Skip to content
Post Views: 2,398
அத்தியாயம் 4:
Advertisement
எப்போதும் போல் தன் அடையாளத்தை மறைத்தபடி கோவிலுக்கு வந்தான் ரிஷி சக்கரவர்த்தி.
Advertisement
Advertisement
அவன் இருக்கும் நிலைக்கு நிச்சயம் சிறிது நேரமாவது யாரையும் கோவிலுக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
Advertisement
ஆனால், அதுவே அங்கு அவனை அவனாகவே காட்டிக் கொடுத்ததற்கு சமமாகி போகும் என்பதற்காக எப்போதும் போல் வெளியில் செல்வதற்கு பயன்படுத்தும் வேஷத்தோடு வந்தான்.
கோவிலுக்கு வந்தவன் பார்வை முழுவதும் தேன்மொழி தென்படுகிறாளா? என்று ஆராய, கோவிலில் அவள் எங்குமில்லை.
அவள் கோவிலில் எங்குமில்லை என்பதை தெரிந்து கொண்டவன் அவள் இன்னமும் வரவில்லை என நினைத்துக் கொண்டு அவனோடு உதவிக்கு வந்திருந்த அவனுடைய உதவியாளரை பார்வையாலேயே வெளியில் காத்திருக்கும் படி கண்ணசைவில் சொல்லி அனுப்பினான்.
அவனுடன் வந்திருக்கும் வேலையாளும் அவன் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு வெளியில் சென்று விட்டான்.
தன் மனதில் உள்ள பாரங்களோடு கோவிலுக்கு வந்து சேர்ந்தாள் தேன்மொழி.
வந்தவள் அவளுக்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்த ரிஷியை கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் நேரடியாக கோவிலுக்குள் சென்றாள்.
அம்மனுக்கு முன்பாக சென்று நின்றவள் கைகள் பூஜை கூடையை அர்ச்சகரிடம் நீட்ட, அவளுக்கு அய்யர் ரொம்ப பரிச்சயமானவர் என்பதால் அவள் எந்த பெயருக்கு அர்ச்சனை செய்யப் போகிறாள் என்பதை அவள் கேட்காமலேயே அந்த பெயரை சொல்லி சரியாக அர்ச்சனை செய்தார்.
தேன்மொழி வந்ததை கவனித்த ரிஷி அவள் இருந்த நிலையைக் கண்டு உள்ளுக்குள் வழிந்த உதிரத்துடன் வெளியில் எதையும் காட்டிக் கொள்ள முடியாமல் அவளுக்கு முன்பாக கம்பிகளுக்கு முன்னால் சென்று நின்றான்.
அப்பொழுதும் அவனைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாத தேன்மொழி கண்களை மூடி இறைவனிடம் எதையெதையோ பிரார்த்தித்துக் கொண்டிருக்க கண்ணீர் சொரிந்துக் கொண்டிருந்தது.
தீபாராதனை முடித்துவிட்டு ஐயர் அவள் முன்பாக வந்து நிற்க, கண்களை திறந்து அவரிடம் பிரசாதத்தை வாங்கிக் கொண்டாள்.
” கவலைப்படாத குழந்தை.. நீ எதுக்காக மாசம் மாசம் இந்த பெயருக்கு அர்ச்சனை பண்றேன்னு எனக்கு தெரியல! ஆனா நீ அந்த பேர் வச்சவங்க மேல நல்ல பாசமா இருக்க அது மட்டும் எனக்கு தெரியும்.. நீ அழுவதை பார்க்கும் போது கஷ்டமா இருக்குது கண்டிப்பா உனக்கு நல்லது நடக்கும்.. பல குழந்தைகளை நல்லபடியா பார்த்துக்க எல்லாம் ஒரு மனசு வேணும்.. உன்னோட நல்ல மனசுக்கு கண்டிப்பா எல்லாமே நல்லபடியா நடக்கும் கடவுள் உனக்கு எப்பவும் துணை இருப்பார்.. ” என்றவர் பிரசாதத்தை கொடுக்க, அவருக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்த தேன்மொழி நெற்றியில் திருநீரை வைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க அவளுக்கு நேராக நின்று கொண்டிருந்தான் ரிஷி.
வெள்ளை நிற வேட்டி சட்டையில் மீசை இல்லாத முகத்தில் மீசை ஒட்டி தாடியும் வைத்திருக்க அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கண்களில் கண்ணாடி அணிந்தபடி நின்று கொண்டிருந்தவளை விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையைக் கண்டு ரிஷிக்கு சந்தோஷமாக இருந்தது.
