அரசி(க்கி)யே என் அடிமையே – 6
அத்தியாயம் – 6
விக்ரம் ஒரு முடிவுடன் எழுந்து குளித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்தான் அவனை பார்த்ததும் வாசுகி, சீனிவாசன் இருவரும் அவனிடம் பேச செல்ல அவர்களை கண்டுக் கொள்ளாமல் சென்றான். பின் திரும்பி சுதாவிடம் “ஆபீஸ்க்கு போய்ட்டு வாரேன் அத்தை” என்றான்
Advertisement
“சாப்பிட்டு போகலாம் வா விக்ரம்” என்று அழைக்க, வர மறுத்த விக்ரமை வற்புடுத்தி அழைத்து வந்து உண்ண வைத்தார்.விக்ரம் சுதாவிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து வாசுகிக்கு கோவம் கோவமாக வந்தது. சுதாவை பார்வையாளயே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
விக்ரம் ஆபீஸ் கிளம்பி வெளியே சென்ற அடுத்த நொடி வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெறி பிடித்தவர் போல் உடைக்க ஆரம்பித்தார் வாசுகி. ஒரு பைலை எடுக்க திரும்பி வந்த விக்ரம் வீட்டின் உள்ளே செல்லாமல் மறைந்து இருந்து உள்ளே நடப்பதை பார்க்க ஆரம்பித்தான்.
Advertisement
Advertisement
அங்கு “அப்படி என்ன வசியம் சுதா என் மகனுக்கு வச்ச, பெத்த அம்மா என்ன விட அவனுக்கு நீ முக்கியமா போய்ட்டால, நீ தட்டுனதும் கதவை திறக்குறான், நீ சொன்னதும் சாப்பிடுறான் இனிமேல் எனக்கும் என் பையனுக்கும் நடுவுல நீ வந்த உன்ன என் கையலையே கொன்னுருவேன்”என்றார் வாசுகி கோவமாக.
“உங்களோட இந்த பிடிவாதத்தால தான் விக்ரம் இப்படி கஷ்டப்பட்டுட்டு நிம்மதி இல்லாம இருக்கான்,போதும் அண்ணி இனிமேலாது கொஞ்சம் மாறுங்க அவனோட வாழ்க்கைய அவன வாழ விடுங்க, அவன் ஆசை பட்ட அந்த பொண்ணை” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சுதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் வாசுகி.
Advertisement
“இனிமேல் என் பையன பத்தி ஏதாவது பேசுனா உன் கழுத்த நெறிச்சிக் கொன்னுருவேன்” என்று கூறி சுதாவின் கழுத்தை நெறிக்க பார்த்தார் அதற்குள் சீனிவாசன் சுதாவை தன் பின்னால் இழுத்துக் கொண்டார். “வாசுகி என்ன பண்ணுற நீ, கொஞ்சமாச்சி நிதானமா இரு, இனிமேல் சுதா கிட்ட இப்படி நடந்துக்கிட்டா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று சீனிவாசன் கண்டிக்க.
“அண்ணா உன் தங்கச்சி கிட்ட நீயே இப்படி கோவப்படலாமா எனக்கு உன்ன விட்டா வேற யாருன்னா இருக்க முதல்ல விக்ரம் என் கூட பேசாம போய்ட்டான், இப்போ நீயும் கோவப்படுற இதுக்கு மேல நான் ஏன் உயிரோட இருக்கனும்” என்று கூறி அங்கிருந்த கத்தியால் கையை அறுத்துக் கொண்டார்.
“ஏன் வாசுகி இப்படி பண்ண வாமா ஹாஸ்பிடல் போகலாம்” என்று சீனிவாசன் பதட்டத்துடன் கூறி கைக்குட்டையால் வாசுகியின் கையை கட்டிக் கொண்டிருக்க. வாசுகி சுதாவை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார்.
வாசுகி கையை அறுத்துக் கொண்டதை பார்த்து ஓடி வந்த விக்ரம், அவர் சுதாவை பார்த்து சிரித்ததை பார்த்து அப்படியே மறைந்து நின்று விட்டான். தன் தாயின் இன்னொரு முகத்தை பார்த்து விக்ரம் மனதளவில் மிகவும் சோர்ந்து போனான்.
