Skip to content
Post Views: 3,945
ரீங்காரமாய் என்னுள்ளே – 18
இரவு மணி பத்தை நெருங்க, வெளியில் மழை அடித்து பெய்து ஓய்ந்து, தற்போது மெல்லிய தூறலாய் இன்னும் மண்ணை குளிர்வித்து கொண்டிருக்க, காவல் துறை அதிகாரியோ போனில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
“நாளைக்கு ஒரு நாள் மட்டும் அவனை விட்டு வைங்க… திங்கக்கிழமை ரிமாண்ட்ல எடுத்துட்டு பாத்துக்கலாம்…” என விஷ்ணு போனில் மற்ற அதிகாரிக்கு அறிவுறுத்திக்கொண்டிந்த நேரம் அவனின் அலைபேசிக்கு இரண்டாம் கால் வர, அதை கட் செய்து, மேலும் சில நிமிடம் அந்த அதிகாரியுடன் பேசிவிட்டே போனை வைத்தான்.
அடுத்து சில நொடிகள் நகர்ந்து, போனில் அவனுக்கு வந்துருந்த மெஸேஜை எடுத்து பார்க்க, அதில் “பிஸி…” என்று கேட்டு நான்கு முறை வந்திருந்தது.
Advertisement
அதில் அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோட, அதற்க்கு ரிப்ளை செய்யாமல் பார்வை மட்டும் பதித்திருந்தான் காவலன்.
அந்நேரம் கதவினை திறந்து கொண்டு உள்ளே வந்தார் விசாலாட்சி.
அவரை முறைத்து கொண்டே, “தூங்காம இப்போ எதுக்கு இங்க வரீங்க?…” என கேட்டான் விஷ்ணு.
Advertisement
அதனை கண்டுகொள்ளாதவர், அவனிடம் தன் கையினில் உள்ள மஞ்சள் பாலை நீட்ட,
Advertisement
“வேணாம்னு சொல்லிட்டு தானே வந்தேன்… இப்போ என்ன அக்கறை, சக்கரையா எடுத்து வந்திருக்கீங்க?…” என விஷ்ணு சூடாக கேட்க,
அவனின் போன் மீண்டும் இசைத்தது.
“யாருடா…” என அன்னை கேக்க,
Advertisement
“பர்சனல் கால்…” என சொல்லி அன்னையிடம் உள்ள பாலை வாங்கிக்கொண்டு, “கதவை சாத்திட்டு போங்க…” என சொல்லி போனை அட்டென்ட் செய்தான்.
அன்னையோ அவனின் சொல்லை காதில் வாங்காதவர் போல், சட்டமாக கட்டிலில் அமர்ந்தவர், அவனின் கையில் இருந்த போனை பிடுங்காத குறையாக வாங்கி, “சொல்லு சிந்து…” என பேசினார்.
“ஹான் அத்தை…” என அதிர்ந்து சிந்து அழைக்க,
“அத்தையே தான்… என்ன இவனுக்கு நீ தான் கால் பண்ணனுமா?… ஏன் இவன் உனக்கு கால் பண்ணிலாம் பேசமாட்டானா?…” என கேள்வி கேட்க,
அன்னையை பார்த்து பல்லை கடித்தான் விஷ்ணு.
“இல்ல… இல்ல அத்தை… அவங்களுக்கு உடம்பு எப்படி இருக்குனு கேக்க தான்…” என அவசரமாக பதில் அளித்தாள் பாவை.
“அவன் உடம்புக்கு என்ன… அதுலாம் நல்லா தான் இருக்கான்…” என வருங்கால மாமியார் பதில் சொல்ல,
“ம்மா…” என்றான் சத்தமாக விஷ்ணு.
“சரி சரி… நீ நேரமா தூங்கு… நாளைக்கு பாக்கலாம்…” என அவளிடம் சொல்லி, போனை வைத்துவிட்டு மகனை பார்த்தார்.
