Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 36
அத்தியாயம்-36
கதவு தட்டப்படும் ஓசையில் நேத்ராவைப் பார்த்தவன் அவள் கைகளைப் பிடித்து அவனோடு சேர்த்துக் கொண்டு கதவின் தாழ்ப்பாளை அகற்றினான்.
வெளியே நின்றிருந்த வினோத், வனிதா மற்றும் நந்தனைக் கண்டவன் நேத்ராவின் கையை விட்டுவிட்டு வினோத்தின் கழுத்தைப் பிடித்து “ஏன் டா நாயே இதெல்லாம் உன் வேலை தானா? உன்னை…” என்றவன் அவனை அடிக்கக் கை ஓங்கவும்,
Advertisement
“டேய் டேய் ப்ளீஸ் டா உன்னோட நல்லதுக்கு தானே டா இப்படி செஞ்சேன், செஞ்சேன் இல்லை செஞ்சோம்” என்றவனின் கழுத்தை விட்ட நளன் புரியாது பார்க்கவும்,
Advertisement
ஒருவிரல் கொண்டு நெற்றியை நீவிவிட்ட வினோத் “ஆமாண்டா சிஸ்டர நீயும் ஏத்துக்க மாட்டேங்கிற, அவங்களும் பாவம் என்ன தான் செய்வாங்க? அதான் நான், நந்தன், வனிதா எல்லாரும் பிளான் போட்டு அருண் கிட்ட உங்களை பத்தி எல்லாம் சொல்லி, நடிக்க சொன்னோம், அருணும் சும்மா சொல்லக் கூடாது நல்லாத்தான் நடிச்சாரு,
Advertisement
அவரு என்ன தான் நடிச்சாலும் நீயும் வழிக்கு வர்ற மாதிரி தெரியலை, சரி… அருணை வச்சே பொண்ணு பாக்க வர பிளான் போடலான்னு நெனச்சோம், ஆனா அதுக்குள்ள…” என்றவன் வனிதாவைப் பார்த்து கண் சிமிட்டவும், வெட்கத்தில் வனிதா நேத்ராவிடம் சென்று நின்று கொண்டாள்.
Advertisement
“டேய் இது எப்போ டா நடந்துச்சு?” என்ற நளனிடம் “அதுவா…” என்று அன்று நடந்ததை விளக்க ஆரம்பித்தான் வினோத்.
அன்னைக்கு ஹோலி பெஸ்டிவல் அன்னைக்கி அருண் கிட்ட போயி உன்னைய வெறுப்பேத்த சொல்லீட்டு உன் கிட்ட வந்தேனா? அப்போ வனிதா நம்ம மேல கலர் பவுடர் பூசுனாளா? நான் கூட வனிதாவை துரத்திக்கிட்டே போனேனே…அதுக்கு அப்புறம்…” என்றவன் மேலே பார்க்க, அவன் கதை விரிந்தது.
வினோத்தின் மேல் கலர்ப் பொடியை அடித்த வனிதா, திரும்பி ஓடவும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொடிகளில் கைகளை முக்கியவன் வனிதாவைத் துரத்த ஆரம்பித்தான்.
“ஹே வனிதா நில்லு, ஓடாத” என்றவன் துரத்திக் கொண்டு போக,
“முடியாது சார், முடிஞ்சா என்னை புடிச்சுக்கோங்க” என்றவள் விழா நடக்கும் இடத்திலிருந்து சற்று அப்பால் வந்துவிட,
வனிதாவைத் தொடர்ந்து வந்தவன், ஆள் அரவமற்ற இடத்தில் வனிதா ஒளிந்து நிற்கவும், அவளைக் கண்டு கொண்டவன் மெதுவாகச் சென்று அவள் முன் நின்றான்.
மீண்டும் வினோத்திடம் இருந்து ஓட பார்த்தவளை “ஹேய் வனிதா அக்ஸ்ப்ட் யுவர் டிபீட், ஓடாத” என்றவனிடம்,
மெதுவாகத் திரும்பியவள் “ம்ம் ஓகே ஐ அக்ஸ்ப்ட்” என்றவள் மூச்சுவாங்க அவன் முன்பு வரவும்,
“எஸ்…” என்றவன் மூச்சு வாங்க அவள் முன் வந்தான். ஒரு ஆடவன் அருகில் வரவும் சுற்றுப் புறம் உணர்ந்தவள், சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள்.
