Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்….6

இரும்பில் ஓர் இதயம்….6

அந்த பாறையின் மீது படுத்து இருண்ட வானத்தை வெறித்தபடி இருந்தான் இளம்பரிதி.அவனது வாழ்வும் அந்த வானத்தை போலவே இருண்டு தான் இருக்கிறது.ஆனால் அதில் சிறு வெளிச்சம் போல் மிருதுளாவின் வரவு ஒளியை தந்தாலும் அதை பற்றிக் கொண்டு பிரகாசிக்கும் எண்ணம் தான் இல்லை அவனிடம்.வேண்டாம் யாரும் வேண்டாம் எனக்கு நான் மட்டும் போதும் என்று தனது நிலைப்பாட்டை உறுதி மொழி போல் கூறிக் கொண்டிருந்தான்.

பரிமளம் கூறிய வார்த்தையை கேட்டவன் முகமும்,அகமும் இறுக அதை கண்டு கொண்டு மிருதுளா அவனை நெருங்கும் முன் அந்த இடத்தை விட்டு வந்திருந்தான்.கிட்டதட்ட அவளிடம் இருந்து ஓடி வந்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.எங்கே தன் பின்னால் வந்து தன்னை பிடித்து கொள்வாளோ என்று பயந்தவன் ஏதோ ஒரு பேருந்தில் ஏறி எங்கெங்கோ சுற்றி கடைசியாக இப்போது கொடைக்கானில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

நான் மாறிவிட்டேனா….என்னுள் மாற்றம் நிகழ்ந்துவிட்டதா என்று தனக்குள் விவாத மேடை நடத்திக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்த பதில் அவனுக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை.அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை அவன் உணரவில்லை ஆனால் அவள் உணர்ந்துள்ளாள் என்று அவளின் முகமாற்றமே கூறியிருந்தது.அதுவே அவனிற்கு அத்தனை கோபத்தை கொடுக்க,



Advertisement

“ஓஓஓ….அமைதியா இருந்து என்னை மாத்தலாம்னு நினைக்கிறியா அது நடக்காது….அதுக்கு நான் விடவும் மாட்டேன்…..எப்ப….எப்படி நான் இதை கவனிக்காம விட்டேன்…..”என்று பல்லை கடித்தவனுக்கு அது அனைத்திருக்கும் காரணம் மிருதுளா தான் என்று நினைத்தவன் அவளை மொத்தமாக தன் வாழ்வில் இருந்து ஒதுக்க முடிவெடுத்துவிட்டான்.

இங்கு மிருதுளாவின் நிலையோ முற்றிலும் வேறாக இருந்தது.பரிதி சென்று இதோடு இரண்டு தினங்கள் ஆகிற்று.அவன் எங்கு சென்றான் எங்கு இருக்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை.மனது முழுவதும் அவனிடமே இருக்க எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை.பரிதியை பற்றி பரிமளத்திடம் கேட்க அவரோ,

“ம்க்கும்….அவன் என்கிட்ட சொல்லிட்டு போயிட்டாலும்….நீ வேற கண்ணு….”என்றவர் அவளின் கலங்கிய முகத்தை கண்டு,

Advertisement

“எதுக்கு கண்ணு பயப்படுற…வந்துடுவான்….”என்று தைரியம் கூறிவிட்டு சென்றார்.அவள் வந்ததிலிருந்து காலை எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்துவிடுபவன் இரு நாட்களாக வரவில்லை எனவும் பயம் பிடித்துக் கொண்டது.அன்று பரிமளம் பேசியதில் தான் அவன் வெளியில் சென்றுவிட்டான் என்று புரிந்து கொண்டாள்.