“இதுக்கு தான் உங்க ரெண்டு போரையும் கூட்டு சேரவே விடக்கூடாதுன்னு சொன்னேன்…” என்றான் புதல்வன்.
“அடப்போடா… அதுலாம் நாங்க எப்போவோ மிங்கில் ஆயாச்சு… உன்னால ஒன்னும் பண்ண முடியாது…” என்றார் அன்னை கெத்தாக மகனிடம்.
விஷ்ணு, “வந்த வேலை முடிஞ்சதுனா கிளம்பலாமே…”
“நீயென்ன பண்ணலாம்னு இருக்க… அதை சொல்லு முதல்ல…” என அன்னை அவனிடம் கேட்டார்.
“தூங்குற நேரத்துல தூங்க தான் செய்வாங்க…” என தோலை குலுக்கி சொன்னான் மகன்.
“அது எனக்கு தெரியாது பாரு…” என பல்லை கடித்தவர்,
“நான் என்ன கேக்குறேன்னு உனக்கு புரியல?… அப்படித்தானே?…” என கேட்டார் அன்னை.
“உடம்பு சரியில்லாத பையன தூங்க விடாம பண்ணிட்டு இருக்கீங்க…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“ஷப்பா… உனக்கு வந்த இருமலுக்கும், காச்சலுக்கும், நீ பண்ற அலும்பல் இருக்கே… தாங்க முடியலடா…” என அன்னை நீட்டி முழக்க,
“பையனுக்கு உடம்பு சரியில்லாம இருக்கேன்னு எங்கயாச்சும் கவலை இருக்கா?…” என விஷ்ணு கேக்க,
“ஆனா ஒன்னுடா… ஒரு ரெண்டு நாள் உன்னால ஒழுங்கா பேச முடியாம இருந்த பாரு… அப்போ அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியை இருந்துச்சிடா சாந்தமா உன்னைய பாக்குறதுக்கு…” என சீண்டி பேசினார் அன்னை.
“இன்னும் குளிர்ச்சியா இருக்குறதுக்கு வேணும்னா ஐஸ் கியூப் கண்ணுல எடுத்து வச்சிக்கோங்க…” என்றான் மகனும் விடாமல் இடக்காக.
“என்னமோ சொல்லு…” என்றவர்,
“சிந்து வீட்டு விசயத்துல என்னனு பாத்து பண்ணு விஷ்ணு… சிந்துவுக்கு மனக்கசப்பும் வந்துரக்கூடாது… சிந்து தான் நமக்கு முக்கியம்… இல்லையா சிந்துவே பேசிட்டு சொல்லட்டும்… அதுவரைக்கும் வெயிட் பண்ணு…” என்று சொல்லி மகனை பார்க்க,
“அவ வீட்டுல பேசிட்டு சொன்னா , உங்க பையனுக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது… பரவாலையா?…” என கேட்டான் விஷ்ணு.
அன்னை கவலையாக பார்க்க,
“ரொம்ப சோக கீதம் வாசிக்க வேணாம்…” என்றவன், ” நாளைக்கு பாக்கலாம்ன்னு என்னமோ உங்க மருமககிட்ட சொன்னிங்க?… என்ன சங்கதி?…” என இலகுவாக கேக்க,
“சரி பாத்துக்கோ…” என சொல்லியவர், “எவ்வளோ சமத்து பாரு என் மருமக… உன்னைய பாக்க வர்றதுக்கு என்கிட்ட பெர்மிஸ்ஸின் கேக்குறா…” என அன்னையும் இலகுவானார்.
“ஓஹ் அப்படி… அப்போ நாளைக்கு பாத்துக்குறேன் உங்க மருமகளை…” என்றான் நம்பியார் பாணியில்.
“போடா… அவளை ஏதாவது சொன்ன, உனக்கு அப்பறம் இருக்கு…” என்று சொன்னார் விசாலாட்சி.
“அதை அப்பறம் பாருங்க… இப்போ போயி படுங்க…” என அனுப்பி வைத்தான் காவலன்.
