Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 17

அத்தியாயம் 17

 

ஒருமாதமாய் தொழில் நிமித்தம் மும்பை சென்றிருந்த அதி.. அபயைக் காண அவன் அலுவலகத்திற்கு வந்திருந்தாள்.. நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில்.. அவளின் வெண்ணை மேனி மேலும் தகதகக்க.. அதில் அவளின் ப்ளூ ரோஸ் டாட்டுக்கள் மேலும் எடுப்பாய் தெரிய… நீல நிற ஹீல்சின் சத்தத்ததோடு.. அரேபியன் குதிரையாய் வந்தாள்..

 



Advertisement

எதிர்ப்பட்ட அனைவரும்.. மரியாதை நிமித்தம்.. அவளுக்கு வணக்கம் வைக்க.. அதனை கண்டுகொள்ளாமல் தன் வேக நடையுடன் அபயின் அறையை நெருங்கியவள்.. கதவை திறந்து உள்ளே செல்ல.. அங்கு ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர்..

 

அபய் அவளை பார்த்து வரவேற்ப்பாய் தலையசைத்தவன்.. வந்தவர்களிடம் மீண்டும் பேசத்தொடங்கினான்.. அதி அவனை தொந்தரவு செய்யாமல் அங்குள்ள சோபாவில்.. ஸ்டைலாக கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

Advertisement

 

Advertisement

அவர்களுக்கு அபய் மற்றும் அதியின் நெருக்கம் அறிந்ததால்.. அவர்கள் எதுவும் கூறாது.. தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினர்…

 

அவர்கள் சென்ற மறுநொடி இருவருக்கும் ஒயின் கோப்பை வந்தது… அபய் அதனை எடுத்துக்கொண்டு அதியிடத்தில் வர.. அவள் ஒன்றை வாங்கிக்கொண்டாள்..

Advertisement

 

ஹௌ இஸ் மும்பை ட்ரிப் பேப்..

 

ஹ்ம்ம் அஸ்யூஸ்வல்.. என கேலிச்சிரிப்பை உதிர்த்தாள்.. ஆனால் அந்த சிரிப்பிற்கு பின் இருப்பதை அறிந்த அபய் அவளை தன்னை நோக்கி இழுக்க அவளும் வாகாய் அவனின் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.. அந்நிலையிலே இருவரும் ஒயின் அருந்திக் கொண்டிருந்தனர்..

 

ஹ்ம்ம் வெல்.. உன் ஒயிப் என்ன தப்பு பண்ணா.. ஏன் இன்னும் அவளை கெஸ்ட் ஹௌஸ்ல வச்சுருக்க.. சோனியா வேற தினமும் வராப் போலயிருக்கு… என அடித்தடுத்த கேள்விக்கனைகளை தொடுக்க.. அபய் ஓர் மெல்லிய இதழ்வளைவுடன்.. அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்..

 

ஹ்ம்ம்.. கொஞ்சம் பெரிய தப்புதான்.. அதான் அத மறுபடியும் செய்யக்கூடாதுன்னு இப்படி வச்சுருக்கேன் என தோளைக் குலுக்க.. அதி கேள்வியாய் அவனைப் பார்த்தாள்..

 

ம்ம்ம் மேடம் இந்த அபயசிம்ஹா கிட்டயே கோபப்பட்டாங்க.. அண்ட் நான் அவகிட்ட வரக்கூடாதாம்.. எனக்கு சோனியா தானியான்னு நிறைய பேரு இருக்காங்களாம்.. சோ நான் அவங்ககிட்ட தான் போகணுமாம்.. என உதடு வளைய நக்கலாக கூற..

 

அதி ” ஓஹ் அதான் மேட்டரா… இதுக்கு தண்டனை வேண்டியது தான்.. அந்த சோனியா சொன்னதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு உன்கிட்ட சண்டை போட்டாளா… இதுக்கே இப்படி எமோஷனான எப்படி.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. அபயசிம்ஹா சக்சேனாவோட ஒயிப் எல்லாத்தையும் பேஸ் பண்ணனும்.. என்றவள் அபயை குறுகுறுவென்று பார்த்தாள்..

 

அபய் அவளின் பார்வை புரியாது ” வாட்.. என்றான்.

 

அபி.. சிற்பிகா உன்கிட்ட குரல உயர்த்தி சண்டை போட்டதுனால இந்த பனிஷ்மென்ட்டா.. இல்லை அவ உன்ன வேறொருத்திகிட்ட போக சொன்னதால இந்த பனிஷ்மென்ட்டா என குறும்பு புன்னகையுடன் கேட்டாள்..