நொடி நேரத்தில் கண்ணாடியை கழட்டியவன் அக்கம் பக்கம் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவளை கண்களாலேயே வெளியில் வரும்படி அழைத்துவிட்டு வெளியேறினான்.
அவனது கண்ணசைவை புரிந்து கொண்ட தேன்மொழி அம்மனை ஒரு முறை கும்பிட்டு விட்டு அவனை பின் தொடர்ந்தாள்.
முன்னால் சென்ற ரிசி அவன் காரில் அமர, பின்னால் வந்த வேலையால்( கார் டிரைவர்) முன்னால் ஏறிக்கொள்ள, யாரும் பார்க்கிறார்களா? என்பதை ஒரு முறை பார்த்துவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தேன்மொழி கார் கதவை திறந்து விரைவாக உள்ளே ஏறினாள்.
” அண்ணா பக்கத்தில் இருக்க என்னோட வீட்டுக்கு போங்க.. எங்க ரெண்டு பேரையும் அங்கே விட்டுட்டு ஆசிரமத்துக்கு போயி அங்கே இருக்க எல்லா குழந்தைகளுக்கும் நான் சொன்னது போலவே பொருள் எல்லாத்தையும் வாங்கி கொடுங்க.. “என,” சரிங்க தம்பி” என்றார் அவர்.
அவனிடம் எதையும் கேட்காமல் அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்தபடி மீண்டும் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
அவளது கண்ணீர் அவனை வருத்தம் கொள்ளச் செய்ய, எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனதுடன் அவளது கண்ணீரை வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.
அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் அவனுடைய இன்னொரு வீட்டில் காரை நிறுத்திய டிரைவர் அவர்கள் இருவரும் இறங்கியதும் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
காரிலிருந்து இறங்கியதும் அவள் கையை பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்.
அவள் உள்ளே வந்ததும் முதல் வேலையாக கையோடு கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுக்க, தேன்மொழிக்கும் அது தேவையானதாக இருக்க எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள்.
அவள் தண்ணீரை குடித்து முடித்ததும் அவளுக்கு எதிராக அமர்ந்தான் ரிஷி.
” உனக்காக ஒரு வீடியோ ரெக்கார்ட் பண்ணி கொண்டு வந்திருக்கிறேன் பார்க்கிறியா? ” என்றவனை விழிகளில் வேதனையுடன் பார்த்த தேன்மொழி மறுப்பாக தலையசைத்தாள்.
அவள் வேண்டாம் என்று சொல்லும் பொழுது வற்புறுத்த முடியாமல் அமைதி காத்தான்.
” உங்க தங்கச்சி இப்ப எப்படி இருக்காங்க? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? ” என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி.
” எப்படி தேன்.. உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது எல்லாரும் சுயநலமா இருக்கும்போது நீ மட்டும் அடுத்தவங்க நலமா இருக்கணும்னு நினைக்கிற? அதுவும் இன்னைக்கு என்ன நாள்.. நம்ம வாழ்க்கையோட சந்தோஷமான நான்னு சொல்லி சந்தோஷப்படுவதா? இல்ல நம்மளோட பிரிவுக்கான கருப்பு நாள்ன்னு சொல்லி வருத்தப்படுவதா!”
” எத நெனச்சும் நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ரிஷி.. நடந்தது எல்லாமே ரொம்ப நல்லதுக்கு தான் நினைச்சுகிட்டு போக வேண்டியது தான்.. அதை விட்டு தள்ளுங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க..”
” இல்லம்மா.. நாளுக்கு நாள் காவியா உடம்பு ரொம்ப மோசமாய் போய்கிட்டு இருக்கு.. நானும் டாக்டரை வச்சி எவ்வளோவ ட்ரீட்மென்ட் கொடுத்து பாத்துட்டேன்.. எதுவும் சரி வரலை இன்னும் கொஞ்ச நாள் தான் அவ உயிரோடு இருப்பான்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. ” என்றவன் துக்கம் தாளாமல் ஆண்மகன் என்றும் பாராமல் கதறி அழுக ஆரம்பித்தான்.
அன்றைய தினம் அவன் கண்முன்னே படமாக விரிந்தது.
சில தினங்களுக்கு முன் மகனுடன் சிறுபிள்ளை போல ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் காவியா.
என்னதான் பெரிய பெண்ணாக வளர்ந்து இருந்தாலும் மனதளவில் அவள் குழந்தையே.
அடிக்கடி மறந்து போகும் அவளுக்கு அவள் கொடுத்த எந்த பொருளையாவது காட்டினால் மட்டும்தான் பழைய விஷயங்கள் நினைவுக்கு வரும்.
