Skip to content
Post Views: 4,481
தேவை… பாவை பார்வை – 12
காலையிலேயே முருகனை தரிசித்து விட்டு, பத்மாவதி வீட்டினுள் நுழைய, அங்கு மதுரவாணி சோபாவில் அமர்ந்துகொண்டு அவளுடைய போனில் என்னமோ பார்த்துக்கொண்டிருக்க,
மணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பத்மா அவளிடம், “வாணி, ஆஃபீஸிக்கு கிளம்பலையா?, மணி ஒன்பதாகுது…” என்று விசாரிக்க,
“போனை பார்த்துக்கொண்டே, போகணும்… ம்மா? என்று பதிலளிக்க,
Advertisement
“அந்த போன்ல என்னதான் இருக்கோ… அதையே பாத்துட்டு தான் பதில் கூட சொல்லனுமா?…” என்று கேட்க,
“ம்மா… மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன்… காலைலயே கடுப்பாகாதீங்க…”
“என்னவோ பண்ணு… வர வர ஒன்னும் பேச முடியிறது இல்ல இந்த வீட்டுல… என்ன பேசினாலும் குத்தம்னு சொன்னா, என்னத்த தான் பேசுறது…” என்று புலம்பலாக சொல்ல,
Advertisement
பெருமூச்சுடன் போனை கீழே வைத்துவிட்டு, அன்னையை பார்த்து, “ம்மா… நானும் ஒண்ணுமே சொல்லல, பேசல… போதுமா…”
Advertisement
“கோவிலுக்கு போயிட்டு வந்திங்களே, வந்ததும் பொண்ணுக்கு பிரசாதம் குடுக்காம, கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… உங்களை என்ன பண்ணலாம்…” என்று தாயை பேச,
“என்னமோ இன்னைக்கு தன் போயிட்டு வர மாறி கேக்குற… தினமும் தான் போயிட்டு வரேன்… என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு தான் நீயும் இப்படி கேக்குற… உன்னை நானும் கேக்கலாமே…” என்று அவரும் பேச,
“எவ்வளவுக்கு எவ்வளோ புள்ளபூச்சியா இருந்திங்களோ… இப்போ காட்டுப்பூச்சியா மாறி அவ்வளோ பேசுறீங்க…” என்று கடுப்பாக சொல்ல,
Advertisement
“நீ தான் என்னைய இப்படி மாத்துனது… அந்த கடுப்பை உனக்கே காமிச்சிக்க…” என்று நக்கலாக பேசிவிட்டு,
“என்ன இப்படி ரொம்ப நல்லமாறியா பேசுனா… நான் உன்னைய எதுவும் கேக்கமாட்டேன்னு நினைச்சிட்டியா…” என்று அவளுக்கு கொட்டு வைத்து கேட்க,
“ம்மா… முடியலை, என்னை விட்டுடுங்க…” என்று கும்பிட்டு,
“நான் நார்மல் ஆஹ் தான் பேசுனேன்… நீங்க இப்படி எடுத்துக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது…” என்று இன்னும் பேச,
“அப்போ என்ன முடிவெடுத்துருக்க, பதிலை சொல்லு…” என்று பத்மாவும் விடாமல் வினவ,
“நான் அவன்கிட்ட பேசத்தான் போனேன்… உங்க நொண்ணன் பையன் வேலையிருக்கு பேச முடியாதுன்னு சொல்லிட்டான்… அவனை கேளுங்க இனிமே, என்கிட்ட இப்படி வரிஞ்சி கட்டிட்டு வராதீங்க…” என்று அன்னைக்கு இணையாக பதிலை குடுக்க,
“வாணி… மரியாதையா பேசு…” என்று பல்லைக்கடித்து,
“வேலையிருக்கும் போது, நீ பேசணும்னு போயிட்டு நின்னுருப்ப…” என்று ஈஸ்வருக்கு சாதமாக பேச,
“அவனை பேசுனா மட்டும், உடனே வந்துடுவீங்களே, அவனுக்கு பரிஞ்சி பேச…” என்று அன்னையிடம் சூடாக பேச,
“வாணி….” என்று அதட்ட,
“வாணியே தான்… நான் இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாக்கலாம்னு இருந்தேன்…”
“இப்போ முடியாது போல… நான் ஆஃபீஸிக்கே கிளம்புறேன்…” என்று அன்னையிடம் சிடுசிடுத்து, அலுவலகம் கிளம்புவதற்க்காக அறையினுள் சென்றாள்.
