Skip to content
Post Views: 8,008
அந்த பண்ணை வீட்டின் வெளியே இருளில் நின்றிருந்தது நகுலனின் கார். உள்ளே சில காவலாட்கள் இருக்க, பின்னே இருந்த வண்டியில் லோக்கல் போலீசும் இருந்தது. அனைவரும் அமைதியாக நிற்க, வீட்டிற்கு சொல்லாமல் வந்திருந்த கோவர்த்தன், “எதுக்கு இங்கயே நிக்குறோம் அயித்தான்? உள்ள போவோம் வாங்க… அந்த பொண்ணு என்ன நிலைமைல இருக்கோ!?” என்றான் தவிப்பாய்.
வந்து நின்று கால் மணி நேரம் கடந்தும் யாரும் உள்ளே நுழைவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதைக்கண்டு கோவர்த்தன் கேட்டிட, அப்போதும் நகுலன் அதேப்போல தான் நின்றிருந்தான்.
Advertisement
“போலாம் இரு!” என்றான் நகுலன். அவனின் பொறுமை கோவர்த்தனை கோவம் கொள்ள வைத்தது.
“அந்த பொண்ணு நம்மளை நம்பி இவ்ளோ தூரம் வந்துருக்கா! அவளை காப்பாத்துவோம்ன்னு சொல்லிருக்கோம்?” அவன் அழுத்தமாய் கோவத்துடன் சொல்ல, அவனை பார்த்த நகுலன், “எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைக்குரியா?” என்றான்.
Advertisement
Advertisement
“என்னை விட உனக்கு நல்லா தெரியும். அப்றமும் ஏன் தாமதிக்கணும்?” அவன் கேட்க, “இப்ப உள்ளப்போய் என்ன செய்ய சொல்ற?” என்றான் நகுலன்.
“அங்க இருக்கவங்களை அரெஸ்ட் பண்ணலாமே!?”
Advertisement
“என்னன்னு அரெஸ்ட் பண்ணுவ? முதல்ல கம்ப்ளைன்ட் யாரு குடுத்தா?” நகுலன் கேட்க, கோவர்த்தன் விழித்தான்.
“இப்ப உள்ள போய் அரெஸ்ட்ன்னு சொன்னா நாங்க எல்லாம் பிரண்ட்ஸ், குடும்பமா வீகேன்ட்க்கு இங்க வந்துருக்கோம்ன்னு சொல்லுவானுங்க. நம்ம அப்படியான்னு கேட்டுட்டு திரும்ப போக வேண்டியது தான்” நகுலன் சொன்னதும், “ஏய் அவங்க வைஃப் ஸ்வாப்பிங் பண்றாங்க” என்று பல்லைக்கடித்தான் கோவர்த்தன்.
“அது நமக்கு தெரியும்! ஆனா, ப்ரூப் இருக்கா? அதுமில்லாம, ‘கக்ஓல்ட்’ இஸ் நாட் அ க்ரைம் இன் இந்தியா, சம்பந்தபட்டவங்க கம்ப்ளைன்ட் குடுக்காதவரை” என்றான்.
“ரேகா? அவங்க குடுப்பாங்க தானே!?”
“குடுக்கலாம். குடுக்காமையும் போகலாம். நீ கொஞ்சம் பொறு!” அவன் சொல்லும்போதே அங்கே இரண்டு பைக்குகளில் நான்கு பேர் வந்து நின்றனர்.
“சாரி சார். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” சங்கடமாய் அவர்கள் சொல்ல, “இட்ஸ் ஓகே” என்ற நகுலன், “நான் சொன்னது நினைவு இருக்கட்டும். அங்க இருக்க லேடீஸ் யார் முகமும் வெளில வரவே கூடாது. நீட்டா எடிட் செஞ்சு சேனலுக்கு குடுங்க” என்றான். அவனுக்கு மிகவும் நம்பிக்கையான மீடியா ஆட்களை வரவைத்திருந்தான்.
பிறகு அந்த ஏரியா லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து, “இது உங்க லிமிட்ல வருது. நான் முன்ன போக முடியாது. நான் சொன்ன மாதிரி நீங்க செய்ங்க. ரொம்ப துள்ளுன்னா நான் பாத்துக்குறேன்” என்றான் நகுலன். பின் எல்லோருமாய் சத்தமில்லாமல் நடந்தே அந்த பண்ணை வீட்டை அடைந்தனர்.
