வண்ணம் 32.1
அருண் ஏர்போர்ட்டில் ஷிவானியை வரவேற்க காத்திருந்தான். அருணுக்கு துணையாக சிரஞ்சீவி புவனையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
புவன் “எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது நான் எதுக்குடா உன்கூட காயணும். எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா”
சிரஞ்சீவி “ ஹான் அந்த வேலை எல்லாம் எங்களுக்கும் தெரியும் பரவால்ல கூட நில்லு” என்றான்
புவன் “பூமி வேற ஆபீஸ்ல இருந்து வருவாடா நான் போய் கூட்டிட்டு வரணும்”
Advertisement
சிரஞ்சீவி “பரவால்ல வெயிட் பண்ணட்டும் தப்பில்ல”
ஷிவானி இவர்கள் காத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அருண் “என்ன ஷிவானி இவ்வளவு டயர்டா தெரியுற என்று கேட்டான்”
ஷிவானி “நேத்து நைட் வரைக்கும் வேலை இருந்தது. காலைல அவசர அவசரமா கிளம்பினேனா சரியா தூங்கல அதனாலதான் அண்ணா”என்றாள்
Advertisement
அவள் கையில் இருக்கும் பையை கொடு என்று சிரஞ்சீவி கேட்ட நிமிடம் கொடுத்து விட்டாள்.என்னடா என்னையும் தொந்திரவு செய்யாம நீயும் கண்டதை யோசிக்காம வேற வேலையை பார் என்றவள் சட்டென கையை நீட்டியதும் பையை கொடுக்கிறாளே என்று யோசித்தான் சிரஞ்சீவி. கூடவே அவள் தோற்றத்தில் வித்தியாசம் தெரிகிறது ஆனால் இன்னதென அவனால் அறியமுடியவில்லை. ‘பேசக்கூட முடியாம சோர்வா இருக்காளே’ என்று தோன்ற அமைதியாக பேசாமல் காரை ஓட்டினான். சிவானியை இறக்கி விட்டு சிறிது நேரம் அவர்களுக்குள் பேசிவிட்டு எல்லோரும் தத்தமது வேலையை பார்க்க சென்றனர்.
Advertisement
பூமிகாவிடம் அம்பிகா திருமணம் எப்படியெல்லாம் செய்யவேண்டுமென ஆசை இருக்கிறது என்று தினம் அடுக்க பூமிகாவுக்கு குழப்பமானது. சின்னவயதில் யானையில் ஊர்வளம் வந்து அடுக்காய் நகைகள் அணிந்து திருமணம் என யோசித்தவள்தான் அவளும் ஆனால் இப்போதோ நமக்கே நமக்கான உறவுகள் சூழ மிகவும் சின்னதாக திருப்தியாக திருமண நிகழ்வு நடக்கவேண்டுமென எதிர்பார்த்தாள். புவனுமே “சும்மா சும்மா உன்னை உங்க வீட்ல விடுறது, கன்னத்துல முத்தம்ன்னு மட்டும் போறதெல்லாம் எனக்கு கடுப்பா இருக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யலாம் வா ” என்றான்.