இப்படி அடிக்கடி அண்ணன், அண்ணி, மகன், அவளுடைய கணவன், அவளுடைய தாய் தந்தை என அனைவரையும் மறந்து விடுவாள்.
சிறு பிள்ளை சுரேந்தர் முதற்கொண்டு பெரியவர்கள் அனைவருக்கும் அவள் நிலை தெரிந்ததால் அவள் கொடுத்த பொருளை பொக்கிஷமாக பாதுகாத்து அவள் அடிக்கடி மறந்து போகும்போதெல்லாம் அதைக் கொண்டுதான் ஞாபகப்படுத்துகிறார்கள்.
இப்படி ஏற்கனவே மறதி நோயிலிருந்தவளுக்கு கடவுள் இன்னும் சோதனை கொடுக்க விரும்பினான் போலும்.
” அம்மா என்ன புடிங்க.. கேட்ச் மீ.. ” என்று சிரித்தபடி சுரேந்தர் ஓடிக்கொண்டிருக்க, தனக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த மகனை சிரிப்புடனே துரத்திக் கொண்டு காவியா ஓட, அவர்களது செயலை புன்னகையுடன் பார்த்தபடி கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் பார்த்திபன்.
இருவரும் விளையாடிய படியே மாடிப்படி அருகில் செல்ல,
” டேய் நில்லுடா.. நான் உன்னோட அம்மா எனக்கே நீ ஆட்டம் காட்டுறியா? ” என்று வேகமாக ஓடிய காவியா ஓடிக் கொண்டிருந்தவனை பிடிக்கிறேன் என்று நிலைத் தடுமாறி படிகளில் இருந்து உருண்டாள்.
தன் தாய் மாடி படியில் இருந்து விழுந்ததை கண்டதும் பயந்து போன சுரேந்தர் வேகமாக ஓடி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த பார்த்திப்பனிடம் சொல்ல, மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் பார்த்திபன்.
” காவியா” என்று சத்தமாக கத்தியபடிப் படி மாடிப்படிக்கு ஓடி வந்தவன் கண்டது என்னவோ அங்க ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த மனைவியை தான்.
கண்களில் வழிந்த கண்ணீரோடு ஓடிச் சென்று அவளை தூக்கிக் கொள்ள, அவனது சத்தம் கேட்டு வேலை செய்து கொண்டிருந்த சிந்துவும் ஓடி வந்தவள் அங்கு காவியா இருந்த நிலைமையை பார்க்க முடியாமல் ஒரு நிமிடம் சிலையாக நின்றவள் அடுத்த நிமிடமே ” காவியா உனக்கு என்னடி ஆச்சு? ” என்று அழுதபடி தோழி பக்கத்தில் ஓடி வந்தாள்.
” அண்ணா காவியாவிற்கு என்ன ஆச்சு? நான் சமையல் கட்டுல அவளுக்கு புடிச்ச பாயசம் தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.. அவளுக்கு ரொம்ப புடிச்சதுன்னு இன்னைக்கு என்ன செய்ய சொன்னாளே.. நான் போய் என் மகன் கூட விளையாட போறேன்னு சொல்லிட்டு தானே வந்தாள் நீங்க மேல இருக்கீங்கன்னு தானே நான் இவளை தனியா விட்டுட்டு கிச்சனுக்கு போனேன் இப்ப என்ன ஆச்சு? ” என்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டு சென்ற பார்த்திபனை பின் தொடர்ந்தபடியே அழுகையுடன் கேட்க, அவளை விழிகளில் வேதனையுடன் பார்த்த பார்த்த பார்த்திபன் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்.
அவன் சொன்னதை கேட்டு சிந்தியாவிற்கு தாங்க முடியவில்லை.
அந்த கடவுள் இந்த பெண்ணுக்கு எத்தனை சோதனை தான் கொடுப்பான் என்று கடவுள் மீது மனதுக்குள் கோபப்பட்டு கொண்டாள்.
” நானும் உங்க கூட வரேன்.. ” என்றவள் காரில் பின்னால் ஏற போக, அவளை தடுத்து நிறுத்தினான் பார்த்திபன்.
