Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 10.2

இதுல யாரோ மாதிரி உன்னை எங்கையோ விட்டுட்டு நாங்க சந்தோசமா எப்படி ம்மா இருப்போம்? அந்த நினைப்பே உனக்கு இனி வரக் கூடாது. மதி பிள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்து குடு.” சற்று கோபமாகவே கூறியவர் முகம், மருமகளின் சுருங்கிய முகத்தைப் பார்த்த உடனே வருந்தியது.

“மாமாக்கு கிஃப்ட் வாங்கி குடுக்கலைனு பீல் பண்ணல?” அவள் மனநிலையை மாற்ற உடனே பேச்சை மாற்றி திசை திருப்ப முயன்றவர், அவள் பொம்மை போல் தலை ஆட்டுவதைப் பார்த்து சிரிப்போடு “அன்னைக்கு சர்க்கரை தூக்கலா போட்டு ஒரு காபி குடுத்தியே, அதே இன்னைக்கும் கிடைக்குமா?”

“ஐயோ மாமா! அன்னைக்கு அத்தைகிட்ட கேட்டு சக்கரை போடுறப்போ, இந்த சித்தார்த் பின்னாடி நின்னு பயமுறுத்திட்டான். பயத்துல கைல இருந்த எல்லாம் கொட்டிடுச்சு. வேஸ்ட் ஆக கூடாதுனுனுனு…” சொல்ல முடியாமல் நாக்கைக் கடித்து நிற்க ஆண்கள் அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டது.

“அதை தான் அவரும் கேக்குறார் ஆரூ. அப்பாக்கு எப்பவும் சுகர் அதிகமா சாப்பிட பிடிக்கும். ஆனா அம்மா விட மாட்டாங்க.” அஸ்வின் எடுத்துரைக்க, வேகமாக சென்றவள் தேவைக்கு அதிகமாகவே சர்க்கரை போட்டு எடுத்து வந்து, ராகவ் கையில் கொடுத்தாள்.



Advertisement

காபியை ருசி பார்த்தவர் ஆரோஹியிடம் பாராட்டிவிட்டு மகனிடம் வந்தவர் அவன் முதுகில் தட்டி, “வேகமா சமையல் கத்துக்கோடா…”

சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி தந்தை கூற அஸ்வினும் அதே நிலையில், “ப்ராஸஸ் எப்பவோ ஸ்டார்ட் பண்ணிட்டேன் ப்பா.”

“பொழைச்சுக்குவடா மகனே…” ராகவ் சிரித்துவிட, மகன் தந்தையோடு இணைந்து கொண்டான்.

Advertisement

அதே நேரம் மதி தன்னுடைய மூத்த மகனுக்கும் மருமகளுக்கும், புது ஆடைகளை கொடுத்து அரை மணி நேரத்தில் தயாராகி வர அனுப்பினார்.

Advertisement

ஆரோஹி, அஸ்வின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க, ஒரு வேலை ஆளை அவளோடு அனுப்பி அவளுக்கான புடவையை அணிய அனுப்பி வைத்தார்.

சித்தார்த் அறையில் தயாராகியிருந்த அஸ்வின், அரை மணி நேரம் கடந்ததை உணர்ந்து தன்னுடைய அறைக்கு சென்றவன், அறையினுள் நுழைந்த உடனே வந்த பட்டின் மணத்தை, உணர்ந்த நொடி வித்தியாசமாய் ஏதோ உணர்வு மனதினுள்.

இதுவரை பெற்றோரின் அறையில் மட்டுமே உணர்ந்த பெண்மையின் மணம், முதல் முறை தன்னுடைய அறையில் இருப்பதை உணர்ந்தவன் கண்களிலும் ஒரு பிரமிப்பு.

Advertisement

அந்த பிரமிப்போடு மேலும் ஓர் அடி எடுத்து வைத்தவன் காதில், மெல்லிய முணுமுணுப்பு சத்தம். சத்தம் வந்த திசையில் திரும்ப, அவன் மனைவி ஏதோ பாட்டு ஒன்றை பாடிக்கொண்டிருந்தாள், அவனது அறையில்.

அவளது வாசனை மொத்தத்தையும் அவ்விடத்திற்கே பரப்பிவிட்டு, சிறு பிள்ளை போல் அவன் வைத்திருக்கும் கண்ணாடி ஒவ்வொன்றாக எடுத்து அணிந்து, நிலை கண்ணாடி வழியே தன்னை பார்த்து ரசித்தபடியே நின்றாள்.