அதை பற்றி அவள் ஆசையையும் முடிவையும் தெரிவித்தாள் “எனக்கு பெருசா இல்லாம சின்னதா ஒரு கோயில்ல தாலி கட்டிக்கிட்டு நைட் ரிசப்ஷன்னு வெச்சு முடிச்சா போதும்ன்னு இருக்கு புவன்” என்று அவள் முடிவை சொல்ல
“ஏன் அப்படி சொல்ற உனக்கு விமர்சையா பண்ண ஆசைன்னு நெனெச்சேனே” கேட்டான் புவன்
Advertisement
“இல்ல சின்னதா ரொம்ப சின்னதா முழுக்க முழுக்க சந்தோசமா நடக்குனும்ன்னு மட்டுமே ஆசையா இருக்கு. ஆனா அது முடிலன்னா ஓகே. பெருசா பண்ணலாம்” பூமி அவளே தழைந்து கொள்ளவும்
புவன் “இத நாம பேசணும் பூ… எனக்கு நீ என்கூட வாழனும் அதுவே போதும். ஆனா இந்த கல்யாணம், விசேஷம் அதுக்கு ரெடி ஆகறது இதுலெல்லாம் உனக்கு ரொம்ப ஆர்வம்ன்னு எனக்கு தெரியும் அதுனாலதான் உனக்கு புடிச்ச மாதிரி விமர்சையா பண்ணலாமா கேட்டது… உன் இஷ்டப்படி சின்னதா செய்லாம் அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா”
பூமிகா “அம்மா உங்க வீட்டுக்கு நிகரா செய்யணும்ன்னு நிறைய பிளான் பண்றாங்க. ஆனா எனக்கு நீயும் என் குடும்ப வாழ்க்கையும் ரொம்ப முக்கியமா தெரியுறீங்களா. அதனால மத்த மனுஷங்க கண்ணே விழாம வாழனும்ன்னு ஒரு வெறியே தலைக்கு ஏறுது…சோ கொஞ்சமா தெரிஞ்ச ஆட்கள் மத்தியில கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு தகவல் சொல்ல ரிஷப்ஷன் வச்சுக்கலாம்ன்னு தோணுது”
புவன் அந்த ‘நீயும் என் குடும்ப வாழ்க்கையும் ரொம்ப முக்கியமா தெரியுறீங்க’ வாக்கியத்திலேயே நின்றவன் உடனே “உனக்கு எப்படி செய்யணும்ன்னு சொல்லு கல்யாணத்தை அப்பிடி செய்வோம்” என்றவன் அவன் தந்தை தாய்க்கு தேதி பார்க்க சொல்லி தகவல் சொன்னான்.
புவனுக்கும் பூமிக்காவிற்கும் அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவானது. பூமிகா பூர்ணிமா உட்பட எல்லோரையும் அழைத்து அவள் திருமணத்திற்கு 5 நாட்கள் முன்னயே அவளுடன் இருக்கவேண்டுமென எல்லோரிடமும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டாள்.
தமயந்தி அவள் வேலையில் படு பயங்கர பிசியாகி போனாள். மத்த தயாரிப்பு நிறுவனங்களைக் காட்டிலும் ஸ்கை புரொடக்சன் ஒருப்படி மேலே இருந்தது. ஏற்கனவே பிரபலமான இயக்குனர்களையும் இசை அமைப்பாளரையும் வேலைக்கு அமர்த்துவதுதானே கஷ்டம் தமயந்தி புதுமுக நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கொடுத்தாள். தொடர்ந்து தேசிய விருதுகளும், மக்கள் ரசனையிலும் ஸ்கை ப்ரொடக்சன் முதல் இடத்தில் நின்றது. அருண் எந்த ப்ராஜெக்ட் பேசுகிறானோ அது அடுத்த இரண்டு நாட்களில் ஸ்கை ப்ரொடக்ஷன் கைப்பற்றிவிடும். ஸ்கை ப்ரொடக்ஷனில் கதை திருட்டு, சம்பள பாக்கி என எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லாவற்றுக்குமே தனியாக டீம் அமைத்து செய்வதனால் எந்த ஒரு கதையும் நன்றாகவே வெற்றி பெற்றது. அருண் தமயந்தியின் விவேகம் பார்த்து மலைத்து நின்றான். விருது வழங்கும் மேடைகளில் தைரியமாக “உங்க கிட்ட நல்ல கதை இருக்கா டேலண்ட் இருக்கா நேர்மையான ஆட்களுக்கு ஸ்கை ப்ரொடக்ஷன் என்னைக்கு திறந்தே இருக்கும்” என்று சொல்லிவிட்டு மேடைவிட்டு இறங்குவாள்.., ஜனத்திரள் கைதட்டுவதும் வரவேற்பதும் பார்க்க பெருமையாக இருக்கும். அவனிடமிருந்து ப்ராஜெக்ட்டை பிடுங்கி அதில் வெற்றிபெறுவது தமயந்திக்கு பிடித்தம் என்றால் தமயந்தியை அவள் வெற்றி களிப்பில் பார்த்து மகிழ்ச்சி அடைவது அவனுக்கு பிடித்தம். ஆரம்பத்தில் தமயந்தி அப்படி பிடுங்குவது கோபம் கொடுத்தாலும் அருணுக்கு போக போக அவன் இன்னமும் உழைத்து தொழில் விரிவடைந்து ஸ்கை ப்ரொடக்ஷ்ன் அவன் இடத்திற்கு போட்டி போடுவது பார்க்க விட்டு கொடுக்க ஏங்கும்.
