Skip to content
Post Views: 10,126
இரும்பில் ஓர் இதயம்….25(எபிலாக்)
ஐந்து ஆண்டுகளுக்கு பின்,
பரிதி தனது வேலையில் கவனமாக இருக்க,
“ண்ணா….”என்ற ராமின் அழைப்பில் நிமிர்ந்தவன் என்ன என்று கண்களால் வினவ,
Advertisement
“ண்ணா…..லாரி ஒன்னு வந்திருக்கு இன்னைக்கே வேணுமாம்…கொஞ்சம் வாங்கண்ணே….”என்று அழைத்துவிட்டு அவன் நிற்க,
“போ வரேன்….டேய் நல்லவனே இதையும் சேர்த்து பாரு….”என்று அவன் பார்த்துக் கொண்டிருந்த காரையும் மகேஸ்வரனிடம் கொடுக்க,
“அடேய்….ஏன்டா அங்க போற….அப்பா வந்தா என்னை திட்டுவாருடா….நில்லுடா….”என்று மகேஸ்வரன் காற்றிடம் தான் கத்திக் கொண்டிருந்தான்.அன்று மாலை அவன் கூறியது போல் தான் நடந்தது தந்தையின் அறையில் மகேஸ்வரன் முகத்தை பாவமாக வைத்தபடி நிற்க பரிதியோ காதை குடைந்து கொண்டு நின்றான்.
Advertisement
“எதுக்குடா இங்க வரீங்க….உங்களை நான் கூப்பிட்டேனா….எத்தனை தடவை சொன்னாலும் புரியாது உங்களுக்கு…..அதான் உங்களுக்குனு ஒரு கேரேஜ் திறந்திட்டீங்கள்ல அப்புறம் எதுக்கு என்னோடதுக்கு வரீங்க….”என்று இருவரையும் சேர்த்து வைத்து திட்ட,
Advertisement
“ப்பா….அது…”என்று மகேஸ்வரன் ஆரம்பிக்கும் முன்,
“முடிஞ்சிடுச்சா சார் நான் போகவா…..”என்று பரிதி கேட்டவுடன் மாணிக்கம் மகனை தான் முறைத்தார் அவனோ பாவமாக இருவரையும் பார்த்தான்.இது பரிதி மீண்டும் இந்த கேரேஜினுள் வந்ததிலிருந்து நடக்கிறது.மாணிக்கம் இருவரிடமும் தெளிவாக கூறியிருந்தார் உங்கள் தொழிலை நீங்கள் பாருங்கள் என்னுடையதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று.ஆனால் பரிதி அதை எல்லாம் காத்தில் பறக்கவிட்டுவிட்டு அவ்வபோது இது போல் வந்து உதவி செய்துவிட்டு தான் போவான்.அதற்கு இருவருக்கும் சேர்த்து தான் மண்டக பொடி நடக்கும்.
“ப்பா….இனி வரமாட்டான்ப்பா…..நான் பார்த்துக்குறேன்….”என்று மகேஸ்வரன் எப்போதும் போல் கூற,
Advertisement
“இதை தான் நீ ஒவ்வொரு தடவையும் சொல்லுற….போ….”என்றுவிட அவனும் விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டான்.இருவரும் சென்றவுடன் மாணிக்கத்தின் முகத்தில் சிறு புன்னகை அதே புன்னகையுடன் எதிரே தெரிந்த நவீன கேரேஜை பார்த்தார்.இவரின் கேரேஜை விட சிறியது தான் ஆனால் உள்ளிருப்பது மொத்தமும் நவீன முறைகள் தான் அத்தனை சுத்தமாக இருக்கும்.
அவர் நினைத்ததை விட நல்ல முறையில் தொழிலை முன்னேற்றி இருந்தனர் இருவரும்.அதே அளவு அவர்களின் நட்பு இன்னும் இறுகியிருந்தது.அது தான் மாணிக்கத்தை ஆச்சிரியப்படுத்தும் என்ன கூறினாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.சில நேரங்களில் இவர்களின் நட்பை கண்டு அவருக்கு பொறாமை கூட வருவதுண்டு.
மாலை ஆறு மணியளவில் தங்கள் வேலை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பி கொண்டிருக்க மகேஸ்வரன்,
“டேய் வீட்டுக்கு போயிட்டு சீக்கிரம் கிளம்பினா தான் தோப்புக்கு போக முடியும்….”என்று கூற,
“ம்ம்ம்…..நீ கிளம்பு….”என்று பரிதி கூற,
“அப்ப நீ கிளம்பலையா…..”
