அத்தியாயம் 18
அத்தியாயம் 18
சிற்பிகா இயல்பிலேயே மிகவும் அமைதியானப்பெண்.. அவள் தாய் துர்கா இருக்கும்போது கூட அவள் எதற்கும் அடம்பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில்லை.. தன் மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்துக்கொல்பவள்.. வருத்தத்தை தன்னகத்தே வைத்துக்கொள்வாள்.. சட்டென்று கோபப்பட தெரியாது.. அப்படியே அரிதாக கோபம் கொண்டாலும் சில வினாடிகளிலே மறைந்து விடும்… சிறுவயதில் எப்பொழுதுமே அவள் இதழில் ஓர் மென்புன்னகை குடிக்கொண்டிருக்கும்… அது பார்ப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தும்..
Advertisement
ஆனால் என்றைக்கு தன் தாயை சாலை விபத்தில் பலிக்கொடுத்தாளோ அன்றே அவளின் புன்னகையும் சென்றுவிட்டது.. சிறுவயதிலிருந்தே அவள் தந்தைக்கும் அவளுக்குமான பிணைப்பு அவ்வளவு நெருக்கம் இல்லை.. லிங்கேஷ்வரன் ஓர் தந்தைக்குறிய அணைத்து கடமைகளையும் செய்தாலும்.. மகள் மனைவியுடன் நேரம் ஒதுக்கி.. அவர்களுடன் பேசி சிரித்ததில்லை… அதனால் துர்கா இறந்த அன்றே அவள் மனதளவில் அனைவரிடமிருந்து தனிமைப் படுத்திக்கொண்டாள்..
அபிராமி அவளை நெருங்கும் பொழுது.. ஏனோ அவள் மனம் அவளை ஏற்க மறுத்தது.. இப்படி சென்றுக்கொண்டிருக்கும் பொழுதுதான் அவர்களின் உண்மை பிம்பம் வெளியே வர.. பெண்ணவள் முற்றிலும் தளர்ந்து போனாள்.. ஆனால் அன்றே அவளின் வாழ்வின் ஆதாரமாய் அபயைக் கண்டு காதல் கொண்டாள்.. பதினாறு வயதில் அவன் மேல் ஏற்பட்ட உணர்வு என்னவென்று அறியாவிட்டாலும்.. போக போக அது காதலென்று புரிந்து அவனுடனே மானசீகமாய் வாழ்ந்து வந்தாள்..
Advertisement
Advertisement
ஒன்பது வருடமும்.. அவள் அவன் நினைவில் உருகிக்கொண்டிருந்தாள்.. அவன் தனக்கு கிடைப்பானா இல்லையா என்று தெரியாத போதிலும்.. அவனையே தன் வாழ்க்கையாக அவள் எண்ணிக்கொண்டிருக்க..
மறுபடியும் விதிவசத்தால் அவனை அறியாமல் அவளின் மானத்தை.. சரியான நேரத்தில் காப்பாற்றியவன்.. அவளை அதிரடியாக தன்னவளாக்கிக் கொண்டான்..
Advertisement
முதலில் அவளை கடுமையாக நடத்தினாலும்… அதற்கு அருமருந்தாய் அவனேயிருக்க.. பென்னவளுக்கு.. மற்றதெல்லாம் பெரிதாக தெரியவில்லை.. அவன் கோபப்படுவது.. அவளுக்கு அவன் மட்டுமே முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான்… எனவே அவன் கோபப்படுவதை எண்ணி அவள் வருத்தப்படவில்லை…
இப்பொழுதெல்லாம் அவனிடத்தில் தான் செய்யும் சிறு சிறு சேட்டைகளை எண்ணி பெண்ணவள் வெட்கிச்சிவக்க.. அவளை இன்டர்கார்ம் ஒலி கலைத்தது..
ஹலோ…
மேம் உங்கள பார்க்க.. உங்க ரிலேஷன் வந்துருக்காங்க..
ரிலேஷனா.. அப்படி யார் வந்திருப்பா.. என யோசனை ஓடினாலும்.. ஹால்ல உட்கார சொல்லுங்க… அப்புறம் குடிக்க ஏதாவது கொடுங்க… நான் இப்போ வந்துடுறேன்.. என போனை வைத்தவள்.. யாராயிருக்கும் என்ற யோசனையோடு கீழே வந்தாள்..
********************************************
அபி.. நான் எதுக்கு.. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.. உனக்கு தான் தெரியும்ல எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு.. அப்புறம் ஏண்டா.. உன் ஒயிப் ஆசைப்பட்டா நீ போடா.. ஏண்டா என்னை தொல்லை பண்ற.. என ஆயிரமாவது முறையாய் அலுத்துக் கொண்டவாறே வந்தாள்.. அதி
சாரி பேப்.. எனக்கும் தான் இதெல்லாம் பிடிக்காது.. பட் அவ பர்ஸ்ட் டைம் இங்க கூட்டிப்போக சொல்றா.. சோ எனக்கு கம்பெனி கொடுக்க நீயும் வா.. என பிடிவாதாமாய் அவளையும் அழைத்தான்..