 

அதியிடம் இப்படியொரு கேள்வியை எதிர்பாராத அபய்.. முதலில் சிறிது அதிர்ந்தாலும்.. அடுத்த நொடி அலட்சியமாக தோளைக்குலுக்கி.. இருக்கலாம்.. என விழிகளை சிமிட்ட.. அதியின் புருவம் உச்சி மேட்டிற்கு சென்றது..

 

” தென்.. எப்போ அவள மாளிகைக்கு கூட்டிப்போக போற ”

 

” இன்னைக்கு தான்.. வா போகலாம் ” என தன் கோட்டை போட்டவாறு அபய் வெளியேற..

 

அவனைப் பார்த்து மெல்லிய குறும்பு புன்னகையை தவழவிட்டவாறு அதியும் அபயை பின்தொடர்ந்தாள்..

 

******************************************

 

அதியும் அபயும் பங்களாவிற்குள் நுழைந்த பொழுது.. சிற்பிகா அங்குள்ள தோட்டத்தின் புல்வெளியில்.. மரங்களின் நிழலில் ஆழ்ந்த துயிலில் இருந்தாள்.. இரவெல்லாம் தன்னவனின் அருகாமையில்லாமல் அவள் விழிகள் கிஞ்சித்தும் மூடிக்கொள்ள மறுத்தது… அதனால் சிற்பியின் நீள்விழிகள் சிவந்து கிடக்க.. இயற்கை அன்னையின் அடியில் அமர்ந்ததும் உறக்கமும் மெல்ல அவளை ஆட்கொண்டது…

 

காரிலிருந்து இறங்கிய அதியின் விழிகளுக்குத்தான் முதலில் சிற்பியின் இந்த சயனநிலை பட.. ” ஹௌ கியூட்.. ” என அவள் கூறியதும் அதியின் பார்வையை தொடர்ந்த அபயின் விழிகளும் சிற்பியின் மதிமுகத்தைக் கண்டது…

 

பார்க்க அப்படியே ஸ்லீப்பிங் பியூட்டி மாதிரி இருக்காள்ல.. அண்ட் சேம் டைம் யாருமில்லாத சின்ன புள்ள தூங்குறத மாதிரியும் இருக்கு என்ற அதி அபயை சிறு கோபப்பார்வை பார்த்தாள்..

 

ஆனால் அபயசிம்ஹாவோ அதனைக் கண்டுகொள்ளாமல்.. சிற்பியிடம் விரைந்து அவளை தன் கரத்தில் தூக்கிக்கொள்ள.. ஆழ்ந்த துயிலில் இருந்தாலும் தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்து.. மெல்லிய புன்னகையை சிந்திய சிற்பிகா மேலும் அவனுடன் ஒண்டிக்கொண்டாள்..

 

அவளையே விழி எடுக்காது பார்த்துக்கொண்டிருந்த அபய் காரை நோக்கி வர.. அவனின் எண்ணம் புரிந்தார்ப்போல் பின் கதவை இருவருக்கும் திறந்து விட்டவள்.. அவர்கள் ஏறியதும்.. அபயின் மாளிகையை நோக்கி காரை செலுத்தினாள்..

 

அபயின் நெஞ்சத்தில் சொகுசாய் மஞ்சம் கொண்டிருந்த சிற்பியின் இதழ்கள் மெல்லிய குரலில் ஏதோ முனுமுனுக்க.. அவளின் இளரோஜா இதழின் அருகே தன் செவியை வைத்து.. அவள் பேசுவதை அறியமுயன்றான்..

 

சிம்மு மாமு.. எப்போ என்னைய புரிஞ்சுப்பீங்க.. நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது மாமு.. மனசாலயும் உடம்பாலயும் உங்களை ரொம்ப தேடுறேன்.. மாமு.. என இன்னும் இன்னும் அதிகமாய் அவள் முனங்கிக்கொண்டிருக்க… அபய் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது.. அவளின் தேன் சுரக்கும் இதழைப் பற்றிக்கொண்டான்…

 

அபய்க்கும் அவளுக்குமான கூடல் பொழுதில் தான் சிற்பிகா இவனை சிம்மு மாமு என்றழைப்பாள்.. மற்ற நேரங்களில் அவன் மீதிருக்கும் பயத்தில் அவளுக்கு வார்த்தைகள் வராது.. அன்று கெஸ்ட் ஹௌஸில் அவளை விட்டப்பொழுது வேதனை மிகுதியில் அவனை அவ்வாறு அழைத்தாள்..

 

சிற்பியின் சிம்மு மாமுவில் எப்போதும் அபய்க்கு ஒருவித மயக்கம் உண்டு.. ஆனால் அவன் வெளியில் காட்டிக்கொண்டதில்லை..