காரை எடுத்துக் கொண்டு அதிக வேகத்தில் ஓடிச் சென்றான். அவன் இருந்த மனநிலையில் எங்கே செல்ல என்று தெரியாமல் போனப் போக்கில் போய்க் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கடற்கரை பார்த்து அங்கே சென்று அமர்ந்து கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிய வயதில் இருந்து தாய் தன்னிடம் காட்டிய அன்பையும் மற்றவரிடம் தன்னை நெருங்கி பழகவிடாமல் தடுத்ததையும், அவனது அம்மாவால் அவன் இழந்த சந்தோஷங்களை பற்றியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கிருந்த காதல் ஜோடிகளை பார்த்ததும் அவனுக்கு அவனும் அவனது அமுலுவும் சேர்ந்து அந்த கடற்கரைக்கு சென்றது, பேசியது மண்ணில் விளையாண்டது என அனைத்தும் நியாபகம் வந்தது. “அமுலு என்கிட்ட திரும்ப வந்துருடா, நீ இல்லாம என்னால இருக்க முடியல டி, நான் பண்ணாது தப்புதான் என்ன மன்னிச்சிருடி, என்ன சுத்தி எல்லாரும் இருந்தும், நீ இல்லாம நான் அனாதை மாதிரி தான் டி இருக்கேன் வா அமுலு என்கிட்ட ப்ளீஸ் டா” என்று மனதிற்குள்ளயே பேசிக்கொண்டிருந்தான்.
வெகுநேரம் கழித்து “அமுலு இனிமேல் யாருக்காகவும் எதுக்காகவும் உன் விட்டு பிரிய மாட்டேன் டி, எனக்கு நீ வேணும், என் ஆயுள் முழுக்க என் கூட சந்தோசமா வாழ நீ எனக்கு வேணும், வாரேன் செல்லக்குட்டி இந்த அத்தான் உன்ன தேடி” என்று ஒரு முடிவை எடுத்த பின் தான் விக்ரமுக்கு மனம் சற்று அமைதியானது.
இரண்டு நாட்களாக ஆபீசுக்கு செல்லாததால் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று நினைத்து உடனே கிளம்பி ஆபீசுக்கு சென்றான். அங்கு ரகு விக்ரம் இரண்டு நாட்களாக ஆபீஸ்க்கு வராத பற்றி கேட்க.மனசு சரியில்லடா அதனால தான் வரல. அது மட்டும் இல்ல நான் உடனே கிளம்பி போயி ஏன் அமுலுவா பார்த்து மன்னிப்பு கேட்க போறேண்டா.
“மச்சான் ரெண்டு நாளா நீ இங்க இல்லாமலே நிறைய வேலை பெண்டிங்ல இருக்குடா, நிறைய மீட்டிங் வேற கேன்சல் பண்ணிட்டேன், நாளைக்கு அந்த ஃபாரின் கிளைண்ட் கூட ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அந்த மீட்டிங் மட்டும் நல்லபடியா முடிஞ்சா 500 கோடி ரூபா டீல் நமக்கு கிடைக்கும் டா ” என்றான் ரகு.
“சரிடா ரகு நாளைக்கு அந்த மீட்டிங் முடிச்சிட்டே போறேன், அதுக்கு அப்பறம் நீ இரண்டு மாசத்துக்கு என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது, நான் என் அமுலு கூட தான் ஃபுல்லா டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்” என்றான் மகிழ்ச்சியாக.
“நீ இவ்ளோ சந்தோசமா இருக்குறத பாத்து ரொம்ப வருஷம் ஆச்சுடா மச்சான், நீ எப்பவும் இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கும்டா அதாண்டா என்னோட ஆசை” என்றான் ரகு.
“என் அமுலு என்கூட இருக்குற வரைக்கும் நான் சந்தோசமா தான்டா இருப்பேன், போய் வேலையை பாரு நிறைய வேலை இருக்குல ” என்றான் விக்ரம் சிரித்துக் கொண்டே.
