Skip to content
Post Views: 6,657
இரும்பில் ஓர் இதயம்…..16
மகேஸ்வரன் தனிமை விரும்பி எல்லாம் கிடையாது.அவனிற்கு தன் குடும்பத்துடனும்,தன் நண்பர்களுடனும் இருப்பதையே தான் விரும்புவான்.அது போல் தன்னிடம் மிகநெருங்கியவர்களுடன் தான் கலகலப்பாக இருப்பான்.ஆனால் கடந்த ஒருவருடமாக அவனிற்கு தனிமை தான் பிடிக்கிறது.அதுவும் வீட்டில் அவனின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதிலிருந்து மொத்தமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான்.அவனின் தாய் வைரம் தான் மகனை நினைத்து கவலையில் அழத் தொடங்க அவருக்காக மட்டுமே வீட்டிற்கு செல்கிறான்.
தந்தை மாணிக்கத்தை பிடிக்காது என்றதில்லை ஆனால் அவர் அவனிடம் சற்று கண்டிப்புடன் தான் இருப்பார் அதுவே அவரை அவனிடம் இருந்து சற்று தள்ளி நிறுத்திவிட்டது.ஆனால் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் உள்ளது அதை அவரிடம் அவன் காட்டியதில்லை அவ்வளவே.இந்த ஒரு வருடமாக அவனுக்கும்,தந்தைக்கும் நடக்கும் போரில் கூட தந்தை அவனை கோபப்படவோ திட்டவோ இல்லை ஆனால் அவரின் ஆசை சிறிது காலம் அவருடன் அவரின் கேரேஜிற்கு வரவேண்டும் அவ்வளவே.ஆனால் மகேஸ்வரனுக்கு ஏனோ கேரேஜ் என்றால் ஒருவித ஒவ்வாமை அது அழுக்கு அதனால் அங்கு வர பிடிக்கவில்லை.தந்தையிடம் சிறு வயதில் கூட கூறுவான் இந்த கேரேஜை விற்று விடுங்கள் இதனால் தான் நீங்க அழுக்காக இருக்கீங்க என்று கூறி அடியும் வாங்கியிருக்கிறான்.
மாணிக்கத்திற்கு மகனின் இந்த பேச்சு ஏதோ சிறு வயது புரியாமல் பேசுகிறான் என்று தான் நினைத்தார் ஆனால் அது அவன் வளர வளர அவனின் அந்த எண்ணமும் சேர்ந்தே வளர்ந்ததை அவர் அறியவில்லை.மகன் தான் கூறியதை நிராகரித்தது மட்டுமல்லாமல் தனது தொழிலை கேவலமாக பேசியது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதனால் அவரும் தன் பிடியில் உறுதியாக இருந்தார்.
Advertisement
“மாப்புள….ஏய் மாப்புள….”என்று குமரன் அழைக்கவும் நிகழ்வுக்கு வந்தான் மகேஸ்வரன்.
“யோவ் மாமா….நீ இங்க என்னய்யா பண்ணுற….”என்றபடி எழுந்து மணியை பார்த்தான் அது பதினொன்று என்று காட்ட தனது கைபேசியை பார்க்க தனது தாய் தான் பல தடவை அழைத்திருந்தார்.
“ச்சு…மொபைலை சைலெண்ட்ல போட்டுட்டேன் போல….இப்ப அம்மா கத்த போது….”என்று கூறிக் கொண்டே தான் தனது தாயிற்க்கு அழைத்தான்.முதல் அழைப்பிலேயே எடுத்துவிட்டார்.
Advertisement
“ஹலோ மகி கண்ணா….எங்கடா இருக்க…ஏன்டா இப்படி பண்ணுற…”என்று வைரம் தனது தினப்படி புலம்பலை தொடங்க,
Advertisement
“ப்ச்…ம்மா….நான் இங்க தான் நம்ம இன்னொரு வீட்ல தான் இருக்கேன்….நீ டென்ஷன் ஆகாத….காலையில வரேன்….திரும்ப திரும்ப கூப்பிடாத…..”என்றுவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.இல்லையேல் தாயின் புலம்பல் காலை வரை தொடரும்.
