின்பு மணிமாறன் தன் குரலை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்கு நிறைமதி எங்க மருமகளாக வருவது பூர்ண சம்மதம். உங்களுக்கு ?”

“எங்களுக்கும் சம்மதம் தாங்க” என்றார் சுந்தர்

“அப்ப நாள் பாத்துடலாமா?”

“ஒரு நிமிஷம் பா! “

” என்ன பரிதி?”

“நான் பொண்ணுட்ட தனியா பேசனும்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்று சுந்தரைப் பார்த்து வினவினான்.

” இல்லப்பா… நீங்க பேசுங்க… மதி தம்பிய தோட்டத்துக்கு அழைச்சுட்டு போய் பேசிட்டு வா மா”

நிறைமதி எழுந்து இளம்பரிதியை நிமிர்ந்து பார்த்து விட்டு தோட்டத்தை நோக்கிச் சென்றாள். இளம்பரிதி தன் மகளை தங்கையிடம் கொடுத்து விட்டு அவளை பின்தொடர்ந்தான்.

இருவரும் பேசி என்ன முடிவெடுப்பார்கள்?

                              – பேசும் –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!