Advertisement

மிருதுளாவிற்கு பரிதியின் இந்த சின்ன மாற்றமே பெரிதாக தெரிந்திருக்க அதோடு பரிமளம் அவனை பற்றி கூறியதும் பெரிய மகிழ்வை தந்திருந்தது.ஆம் இரு தினங்களுக்கு முன் தான் பரிமளம் அவளிடம்,

“கண்ணு….இந்த பய என்கிட்ட வந்து வாடகை இன்னும் இரண்டு நாள் கழிச்சு தரேன்னு சொல்லிட்டு போனான்….”என்று கூற முதலில் மிருதுளா அதை பெரிதாக எடுக்காமல்,

“அதனால என்னமா….”என்று கேட்க,

Advertisement

“என்ன கண்ணு இப்படி கேட்குற….அவன் கையில பணம் இல்லை அதான் இப்படி சொல்லிட்டு போறான்….புரியுதா…”என்று அவர் கேட்க மிருதுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை.அவளின் புரியாத பாவனையை கண்ட பரிமளம் அவளின் தலையில் லேசாக தட்டி,

“அடி கிறுக்கு பொண்ணு….அவன் இப்ப திருடலனு அர்த்தம்….”என்று கூற,மிருதுளாவிற்கு நெஞ்சம் அத்தனை நிம்மதியடைந்தது.எத்தனை நாள் இதை நினைத்தே தூங்காமல் இருந்திருப்பாள்.

“நி….நி….நிஜமா….சொல்லுறீங்களா….அவர் அவர்….”என்று சொல்லமுடியாமல் அவள் தடுமாற,அவளின் தலையை ஆதரவாக கோதியவர்,

“ம்ம்ம்….நிஜமா தான் கண்ணு சொல்லுறேன்….முன்னெல்லாம் மாசம் ஒன்னு ஆனா பணத்தை கொண்டு வந்து கொடுத்திடுவான்….அப்ப கூட நான் கேட்பேன் ஏன்டா இப்படி திருடுறனு….அதுக்கு உனக்கு பணம் வருதுல அதோட நிப்பாட்டிக்க தேவையில்லாதது எல்லாம் பேசாத புரியுதானு என்கிட்ட எகிறி பேசிட்டு போவான்….ஆனா இந்த தடவை பணம் இல்லைனு அமைதியா சொல்லிட்டு போறான்…இதுவே பெரிய மாற்றம் தான் கண்ணு,….அவன் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு தான் இருக்கான்……அது அவனுக்கே தெரியலை….”என்று கூற,மிருதுளாவிற்கு இதுவரை அழுத்திக் கொண்டிருந்த ஒன்று விலகியது போல் இருந்தது.

மேலும் இரு நாட்கள் காக்க வைத்துவிட்டே வந்தான் பரிதி.வந்ததவன் நேராக பரிமளத்தின் கதவை உடைக்க,

“இந்தா வந்துட்டான்….என் கதவை உடைக்க….இவனை….”என்று திட்டிக் கொண்டே பரிமளம் அவிழ்ந்த கொண்டையை மீண்டும் போட்டுக் கொண்டு வெளியில் வர,மிருதுளா அவருக்கு முன்பே அங்கு நின்றிருந்தாள்.

“எவ்…எவ்வளவு நேரம் பரிமளா….வெளில வா…..”என்று பரிதி வெளியில் கத்த தொடங்க,பரிமளம் சரியாக வெளியில் வந்தவர் பரிதியின் நிலைக் கண்டு தேங்கி நின்றுவிட்டார்.முழு போதையில் வந்திருந்தான் நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தான்.இது நாள் வரை அவன் குடித்து அவர் கண்டதில்லை ஆனால் இன்று அவனின் நிலைக் கண்டு கோபம் எழ,

“அடபாவி இது ஒண்ணு தான் இல்லனு நினைச்சேன் அதையும் இன்னைகக்கு செஞ்சிட்டு வந்திட்டியா…..”என்ற கத்திக் கொண்டே அவனிடம் நெருங்க,

“ம்மா….வேண்டாம்…..போகாதீங்க….”என்று அவரை பிடித்து தடுத்து நிறுத்தினாள் மிருதுளா.அவளின் குரலே கரகரப்பாக இருக்க,கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது.இன்று தானே அவளை முழுமையான சந்தோஷத்துடன் பார்த்தோம் என்று நினைத்தவர்,

“அய்யோ….கண்ணு என் கண்ணே பட்டுடுச்சி போலயே…..இன்னைக்கு தான என் வாயால எல்லாம் நல்லது நடக்கும்னு சொன்னேன்….இப்படி வந்து நிக்குறானே…..இவனை….விடு…என்னை விடு….”என்று அவளிடம் திமறி விலகியவர் பரிதியிடம் நெருங்கி அவன் எதிர்பார்க்கா வண்ணம் பளார் என்று அறைந்திருந்தார்.அவர் அறைந்ததில் தடுமாறி கீழே விழுந்திருந்தான் இளம்பரிதி.

