Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மன்னவனைக் கண்டாயோ

மன்னவனைக் கண்டாயோ 1

ஆயிரம் பேர் இருக்கும் அந்த சிறைச்சாலையில்…. ஒருவனை மட்டும் அங்கு இருக்கும் சிறை காவலர்கள் போட்டு அடித்துக் கொண்டு இருந்தனர்…அவன் முகம் முழுவதும் ரத்தம்… உடம்பில் வழியும் வேர்வையுடன் அசையாமல் நின்று இருந்தான்… உடம்பு முழுவதும் அங்கு அங்கு வீக்கம்… சிராய்ப்பு… அங்கு அங்கு ரத்தம்..



Advertisement

ஆனால் அசாராமல் இருந்தான்.. கண்களில் ஒரு தீட்சண்யம்.. எவ்வளவு வேண்டுமானால் அடி.. கத்த மாட்டேன்.. அசையவும் மாட்டேன் என்னும் வைராக்கியம்…

பாருங்க சார்.. எவளோ திமிரா நிக்குறான்… என்று அங்கு இருக்கும் கான்ஸ்டபிள் கூறினான் .

Advertisement

Advertisement

இவனுக்கு இதுலாம் சரியா வராது போல… வெளிய அவளோ அயோக்கியதனம் பனன்னிட்டு இங்கயும் உன் வேலைய காட்டுறியா… உன் ரவுடிதனம்லாம் எங்ககிட்ட எடுபடாது…

எதுக்கு டா தேவ இல்லாம அடிச்ச இவங்கள…. நில்லு டா இன்னும் நீ வெளிய போறதுக்குள்ள உனக்கு சாவுனா என்னனு காட்டுறோம்…

Advertisement

நீ பண்ண தப்ப தடுத்து நிறுத்தி உன்ன அடக்குனா…கவெர்மென்ட் ஆபிசர் மேலயே கை வைக்குறியா…இந்த ரெண்டு வருசம் கஷ்டபட்ட மாதிரியே நீ இந்த ஜெயில இருந்து போற வரைக்கும் கஷ்டபடுவடா….

ஆனால் எதற்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.. நேர் பார்வை பார்த்து நின்றான்….

திமிரு டா உனக்கு.. யோவ் இவனை அந்த கடைசி செல் இருக்குல்ல அதுல போடுங்க… ரெண்டு நாளைக்கு சோறு தண்ணி.. எதுவும் தரக்கூடாது… செத்தா கூட பரவால்ல. ஆனா இவன் சாப்பிடவே கூடாது…. பாத்ரூம் கூட போக கூடாது… போட்டு பூட்டி வைங்க… என்று கூறி அவனை இன்னும் நாலு அடி வைத்து சென்றான்… ஜெயிலர் தினேஷ்…

ஒரு நாள் அப்டியே சென்றது…அடுத்த நாளும் அப்டியே சென்றது… இரண்டு நாள் சாப்பாடு தண்ணி இல்லாமல்… பாத்ரூம் செல்லாமல் அந்த அறையிலே இருந்தான் அவன்….

மூன்றாவது நாள் சிறை ஆய்வாளர் யாருக்கும் தகவல் சொல்லாமல் திடீரென சிறைவாசிகள் பார்க்க வந்தார்….

ஒரு ஒரு செல்லாய் அவர் ஆய்வு செய்தார்… கடைசி செல் நெருங்கும் போது அவரை தடுத்தான் தினேஷ்…. சார் அவளோ தான் இனிமே யாரும் இல்ல… அந்த சைடு யூஸ் பண்ணாத பாத்ரூம் தான் இருக்கும்.. அந்த சைடு ரொம்ப பேட் ஸ்மெல் வரும்..சரி என அந்த ஆய்வாளர் திரும்பினார் …ஜெயிலர் பார்க்காத நேரத்தில் அங்கும் இருக்கும் கான்ஸ்டபிள் வேலு கண்களால் கெஞ்சினார் அந்த பக்கம் போலாம் என…. இல்ல தினேஷ் அந்த இடத்தையும் பாக்கலாம் என கூறி அங்கு சென்று பார்த்த போது அவரே அதிர்ந்து போனார்…. அங்கு அவன் அரை மயக்கத்தில் இருந்தான்… ரத்தம் எல்லாம் தரையில் அங்கு அங்கு வழிந்து இருந்தது…. இரண்டு நாளுக்கு மேல் சாப்பிடாமல் அவனது மொத்த சத்தும் இறங்கி இருந்தது… கண்கள் மேலே சொருகி மூச்சு விட முடியாமல் இருந்தான்… ஆனால் கத்தாமல் இருந்தான்.. உயிர் போனாலும் சரி.. கத்த மாட்டேன் என வாய் மூடி இருந்தான்….

அவனை உடனே அங்கு இருக்கும் மருத்துவரிடம் அனுப்பி வைத்தார்…. அனுப்பி வைத்துவிட்டு ஜெயிலர் தினேஷை வாங்கு வாங்கு என வாங்கி விட்டார்… யோவ் நீ மனுஷனா மிருகமா.. இப்டி போட்டு அடிச்சி இருக்க… அவன் செத்துபோய்ட்டா என்னய்யா பண்ணுவ… சரி அடிச்சிட்ட சரி ஏன்யா அவனுக்கு மருந்து போட வேண்டியது தானு இங்க இருக்க டாக்டர் கிட்ட… இப்ப செத்து போய்ட்டா நீ பதில் சொல்லுவியா… அறிவில்லை… அப்டி என்னய்யா பண்ணான் அவன் இப்டி போட்டு அடிச்சி இருக்க….

சார் அவன் இங்க இருக்க மத்தவங்கள போட்டு அடிச்சி இருக்கான்.. அதுனால தான் போட்டு அடிச்சேன்..

