Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 12

அத்தியாயம் – 12

 

வேகமாக வந்தா இரு சக்கரவாகனம் விக்ரமின் முன் வந்து சடன்பிரேக் போட்டு நின்றது வண்டி நின்ற வேகத்தில் அதன் பின் சக்கரம் முழுவதும் மேல் எழும்பி பின் தரையிறங்கியது.

 



Advertisement

 

திடீரென நிகழ்ந்த நிகழ்வில் விக்ரமின் இதயம் வேகமாக துடித்தது. வண்டியில் வந்தது அஜய் என்று நினைத்த விக்ரம் அவன் அருகில் சென்று “டேய் அறிவு கெட்ட முண்டம் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா, இப்படி வந்து பயமுறுத்துற எது எதுல விளையாடனுனு அறிவு இல்லையாடா உனக்கு” என்று கோபமாக இன்னும் சில வார்த்தைகளை கூறித் திட்டினான்.

 

Advertisement

 

Advertisement

 முதலில் வந்த இருசக்கர வாகனம் நின்றதைத் தொடர்ந்து பின்னால் வந்த இரண்டு வாகனங்களும் அதன் அருகிலேயே நின்றனர். வண்டியை ஓட்டி வந்த மூவரும் ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்து அதன் மேல் ஓவர் கோட் ஒன்றை அணிந்து,கையில் கிளவுஸ் அணிந்திருந்தனார் 

 

 

Advertisement

விக்ரம் இவ்வளவு தூரம் திட்டியும் வண்டியில் இருந்த யாரும் இறங்கவும் இல்லை ஹெல்மெட்டை கழட்டவும் இல்லை. அதில் கோவம் அடைந்த விக்ரம் “டேய் இவ்வளவு தூரம் கத்திட்டே இருக்கேன் செவிட்டு முண்ட மாதிரி அப்படியே வண்டியிலேயே உட்கார்ந்துட்டு இருக்க இறங்குடா வண்டியில இருந்து,இதுல ஹெல்மெட் வேற” என்று கூறி வேகமாக வண்டியில் இருந்தவன் எதிர்பாக்காத நேரம் தலையில் இருந்த ஹெல்மெட்டை உருவினான்.

 

 

 ஹெல்மெட்டை கழட்டிய விக்ரம் அதனுள் இருந்தவரை பார்த்து வியப்புடன் நின்று விட்டான். வண்டியை ஓட்டி வந்தது சரண் அல்ல, நம் கதையின் நாயகி சங்கமித்ரா ராணி.வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் தான் மித்ரா வந்திருந்தால் அவள் பின்னால் மேலும் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஸ்ரேயா மற்றும் ரியானா வந்திருந்தனர்.

 

 

 விக்ரம் ஹெல்மெட்டைக் கழட்டிய கோபத்தில் “யூ இடியட் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா, இப்படித்தான் மத்தவங்க கிட்ட நடந்துப்பாங்கள மேனர்ஸ் தெரியாதா உனக்கு” என்று ஆங்கிலத்தில் திட்ட ஆரம்பித்தால்.

 

 

 அதிவேகமாக செல்லும் ஸ்போர்ட்ஸ் பேக்கை ஓட்டி வந்தது ஒரு பெண்ணாக இருக்கும் என்று விக்ரம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விக்ரம் அவளை வியப்புடன் பார்த்தான். மித்ரா திட்டியலில் கோபமடைந்த விக்ரம் தானும் ஆங்கிலத்தில் மித்ராவை திட்ட ஆரம்பித்தான்.