மும்பையில் ஷாம் டோக்கியோ செல்வதற்காக பேக்கிங் செய்துக் கொண்டிருந்தாள்.”பேப் என்ன பண்ணிட்டு இருக்க வா வெளிய எங்கையாது போலாம் செமையா போர் அடிக்குது” என்று கூறிக் கொண்டே வந்த ஸ்ரேயா ஷாம் பாக்கிங் செய்வதை பார்த்து ” ஷாம் இப்ப எதுக்கு டிரஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்க”.
“நான் இப்பவே டோக்கியோ கிளம்பறேன் ஸ்ரே”
“அதுக்குள்ளயா இப்ப என்ன அவசரம் ஷாம், இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இரு ப்ளீஸ்”
“இல்ல ஸ்ரே என்னால இதுக்கு மேல இங்க ஒரு நாள் கூட ஸ்டே பண்ண முடியாது, டிங்கு ஓட மேரேஜ்க்கு வந்தேன் அது முடிஞ்சது சோ கிளம்புறேன், அங்க நிறைய ஒர்க் பெண்டிங் இருக்கு ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”
“வர துர்கா பூஜைக்கு நீ தான அம்மனுக்கு பூஜை பண்ணனும்னு கிராணி சொல்லி இருக்காங்க, அது மட்டும் இல்லாம நீ ராணி ஆன அப்பறம் டோக்கியோல இருக்கிறது சரியா வருமா”
“ப்ளீஸ் ஸ்ரே இதுக்கு மேல இத பத்தி பேசாத, நான் இன்னும் ராணி ஆகுறத பத்தி எல்லாம் யோசிக்க கூட இல்லை, அங்க எனக்கு இம்போர்ட்டண்ட் ஒர்க் இருக்கு சோ நான் இப்ப கிளம்புறேன் ப்ளீஸ் என்ன தடுக்காத” ஸ்ரே எப்படி ஷாம் செல்வதை தடுத்து நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஷாம் வீட்டில் உள்ள அனைவரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவள் போவதை தடுத்து நிறுத்த முயன்றும் ஷாம் யாருடைய பேச்சையும் கேட்காமல் அனைவரிடமும் கூறிவிட்டு டோக்கியோ விற்கு கிளம்பி சென்று விட்டாள்.
வேலை அனைத்தையும் முடித்துவிட்டு விக்ரம் அவனுடைய அமுலுவை பார்க்க மும்பை சென்றான். அமுலுவை பார்த்து மன்னிப்பு கேட்டு, அவளுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று பல ஆசைகளுடனும் கனவுகளுடனும் சென்ற விக்ரம் அங்கு பார்த்தது உறவினர்கள் சூழ அலங்கரிக்கப் பட்ட மேடையில் நின்றிருந்த அவனது அமுலுவின் கையில் ஒருவன் நிச்சயதார்த்த மோதிரத்தை போட்டு விடுவதை தான்.
விக்ரம் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. மேடையின் அருகில் நின்றிருந்த வினித் எதர்ச்சியாக வாயிலை பார்க்க அங்கு கண்ணீருடன் நின்று இருந்த விக்ரமைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். பின் அருகில் இருந்த ஸ்ரேயாவை அழைத்து விக்ரம் வந்திருப்பதாக கூறினான்.
விக்ரமை பார்த்த ஸ்ரையா யாரும் அறியா வண்ணம் அவனை தனியா அழைத்து சென்று “இப்போ எதுக்கு நீ இங்க வந்து விக்ரம்” என்றாள் கோவமாக.
“ஸ்ரேயா நான் ஷாம தனியா பாக்கணும் அவ கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு”
“என்ன விக்ரம் பேச போற அவகிட்ட, இதுக்கு முன்னாடி பேசி அவ மனசு நோகடிச்சது போதாதா, இப்பதான் அவ பழசு எல்லாம் மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறா மறுபடியும் அவ வாழ்க்கைய கெடுக்க வந்துட்டியா விக்ரம் நீ”
“ஸ்ரேயா நான் அவள பார்த்து மன்னிப்பு கேட்க தான் வந்தேன்”
“உன் மன்னிப்பு இங்க யாருக்கும் தேவையில்லை விக்ரம், ப்ளீஸ் தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு இனிமேலாவது எங்க ஷாம நிம்மதியா வாழ விடு, இப்பதான் அவளுக்கு பொருத்தமான, அவளோட கனவுகளை நிறைவேத்துற, அவளோட மனச புரிஞ்சி நடந்துக்குற ஒரு நல்ல பையன பார்த்து விரும்பி கல்யாணம் பண்ணிக்க போற. இதுக்கு குறுக்க வராதா விக்ரம் உன்ன கெஞ்சிக் கேக்குறேன் ப்ளீஸ் இங்க இருந்து போ” என்றாள் ஸ்ரேயா.
