வண்ணம் 35.2
தமயந்தி அருண் திருமணம் ஜரூராக ஏற்பாடு ஆனது. அருணும் நண்பர்களும் எல்லா வேலைகளையும் பார்க்க பூமிகா தோழியை “பிடிச்சிருக்கா, கல்யாணத்துக்கு அப்பறம் பிடிக்கலைன்னா என்ன செய்வ” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தாள்.
பூமிக்கு தமயந்தியின் மந்தமான குணம் பயம் கொடுத்தது.
தமயந்தி “எனக்கு அவன் எது பண்ணாலும் எப்பவும் புடிக்கும்டீ. என் மனசு ஒரு மானங்கெட்ட மனசு அவன் மேல கோவம் வருது ஆனா கூடவே பாவம்ன்னு எண்ணம் வருது. ஆனா அவன் கல்யாண் பையன்ங்கிற விஷயம்தான் என்னவோ வித்தியாசமா பீல் ஆகுது” என்றிருந்தாள். அதற்கு பதில் அருந்ததீயிடமிருந்து வந்தது “எல்லா பசங்களும் அவங்களுக்கு முன்னாடி இருக்கிறவங்கள பார்த்து எப்படி வாழனும்ன்னு கனவு கண்டு வளர்வாங்க. என் பையன் யாரை போலெல்லாம் இருக்கக்கூடாதுன்னு பார்த்து வளர்ந்தவன்மா. ஏழு வயசுல அம்மாவுக்கு நடக்கிற கொடுமையை பார்த்து தாத்தாவுக்கு போன்ல கூப்பிட்டு சொன்னவன். அவன் அறிவுக்கு எப்படி வேணாலும் நடந்துக்கலாம் ஆனா அவன் என்றைக்குமே நியாயமா இருக்கத்தான் பார்ப்பான். என் கண்ணுக்கு கூட உன்மேல அவனுக்கு இருக்கிற ஆசை தெரியலன்னா பார்த்துக்கோ எவ்வளவு ரகசியமா இருந்திருக்கான்னு! மகனை பெருமையாக பேசி எடுத்துச் சொன்னார்.
அருண் தமயந்தி திருமணம் முடிவான செய்தி வெளியேவர நிறைய சேனல்கள் இண்டர்வியூவிற்கு அழைத்தது. அருண் தமயந்தியை முதன் முதலில் பார்த்தது அவன் நண்பன் எடிட் செய்துகொண்டிருந்த வீடியோவில்தான். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருக்கும் நண்பன் புதிதாக தொடங்கவிருக்கும் ஆடை அணிகலன் வெப்சைட்க்கு மாடலை போட்டோ எடுத்து அதை அவன் கணினியில் எடிட் செய்துகொண்டிருக்கும் போது பார்த்தான். நல்ல உயரமான பெண்ணின் முகத்தில் தெரிந்த அமைதியும் அப்பாவித்தனமும் அவன் மனதை மயிலிறகென வருடியது. அன்றே உள்ளம் கொள்ளை போனது.
Advertisement
அருண் அவன் முதல் சந்திப்பை சொல்லி அவன் காதலை சொல்ல தமயந்திக்கு அவன் காதல் புரிந்தது.
அதிலும் தேவ்வுடன் சேர்ந்து திருமண வரவேற்பில் கலந்துகொண்ட சுஷ்மா “உன்னையே பார்த்துட்டு இருப்பான் தமயந்தி, சிலநேரம் நானே அவனை கிண்டல் செய்திருக்கேன்” என்று சொல்ல ஆச்சரியம் நிறைந்தது தமயந்திக்கு.
தேவ் அருணிடம் அவன் நன்றியை மட்டும் சொல்ல சுஷ்மா அருணிடம் “தேங்க்ஸ் நீ கண்டுபிடிச்சதும் அவன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு. எனக்கு அவன்மேல கோவமெல்லாம் இல்ல. அவங்கம்மா வீட்டுக்கு வந்து மிரட்டின அன்னிக்கே என் அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வந்து போய்ட்டாங்க. அவன் அப்பாதான் எல்லா ஹெல்ப்பும் பண்ணி வெளிநாட்டுக்கு என்னை அனுப்பி வெச்சார். எனக்கு விஷமும் அவன்தான் அதுக்கான மருந்தும் அவன்தான். என்னை நான் மீட்டெடுத்துகிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ஸ்டில் ஐ லவ் ஹிம்! லவ் அப்படித்தான் அருண் அது எங்கயாச்சும் வாழ வழி இருக்கான்னு பார்த்துட்டே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் ஒழிஞ்சு போகாது” என்றாள் கண்களில் நீர்திரள் மின்ன.
Advertisement
அருணுக்கு அவன் காதல் மீது தனி நம்பிக்கை பிறந்தது.
Advertisement
திருமணம் விழாவில் அருந்ததீயுடன் கல்யாணின் இரண்டாவது மனைவி மகளெல்லாவும் உட்கார்ந்திருக்க தமயந்தி கழுத்தில் தாலி கட்டினான் அருண். “என்னை கஷ்டப்படுத்தாம பார்த்துப்பியா” என்ற அவள் கேள்விக்கு “கண்டீப்பா பார்த்துப்பேன்” என்று அவன் பதில் சொல்லவும் கண்களில் நீர் தேங்க சிரித்தாள்.
தனிமையில் அவன் அணைப்பில், லேட்டாதான் சொல்றேன் அதிலும் ரொம்ப யோசனையோடதான் சொல்றேன் நீதான் புரிஞ்சிக்கணும் என்று பீடிகை போட்டே ஆரம்பித்தாள் “எனக்குகுள்ள நிறைய நேரம் நம்பிக்கையை விதைச்சது நீதான். சின்ன சின்ன வார்த்தையில ஆறுதலாக பேசுனவன் நீதான். முதல்முறை பார்த்ததும் நட்பா பழகின ஆள் நீதான். நான் உனக்காக நிறைய என் லெவல் மீறி வேலை பார்த்து முன்னேறி நின்னேன், ஜஸ்ட் உனக்கு சமமா நிக்கணும்ன்னு ஆசைப்பட்டு தான் நிறைய செஞ்சேன். சொல்லப்போனா நான் பீல்டு மாறிபோகாம இருந்ததுக்கு காரணமும் நீதான். எனக்கு நீ வெறும் காதல் மட்டுமே இல்ல அருண் எல்லாமே நீதான்! உன்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் என் எதிர்பார்ப்பெல்லாம் நான் உன்கிட்ட நானா இருக்கிற மாதிரி நீ என்கிட்டே முழுசா நீயா இரு. கோவம் அழுகை சோகம் எதையும் காட்டு சேர்ந்து போவோம் என்னை ஒதுக்கி மட்டும் வைக்காத” என்றாள்.
தமயந்தி பேச்சில் காதலை உணர்ந்தவன் முத்தமிட்டு “அப்படியே கண்ணம்மா” என்றான்.
Advertisement
காதல் புதிய வண்ணம் கொண்டது.