யாரையுமே கண்டுகொள்ளாத தமயந்தி அவன் நிறுவனத்தில் அடுத்த ப்ராஜெக்ட் என்ன அவன் என்ன செய்வான் என்றெல்லாம் கணித்து வைத்திருப்பாள். சிலநேரம் அவனே அவளை போக்கு காட்ட இந்த பக்கம் ஒரு செய்தி வெளியிட்டு அப்படி வேறுபக்கம் பெரிய படம் ப்ரொடக்ஷனில் இறங்குவான். உடனே அந்த படத்திற்கு போட்டியாக சின்ன பட்ஜெட் படம் ரிலீஸ் செய்து இடத்தை பிடிப்பாள். அருணுக்கு தான் தெரியுமே, அவன் சொன்ன யுக்தி தானே ‘பந்தை கூடையில போடுறத போல எதையுமே பார்’ என்றானே. அதைத்தான் அவள் தொடர்க்கிறாள். நீ ஒரு ‘கோல்’ என்னைவிட அதிகமா போட்டா நானும் எதை செய்தேனும் போட்டியை ‘ட்ரா’வில் நிறுத்துவேன் என்று செய்கையில் காட்டிவிட்டு போவாள். பொறுமையாக வளர்ந்துகொண்டே வந்தவன் தமயந்தி வந்து போட்டியென தொடங்கவும் பெரிதாக வளர்ந்து நின்றான். மாமன்களின் சதியில் அவன் நிறுவனத்துடன் சேர்த்துக்கொண்டு அருந்ததீ பிலிம் கார்ப்ரேஷனை அவன் நிறுவனமாக மாற்றிக்கொண்டான். அருண் சாதனைகள் நிறைய உயர்ந்தது. இதில் அருணுக்கு என்னவென்றால் தமயந்தியின் மொத்த கவனமும் அவன் மீதே இருக்கும். தயாரிப்பாளர்கள் யூனியனில் தனியாளாக முக்கியமான ஆளாக மாறி நிற்பவன் ஸ்கை ப்ரொடக்ஷனுக்கு என்று யாரெல்லாம் இடைஞ்சலாக இருக்கிறாரோ அவர்களை சுலபமாக தட்டிவிட்டு போவான். பொதுவாக எதிலுமே எங்கேயும் கண்டுகொள்ளாமல் செயல்பவன் தமயந்தியென வரும்போது நின்று கவனித்து செல்வான்.
திட்டமிட்டு ஸ்கை ப்ரொடக்ஷன் கூட வேலை செய்து நஷ்டத்தை இழுத்துவிட்டவர் அடுத்து எந்த படமும் தயாரிக்கவே முடியாத அளவுக்கு கடன்களில் மூழ்கி நிற்கிறார்.அவர் சுயநலமே காரணமென ஊரே சொல்லியது. அருணுக்கு மட்டுமே தெரியும் மனிதர் பேராசை குழியில் எப்படி விழுந்தாரென.