சற்று நேரத்தில் அந்த இடமே அசாத்திய அமைதியில் மூழ்கியது.மிருதுளா பரிமளத்தை தடுத்து நிறுத்தும் முன் அனைத்தும் நடந்தேறியிருந்தது.கீழே விழுந்த பரிதி மெல்ல தெளிந்து எழுந்தவன்,

“ஏய்….என் மேலே கை வச்சிட்டியா….உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்….”என்று பரிமளத்தை கை ஓங்க,மிருதுளா ஓடிச் சென்று,

“அய்யோ என்ன பண்ணுறீங்க….அவங்க உங்களுக்கு அம்மா மாதிரி…..”என்று கூறிக் கொண்டே அவனை பிடிக்க போக அவளை தள்ளி விட்டவன்,

“ஏய் ச்சீ….தள்ளி போடி யாரு அம்மா….எனக்கு யாரும் கிடையாது….இது இடம் கொடுத்துச்சி இங்க இருக்கேன் அவ்வளவு தான்…..”என்றவன் அவளை உதறி தள்ளிவிட்டு,

“எல்லாம் உன்னால தான்….என்னைக்கு நீ வந்தியோ அப்போவே என் வாழ்க்கை என்ன விட்டு போயிடுச்சி…..”என்று அருவருத்து கூறுவது போல கூறியவன்,பரிமளத்திடம் திரும்பி,

“இந்தா இந்த கை ஓங்குற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத…..இந்தா உன் வாடகை பணம்….”என்று அவரின் கையில் பணத்தை திணித்துவிட்டு குடுசையின் உள்ளே சென்றுவிட,பரிமளம் அதிர்ச்சி விளகாமல் நின்றார்.என்ன தான் அவனை அவர் பெற்றெடுக்கவில்லை என்றாலும் அவனை தன் பிள்ளை போல தான் பார்த்தார்.

இன்று அவன் அவரை அடிக்க கை ஓங்கியது அவரை மனதளவில் பலமிழக்க செய்திருந்தது.சில நேரங்களில் வார்த்தைகள் மனிதனை மனதளவில் கொன்றுவிடும் அது தான் இங்கும் நடந்தது.பரிதியின் வார்த்தைகள் பரிமளத்தை கொன்றிருந்தது.

மிருதுளா பரிமளத்தை அணைத்து ஆறுதல் படுத்த முயன்றும் பயனில்லாமல் போனது.அவரின் வெறித்த பார்வையே அவளின் மனதை இன்னும் ரணமாக்க,

“ம்மா விடுங்க….அவர் நிதானத்துல இல்ல…..அதான்….ம்மா…இங்க பாருங்க….:”என்று அவரை தன்னை நோக்கி திருப்பியவள் அவரின் கன்னத்தை தாங்கி மன்னிப்பை வேண்ட,அவளின் கைகளை பற்றியவரின் கண்களும் கலங்கி போயிருந்தது.

“வி….விடு கண்ணு….நான் என்ன அவனுக்கு அம்மாவா…..இல்ல தான….இவன் இப்படி தான் பேசுவான்னு தெரியும் ஆனாலும் மனசு ஏதோ கேட்கல….அதான் அடிச்சிட்டேன்…. மன்னிச்சிடு கண்ணு….”என்று குரல் தழும்ப கூற,

“அய்யோ ம்மா…..மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை தூர நிறுத்தாதீங்க….என்னால தாங்கிக்க முடியாது…..”என்று மிருதுளா தேம்பி அழ,அவளின் தலையை மெல்ல வருடிவிட்டவர்,

“ம்ம்….என்னவோ போ…..எனக்கு மனசே சரியில்ல….நீ போ போய் அவனை பாரு….ஆனா ஒண்ணு கண்ணு….இந்த பய உன்கிட்டேந்து தப்பிக்க என்னெல்லாம் செய்யுறான் பாரேன்….போ அவனை பிடி….விட்டுடாத…..குரங்கு பய என்னென்ன சேட்டை எல்லாம் செய்ய போறானோ….”என்றவர் மெல்ல எழ முடியாமல் எழந்து கொண்டே,