“என்னத்தைதான் நினைச்சிட்டு இருக்கானே தெரியல இவ மனசுல…” என்று முனகிக்கொண்டே சமயலறைக்கு சென்றார் பத்மா.
சிறிது நேரத்திற்கு பிறகு கிளம்பி வந்த வாணியை பார்த்த பத்மா, ஒன்றும் சொல்லாமல், அங்கு மாடத்தில் சாமி படங்களுக்கு அருகிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும், வகிட்டிலும் வைக்க,
அன்னையை முறைத்து பார்த்தாள் பெண்.
அவள் முறைப்பதை கண்டுகொள்ளாமல், “காலகாலத்தோட என் பொண்ணு அவளோட புருஷனோட சேர்ந்து வாழ, நீ தான் அருள் புரியனும் வேலா…” என்று சத்தமாக வேண்ட,
அவர் வேண்டுவதை கண்டுகொள்ளாமல், சமயலறைக்கு சென்று, அன்னை செய்த பொங்கலை ஒரு தட்டில் எடுத்து போட்டுகொண்டு,
அன்னையிடம், “லஞ்ச் எதுவும் பண்ணலையா ம்மா?…” என்று சாதரணமாக விசாரிக்க,
“நான் இங்க என்ன வேண்டிட்டு இருக்கேன்… நீ எதையாச்சும் கண்டுக்கறியா?…” என்று தான் பேசியதற்கு மகள் வாயை திறக்காமல் இருப்பதை பார்த்து, சீரியஸ்ஸாக அவளிடம் கேட்க,
“அது தான் தினமும் பாக்குறேனே…” என்று பதில் மொழிந்து விட்டு எழுந்து செல்ல,
“ஒரே பொண்ணுன்னு, உன்னைய உன் இஷ்டத்துக்கு, நான் ஒன்னும் கண்டிக்காம வளத்தத்துக்கு, இப்போ அனுபவிக்கிறேன்…. எங்கயாவது என் பேச்சுக்கு மதிப்பிருக்கா…” என்று தன் மகளை சாட,
“ம்மா… இப்படியே இன்னைக்கு பொழுதுக்கும் புலம்புறதுன்னு முடிவு பண்ணிட்டிங்களா?…” என்று ஆஃபீஸ் செல்ல ஆயுதமாகி வர,
“நான் பேசுறது, உனக்கு புலம்புறது போல இருக்கா?…”
“என்னால முடியல ம்மா… திரும்ப முதல இருந்து ஆரம்பிக்காதீங்க… உங்க வேலன் கிட்டயே, முறையிடுங்க நல்லா… நான் இப்போ கிளம்புறேன்…” என்று அன்னையிடம் சொல்லி விடைபெற,
“இன்னைக்கு ஈஸ்வர் கிட்ட, வேலையில்லாம இருக்கானான்னு பாத்து பேசிட்டு வர…” என்று மகள் விடைபெறும் முன் பத்மா அறிவுறுத்த,
“அவன்டலாம் இனிமே நானே போயெல்லாம் பேச முடியாது…” என்று அன்னைக்கு பதிலுரைத்து வெளியேறினாள்.
“முருகா… இவளை நான் பெத்ததுக்கு…” என்று முடிக்காமல் பெருமூச்சினை வெளியேற்றி வேலைக்கு செல்லும் மகளை மேலிருந்து பார்த்தார்.