தொடர்ந்து வெளிமாநிலத்தில் இருந்து வந்து வெற்றிபெறும் நிறுவனம் என்று ஸ்கை ப்ராடக்ஷ்ன் மீது யாராவது கல்லெறிவதும் அது அவர்களையே திரும்ப தாக்குவதும்… அது எப்படியென தெரியாமல் குழம்பினாலும் தமயந்திக்கு அருண் மீது சந்தேகம் வரும் ஆனால் நிரூபிக்க வாகாக எதுவும் கிடைக்காமல் தவித்தாள்.
தொடர்ந்து நான்காவது முறையாக புதுமுக அறிமுக விருது ஸ்கை ப்ரடக்ஷனுக்கே கிடைக்கிறது என்று அந்த விழாவுக்கு அவள் கண்டீப்பாக வந்தே தீரவேண்டுமென சொல்லி இருந்தார்கள். அவள் டிசைனர் கொடுத்த புடவை அழகாக இருந்தாலும் பிளவுஸ் பார்த்து அதிர்ந்தாள். கடைசி நேரத்தில் வேறு உடை என்று பரபரப்பு கிளப்பாமல் அட்ஜஸ்ட் செய்துகொள்வோமென அணிந்துகொண்டாள்.அவர்கள் டீம் மொத்தமும் முன்னேயே சென்றுவிட சங்கடத்தில் இருந்தவள் காருக்கு முன்னே அருண் கார் சென்றுகொண்டிருந்தது. யோசிக்காமல் அவனுக்கு அழைத்தாள்…
அருண் காரில் அவனுடன் கலாட்டாவாக ஒரு கும்பல் “ண்ணா மாசா என்ட்ரி கொடுக்குறோம் நம்ம கம்பெனி அவார்ட்க்கு ஒண்ணொண்ணுக்கும் சவுண்ட் விடுறோம்” என்று சொல்லிக்கொண்டிருக்க தமயந்தி அழைப்பை ஏற்றான் அருண். கார் முழுக்க தமயந்தி குரல் கேட்டது
தமயந்தி “ அருண் நான் உன் பின்னாடிதான் வந்துட்டு இருக்கேன்”
அருண் “ஓகே..”
தமயந்தி தயங்கி தயங்கி “ஒன்னு இல்ல எங்க டீம் எல்லாம் உள்ள போயிட்டாங்க. வெயிட் பண்றியா என் கூட வரியா” கேட்டாள்
அருண் “ம்ம் சரி பார்க்கிங்ல வெயிட் பண்றேன் வா”
தமயந்தி “தேங்க்யூ… அருண்…” என்றாள் ராகமாக
அருண் “மெதுவா வா” என்றவன் இணைப்பை துண்டிக்கவும்
“ண்ணா என்னண்ணா நம்ம எதிரி ண்ணா அவங்க.. நம்மகிட்ட இருந்து முந்நூறு கோடி ரூபா ப்ராஜெக்ட் தூக்கிட்டு போன ஆளுன்னா”
அருண் “தொழில்ல தான்டா எதிரி எல்லாம் நிஜத்துல நல்ல பிரெண்ட்” என்றான் ஹாயாக
அருண் காரை பார்க்கிங்கில் நிறுத்த அவனுடன் வந்த கும்பல் “சரிண்ணா நாங்க போறோம் நீ அண்ணியோட வாங்க” என்க அருண் “டேய் டேய் கெடுத்துறாதீங்க டா மூடிட்டு கிளம்புங்கடா” என்றான்
தமயந்தி வரவும் புது காரில் இருந்து இறங்கியவளிடம் “நல்ல கார்” என்றான். அவள் எனக்கு ஏத்த மாதிரி நல்ல கார் சொல்லு என்று சிரஞ்சீவியிடம் கேட்கவும் இந்த காரை சொல்லியவன் கூடவே “அருணும் இந்த காரை பத்தி சொல்லிட்டு இருந்தான். நல்ல சேஃப்டி இருக்குன்னு சொன்னான்” என்றான். தமயந்தி அதற்காகவே இந்த காரை வாங்கினாள். மனதில் உள்ளதை சொல்லாமல் “தேங்க் யூ” என்றவள் அவனுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள்.