 

 

“காலேஜ்குள்ள இவ்வளவு பாஸ்ட்டா யாராவது வண்டி ஓட்டிட்டு வருவாங்களா, அடுத்தவங்க மேல ஏத்துற மாதிரி வண்டிய ஓட்டுற, உனக்கு கண்ணு தெரியுமா தெரியாதா”

 

 

“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் பார்த்து பேசுங்க, உங்க மேல வண்டிய ஏத்துனனா இல்லல அப்புறம் ஏன் ஓவரா பேசுறீங்க”

 

 

“யாரு ஓவரா பேசுறது நானா இல்ல நீயா, தப்பு பண்ணது இல்லாம இவ்வளவு திமிரா வேற பேசுற, பொண்ணுனா கொஞ்சமாவது அடக்க ஒடுக்கம் இருக்கணும், உங்கிட்ட அப்படி எதுவுமே இல்ல, சரியான திமிரு புடிச்சவ நீ”

 

 

“ஹலோ ஹலோ கொஞ்சம் விட்டா ஓவரா பேசிட்டே போற, ஒரு பொண்ணு எப்படி இருக்குனு எப்படி இருக்க கூடாது நீ சொல்லாத சரியா. ரோடு கிராஸ் பண்ணும் போது வண்டி ஏதாவது வருதான்னு பார்த்து நீ கிராஸ் பண்ணி இருக்கணும் மிஸ்டேக் உன் மேல வச்சுக்கிட்டு என்ன குறை சொல்லாதே”

 

 இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டே இருக்க அவர் இருவரது நண்பர்களும் எவ்வளவோ தடுத்தும் இருவரது சண்டையும் நிறுத்த முடியவில்லை. சண்டக்கோழிகளை போல் இருவரும் சண்டை இட்டு கொண்டு இருந்தனர்.

கல்லூரியின் கடைசி மணி ஒலிக்கும் சத்தத்தை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றனர்.

 

 

தோழிகள் மூவரும் வண்டியை நிறுத்திவிட்டு. பிரின்ஸ்பல் அறையை நோக்கி சென்றனர். இரண்டு நிமிடங்களுக்கு பின் உள்ளே சென்று பிரின்ஸ்பலிடம் பெண்கள் மூவரின் டிரான்ஸ்பர் லெட்டர்களை கொடுத்தனர். “போன வாரமே நீங்க மூணு பேரும் வந்து ஜாயின் பண்றதா, கரஸ்பாண்டன்ஸ் சொன்னாங்க, நீங்க இப்ப வர்றீங்க”

 

 

“அது வந்து சார் ஒரு முக்கியமான வேலை இருந்தது அதை முடிச்சுட்டு வர கொஞ்சம் டிலே ஆயிருச்சு” என்றால் ஷாம்.

 

 

“காலேஜ்ல ஜாயின் பண்றத விட முக்கியமான வேலை அப்படி என்ன இருக்க போது உங்களுக்கு, இந்த காலேஜ்லயாவது எந்த பிரச்சினையும் பண்ணாம ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருங்க புரிஞ்சுதா” என்று பிரின்ஸ்பல் கண்டிப்புடன் கூற. மூவரும் தலையை ஆட்டி சரி என்றனர்.

 

 

 

பின் அவரவர் வகுப்பறையை நோக்கி சென்றனர்.”ஷாம் எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் கொஞ்சம் கிளாஸ் வரைக்கும் கூட வாயேன்” என்றால் ரியானா.

 

 

“ரிங்கு கிளாசுக்கு போக ஏன்டா பயப்படுற” என்றாள் ஸ்ரே.

 

 

“புது ஊரு புது காலேஜ் கொஞ்சம் நேர்வசா இருக்கு பேப் ப்ளீஸ் கொஞ்சம் வாயேன் என் கூட”

 

 

“ஸ்ரே அவளை பத்தி தான் உனக்கு தெரியும்ல வா போலாம் அவ கூட” என்றால் ஷாம்.

 

 

“ஷாம் உன்னோட கிளாஸ் செகண்ட் ஃப்ளோர் நீ போ, என்னோட கிளாஸ் இவளோட கிளாஸ் பக்கத்துல தான் நான் கூட்டிட்டு போறேன்” என்றாள் ஸ்ரே.

 

 

“ஓகே பேப் பாத்து போங்க ஆப்டர்நூன் கேண்டின்ல மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு சென்றாள் மித்ரா.

 

 

 ஸ்ரேயா ரிங்குவை அழைத்துக் கொண்டு அவளுடைய வகுப்பான சஃபர் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு வகுப்பில் விட்டுவிட்டு. தன்னுடைய வகுப்பான ஆர்க்கிடெக் இரண்டாம் ஆண்டு வகுப்பை சென்றடைந்தாள்.

