Skip to content
Post Views: 14,762
அத்தியாயம் 2
குழந்தையோடு முதலில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பூஜைசெய்து பெயர் சூட்டி பிறகுதான் வீட்டிற்கு வந்தனர் ரங்கசாமியும் ஜானகியும்.
ரங்கசாமியின் தந்தை அவரின் ஐம்பதாவது வயதில் இறந்திட, மகன் தத்தெடுத்த குழந்தைக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை அவரின் அன்னை.
ரங்கசாமி இப்படி செய்வார் என எதிர்பார்க்காத நாராயணனும் வனிதாவும் பேரதிர்சிக்குள்ளானார்கள். எங்ககிட்ட ஒருவார்த்தை கலந்துக்கல, நீங்க பாட்டுக்கு தத்தெடுத்துட்டு வந்திட்டிங்க. குழந்தை என்ன குலமோ கோத்திரமோ? என்று புலம்பினார் வனிதா.
Advertisement
குழந்தை வரம் கிடைத்தவர்களுக்கு குழந்தை பெரிய விசயமல்ல. ஆனா ரங்கசாமிக்கு அப்படி இல்லையே. குழந்தையின் தெய்வீக சிரிப்பில் மயங்கியவர் தெய்வமாகவே நினைத்தல்லவா தத்தடுத்தார்.
இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்துதானே இவர்கள் குழந்தையை தனக்கு தர மறுதத்தை நான் தவறாக நினைக்கவில்லை. எனில் என் விருப்பத்திற்கு இவர்களிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்ற கோபத்தோடு, குழந்தையின் குலம் கோத்திரம் பற்றி அக்காள் பேசியது அதீத கோபத்தை உண்டாக்க, “இது என் விருப்பம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” என்று பட்டுத்தெறித்தார் ரங்கசாமி.
அன்னைக்கும் தம்பி செயலில் சம்மதம் என்றுணர்ந்த வனிதா, “என் அப்பா இருந்தா இப்படி நடக்குமா?” என்று அங்கலாய்த்தார்.
Advertisement
“பத்து வருசத்துக்கு முன்ன ரங்கசாமி இப்படி செய்திருந்தான்னா சம்மதிச்சிருப்பேனா தெரியாது, ஆனா இப்போ என் மகன் குழந்தையை தத்தெடுத்த்து எனக்கு பரிபூரண சம்மதம்.
Advertisement
பண்டிகை, நல்லநாள்னு உங்க பிள்ளைக்கு அவன் செய்யும் போது அவனுக்குனு ஒரு குழந்தை கொடு கடவுளேனு வேண்டிக்குவேன், ஏன் தெரியுமா? இன்னைக்கு நடை உடையா இருக்கும்போது கூட இருக்கிற நீங்கள்லாம் நாளைக்கு அவனுக்கு வயசான பின்ன துணையிருப்பிங்கன்ற நம்பிக்கை எனக்கில்ல.
உன் இரட்டை பிள்ளையில ஒருத்தனை கேட்டான்ல? கொடுத்திருந்தா என்னனு மனசை அழுத்திட்டுதான் இருந்தது. ஆனா வற்புறுத்தி வாங்கிக்கிறது ரங்கசாமிக்கு பிடிக்காதுனு விட்டுட்டேன்.
ஒரம்பரையா வந்துட்டு போற சொந்தம் ஆயிரம் இருந்தாலும் தனக்குனு ஒருத்தராவது வேணும். லட்ச லட்சமா சம்பாதிச்சவன் வாழ்க்கையை அர்த்தமில்லாம போய்டுச்சேனு வருந்தாத நாளில்ல. இன்னைக்குதான் அந்த தெய்வம் கண்திறந்திருக்கு. என் மகன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் பிறந்திருக்கு.
Advertisement
யார் பெத்த குழந்தையோ… தெய்வீக முகத்தை பார்த்ததும் முழு மனசோட பேத்தியா ஏத்துக்குச்சு என் மனசு. என் பேத்தியைப் பத்தி இனி பேசாத வனிதா” என்றுவிட்டார் ரங்கசாமியின் அன்னை.