கொஞ்சம் முன்னே நடந்து சென்றவள் முதுகை பார்த்தவன் “ஹாங்…” என்று அதிர்ந்து “முதுகுல ட்ரிக்னாமெண்ட்ரி நடத்தலாம் போலயே” என்றான் கிண்டலாக
தமயந்தி “ல்ல… வாட்சப்ல முன்னாடி டிசைன் மட்டும் பார்த்து ஓகே சொல்லிட்டேன். பார்த்தா பின்னாடி இப்படி இருக்கு என்ன பண்ணுவேன்…”
அருண் பதிலுக்கு சிரித்தான். உள்ளுக்குள் “நீ மாறவே இல்ல” என்று சொல்லிக்கொண்டான்
சட்டென தமயந்தி “அதான் உன்கூட வரேன்ல மீடியாகாரங்க யாரும் அதிகமா போட்டோ எடுக்கமாட்டாங்க. அப்படியே நீ என் பின்னாடி நடந்துவந்தா நான் அப்படியே அமைதியா என் சார்லே உட்கார்ந்திருவேன்”
அருண் கிண்டலாக “ஓ பாடிகார்டா வரணும் அப்படித்தானே”
தமயந்தி “ச்ச ச்ச என் முதுக கார்ட் பண்ணா மட்டும் போதும்” என்றாள்
அருண் உள்ளுக்குள் ‘நீ கூப்டா ஆய்சுக்கும் உன் பின்னாடி வர நான் தயார்’ என்று நினைத்துக்கொண்டவன் “வேகமா நட” என்றவன் அவள் முதுகில் கைவைத்து நகர்த்திக்கொண்டே அந்தப்பக்கம் கும்பலாக நிற்கும் மீடியா மக்களை தவிர்த்து நடந்து தமயந்தியை அழைத்துக்கொண்டு அவர்கள் உட்காரும் இடம் வரை வந்தான். திரும்பவும் நன்றி என்று சொல்லி ஏற்கனவே அங்கே கம்பீரமாக அமர்ந்திருந்த சிரஞ்சீவி பக்கம் சென்று அமர்ந்துகொண்டாள் தமயந்தி.
சிரஞ்சீவி “ச்ச பொண்ணா பொறந்திருக்கலாம்”
தமயந்தி “ஏனாம்”
“கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வேகுறேன் நான் இங்க” என்றவன் தலைமேல் தொப்பென அடி விழுந்தது.
அருண் “மச்சான் தமயந்தியை அந்தப்பக்கம் விட்டு நீ இந்தப்பக்கம் வா”
சிரஞ்சீவி முடியாதென சொல்ல அருண் “டேய் பேச வாகா இல்லை வா இந்தப்பக்கம் ”என்று சொல்ல நண்பன் மீதிருக்கும் அன்பில் இந்தப்பக்கம் வந்து அமர்ந்தான் சிரஞ்சீவி.
தமயந்தியை பார்த்த சிரஞ்சீவி “எப்படி காரு சூப்பரா ஓடுதா” என்று கேட்டுவிட்டு அருண் பக்கம் திரும்பி “நீ சொன்ன காரு தான் மச்சான்” என்றான்.தமயந்தி அவனை முறைத்தாள்.
புதுமுக அறிமுக விருது வாங்க மேடைக்கு போன தமயந்தியின் முதுகு அங்கே ஸ்க்ரீன் முழுக்க தெரிய சிரஞ்சீவி “ஆத்தாடி” என்று சொல்ல அருண் “மேல ஒரு வார்த்தை வெளில வந்துச்ச்சு… பேச நாக்கு இருக்காது பார்த்துக்கோ”
மேடைக்கு சென்ற தமயந்தி விருதை வாங்கிக்கொண்டு “இன்னிக்கும் ஸ்கை ப்ரொடக்ஷ்ன்ஸ் படங்களும் நடிகர்களும் தான் நிறைய அவார்ட் வாங்கிருக்காங்கங்கிறதுல பெருமையா இருக்கு… தேங்க்ஸ் எல்லோருக்கும்… இனியும் ஸ்கை ப்ராடக்ஷ்ன் நல்ல நல்ல படத்தை கொடுக்கும் ” என்று பேசிவிட்டு இறங்கினாள்.