“இல்ல கொஞ்சம் வேலை இருக்கு….அந்த லாரில டையரை மாத்திட்டு தான் கிளம்பனும்….அப்ப தான் திங்கள் கொடுக்க முடியும்…..”என்று கூறிக் கொண்டே அவன் செல்ல,
“அடேய்….அப்பா என்னை காய்ச்சி எடுக்குறாருடா….ஏன்டா என் உயிரை எடுக்குற….”என்று மகேஸ்வரன் சலித்துக் கொண்டாலும் அவனும் பரிதியுடன் சென்றான்.
“நீ எங்க வர….நீ கிளம்பு உன் இரண்டு குட்டி பிசாசையும் கிளப்பி கூட்டிட்டு தோப்பு வீட்டுக்கு போ….”
“டேய் உன் தங்கச்சியை வேணா குட்டி பிசாசுனு சொல்லு என் பொண்ணை சொன்ன உதைபடுவ….”என்று மகேஸ்வரன் முறைத்துக் கொண்டு கூறினாலும் பரிதியின் பிரிய வார்த்தையே அது தான் என்று நன்கு தெரியும்.
“குட்டி பிசாசுக்கு பிறந்தது குட்டி பிசாசு தான்…”என்று பரிதியும் விடாமல் சிரித்துக் கொண்டே கூற,
“உன்னைஐஐஐஐ….”என்று கையில் வைத்திருந்த கம்பியால் மகேஸ்வரன் அடிக்க போக,
“டேய்…..என்னடா பண்ணுற….”என்ற மாணிக்கத்தின் குரலில் இருவரும் ஒரு சேர திரும்பி பார்த்தனர்.அங்கு மாணிக்கம் நின்றிருந்தார்.
“இவரு இன்னும் வீட்டுக் போகலையா…..போச்சு….இன்னைக்கு காதுல ரத்தம் வர போகுது…..எல்லாம் இவனால…..”என்று பல்லை கடித்தபடி மகேஸ்வரன் கூறிக் கொண்டே பரிதியை பார்க்க ஆள் அங்கு இல்லை அவன் லாரிக்கு அடியில் சென்றுவிட்டான்.அடப்பாவி என்னை தனியா மாட்டிவிட்டானே என்று நொந்து கொண்டு தந்தையிடம் திரும்ப அவரோ அவனை முறைத்தபடி நின்றார்.
“ப்பா…அது….”
“அந்த கம்பியை முதல்ல கீழ போடு….உனக்கு அறிவு இருக்க கம்பியை வச்சு அடிக்க போற….எங்காவது கவனிக்கமா அடிபட்டா என்ன செய்வ….சின்ன பிள்ளையா நீ….”என்று கூற மகேஸ்வரன் முழித்துக் கொண்டிருந்தான்.
“நான் கிளம்புறேன்…..நீ எப்ப கிளம்ப போற….அம்மா போன் பண்ணா….குட்டிமா நீ வந்தா தான் டிரஸ் போடுவேன்னு உட்கார்ந்திருக்காளாம்…சீக்கிரம் வா…..வரும் போது கீழ இருக்குறவனையும் இழுத்து அவன் வீட்ல விட்டுட்டு கேரேஜை இழுத்து பூட்டிட்டு வா….எப்ப பாரு வேலை வேலைனு திரிய வேண்டியது….எப்படி தான் அந்த பொண்ணு இவன் கூட குடும்பம் நடத்துதோ…..”என்றுவிட்டு அவர் செல்ல மகேஸ்வரனுக்கு தந்தையின் பேச்சு நெகிழ்ச்சியை கொடுத்தது.
“டேய் பாரு அப்பாக்கு உன் மேல பாசமிருக்கு…..”என்று கத்த,லாரியின் உள்ளிருந்து வெளிவந்த பரிதி,
“நான் எப்ப இல்லனு சொன்னேன்….”என்றுவிட்டு போக மகேஸ்வரன் தான் தந்தைக்கும் இவனுக்கும் இருக்கும் உறவு எதில் சேரும் என்ற முறையில் பார்த்தான்.இருவரும் ஒருவருடன் ஒருவர் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார்கள் ஆனால் இருவரிடமும் புரிதல் அதிகமாக இருக்கும்.ஆனால் வெளியில் முறைத்துக் கொண்டு தான் திரிவர் தங்களின் பாசத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.இருவரும் சேர்ந்து தான் கிளம்பினர் தந்தை கூறியது போல பரிதியை இழுத்துக் கொண்டு அவனின் வீட்டில் விட்ட பின்னர் தான் மகேஸ்வரன் வீடு சென்றான்.