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க ஆங்காங்கே நீண்ட மின்கம்பத்தில் இருந்து கசிந்த மெல்லிய தங்க நிற ஒளி ஏகாந்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.
கண்கள் விரிய முகம் அப்பட்டமான பீதியை வெளிப்படுத்த “சார் ரொம்ப தூரம் தள்ளி வந்துட்டோம் போல, வாங்க திரும்ப போயிடலாம்” எனவும்
அவள் பயம் உணர்ந்தவன் “ஓகே கம் லெட்ஸ் கோ” என்றவன் வனிதாவுடன் நடந்தான்.
எதுவும் பேசாமல் அமைதியாக நடந்த வனிதாவைப் பார்த்தவன், “நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கவா?” என்று வினோத் கூறவும்,
“ம்ம் கேளுங்க சார்” என்றவள் நின்று அவன் முகம் பார்த்தாள்.
“நீங்க என்னைய சைட் அடிக்கிறீங்க தானே?” என்றான்.
அவன் இப்படிக் கேட்டதில் தலையைக் குனிந்து கொண்டு என்ன சொல்வது என்று விழித்தவளிடம் “ஓகே நீங்க சொல்ல மாட்டீங்க நானே சொல்றேன், நான் உங்களை டெய்லி எப்போல்லாம் பாக்குறேனோ அப்போல்லாம், ஏன் இப்போக் கூட சைட் அடிக்கிறேன்” என்றவன்,
“ஐ லவ் யூ மேட்லி, வில் யூ மேரி மீ” என்றவன் வனிதாவுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகம் பார்த்தான்.
அந்த இருளிலும் வனிதாவின் முகம் வெட்கத்தில் சிவப்பதைக் கண்டவன் “சுவீட் ஹார்ட் ப்ளீஸ், டெல் மீ நவ், வில் யூ மேரி மீ” என்றான் குரலில் ஒட்டு மொத்தக் காதலையும் தேக்கி,
அவனிடமிருந்து விலகி ஓடியவள் ஒரு மரத்தின் பின் சென்று நின்றாள். வனிதாவை பின் தொடர்ந்தவன் “சுவீட் ஹார்ட் ப்ளீஸ்…” என்றவனின் கைகளைப் பற்றியவள் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
அவள் சம்மதம் சொன்னதில் “யா ஹூ…” என்று கத்தியவன் அவன் வண்ணங்கள் படிந்த கைகளை வனிதாவின் கன்னம் தாங்குவது போல் கொண்டு வந்தவன் “மே ஐ…” என்று அவள் அருகில் வரவும்,
கண்களை இருக மூடிக் கொண்டவளை, கன்னம் தாங்கி முகமெங்கும் முத்தமழை பொழிந்தவன் அவள் இதழின் தேனை விரும்பி சுவைத்தான்.
உதடுகள் வழியாக உயிரை உறிஞ்சியவனின் கைகள் தங்கு தடையின்றி அத்துமீறவும் வினோத்தின் மார்பில் கைவைத்துத் தள்ளியவள், அவள் உடையைக் குனிந்து நோக்கினாள்.
வினோத்தின் கைகளில் இருந்த வண்ணப் பொடிகள், வினோத்தின் கைகள் அவள் உடல் தீண்டிய இடங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்ட, வெட்கத்தில் சிவந்தவளின் அழகு மீண்டும் அவனை அவள் புறம் இழுக்க, கட்டியணைத்தவன் மீண்டும் அவன் சரசங்களைப் புரியவும்,
அவனை விலக்கி நிறுத்தியவள் “ஐயோ இங்க பாருங்க, என்னோட ட்ரெஸ்ஸ, இப்படியே நான் எப்படி நேத்ராவை பாக்குறது?” என்று சிணுங்கியவளை,
மேலிருந்து கீழ் அளவிட்டவன் “ம்ம் கஷ்டம் தான், பேசாம ….” என்று அவள் காதில் ஏதோ கூறியவனை, சீ… என்றவள்,
“போங்க போயி இன்னும் கொஞ்சம் கலர் எடுத்துட்டு வாங்க” என்று வினோத்தை அனுப்பி வைத்தவள் அவனின் செயலில் உடல் பூரிக்க நின்றிருந்தாள்.