“என்னா மாப்புள நீ…அக்கா ஏதோ புள்ளை எப்படி இருக்கானோனு பயந்து கேட்குது அதுக்கு இப்படி கத்திரிச்சு பேசிப்புட்ட….அது மனசு எப்படி கஷ்டப்படும்…..”என்றான் குமரன்,
“என்னா மாமா திடீர் விஜயம்….அதை சொல்லு முதல்ல…நீ விஷயம் இல்லாம வரமாட்டியே….என்னா மேட்டரு….”என்று சரியாக குமரனை எடைப்போட்டான் மகேஸ்வரன்.அவனிற்கு குமரனை பற்றி ஓரளவிற்கு தெரியும்.
Advertisement
“இதுல மட்டும் என் மாமன் மாதிரியே இரு….ம்ம்ம்…..என் நேரம் உன் காலை எல்லாம் பிடிக்க வேண்டியதிருக்கு…இருக்கட்டும் இருக்கட்டும்….நாளை பின்ன நீ தான எனக்கு மாப்பிள்ளையா வரப்போற…..அப்போ இந்த சொத்தெல்லாம் எனக்கு வரும்…..”என்று தனக்குள் குமரன் கூறிக் கொண்டே நிமிர மகேஸ்வரன் குமரனை தான் கூர்ந்து கொண்டிருந்தான்.
“ஆத்தாடீ…இவன் எப்போதிலேந்து என்னையவே பார்த்துக்கிட்டு இருக்கான்னு தெரியலையே….”என்று அதிர்ந்தவர் உடனே தனது முகபாவனை மாற்றி கொண்டு,
“என்ன மாப்புள அப்படி பார்க்குற….”
“அதை தான் நானும் கேட்குறேன்….நீ யாரை கவுக்க பிளான் பண்ணிக்கிட்டு இருக்க……”என்று சரியாக கேட்க,குமரன் உண்மையில் பதறி தான் விட்டான்.தனது திட்டத்தை மனதிற்குள் கூறுகிறேன் என்று சத்தமாக ஏதும் பேசிவிட்டோமா என்று ஆனாலும் தனது கெத்தை விடாமல்,
“ச்ச…என்ன மாப்புள நீ இப்படியெல்லாம் என்னை பார்த்து கேட்குற…..நான் என்ன அப்படிபட்டவனா….”என்றுவருக்கு முகம் சற்று வேர்த்துவிட்டது.மகேஸ்வரன் பற்றி தான் குமரனுக்கு நன்கு தெரியுமே கோபக்காரன் என்று அவனிடம் ஒருமுறை பேசி வாங்கியும் கட்டியிருக்கிறார் அல்லவா அதனால் பயம் இருக்க தானே செய்யும் இன்றும் அந்த நாளை நினைத்தால் நெஞ்சம் நடுங்கும் அவனிற்கும் மாணிக்கத்திற்கும் சண்டை ஆரம்பித்த கால கட்டத்தில் ஒருமுறை,
“நீ ஏன் மாப்புள இப்படி வந்து உட்கார்ந்திருக்க….உங்க அப்பா தரலைனா சொத்தை பிரிச்சு கேளு….”என்று கூற அதற்கு குமரனின் சட்டை பிடித்துவிட்டான் மகேஸ்வரன்.
“எனக்கு எங்க அப்பாக்கும் ஆயிரம் இருக்கும் அதுல தலையிட நீ யாரு….நீ எனக்கு சொந்தமா போயிட்ட அதனால சும்மா விடுறேன் இல்லை வெட்டி பொலி போட்டுடுவேன் பார்த்துக்க….”என்றவனின் ஆக்ரோஷத்தை கண்ட குமரனுக்கு உயிர் பயம் வந்துவிட்டது. அதனால் இவனிடம் கவனமாக தான் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்ட குமரன் மிக சாதுரியமாக தான் காய்களை நகர்த்தினான்.
