Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(னை)து சுகமானதே… 15

கற்பனை 15

தனது மகளைக் கண்ட கண்மணிக்கு பெருமூச்சு வந்தது. மனதில் வைத்துப் புழுங்க முடியாதவளாகஎன்ன திரு,மாப்பிள்ளை உள்ளே வராமலேயே கிளம்பிட்டாரு?” அம்மாவின் கேள்விகளை உள்வாங்கியவளுக்கும் மனதிற்குள் இதேதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கே தெரியாத பதிலை எப்படி சொல்ல முடியும்?



Advertisement

இல்லேம்ம்மா . எனக்கு விசா வந்திருச்சு. அது சம்மந்தமா நிறைய வேலைகள் இருக்கு. அதனாலதான் உங்ககிட்ட சொல்லிட்டு வீட்டில டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வா .நா போய் வேலைகளை முடிக்கிறேன்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு” .

மகளின் பதிலைக்கேட்டவர்களுக்கு  அடுத்து  என்ன பேசுவது என்று புரியாமல் சற்றே மௌனம் காத்தார்கள். சாம்பசிவம் மெள்ள தன்னை மீட்டுக் கொண்டவர்களாகஓஹ் ..விசா வந்தாச்சா திரு.எப்போ வந்தது?நீ ஏன் எங்ககிட்ட  போன் பண்ணி சொல்லல?”என்று கேள்வி எழுப்பினார். அப்பாவின் கேள்வி லேசாக உறுத்த ,”இல்லேப்பா,நா போன் பண்ணி சொல்றேன்னு அவருகிட்ட சொன்னேன்.அவர்தான் இதையெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம்.நேரே போய் சொன்னாதான் மரியாதையாய் இருக்கும்னு..

Advertisement

Advertisement

மகள் சொல்வதை சட்டென ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்,மாப்பிள்ளை நிவாஸின் மனதில் தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமெல்லாம் இல்லை என்பதை சாம்பசிவம் உணர்ந்தே இருந்தார்.அதனால் வேறேதும் கேட்கவில்லை. கண்மணி தனது மகளிடம் கேட்டாள் ,”அப்போ எப்போ கிளம்பணும் திரு?”

ம்ஹும்..தெரியலைம்மா .முதல்லே அவர் மட்டும் கிளம்பிப் போறதா இருந்துச்சு.இப்போ அவரோட டிக்கெட் கேன்சல்  பண்ணிட்டாரு.எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பாக்குறாரு. கிடைச்சா உடனேயே கிளம்பவேண்டியதா இருக்கும்.  திருவின் மனதில் எந்த தயக்கமும் இல்லை. இவர்களை விட்டுப் பிரிகிறோமே என்றெல்லாம் தோன்றவில்லை.

Advertisement

முதலில் கணவனைப் பற்றிய பயங்களும் ,யோசனைகளும் இருந்ததுதான். இப்போது அவற்றையெல்லாம் காணாமல் செய்திருந்தான் நிவாஸ். தைரியமாக கிளம்பத் தயாராகி விட்டாள் . கண்மணி மீண்டும் கேட்டாள் ,”ஏன் திரு, எங்களைவிட்டு இவ்ளோ சீக்கிரம் கிளம்ப போறோம்னு உனக்கு கஷ்டமா இல்லையா..

என்னம்மா…கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.பட்  இதுதானே நிதர்சனம் ம்மா..தெரிஞ்சுதானே கல்யாணம் நடந்தது. இப்போ போகமாட்டேனு சொல்ல முடியுமா? இன்பாக்ட்  விசா எப்போ வரும்னு தானே வெயிட் பண்ணோம் .

பெண்ணின் வார்த்தைகள் கண்மணிக்கு ஆறுதலை அளிக்கவில்லை,மாறாக வருத்தத்தை அளித்தது.தன்னை சமன் செய்துக் கொண்டும்ம்.நீ சொல்றது சரிதான். என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆன பொண்ணு புருஷனோட போகத்தானே வேணும்என்று முடித்துக் கொண்டாள் .

அவளது மருமகள் இங்கே புகுந்த வீட்டில் இருப்பதுபோல் தான், மகளும் கணவனுடன் இருப்பதுதானே சரிஎன்று மனது நியாயம் சொன்னது. வீட்டுக்கு வந்திருக்கும் மகளுக்காக முந்திரி அல்வா கிளறினாள் . இனி, பெண் அமெரிக்கா சென்றுவிட்டால் எப்போது நேரில் பார்ப்போமா என்ற ஏக்கம் மனதில் பாரமாய் அழுத்தியது.