அன்றே அப்போதே நேத்ராவிடம் தானும் வனிதாவும் விரும்புவதாகக் கூறியவன் இருவரையும் பார்ட்டியிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
மனம் முழுவதும் சந்தோஷத்துடன் வீடு வந்தவன் கண்டது கையில் மது பாட்டிலுடன் அமர்ந்திருந்த நளனின் நிலையைத்தான். “இவனை…” என்றவன் தான் அவனிடம் நேத்ராவைப் பற்றி பேசியது.
நளன் கண்டுகொள்ளாமல் எழுந்து சென்று அவன் பெட் ரூமில் சென்று கதைவடைக்கவும், “இப்படியே இருந்தா இவன் சரிப்பட்டு வரமாட்டான்…” என்றவன் வனிதாவுக்கு அழைத்து அவர்கள் காதலிப்பதை உடனே வனிதாவின் தாய் தந்தைக்குத் தெரியப்படுத்தக் கூறினான்.
அதற்க்கு வனிதாவோ “இப்போவே வா, ஹா… எனக்கு பயமா இருக்கு” என்றவளிடம்,
“சுவீட் ஹார்ட், இங்க நளன் ரொம்ப அதிகமா குடிக்கிறான், வாயைத் துறந்து எதுவுமே சொல்லவும் மாட்டேங்கிறான், எனக்கு அவனை பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு, சிஸ்டர் படுற கஷ்டம் உனக்கே தெரியும், அவங்க இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா இருக்கும் போது நாம மட்டும் எப்படி…?
நான் அருணை வச்சுத்தான் மொதல்ல இந்த பொண்ணு பாக்க வர்ற பிளான் பண்ணுனேன், இப்போ உன் கிட்ட என்னோட காதலை சொன்னதுக்கு அப்புறம், பாவம் எதுக்கு அருணை வச்சு விளையாடனும்,
இதை சாக்கா வச்சு நாமளும் எங்கேஜ்மெண்ட் பண்ணிக்கலாம், என்னால ரொம்ப நாளெல்லாம் காத்திருக்க முடியாது, மாமா கிட்ட பேசணுன்னா சொல்லு நான் வேணா பேசுறேன்” என்றவனிடம்,
“மாமாவா?” என்று கேள்வியாக விளித்தவளிடம்,
“அதான் சுவீட்டி உங்க அப்பா, அதாவது மை மாமனார்” என்றான்.
வனிதாவின் தந்தை பாலு மலேசியாவில் பணிபுரிபவர், தாய் கன்னிகா வீட்டில் இருந்து வனிதாவையும் நிவேதாவையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
“ஓகே இது தான் பிளான் இப்போ நீ என்ன பண்ற, மொதல்ல நந்தன், நேத்ராவ கான்பெரென்ஸ் கால்ல கூப்பிடு” என்றவன் காத்திருந்தான்.
நேத்ராவும் நந்தனும் அழைப்பில் இணையவும் அவர்களிடம் “நந்தன், நாளைக்கு ஈவ்னிங் நேத்ரா பொண்ணு பாக்க வராங்கன்னு நளன் கிட்ட லீவு மட்டும் கேட்டாப் போதும், யாருக்கு பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்ல வேண்டாம்” என்றவனை,
“அதெப்படி அவங்க கண்டிப்பா கேப்பாங்க” என்று நேத்ரா பயந்து கூறவும்,
“சரி சிஸ்டர் பதட்டப் படாதீங்க, நானும் அந்த நேரம் உங்க கூட இருக்குற மாதிரி பாத்துக்குறேன், சரியா? அப்புறம் ரெண்டு பேரும் உடனே கிளம்பி வனிதா வீட்டுக்கு போயி அவ அவங்க அம்மா கிட்ட எங்க விஷயத்தை சொல்றதுக்கு ஹெல்ப் பண்றீங்க” என்ற வினோத்திற்கு,
“எந்த விஷயம் வினோத்” என்றான் நந்தன் புரியாமல்.