 

அவன் குறித்து அவளான தேடலைக் கண்டு ஆடவனுக்குள் கர்வம் எழுந்தது.. உறக்கத்திலேயே அவனின் செயலுக்கு அவள் பதில்வினை புரிய.. மேலும் அவள் இதழுக்குள் குடிக்கொள்ள ஆரம்பித்தவன்.. மாளிகையின் முன் கார் நின்றதைக் கண்டு.. அவளை ஏந்திக் கொண்டு வெளியே வர.. அதி ” நாம நாளைக்கு மீட் பண்ணலாம் அபி.. ” என மென்புன்னகை சிந்தி அவர்களுக்கு தனிமை வேண்டி சென்றாள்…

 

அபய் அவளை தங்களின் அறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தவன்.. மெல்ல மெல்ல அவளை ஆக்கிரமிக்க.. அவளும் அவனுக்கு இசைந்துக் கொடுத்தாள்.. அவளின் இதழ்கள் மாமுஜபம் ஜெமிக்க.. அவளின் ஒவ்வொரு மாமுவிற்கும் ஓர் முத்தத்தை பரிசளித்தான்..

 

அவனின் ஆண்மை தனக்கான இடத்தை தேடி துடிக்க அதற்க்கு வழி செய்துக் கொடுத்தவன்.. அவளின் பெண்மையை வன்மையாக ஆட்கொண்டான்.. இத்தனை நேரம் கனவென்று நினைத்திருந்த பெண்ணவள்… திடுக்கிட்டு முழித்து… தன்னவனை பார்த்து விழிக்க.. அபய் அவள் விழியில் முத்தமிட்டு.. தன் வேலையின் வேகத்தை அதிகரித்தான்..

 

பெண்ணவள் ஆடவனின் செயலுக்கு.. அவன் முதுகில் தன் நகம் பதித்து.. அவள் உணர்ச்சியைக்கூற.. அவனும் அவளின் உணர்வுகளுக்கேற்ப சேவை புரிந்து.. சேவகம் பெற்றான்…

 

அவள் தேகத்தில் ஆடவனின் இதழ்கள் படாத இடம் ஏதேனும் உண்டா என யோசிக்கவைக்கும் அளவிற்கு.. அவளை தன் முத்தத்தால் குளிப்பாட்டினான்.. ஒருமுறை இருமுறை என கூடல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது…

 

எப்பொழுதும் அபயிடம் வேகம் இருக்கும்.. சிற்பி அவன் சொல்வதை செய்து… அவனின் கைப்பாவையாய்.. மாணவியாய் இருப்பாள்.. என்றுமே அவள் முதலில் ஆரம்பித்தது இல்லை.. ஆனால் இன்றோ அபய்க்கு சரியான வேகத்தில் அவனை ஆட்கொண்டு… இத்தனை நாள் அவன் கற்றுக்கொடுத்த மொத்த பாடத்தையும் இறக்கி.. சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றாள்… ஏற்கனவே அவளின் மீது என்னவென்றறியா மயக்கத்தில் இருந்தவனுக்கு இம்மயக்கமும் சேர.. அவளை காற்று புகா அளவிற்கு இருக்கியணைத்து தன் உணர்வை வெளிப்படுத்தினான்..

 

உடல் ஓய்வுக்கு கெஞ்சியதும் தான் இருவரும் பிரிந்தனர்.. அப்பொழுது தான் சிற்பிகாவிற்கு தாங்கள் இருக்கும் அறை விழியில் பதிய.. ஒருவித பரவசத்துடன் காதல் பொங்க தன்னவனைக் கண்டாள்.. அவள் அவன் மீது வைத்த காதலும் பொய்யாகவில்லை.. அவள் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பொய்யாகவில்லை…

 

அபய் அவளின் பார்வை பார்த்து மெல்லிதாய் கண்ணடிக்க.. வெட்கத்தில் முகம் சிவந்தாலும் காதல் மேலோங்க அவனின் இதழில் மென்முத்தம் வைத்தாள்..

 

***********************************************

 

மெல்லிய பட்டுப்புடவையில்.. அதற்கேற்ப குந்தன்மாலையும் ஜிமிக்கியும் அணிந்து.. தலை நிறைய பூவைத்து.. தேவதையென தயாராகிக் கொண்டிருந்தாள் சிற்பிகா..

 

கண்ணாடி வழியே தன் அலங்காரத்தை சரிப்பார்த்தவள்.. நெற்றில் குங்குமத்தை சூட்டினாள்.. கெஸ்ட் ஹௌஸ் என்ற சிறையிலிருந்து வந்து ஒருவாரமாகிவிட்டது..