அஸ்வின் அறை நல்ல விசாலமான அறை தான். அறையின் மத்தியில் ஐந்து பேர் படுக்கும் அளவு, படுக்கையும் மிகவும் பெரியதே. மகன் கேட்டதன் பெயரில் அளவிற்கு விட பெரியதாகவே செய்துவிட்டார் ராகவ்.

அறையின் ஒரு மூலையில் சொகுசு சோபா ஒன்றோடு, ஒரு திவான் இருந்தது. அறையின் மற்றொரு பக்கம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பக்கம் நல்ல விசாலமான குளியலறை, மற்றொரு பக்கம் அதை விட விசாலமான வாக்இன் வார்ட்ரோப், அஸ்வின் பார்த்து பார்த்து வடிவமைத்தது.

அவன் கைக்கடிகாரத்திலிருந்து கூலர்ஸ், ஷூ வரை ஒவ்வொன்றையும் வைக்க, அவனே செதுக்கிய இடம் அது.

அதில் ஆரோஹி அவன் ஆசையாக வாங்கிய கருப்பு கண்ணாடியை, மாற்றி மாற்றி அணிந்து ரசிப்பதைப் பார்க்க அறைக்குள்ளே வானவில் நுழைந்ததை போல் வண்ணமயமாகியது.

கதவை அடைத்து வந்த அஸ்வின் அவளை நோக்கி நடந்த அந்த ஐந்தே நொடியில், அவளை மொத்தமாய், மொத்தமும் மறைக்காத அவள் பளிச்சென்ற குட்டி இடையையும், பருகிய பிறகே உணர்வின் பிடியிலிருந்து வெளியேறினான்.

கணவனின் உரிமையோடு அல்லாமல் கள்வனாய் அவளைப் பார்த்ததை உணர்ந்து, இறுக்கமாய் கண் மூடி சிரிப்போடு மீண்டும் அவளைப் பார்த்தான்.

இளம் நீல நிற புடவையில், அடர் பழுப்பு நிற பார்டர் வைத்த புடவை, அவளது உடலில் இரண்டாம் தோல் போல் பாந்தமாக தழுவியிருக்க, மாங்காய் இழைந்தோடிய புடவையில் பூக்களை தூவியது போல், இன்னதென கூறமுடியாத வடிவங்கள் அழகாக உடல் முழுவதும் படர்ந்திருந்தது.

பளிச்சென்ற நிறமாக இருந்தால் அவளுக்கு இன்னும் எடுப்பாய் இருந்திருக்குமோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனாலும் இந்த நிறமும் அவளுக்கு நேர் மேலே இருந்த விளக்கின் பயனால், புடவையோடு அவளது மஞ்சள் மேனியும் ஜொலித்தது.

இத்தகைய ஜொலிப்பில் அடர் நிறத்தில் இருந்த ரவிக்கையின் இறுதியில், தங்கமாய் மின்னிய அவளது சிறு இடையை தவற விடாமல் கண்டது அவன் தவறில்லையே?!

குத்தும் அவன் பார்வையை உணர்ந்தவள் கண்ணாடி வழியே பின்னால் பார்த்து, “உங்க வார்ட்ரோப் கலெக்ஷன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் இந்த கூலர்ஸ்… எனக்கு புடிச்சிருக்கு கிரிக்கெட்டரே. இல்லாத கலர் இல்ல, ஒவ்வொரு கலருக்கும் மூணு, நாலு ஆப்ஷன் வேற…” மெல்ல நடந்தவன் நடை, அவளை விட்டு சற்று தூரமே நின்றது.

“உனக்கு வேணும்னா எடுத்துக்கோ ஆரூ.”

“இது ஜென்ஸ் போடுறதுல?”

“ரைட்ல இருக்க மூணு ரோவும் யுனிசெக்ஸ் ஐட்டம் தான்.”

ஆரோஹி, “அப்போ நான் எக்குத்தப்பா தூக்கிடுவேன்.” எச்சரிக்கையாக அவள் கூறி சிரிக்க, தலை ஆட்டி சம்மதம் கூறினான்.

அவளுக்கோ அவன் அனுமதி கிடைக்கவும் எதை எடுக்கவென தெரியவில்லை. அனைத்தும் அழகாக தெரிகிறதே… முதலிலிருந்து தேடலைத் துவங்கினாள்.