“என்னத்த மாப்புள சொல்ல…இப்பெல்லாம் உன் அப்பா அந்த பரிதி பயல ஏதோ பெத்த புள்ளைய பார்க்குற மாதிரி தான் பார்க்குறாரு….செய்யுறாரு….அவன் என்னடானா ஏதோ முதலாளி போல வரான் போறான்….”என்று கூறிவிட்டு மகேஸ்வரனின் முகத்தை பார்க்க அவனோ அதற்கு இப்போ என்ன என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன மாப்புள நீ….என்னைய பார்க்குற….நான் நிஜத்தை தான் சொல்லுறேன்….நேத்து கூட லேட்டா தான் வந்தான்….மாமா ஏன்டா லேட்டு கேட்டதுக்கு தெணவட்டா பேசிட்டு போறான்….”என்று கூற,
“என்ன பேசினான்…..”என்றான் மகேஸ்வரன்,இது தானே வேண்டும் குமரனுக்கு அதற்காக தானே காத்துக் கொண்டிருந்தான் சரியாக அவனின் தந்தையை திட்டினான் என்று ஆரம்பித்தான் அது சரியாக தான் வேலை செய்தது.குமரன் தன்னால் முடிந்த மட்டும் பரிதியை வில்லானாக சித்தரித்து கூற மகேஸ்வரன் குமரன் கூறிய அனைத்தையும் கேட்டவன்,
“செல்லிட்டல்ல நான் பார்த்துக்குறேன் மாமா….நீ போ….”என்றுவிட்டான்.குமரனுக்கு ஏக குஷி இனி மருமகன் பார்த்துக் கொள்ளவான் என்று சந்தோஷத்துடன் நடையை கட்டினார்.
இதில் குமரன் நினைத்தது ஒன்று ஆனால் நடக்க போவது ஒன்று இதை குமரன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்.ஆக அடுத்தவர்களை கெடுக்க போய் அவனே பெரிய பள்ளத்தில் விழுந்த கதையாக போகிறது குமரனின் நிலை.இது தான் நீ ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்றை செய்வார் என்று சொல்வார்களோ.அப்படி தான் அங்கு நடந்தது.
காலை எழுந்த மகேஸ்வரன் நேராக சென்றது தனது கேரேஜிற்கு தான். ஒரு சில வேலையாட்கள் வந்திருந்தனர் அவர்களுடன் குமரனும் அடக்கம்.இன்று சீக்கிரமாகவே வந்திருந்தான்.மகேஸ்வரன் நேராக தனது தந்தையின் அறைக்கு செல்ல அப்போது தான் மாணிக்கம் வந்திருந்தார்.திடீர் என்று உள்ளே நுழைந்த மகனை கண்ட மாணிக்கத்திற்கு வார்த்தைகள் வரவில்லை அதிர்ச்சியில் அவர் உறைந்துவிட,மகேஸ்வரனுக்குமே அவரின் இந்த அதிர்ந்த நிலை கண்டு சற்று தடுமாற்றம் தான்.
“வா…..வாப்பா….”என்று முதலில் தெளிந்த மாணிக்கம் மகனை உள்ளே அழைக்க,அவனும் தந்தையின் குரலில் தெளிந்து உள்ளே வந்து அமர்ந்தான்.
“என்னப்பா திடீர்னு வந்திருக்க….சாப்பிட்டியா…இரு சாப்பாடு சொல்லுறேன்….அங்க உன் அம்மா தேடிக்கிட்டு இருப்பா அவ கிட்ட சொன்னியா….”என்று தந்தை நீளமாக பேச மகேஸ்வரனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.அவர் மகனிடம் அன்பாக இருப்பார் தான் ஆனால் அதை நேரடியாக அவனிடம் காட்டியதில்லை.ஆனால் இன்று அனைத்தும் வேறாக இருந்தது.தந்தையின் திடீர் கவனிப்பு புண்பட்ட மனதில் மெல்லிய இறகை கொண்டு தடவியது போல் இருந்தது.