 

அபய் அவளை அழைத்துக் கொண்டு வந்ததைப் பற்றி அவளும் கேட்கவில்லை.. அவனும் விளக்கவில்லை.. பழையப்படி சிற்பிகா அபயின் உலகத்தில் விருப்பமாய் தன்னை பொருந்திக் கொள்ள.. அபயும் வழக்கம் போல் சிற்பியை தன் கரத்திற்குள் வைத்துக்கொண்டு இருந்தான்..

 

திருமணமாகி இரண்டரை மாதம் தான் ஆகியிருக்கிறது.. ஆனால் அபயுடனான இல்லறம் சிற்பிக்கு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த மகிழ்வை தந்தது..

 

இப்போதெல்லாம் தன் பயத்தை ஒதுக்கி அபயிடம் கொஞ்ச கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்கிறாள்.. தன் சின்னஞ்சிறு விருப்பங்களை எல்லாம் அபயிடத்தில் கூறினாள்.. சிறிது பிடிவாதம் கூட வந்திருக்கிறது.. நம் அப்பாவி சிற்பிக்கு.. ஆனால் அபயுடனான பயம் மட்டும் சற்றும் விலகவில்லை…

 

அப்பொழுது கடிகாரம்.. ஆறுமுறை மணியடித்து.. அவளின் எண்ணங்களை கலைக்க.. வேக வேகமாய் தயாரானாள்.. திருமணத்திற்கு பிறகு இன்றுதான் அபயும் அவளும் கோவிலுக்கு செல்லப்போகின்றனர்…

 

இன்று கோவிலுக்கு செல்ல அவனிடம் அனுமதி கேட்டதை நினைத்து மீண்டும் அவள் முகத்தில் நாணப்புன்னகை…

 

காலையில் அபய் அலுவலகத்துக்கு தயாராகிக்கொண்டிருக்க.. அவனிடம் எப்படி கேட்பது என அறியாமல்.. அவள் திருத்திருத்து கொண்டிருக்க.. அபய் கோட்டிற்காக கையை நீட்டினான்..

 

அவனுக்கு கோட்டை போட்டுவிட்டவள்… பட்டன் போட்டபிறகும் அவனை விட்டு நீங்காமல் அதனை திருகிக்கொண்டே இருக்க.. அவனும் அவள் இடையில் கரம் பதித்து நின்றான்..

 

அவன் விரல்கள் சும்மாயில்லாமல் அங்குமிங்கும் ஆட்டம் காண்பிக்க.. பெண்ணவள் சிணுங்கினாள்.. ப்ச் இப்போ என்னடி.. கண்டிப்பா நீ ஒரு விஷயத்தை சொல்றதுக்கு ஒருமணிநேரம் ஆகும்.. அதுவரைக்கும் நான் என்னோட வேலைய பார்க்குறேன் என கழுத்தில் முகம் புதைத்து.. மீண்டும் இடையினில் விளையாட.. அதில் சிறிது தைரியம் பெற்றவள்.. ” மாமு.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு கோவிலுக்கு போவோமா ப்ளீஸ்.. ” என கெஞ்சலாய் கேட்க.. அவளையே விழி எடுக்காது பார்த்தவன்.. இதழில் வன்முத்தம் வைத்து.. சரியென்றான்…

 

அவளுக்கு நம்பவே முடியவில்லை.. அபய்க்கு இந்த கோவிலுக்கு செல்வதெல்லாம் பிடிக்காதென்பதால் சிறிது பயத்துடனே கேட்டாள்… ஆனால் அவனோ இவள் கேட்ட நொடியில் சரி என்கவும்.. முதலில் விழித்தவள்… பின் சந்தோஷத்துடன் அவன் இதழ்களை முற்றுகையிடுவது இவள் முறையானது…

 

அவளின் உயரத்திற்கு முத்தம் வைப்பது சற்று சிரமமாய் இருக்க.. அவளை தன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டான்.. எவ்வளவு நேரம் இந்த முத்த போராட்டம் நடந்ததோ அதனை.. அபயின் தொலைபேசி கலைக்க.. அழுத்தமாய் ஓர் முத்தம் வைத்துவிட்டு சென்றான்..

 

இப்பொழுது அம்முத்தத்தின் ஈரம் இன்னும் தன் இதழில் இருப்பது போல் பிரம்மை உண்டாக.. அவள் முகம் வெட்கத்தில் செங்கொழுந்தாகியது…

 

இப்போது வெட்கத்தில் சிவந்திருக்கும் சிற்பியின் முகம் இன்னும் சற்று நேரத்தில் பயத்தில் வெளிறிப்போக போவதையெண்ணி விதி சிற்பிகாவிற்காக பரிதாபப்பட்டது….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!