Skip to content
Post Views: 19,594
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 10
மகனை கண்டதும் பிரகாஷ் மொத்தமாக நொறுங்கி போனான். தன்னை சுற்றி இருந்த எதுவும் அவன் கவனம் பெற வில்லை. அஜய் நிமிரவே இல்லை. தன் சொந்த தந்தையை ஒரு வெறுப்பான, கோபமான பார்வை கூட இன்றி யாரோ போல கடந்து போனான்.
“டேய் வசந்த், என் மகனா ஏண்டா வர சொன்னாங்க. அவன் சின்ன பையன்டா… போலீஸ் ஸ்டேசன் எல்லாம் அவனுக்கு பழக்கம் இல்லை. பயந்துர போறான்…” என்று பதறிய நண்பனை பார்த்த வசந்த்,
Advertisement
“உம் பொண்ணையும் தாண்ட விசாரிப்பாங்க… அவ சின்ன பொண்ணு இல்லையா, அதான் அஜுவ மட்டும் வர சொல்லி இருக்காங்க…” என்று விளக்கம் கொடுத்தான்.
சாதாரண டிஷர்ட்டில் தான் அஜய் இருந்தான். அங்கிருந்த சேரில் அமர வைக்க பட்டான். முகம் இறுகி இருந்தது, வயதுக்கு மீறிய சூழலை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம்.
பெரிதாக எதுவுமில்லை பொதுவான கேள்விகள் தான். ஆனால், அஜய் உள்ளுக்குள் செத்தான். கண்கள் கலங்கி இருந்தது. ஆனால், கண்ணீர் இமை தாண்டி வெளி வரவில்லை.
Advertisement
சார், அவங்க வீட்டை சோதனை போட்டாச்சு. அங்க இதெல்லாம் இருந்துச்சு. உண்மை தான் சார். அந்தாளு பிரகாஷுக்கும், அந்த பொண்ணு ஷாலினிக்கும் தொடர்பு இருக்கு. ஊர விட்டு அவுட்டர்ல அந்த பொண்ணுக்கு வீடு இருக்கு… அங்கையும் போய் சோதனை போட்டாச்சு. இவங்க ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட எல்லாம் இருக்கு…” என்ற ஒரு போலீஸ் அதிகாரி,
Advertisement
வீட்டில் கண்டு எடுக்க பட்ட ஆவணங்களை முன் வைத்தார். அதை இன்ஸ்பெக்டர் பார்வையிட, அஜய் கண்ணிலும் பட்டது. அதில் பிரகாஷ், ஷாலினி இருவரும் அணைத்து நிற்பது, முத்தமிடுவது, தோல் சாய்வது, பார்ட்டி என்று பல போட்டோ இருந்தது. தம்பதிகள் மாதிரி இருவரும் நின்று இருந்த ஒரு போட்டோவை பார்த்ததும்… அஜய்க்கு முடியவில்லை.
அழுத்தம் நெஞ்சு முழுக்க, ஒரு மாதிரி விக்கல் அவன் தொண்டையில், அடக்கி கொண்டான். இரு கைகளையும் கோர்த்து அழுத்தமாக பிடித்தபடி தலை குனிந்து கொண்டான். தன்னை அடக்கி கொள்கிறான் மகன் என்று தூரத்தில் பார்க்கும் போதே தெரிந்தது.
மனைவியை எண்ணி பயம், பதட்டத்தில் இருந்தவனுக்கு மகனின் நிலை கண்டது பொறுக்க வில்லை கண்களில் கண்ணீர் கரகரவென இறங்கி விட்டது. எத்தனை அருமையாக மகனை வளர்த்தேன். தனியாக போலீஸ் ஸ்டேசன் வரும் வயதா அவனுக்கு… தன் தப்பு தன் குடும்பத்தை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…
Advertisement
அஜய் கால்கள் விரக்தியாக இருந்தது. தளர்ந்து போய் நடந்தான்.
“அஜூ கண்ணா…” என்று பிரகாஷ் அழைக்க, நிமிர்ந்து பார்த்தான் ஒரு பார்வை… பிரகாஷ் குறுகி போனான். பிள்ளைகள் கோபத்தை கூட பெற்றவர்கள் தாங்கி கொள்வார்கள். ஆனால், மக்கள் உடைந்து போவதை எந்த பெற்றோரால் கண் கொண்டு பார்க்க முடியும்.
