Skip to content
Post Views: 5,326
தேவை… பாவை பார்வை – 3
அன்று மாலை அலுவலகம் முடிந்து, மது அவளின் வீட்டிற்குள் நுழைய,
அவள் உள்ளே வருவதை பார்த்த அன்னையோ, அவசரமாக போனின் அழைப்பை துண்டித்து விட்டு, அவளை நோக்கி, “என்ன வாணி இன்னைக்கு கொஞ்சம் சீக்கரம் வந்துட்ட போல இருக்கே…” என்று தான் போன் பேசியதை மறைப்பதற்காக பேச்சு கொடுக்க,
அவளோ அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கூடத்தில் உள்ள கடிகாரத்தை பார்த்து, மீண்டும் அவரை பார்த்துவிட்டு, அவருக்கு பதிலளிக்காமல், அறைக்கு சென்றாள்.
Advertisement
“இவ என்ன நம்மகிட்ட ஒன்னும் கேக்காம, அமைதியா உள்ள போய்ட்டா?… நாம போன் பேசுவதை ஒருவேளை இவ கவனிக்கலையோ!… நாம தான் தப்பா பேச்சு கொடுத்துட்டோமோ?…” என்று அவர் யோசனையில் இருக்க,
தன்னை சுத்தம் செய்துவிட்டு வெளியில் வந்த மதுரவாணியோ, கூட்டத்தில் உள்ள சோபாவில் பொத்தென்று அமர,
அவளின் அன்னையோ, அவளின் முகத்தையே பார்க்க, சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள், “என்ன இப்போ உங்களுக்கு என்ன கேக்கணும்… எதுக்கு இப்போ என் மூஞ்சையே பாக்குறீங்க…” என்று கடுப்பாக கேட்க,
Advertisement
“இல்ல… நீ என்கிட்ட ஒன்னும் கேக்காம உக்காந்திருக்க… அதுதான் என்னனு பாக்குறேன்…” என்று அவரே வலையில் மாட்ட,
Advertisement
“சரி அப்போ நீங்களே வரிசையா, என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்க…” என்று சாவகாசமாக கேட்க,
அப்போது தான் தானே அவளிடம் உளறியது புரிய… உடனே சுதாரித்து, “உனக்கு என்ன வேணும் வாணி சாப்பிட… நான் எடுத்து வரேன்…” என்று எழும்ப,
“ரொம்ப நல்லா சமாளிக்குறீங்க போலயே… என்னமோ எனக்கு பிடிக்காததை பண்றீங்க… இது எவ்வளோ நாள் போகுதுனு நானும் பாக்குறேன்…”
Advertisement
“அதுலாம் ஒன்னும் இல்ல வாணி… நீயா ஏதாவது நினைச்சிட்டு பேசுனா, நான் என்ன சொல்லுறது சொல்லு…”
“ஒன்னும் இல்லனா ரொம்ப சந்தோசம்… அப்போ நான் போயிட்டு தூங்குறேன்… நாளைக்கு நான் சீக்கரம் போகணும்…” என்று எழுந்து அறைக்கு செல்ல,
“சாப்புடாம போற…”
“நான் வீட்டுக்கு வரும் போதே மணி எட்டு…” என்று தன் அன்னைக்கு சொல்லிக்காட்ட,
“அதுக்கும் சாப்புடுறதுக்கும் என்ன சம்பந்தம்…” என்று நேக்காக கேக்க,
“சபாஷ்… நல்ல பேசுறீங்க ம்மா… நான் ஆஃபீஸ்லயே சாப்டுட்டேன்… அதுனால வேணாம்… நீங்களும் சாப்டுட்டு வந்து படுங்க…” என்று அவரின் பதிலிற்கு செவி சாய்க்காமல் தூங்க சென்றாள்.
அவள் சென்ற பிறகு, “முருகப்பெருமானே… நீ தான் துணை இருக்கனும்…” என்று அவசர வேண்டுதலை வைத்துவிட்டு சென்றார்.
– – – – –
பிரகதீஷ், தந்தையின் எண்ணிற்கு அழைத்து, அவர் எடுக்க காத்திருக்க, மறுமுனையில் அழைப்பை எடுத்ததும்,
“ஈஸ்வரா… சொல்லு தம்பி…” என்று பேசினார் சந்தானம்.