சிரஞ்சீவி “ம்ம்க்கும்” என்றான்
அடுத்தே அருண் விருது வாங்க சென்றபோது அவனை பேச சொன்னார்கள் “எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” மட்டுமே சொல்லிவிட்டு இறங்கினான்.
சிரஞ்சீவி “அதெப்படி ஜோடியா வருவீங்களாம் அடுத்தடுத்து அவார்ட் வாங்குவீங்களாம் வாழ்த்து சொல்வீங்களாம் கண்டுக்காத மாதிரி பிரிஞ்சு போவீங்களாம் நீங்க சொன்ன கார தான் அவங்க வாங்குவாங்கலாம் ” என்று கிண்டல் செய்ய “பேசாம வா” என்றான் அருண்.
அருண் கார் அவன் டீமுடன் அனுப்பிவிட்டு சிரஞ்சீவி காரில் சென்றான். வழியில் ஷிவானிக்கு அழைத்தால் ஹாஸ்பிடலில் இருப்பதாக சொன்னாள்.
சிரஞ்சீவி “அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துட்டாளா” என்று கேட்க
அருண் “ஆமா வேலைக்கு சேர்ந்துட்டா அவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம்” என்றான். ஷிவானி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று அவளையும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
அருண் முன் இருக்கையில் கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஷிவானியும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டே இருந்தாள்.
சிரஞ்சீவி “ஏன் ஏதாச்சும் வேணுமா உட்கார முடிலையா” என்று அவள் தவிப்பை பார்த்து கேட்க
ஷிவானி “அதெல்லாம் ஒண்ணுமில்ல என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்” முகம் சிவந்தது. அதன் பின் சிரஞ்சீவி எதுவுமே பேசவில்லை.
அவர்கள் வீடு வரவும் அருணும் ஷிவானியும் இறங்கிக்கொள்ள சிரஞ்சீவி புறப்பட்டான். ஒரு பத்தடி சென்றிருப்பான் கண்ணாடியிலும் சிவானி கழுத்தைப் பிடித்துக் கொண்டு வலியை சுதாரித்துக் கொண்டு நடப்பது தெரிந்தது. வண்டியை அங்கேயே ஓரமாய் நிறுத்திவிட்டு அவர்கள் வீட்டுக்கு நடந்து சென்றான்.
அந்த வீட்டைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். யாரும் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள். சுலபமாக வீட்டுக்குள் நுழைந்தவன் ஷிவானி அறைக்கு முன்சென்று நின்றான்.
தூரத்தில் எங்கேயோ வெளியே சிவானியும் சிவானியின் அம்மாவும் பேச்சு சத்தம் கேட்டது. கதவைத் திறந்து அறை உள்ளே நுழைந்துகொண்டான். சிவானியின் அம்மா “அது என்னடி அம்மா பொண்ணு ரூமுக்குள்ள வரக்கூடாதா” என்று கேட்டுக்கொண்டே வர
ஷிவானி “ ஐயோ அம்மா நான் குளிச்சிட்டு வரேன் அப்புறம் நம்ம மெதுவா எல்லாத்தையும் பேசலாம்” என்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்துக் கொண்டு சட்டென கதவை பூட்டி கொண்டாள்.