பதினேழு தொடக்கம் அஜய். விரக்தியாய், தளர்ந்து போய் நிற்கும் மகனை பார்த்த பின் பிரகாஷ் நிலை சொல்லவே முடியாது. தலையை பிடித்து அப்படியே அமர்ந்து விட்டான். கண்களில் நீர் கொட்டியது.
ஐயோ! என் மகன்… சிறு வயதில் அஜய் சிணுங்கும் போதே தூக்கி கொள்வான். அவன் அழுதால் தாங்காது. அப்படி தாங்கிய மகன், கண்களில் நீர் திரள நிற்கிறான். அருகில் செல்ல முடியாது, தொட்டு ஆறுதல் சொல்ல முடியாது…
வசந்த், என் பையன் சாப்பிட கூட இல்லை போலடா, அவன் முகத்தை பார்த்தாலே தெரியுது. பிளஸ்…” என்று பிரகாஷ் சொல்லும் போதே,
“டேய்! என்னடா நீ… நான் பார்த்துக்கிறேன்…” வெளி வந்த வசந்த், ஆட்டோக்காக நின்று இருந்த அஜய்யிடம்,
“அஜய் வா சாப்பிடலாம். மாமாக்கு பசிக்குது, என் கூட துணைக்கு வா…”
வசந்த் நோக்கம் அவனுக்கு புரிந்தது, ஆனாலும் சம்மதிக்க மனமில்லை. மற்றவர்கள் பாவம் பார்க்கும் நிலைக்கு தான் வந்து விட்டோமோ…
“இல்லை மாமா, நீங்க போய் சாப்பிடுங்க. அங்க அம்மா கூட சுதா அத்தை மட்டும் தான் இருக்காங்க. அஞ்சுவ தனியா சமாளிக்க முடியாது…” என்று சொன்னவன் நில்லாமல் சென்று விட்டான்.
“உன் பையன் பாவம்டா… அவன் முகத்தை பார்க்க கூட முடியலை என்னால… ஏண்டா இப்படி பண்ண… நாம இப்படி ஓடி உழைக்கிறதே பெத்த பிள்ளைகளுக்காக தானடா, முகத்தை பார்த்தாலே பசி தெரியுது. நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாட… நியாயாம உன் கூட இருக்க கூடாது. உயிர் நண்பன் விட்டு கொடுக்க முடியாம நிக்கிறேன்…”
பிரகாஷ் கண்களில் நீரை தவிர ஒன்றும் இல்லை.
அஜய் மருத்துவமனை வந்தவன், உள் சென்று தாயை பார்த்தான். மயக்கத்தில் தான் இருந்தாள் விசாலாட்சி. தாயை ஒட்டி அருகில் பயந்து போய் அமர்ந்து இருந்தாள் அஞ்சனா.
உடன் பிறப்பு இருவரும் பேசி கொள்ள வில்லை. அஜய் மெல்ல அம்மா கையை தொட்டான். மெல்ல தடவி கொடுத்தான். கண்களில் நீர் வழிந்தது. அஞ்சு இன்னும் பயந்து போய் பார்க்க, தன்னை அடக்கி கொண்டான்.
சாலா கண் விழிக்க நடுராத்திரி ஆகும் என்றார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் சுதா வந்து விட்டாள்.
“லேட் ஆச்சா அஜய். வீட்டை ஒரு எட்டு பார்த்துட்டு வந்தேன். சாலா வீட்டுல இருந்து ஆளு வர லேட் ஆகும். நீங்க இங்க இருக்க வேணாம், வீட்டுக்கு போங்க…”
தயங்கினான் அஜய். தாயை தனியே விட்டு செல்ல மனதில்லை.
“சாலாக்கு முழிப்பு வந்தா பாத்ரூம் கூட்டி போகணும், உடை மாத்தணும்… நான் கூட தான் இருக்கனும் அஜய்…”
புரிந்தவன் தங்கையை அழைத்து கொண்டு வெளி வந்தான். சாலா மயக்கத்தில் இருக்க, தாய் அருகே சென்றவன். சாலா கன்னத்தில் முத்தமிட்டு,
“அம்மா! I லவ் யூ…” என்றான். கொஞ்சம் வளர்ந்த பின் தாய்க்கு முத்தம் கொடுத்த நினைவு எல்லாம் இல்லை. இன்றும் தோன்றியது…
“சாப்பாடு நம்ம வீட்டுல அஜு, மாமா கிட்ட சொல்லி தான் வந்தேன். மறக்காம போய் சாப்பிடுங்க…”
அஞ்சு அண்ணன் கையை சுரண்டினாள். பார்த்த அஜய்யிடம்…
“பாத்ரூம் போகணும் ண்ணா… ரொம்ப நேரம் ஆச்சு…” என்றாள் பாவமாக.