“ம்ம்ம்….இந்த பய பண்ணதுக்கு இவனை வெளில தான் அனுப்புனும் ஆனா பாரேன் எனக்கு மனசு வரமாட்டேங்குது…..லூசு பய கடவுள் நல்ல வாழ்க்கை கொடுத்திருக்காரு ஆனா வாழ தெரியலை….ம்ஹம் கடவுள் தான் இவனுக்கு புத்தி சொல்லனும்…..”என்று தன் வீட்டிற்குள் செல்லும் வரை தன்பாட்டிற்கு பேசிக் கொண்டே செல்ல,மிருதுளாவிற்கு நெஞ்சம் கனத்து போனது அவரின் பரிசுத்த அன்பில்.இத்தகைய அன்பை எப்படி இவனால் உதற முடிகிறது என்று பரிதியின் மீது அத்தனை கோபமும் திரும்ப வேகமாக குடுசையின் உள் சென்றாள் மிருதுளா.

பரிதியோ தலையில் கை வைத்தபடி உறக்கத்தில் இருக்க,வேகமாக அவனிடம் வந்த மிருதுளா அவனின் சட்டை பிடித்து உலுக்க,அவனோ எதையுமே உணரும் நிலையில் இல்லை அந்தளவிற்கு குடித்திருந்தான்.இவனிடம் இப்போது கேட்டும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்தவள் அவனின் போதை தெளிவதற்காக காத்திருந்தாள்.

விடியல் பலபேரின் வாழ்வில் விடியலை தந்தது என்றால் மிருதுளாவின் வாழ்வை முற்றிலுமாக இருட்டாக்க வந்தது.காலை போதை தெளிந்த பரிதி எழ,அவனின் அருகே மிருதுளா அவனை தீயாக முறைத்தபடி அமர்ந்திருந்தாள்.அவனோ அவளை எப்போதும் போல் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல பார்க்க

“நில்லுங்க…..”என்று அவனின் முன் தன் கரங்களை விரித்தபடி நின்றாள் மிருதுளா,பரிதி அவளின் கைகளை தட்டிவிட்டு செல்ல அவனின் சட்டையை பாய்ந்து பிடித்திருந்தாள் மிருதுளா,

“எங்கிருந்து பணம் வந்தது….எங்கிருந்து திருடிட்டு வந்தீங்க….ஆங் சொல்லுங்க….”என்று கேட்க,

“ஏய்…..”என்று அவளின் கைகளை ஒரு கரத்தால் பிரித்து எரிந்தவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.அவனின் ஒற்றை அறையில் மிருதுளாவின் கன்னம் தீயாக எரிந்தது உதடு கிழிந்து ரத்தம் வர,அவளோ அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை வேகமாக எழுந்து அவனை மீண்டும் மறித்து நின்றவள்,

“எனக்கு பதில் சொல்லாம நீங்க வெளில போகபோறது இல்லை….சொல்லுங்க…..”என்று இன்னும் ஆவேசமாகவே கேட்க,

“ஏய் தள்ளி போடீ….”என்று அவளை மீண்டும் உதறி தள்ள,மிருதுளா இம்முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றாளே தவிர வழியை விட்டு நகரவில்லை.பரிதிக்கு அவளின் உறுதி மேலும் கோபத்தை தூண்ட மீண்டும் அவளை அறைய கை ஓங்கினான்.ஆனால் அவனால் ஓங்க மட்டுமே முடிந்தது மிருதுளா அவனின் கரத்தை பிடித்திருந்தாள்.