கண்மணியின் கைப்பக்குவத்தில்  வீடே மணத்தது. மாலைவரை  பெற்றோருடன் கழித்தவள் தனது அண்ணனும் அண்ணியும் வந்தவுடன் திருமகள் அவர்களுடன்  கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாள். அவளது பேச்சில் கொஞ்சமே வெளிநாடு செல்லும் அஹங்காரம் இருந்தது . வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ளவில்லை என்றாலும் மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நிரூபனுடன் அவள் வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடவும் ஒருகாலத்தில்  நினைத்தாள் தானே .கனவுகள் கை சேரும்பொழுது  ஏற்படும்   ஒருவித மயக்கத்தில் இருந்தாள் திருமகள். அவளது காதலைப் பற்றி யாருக்கும் தெரியாதுதான்.ஆனால்,அவளது இந்த மயக்கத்தை தெளிய வைக்க   திருவின் வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை.சாருவும்கூட புதியதாகத் திருமணம் ஆன பெண். இங்கிருந்து  கிளம்பப் போகிறாள்.அவள் பேசுவதை  பெரியதாகப் பார்க்கவேண்டாம் என்று அவளும்கூட மெளனமாக இருந்தாள் . திருவின் பேச்சில்   நிறைய குத்தல்களும் இருக்கத்தான் செய்தது. 

அவற்றை அப்படியே விட்டான் நரேந்திரன். கண்மணிதான் மகளைத் தனியாக அழைத்து  உனக்கு நல்ல பெரிய இடத்துல கல்யாணம் செஞ்சு குடுத்திருக்கோம் திரு,கொஞ்சம் ஒழுங்கா பேச கத்துக்கோ..ஏற்கனவே உன் புருஷன்  எங்களை  மதிக்கிறது இல்ல.இன்னிக்குக்கூட பாரு, நீ எவ்ளோ சமாளிச்சாலும் உன் புருஷன் வாசலோட போனது தப்புதானே ! 

தனது  மகள் நடந்துகொள்ளும் விதம் கண்மணிக்கு சற்றும் பிடிக்கவில்லை. இப்போதெல்லாம் தன் பேச்சை கேட்டு மறுத்துப் பேசாமல்,அதேசமயம் நல்ல தோழியாகவும் கூட இருக்கும்  சாரு மீது கண்மணிக்கு பாசம் உண்டாகியிருந்தது. பெற்றபெண் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு ,வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் அந்த இடத்தை  நிரப்பினாள் . திருவுக்கும் இவை கண்களில் படாமல் இல்லை. இங்கிருந்து கிளம்பும்  தாக்கம் ஒருபுறம் என்றால் தாயின் பாசம் அண்ணிக்கு கிடைப்பது அவளது எரிச்சலைக் கிளப்பி விட்டிருந்தது.

ஆமா,அவர் அப்படித்தான். அங்கே அமெரிக்காவுல படிச்சு சுயமா வேலை தேடி இப்போ இவ்ளோ பெரிய பொசிஷன்ல இருக்காரு. உன்னோட பையன மாதிரி சி.ஏ பாஸ் பண்ண தலையால தண்ணி குடிக்கல. இப்பவும் அவரோட பக்கத்துல நிக்குற அந்தஸ்த்து நமக்கு இல்ல தானே..இந்த வீட்டுல பொண்ணு எடுத்தே பெருசு. அப்புறம்..அவரு நீங்க பார்த்த மாப்பிள்ளைதான், நானே காதலிச்சு தேடிகிட்டவர் இல்ல. எப்படியும் நா அவரை ஒத்து தானே போகணும்?”

மகளின் பேச்சு கண்மணியை ரொம்பவே பாதித்து விட்டது. அதே சமயம் தன் மாமியாரிடம் இரவு உணவு பற்றிக் கேட்கவந்த சாருமதியும்   திருமகள் சொன்னவற்றை ஒன்றுவிடாமல் கேட்டுவிட்டாள் . என்னதான் இருந்தாலும் தனது கணவனை பற்றி அவனது சொந்த தங்கையாகவே இருந்தாலும்  இவ்வாறு பேசுவது  சாருவுக்கு உவப்பாக இல்லை, அதுவும் அவள் கணவனுடன் ஒப்பிட்டு பேசுவது எப்படி சரியாக இருக்கும்?