——-
“சிந்து நல்லா என்னைய பிடிச்சிக்கோங்க… அப்பறம் நான் போற வேகத்துக்கு எங்காது விழுந்து வாருனீங்க, அப்பறம் உங்க ஆளு என்னைய கம்பி என்ன விட்ருவாங்க… என்னைய நம்பி வேற ஒரு ஜீவன் வரப்போது…” என மானசி தனது வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே சொல்ல,
“சும்மா இரு மானு…” என சிரித்துக்கொண்டே அமர்ந்தாள் சிந்து.
“இந்த சிரிப்புல தான் ஒரு வேல விஷ்ணு அத்தான் மயங்கிட்டாரோ…” என மானு கேள்வியெழுப்ப,
“மானு, ஏன் இப்படி?…” என்றாள் சிந்து.
“கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு சுத்திட்டு இருந்த எங்க அத்தான்… இப்போ எல்லாத்துக்கும் சேத்து சிந்து, சிந்துன்னு சுத்துனா… கேக்கதானே செய்யணும்…” என மானு விடாமல் கேக்க,
“நீ உங்க அத்தான் கிட்டயே கேட்டுக்கோ… என்னைய ஆள விடு…” என முடித்தாள் சிந்து.
மானு, “இருந்தாலும் என்னைய இப்படி மாட்டி விடக்கூடாது…”
” உங்க அத்தான் தானே… அப்பறம் என்ன?…” என கேட்டாள் சிந்து.
“நீங்க எப்படி உசுப்பேத்துனாலும், இந்த ஆடு சிக்காது…” என சிரித்தாள் மானு.
“ஆடு தான் எங்க அண்ணன் கிட்ட சிக்கிடுச்சே… அப்பறம் என்ன?…” என சிந்து கிண்டலாக சொல்ல,
“உங்க நொண்ணனை எப்படி வச்சி செய்யுறேன்ன்னு மட்டும் பாருங்க…” என வீராப்பாய் சொன்னாள் மானு.
சிந்து, “பாவம் எங்க அண்ணன்… கொஞ்சம் பாத்து பண்ணு மானு…” என உரிமையாக சொன்னாள்.
அந்த அளவிற்கு விஷ்ணுவின் குடும்பம் சிந்துவுக்கு நெருக்கத்தையும், பிடித்ததையும் அவளுக்கு வாரி அளித்தது. அதை விடாமல் விரும்பியே பற்றிக்கொண்டாள் பாவை.
“உங்க அண்ணன் ஒரு புல்ல கூட அசைக்கல, எங்க கல்யாணத்துக்காக… அதுனால அவரை அப்படியே எல்லாம் கண்டிப்பா விட முடியாது…” என தீர்க்கமாக சொன்னாள் மானு.
சிந்து, “அப்போ நான் எங்க அண்ணனை முன்னாடியே உஷார் படுத்தி வைக்கிறேன்…”
“எப்படி வேணும்னாலும் தயார் படுத்திக்கோங்க உங்க அண்ணனை…” என்றவள், “இருந்தாலும் எங்க விஷ்ணு அத்தான் போல எல்லாம் வராது… இப்போ பாருங்க, எங்க அம்மா மண்டை ஆட்டுனா, ஆமான்னு சொல்றதுக்கு மட்டும் தான்…” என சொல்லி சிரித்தாள் மானசி.
“ம்க்கும்… அவர் பேசி இப்படி மண்டைய ஆட்டலைனா தான் பெருசு…” என முனங்கியவள், “நல்லா கொடி புடிக்குற உங்க அத்தானுக்கு…” என நக்கலடித்தாள் சிந்து.
“பாருடா… புள்ளப்பூச்சி எல்லாம் டயலாக் சொல்லுது…” என சிரித்தாள் மானு.
இப்படி இருவரும் பேசிக்கொண்டே ஒரு வழியாக விஷ்ணுவின் வீட்டை அடைந்தனர்.