– – – – –
பிரகதீஷின் கேபினில்,
“அப்பறம் மிஸ்டர் பிரகதீஷ், தானாவே பேசலாம்ன்னு வந்த பொண்ணை, வேலைன்னு நொண்டி சாக்கை சொல்லி பேசாம திருப்பி அனுப்பிட்டீங்க…” என்று நிர்மல் அடுத்து பேச வர,
அதற்குள், “பொண்ணை இல்ல இல்ல பொண்டாட்டியை விட வேலை ரொம்ப முக்கியமா…” என்று விமல் தன் பங்கிற்கு இடையில் வர,
இருவரையும் முறைத்து, “டேய் விமல், நீ ஒருத்தவனையும் விட மாட்டியா… இவன் கூட எப்போடா பிரெண்ட் ஆன?…” என்று அவர்கள் பேசுவதை எல்லாம் விடுத்து, பிரகதீஷ் வேறு கேட்க,
நிர்மல் விமலை பார்த்து, “டாபிக் சேன்ஞ் பண்ணுறாங்களாம்…” என்று நக்கலாக சொல்ல,
“டேய் ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணுங்கடா… ஆஃபீஸ்க்கு வந்தா வேலை பாக்குறதை தவிர, மீதியெல்லாம் பண்ணுங்க..” என்று பிரகதீஷ் இருவரையும் ஒருசேர திட்ட,
“டேய் ரொம்ப ஓவர் ஆஹ் சவுண்ட் போடாத… நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்கன்னு சொல்லு…” என்று நிர்மல் கடுப்புடன் கேக்க,
“நல்லா கேளுங்க பாஸ்… இவரு வேணும்னே பண்ணிருக்காரு, என் பிரெண்ட்கிட்ட பேசாம…” என்று விமலும் பேச,
“உன் பெஸ்ட் பிரெண்ட் வந்து உங்கிட்ட கம்ப்லைன் பண்ணுனால… எங்க இருந்துடா கண்டுபிடிக்குறிங்க இதுலாம்…” என்று பிரகதீஷ் பேச,
“ம்க்கும்… அவ வந்து அப்படியே சொல்லிட்டாலும்…” என்று முணுமுணுத்து,
“இது கண்டுபிடிக்க குட்டி மூளை இருந்தாலே போதும்… அது இருக்கு எனக்கு… எல்லாம் அவ மூஞ்சியை வச்சிதான்…” என்று விமல் பதில் சொல்ல,
பிரகதீஷ், “அப்போ நீயும் உன்னோட பெரிய மூளை வச்சி நீ கண்டுபிடிச்சேன் சொல்லிடு…” என்று நிர்மலை பார்த்து சொல்ல,
“அவருக்கு நான் தான் சொல்லி கூட்டிட்டு வந்தேன்… அவரு மூளையெல்லாம் வச்சியெல்லாம் யோசிக்கல…” என்று விமல் சீரியஸ்ஸாக சொல்ல,
“ஹா ஹா…” என்று சிரித்து விட்டான் பிரகதீஷ்.