திரு கிளம்பும் வரை தன் மனதை வெளிக் காட்டாமல் இருக்க சாரு ரொம்பவே முயற்சி செய்யவேண்டியது ஆகிவிட்டது. கூடப் பிறந்த தங்கை தன் சொந்த அண்ணனை இவ்வளவு கீழிறக்கிப் பேச முடியுமா என்று அவளுக்கு ஆறவில்லை.

சி.ஏ பாஸ் செய்வது எவ்வளவு கடினமான ஒன்று. அதனால்தானே அந்த படிப்பிற்கு இவ்வளவு மரியாதை?இந்தப் பெண் தெரிந்துதான் பேசுகிறாளா என்று யோசித்து  சாருவுக்கு தலை வலித்தது. நரேந்திரனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் கூட  மனைவியின் மனதுள் ஏதோ அரிக்கிறது என்பதை நரேனும் புரிந்து கொண்டான். 

திருமகள் கேப் எடுத்துக்கொண்டு  தனது நங்கநல்லூர் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.இரவு வெகுநேரம் ஆகியும் நிவாஸ் வரவில்லை. கடற்கரைக்கு சென்றிருந்தான். மனதில் அவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள். 

நிவாஸ் வீட்டுக்கு வருவதற்கு இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது. மனைவியை பற்றி அவனுக்கு எப்போதுமே ஒரு அதிருப்தி உண்டு.ஜாதகம்,ஜோசியம்,குடும்பப்பின்னணி என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி அவன் வீட்டில் திருவாய் திருமணம் செய்து விட்டார்கள். சுத்தமாகவே அவள்மீது அவனுக்கு ஈர்ப்பு இல்லைதான். 

அவள் தனது தொழில் தகுதிகளிலும் அதிகம் தனது கவனத்தை செலுத்தவில்லை என்பது அவனை நிரம்பவே தாக்கியது. சாப்ட்வேர் வேலையில் இருந்தவள் தன்னை அப்டேட் செய்துக் கொள்ள விரும்பாமல் ,ஏதோ ;பாட்டு ,டான்ஸ் கிளாஸ் எடுக்கறேன்னு..சுத்த பிதற்றல்.இதில் அவளுக்குப் பெருமை வேறு.ச்சை ..என்று அலுத்துக்கொண்டான். 

இவ  அங்கே வந்து என்ன பண்ண போறா..சுத்த வேஸ்ட் பீஸ் என்று கரித்துக்கொட்டினான். ஆனாலும் அவளுடன் கழித்த இரவு..அது அவனை அவள்பால் சாய வைத்ததுவும் ஒன்று. அங்கே வீட்டில் தனியாக இருப்பதும் தானே சமைத்து சாப்பிடுவதும் போர் தான். யாராவது தனக்குக் கட்டுப்படும் பெண் கிடைத்தால் பரவாயில்லை என்றும் எண்ணமுண்டு.

இப்போது இருக்கும் பெண்கள் உரிமை ,பெண்ணீயம் என்று எவ்வளவு கொடி பிடிக்கிறார்கள் என்று அவனுக்கு வெறுப்பு உண்டு.  அது மட்டும் இல்லை,பொதுவாகவே பெண்களை அவனுக்கு அவ்வளவாக பிடிக்காது. மரியாதையும் கிடையாது. ஏதேதோ யோசித்துக்கொண்டு இருந்தவனின் மனதில் சாருவின் முகமும் வந்து போனது.

அந்தப்பெண் எவ்வளவு எளிதாக அவர்கள் குடும்பத்தில் அங்கமாகிவிட்டாள் . இத்தனைக்கும் அவள் பூர்வீகம்,மொழி,எல்லாமே வேறு.போதாதகுறைக்கு எவ்வளவு சுறுசுறுப்பு..நரேந்திரன் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டதிலும் காரணம் இருக்கு என்று தனது மனைவியை அவளது அண்ணன் மனைவியுடன் ஒப்பிட்டு  வேறு பார்த்துக்கொண்டான்.

எவ்வளவுநேரம் இப்படியே இருக்கமுடியும் என்று எட்டு மணிக்குமேல் தான் அவன் கடற்கரையிலிருந்து கிளம்பியதே. கணவன் மனதில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே  தனது தனியுலகில் சஞ்சாரம் செய்துக்கொண்டிருந்தாள் திருமகள்.