“என்னப்பா எதுவும் சொல்லமாட்டேங்குற….”என்ற தந்தையின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்,
“அது….ஒண்ணுமில்லை….நான்….நான் கிளம்புறேன்…..”என்று வந்த காரணத்தையே மறந்து கிளம்ப,
“அட இருப்பா….உனக்கு சாப்பாடு சொல்லியிருக்கேன் சாப்பிட்டு போ…..”என்று கூற மறுக்க வந்தவன் என்ன நினைத்தனோ சரியென்று அவரின் முன் அமர்ந்துவிட்டான்.சற்று நேரத்தில் சாப்பாடு வர மகனுக்கு அவரே வாங்கி பிரித்துக் கொடுக்க,மகேஸ்வரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அதுவும் இன்ப அதிர்ச்சி என்று தான் கூற வேண்டும்.ஒரு மனிதன் தனக்கு பிடித்த இடத்தில் இருக்கும் போது தான் அவர்களின் உண்மை முகம் வெளிவரும் அது போல தான் மாணிக்கமும் அவரின் இந்த கேரேஜ் அவரின் உடல்,உயிர் எல்லாம் இங்கு அவரின் இயல்பான குணம் வெளிபட மகனிற்கு ஆச்சிரியம்.
“என்னப்பா பார்த்துட்டு இருக்க…..உனக்கு பிடிச்ச புரோட்டாவும் சால்னாவும் தான் உனக்கு சால்னாவ இப்படி புரோட்டா மேல ஊத்தி சாப்பிட்டா தான பிடிக்கும் சாப்பிடு….”என்று தனது குழந்தை பருவத்தை அவர் கூற தன்னையும் மீறி அவனின் கண்களில் நீர் படலம்.அதை தந்தைக்கு தெரியாமல் மறைத்தவன் சாப்பிட தொடங்கினான்.
மகேஸ்வரன் சாப்பிட்டு முடிக்கவும் பரிதி அந்த அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.பரிதி உள்ளே வரும் போது மகேஸ்வரன் வெளியில் வந்தான்.இருவரின் பார்வையும் ஒரு முறை தொட்டு மீண்டது.மகேஸ்வரன் வெளியில் கை கழுவ வர குமரன் பிடித்துக் கொண்டான்.
“என்ன மாப்புள நீ….இப்ப பார்த்து வெளில வர….அவன் இப்ப தான் உள்ள போறான்….அவனை பார்த்தியா….”என்று கூற,
“யோவ் மாமா நான் தான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்ல….”என்றவன் தனது தந்தை அறைக்குள் செல்ல,அங்கு பரிதி தந்தைக்கு எதிரில் அமர்ந்து ஏதோ கூறிக் கொண்டிருந்தான்.
“இவன் என்ன உட்கார்ந்து பேசுறான்…அந்தளவுக்கு துரை பெரிய ஆளா….”என்று நினைத்துக் கொண்டே உள்ளே வர,
“வாப்பா….உள்ள வா….இவன் தான் என் பையன் மகேஸ்வரன்….”என்று பரிதிக்கு அவனை அறிமுகப்படுத்த,அவனோ மகேஸ்வரனை பார்த்து தலையசைத்தவிட்டு மீண்டும் மாணிக்கத்திடம் திரும்பிவிட.மகேஸ்வரனுக்கு கோபம் தான் இந்த இடத்தின் முதலாளியா இல்லை இவனா என்று.பரிதியை பற்றி வீட்டிலும் மாணிக்கம் புகழ்ந்து பேசியிருக்கிறார் அவரின் ஆர்வமான பேச்சை கேட்டவன் அப்படி என்ன அவன் பெரிய ஆளா அவனை பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் இன்று அவனை பார்க்கவும் வந்தது.
“நீங்க ஆளு யாராவது தெரியுமானு பாருங்க….நானும் வெளில விசாரிக்குறேன்….”என்றவன் எழ,
“என்ன….”என்று மகேஸ்வரன் பொதுவாக கேட்க பரிதியோ அவன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட,மகேஸ்வரனுக்கு கோபம் எல்லை கடந்தது,
“ப்பா….யாரு இவன்….நான் கேட்டுட்டு இருக்கேன்….அவன் பாட்டுக்கு போறான்…..”என்று தந்தையிடம் எகிற,அப்போது அந்த வழியாக இவர்களை வேவு பார்க்க அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த குமரனுக்கு ஒரே குதுகலம் இனி தன் மருமகன் பார்த்துக் கொள்வான் என்று சென்றுவிட.அதை கவனித்த மகேஸ்வரன்,
“இந்தாளுக்கு வேற வேலையே இல்லை….இவரை….”என்று பல்லிடுக்கில் திட்டிவிட்டு அறை கதவை அடைத்துவிட்டான்.