“கன்ஃப்யூஷன் எதுக்கு ஆரூ? மொத்தமும் உன்னோடது தான். நாம போறப்போ எல்லாத்தையும் எடுத்துக்கலாம். நம்ம வீட்டுல இருக்க கலெக்ஷன்ஸ் பாரு, இல்லையா நான் வெளிய போறப்போ வாங்கிட்டு வர்றேன்.” அவள் ஆசையைப் பார்த்து தானே முடிவெடுத்தான் அஸ்வின்.

“இல்ல, நான் இந்த ரெண்ட மட்டும் எடுத்துக்குறேன்.” என்றவள் அவனைத் திரும்பி நின்று சொன்னவள், தான் தேர்ந்தெடுத்த கண்ணாடியை அணிந்தவாறே அவனைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்.

“ஆ… கேக்கணும்னு நினைச்சேன், ஏன் அத்தை ரூமுக்கு போக வேணாம்னு சொன்னிங்க?”

அஸ்வின் சங்கடமாய் உணர்ந்தான். இதை அவளிடம் பகிர்ந்துகொள்வதா? அப்டியே பகிர்ந்தாலும் அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற சிறு சந்தேகம்.

அவன் மனைவியோ ஆவலாய் அவனைப் பார்க்க, “ஒரு தடவை அவசரம்னு நான் கதவைத் தட்டாம அவங்க ரூம்குள்ள போய்ட்டேன். ஹக் பண்ணிட்டு இருந்தவங்க, டக்குனு விலகி நிக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. இதே மாதிரி சித்தார்த்துக்கும் நடந்துருக்கு. அதுல இருந்து அவங்க ரூம் திறந்திருந்தா கூட அந்த பக்கம் போக மாட்டோம்.” என மொழிந்த அஸ்வின் நகைப்பை மெல்லிய புன்னகையோடு கேட்டவள்,

“ரொம்ப ரொமான்டிக் கப்பிள்ஸா?”

“ரொம்பவே… லவ்னா என்னன்னே தெரியாத வயசுலயே என்னை பொறாமைப்பட வச்சிட்டாங்கனா பாத்துக்கோ.” என்றான் கால்சட்டையில் இரண்டு கைகளையும் நுழைத்து.

“அதே ஆர்வத்துல கண்டிப்பா ஏதாவது ட்ரை பண்ணிருப்பீங்களே…?”

“ம்ம்ம்… ஒண்ணுக்கு ரெண்டு ட்ரை பண்ணேன். எதுவும் செட் ஆகல.” என்றான் போலியான சோகத்தோடு.

அவனை மேலும் கீழும் புருவம் உயர்த்தி பார்த்தவள், “ரொம்ப தான் சோகம் போல… என்னை பாத்து என்ன யூஸ்? ரொமான்ஸ் எல்லாம் உங்களுக்கு செட் ஆகாதுனு தான் எனக்கு தோனுது.” முதலில் சிறிது கோவம் எட்டி பார்க்க, பிறகு அவனை சீண்டும் பொருட்டு பேசி வைத்தாள்.

மனைவியின் உணர்வைப் புரிந்தவன், ஆண் அகங்காரம் அஸ்வினை சீண்டி விட, மனைவிக்கு இப்பொழுதே அதை அபத்தமான குற்றசாட்டு என காட்டிவிடத் தான் தோன்றியது. அதை விடுத்து அவளை சீண்டும் எண்ணம் முளைத்தது.

இருவருக்கும் இடையே இருந்த நான்கடி இடைவெளியை இமை தாழ்த்தி பார்த்தவன், பிறகு மனைவியைக் குறும்பாக பார்த்தவாறே மெல்ல மெல்ல இடைவெளி குறைத்தான்.

“சாரீ கட்டி முடிச்சாச்சா?”

அவனது எண்ணம் புரியாமல் எதார்த்தமாகவே அவளிடமிருந்து வந்தது பதில், “ம்ம்ம்… ஓவர் ஆச்சே…” என்று.

“பாத்தா அப்டி தெரியலயே?”

ஆரோஹியின் கைக்கெட்டும் தூரத்தில் நின்றவன், சற்று குனிந்து அவள் காதுகளுக்கு நெருக்கத்தில் வந்து கிசுகிசுக்க, ஆரோஹியின் விழிகள் பட்டாம்பூச்சியைப் போல் படபடவென அடித்துக்கொண்டது.