“இப்போ எதுக்குடா சிரிக்கிற… உன்கிட்ட அவனால மல்லுக்கட்ட முடியலைன்னு என்னை கூட்டிட்டு வந்தான்…” என்று நிர்மல் கடுப்படிக்க,
“முதல்ல அவனோட லவ்வை போயி அந்த பொண்ணுகிட்ட சொல்ல சொல்லுடா… அதை விட்டுட்டு இவனை யாருடா என்கூட மல்லுக்கட்ட சொல்லுறது…” என்று பதிலுக்கு பிரகதீஷும் காண்டாக கேட்க,
“நீ யாரடா லவ் பண்ணுற…” என்று நிர்மல், இப்போது விமலை பார்த்து கேட்க,
“வேற யாரு… ரேகா தான்…” என்று பிரகதீஷ்ஷே அவனுக்கு முன்ன சொல்லிவிட்டு,
“நானே இவன் சொல்லுறதுக்கு ரோககிட்ட சொல்லுறேன்னா, இல்லையான்னு பாரு… அதுக்கப்பறம் இருக்கு இவனுக்கு…” என்று பிரகதீஷ் இன்னும் பேச
“நானும் சொல்லணும் தான் வரேன்… எங்க?, நான் சொல்றத கேட்டாத்தானே, சொல்லமுடியும்…” என்று பாவமாக விமல் பதில் சொல்ல,
“இப்போ தெரியுதா… சொல்லுறதுக்கே உனக்கு முடியலை… இதுல இவன் என்ன சொல்ல வந்துட்டான்…” என்று பிரகதீஷ் நக்கலடிக்க,
“அடேய்… நீங்க ரெண்டுபேருமே வாரிக்கிறதை நிறுத்துங்கடா…” என்று நிர்மல் இப்போது இடைப்புக,
“நீ அவன் கூப்பிட்டா வந்துடுவியா…” என்று பிரகதீஷ் இப்போது நிர்மலிடம் திரும்ப,
“டேய் அடங்குடா… நீ என்ன தான் பிளான்ல இருக்கேன்னு சொல்லு…” என்று சொல்லிவிட்டு நிர்மல் அவனை பார்க்க,
“என்ன பிளான்ன்னு கேட்டா… உனக்கு கல்யாணம் ஆகி என்ன பண்ணுன… அதே தான்…” என்று பிரகதீஷ் கூலாக சொல்ல,
இப்போது விமல், “ஹா ஹா…” என்று வாயைப்பொத்தி சிரிக்க,
“அவன் என்ன ஜோக்கா சொன்னான்… நீ இப்படி கக்கப்பிக்கன்னு சிரிக்கிற…” என்று விமலிடம் பல்லைக்கடித்து,
“அப்போ சார் அப்படி சொல்லவரிங்க… சார் கல்யாணம் பண்ணியும் இன்னும் பிரம்மச்சரியம் தான்…ஒண்டிக்கட்டையா தான் வாழுறீங்க…” என்று பிரகதீஷை வார,
விமல் விடாமல் இன்னும் சிரிக்க,
“ரொம்ப சிரிக்காத, உன் பொழப்பும் இப்படி சிரிப்பதான் சிரிக்கும்…” என்று பிரகதீஷ் எரிச்சலாக சொல்ல,
“ஜோக்ஸ் அபார்ட்… நீ எப்போ பேச போறேன்னு சொல்லு… ஏதாவது ஐடியா வச்சிருக்கியா…” என்று உண்மையான அக்கைறையோட நிர்மல் கேக்க,
“நீ வேற ஏன்டா… இங்க பேச முடியாதுன்னு தான், நேத்து பேசல… ஒர்க் இருந்ததும் உண்மை…” என்று அவனும் விளையாட்டை விட்டு பதில் சொல்ல,
“சரி… நேத்து பேசல… அப்பறம் எப்போ பேச போற…” என்று அடுத்து கேக்க,
“அவ இதுக்கு மேல அவளா பேசலாம்னு வரமாட்டேன்னு சொல்லிட்டா… வீக்கெண்ட் தான் அவகிட்ட பேசணும் பொறுமையா…” என்று பதில் சொல்ல,
“சரிடா… பேசிட்டு ஒழுங்கா அவகூட வாழுற வழியை பாரு… நீ பெரிய இவன் மாறி பேசி இன்னும் சண்டை ஆகிக்காத சொல்லிட்டேன்…” என்று நண்பனை எச்சரித்து,
“டேய் விமல்… உனக்கும் தான், ஒழுங்கா பொண்ணுகிட்ட லவ்வை சொன்னோமா, கல்யாணம் பண்ணோமான்னு இருக்குற வழியை பாரு…” என்று அவனிடமும் பேச,
“ஆமா ஆமா… வயசுல மூத்தவர் இவரு… கல்யாணம் ஆகி குழந்தை பொறந்துட்டா… நீயெல்லாம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவியா…”
“முதல்ல கிளம்புடா… வேலையை பாக்க வந்துட்டு யாக்கியானம் பேசிட்டு உக்காந்திருக்கான்…” என்று விடாமல் பிரகதீஷ், நிர்மலை வார,
“உனக்கிருக்க வாய்க்கு, நீ மதுகிட்ட இருந்து நல்லா மொத்தடி வாங்கணும்…” என்று சொல்லிவிட்டு, “நான் கிளம்புறேன்…” என்று பிரகதீஷின் அறையை விட்டு வெளியேறினான்.