பரிதி கேரேஜ் இருக்கும் இடத்தின் பக்கத்திலேயே வீடு ஒன்றை வாங்கிவிட்டான்.வண்டி சத்தம் கேட்கவும் வீட்டின் உள்ளிருந்து,
“ப்பா…..அம்மா அப்பா வந்துட்டாங்க…..”என்று கத்தியபடி ஓடி வந்தான் இளவேந்தன்.பரிதியின் ஐந்து வயது மகன்.அப்படியே பரிதியின் பிரதி பிம்பம் தான் மகன்.ஓடி வந்த மகனை வாரியணைத்து அவனுக்கு இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உள்ளே நுழைய,
“பா….ப்ப்ப்பா….”என்று தவழ்ந்து வந்தது பதினோரு மாதமான இளவரசி பரிதியின் மகள்.
“பருப்பா….உன் சத்தம் கேட்டா போதும் எங்கிருந்தாலும் ப்ப்ப்பானு….தவழ்ந்து ஓடி வருது….”என்று கூறயபடி வந்தார் நாயகி.முன்பு போல் எதிலும் அவர் ஒதுக்கம் காட்டுவதில்லை.அதுவும் திவ்யாவின் திருமணம் முடிந்ததிலிருந்து பரிதி அவரின் மகனாகவே மாறிவிட்டான்.திவ்யாவை மகேஸ்வரன் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்த போது நாயகி மிகவும் தயங்கினார் அவர்கள் பெரிய இடம் என்று ஆனால் உங்கள் மகனிருக்க எதற்கு பயம் என்று அவரிடம் கேட்க வாயடைத்து தான் போனார் நாயகி.அவன் கூறியது மட்டும் அல்லாது திருமணத்தை சிறந்த முறையில் செய்தும் காட்டினான்.நாயகிக்கு என்ன வேண்டும் இதை விட தன்னை பெற்ற தாய் என்று அவன் கூறியதிலேயே அகமகிழ்ந்து போய்விட்டார்.
பரிதி மிருதுளா இருக்கும் அறைக்குள் நுழைய அவள் அனைவரின் துணியையும் ஒரு பெட்டியில் அடுக்கியபடி இருந்தாள்.அவளை பின்னிருந்து அணைத்தவன்,
“சண்டகாரி….என்ன பண்ணுற….”
“ம்ம்….பார்த்தா தெரியலை தோப்பு வீட்டுக்கு போக துணி அடுக்கி வச்சிக்கிட்டு இருக்கேன்….ஏன் இவ்வளவு லேட்….”என்று கேட்டுக் கொண்டே அவன் முகம் பார்த்து திரும்ப,
“ம்ம்…கொஞ்சம் வேலை அதான்….”என்றவன் அவளின் கன்னத்துடன் கன்னம் இழைக்க,
“அச்சோ கதவு…”
“மூடியாச்சு…..குழந்தைங்க இரண்டும் அம்மா கிட்ட இருக்கு….அதனால நீ என்னை மட்டும் கவனி….”என்று இழைந்து கொண்டே கூற மிருதுளாவும் அவனுடன் இழைய சிறிது நேரம் இருவரின் பேச்சுகளும் தடைப்பட்டு போனது.அதரங்களின் முற்றுகையில் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து திளைத்திருக்க,எங்கோ ஒரு மெல்லிய சத்தம்,
“ம்ம்….ஏங்க ஏதோ சத்தம்….”என்றவளின் அதரம் வன்மையாக சூரையாடப்பட,மீண்டும் சத்தம் கேட்க மிருதுளா பரிதி தள்ளிவிட,
“ச்சு….என்னடீ….”
“உங்க போன் தான் அடிக்குது பாருங்க….”என்றவளை கண்டுகொள்ளாதவன் மீண்டும் தன் கரங்களில் அவளை வாரிக்கொள்ள சிலபல செல்ல சண்டைகளுக்கு பின் தான் அவளை விட்டான்.
“உங்களைஐஐஐ….இப்ப தான் குளிச்சிட்டு வந்தேன்…..இப்ப திரும்பியும் குளிக்கனும்….”என்று மிருதுளா சிணுங்கி கொண்டே எழ,
“குளிக்கனுமா சண்டகாரி….”என்று விஷமமாக கேட்க,அவனை தலையணையால் மொத்திவிட்டு தான் சென்றாள்.அவள் குளித்து வரும் வரை அவன் எழவில்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.தூங்கும் அவனையே பார்த்தபடியே நின்றாள் மிருதுளா.