அண்ணன் தம்பி அக்கா மூவரும் பாசத்தோடு ஒற்றுமையாக இருந்தவர்கள்தான். ரங்கசாமிக்கு குழந்தையில்லை என்று வருந்தியவர்கள்தான். ஜானகி ஐ.வி.எஃப் முறை சிகிச்சையின் போதெல்லாம் வனிதாவும் உடனிருப்பார்.
ஆனால் குழந்தையை தத்தெடுத்தது பிடிக்கவில்லை. ஏன் எனக்கும் நாராயணனிற்கும் இல்லையா? இவர்களை வாரிசாக ஏற்றால் என்ன? என்று ஆற்றாமையாக இருந்தது. நாராயணனிற்கும் அண்ணனின் செயலை ஏற்க முடியவில்லை.
அண்ணனை கேட்காமல் ஒன்றுகூட நான் செய்ததில்லையே, எனில் ஒருமுறை தன்னிடம் ஆலோசித்திருக்கலாமே என்று தோன்றியதோடு, யாரோ பெற்ற குழந்தையை தன் அண்ணன் வாரிசாக ஏற்கமுடியாமல் போனது. ஆனால் அன்னைக்கும் பிடித்திருக்க தான் எதாவது பேசினால் அண்ணியும் அண்ணனும் தன்னை கீழாக நினைப்பார்கள் என்று அமைதியாகிவிட்டார்.
அண்ணனின் பாசமும் உரிமையும் தனக்கும் தன் வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமாகப்போகிறது என்ற எண்ணத்தில் இருந்தனர் வனிதாவும் நாராயணனும்.
குழந்தையை தத்தெடுத்து வந்ததில் எல்லாம் அடிபடுமோ என்ற எண்ணம் தோன்ற, வனிதாவால் தாளமுடியவில்லை. தவிர இது தவறென்ற எண்ணமும் கூட இல்லை. ரங்கசாமியின் உடன்பிறப்பான தனக்கும் தம்பிக்கும் இல்லாத உரிமை யாரோ ஒருத்தி பெற்ற குழந்தைக்கு செல்வதா என்று வன்மம் உண்டானது மனதில்.
ஜானகியும் ரங்கசாமியும் இல்லாத நேரம் இவ்வீட்டில் தனக்கான உரிமையை நிலைநாட்ட நினைத்த வனிதா, முல்லையின் சிறு வயதிலிருந்தே நீ என் தம்பியின் வளர்ப்புமகள் என்ற உண்மையை உணர்த்தியிருந்தார்.
அறியா சிறுமி அழுதுகொண்டே தன் பாட்டியிடம் சொல்ல, சின்ன பிள்ளைகிட்ட இப்படி வன்மத்தை காட்டுறியே… உன்னையெல்லாம் என் மகள்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு என்று கோபத்தை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தார் ரங்கசாமியின் அன்னை.
அதன் பின்னே விசயம் ரங்கசாமி வரை போக, என் மகளுக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கும் இல்லை, நான் இல்லாத நேரம் இப்படி மகளிடம் பேசினால் என் உறவை இழக்க நேரிடும் என்று அக்காளிடம் திட்டவட்டமாக சொன்னார்.
ரங்கசாமி சொல்வது சரியா? என மகளுக்கும் அன்னைக்கு பெரிய சண்டை வந்தது. நீ மகள்னாலும் உன் கீழ்தரமான எண்ணத்திற்கு நான் துணைபோக மாட்டேன் என்றுவிட்டார் ரங்கசாமியின் அன்னை.
அதன் பிறகு ரங்கசாமி அன்னை பேத்தி மீது அதீத கவனம் கொள்ள, அவர் இருக்கும் வரையில் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்தது. அதாவது முல்லையின் பதினான்காம் வயதுவரை.
தொண்ணூறு வயதை எட்டியிருந்த நிலையில் ரங்கசாமியின் அன்னை இறந்திட, இழந்த தைரியத்தை மீண்டும் வர வைத்திருந்தார் வனிதா. தாய்மாமனின் பெருமையை தன் வாரிசுகளிடம் சொல்லி, முல்லைக்கு வந்த வாழ்வு. உன் மாமனிடத்தில் முல்லையை விட உனக்கும் உன் சின்ன மாமன் மகன் மகளுக்கும்தான் உரிமை அதிகம் என்று மகன்களிடம் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.