மாணிக்கத்திற்கு மகேஸ்வரனின் கோபம் எதனால் என்று முதலில் புரியவில்லை அதனால்,
“ஏன்பா இவ்வளவு கோபம்….ஏன் பரிதி என்ன செஞ்சான்….”என்று கேட்க,
“ப்ச்….என்ன எப்ப பார்த்தாலும் அவனை ரொம்ப தூக்கி வச்சு பேசுறீங்க…..”என்று தனது நெடுநாளைய சந்தேகத்தை கேட்க,மாணிக்கம் சத்தமாக சிரித்துவிட்டார்.
“அடேய் நீ இன்னும் மாறவேயில்லைடா….சின்ன பிள்ளை மாதிரி….”என்று மேலும் சிரிக்க,
“ப்ப்ப்பா…..எதுக்கு சிரிக்கிறீங்க….”என்று கேட்க,மாணிக்கத்திற்கு சிறு குழந்தையான மகேஸ்வரன் நியாபகம் தான் சிறு வயதிலிருந்தே அவனை விட்டு வேறு குழந்தைகளை கொஞ்சிவிட்டால் மகேஸ்வரனுக்கு கோபம் வந்துவிடும் அப்போதெல்லாம் இப்படி தான் சண்டையிடுவான் காலப்போக்கில் பேச்சுக்களே குறைந்து போனது தந்தை மகனிற்குள்.
“ஏன்டா….நீ என்ன இன்னும் சின்ன பிள்ளையா….ம்ம்ம்….இப்படி வா….”என்ற மாணிக்கம் மகனை தனது எதிரில் அமர வைத்து,
“டேய்….அவன் ஒரு விசித்திரமானவன்டா….எனக்கு அவனை பிடிக்கும் அவனோட அந்த உண்மை தன்மையை நான் விரும்புறேன்….இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உள்ள ஒரு முகம் வெளி ஒரு முகம்னு இருக்காங்க….ஆனா அவன் அப்படியில்லை….அதனால அவன் மேல ஒரு பிடிப்பு…அதுக்காக உன்னை பிடிக்கலைனு அர்த்தமா……நீ என் பிள்ளைடா….என்னோட ரத்தம் எப்படி பிடிக்கம போகும்…..”என்று மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் பேசியவர் ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு,
“உனக்கு இன்னும் இந்த அப்பாவை தெரியலை…போ…போய் வேலையை பாரு….”என்று கூற,தன் தந்தையை கண்கள் கலங்க பார்த்தவன் எதுவும் கூறாமல் வெளியில் வர,பரிதி ஒரு ஆடிக் காரின் முன் பக்கத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.ஏனோ மகேஸ்வரனை அறியாமல் அவனின் கால்கள் பரிதியை நோக்கி சென்றன.தன் தந்தையின் மனதில் இத்தனை இடத்தை பிடித்திருக்கிறான் என்றால் நிச்சியம் இவனிடம் ஏதோ இருக்கிறது அதனால் தான் தந்தை இவனை பாராட்டுகிறார் என்று நினைத்தவன் பரிதியை நெருங்க,பரிதியோ தனது வேலையிலேயே மூழ்கி இருக்க,
“ம்க்கும்….இந்த காருக்கெல்லாம் இந்த டூல்ஸ் செட்டாகாது….இதுக்குனு அதோட கம்பெனி டூல்ஸ் தான் செட்டாகும்….”என்றவன் இயல்பாக அந்த காரை ஆராய,
“உனக்கு இதை பத்தி தெரியுமா….”என்றான் பரிதி,
“ம்ம்ம்….நான் மெக்கானிக்கல் இன்ஜினியர் தான்….”என்று கூற,
“ப்ச் அதை விடு…இதுக்கு டூல்ஸ் எங்க கிடைக்கும்….எங்க வாங்கனும்….அதை சொல்லு….”என்று கேட்க,மகேஸ்வரனுக்கு பரிதியின் இந்த இயல்பான பேச்சு பிடித்திருந்தது.அவனின் பேச்சில் எந்தவித வெளி பூச்சும் இல்லை.ஒரு இயல்பான தொடக்கம் அது மகேஸ்வரனை இழுத்தது உண்மை.