 

 

 மித்ரா அவருடைய வகுப்பின் வாசலில் போய் நின்று அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் ” மே ஐ கமிங் சார் ” என்றாள்.

 

 

“வா மா உள்ள யாருமா நீ உனக்கு என்ன வேணும்” என்றார் ஆசிரியர்.

 

 

“இந்த கிளாஸ்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்க ஸ்டூடண்ட் சார்” 

 

 

 வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஷாமை பார்த்து சிரித்து விட்டனர்.”நீ கிளாஸ் மாறி வந்துட்டானு நினைக்கிறேன் மா இது மெக்கானிக்கல் இன்ஜினியர் செகண்ட் இயர் கிளாஸ்” என்றார் ஆசிரியர்.

 

 

“நான் கிளாஸ் மாறி எல்லாம் வரல சார் நானும் மெக்கானிக்கல் இன்ஜினியன்ஸ் செகண்ட் இயர் கிளாஸ் தான் வந்திருக்கேன்” என்றாள்.

 

 

அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் தனது வகுப்பில் அழகான பெண் ஒருத்தி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். அதில் நம் ரகுவும் ஒருத்தன். ஆசிரியர் ஷாமை செல்ஃப் இன்ட்ரோ கொடுக்க சொன்னார்.

 

 

“ஹாய் பிரண்ட்ஸ்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️, என் பேரு சங்கமித்ராராணி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஷாம்னு கூப்பிடுவாங்க நான் டெல்லியில் இருந்து வந்து இருக்கேன்” என்றாள் சுருக்கமாக.

 

 

“ஓ நீ டெல்லி பொண்ணாம பார்த்தா அப்படி தெரியலையே, ஃபர்ஸ்ட் இயர் எந்த காலேஜ்லம்மா படிச்ச, ஏன் இந்த குரூப் எடுத்த கேர்ள்ஸ்க்கு இந்த குரூப் செட் ஆகாது, அந்த காலேஜ்ல இருந்து ஏன் வந்த” என்று கேள்விக் களை அடுக்கிக் கொண்டே சென்றார் ஆசிரியர்.

 

 

“சார் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பைல, ஸ்கூல் படிச்சதெல்லாம் மும்பை மட்டும் ஹைதராபாத்ல, காலேஜ் பர்ஸ்ட் இயர் டெல்லியில படிச்சேன், அங்கு ஒரு சின்ன ப்ராப்ளம் சோ காலேஜ் கண்டினியூ பண்ண முடியல அதனாலதான் இங்க ஜாயின் பண்ணியிருக்கேன், எனக்கு பைக்னா ரொம்ப பிடிக்கும், நானே என்னோட பைக்கை ஓன் டிசைன் பண்ணி நானே மேனுஃபேக்சர் பண்ணனும்னு ஆசை ஷோ இந்த குரூப் எடுத்தேன்” என்றாள் மித்ரா.

 

 

“உன்னோட ஆசைய நினைச்சு நான் பெருமைப்படுறேன்மா, இருந்தாலும் பாய்ஸ் மட்டுமே இருக்கிற கிளாஸ்ல நீ எப்படி தனியா இருப்ப” என்றார் ஆசிரியர் யோசனையோடு.

 

 

“பசங்களா இருந்தா என்ன சார் இப்போ அவங்க என்ன கடிச்சா திணற போறாங்க அவங்களும் மனுஷங்க தானே அனிமல்ஸ் இல்லல.எனக்கு இவங்கள பார்த்தா பயம் வரல சார் தோழமை உணர்வு தான் வருது” என்று கூறி அங்கிருந்த ஆண்களை பார்த்து சிரித்தாள். அவர்கள் அனைவரும் கைத்தட்டி அவளை அன்புடன் வரவேன்றனர்.