அங்கு இருந்த விமலை பார்த்து, “நீயும் கிளம்புறது…” என்று அவனிடம் பிரகதீஷ் சொல்ல,
“உன்கிட்ட ஒரு நியூஸ் சொல்லலாம்னு இருந்தேன்… நீ இப்படி கிளம்ப சொல்லுறதால, சொல்லாமலே கிளம்புறேன்…” என்று எழுந்திரிக்க,
“சரி சொல்லாத கிளம்பு… மனசாட்சி இல்லாதவன் தான் இப்படி பண்ணுவான்… அப்பறம் சொல்லாத உன் வாய்க்கு…” என்று எதுவோ சொல்ல வர,
“யப்பா சாமி… போதும்டா… நான் சொல்லிட்டே போறேன்… மது இன்னைக்கு ஒர்க் ப்ரம் ஹோம்ன்னு எனக்கு மெசேஜ் பண்ணிருந்தா…” என்று சொல்லிவிட்டு,
“சொல்லிட்டேன் போதுமா… நான் கிளம்புறேன்…” என்று வெளியேறினான்.
– – – – – –
“ரேக்ளா… என்ன பண்ணிட்டு இருக்க…” என்று விமல் தனது இடத்திற்கு செல்லாமல், ரேகாவிடம் வர,
ரேகா, “ஹே விம்… நீ எப்போ வந்த?… உன்னோட இடத்துல பாத்தேன் இல்லையே நீ…”
“என்னை தேடுனியா நீ…” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,
“ஆமா… ப்ராஜெக்ட் நீ தானே பண்ணித்தரனும்… அப்பறம் தேடாம என்ன பண்ணுவாங்க?” என்று அவனிடமே கேள்வி கேட்க,
“உன்னை பத்தி தெரிஞ்சும், கேட்டேன் பாத்தியா… என்னையே தான் திட்டிக்கணும் நான்…” என்று அவனுக்கு அவனே பேச,
“என்ன நீயா பேசுற விம்…” என்று கேட்க,
“ஒன்னும் இல்ல… வா, நான் ஹெல்ப் பண்றேன்… நீ பண்ணு…” என்று வேலையை பற்றி பேச,
“நீயே பண்ணுறேன்னு சொல்லிட்டு, இப்போ ஹெல்ப் மட்டும் பன்றேன்னு சொல்லுற…” என்று பாவமாக கேட்க,
“ஒப்பி அடிக்க நினைக்காத… ஒழுங்கா நீயே பண்ணு… அப்போ தான் ஏதாவது கேட்டா, எக்ஸ்பிலைன் பண்ண முடியும்…” என்று சொல்லி அவளின் தலையில் கொட்ட,
“சரிடா விம்பார்… கொட்டாத…” என்று அவனை திட்ட,
இருவரும் ப்ராஜெக்ட் வேலையில் மூழ்க,
“என்ன இன்னைக்கு ரொம்ப சின்சியர் ஆஹ் ஒர்க் போகுது போல…” என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் வந்தாள், மது.