எத்தனை மாற்றங்கள் அவனிடம் ஆனால் அதை வெளி உள்ளவர்களிடம் காட்டிக் கொள்ளமாட்டான்.அவனது இயல்பான பேச்சுக்குள் கூட தன் கூட்டில் உள்ளவர்களிடம் மட்டும் தான் மற்றவர்களிடம் அதே முரடான சுபாவம் தான் வெளிபடும் ஆனால் தன்னை கட்டுக்குள் வைக்க கற்றுக் கொண்டான்.
“ம்மா….ம்மா….”என்று மகன் கதவை தட்ட தொடங்க மிருதுளா கதவை திறக்கும் முன் பரிதி எழுந்து கதவை திறந்திருந்தான்.அன்னையை எதிர்பார்த்த குழந்தை தந்தையை கண்டதும்,
“ப்பா….ப்பா….தூக்கு….”என்று கூற மகனை தூக்கிக் கொள்ள,
“ம்மா திவியத்தை கால் பண்ணா…..”என்று பாட்டியின் போனை நீட்ட வாங்கி கொண்டவள்,
“சீக்கிரம் இரண்டு பேரும் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க….”என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.போனில் திவ்யா,
“மிருது….கடையோட சாவியை தேவி வந்து உன்கிட்ட கொடுத்தாளா….”என்று கேட்க,
“ம்ம்….கொடுத்துட்டு போயிட்டாடீ….நீ கிளம்பிட்டியா….”
“எங்க கிளம்ப…இதோ அப்பாவும்,பொண்ணும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க…”என்று கணவனை முறைத்துக் கொண்டே கூற,அவனோ பறக்கும் முத்தம் கொடுக்க அவனை பார்த்து குழந்தையும் அதையே செய்ய திவ்யாவின் முகம் கோபத்தில் சிவக்க தொடங்கியது.
“அச்சோ பாப்பூ….உங்கம்மாக்கு கோபம் வருது வா ஓடிடலாம்….”என்று கூறி முடிக்கும் முன் அவனின் மேல் ஒரு தலையணை வந்து விழுந்தது.
“ம்மா….அடிக்கிறா….”என்று கத்திக் கொண்டே மகேஸ்வரன் ஓடிவிட,திவ்யா மேலும் சிறிது நேரம் மிருதுளாவுடன் பேசிவிட்டு போனை வைத்தாள்.வீட்டு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறு தானிய கடை வைத்து நடத்துக்கின்றனர்.ஆம் திவ்யா,மிருதுளா,வைரம்,நாயகி நால்வரும் தான் கடையின் உரிமையாளர்கள்.
திவ்யா தான் இதை திருமணமான புதியதில் கூற வைரத்திற்கும் மருமகளின் யோசனை நன்றாக இருக்க அவரும் இதில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று தானகவே முன்வந்தார்.இந்த கடைக்கு இடம் வாங்கியது வேண்டுமானால் பரிதியும்,மகேஸ்வரனுமாக இருக்கலாம் ஆனால் கடை கட்ட பணம் எல்லாம் பெண்கள் அவர்களின் சேமிப்பு பணத்திலிருந்து தான் எடுத்து தான் கட்டினர்.பெரிய கடை என்று கூற முடியாது ஒரு பக்கம் கடை ஒரு பக்கம் பொருட்களை அடுக்கும் ரூம் என்று இரு அறைகள் கொண்ட கட்டிடம்.முதிய பெண்கள் இருவருக்கும் அத்தனை பெருமிதம் தங்களின் சேமிப்பு இப்படி நல்ல முறையில் உபயோகமானதில்.இளையவர்கள் இருவருக்கும் தங்களுக்கு என்று ஒரு வருவாய் அதில் அவர்களுக்கும் தங்களால் முடிந்தளவு குடும்பத்திற்கு உதவ முடிகிறது என்கிற தன்நம்பிக்கை.