 

 

“நீ ரொம்ப தைரியமான பொண்ண தான் மா இருக்க போ மா போய் உக்காரு, வெல்கம் டு அவர் காலேஜ்” 

 

 

“தேங்க்யூ சோ மச் சார்” என்று கூறிவிட்டு மித்ரா அவளுடைய இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

 

 

மித்ரா அவளை பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே சூர்யா பேஸ்புக்கில் மித்ராவின் வீடியோ ஒன்றை அர்ஜுனிடம் காட்டினான். அதில் மித்ரா ஸ்ரேயா இருவரும் நான்கைந்து ஆண்களை அடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.

 

 

 பெண்கள் மூவரும் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் ஒரு பெண்ணை ராகிங் என்ற பெயரில் சீனியர் மாணவர்கள் சிலர் அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என்று மிகவும் தவறாக நடந்து கொண்டனர். அதைப் பார்த்த மித்ரா அவர்களைத் தடுத்து அறிவுரை கூற அதைக் கேட்காமல் மீண்டும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அதனால் கோவமடைந்த மித்ரா மற்றும் ஸ்ரேயா அவர்களை பின்னி எடுத்து விட்டனர். மித்ரா அடிப்பதே கல்லூரி மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு விட்டனர். மித்ராவிடம் அடி வாங்கிய 

 மாணவர்களில் ஒருவனின் தந்தை கல்லூரியின் நிர்வாகி என்பதால் பெண்கள் மூவரையும் கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார். மித்ராவின் தந்தை மற்றும் ஜான்சி இருவரும் நிர்வாகியிடம் பேசுவதாக கூற மித்ரா மறுத்துவிட்டாள்.

 

 

 இப்பொழுது சேர்ந்திருக்கும் கல்லூரியின் நிர்வாகியும் மித்ராவின் தந்தையும் நண்பர்கள் என்பதால் உடனே இந்த கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. சூர்யா அர்ஜுன் மூலம் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு வீடியோ பரவியது.

 

 

“ஹாய் சங்கமித்ரா நான் சூர்யா உன்னோட வீடியோ facebook பார்த்தேன். நீ ரொம்ப தைரியமான பொண்ண இருக்குற என்ன மாதிரியே எனக்கு உன்ன பிடிச்சிருக்கு இனிமேல் நாம பிரண்ட்ஸ் ஓகே வா” என்று கூறி கையை நிட்டினான். மித்ராவும் மகிழ்ச்சியுடன் கை குலுக்கினால் சூர்யாவை தொடர்ந்து அர்ஜுன் நிகில் மற்றும் கார்த்திக் ஆகியோரும் மித்ராவுடன் நட்பாகி விட்டனர்.

 

 

” டேய் சூர்யா எப்படிடா வந்ததும் அந்த பொண்ணு கூட பிரண்டாகிட்ட, எனக்கு அந்த பொண்ணு கூட பேசவே கூச்சமா இருக்குடா” என்றான் ரகு சூர்யாவின் காதில் ரகசியமாக.

 

 

“டேய் ஒரு பொண்ணே இத்தனை பசங்கள பார்த்து பயப்படாம நம்மல நம்பி நம்ம கிளாஸ்க்கு வந்திருக்கா, நீ என்னடானா இப்படி கூச்சப்பட்டு இருக்க சங்கமித்ரா பார்க்க நல்ல பொண்ணா தெரியுறாடா” ரகுவும் சூர்யா கூறியதை ஏற்று சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

 

 

ஸ்ரேயா அவள் வகுப்பில் நுழைந்தது அங்கிருந்த ஆசிரியரிடம் தன்னைப் பற்றிய தகவல்களை கூறிவிட்டு, இருக்கையில் அமர சென்றாள். ஸ்ரேயாவின் வகுப்பில் ஆண் பெண் இருவரும் சமமான அளவில் இருந்தனர். ஸ்ரே யார் அருகில் ஒரு அமரலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க கடைசி இருக்கையில் சாதாரண சுடிதார் அணிந்து, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் அமைதியாக தலையை குனிந்த வண்ணம் அமர்ந்திருந்த கனிமொழியைப் பார்த்ததும் அவள் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.கனிமொழி தலையை நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

 

 

“ஹாய் என் பேரு ஸ்ரேயா இன்னைக்கு தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்கேன் உன் பெயர் என்ன” என்றால் ஸ்ரேயா.