“பேச்சின் சத்தத்தில், இருவரும் அவளை பார்க்க,
“ஹே மது… என்ன வந்துட்ட?…” என்று விமல் வினவ,
ரேகாவோ மதுவை முறைத்து விட்டு, திரும்பி கொண்டாள்.
“அங்க எங்க அம்மாகிட்ட உக்காந்து வேலை செய்ய முடியல… அதான் கிளம்பி வந்துட்டேன்…” என்று விமலுக்கு பதிலளித்து,
“என்னவாம் ரேகாக்கு…” என்று கேட்டுக்கொண்டே அவளுடைய இடத்தில அமர,
“டேய் விம்… நான் சொன்னதை அவகிட்ட நீ சொல்லலையா?… என்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லிடு இப்போ…”
“எதுக்கு பேச கூடாதுன்னு ரீசன் சொன்னாதான் பேசாம இருக்கா முடியும்… அதையும் சொல்ல சொல்லு விமல்…” என்று மதுவும் பேச,
விமல் இருவரையும் மாறிமாறி பார்க்க,
“டேய் விம்… அவ என்கிட்ட என்ன மறச்சான்னு கேளு முதல்ல… அப்பறம் அவளுக்கே தெரியும், நான் ஏன் பேசலன்னு…”
“எனக்கு அவ்வளோ நியாபக சக்திலாம் இல்ல விமல்… என்னனு அவளையே சொல்ல சொல்லு…”
விமல் தற்போதும் இருவரையும் பார்க்க,
“அப்போ அவ நிறைய என்கிட்டே சொல்லாம விட்ருக்கா… அதுனால தானே அப்படி சொல்லுறா விம்…”
“அப்படி என்ன நிறைய மறச்சிருக்குறேன்னு சொல்ல சொல்லு விமல்…” என்று மதுவும் இடைவிடாமல் பேச,
“அடச்ச… நிறுத்துங்க… ஒழுங்கா நீங்களே கேட்டு சண்டை போட்டுக்கோங்க…” என்று விமல் இருவரையும் முறைத்து சொல்ல,
ரேகா இப்போது விமலின் மண்டையில் கொட்டி, “மது என்கிட்ட பிரகதீஷ் தான் உன் ஹஸ்பேண்ட்ன்னு சொல்லல… இவனுக்கு மட்டும் சொல்லிருக்க…” என்று அவளிடம் கேக்க,
மதுவோ விமலை முறைத்து, “அதுனால என்ன ரேக்ஸ்… அதுதான் இப்போ தெரிஞ்சிடுச்சே…” என்று சமாளிப்பாக சொல்ல,
“போடி… அதுலாம் நான் ஒத்துக்க மாட்டேன்…”
“சரி சாரி… எதோ சொல்ல மறந்துட்டேன்… விடேன் ரேகா…” என்று சொல்லிவிட்டு,
“அப்பறம் விமல் வேற எதுவும் சொல்லலையா உங்கிட்ட…” என்று அவனை முறைத்துக்கொண்டு ரேகாவிடம் விசாரிக்க,
மதுவின் முறைப்பை பார்த்து, “போச்சுடா… என்னை எதுலையோ இழுத்து விடப்போறா…” என்று கலவரமாக நினைக்க,
“வேற என்ன மறச்சிருக்கீங்க ரெண்டு பேரும்… இதுக்கு தான் எனக்கு தெரியாத மாறியே பேசுகிட்டீங்களா… அப்போ என்னை உங்க பிரெண்ட் ஆஹ் பாக்கல அப்படி தானே…” என்று ரேகா சோகமாக பேச,
“ஆமா ரேகா…” என்று மது சொல்லி இடைவெளி விட்டு,
“விமல் உன்னை பிரெண்ட் ஆஹ் மட்டும் பாக்கல, அதுக்கும் மேல … பட் நான் உன்னை பிரெண்ட் ஆஹ் தான் நினச்சேன்…” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு, விமலை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க,
“மண்டை மேல உள்ள கொண்டையே மறந்துட்டியேடா விமலு…”
“படுபாவி… இதை இப்படி போட்டு உடைச்சிட்டாலே… அய்யயோ ரேகா என்ன கொலை பண்ண போறாளோ…” என்று முகத்தில் பதட்டத்துடன் ரேகாவை நோக்க,
இங்கு ரேகாவோ, “பிரெண்ட் ஆஹ் மட்டும் பாக்கலைனா…” என்று யோசித்துக் கொண்டே விமலை பார்க்க,
அவளின் யோசனையை கண்டுவிட்டு, ரேகாவின் இரு கைகளையும் சேர்த்து பிடித்துக் கொண்டு,