“அத்தை…” என அழைத்துக்கொண்டு மானசி வர, பின்னால் அமைதியாக வந்தாள் சிந்து.
“வாங்க வாங்க…” என அழைத்துக்கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் விசாலாட்சி.
மானு, “வந்தோம்… வந்தோம்…”
“எப்படி இருக்கீங்க அத்தை…” என கேட்டவள், “எங்க யாரையும் காணும்…” என அடுத்து அனைவரையும் கேட்டாள் சிந்து.
“யாரை பாக்கணும் உங்களுக்கு, அதை சொல்லுங்க…” என கண்சிமிட்டி மானு கேக்க,
“மானு…” என பார்த்தாள் சிந்து.
“விஷ்ணுவை தானே பாக்கத் தானே வந்திருக்க… அது தானே மானு, நீயும் சொல்லுற…” என விசாலாட்சி கேட்க,
“அத்தை நீங்களுமா…” என்றாள் சிந்து.
“அவன் மேல தான் இருக்கான்… நீ போயி பாத்துட்டு வா… வந்து நாம பேசிக்கலாம்…” என சொன்னார் விசாலாட்சி.
“இல்ல… இல்ல அத்தை… அவங்க கீழ வரட்டும்…” என்றாள் மறுப்பாக சிந்து.
“அதுலாம் உன்னைய யாரும் ஏதும் சொல்லமாட்டாங்க…” என்றவர், “நீ போயி பாத்துட்டு வா…” என அனுப்பி வைத்தார்.
கொஞ்சம் தயங்கியவாறே அவனின் அறையின் கதவை தட்டினாள் சிந்து.
உள்ளே நாளை விசாரணைக்காக ஒரு பைலை பார்வையிட்டு கொண்டிருந்தவனோ, “செல்வா ண்ணா… வாங்க…” என குரல் கொடுத்தான்.
மெதுவாக கதவை திறந்து உள்ளே வந்தவளோ, ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்து நின்றாள் நங்கை.
டீக்காக தலையை நிமிர்த்தி பார்த்தவோ, அங்கு அமைதி பதுமையாய் நின்றிருந்த பாவையை பார்த்தவனோ, புருவங்கள் உயர,
“அப்பறம் என்ன அவரக்கா அதிசயமா இருக்கு?…” என விஷ்ணு அலட்டிக்கொள்ளாமல் கேக்க,
அவனிடம் இந்த தன்மையை எதிர்பாக்காதவள், “ஆஹ்…” என என்ன பதில் சொல்வதென தெரியாமல் தடுமாறி விழிக்க,
அவளின் இந்த தடுமாற்றம் பார்த்து இதழில் பூத்த சிரிப்புடன், “சொல்லுங்க… இப்படி பாவப்பட்ட பாவக்கா போல பாத்துட்டே இருந்தா, எப்படி?…” என விடாமல் கேக்க,
“அதான பாத்தேன்… இவரை பத்தி தெரிஞ்சும்…” என முணுமுணுத்தவள்,
“இரு கதை கொண்டுவந்து உன் வாய் பக்கத்துல வைக்கிறேன்… அதுக்கப்பறம் நீ இப்படி முணுமுணுன்னு பேசு…” என எழுந்து வந்தான் விஷ்ணு.
“எதே…” என அதிர்ந்தவள், அவனை பார்க்க, அவனோ அவளுக்கு அருகில் வந்து நின்றான்.
“ஏன் இப்படி பண்ணுறீங்க…” என கொஞ்சம் பதறி கேட்டாள் பாவை.
“இப்போ என்ன பண்ணுங்க உன்னை… நீ தான் ஒரு வயசு பையன் இருக்குற ரூமுக்கு வந்திருக்க… அப்போ நான் தான் உன்னைய பாத்து பயப்படணும்…” என அவளை பார்த்து சிரத்தையாக சொல்ல,
அவனின் பேச்சை கேட்டு கண்ணை விரித்தவள், “நான் உங்களுக்கு உடம்புக்கு எப்படி இருக்குனு பாக்க வந்தேன்…” என படபடவென சொன்னாள் மாது.