 

 

 கனி மிகுந்த தயக்கத்துடன் ஸ்ரேயாவை நிமிர்ந்து பார்த்து “என் என் பெயர் கனிமொழி, நானும் இந்த கிளாஸ்ல ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சேர்ந்தேன்” என்றாள்.

 

 

“நீயும் வேற காலேஜ்ல இருந்து வந்து இங்க ஜாயின் பண்ணி இருக்கியா, உன்னையும் காலேஜ்ல இருந்து தொறத்தி விட்டாங்களா என்ன மாதிரி” என்றாள்.

 

 

“ம்ம் இல்லல , நான் இதுக்கு முன்னாடி படிச்ச காலேஜ் லைசன்ஸ் வாங்காதனால க்ளோஸ் பண்ணிட்டாங்க அதனால இங்க ஜாயின் பண்ணி இருக்கேன்” என்றால் கனி.

 

 

“ஓ அப்படியா நீ ஏன் தனியா உக்காந்து இருக்க, உன் பிரண்ட்ஸ் கூட ஏன் உட்காரல” – ஸ்ரேயா 

 

 

“எனக்குனு பிரண்ட்ஸ் யாரும் இல்ல, யாரும் என்கூட பேச மாட்டேங்கிறாங்க நான் பேசப் போனாலும் அவாய்ட் பண்றாங்க” கனி.

 

 

“எதுக்கு உன் கூட பேச மாட்டேங்கிறாங்க” 

 

 

“நான் அவங்கள மாதிரி டிரஸ் பண்ணலையாம் , என்ன லோக்கல், மிடில் கிளாஸ் அப்படின்னு சொல்லி கிண்டல் பண்றாங்க” என்று கூறி கண் கலங்கினால் கனி.

 

 

” ஹே கனி இதுக்கெல்லாம் போய் கண்கலங்குவாங்க, அவங்க பேசலனா போறாங்கன்னு விட வேண்டியது தானே, உனக்கு என் கூட பிரண்டா இருக்க சம்மதமா” என்று கூறிக் கையை நீட்டினால் ஸ்ரேயா.

 

 

கனிமொழி மகிழ்ச்சியுடன் ஸ்ரேயாவின் கையை பற்றி கொண்டு குலுக்கினால். ஸ்ரே உடனே அவளை கட்டி அணைத்துக் கொண்டாள். கனி தன் பேக்கில் வைத்திருந்த பத்து ரூபாய் டைரி மில்க்கை எடுத்து ஸ்ரேயாவிடம் கொடுத்தால். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள் ஸ்ரேயா.

 

 

 இவர்கள் இருவரில் நெருக்கத்தை பார்த்த பெண்கள் சிலர் “ஹே புது பொண்ணு இவ கூட சேராத, இவலெல்லாம் லோக்கல் மிடில் கிளாஸ் ஸ்காலர்ஷிப்ல படிக்க வந்தவ இவ கூட எல்லாம் நம்ம சேரக்கூடாது சேர்ந்தா நம்ம கூட யாரும் சேர மாட்டாங்க, வா வந்து எங்க கூட முன்னாடி உட்காரு” என்றால் சோனாலி.

 

 கனி கண்கலங்க ஸ்ரேயாவை பார்த்துக் கொண்டிருந்தாள் “ஹே யூ மைண்ட் யுவர் வேர்ட்ஸ், இவன் என் ஃப்ரெண்ட் இனிமேல் இவளை பத்தி தப்பா ஏதாவது பேசினா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, நான் யார் கூட சேரனும் சேர கூட நீ சொல்லாத உன் வேலைய பாத்துட்டு போ ” என்று கோவமா கூறிவிட்டு திரும்பி கனியுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.