முழு வெளிச்சமில்லாமல் வீடே அமைதியாய் இருக்க, வீட்டின் கதவு மூடியிருந்தது. நகுலனின் கண்ணசைவில் அந்த வீட்டின் கதவை தட்டினார் கான்ஸ்டபில். யாரும் வரும் அரவமே கேட்காமல் போக, மூவராய் சேர்ந்து வேகமாய் தட்ட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பின்னே கேமராவோடு நின்றிருந்தனர் நால்வர். அவர்கள் பின்னே லோக்கல் போலீஸ் சில பெண் கான்ஸ்டபிளுடன் நிற்க, அவர்களுக்கு பின்னே கடைசியில் நின்றனர் நகுலனும் கோவர்த்தனும்.
கோவர்த்தனுக்கு தான் மனமே இல்லை. உள்ளே அந்த பெண் என்ன நிலையில் இருக்கிறாளோ பாவமே என்று!
கையில் பேனாக்கத்தியுடன் சிவாவின் முகத்தை குறிவைத்து ஓங்கியிருந்த ரேகாவின் கரத்தை வலுக்கொண்டு பிடித்து தடுத்துக்கொண்டிருந்தான் சிவா. அவன் இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. சுரேஷ் சொன்னதை வைத்து இவளை குறைத்து மதிப்பிட்டுவிட்டான் போலும். மேலாடையில் கை வைக்க வந்த நேரத்தில் சட்டென கத்தியை எடுப்பாள் என அவன் நினைக்கவே இல்லை. கொஞ்சம் அசந்திருந்தால் அவன் இந்நேரம் ரத்த வெள்ளத்தில் அனத்திக்கொண்டு இருந்திருப்பான்.
வலுக்கொண்டு அவள் கரத்தை பிடித்து தடுத்தவன், “என்னடி கத்தி எல்லாம் வச்சுருக்க? பெரிய பத்தினியோ?” என்று இகழ்ச்சியாய் கேட்க, “நான் பத்தினி தான்டா… நீ என்னை தொட்டாலும், தொடலன்னாலும் நான் பத்தினி தான்” என்றாள் தைரியமாய். ‘என்ன ஆகிவிடும்? ஆவதை பார்க்கலாம்’ என்ற துணிவு வந்துவிட்டது அவளுக்கு.
“ஏய் என்னடி ரொம்ப பேசுற நீ!? கூப்புடவா உன் புருஷனை?” அவன் நக்கலாய் கேட்டிட, “கூப்புடு, உன் பொண்டாட்டியாது அவன் கிட்ட இருந்து தப்பிக்கட்டும்” என்றாள் கோவமும் வேதனையும் அருவெறுப்புமாய்.
“இதெல்லாம் இங்க என்ன புதுசாவா நடக்குது?” அவன் சொல்லும்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்க, திடுக்கிட்டான். சில நிமிடங்களில் கதவு தட்டும் வேகமும் அதிகரிக்க, பயந்தே போனான். ரேகாவுக்கு இப்போது தான் முழு தைரியமே வந்தது. எதிரில் வீரமாய் பேசியவன் முகம் போன போக்கை பார்த்தவள், “போ, போய் கதவை திற” என்றதோடு அவனிடம் இருந்து பட்டென கையை உருவிக்கொள்ள, அவளை சந்தேகமாய் பார்த்தபடியே அறைக்கதவை திறந்து வெளியே சென்றான் சிவா.
அவனை போலவே மற்ற ஆண்களும் அரைகுறை உடுப்பில் வெளியே வந்து நிற்க, “யார்டா அது இப்படி தட்டுறாங்க?” என்றான் சுரேஷ்.
“எனக்கென்ன தெரியும்? உன் பொண்டாட்டி வேலையா கூட இருக்கும்” என்று பல்லைக்கடித்தான் சிவா.
“ச்ச ச்ச… அதுக்கு அவ்ளோ சீன் இல்ல” என்ற சுரேஷ், பயந்திருந்த மற்ற நான்கு ஆண்களையும் அமைதிப்படுத்திவிட்டு தைரியமாய் கதவை திறந்தான். ‘யாரோ?’ என நினைத்து திறந்தவன், வெளியே போலீஸை கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை. முகமே பேயறைந்ததை போல ஆனது.
அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். மீடியா ஆட்கள் புகைப்படமும், வீடியோவுமாக எடுக்க ஆரம்பிக்க, சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை அவர்களுக்கு.