“ரேக்ளா… இங்க பாரேன்… மது சொன்னது உண்மைதான்… நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்…”
“இதை உன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன்… நான் சொல்லி நீ முடியாதுன்னு மறுத்துடுவியோன்னு பயம் வேற ரேக்ளா…”
“ப்ளீஸ் ரேக்ளா… நோ மட்டும் சொல்லிடாத… கண்டிப்பா உனக்கு நல்ல புருஷனா, நடந்துக்குறேன்டி… உனக்கு பிடிக்குற போல தானே இருக்கேன்… பதில் சொல்லுடி… ப்ளீஸ் ரேக்ளா செல்லம்…” என்று முழு மூச்சாக சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக பார்க்க,
“உண்மையாவே தான் சொல்லுறியா விம்…” என்று மறுபடியும் அவனிடம் கேட்க,
“சாத்தியமா ரேக்ளா… உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்… நம்புடி…”
“நான் என்ன சொல்லுறதுனே தெரியலையே… எனக்கு…” என்று எதையோ யோசிக்க,
“கண்டிப்பா உன்னை தவிர வேற யாரும் எனக்கு வேணாம் ரேக்ளா… உனக்கு டைம் எடுத்து யோசிச்சி சொல்லனும்னா கூட சொல்லு… நான் உங்க வீட்டுல வந்து நாளைக்கே நீ பேச சொன்னாலும் வந்து பேசுறேன்…” என்று விமல் தீவிரமாக அவளிடம் மொழிய,
அவளுக்கு விமல் சொன்ன அதிர்ச்சிலிருந்து கொஞ்சம் மீண்டு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மதுவை பார்க்க,
இவர்களை இருவரையும் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்பு மதுவே,
“ரேகா… நான் கொஞ்சம் பேசவா?…” என்று அவளிடம் அனுமதி கேட்க,
“சொல்லு மது… என்ன இப்படிலாம் கேக்குற…”
“எனக்கு தெரியுது, நீ என்ன யோசிக்குறன்னு… கண்டிப்பா, விமல் உனக்கு ஏத்த பையன் தான்… நான் அவனுக்காக ஏதும் சொல்லல… ட்ரு, அவனை நீ நம்பலாம்… அவன் உன்னை வச்சி கிண்டலிப்பானே தவிர, உன்னை எப்பயும் விட்டு கொடுத்ததில்ல…” என்று அவளிடம் பரிவாக விளக்கம் சொல்லிவிட்டு,
“நானே இந்த பெட்டெர் மாக்ஸ் லைட் தான் வேணுமான்னு நெறைய தடவை கேட்டு ஓட்டிருப்பேன்… அப்போ கூட அவன் எஸ் தவிர, வேற எதுவும் மாத்தி சொன்னதே இல்ல…” என்று சிரிப்புடன் சொல்ல,
ரேகா முகத்திலும் கொஞ்சம் மலர்ச்சி காணப்பட,
“பாருடா… இங்க கொஞ்சம் பல்பு எரியுது போல…” என்று மது ரேகாவை ஓட்ட,
இந்த சம்பாஷணைகளில் வேடிக்கை மட்டுமே பார்த்த விமலோ, இப்பவும் ஒன்றும் பேசாமல் ரேகாவின் முகத்தையே பார்க்க,
இப்போது ரேகா அவனை பார்த்துவிட்டு, இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்புடன்,
“விம்… நல்லா யோசிச்சிதானே கேட்ட என்கிட்ட…” என்று மறுபடியும் வினவ,
“நீ எத்தனை முறை கேட்டாலும் எஸ் தான்…” என்று சற்று வெறப்பாக பதில் சொல்ல,
“அப்போ சரிடா விம்… உனக்கு வாழ்க்கை குடுத்த புண்ணியவதி நானா இருந்துட்டு போறேன்…” என்று ரேகா சிரித்துக்கொண்டே அவனை பார்த்து மிதப்பாக சொல்ல,
“நீங்க எனக்கு வாழ்க்கை குடுக்குறேன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க மேடம்…” என்று அவளை போலவே, வாயெல்லாம் பல்லாக சிரித்து சொல்லி, அவளின் கையை இருக்க பற்றிக்கொண்டான்.