பூட்டிக் கொண்டவள் அவள் அணிந்திருந்த மேலாடையை கழட்டி இருப்பாள் சட்டென சிரஞ்சீவி அவளை சுவற்றுக்கு எதிராக சாற்றி “சொல்லு எப்படி ஆச்சு இந்த காயம்” கேட்டான்
பதறியவள் “அம்மா” என்று அலறி இருந்தாள்
அவள் அம்மா “என்னடி” என்று கேட்டு திரும்ப
வலியின் பிடியில் இருந்தாலும் சட்டென ஷிவானி “ஒண்ணுமில்லம்மா இருட்டா இருந்துச்சா வழூக்கிடுச்சு நீ நாளைக்கு பார்ட்டிக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வா நான் குளிச்சிட்டு வரேன்” என்றாள் இந்தப்பக்கம் “ஐயோ… சிரஞ்சீவி கடாமாடு காட்டெருமை நீ எப்ப உள்ள வந்த” என்றவளுக்கு முதுகு காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறுவது தெரிந்தது
சிரஞ்சீவிக்கும் அவள் காயத்தில் ரத்தம் வழிவது பார்த்து நெஞ்சம் பதறியது.
“எப்படி ஆச்சு சொல்லு” என்று கையை அழுத்தமாக பிடித்தான்
வலிக்குது டா கடங்காரா என்றவள் “அம்மா வரதுக்குள்ள கிளம்பு” என்று ஊக்கினாள்.
“நீ இப்ப சொல்லல நான் இத உங்க அம்மாகிட்ட சொல்றேன்” என்று சொல்லவும்
“ஐயோ ப்ளீஸ் ப்ளீஸ் அமைதியா இரு. வேலை பார்த்த ஷிஃப்ட்ல ஒரு ஆளு அவன் பொண்டாட்டிய குத்த வந்தான் அந்த பிரச்சனையில என்ன குத்திட்டான். என் ப்ரொபெஸர் பார்க்கவேண்டிய ஷிஃப்ட் நான் பார்த்தேன். அதனால விசாரணையில அவங்க எடத்துல இல்லன்னு தெரியவந்தா பிரச்சனை ஆகும்ன்னு என்னை என் டிகிரி செர்டிபிகேட் எல்லாம் வாங்கி வச்சிக்கிட்டு ஊருக்கு அனுப்பிட்டாங்க.ப்ளீஸ் என்ன விடு நான் காயத்துக்கு ட்ரெஸ் பண்ணனும்” அழும் குரலில் கேட்டாள்
சந்தன மேனியில் சிவப்பு குருதி பார்க்கவே அவனுக்கு பதறியது. இடது தோள்பட்டைக்கு கொஞ்சம் கீழே கைக்கு எட்டியும் எட்டாமலும் இருக்கும் காயத்தை பஞ்சு போட்டு துடைத்து அதன் மேல மருந்து பூசி ஏனோதானோ வென பாண்டேஜ் ஓட்டினாள். “ப்ளீஸ் அம்மா வரதுக்குள்ள வெளில போடா” என்று கெஞ்சினாள்.
சிரஞ்சீவி “ கத்தி குத்து போல இருக்கு தையல் எல்லாம் எதுவும் வேணாமா” கேட்டான்
வலி மிகுதியில் கூடவே ஆடையில்லா வெட்கம் கொல்ல “பண்ணனும் இல்லன்னா கஷ்டம் தான்” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
முதுகை காட்டி நிற்பவள் முகபாவனை தெரியவில்லை என்றாலும் குரலில் தெரியும் வலியே அவனுக்கு காயத்தின் ஆழத்தை சொன்னது.
சிரஞ்சீவி கைபேசியும் அந்நேரம் ஒலிக்க தொடங்க “பை டேக் கேர். ஏதாச்சும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லு செய்றேன்” என்றான்
ஷிவானி “ப்ளீஸ் அருண் அண்ணா கிட்ட மட்டும் சொல்லாத”என்றாள்
அருண் வீட்டைவிட்டு வெளியே வந்தவன் சிரஞ்சீவி அழைப்பை ஏற்றதும் அதிர்ச்சி தகவல்; கபிலன் சுவாசிக்க முடியாமல் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறாரென…
சிரஞ்சீவி மருத்துவனைக்கு சென்று பார்க்கும் போது கபிலன் ஐசியூவில் இருந்தார்.
தொடரும்