அன்னை முயற்சியின் பலனாக பள்ளி முடித்து வரும் முல்லையிடம், என் மாமா உன்னை தத்தெடுத்ததால்தான் உனக்கு இந்த வாழ்வு. இல்லையேல் அநாதை ஆஸ்ரமதில் இருந்திருப்பாய் என்று முல்லையை கீழிறக்கி பேசுவான் வனிதாவின் மகன்.
இது வனிதாவிற்கு தெரியும்தான். ஆனால் மகனை கண்டித்ததில்லை. இவ்விசயம் ஜானகிக்கு தெரிய வர, யாரோ என்னவோ சொல்லட்டும். எங்களுக்கு நீதான் உயிர். நீ வந்த பின்னதான் நானும் உன் அப்பாவும் நிம்மதியோடும் மகிழ்வோடும் இருக்கிறோம் என்று மகளை தேற்றுவார்.
ஆனாலும் வனிதாவின் மகன்களோ, நாராயணன் மகனோ வீட்டிற்கு வந்தால் முல்லையின் முகம் வாடிவிடும்.
இதோ… இன்றும் அப்படித்தான். வெளியில் ஆண்பிள்ளைகள் தன்னைப் பார்த்து பாடிய பாடலை முணுமுணுத்தபடி வீட்டினுள் மகிழ்வோடுதான் வந்தாள். ஆனால் வனிதா மகனைக் கண்டதும் பாட்டு தன்போல் நின்றது. வழக்கம்போல அவர்கள் வீட்டில் தான் இருப்பதை போன்ற உணர்வு வந்தது.
ஜானகி டீயை வைத்து எடுத்து வர, முல்லை இன்னும் அவளறையில்தான் இருந்தாள்.
என்ன செய்தால் அத்தையும் (வனிதா), சித்தப்பாவும் (நாராயணன்), சமாதானமாவார்கள்? என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள். பொறியியல் படிப்பின் இறுதியாண்டில் இருப்பளுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை.
இன்னும் ஒரு மாதத்தில் தனது படிப்பு முடிந்த பின்னே வீட்டில் எப்படி இருப்பது என்ற நினைப்பு பயத்தை உண்டாக்கியது. கேம்பஸில் தேர்ச்சி பெற்றிருந்தாள். சென்னையில் புகழ் பெற்ற கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் மகளை விட்டு பிரிய மனமில்லாத ரங்கசாமி, “இங்கயே எதாவது வேலை பார்த்துக்கலாம்டா” என்றுவிட்டார்.
தற்போது எழுபத்தி ஐந்து வயதில் இருக்கும் தந்தையையும், அறுபத்தி எட்டு வயதில் இருக்கும் அன்னையையும் விட்டு பிரியவும் மனமில்லாமல் போக, தந்தையின் கூற்றை ஆமோதித்து சென்னைக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டிருந்தாள்.
ஆனால் தற்போது அவ்வேலைக்கு சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. தாம் இல்லையென்றால் அத்தை மற்றும் சித்தப்பாவிடம் தந்தையின் கோபம் குறையுமா? அத்தையும் சித்தப்பாவும் அவர்களுக்கான உரிமையைதானே கேட்கிறார்கள் என்று யோசித்திருந்தாள்.
“என்ன யோசனைலடா இருக்க?” என்று வாஞ்சையாய் மகளின் கேசம் வருடி, “வா வெளில் உக்கார்ந்து டீ குடிப்பியாம்” என்றார் ஜானகி.
“இல்லம்மா, இங்கையே குடிக்கிறேன்” என்று அன்னையிடமிருந்து டீயை வாங்கினாள்.
மகள் டீயை பருகிகொண்டிருந்த நேரம் ஜானகிக்கு ஓர் எண்ணம் உதயமாக, முதலில் கணவனிடம் பேசி, பின்னே மகளிடம் பிடித்தமா எனக்கேட்டு, அதன்பின்னே வனிதாவிடம் பேசலாம் என நினைத்திருந்தார்.
ரங்கசாமிக்கும் தற்போது எழுபத்தி ஐந்து வயதாகிறது. ஒரு வருடமாகவே மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தனக்கு வயதாகிறது என்ற காரணத்திற்காக படித்துக்கொண்டிருக்கும் மகளுக்கு திருமணம் செய்ய நினைப்பது பெரும் தவறென தனது எண்ணத்தை முல்லை படிப்பு முடியும்வரை தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தார்.