முதலில் தெளிந்த சிவா தான், “சார், என்ன சார் பண்றீங்க? பர்மிஷன் இல்லாம அன்டைம்ல வந்துட்டு இப்படி போட்டோ எல்லாம் எடுக்குறீங்க?” என்று கேட்க, அந்த லோக்கல் இன்ஸ்பெக்டர், “இங்க பிராத்தல் நடக்குறதா எங்களுக்கு இன்போர்மேஷன் வந்துச்சு!” என்றதும், அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள், “இல்ல சார். வீ ஆர் ப்ரம் ரெபுடேடட் பேமிலி. உங்களுக்கு யாரோ பால்ஸ் இன்போர்மேஷன் குடுத்துருக்காங்க” என்றனர் மாற்றி மாற்றி.
“அப்படியா?” என்ற இன்ஸ்பெக்டர், “நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க? உங்க வீடா?” என்றதும், “நாங்க எல்லோரும் குடும்பமா வீகென்ட்க்கு இங்க வந்துருக்கோம் சார். டூ டேஸ்க்கு இந்த வீட்டை ரெண்ட்’க்கு எடுத்துருக்கோம்” என்றான் ஒருவன்.
அவன் அப்படி சொன்னதும், ‘பார்த்தாயா?’ என்ற பார்வையை கோவர்த்தனிடம் செலுத்தினான் நகுலன்.
“சரி, உங்க மேரேஜ் சர்டிபிகேட் எல்லாம் காட்டுங்க” இன்ஸ்பெக்டர் கேட்க, திருதிருவென விழிக்க ஆரம்பித்தனர். திருமணமான புதிதில் கடமையே என பதிவு செய்தது தான் நினைவில் இருந்தது. அதன் சான்றிதழ் வீட்டின் எந்த மூலையில் கிடக்கிறது என்று கூட அவர்களுக்கு நினைவில்லை. ஃபோனில் வைத்துக்கொள்ளுமளவு அவர்களுக்கு அது முக்கிய விஷயமும் இல்லை. அதிலும் சுரேஷ் இன்னும் பதிவே செய்யவில்லை.
“சார்… இப்ப கைல இல்ல சார். வீட்டுல பேசி அனுப்ப சொல்றோம் சார்” என்றான் ஒருவன்.
“இல்ல ப்பா… ரொம்ப நம்பிக்கையான இடத்துல இருந்து எங்களுக்கு தகவல் வந்துருக்கு. இதை நாங்க முறைப்படி விசாரிச்சு தான் ஆகணும். எல்லாரும் எங்ககூட ஸ்டேஷன் வந்துட்டு போங்க” என்றதும், அலறிவிட்டனர்.
“சார், நல்ல குடும்பத்து பசங்க சார் நாங்க. எங்களை போய்… நான் என் லாயர் கிட்ட பேசுறேன்” ஒருவன் ஃபோன் எடுக்க அதை பிடுங்கிய கான்ஸ்டபில், “அய்யா சொல்றதை கேளு” என்று மிரட்டினார்.
“ஒன்னும் இல்ல. ஸ்டேஷன் வந்து விவரத்தை கைப்பட எழுதி குடுத்துட்டு போயிட்டே இருங்க. உங்க பக்கம் இருந்து யார் வரதா இருந்தாலும் ஸ்டேஷன் வர சொல்லுங்க” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, ஆண்களின் கண்கள் எல்லாம் மனைவிமாரின் மேல் தான் படிந்தது. என்னதான் வருடக்கணக்கில் இவர்களுடன் வாழ்ந்தாலும் இவர்களின் கலாசாரத்தில் கலந்துவிட்டாலும், அதை யாரும் மனமுவந்து செய்யவில்லை என்பது அறுவருக்குமே தெரியும்.
சுரேஷை போலவே மிரட்டி அடிபணிய வைத்து தான் மற்ற ஆண்களும் தங்கள் மனைவிகளை பழக்கியிருந்தனர். அதில் சிலருக்கு குழந்தைகள் கூட இருக்க, அவர்களை வைத்தும் கூட மிரட்ட ஆரம்பித்திருந்தனர் வெளியே சொல்லக்கூடாது என!