“அதெல்லாம் உடனே வாங்க முடியாது….”என்றவனை தடுத்த பரிதி,
“அப்ப வேற என்ன தான் பண்ணுறது….”என்றவன் ஏதோ யோசனை செய்துவிட்டு,
“உனக்கு ஏதாவது பெரிய மெக்கானிக் ஷாப் தெரியுமா….அங்க இது மாதிரி காருக்கு டூல்ஸ் இருக்குமா….இருந்தா வாங்கிட்டுவா….அதுக்குள்ள நான் அந்த லாரியை பார்த்துட்டு இருக்கேன்…இந்த கஸ்டமர் வெளியூர்னு நினைக்கிறேன் அதனால தான் இங்க வந்திருக்கார் இந்த காரெல்லாம் இங்க வராதுனு தெரியாது அதனால தான் விட்டுட்டு போனாரு சாய்ந்தரமே கேட்டிருக்காரு….இது போல நமக்கு வாய்ப்பு கிடைக்காது இந்த வண்டியை பத்தி தெரிஞ்சிக்க….போ சாய்ந்திரத்துக்குள்ள வாங்கிட்டு வா….”என்று கூற,
“என்ன நானா….”என்று மகேஸ்வரன் அதிர,
“ஏன் நீதான் பெரிய படிப்பு படிச்சிருக்கியே வாங்கிட்டுவா…போ….”என்று விரட்ட,
“அடப்பாவி என்னையே வேலை வாங்குறான்….ஆனா மூளைக்காரன் தான்….”என்று அவனையும் கூற வைத்துவிட்டான்.மகேஸ்வரன் பரிதியிடம் பேசிவிட்டு வருவதை பார்த்த குமரன்,
“என்ன மாப்புள…நல்லா காட்டினியா அவனை….என்னையவே மதிக்க மாட்டேங்குறான் மாப்புள….”என்று கூற,
“யோவ்….போயா…அவன் என்னையவே மதிக்கல….”என்று முன்னதை சத்தமாகவும் பின்னதை வாய்குள்ளும் கூறியபடி செல்ல,
“என்ன மாப்புள சொல்லுற….”என்று கேட்க,
“நீ போ மாமா நான் பார்த்துக்குறேன்….”என்று கூற அவரோ வாயெல்லாம் பல்லாக சென்றார்.
“இவரை கொஞ்சம் கவனிக்கனும் ஆள் சரியில்லை…..”என்று குமரனக்கு கட்டம் கட்ட தொடங்கினான்.பாவம் யாருக்கோ குமரன் வலைவிரிக்க அதில் அவனே விழப்போகிறான் என்று அவன் அறியவில்லை.
மகேஸ்வரன் பரிதி கூறியதை போல தனக்கு தெரிந்த ஒரு மெக்கானிக் ஷாப்பில் இருந்து டூல்ஸ் கிட்டை வாங்கி மதியவேளை வந்தான்.பரிதி அந்த லாரியின் டயரை மாத்திக் கொண்டிருக்க இவனை பார்த்தவுடன்,
“கிடைச்சிடுச்சா….”என்று கேட்டவாரே வர,மகனை பார்த்த மாணிக்கமும் அவனிடம் வந்தார்.
“என்னப்பா….திரும்பியும் வந்திருக்க…உங்க அம்மா வேற கால் மேல கால் பண்ணிக்கிட்டு இருக்கா…நீ போனை எடுக்கலைனு என் உயிரை எடுக்குறா…”என்று கூற,
“ப்பா…நான் அப்புறம் பேசுறேன்….அம்மா கிட்ட நான் இங்க தான் இருக்கேன்னு சொல்லிடுங்க….”என்றவன் பரிதியிடம் விரைந்தான்,
“வாங்கிட்டு வந்திருக்கேன்….நைட் கொடுத்துடனும்….”என்றவன் அந்த காரை ஆராய தொடங்க,பரிதியும் பார்த்தான் ஆனால் அவனிற்கு மகேஸ்வரன் அளவிற்கு தெரியவில்லை.அதனால்,
“எனக்கு இது புரியலை எப்படி பண்ணுறது சொல்லு…”என்று கேட்க மகேஸ்வரன் விளக்க பரிதிக்கு பாதி புரிந்தும் புரியாத நிலை ஆனால் மகேஸ்வரன் மிக பொறுமையாக அனைத்தையும் விளக்கி சொல்லிக் கொண்டே வேலை செய்ய,பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கத்திற்கு தான் கண்கள் குலமாகின.இதை தானே அவர் எதிர்பார்த்தார்.