அருகில் இருந்த நேத்ரா வினோத்தையும் வனிதாவையும் இணைத்து கையை தாலி கட்டுவது போல் வைத்துக் காட்டவும் “ஓ என்று புரிந்து கொண்டவன், வாழ்த்துக்கள் வினோத்” என்றான்.
வாழ்த்தை ஏற்றுக் கொண்டவன் “நாளைக்கு காலையில நான் கார்த்திகேயன் அங்கிள் கிட்டயும் நந்தினி அம்மா கிட்டயும் பேசீட்டு, அவங்க மூலமா என்னோட அப்பா கிட்ட பேசீடுவேன், சோ என்னோட பக்கம் நோ ப்ராப்ளம்” என்றவன்,
“நாளைக்கு நளன் நேத்ராவுக்கு தான் நிச்சயம்னு நெனச்சு, கண்டிப்பா நேத்ரா வீட்டுக்கு வருவான். நாமெல்லாம் அவனை கண்டுக்காம பக்காவா நடிக்கணும், சரியா” என்று அழகாய் திட்டமிட்டான் நளனின் உயிர் நண்பன் வினோத்.
அமைதியாக வினோத் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த வனிதா “எனக்கு என்னமோ இது சரியா வருமான்னு தோணுது? தலையை சுத்தி மூக்கை தொடுற மாதிரி இருக்கு” என்று இழுக்கவும், நேத்ராவும் அவளுடன் இணைந்து அதையே கூறவும்,
“மச் நான் சொல்றதை கேளுங்க கண்டிப்பா நடக்கும், இப்போ தான் நளன் சரியான பார்முலா இருக்கான். இது தான் சரியான நேரம்,
ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கிட்டா தான் அவங்க பிரச்சனை சால்வ் ஆகும், அதுவுமில்லாம சிஸ்டராச்சும் பரவாயில்லை, ஆனா நளன்… மனசுல என்ன நெனைச்சு வச்சிருக்கான்னே தெரியலை,
சிஸ்டர் இல்லாம வாழ முடியாதுன்னு சொல்றான் அப்புறம், சரி சேந்து வாழுடான்னு சொன்னா ஒன்னும் பேச மாட்டேங்கிறான்” என்று பேசி அனைவரையும் சரி கட்டினான் வினோத்.
வனிதாவிடம் அவள் தந்தையான பாலுவின் போன் நம்பர் வாங்கியவன் அன்று இரவே அவரிடம் பேசி சம்மதம் வாங்கினான்.
பாலு ஒன்றும் காதலுக்கு எதிரானவர் அல்ல, தன் பிள்ளைகளின் சந்தோஷத்தை எப்போதும் முன்னிறுத்துபவர், அதுவும் நேத்ராவின் கணவரான நளனிடம் மிகுந்த மரியாதையை வைத்திருப்பவர், நளனின் சுய முன்னேற்றம் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, வினோத் நளனின் நண்பன் என்றால் சொல்லவும் வேண்டுமா?.
“சரிங்க மாப்பிள்ளை நீங்க உங்க பிளான் படியே செய்யுங்க, ஆனா உடனே என்னால வரமுடியாது, இன்னும் ரெண்டே நாள்ல நான் அங்க இருப்பேன், நான் வனிதாவோட அம்மா கிட்ட இப்போவே பேசீடறேன்” என்றார் சந்தோஷமாக.
![]()
![]()
![]()
Link
மகரந்தம் தாங்கும் மலரவள் 35
Link
மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Link
நாணலே நங்கையானால்?(முழுநாவல்)
Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)
Link
நிலவே நின்னை சரண் அடைந்தேன் (முழுநாவல்)
Link
கடைவிழியின் காதலில் (முழுநாவல்)
Link
Amazon Kindle
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக![]()
![]()
![]()
