Skip to content
Post Views: 6,361
“அடிதூள்ள்ள்… எனக்கு அப்படியே ஒரு படம் பார்த்த பீல்டி அவந்தி… அப்படியே விசில் அடிச்சி கைத்தட்டணும் போல இருந்துச்சிடி…”
“ம்ம்…”
“என்னடி… எவ்வளோ பெரிய கேடி பாரு… நான் கூட சாது நினைச்சிட்டேன்…”
“டென்ஷனா இருக்கு… நீ சொல்றது சரிதான் தர்ஷ்…”
Advertisement
“ஒய் டென்ஷன்… அவன்லாம் டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒர்த் கிடையாது… ப்ரீ ஆஹ் விடு..”
“ஹ்ம் சரி..”
“அவங்க அம்மா, இப்போ அவனை நல்லா திட்டப்போகுது…”
Advertisement
“இல்லடி… இவன் அப்படியே நல்லவனா மாறிருப்பான்… அவங்க அம்மா என்னைத்தான் திட்டும்… இவ்வளோ பேசுறேன்னு…” என்று அங்கு நடந்ததை இவள் சரியாக யூகம் செய்ய,
Advertisement
“ஆமா அவந்தி இருக்கும்… அவன் ஒரு கேடித் தான்… அடுத்துப் பாரேன், வேற யாருக்காவது ரூட் போடுவான்…”
“ஹா ஹா… இருக்கலாம்…”
“அவன் உன்னைப்பத்தி சரியாய் தெரியாம வசமா சிக்கிட்டான்… இன்னும் நல்லா அவனை திட்டிருக்கணும் நீ…”
Advertisement
“போதும் விடுடி…”
“ச்ச… நான் ஒரு வார்த்தைக் கூட அங்க பேசல… அது தான் கொஞ்சம் பீலிங்ஸ் ஆஹ் இருக்கு…”
“வேணும்னா திரும்பி வண்டிய விடுறேன்… நீ போயிட்டு பேசிட்டு வரியா?…”
“நீ பேசுனப் பேச்சுக்கே அவன் இந்நேரம் ஓடிருப்பான்…”
” அப்படிங்குற.. “
“ஆமான்றேன்..”
“சூப்பர் மார்க்கெட் போ அவந்தி, ஏதாவது ஒரு ரவுண்டு அடிச்சி வாங்கிட்டு போவோம்..”
“வீக்கெண்ட் தான… வெளில போயிட்டு வாங்கிப்போம்… இங்க என்ன வாங்கப் போற…”
“சும்மா தான்… போயிட்டு வரலாம்…”
“ஓகே…”
இருவரும் வீட்டிற்கு சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, மொட்டைமாடிக்கு சென்றனர்.
“அம்மாட்ட சொல்லாத தர்ஷ்..அவங்க அடுத்து, ஏதாது ஆரம்பிப்பாங்க…”
“சரி சொல்லல…”
“என்ன உடனே சரினு சொல்ற… இதை நம்பலாமா?…”
“நான் சொல்லலானாலும்… அவங்களே உனக்கு கல்யாணம்னு ஆரம்பிப்பாங்க… இவன் அவ்ளோ ஒர்த் இல்ல… அவங்ககிட்ட சொல்றதுக்கு..”
“அடபோடி…”
“சரி சொல்லு, சண்டே மாலுக்கு போலாமா..”
“நாளைக்கு போயிட்டு, சண்டே ரெஸ்ட் எடுக்கலாமே…”
“நோ நோ.. மாவுலாம் அரைச்சி, எல்லா வேலையும் முடிச்சிட்டு, சண்டே கொஞ்சம் லேட் ஆஹ் எழுந்து போயிட்டு வருவோம்..”
“சரி…டீல்…”
“அம்மாக்கு கால் பண்ணி என்ன வேணும்னு கேக்குறேன்… எப்படியும் புடவைத் தான் கேப்பாங்க… சரி வா கீழப் போவோம்…”
இருவரும் மாலில் சந்திப்பார்களா…?
சாரல் வருடும்..
error: Content is protected !!