அவள் பாதையும் மனதும் வேறு..இவனது எதிர்பார்ப்புகள் வேறு. தன்னை மேம்படுத்திக்கொள்ள திருமகள் எந்த முயற்சியும் செய்தாள் இல்லை. நிவாஸும் அவளது ஆசைகள் கனவுகள் பற்றி எப்போதுமே முன்பும் இப்போதும் பேசவில்லை. பொத்தாம் பொதுவாக மனைவியை பற்றி தானே ஒரு கருத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டவனுக்கு அதிலிருந்து வெளியே வர இஷ்டமும் இல்லை. 

வீட்டுக்கு வந்த கணவனுக்கு ஏதாவது தேவையா என்று மட்டும் விசாரித்தவள் அதற்கு மேல் காதில் ஹெட் போனை வைத்துக்கொண்டு பாட்டு கேட்டவாறே தங்களது அறைக்குள் சென்று விட்டாள் .நிவாஸ் அவளிடம் கொஞ்சம் தழைத்து வந்ததால் அவளுக்கும் அவனை புரியவில்லை. 

எங்கே தவறு என்று நானும் யோசித்துப்பார்க்கிறேன். திருமண உறவில் எத்தனை கலவைகள்!அதில் இதுவும் ஒன்று என்றால் இன்னொரு கலவை ஜான்வி-சாகேத். இருவரும் பெங்களூரு வந்தாயிற்று.தேன்நிலவு செல்லலாமா..என்று சாகேத் கேட்டதற்கு,நம்ம பெங்களூரு வீட்டுல நாம ரெண்டு பேருதான். வேற எந்த தொல்லையும் இல்லே. பெருசுங்க டார்ச்சரும் இல்லே.அப்புறம் எதுக்கு ட்ராவல் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணனும்?என்று கேட்ட மனைவியிடம் அப்போதே அவனுக்குள் சிறு அருவருப்பு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. வீட்டுப் பெரியவர்களை அவள் அப்படி பேசியது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

ஏற்கனவே,அவள் மீது சாகேத்துக்கு பெரிய ஈடுபாடு இல்லை.இதில் அவளது வார்த்தைகள் வேறு அவளை பற்றி அவன் மனதில் தரம் இறக்கிக் காட்டியது. சொன்னதற்கு ஏற்பவே ஜான்வி வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் சாகேத் மீது விழுந்தாள். நேரம் காலமெல்லாம் அவளுக்கு கிடையாது. அலுவலகம் செல்லும் பொழுது சாகேத் மனதில் ரொமான்டிக் பீல் வருவதற்கு பதிலாக ஹப்பா ..தப்பிச்சேன் என்ற எண்ணம். திருமணம் முடிந்த புதியதில் இந்த எண்ணம் சரிதானா?

ஜான்வி மீது நிச்சயம் தவறுகள் உண்டு.அது தெரியாமல்தான் சாகேத் அவளை திருமணம் முடித்தது.ஒப்புக்கொள்கிறேன்.அதற்காக மனைவிக்கென்று பிரத்யேக உணர்வுகள் கணவன் மீது எழும்பொழுது கணவன் மனைவியை  அனுசரித்துப் போனால்,கொஞ்சம் பிரச்சனைகள் குறையும்தானே!

இது ஆண்  பெண் இருவருக்கும் பொருந்தும்.

ஜான்வி  அவளும் சாகேத்தின் எண்ணப்போக்கை புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளலாம். ஆனால் ,அவளால் அது எப்போதுமே முடியாது. விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை எனும் வாக்கியம் சரி என்றால்,பல குழப்பங்கள் ஏன் வரவேண்டும்? தேவையில்லாத பல விஷயங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றிவிடுகிறது. 

அன்றிலிருந்து பதினைந்தாவது நாளில் நிவாஸ்-திருமகள் இருவரும் அமெரிக்கா செல்வதற்கு டிக்கெட் கிடைத்துள்ளது.திருமகள் தனது பொருட்கள் எல்லாவற்றையும் பேக் செய்து வைத்துவிட்டாள் . நிவாஸ் இனி எப்போது இந்தியா வருவோம் என்று சொன்னது மூளையில் உறைக்க தேவைக்கு அதிகமாகவே பேக் செய்தாள்.

அவளை ஏளனமாக பார்த்தவன்,”அங்கே எல்லாமே இப்போவெல்லாம் கிடைக்குது. இவ்வளவு பேக்கிங் அவசியமில்லை என்றவனுக்கு ஒரே சூட் கேஸ் தான். அவளது பொருட்களில் பாதியை வைத்துவிட்டு வர நிர்பந்தம் செய்தான் நிவாஸ்.

எதை எடுப்பது,எதை  விடுப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் திரு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!