காலையில் போட்ட உடையில் தான் இருவரும் இருந்தார்கள். போலீஸ் கேஸ் என்பதால் அரசு மருத்துவமனையில் தான். ஆட்களிடம் விசாரித்து தேடி கூட்டி சென்றான். அஞ்சுவை அனுப்பி வைத்து வெளியில் காத்து நின்றான்.
கால் மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தங்கை வரவில்லை என்றதும் பதாட்டமானான். தேடி உள்ளே செல்லவும் முடியாது. பயந்து போய் வாசலிலே எட்டி பார்க்க,
“டேய்! யாருடா நீ… பொம்பளைக பாத்ரூம் கிட்ட உனக்கு என்ன வேலை…” என்று அதட்டல் போட,
“என் தங்கச்சி உள்ளே போனாங்க. இன்னும் வரலை…” என்றான் பயந்து.
“அதுக்கு எட்டி பார்ப்பையா… மூஞ்சிய பாரு, அப்படி ஓரமா போய் நில்லு…” மேலும் திட்டு விழ, அமைதியாக ஒதுங்கி நின்றான்.
அடுத்து அஞ்சு வர, கையை கெட்டியாக பிடித்தவன் வெளியில் வந்தான். நிறைய ஆட்டோ நின்றது. ஓரளவு விவரம் தெரியும் என்பதால், மிகவும் யோசித்து, முகம் பார்த்து தான் ஆட்டோ ஏறினான். இன்னும் தண்ணி கூட குடிக்க வில்லை. தங்கையை பார்க்க, அண்ணன் கையை கெட்டியாக பிடித்து இருந்தாள்.
வீடு வந்ததும், “நீ தூங்கு அஞ்சு” என்று தங்கையை அனுப்பியவன், விட்டத்தை வெறித்த படி ஹாலில் அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரம் சென்று இருக்கும்.
“அண்ணா…”
“என்ன அஞ்சு…”
“அது, பசிக்குது…” தாய் நிலை தெரிந்து பசிக்கு நின்றது ஒரு மாதிரி இருந்தது போல, தயங்கி தான் கேட்டாள்.
அஜய் நெற்றியில் அறைந்து கொண்டான். அஞ்சு சின்ன பெண் தானே… வேகமாக உள்ளே சென்று பார்க்க எதுவுமில்லை. தெரிந்த வரை நூடுல்ஸ் செய்து கொண்டு வந்தான்.
வேகமாக சாப்பிட்ட பெண், பாதி தீர்ந்த பின் அண்ணனை, “நீ சாப்பிடு…” என்று கொடுக்க.
“எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு…”
“நீ சாப்பிடாம, நான் சாப்பிட மாட்டேன்…” என்று ஸ்பூனில் ஊட்டி விட, வாங்கி கொண்டான்.
“அம்மா எப்போ வீட்டுக்கு வருவாங்க…”
“நாளைக்கு வந்துடுவாங்க…”
“நாம இங்க இருக்க வேணாம். மதுரைக்கு போயிடுவோம்…”
“ம்ம், அம்மா வரவும் போவோம்…”
“அப்பா…” என்று அஞ்சு கேட்க.
“தூங்கு அஞ்சு, நாளைக்கு அம்மா பார்க்க போகணும்…” என்று சமாதானம் செய்து தன் அருகிலே உறங்க வைத்தான்.
விவரம் தெரிந்த நாளில் இருந்த தனியாக எல்லாம் இருந்தது இல்லை. தாய், தந்தை என்று பாதுகாப்பான கூடு தான். ஒரே நாளில் எல்லாம் மாறி போனது.
அங்கு பிரகாஷ் கேஸ் பதிய வேண்டாம் என்று கெஞ்சி கொண்டிருந்தான்.