தற்போது முல்லையின் படிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடியவிருக்க, ஒரு மாதமாக மகளுக்கு வரன் பார்க்கும் எண்ணம் வந்திருந்தது.
வழக்கமாய் மாலை வேளையில் தனது காம்ப்ளக்ஸ் வளாகத்தில் சிறிது நேரம் நடை பயில்வதும், பின்னே பழக்கமானவர்களிடம் சிறு உரையாடல்களையும் நடத்தி இரண்டு மணி நேரத்தை கடத்தி பின்னேதான் வீடு வருவார்.
இன்று கணவன் வரும் நேரம் ஆகியும் வராமல் போகவே, கணவனுக்கு அழைத்தார் ஜானகி.
“தோ வந்துட்டே இருக்கேன் ஜானு” என்று இணைப்பை துண்டித்தார்.
வீட்டிற்கும் காம்ப்ளக்சிற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் காரில் டிரைவரோடுதான் போவார். வேலையிலிருந்து அறுபது வயதில் ஓய்வெடுத்தார். வீட்டிலேயே அடங்கிவிட்டால் மகள் திருமணத்திற்கு முன் படுத்திடுவோமோ என்ற பயம் வர, முல்லைக்காகவே தன் உடலை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார்.
ரங்கசாமி வீட்டிற்கு வர, “ஏங்க முக்கியமான விசயம் பேசலாம்னு காத்திட்டிருந்தா இன்னைக்கு பார்த்து லேட்டா வரிங்க” என கோபித்தார் ஜானு.
“முல்லை எங்க?” என்றார் ரகசிய குரலில்.
“நிதீஸ் இருக்கவும் வெளிலயே வரலங்க, ரூம்ல படிச்சிட்டிருக்கா. என்ன? சந்தோசமா இருக்க மாதிரி இருக்கு?” என்றார் தானும் ரகசிய குரலில்.
“அவன் மட்டுமா வந்திருந்தான்?” என்றார் சிறு கோபத்தோடு.
“ஆமாம்ங்க, ஆனா இந்த முறை எனக்கு கோபம் வரல, பழைய மாதிரி முல்லையை அவன் ஏதும் சொல்லல, அதோட இன்னைக்கு நானிருந்தா உங்க மகளுக்கு பிடிக்காது. கிளம்பறேனு கோவிக்காம கிளம்பினான்” என்றார் இன்முகத்தோடு.
ரங்கசாமி அமைதியாக சோபாவில் அமர, “ஏங்க கோபமா இருக்கிங்க?” என்றார்.
“இனி பசங்க என்னை பார்க்க வரனும்னா உன்னோடதான் வரனும், தனியா அனுப்பாதேனு வனிதாகிட்ட போன மாசமே சொல்லிட்டேன். சொல்லியும் தனியா எதுக்கு அனுப்புது?” என்றார் கோபமாக.
“அச்சோ ஏன் அப்படி சொன்னிங்க? அதனாலதான் அண்ணி ஒருமாசமா வீட்டுக்கு வரதில்லையா?” என்றார் தவிப்போடு.
“கொஞ்ச நாளா நிதீஸ் பார்வை சரியில்ல, அதனாலதான் அப்படி சொன்னேன், இதுல வருத்தப்பட ஒன்னுமில்ல” என கண்டிப்போடு சொல்லி, “முல்லை எங்க?” என்றார்.
“செம் வரப்போகுதில்ல? படிச்சிட்டிருக்கா” என்றார்.
“புரோகர்கிட்ட சொல்லியிருந்தேன், ஒரு வரன் சொன்னார். இரண்டு பசங்களாம். சின்னவனுக்கு பார்க்குறாங்க. எம்.பி.எ முடிச்சிட்டு தனியார் பேங்க்ல வேலை பார்க்கிறாராம். ரொம்ப நல்ல குடும்பம். முல்லைக்கு பிடிச்சிருந்தா மூனு மாசமோ ஆறுமாசமோ கழிச்சு கல்யாணத்தை முடிச்சிடலாம்” என்றார் மகிழ்வோடு.
*** *** *** ***
error: Content is protected !!