யார அடிச்சான்.. அவங்கள வர சொல்லு… நீ வேணாம் வேலு போய் அவனுங்கள கூட்டிட்டு வா எதுவும் பேசாத….அவரும் அவ்விருவரை அழைத்து வந்தார்…

டேய் உங்கள அவன் அடிச்சானா… சொல்லுங்க உண்மைய மட்டும் தான் சொல்லணும்…. ஆனா அடிச்ச மாதிரி எந்த காயமும் இல்லையே…பொய் சொன்னா தோள உறிச்சிடுவேன்….

சார் சார் சொல்லிடறோம் சார்… தினேஷ் சார் தான் அந்த மாதிரி பண்ண சொன்னாரு… அவன் கிட்ட போய் சண்டை போடுங்க…. அவன் அப்பயும் சண்டைக்கு வரலைனா சத்தம் போடுங்க இவன் அடிச்சிட்டான்னு.. நான் பாத்துக்குறேன் சொன்னாரு….

யோவ் அறிவில்லை….. உன்னோட வன்மத்தை இவன் கிட்ட காட்டி இருக்க….. உன் மச்சானை அடிச்சிட்டான்னு இப்படி போட்டு அடிச்சி இருக்க.. ஆல்ரெடி உனக்கு நாலு அஞ்சி வாட்டி வார்னிங் குடுத்தேன்… ஆனா நீ இப்டி பண்ணி இருக்க…. உன்ன ரெண்டு மாசம் டிஸ்மிஸ் பண்றேன்.. அப்பறம் உன்ன  சப் ஜெயிலரா டீபிரோமோட் பண்றேன்.. பாளையங்கோட்டைக்கு…..

சார் சாரி சார் இனிமே அப்டி பண்ண மாட்டேன் சார்…

இல்ல தினேஷ் ஆல்ரெடி உங்களுக்கு அதிக வார்னிங் பண்ணிட்டேன்… இனிமே வார்னிங்லாம் உங்களுக்கு சரி வராது.. உங்களுக்கு பேஃஸ் வரும்.. கிளம்புங்க இப்ப… என்று கூறி மருத்துவர் அறைக்கு சென்றார்….

அவமானமாக இருந்தது தினேஷ்ற்கு… தன் பொருளை எல்லாம் எடுத்து கொண்டு அந்த ஜெயிலை திரும்பி பார்க்காமல் சென்றான்…

இங்கு மருத்துவர் அறையில்

மருத்துவர்.. முதல் உதவிகள் செய்து குழுகோஸ் ஏத்தினார்…. ஆனாலும் அவனை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றாக வேண்டும் என ஆய்வாளரிடன் சொல்லிக்கொண்டு இருந்தார்.. உடனே அதற்கு ஏற்பாடு செய்து அவனை மருத்துவமனை அழைத்து சென்றனர்….

யாரு அவன்… இந்த அளவு இவன் மேல் என்ன கோவம்…..???

 அவன் பெயர் மதியழகன்… தன் இருவத்தி ஒரு வயதில் செய்யாத குற்றத்திற்காக சிறைசாலைக்கு வந்தான்… வந்த போது இருந்து இரண்டு வருமாக இந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டு இருந்தான்….

இவன் மேல் வைத்த குற்றம் என்ன… இவன் மேல் தப்பு இல்லை என நிரூபிக்க முடியுமா…. யார் நிரூபிப்பர் ??… சாட்சி யார் சொல்லுவார்…?? யார் அந்த கவர்மெண்ட் ஆபிசர்????இந்த மதியழகன் பற்றி வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்…..!!!

பசுமையூர் (என்னோட கற்பனை ஊர் )

பெயருக்கு ஏற்ப அந்த ஊரைச் சூற்றி பசுமை தான்…. அந்த ஊரின் தெற்கு பக்கம் அடர்ந்த காடு…

கிழக்கு பக்கம் மரங்கள் நிறைந்த மலை… மலை என்றால் பெரிய மலை இல்லை…. சிறியது தான் ஆனால் அங்கு மலைவாழ் மக்கள் உள்ளனர்.. அவர்கள் ஊருக்குள் வர அனுமதி இல்லை…. அது மாதிரி ஊர் மக்களுக்கும் மலைக்குள் செல்ல அனுமதி இல்லை… இந்த கட்டுப்பாடு கடந்த இரண்டு வருடமாக தான் உள்ளது…. இதற்கு முன் மலை வாழ் மக்கள் ஊருக்குள் வருவர்… அதே போல் ஊர் மக்களும் மலைக்கு சென்று வருவர்…மலையில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க மலைக்கு அந்த பக்கம் உள்ள அற்றில் சென்று தான் வாங்க வேண்டும் ஆற்றின் ஒரு பகுதி காட்டிற்குள் செல்லும் மற்றொரு பகுதி பக்கத்தில் இருக்கும் வேறு ஊருக்கு செல்லும்.. அங்கு சென்று தான் வாங்கி வருவர் ..

அந்த ஊரின் நடுவில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில் பயங்கர சக்தி வாய்ந்த கோவில்…. மேற்கு பக்கம் வீடுகள் உள்ளன… வடக்கு பக்கம் இந்த ஊரின் நுழைவாயில்…

இந்த ஊரில் மூன்று பெரிய வீடுகள் உள்ளன.. அந்த ஒரு வீட்டில் இரண்டு வருடமாக ஒருத்தி கோமாவில் படுத்து உள்ளாள்.. அவள் பெயர் நிலவழகி… தற்போது வயது பத்தொன்பது…. தன் பதினேழு வயதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்று விட்டாள்….

கோமாவில் இருந்து எழுவாளா நாயகி…..

சிறையில் இருக்கும் மன்னவனைக் காண்பாளா??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!