மது “ஓஹோ… விசில் போடு…” என்று சொல்லிவிட்டு, அவர்களை அப்படியே கேண்டிட் போட்டோவாக தனது போனில் படம் பிடித்தாள்.
“உன் வாழ்க்கைல விளக்கேத்தி வச்சிருக்கேன்… எனக்கு என்ன கிப்ட் விமல்…” என்று மது கேலியாக கேட்க,
“தெய்வமே, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க… கொண்டு வந்து இறக்கிடுறேன்…” என்று உடனடியாக பதிலளிக்க,
“அஹான்… அப்படியா!”
“அப்படியே தான்…”
“அப்போ நான் சொல்றதை பண்ணு… அது போதும் இப்போ…”
“என்னனு இன்னும் சொல்லலையே…”
ரேகாவும் அப்படி என்ன கேக்கப்போறான்னு பார்க்க,
“முதல்ல அவ கைய விடு… அது தான் லவ் ஒகே ஆகிடுச்சேன்னு இங்க ரொமான்ஸ் ஓட கூடாது புரிஞ்சிதா…” என்று கொஞ்சம் தோரணையாக சொல்ல,
ரேகாவோ மது சொன்னதை கேட்டு வாயை பொத்தி சிரிக்க,
“அடிப்பாவி… நீயெல்லாம் நல்லா வருவ…” என்று விமல் வாயில் கையை வைக்க,
“போதும் போதும்… ரியாக்ஷன் கொடுத்தது… இப்போ ஏதாவது வாங்கி தந்து உங்க லவ் சக்ஸஸ் டேவை செலிப்ரேட் பண்ணலாமே…” என்று சிரிப்புடன் சொல்ல,
“ஒகே போலாமே…” என்று ரேகா முதலில் எழுந்து கஃபேக்கு செல்ல,
“அதானே பாத்தேன்… பாரு கஃபேன்னு சொன்னதும் எப்படி முதல்ல போறான்னு…” என்று விமல், ரேகாவை ஓட்டிக்கொண்டே, மதுவுடன் பேசிக்கொண்டு சொல்ல,
மதுவும் சிரிப்போடு அவனுடன் இணைந்து கஃபேக்குள் நுழைந்தாள்.
மதுவின் சிரிப்புடன் உள்ளே நுழைவதை பார்த்த மதனோ, “இந்த கஃபே விட்டு வெளில வரும் போது உன்னைய எல்லாரும் இப்படி சிரிக்குற மாறி வைக்குறேன்…” என்று வன்மமாக எண்ணிக்கொண்டு, தான் பண்ணிவைத்திருந்த வேலையை, அவர்களின் பொதுவான புலனத்தில் வெளியிட கஃபேவிலிருந்து தனது கேபினுக்கு சென்றான்.
பார்வை வீசும்…
error: Content is protected !!