“சொல்லுங்க ப்பா… என்ன பண்ணிட்டு இருக்கீங்க…”
“சும்மா காத்தாட வெளில நின்னு உனக்கு பேசுறேன் தம்பி… அப்பறம் மருமகளை பார்த்தியா?… நீ பேசுனியா புள்ளைகிட்ட?…”
“உங்க மருமகத் தானே, என்னைய யாருனு கூட தெரியாத மாறி இருந்தா ப்பா…” என்று புகார் வாசிக்க,
“கோவத்துல இருக்கு வாணி… நீ தான் கொஞ்சம் பாத்து சூதனமா நடந்துக்கணும் ஈஸ்வரா…”
“அதானே உங்க மருமகளை விட்டா கொடுப்பீங்க…”
“அது கோவத்துல அர்த்தம் இருக்கு தம்பி… அது உனக்கும் தெரியும்…”
“என்னவோ ப்பா… அம்மா, அக்கா இப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை… நானும் சொதப்பிட்டேன்…” என்றான் ஆற்றாமையாக,
“விடு தம்பி… அதுலாம் நீ எப்படியும் நேர்பண்ணிடுவ… மனச விற்றாத ஈஸ்வரா…”
“உன் அம்மாவும், அக்காவும், அங்க வர்றதுக்கு பார்த்துட்டு இருகாங்க தம்பி…”
“சரி ப்பா… நானே பேசுறேன் அவங்களுக்கு…”
“இந்த வாரம் ஓரெட்டு உன் அத்தை வீட்டுக்கு போய்ட்டு வா… அப்பறம் பேசிக்கலாம்…”
“சரிப்பா… நேரமாச்சு, நீங்க தூங்குங்க… நானும் காலைல ஆபீஸ் கிளம்பனும்…”
“சரி தம்பி… வச்சிடுறேன்… அப்பா இருக்கேன்…” என்று போனை வைத்தார்.
– – – – –
மறுநாள் ஆஃபிஸில், ரேகா தனது வாட்சில் நேரத்தை பார்க்க, அதுவோ மூன்று என காட்ட, பக்கத்து டேபிளில் அமர்ந்து சிஸ்டெமில் வேலைபார்த்துக் கொண்டிருந்த மதுவின் கையை சுரண்ட,
அவளோ இவளின் கையை தட்டிவிட்டு, அவளின் வேலையை முடிப்பதில் மும்மரமாக இருக்க, ஒரு நிமிடம் பொறுத்துப் பார்த்தவள், “இவ கதைக்கு ஆகமாட்டா…” என்று அவளை மனதில் வறுத்துக் கொண்டே,
அவளின் இருக்கையில் இருந்து எழுந்து விமலின் சீட்டை பார்க்க, அவனும் சிஸ்டெமில் தலையை விட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து, “என்னங்கடா இது, ஒரு வேலை நமக்கு மட்டும் தான் வேலை இல்லையோ…” என்று தீவிரமா நின்றுக் கொண்டே சிந்தித்து,
அந்த இடத்தையே ஒரு முறை சுற்றி பார்க்க, முக்கால் வாசி இருக்கைகள் காலியாக இருக்க, “நம்மளே பரவால்ல… நமக்கு முன்னவே பாதி பேரை காணும்…” என்று தன்னை நினைத்து திருப்திப் பட்டுக்கொண்டே, தன் மூளைக்கு தெரிந்த வகையில் யோசித்து நிற்க,
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாலோ, திடிரென்று மண்டையில் யாரோ கொட்டுவது போல் இருக்க, தலையை தேய்த்துக் கொண்டே, எதிரில் இருந்தவனை தீயாக முறைக்க,
அவனோ கூலாக, “என்ன சாப்புடலாம்னு தானே யோசிக்குற… அதுக்கு தான் கொட்டினேன்…”
“போடா விம்பார்… வலிக்குது…” என்று தலையை தேய்த்து, இன்னமுட்டும் சிஸ்டம் உள்ள போய்டுறாப்போல வேலை பாத்த… அப்பறம் எதுக்கு இப்போ இங்க வந்த?…”
“நல்லா வலிக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு, “ஆகமொத்தம் நீ ஒன்னும் பண்ணாம, எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கோம்னு பார்த்துட்டு இருக்க…” என்று மறுபடியும் அவளை கொட்ட வர,
அவனின் கையை தட்டிவிட்டு, “மணி மூணு தாண்டிடுச்சு… இதுக்கு அப்பறம்லாம் மண்டை வேலை செய்யாது… ஏதாவது உள்ளேபோனாதான், இனிமே வண்டி ஓடும்…”
“வாரேவா…இல்லனா நீங்க ரொம்ப சின்சியர் உங்க ஒர்க்ல…” என்று ஓட்ட,
“ரொம்ப ஓவர் ஆஹ் பேசாத… ஒரு வாரத்துக்கு நாப்பத்தஞ்சி மணி நேரம் ஒர்க் பண்ணனும்… அது நான் சரியாய் பண்றேன்…”
“கொடுக்குற காசுக்கு மேல, வேல பாக்குறீங்க நீங்கலாம்… என்னால தாங்க முடியல…” என்று புலம்ப,
“ரேக்ளா…” என ஆரம்பித்து விமல் வேலையை பற்றி சொல்லவர,
அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு, “நீ ஒன்னும் சொல்லிகிழிக்க வேணாம்… எங்களுக்கும் எல்லாம் தெரியும்…”
“இதுல்லாம் நல்ல வக்கணையா பேசு…” என்று அழுத்தி சொல்ல,
அவன் சொன்னதை காதில் வாங்காமல், மதுவிடம் திரும்பி, “என்ன மது… இன்னும் முடியலையா?…” என்று கேட்க
“ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்… அல்மோஸ்ட் ஓவர்…” என்று பதில் கூற,
“இவ எப்படியும் இப்போதைக்கு வர மாட்டா… வரியா அதுக்குள்ள, காபி குடிச்சிட்டு வருவோம்…” என்று விமலிடம் திரும்பி ரேகா கேட்க,
இவனோ மதுவிடம், “நான் வேணும்னா பாக்கவா?” என்று வினவ,
கம்ப்யூட்டரிலிருந்து கண்ணை அகற்றாமல், “இல்ல விமல், நீ வேணும்னா அவளை கூட்டிட்டு போயிட்டுவா… நான் அதுக்குள்ள முடிச்சிடுவேன்…”
“மது இன்கேஸ், முடிச்சிட்டீனா, கஃபேக்கு வா…” என்று அவளிடம் சொல்லிவிட்டு, ரேகாவை காபி குடிக்க அழைத்துக் கொண்டு சென்றான்.