சென்னையின் ஒதுக்கு புறத்தில் இருக்கும் வீடு அது.சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வெளிபுற சத்தங்கள் எதுவும் உள்ளே கேட்காது இருந்தது.பரிதியும்,மகேஸ்வரனும் இணைந்து வாங்கிய வீடு.வாங்கும் போது அது ஓட்டு வீடாக தான் இருந்தது அதை வாங்கி இவர்கள் கொஞ்சம் புதுமையை புகுத்திக் கொண்டனர் அதனால் பழமையும்,புதுமையும் கலந்து இருக்கும் வீடு.நல்ல விஸ்தாலமான வரவேற்பறை கீழே இரண்டு அறைகள் மேலே இரண்டு அறைகள் அதனுடன் இணைந்த பால்கனி என்று இயற்கையுடன் கூடி அழகாக இருந்தது அந்த வீடு.வார இறுதி நாட்கள் எல்லாம் இரு குடும்பமும் இங்கு தான் இருப்பார்கள்.ஞாயிறு மாலை தான் கிளம்புவர்.
குழந்தைகளுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் இந்த முறை மேலும் மூன்று நாட்கள் இங்கு தான்.வீட்டை சுத்தம் செய்ய மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச என்று அங்கு பக்கத்திலேயே ஒருவரை வைத்திருந்தனர்.இரு குடும்பமும் தோப்பு வீட்டிற்கு வரும் போதே இரவு தொட்டிருந்தது.
“நான் சொன்னா யார் கேட்குறா…பாருங்க லேட்டாகிடுச்சு….”என்று புலம்பிய படி தான் உள்ளே வந்தாள் திவ்யா.மகேஸ்வரனும்,அவனின் மகள் ஆர்த்தியும் வாயில் ஒரு லாலி பப்பை சப்பிக் கொண்டு வர,
“உங்களை தான் திட்டுறேன்னு உங்களுக்கு தெரியுதா இல்லையா….”என்று அவள் கேட்க,இருவரும் பலமாக தலையை ஆட்ட திவ்யாவிற்கு கோபம் இன்னும் கூடி தான் போனது.வைரமும்,மாணிக்கமும் மகனும்,பேத்தியும் செய்யும் அலப்பறைகளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது தான் மிருதுளா வீட்டிற்குள் நுழைய,
“வாடி…… நீ ஏன் எல்லாத்தையும் தூக்கிட்டு வர….”என்று அவளின் கையில் இருக்கும் சாமான்களை வாங்க,பரிதி மகளை கையில் தூக்கியபடி உள்ளே நுழைந்தான் அவனின் பின்னே நாயகி இளவேந்தனுடன் உள்ளே வந்தார்.அவரை பார்த்தவுடன் தந்தையிடம் இருந்து தாவி இறங்கி ஓடிய ஆர்த்தி,
“பாட்டி…..அம்மா அப்பாவை ரொம்ப திட்டுறா….”என்று போட்டுக் கொடுக்க,நாயகி மகளை முறைத்து பார்த்தார்.
“இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம போட்டு கொடுப்பா….”என்று மகளை பல்லை கடித்தபடி பார்த்தாள்.
“அவளை ஏன்டீ முறைக்குற….உன் வாய் ரொம்ப நீண்டு போச்சு….”என்றவர் மாணிக்கத்தையும்,வைரத்தையும் பார்த்து,
“நல்லா இருக்கீங்களா சம்மந்தி…”
“நல்லாயிருக்கோம் சம்மந்தி….வாங்க….”என்ற வைரம் இளவேந்தனிடம்,
“டேய் குட்டி பையா….எப்படி இருக்க….”
“நான் குட்டி பையன் இல்லை பாட்டி….”என்று கூற மாணிக்கத்திற்கு அப்படியே பரிதியை பார்ப்பது போல் இருந்தது.சிரித்துக் கொண்டே அவனை அழைத்தவர் தனது மடியில் ஏத்தி,
“ரொம்ப பெரிய பையன் ஆகிட்டியா நீ…..”
“ம்ம்….ஆமாம்….நான் ஸ்கூலுக்கு எல்லாம் போறேன்ல….அப்ப பெரிய பையன் தான்….”என்று கூற அவனின் தலையை ஆட்டியவர்,
“ஆமா…நீ பெரிய பையன் தான்….போ விளையாடு….”என்று இறக்கிவிட,அவனும் ஆர்த்தியும் விளையாட வெளியில் இருக்கும் சிறிய மணல் திட்டிற்கு செல்ல குழந்தைகளை கவனிக்க என மாணிக்கம் அவர்களுடன் செல்லும் போது அங்கு அமர்ந்திருந்த பரிதியிடம்,
“குழந்தையை கொடு…நான் வச்சிக்கிறேன்….”என்று கேட்க,அவன் அவரின் கைகளில் கொடுக்க அரிசி பல் தெரிய சிரித்தாள் அவனின் மகள்.