எங்கே பெண்கள் வாயை திறந்துவிடுவரோ என்ற பயம் அத்தனை பேருக்கும் இருக்கத்தான் செய்தது. அவர்கள் வெளிறி நின்ற நேரம் தான், சுரேஷ் கூட்டத்தில் கடைசியாய் நின்றிருந்த நகுலனை கண்டான். கண்டதுமே, “மச்சான்…” என்ற சத்தமாய் அழைத்தவன், நேரே அவனிடம் சென்று, “மச்சான், உங்க தங்கச்சியை கூட்டிட்டு தான் வந்துருக்கேன். உங்க ஆளுங்க எப்படி பேசுறாங்க பாருங்க… நீங்களும் இவ்ளோ நேரமா கேட்டுட்டு நிக்குறீங்க போல? எங்களை பத்தி சொல்லுங்க” என்றான் நம்பிக்கையாய்.
“அச்சோ மாப்பிள்ளை… நான் சொல்றதை எல்லாம் இவங்க நம்ப மாட்டாங்க” அப்பாவியாய் சொன்னான் அவன்.
“வேற யாரு சொல்லணுமாம் இவங்களுக்கு?” கடுப்பாக சுரேஷ் கேட்டிட, “என் தங்கச்சியை சொல்ல சொல்லுங்க!” என்றான் நகுலன். உடனே ஒரு ஓரத்தில் நின்று நடப்பதை அழுத்தமாய் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் சென்றவன், கையை பிடித்து தரதரவென இழுத்து வந்து, “சொல்லுடி!” என்றான்.
ஒருமுறை அங்கிருந்த அத்தனை முகங்களையும் பார்த்தாள் ரேகா. கேமராவில் அத்தனை ரெகார்ட் ஆவதையும் கண்டவள் கண்கள், சில நொடிகள் அதிகமாய் அங்கிருந்த பெண்களின் மீது படிந்தது. மரத்துப்போன கண்களோடு என்னவோ நடக்கட்டும் என்ற விரக்தி நிலையில் அவர்கள் இருப்பதை போல தோன்றியது.
“சொல்லுடின்னா பராக்கு பாக்குற?” தோளில் தட்டினான் சுரேஷ்.
அவனை முறைத்து பார்த்தவள், சற்று தள்ளி அடுக்கி வைத்திருந்த பைகளில் இருந்து தன்னுடைய பையை மட்டும் எடுத்தாள்.
“என்னடி பண்ற? உன் அண்ணன் உன்னை சொல்ல சொல்றான் பாரு… சொல்லித்தொல” என்று திட்ட, அதை காதிலேயே வாங்காதவள், ஒரு துணி சுற்றி பத்திரமாய் தான் வைத்திருந்த டைரியை எடுத்து, சட்டென நகுலனிடம் நீட்டினாள். அது என்ன என புரியாத சுரேஷ், அவளை மீண்டும் திட்ட வர,
“நாங்க எல்லாரும் புருஷன் பொண்டாட்டி தான். ஆனா, பொண்டாட்டியை ஒருத்தருக்கொருத்தர் மாத்திக்குறானுங்க. மத்தவங்க எப்படின்னு தெரியல. எனக்கு இதுல விருப்பம் இல்ல. என்னை வற்ப்புறுத்தி தான் பண்ண வைக்குறாங்க” என்று தைரியமாய் சொல்லிவிட்டாள்.
சுரேஷுக்கு அவளை அடித்து கொல்லும் வேகம். நரம்பு புடைக்க பல்லை கடித்தவன், “பைத்தியம் சார், உளர்றா” என்றான்.
“நான் பைத்தியமா இல்லையான்னு நீங்களே விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. நான் புகார் குடுக்குறேன். இவன் மேல.. இவங்க மேல!” முதலில் சுரேஷை காட்டியவள், பின்பு மற்ற ஆண்களையும் காட்ட, பதறிய மற்றவர்கள், “நாங்க எதுவும் பண்ணல. எங்களுக்கும் இதுக்கும் தொடர்பு இல்ல” என்று அலற,
“தொடர்பு இருக்கு சார். இங்க இருக்க ஆறு பேருமே என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சாங்க. இதோ இங்க பாருங்க…” என்றவள் அவள் கரத்தை காட்டினாள். அதில் சற்று நேரத்திற்கு முன் சிவா அழுத்தி பிடித்ததில் கன்றி சிவந்திருக்க, அதை காட்டி, “என்னை பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சாங்க. நான் தடுத்தேன். என்னை காயப்படுத்துனாங்க” என்று இயந்திரம் போல சொல்ல, வெடவெடத்து போயினர் எல்லோரும்.
error: Content is protected !!