நாம நம்ம ஹப்பிக்கூட தனியா போக நினைச்சா.. எக்ஸ்ட்ரா லக்கேஜ் வேறயான்னு என்னைப் பார்த்து உன் ஒயிப் டிசப்பாயிண்ட் ஆகப்போற.. என அதி கேலியாக கூறி.. அபயின் முகத்தையே பார்க்க..
ஹ்ம்ம்.. அப்படியா.. அவ என்ன நினைப்பான்னு உனக்கு நல்லாவே தெரியும்னு எனக்கும் தெரியும்.. நம்ம இத்தனை வருஷ ப்ரெண்ட்ஸ்ஷிப்ல பர்ஸ்ட் டைம் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை கோபமா பார்த்த.. என்ற அபயின் குரலில் மெல்லிய கேலி இருக்க.. அதியும் புன்னகைத்தாள்..
ஹ்ம்ம்ம்.. உண்மை தான்.. எனக்கு உனக்கப்புறம் அவளைத்தான் நெருக்கமா பார்க்க தோணுது.. என இருவரும் பேசிக்கொண்டே மாளிகையின் உள்நுழைந்தனர்..
அபயும் அதியும் ஹாலிற்குள் நுழையும் பொழுது.. சிற்பிகா ஓர் ஆடவனுடன் பேசிக்கொண்டிருக்க.. அதனை விழிகள் இடுங்க பார்த்தான்.. அபய்.
என்ன சிற்பிகா.. இப்படி பண்ணிட்ட.. நான் ஆறுமாதம் லண்டன் போயிட்டு வரதுக்குள்ள யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஏன் இப்படி பண்ண.. அப்போ நீயும் நானும் பழகுனதெல்லாம் பொய்யா.. சிற்பிகா.. என திரைப்பட வசனம் போல் வந்தவன் பேசிக்கொண்டிருக்க..
சிற்பி அவனை எரிச்சல் பொங்க பார்த்தாள்.. அடேய் நானே இப்போதான் ஒரு பிரச்சனை முடிஞ்சு என் புருஷன் கூட நிம்மதியா இருக்கேன்.. அத கெடுக்குறதுக்கே வந்துருக்கியாடா என மனதுக்குள் அவனைத் தாலித்துக் கொண்டிருந்த சிற்பிகா.. அவனுக்கு பதில் சொல்ல முற்படும் பொழுது..
என் மனைவி உங்கள என்ன ஏமாத்துனா மிஸ்டர்.. என்ற அபயின் குரலில் சர்வமும் நடுங்க.. முகம் வெளிறி தன் கணவனை பதட்டத்துடன் பார்த்தாள்…
****************************************************
லிப்டிலிருந்து வெளியே வந்தவள்.. ஹாலின் சோபாவில் அமர்ந்து.. சுற்றிலும் விழிகளை விரித்து பார்த்துக்கொண்டிருந்த அஜயைக் கண்டு அதிர்ச்சியுற்றாள்.. இவள் நிச்சயம் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை…
அதிர்ச்சி தெளியாது அவள் அவனிடம் வர.. அஜய் அப்பொழுது தான் பக்கவாட்டிலிருந்து வரும் சிற்பிகாவைப் பார்த்தான்..
சில நிமிடம் பார்த்தவன் பார்த்தப்படியே தான் இருந்தான்.. அவளிடத்திலிருந்து அவனால் விழிகளை எடுக்க முடியவில்லை.. அபயுடனான மகிழ்ச்சியான இல்லறத்தில் அவள் முகத்தின் பொலிவு கூடி உடல் சற்று பூரித்து மேலும் அழகு கூடியிருக்க.. அவளை கண்களாலயே ஸ்கேன் செய்தான்… அதில் சிறிது ஆராய்ச்சியும் யோசனையும் இருந்தது..
சிற்பிகாவிற்கு… அவனது பார்வையால்.. இத்தனை நேரம் இருந்த அதிர்ச்சி மறைந்து.. அதில் கோபமும் எரிச்சலும் குடிக்கொண்டது..
வா அஜய்.. என்ன இந்தப்பக்கம்.. பிஸ்னஸ் ட்ரிப்பா என முயன்று வருவித்த புன்னகையுடன் கேட்டாள்…
ஏன் சிற்பிகா.. நான் உன்னைமட்டும் பாக்குறதுக்காக பெங்களூர் வந்துருக்ககூடாதா.. இல்லை எனக்கு நியாயம் கேட்க வந்துருக்க கூடாதா.. என அவன் மேற்கொண்டு சொல்லிக்கொண்டே செல்லும் பொழுதுதான்.. அபயின் குரல் கேட்க.. சிற்பிகா வெலவெலத்து போனாள்..