“நான் சொன்னா எப்படி தெரியும்… நீயே தொட்டு பாத்து தெரிஞ்சிக்கோ…” என முகத்தை அவளின் அருகில் கொண்டு வர,
அவனின் அழிச்சாட்டியம் தாங்காமல், மெலிதாக அவனின் தோலில் தட்டியவள், “எவ்வளோ அராஜகம் பண்ணுறீங்க நீங்க…” என சிணுகிங்கிவளாக சொன்னாள்.
“ஓ காட் இவளை…” என மனதில் நினைத்தவன், “அப்பறம் சொல்லுங்க சிணிங்கி சுண்டக்கா…” என கேட்டான் காவலன்.
சிந்து, “இந்த காயை நீங்க விடவே மாட்டிங்களா?…”
“ஏன்! நான் முன்னவே சொல்லிட்டேன்… எனக்கு தோணுதுறது தான்…” என பதில் தந்தான்.
சிந்து, “இப்படிதான் எல்லாரும் இருக்கும் போதும் கூப்பிடுவீங்களா?…”
“ஒய் சுண்டக்கா…” என அவளின் காதுக்கருகில் வந்து அழைத்தவன், ” இப்படி நீ எங்க இருந்தாலும் உன் காதுக்கிட்ட வந்து கூப்பிடுவேன்…” என்றான் கூலாக கள்வன்.
அவனின் இந்த செயல், அவளிற்க்கோ காதுமடல் சிவக்க, அவனை பாக்க முடியாமல் முகத்தில் வெக்கம் பூச, முகத்தை திருப்பினாள்.
“நான் இங்க இருக்குறேன்…” என அவளின் முகத்தை திருப்ப,
“சும்மா இருங்க ப்பா…” என அவனின் கையை தட்டி விட்டாள்.
“ஒன்னும் பண்ணாததுக்கே இப்படியா…” என அவன் அவளிடம் கேட்க,
“இவரை நான் எப்படி சமாளிக்கன்னே தெரியலே…” என முணுமுத்து அவனை பாவமாக பார்த்தாள்.
அவளை விஷ்ணு இப்போது முறைப்பாக பார்க்க,
சிந்து, “எதுக்கு இப்போ முறைக்குறீங்க?…”
விஷ்ணு, “நீ முதல்ல உங்க வீட்டுல எப்போ பேசணும்னு யோசி… என்னை எப்படி சமாளிக்குறதுன்னு அப்பறம் பாத்துக்கலாம்…”
சிந்து, “நான் தான் உங்ககிட்ட சொன்னேன்ல…” என மெதுவாக சொல்ல,
“எது?… நீ நல்ல நாள் பாத்துட்டு பேசுறேன்னு சொன்னதா?…” என நக்கலாக அவன் கேக்க,
ஒன்றும் சொல்லாமல் அவனை பார்க்க,
“நீ இப்படியே என்னைக்கு நல்ல நாள் என்னைக்கு பாத்துட்டே இரு… நமக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது…” என காட்டமாக சொன்னான் மணாளன்.
சிந்து பாவமாக பார்க்க,
“உடனே இப்படி பாவமா மூஞ்சியை வச்சிக்க வேண்டியது…” என்று சொன்னான்.
“இல்ல…” என சிந்து என்னவோ சொல்லவர,
அவளை பேசவிடாமல் தடுத்து,
“நான் எப்பவும் இப்படியே இருக்கா மாட்டேன் பாத்துக்கோ…” என அவளை பார்த்து சொன்னவன்,
“வா… இப்போ கீழ போவோம்…” என்று சொல்லி அவளை அழைத்து சென்றான்.
அடுத்த நான்கு நாட்களில் சிந்து அவளின் வீட்டிற்கு செல்லும் சம்பவம் நடந்தது அவளின் தந்தையின் மூலம்… என்னவோ?
error: Content is protected !!