” நீ என் கூட வர வேண்டாம்மா.. அங்க பாரு சுரேந்தர் தனியா நிக்கிறான் பாவம் சின்ன குழந்தை இங்கு நடக்கிற விஷயம் அவனுக்கு எதுவுமே புரியாமல் அழுதுகிட்டு இருக்கான்.. அவனோட அம்மாவுக்கு அவனால தான் இப்படி ஆயிடுச்சுன்னு நினைச்சுக்க போறான்.. நீ அவன் கூட வீட்ல இங்கேயே இருமா ரிஷிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு.. நான் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் போறேன்.. “
” சரிண்ணா.. நான் அவருக்கு போன் பண்ணி விஷயத்தை இப்பவே சொல்லிடுறேன்.. நீங்க அப்ப அப்ப போன் பண்ணி அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்லுங்க அப்பத்தான் என்னால கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது நேரத்தை கடத்தாம சீக்கிரம் கிளம்புங்க ப்ளீஸ்.. ” எனவும் பார்த்திபன் கைகளில் கார் பறந்தது.
அழுகையுடன் வீட்டிற்குள் ஓடி வந்த சிந்தியா அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவள் போன் செய்து ஷூட்டிங்கில் இருந்த கணவனிடம் விஷயத்தை தெரிவித்தாள்.
விஷயத்தை கேள்வி பட்டதும் ரிஷிக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
ஷூட்டிங்கை கேன்சல் செய்தவன் டைரக்டரிடம் விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
அவன் சொன்ன விஷயம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கேட்க அதில் ஒருவன் இன்றைய இளம் நாயகனின் தங்கை மருத்துவமனையில் அனுமதி என்ற தலைப்பில் ஹாஸ்டேக் செய்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர, ரிஷியின் புகைப்படத்தோடு வந்த அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சிந்தியா கண்ணீரோடு தன் கையில் இருந்த குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, சுரேந்தர் அழுது கொண்டே தூங்கி போனான்.
சிந்தியா சொன்ன மருத்துவமனைக்கு சென்ற ரிஷி ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் விசயத்தை சொல்லி கேட்க, அந்தப் பெண்ணோ அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை விழிகளாகாமல் பார்த்தாள்.
” உன்கிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன் பதில் சொல்லுமா.. காவியாங்கற பேஷண்ட்டை எங்க அட்மிட் பண்ணி இருக்கீங்க?”
” சார் நீங்க ரிஷி சக்கரவர்த்தி சார் தானே? ஓ மை காட் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை சார் உங்களை இப்போ மீட் பண்ண போறேன்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது சார்.. உங்க கூட சேர்ந்து ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா? ” என்று அந்த பெண் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் மொபைல் போனை எடுத்துக் கொண்டு அவன் பக்கத்தில் வர, ரிஷிக்கு வந்த கோபத்தில் கத்தி விட்டான்.
அவன் சத்தம் கேட்டு இன்னும் சிலரும் ஒன்றாக கூடியவர்கள் அவனைப் பார்த்த சந்தோஷத்தில் அது மருத்துவமனை என்பதையும் மறந்து அவனை பார்த்து சந்தோஷத்தில் போட்டோ எடுக்க போக, அதற்குள் அங்கு வந்து சேர்ந்தார் தலைமை மருத்துவர்.
அவர் அவர்களது ஃபேமிலி டாக்டர் என்பதால் காவியாவை பற்றி தெரிந்து வைத்திருந்தவர் ரிஷி வந்ததும் அங்கிருந்த பணிப் பெண்ணையும் இதர ஊழியர்களையும் திட்டிவிட்டு அவனை அழைத்துக் கொண்டு காவியாவை அனுமதித்திருக்கும் அறைக்கு வந்தார்.
” சாரி மிஸ்டர் ரிஷி.. இவர்களை எல்லாம் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலை இங்க நடந்ததுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. இது மட்டும் எங்க டீன் காதுக்கு போனிச்சுன்னா எல்லாரையும் பனிஷ் பண்ணிடுவார் தயவு செஞ்சு இந்த விஷயத்தை இத்தோட விட்டுடுங்க ப்ளீஸ்.. “
” இப்ப அதை பத்தி எல்லாம் பேச வேண்டாம் டாக்டர் காவியா காவியா எப்படி இருக்கா? ” என்று பதட்டமாக அவன் கேட்க, பார்த்திபனும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவர் பார்த்தான்.
” இன்னும் கொஞ்சம் அவங்களை பரிசோதிக்க வேண்டி இருக்குது சார்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க.. ” என்றவர் உள்ளே சென்றுவிட, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட திரணி இல்லாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக தொய்ந்து போய் அமர்ந்தார்கள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த மருத்துவரிடம் இருவரும் ஒன்றாக விரைய அவர்கள் இருவரையும் பரிதாபமாக பார்த்தார் அந்த மருத்துவர்.