– – – – –
மது ஒரு அவுட்புட் வராமல் போராடி கொண்டிருக்க, அவளுக்கு அருகில் நிழலாடுவதைக் கண்டு, நிமிர்ந்து பார்க்க,
அங்கே பிரகதீஷ் நிற்க, இவள் அவனை பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல், மீண்டும் அந்த அவுட்புட்டுடன் போராட,
“மது… தள்ளு நான் என்னனு பாக்குறேன்…” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேச,
அவளோ காது கேளாதவள் போல, சிஸ்டம்மை மட்டும் பார்க்க,
“நீ ரொம்ப நேரமா பண்ணிட்டு இருக்கறதை பார்த்து தான் வந்தேன்… தள்ளு நான் பாக்குறேன்…” என்று மீண்டும் சொல்ல,
அவளோ அவன் சொல்வதை, சட்டையே செய்யாமல் கீபோர்ட்டை தட்டிக்கொண்டே இருக்க,
“இவளை வச்சிக்கிட்டு…” என்று பல்லைக்கடித்து விட்டு, அவன் அவளின் அருகில் சேரை சிறிது இடைவெளியில் போட்டு அமர்ந்தான்.
அவன் அப்படி அமர்ந்து அவளை பார்ப்பது என்னவோ போல் இருக்க, சிறிது நேரம் அவள் அமைதியாக,
அந்த நேரத்தை பயன்படுத்தி, சிஸ்டம்மை அவன் புறம் திருப்பி, அவள் வராமல் போராடி கொண்டிருந்த அவுட்புட்டை சிறிது நேரத்தில் கொண்டு வந்தான்.
பின்பு அவளின் புறம் டெஸ்க்டாப்பை திருப்பி வைக்க,
அவளோ ஒன்றும் கூறாமல், மறுபடி ஒருத் தடவை செக் செய்து கொண்டிருந்தாள்.
அவனும் அவள் செய்வதையே பார்க்காது பார்த்துக் கொண்டிருக்க,
சற்று நேரம் சென்று, மதுவிற்கு ஒரு காபியை வாங்கிக் கொண்டு அவளின் நண்பர்கள் அவ்விடம் வர, விமல் இருவரவரையும் ஆராய்ச்சியாய் பார்த்துவிட்டு, பிரகதீஷ்க்கு ஒரு ஹாய் சொல்ல,
ரேகாவோ ஆர்ப்பாட்டமாக, “ஹாய் லீட்… நீங்க இருக்கீங்க தெரிஞ்சா உங்களுக்கும் காபி வாங்கிட்டு வந்திருப்பேன்… இப்போ ஒரு காபி தான் இருக்கு…”
“அப்போ அதை எனக்கு குடுக்க மாட்டீங்களா?…” என்று கேள்வியெழுப்ப,
“அச்சோ… நீங்க கேட்டு நான் குடுக்காமையா… மதுவுக்கு வேணாம்… நீங்க எடுத்துக்கோங்க…” என்று அவனிடம் நீட்ட,
அதற்குள் மதுவோ தன் வேலையை சரிப்பார்த்து, மெயில் அனுப்பிவிட்டு, ரேகா கையில் உள்ள காபியை பார்க்க, அதை பிரகதீஷ் வாங்கி சுவைத்துக்கொண்டிருந்தான்.
மதுவோ காபியை ருசிப்பவனை முறைப்புடன் பார்த்துவிட்டு ரேகாவிடம் திரும்ப, அவனும் “இவ முறைக்குறதுக்கு மட்டும் தான் என்னைய பாக்குறா…” என்று பொருமிக் கொண்டான்.
காபியை குடித்துக் கொண்டே, “தேங்க்ஸ் போர் தி காபி…” என்று ரேகாவிடம் கூறிவிட்டு, “ஒகே கைஸ்… நீங்க பாருங்க…” என்று பொதுவாக கூறிவிட்டு எழுந்து சென்றான்.
பார்வை வீசும்…
error: Content is protected !!