“எப்போதும் அடிவாங்கிட்டே இருக்க மாட்டேன்…..என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க……ஆங்…..நீங்க செய்யறது தப்புனு எடுத்து சொன்னா கை ஓங்குவீங்களா…..இப்படி அடுத்தவன் கிட்டேந்து திருடி பிழைக்கிறது அசிங்கமா இல்லை…..”என்று அவள் கத்த,

“இல்ல…..இல்ல….போதுமா…..நீ யாருடீ என்னை கேட்க……நீ முதல்ல வெளில போ….”என்று அவளை கைளை பிடித்து இழுக்க,மிருதுளா தன் பாதத்தை தரையில் ஊன்றி நின்று கொண்டாள்.பரிதியால் அவளை நகர்த்தமுடியாமல் போக,கோபத்தில் அவளின் கழுத்தை பிடித்து தூக்க,அவனின் வலிமையான பிடியில் மிருதுளாவின் கண்கள் சொருக தொடங்கின ஆனால் அவள் கத்தவில்லை அவனை தடுக்கவுமில்லை.

“ச்சை என்னை பிடிச்ச சனியன்….”என்று அவளை உதறிவிட்டு வெளியில் செல்ல முற்பட,

“ஏன் விட்டுட்டீங்க….செத்துடுவேன்னு பயமா….”என்று மிருதுளாவின் குரல் மிக பலகீனமாக வர,பரிதியின் நடை தடைப்பட்டது திரும்பி அவளை பார்க்க கண்கள் இரண்டும் கலங்கி கழுத்தில் அவனின் கை தடம் பதிந்திருந்தது.

“ஏன் பயந்து ஓடுறீங்க….”என்று மிருதுளா பரிதியை பார்த்து கேட்டவாரே மெல்ல எழ முயற்சி செய்ய அவனோ கல் போல நின்றான்.முகத்திலும் எதையும் காட்டாத பாவம் அவனை பார்த்துக் கொண்டே எழுந்து அவனின் அருகில் வந்தவள்,

“ஏன் பயந்து ஓடுறீங்க….”

“நான் ஒண்ணும் பயப்படல…..என்னோட வாழ்க்கையில நீ இருக்கிறது எனக்கு பிடிக்கல….”என்று அவன் கூறி முடிக்கும் முன்,

“பொய்…..பொய்…..நீங்க பொய் சொல்லுறீங்க……உங்களுக்கு பயம் எங்க என்கூட வாழ்ந்திடு வீங்களோனு பயம்…..என்கூட அன்பையும்,நேசத்தையும் பரிமாறிக்க பயம்……இது எல்லாத்தையும் விட எங்க நானும் உங்களை விட்டு போயிடுவேனோனு பயம்…..”என்று மிருதுளா பேச பேச பரிதியின் முகம் வெளிரியது.மிருதுளா தன்னை சரியாக கனித்து வைத்ததிருந்தது அவனிற்கு கோபத்தை தூண்டியது.

“இங்க பாரு எனக்கு எந்த பயமும் இல்லை…..முதல்ல நீ இந்த இடத்தை காலி பண்ணு….இல்லை….”

“என்ன கொன்னு புதைச்சிடுவியா…..ஆங்….”

“ஆமா கொன்னுடுவேன்…..”என்று கர்ஜனை போல அவன் கூற மிருதுளாவின் கண்கள் மேலும் கலங்கி தான் போயின,

“ஏன் இப்படி வெறிபிடிச்சு மாதிரி பேசுறீங்க….”

“ஆமா நான் வெறிபிடிச்ச மாதிரி தான் மாறிக்கிட்டு வரேன்…அதனால தான் சொல்லுறேன் இங்கிருந்து போயிடு…..”என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.பரிதியிடம் அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றம் வரப்போவதில்லை என்பதை உணர்ந்த மிருதுளா மனதொடிந்து அமர்ந்துவிட்டாள்.

ஆனால் பரிதியை தவறு என்று கூறியும் பயனில்லை வாழ்க்கை அவனிற்கு வெறும் கோர முகங்களை மட்டுமே காட்டியிருக்க அவன் தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டு வெளி வர மறுக்கிறான்.மாற்றங்கள் நிகழும் ஆனால் அதற்காக நாம் பல வலிகளை கடந்து தான் வர வேண்டும் அதே போல் தான் மிருதுளாவிற்கும் பல வலிகள் கடந்து வந்தால் தான் அவளுக்கு பரிதியுடன் வாழ்வு நல்ல முறையில் அமையும் இல்லையேல் அவளின் வாழ்வு அவனுடன் மலராமல் தான் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!