இங்க பாருங்க. வெறும் குடும்ப சண்டையா இருந்தா நாங்களே பேசி சரி செய்வோம். ரெண்டு பக்கமும் பாதகம் இல்லாம முடிச்சு கூட வைப்போம். இது கொலை கேஸ்… ஊரே பார்த்திருக்க, முறையா புகாரும் வந்து இருக்கு…”
“சார், கொலை செய்றவங்க ஊர் பார்க்க, சொந்த வீட்டுல செய்வாங்களா சார். அப்படி செஞ்சா மாட்டிப்போம்ன்னு தெரியும் தான… இது ஒரு விபத்து தான் சார்…” வசந்த் ஒரு பக்கம் போராட
“எங்க கடமையை நாங்க கடமையை நாங்க செய்றோம். நீங்க கோர்ட்ல பார்த்துக்கோங்க… லேடி போலீஸ் வாங்க, அந்த பொண்ணு தனி செல்லுக்கு மாத்துங்க. சார், நீங்க நாளைக்கு லாயர கூட்டி வந்து பாருங்க…” என்க.
மிகவும் சோர்ந்து போனான் பிரகாஷ். ஷாலினி கத்தி கதறி பார்த்தும் ஒன்னும் கதையாக வில்லை. போலீஸ் ஸ்டேசன் மிகவும் பயந்து போய் இருந்தாள். பிரகாஷ் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவனுக்கு, பொண்டாட்டி, பிள்ளைகள் நினைவே சுற்றி வந்தது.
பாதி ராத்திரியில் சாலா கண் விழித்து விட்டாள்.
“பிள்ளைக எங்க…”
“வீட்டுல இருக்காங்க…”
“தனியாவா… ஐயோ…” மீண்டும் கிறக்கம் வர கண் மூடினாள்.
அதிகாலை ஐந்து மணிக்கு தெளிவாக முழித்து விட்டாள். அடுத்த கொஞ்ச நேரத்தில் பதறி அடித்து கொண்டு இரு வீட்டு சொந்தமும் வந்து விட்டார்கள்.
பிரகாஷ் பெற்றோர், இரு தம்பிகளும் வந்து வந்தார்கள். அங்கு, சாலாவின் பெற்றோரும் அவள் அண்ணன், பெரிய அண்ணி தேவியும் வந்தார்கள்.
சாலாவை தான் கட்டி கொண்டு அழுதார்கள். குமரன் ஒரு பக்கம், வெட்டுவேன், குத்துவேன் என்று கத்தி கொண்டிருந்தான்.
ஷாலினி பெற்றோரும் பதறி அடித்து தான் ஓடி வந்தார்கள். காலை பத்து மணிக்கு தான் ஷாலினியை பார்க்க அனுமதி கிடைத்தது.
அவள் தாய் கங்கா, அடி வெளுத்து விட்டார். அவர்கள் அடித்தாலும், தேடி வந்தது ஷாலினிக்கு ஒரு நிம்மதி.
பிரகாஷ் பரபரப்பானான். வசந்த், அவனை வெளியில் எடுக்க லாயரை ஏற்பாடு செய்தான். பிரகாஷ் தம்பிகள் அரவிந்த், விவேக் இருவரும் அண்ணனை பார்க்க வந்தார்கள்.
“ஏன் இப்படி பண்ண. அண்ணி முகத்தை எங்களால பார்க்க முடியலை. அம்மா, அப்பா அப்படியே கூனி குறுகி போனாங்க. நல்லா தான இருந்த, உன் புத்தி ஏன் கேடு கெட்டு போச்சு…” என்று அரவிந்தும்,
உன் பக்கம் எல்லாம் நாங்க யாரும் இல்லை. நீ தான் எங்களை படிக்க வச்ச. ஆனாலும், தப்புக்கு துணை போக சொல்லி எங்களுக்கு நீ சொல்லி கொடுக்கல அண்ணா… நியாயம் பக்கம் தான் நிப்போம்…” என்றான் விவேக்.
பிரகாஷ் அமைதியாக தலை குனிந்து நின்று இருந்தான்.
போலீஸ் விசாரணைக்கு தயாரானது. முதலில் விசாலாட்சி. அதன் பின் பிரகாஷ், ஷாலினி.
“ஏட்டு, பிரஸ்க்கு தகவல் சொல்லிரு…”என்ற அதிகாரி கிளம்பி விட்டார், சாலாவை பார்க்க.
error: Content is protected !!