“சரிப்பா இரண்டு பேரும் பாருங்க…எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு….”என்றுவிட்டு அவர் நகர,
“ப்பா…இந்த குமரன் மாமாவை கொஞ்சம் கவனிங்க….”என்று கண்ணை காட்டி கூறிவிட்டான் மகேஸ்வரன்.மாணிக்கமும் மகனின் கண் ஜாடை புரிந்து கொண்டு,
“நான் பார்த்துக்குறேன் பா….நீங்க பாருங்க….”என்றுவிட்டு நகர்ந்துவிட.அடுத்த மூன்று மணிநேரம் பரிதிக்கும்,மகேஸ்வரனுக்கும் வேலை சரியாக இருந்தது.அனைத்தும் முடித்து இருவரும் நிமிரும் போது மாலை கவிழ்ந்துவிட்டது.மகேஸ்வரன் அந்த காரை ஒருமுறை ஆன் செய்து அதை ஓட்டி பார்க்க,பரிதி அதன் ஓனருக்கு அழைத்துவிட்டான்.அவரும் அடுத்த அரைமணிநேரத்தில் வந்துவிட்டார்.
“ரொம்ப நன்றிப்பா….நான் வெளியூரு…இங்க ஒரு வேலையா வந்தேன்….காரு இப்படி மக்கர் பண்ணிடிச்சு….”என்று கூற,
“சார் ஒரு தடவை வண்டியை ஓட்டி பார்த்து எல்லாம் சரியா இருக்கானு பாருங்க….”என்று பரிதி கூற,அவரும் வண்டியை ஓட்டி பார்த்துவிட்டு,
“ஒண்ணும் பிரச்சனையில்லைப்பா….நான் கிளம்புறேன்….எவ்வளவு செலவாச்சு….”என்று அவர் கேட்க,பரிதி மகேஸ்வரனை பார்த்தான் அவன் விபரங்களை கூற பணத்தை மகேஸ்வரன் கையில் கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.
“பணத்தை சார் கிட்ட கொடுத்துடு….”என்றவன் மாணிக்கத்தின் அறைக்கு சென்று பார்த்துவிட்டு கிளம்பி விட்டான்.ஆனால் மகேஸ்வரன் தான் அந்த இடத்திலேயே நின்றுவிட்டான் அவன் கையில் பணம் அவனின் உழைப்பு அவன் கையில் மின்னியது.குனிந்து தன்னை பார்த்தான் உடை களைந்து அழுக்காகி இருந்தது ஆனால் இந்த தோற்றம் பிடித்திருந்தது.மனதில் ஒரு தெளிவை கண்டான்.தன் தந்தையின் அறைக்குள் சென்றவன் அவரிடம் பணத்தை நீட்ட,
“அதை நீயே வச்சுக்கோப்பா….உன் உழைப்பு….”என்று அவர் கூற,
“இது நான் மட்டும் செய்யல அவனும் தான் செய்தான்….”என்று பரிதியையும் கூற,
“அவன் அவனுக்கானத வாங்கிட்டு தான் போறான்….”என்று கூறியவர்,
“இன்னைக்காவது வீட்டு வருவியாப்பா….”என்று கேட்க,
“கிளம்புங்கப்பா….போகலாம்…..நாளைக்கு இங்க நிறையா வேலையிருக்கு….”என்று சேர்த்தே கூற மாணிக்கம் மனம் நிறைந்து போனது அதே மனநிறைவுடன் சென்றார்.ஆனால் அடுத்த நாள் காலை கேரேஜ்க்கு வந்த மகேஸ்வரனை வேலை செய்யவிடாமல் செய்தாள் திவ்யா.
error: Content is protected !!