விக்ரம் ஸ்ரேயா கூறிய “ஷாம் அந்த பையன விரும்பி கல்யாணம் பண்ணிக்க போற” என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டே இருந்தது.ஸ்ரேயாவிடம் எதுவும் கூறாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.
“அமுலு அப்போ என்ன நீ முழுசா மறந்துட்டியா டி, இனிமேல் உன் வாழ்க்கைல எனக்கு எந்த இடமும் இல்லையா, நான் பண்ணது தப்புதான் அதுக்காக இவளோ பெரிய தண்டனையா டி அமுலு எனக்கு தருவ” என்று மனதிற்குள்ளேயே ஷாமிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஷாமின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் பத்து நாட்களில் திருமணம் என்பதால் அனைவரும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக் கொண்டு பரபரப்பாக திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
மும்பையில் இருந்து வந்த விக்ரம் நேராக ரகுவிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறி அழுதான். ரகுவும் விக்ரமுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். விக்ரம் எதையோ இழந்தது போல எப்பொழுதும் சோகமாகவே இருந்தான்.
சென்னையில் உள்ள நண்பர்களுக்கு பத்திரிகை அளிக்கும் பொறுப்பை ஸ்ரேயா கனிமொழி இடம் வழங்கினாள். டிங்கு ஹனிமூன் சென்று இருப்பதால் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அவளால் அவர முடியும்.
நாட்கள் குறைவாக இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவருக்கும் பத்திரைகளை நேரில் சென்று வைத்தனர். கனி ரகு மட்டும் அவரது நண்பர்களுக்கு பத்திரிகை வைக்க சென்றிருந்தால்.
ரகுவின் ஆபீஸில் அவனை சென்று பார்த்து அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் “ரகு கொஞ்சம் என்னோட கேபின்க்கு வா”என்றான் விக்ரம் போனில்,”மச்சான் கனி வந்து இருக்காடா அவ கிட்ட பேசிட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றான் ரகு.
கனியை பார்க்க விக்ரம் ரகுவின் ரூமூக்கு வந்தான், கதவை திறக்க போகும் நேரம் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அப்படியே நின்று விட்டான்.
கனி கல்யாண பத்திரிக்கையை நீட்டியதும் கனிக்கு தான் திருமணம் என்று நினைத்து பத்திரிக்கையை வாங்கி பார்த்த ரகு அதிர்ச்சி யடைந்தான்.
“ஹே கனி என்ன இது ஷாமுக்கு கல்யாணமா, அதுவும் இன்னும் ஒரு வாரத்துல”
“ஆமா ரகு, இந்த நாள விட்ட அடுத்த நல்லநாள் ரெண்டு மாசம் கழிச்சு தான் இருக்கு அதனால தான்”
ரகு சிசிடிவி மூலம் விக்ரம் வெளியில் நிற்பதை பார்த்து விட்டான். உடனே “எப்படி கனி,எப்படி ஷாமால விக்ரம மறந்துட்டேன் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க போக முடிஞ்சது, ரெண்டு பேருக்கும் நடுவுல பிராப்ளம்னா அதை சால்வ் பண்ணனும் அத விட்டுட்டு,ஷாம் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சு கூட பாக்கல” என்றான்.
“ப்ளீஸ் ரகு, ஷாம் பத்தி உனக்கு தெரியாதா நீயே அவள தப்பா நினைக்கலாமா”
“அவ பண்ணுறத பார்த்த தப்பா நினைக்காம என் பண்ண சொல்லுற”
“ரகு ஷாம் ஒன்னும் ஆசைப்பட்டு இந்த கல்யாணத்தை பண்ணிக்க போகல, அவள கட்டாய படுத்தி தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்க”