வேகமாக திரும்பி நின்றவள் மனம் இடியாய் அடிக்க, கண்ணாடியில் தன்னைக் குனிந்து பார்த்தவளுக்கு எந்த தவறும் தென்படவில்லை.

குற்றம் சாட்டும் பார்வையோடு அதே கண்ணாடி வழியே அஸ்வினைப் பார்த்தவள், கண்களை சுருக்கி கோவத்தைக் காட்ட, அவன் கண்களில் கள்ளம் கூடியது.

பார்வையைத் தழைத்தவன் சிறிய அளவு தெரிந்த பாவையின் இடையைக் காட்டி, “இது இப்டியே இருந்தா எனக்கு சந்தோசம் தான்.” சரசமாய் காதில் வினவியவனது கண்களில் இருந்த குறும்பைத் தாண்டி, கொட்டிய ஆசையானது ஆரோஹிக்கு மூச்சடைக்க செய்தது.

தன்னை கண்டுகொண்டாள் என்பது, பூனையாய் நகர்ந்து இடையின் புடவையை அவள் சரி செய்ததில் அறிந்தவன் கண்கள், இப்பொழுது கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அவள் கைகளைப் பின்தொடர, அவஸ்தையாய் கண்களை சுருக்கி அவனை விழியால் கெஞ்சினாள்.

“டிஸ்அப்பாயிண்டட்! பட், அட் தி சேம் டைம் ஹாப்பி வித் தி வியூ.”

அணைக்கும் தூரத்தில் அவள் இருந்தும், அணைக்க முடியாத இந்த பெயர் சொல்லா உணர்வை வெறுத்தவன் பார்வை, அவளது பின்னிடையைப் பார்க்க சொக்கிதான் போனான்.

முன்னால் அவள் செய்த மாற்றத்தின் விளைவால், பின்னால் அவளது புடவை மேலும் விலகி, பளிச்சென அவளது முதுகுப்பகுதி தெரிய, யோசிக்காமல் தன்னுடைய விரல் நுனி கூட படாமல் புடவையை ஏற்றி விட்டான்.

மென்மையாய் உடலில் உரசிய அந்த புடவையானது, அவனது கைகளே உடலில் பதிந்தது போல், தேன் கதிர் ஒளிகள் வீசும் அவள் விழிகள் மூடி, இரவின் குளுமையை அனுபவித்தது.

இருவரும் ஒருவரில் மற்றவர் எண்ணங்களை அருகாமை என்னும் கனவு கொண்டு நிரப்பினர்.

“என்ன சொன்ன ஆரூ, எனக்கு ரொமான்ஸ் வராதா?” அவன் கேட்ட கேள்வியில், அவள் தலை குழந்தையின் கைகளின் வேகத்தில் ஆடியது.

“ஓ… எனக்கு தான் அப்டி கேட்டுச்சோ?” அதற்கும் ஆமாம் என அவள் தலையை ஆட்ட, படபடக்கும் இமைகளைப் பார்த்தவன், “அழகா இருக்கடா பட்டாம்பூச்சி…” உண்மையாய் உரைத்தவன் அவ்விடம் விட்டு அகன்ற பிறகும், ஆரோஹி அவள் இடத்தில் இருந்து அசைந்த பாடில்லை. மொத்தமாய் சொக்கிவிட்டு சென்றுவிட்டான்.

அதன்பிறகு பொழுது இனிமையாய் அவர்களுக்கு நகர திவ்யா, மாறன் வரவு இன்னும் அந்நாளில் வீட்டினருக்கு ருசித்தது.

ராகவ் பிறந்தநாளுக்காக வீட்டிலே சிறு பூஜை ஏற்பாடாகியிருக்க, ரெக்கை கட்டி நேரம் பறந்தது.

அஸ்வின், ஆரோஹி இருவரும் தங்களுக்குள் தனியே நிகழ்ந்தேறிய அழகிய தருணத்தை, வெளியில் காட்டி மற்றவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல், எப்பொழுதும் நடக்கும் எதார்த்த பேச்சுகளோடு வீட்டிற்கு வர, அஸ்வின் உடலை காற்று கூட இடையே வர முடியாத அளவிற்கு தழுவியது யவ்னிக்காவின் பூவுடல்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!