 

 

 மிகவும் தயக்கத்துடன் அனுமதி கேட்டு தனது வகுப்பறைக்குள் நுழைந்த ரியானாவை வரவேற்றது. அங்க வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விக்ரம் ஆதித்தன் தான். ரியானாவின் வகுப்பு ஆசிரியர் முக்கியமான வேலையாக இருப்பதால் விக்ரமை கிளாசை எடுக்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். விக்ரமுக்கு இப்பொழுது ஃப்ரீ ஹவர் என்பதால் அவனும் ஆசிரியர் கூறியதை ஏற்று வகுப்பு நடத்திக் கொண்டிருந்தான்.

 

 

“அச்சசோ இவனா,இவன் கூட தான ஷாம் காலையில சண்டை போட்டா,போச்சு போச்சு இப்போ நம்மள போட்டு திட்ட போறான் இவ்வளவு பேர் முன்னாடி,தனியா வேற வந்து சிக்கிட்டியே ரியா” என்று மனதுக்குள்ளே புலம்பி கொண்டிருந்தாள்.

 

 

“ஹலோ ஏய் பொண்ணு, என்ன காலையிலேயே கனவா ரொம்ப நேரமா கூட்டிட்டு இருக்கேன் என்ன திங்க் பண்ணிட்டு இருக்க”

 

 

“சாரி சார் எதோ திங்கிங் இருந்துட்டேன் சாரி” என்று திக்கித் தினரி கூறினால் ரியா.

 

 

“நான் உங்களோட சீனியர் தான் ஜஸ்ட் கால் மீ சீனியர், சார்லாம் வேண்டாம் ஓகே வா, உன் பேர் என்ன இதுக்கு முன்னாடி உன்ன நான் இங்க பார்த்ததில்லையே”

 

 

“என்ன பாத்தது இல்லையா அப்போ காலையில இவர் நம்மள பாக்கலையா” என்று மனதுக்குள் நினைத்து விட்டு “என் பேரு ரியானா நான் இன்னைக்கு தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்கேன்” என்றாள்.

 

 

“வெல்கம் டு அவர் காலேஜ் ரியானா, நான் தான் இந்த காலேஜ் ஓட ஸ்டூடன்ட் சேர்மன் உனக்கு ஏதாவது ப்ராப்ளம் இல்லனா ஏதாவது தேவைனா என்கிட்ட நீ தாராளமா சொல்லலாம் ஓகேவா “

 

 

“என்னது ஸ்டுடென்ட் சேர்மனா, மித்து பேபி வந்த உடனே ஸ்டுடென்ட் சேர்மன் கூடயே சண்டை போட்டுட்டியேடி போச்சு போச்சு இந்த காலேஜ்லையும் கண்டினியூ பண்ண போறதில்ல நம்ம, அடுத்து எந்த ஊர் காலேஜுக்கு போலாம்” என்று மனதுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தால் ரியானா.

 

 

“ஹலோ மிஸ். ரியானா என்ன ஆனா ஊனா ட்ரீம்க்கு போயிடுறீங்க” என்று கூற அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். ரியானா அசடு சிரிப்பு சிரித்துக் கொண்டே “ஓகே சீனியர்” என்று கூறி விட்டு சுவாதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். விக்ரம் பாடம் நடத்திக் கொண்டிருந்தான். சுவாதி ரியானா இருவரும் பேசி அவர்களுக்கிடையே தோழமையை வளர்த்துக் கொண்டனர்.

 

 

 மதிய உணவு இடைவெளியின் போது முதலில் கேன்டீன் வந்த ரியானா அங்கு காலியாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டாள். அதன் பின் ஸ்ரேயா கனியுடன் அங்கு வந்து சேர்ந்தாள்.கனியை ரிங்குவிற்கு அறிமுகம் செய்து வைத்தால் ஸ்ரேயா. இறுதியாக ஷாம் அங்கு வந்து அமர்ந்தாள். ஸ்ரேயா கனியை ஷாமிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். பெண்கள் மூவரும் கனியிடம் சகஜமாக பழகுவது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

 

“ஹலோ இது எங்களோட டேபிள் யாரக் கேட்டு இங்க உக்காந்திங்க” என்று அதிகாரக் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தனர் பெண்கள் நால்வரும்.