” சாரி சார்.. நாங்க எங்களால முடிஞ்ச எவ்வளவோ முயற்சியை பண்ணி பாத்துட்டோம்.. அவங்களுக்கு ஏற்கனவே தலையில் அடிபட்டு இருக்கு அதோட சேர்ந்து இப்பவும் அடிபட மூளைக்கு போற முக்கியமான நரம்பு கட் ஆயிருச்சு.. அவங்களுக்கு அதிர்ச்சியான செய்தியோ இல்லை ரொம்ப சந்தோஷமான செய்தியோ எதையும் சொல்லக்கூடாது.. இனிமே அவங்க வாழ்நாளை அவங்களால மட்டும் தான் தீர்மானிக்க முடியும்.. ” என்றதும் மருத்துவரின் சட்டையை பிடித்து விட்டான் பார்த்திபன்.
” யோவ் டாக்டர் என்ன சொல்ற? நீங்க டாக்டர் தானே எப்படியாவது என் காவியாவை காப்பாற்றிக் கொடுங்க.. எனக்கு ஒரு பையன் இருக்கான் அம்மா இல்லாமல் எப்படி வளருவான்.. எல்லாத்துக்கும் மேல அவ இல்லாம நான் எப்படி வாழ்வேன் உங்கள கெஞ்சி கேட்கிறேன் டாக்டர் தயவு செஞ்சு அவளை காப்பாத்துங்க.. ” என்று அவர் சட்டையை பிடித்து உலுக்க, அந்த மருத்துவருக்கும் அவனை பார்க்க பரிதாபமாகி போனது.
அவரால் அவனை கட்டுப்படுத்த முடியாமல் திணற இறுதியில் ரிஷி தான் அவனை கட்டுப்படுத்தினான்.
” கமான் பார்த்திபன்.. அவரை விடு.. ” என்றவன் சிரமப்பட்டு மருத்துவர்களிடமிருந்து அவரை பிரித்தெடுத்தான்.
” சாரி டாக்டர்.. ” என்று மருத்துவரிடமும் மன்னிப்பும் கோர, மருத்துவர் பார்த்திபன் மனநிலை கண்டு அவனை திட்ட மனம் வராமல் அமைதியாக சென்றுவிட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டு இருவருக்கும் உச்சகட்ட அதிர்ச்சி தான்.
பார்த்திபன் சிறு பிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுக, ரிஷி முடிந்தவரை தன்னை உடைந்து போகாமல் பார்த்துக் கொண்டவன் சிரமப்பட்டு தன்னையும் தேற்றிக்கொண்டு பார்த்திபனையும் சமாதானப்படுத்தினான்.
” இங்க பாருடா இன்னைக்கு மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருச்சு.. கண்டிப்பா காவியாவை காப்பாத்திடலாம்.. நீ இப்படி இருந்தா எப்படி என்னால காவியாவை பார்க்க முடியும் நான் யாரை பார்ப்பேன் காவியாவை பார்க்கணுமா இல்ல உன்ன பாக்கணும் நீயே சொல்லு.. “
” உன்னால முடியுமாடா.. ஏற்கனவே அவளுக்காக உன் வாழ்க்கையை அழிச்சுக்கிட்டியேடா.. நீயும் என் தங்கச்சியும் பண்ண தியாகத்துக்கு இன்னைக்கு அர்த்தமே இல்லாம போயிடும் போல இருக்கே.. இதுல அந்த பொண்ணு தேன்மொழி வேற தெய்வம் தான் அந்த பொண்ணு.. இப்படி எல்லாரும் தியாகம் பண்ணி என் காவியாவை எனக்கு காப்பாற்றிக் கொடுத்தது இப்படி என்னை அவள் பாதியிலேயே விட்டுட்டு போறதுக்கு தானா? எப்படியாவது அவளை காப்பாற்றி கொடுடா மச்சி என்னால அவ இல்லாம வாழ முடியாது.. ” என்ற பார்த்திபன் மண்டியிட்டு அழுக, அவனோடு சரிக்கு சமமாக மண்டியிட்ட ரிஷி அவனை இறுக்கமாக அணைத்து அவனை தேற்ற முயற்சி செய்தவன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
அதே நேரம் இந்த செய்தி தொலைக்காட்சிகளிலும் பரப்பப்பட அதைப் பார்த்து தான் தேன்மொழிக்கு காவியா இருக்கும் நிலை இப்பொழுது தெரிந்தது.
கடந்த காலத்தில் இருந்து நினைவுலகத்திற்கு வந்த ரிஷி அத்தனை நாட்கள் சேர்த்து வைத்திருந்த துக்கம் அனைத்தும் தீரும்வரை அவள் மடியில் விழுந்து கதறி அழுதான்.
இருவரது நினைவுகளும் அவர்களது கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.
error: Content is protected !!