“என்ன உங்கப்பனை பார்த்து சிரிக்கிற….ம்ம் குட்டிமா…”என்று ஏதோ அதனுடன் பேசிக் கொண்டே அவர் செல்ல,
“என்னடா பண்ண அப்பாவை அவரும் இப்ப உன் கட்சி பக்கம் வராரு….”என்று மகேஸ்வரன் பரிதியை வம்பிழுக்க,
“அவரு எப்போதும் என் கட்சி தான் உனக்கு தான் தெரியலை….”என்றவன் சமையல் கட்டிற்கு சென்று,
“யாரும் சமைக்க வேண்டாம்…நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன்….”என்றுவிட பெண்கள் அனைவருமே வீட்டின் வெளி திண்ணையில் அமர்ந்து கதை பேச தொடங்கிவிட்டனர்.
இரவு அனைவரும் உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்கு செல்ல மிருதுளா குழந்தைகள் அனைவருக்கும் பால் காய்ச்சி ஒன்றை திவ்யாவின் கையில் கொடுத்துவிட்டு தன் பிள்ளைகளுக்கு எடுத்துக் கொண்டு தன் அறைக்கு செல்ல,அங்கே மகன் மெத்தையில் விளையாடிக் கொண்டிருக்க பரிதி மகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.
“நீங்க ஏன் இதெல்லாம் செய்யுறீங்க….”என்று கேட்டபடி மிருதுளா வர,
“யார் செஞ்சா என்ன….அந்த டவலை எடு….”என்று அவளிடம் டவலை வாங்கி குழந்தையை துடைக்க மிருதுளா மகனிற்கு பாலை புகட்டினாள்.குழந்தைக்கு உடை மாற்றி அவளை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு அவன் குளிக்க சென்றான்.பரிதி திரும்பி வரும் போது மிருதுளாவும்,குழந்தைகளும் அலைச்சலில் உறங்கியிருந்தனர்.அனைவருக்கும் போர்வையை போர்த்திவிட்டு பால்கனிக்கு வந்து நின்று கொண்டான்.மனதில் முன்பு போல் எல்லாம் எந்த எதிர் மறை எண்ணங்களும் இப்போது இல்லை அமைதி அடைந்திருந்தது மனது.
அவனின் வாழ்வு இப்படி மாறும் என்று அவன் கனவு கூட கண்டதில்லை ஆனால் மாறியது கடவுள் அவனிற்கு வாழ ஒரு வாய்ப்பு கொடுத்தார் மிருதுளாவின் மூலம் அதை அவனும் இறுக பற்றிக் கொண்டு இதோ கரை சேர்ந்துவிட்டான்.அவன் வாழ்வில் இப்போது பல நல்ல உள்ளங்களை சம்பாதித்திருக்கிறான் தான் ஆனால் இது அனைத்திற்கும் ஆரம்பம் அவள் தானே அவளின் உறுதி தானே ஒருவேளை அவள் தன்னை விட்டு சென்றிருந்தால் என்று நினைத்தவன் பின் தன் தலையை குலுக்கிக் கொள்ள அப்போது பின்னிருந்து ஒரு வெண் கரம் அவனைக் கட்டிக் கொண்டது.அந்த கரத்தை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,
“சண்டகாரி….”
“ம்ம்ம்….”
“லவ் யூ….”
“நானும் தான்….”என்று வெட்கத்துடன் கூறிக் கொண்டே அவனை இறுக்கி கொண்டாள்.
ஒரு மனிதன் வாழ்வில் நல்ல மனிதர்களை சம்பாரித்துக் கொண்டால் அவனது வாழ்வு வலமாகும் என்பதற்கு பரிதி ஒரு நல்ல உதாரணம்.மனிதர்களே வேண்டாம் என்று தனித்து வாழ்ந்தவன் இன்று நல்ல மனிதர்களை தன் வாழ்வுடன் பிணைத்துக் கொண்டான். இன்றும் அவனின் இதயம் இரும்பை போன்றது தான் ஆனால் அதில் துடிப்புகளாக அவனை நேசிக்கும் உறவுகள் இருக்கின்றன.
அன்பு என்ற ஒன்று இரும்பையும் உருக செய்யும்.
பரிதியும் அந்த அன்பில் உருகி தான் நிற்கிறான் இனியும் உருகுவான்.
(சுபம்)
error: Content is protected !!