அந்த ஹால் முழுதும் குளிரூட்டப்பட்டு இருந்தாலும்.. சிற்பிகாவின் முகம் பயத்தினில் முத்து முத்தாய் வியர்திருக்க.. உடலெங்கும் நடுங்கத்தொடங்கியது.. இவன் பேசுனத வச்சு நம்மள தப்பா நினைப்பாரோ.. கோபப்படுவாரோ இல்லை.. மறுபடியும் கெஸ்ட் ஹௌஸ் அனுப்பிடுவாரா என பலவித எண்ணங்களுடன் உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தாள்..
சொல்லுங்க மிஸ்டர் நாங்க வரும்போது என்னமோ நியாயம் பொய்ன்னு பேசிக்கிட்டு இருந்திங்க.. என்று கேட்டுக்கொண்டே அபய் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து.. சிற்பிகாவை ஓர் பார்வை பார்க்க.. அவளும் புரிந்து அவ அருகில் இருந்த சிறு இடத்தில் அவனை நெருக்கியவாறு அமர.. அபய் அவள் தோளில் கரம் போட்டவாறு அஜயை பார்த்தான்..
அதி… அபயின் மற்றொரு பக்கம் அமர்ந்து.. படம் பார்ப்பது போல் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள்..
அஜய்.. அபயசிம்ஹாவின் தோற்றத்தை சற்று பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.. அபயின் உள்ளதை கூறு போடும் விழிகள்.. அவனின் ஆளுமை இவையெல்லாம் அவன் மனதில் சற்று பயத்தை கிளப்பியது..
முன்ன பின்ன யோசிக்காம வந்துட்டோமோ என உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவன்.. அபயின் கேள்வியிலும்.. சிற்பிகாவை அவன் பார்வையாலையே மிரட்டுவதையும் பார்த்து.. எடுத்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என உறுதிகொண்டான்…
” ஹலோ சார்.. நான் அஜய்.. சிற்பிகாவோட க்ளோஸ் பிரென்ட்.. எங்கள பார்க்கிற எல்லாருமே நாங்க மேட் பார் ஈச் அதர்ன்னு சொல்லுவாங்க.. அப்படி ஒரு பொருத்தம் எங்களுக்கு.. பட் நான் சிக்ஸ் மந்த்ஸ் லண்டன் போயிருந்த கேப்புல என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம உங்கள மேரேஜ் பண்ணிக்கிட்டா.. அதான் கொஞ்சம் கோபப்பட்டு பேசிக்கிட்டு இருந்தேன்… என வார்த்தைகளில் பல முடிச்சு வைத்து பேசினான்… ”
சிற்பிகாவோ அஜய் பேச பேச அதிர்ச்சியின் உட்சத்திற்கு சென்றுக்கொண்டிருந்தாள்.. அடப்பாவி நான் எங்கடா உன்கூட பிரெண்ட்ஸ்ஷிப் வச்சுக்கிட்டேன்.. என அவள் மனதினுள் அலற… அஜயோ மிகவும் நல்லவன் போல்.. முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு இருந்தான்..
ஓஹோ… என புருவத்தை உயர்த்திய அபயின் கரம் சிற்பிகாவின் தோளை அழுத்த.. அவளுக்கு வலிக்க ஆரம்பித்தது..
ஹ்ம்ம்.. மிஸ்டர் அஜய் நீங்க.. மிஸ்டர் சதாசிவம்.. பையன் தானே எஸ்.ஏ. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என கேள்வியாய் அதி அஜயை பார்க்க.. அவன் வாயெல்லாம் பல்லாக தலையாட்டினான்…
ஹ்ம்ம் ஆமா.. உங்களுக்கு எங்கள தெரியுமா.. என ஆவலாக கேட்டவனின் பார்வை இப்போது அதியை பார்வையிடத் தொடங்கியது.. அவள் வந்ததிலிருந்தே ஓரக்கண்ணால் அவளை பார்வையிடத் தொடங்கியவன்… அதி அவனிடம் பேசத்தொடங்கிய நொடி.. நேரடியாக தன் ஜொல்லலை தொடர்ந்தான்..
ஹ்ம்ம்ம் தெரியும்.. ஆனால் உங்கப்பாவுக்கு நீங்க.. இந்த அபயசிம்ஹாவோட மாளிகைக்கு வந்துருக்குறது தெரியுமா என அபய் திமிராக கேட்கவும்.. அவன் முழித்தான்…
அபி பையன் முழிக்கிறதே பார்த்தாலே தெரில.. அவங்கப்பாவுக்கு தெரியாதுன்னு என நக்கலாக கூறியவள்.. அபயிடம்.. இவன் டம்மி பீசு என்பதாய் பார்க்க.. அபயும் விழிகளால் ஆமோதித்தான்.. ஆனால் இந்த டம்மி பீஸ் அடுத்த நாள் செய்யவிருக்கும் காரியத்தை பற்றியும் அதனால் சிற்பிகாவிற்கு நேரவிருக்கும் ஆபத்தையும் பற்றியும் அறிந்திருந்தாள்.. அபயும் அதியும் அவனை சாதாரணமாக எடை போட்டிருக்க மாட்டார்கள்..