 

 

 அங்கு நண்பர்கள் சூழ நடுவில் நின்று கொண்டிருந்த விக்ரமை பார்த்ததும் “யாரைக் கேட்டு உட்காரனும், டேபிள் ஃப்ரியா இருந்தது உட்கார்ந்தோம்” என்றால் மித்ரா.

 

 

“என்ன கேட்கணும் என்ன கேட்டு உட்காரனும் இது என்னோட டேபிள்” என்றான் மித்ராவை முறைத்துக் கொண்டே விக்ரம்.

 

 

 மித்ரா டேபிளை சுத்தி சுத்தி வந்து பார்த்துவிட்டு “இதுல உங்க பேர் எங்கயும் எழுதலையே” என்றாள்.

 

 

“ஏய் என்ன நக்கலா, நானும் காலைல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்கிட்டயே வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்க, என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது” 

 

 

“ஆமா நீ அத்தை பையன் பாரு தேடி வந்து உன் கிட்டயே பிரச்சனை பண்ண இரிட்டேட் பண்ணாம போப்பா இங்க இருந்து”

 

 

“ஏய் என்ன டி ரொம்ப ஓவரா பேசிட்டே போற” 

 

 

“அப்படி தான்டா பேசுவேன் “

 

 

“என்னது டா வா ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசுடி”

 

 

“நீ ஒழுங்கா பேசினா நானும் ஒழுங்கா பேசி இருப்பேன்” காலைல கிளாஸ்ல எல்லார்கிட்டயும் அவ்ளோ நல்லா பேசிட்டு இருந்தா இப்ப என்னன்னா இப்படி சண்டை போடுற என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ரகு.

 

 

 மித்ரா பேசிக்கொண்டே போக அவளின் கையை பிடித்த ரியானா. “சாரி சீனியர் இது உங்களோட டேபிள்னு எனக்கு தெரியாது, டேபிள் காலியா இருக்கவும் நான் வந்து உட்கார்ந்துட்டேன் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் சாரி சீனியர்” 

 

 

“ரிங்கு நீ ஏண்டா இவன் கிட்டலாம் போய் சாரி சொல்லிட்டு இருக்க” 

 

 

“பேப் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு” என்றாள் ரிங்கு.

 

 

“ரியானா உன் பிரண்டு கிட்ட சொல்லி வை இனிமேல் என்கிட்ட பிரச்சனை பண்ணா அவ்வளவுதான், இன்னைக்கு நீங்களே இந்த டேபிள்ல உக்காந்துக்கோங்க இனிமேல் இப்படி பண்ணாத ஓகே வா” என்று ரியானாவை பார்த்து சிரித்த முகமாக கூறிவிட்டு நகர்ந்தான் விக்ரம்.

 

 

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ, நீ விட்டுக் கொடுத்து இந்த டேபிள் உக்காரனும் எங்களுக்கு அவசியம் இல்லை, காய்ஸ் வாங்க வேற டேபிள் போகலாம்” 

 

 

“ஷாம் கொஞ்சம் அமைதியா இருடா, இவரு தான் இந்த காலேஜ் ஸ்டுடென்ட் சேர்மன் எதுக்கு தேவை இல்லாம அவருக்கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டு” என்றாள் ரிங்கு.

 

 

“சேர்மனா இருந்தா என்ன ரிங்கு, அவன் மண்டைல கொம்பா இருக்கு.சேர்மன்கிற திமிருல தான் ஓவரா ஆடுறானா, அவன் திமிர நான் அடக்கல நான் மித்ரா இல்ல”

 

மித்ரா கூறியதை கேட்ட விக்ரம் 

“சரியான திமிரு புடிச்சவ,இவளாம் பொண்ணே கிடையாது,இவள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களானு தெரியல” என்று கோவமாக கூறிக் கொண்டே சென்றான்.

 

 

“யாருடா அந்த பொண்ணு விக்ரம் சேர்மன் தெரிஞ்சும் அவன் கூட இப்படி சண்ட போடுற, அவள எப்படியாது நம்ம கூட சேர்த்துக்கிட்டு, விக்ரம ஓட விடணும்டா ” என்றான் அஜய்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!