Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

 மதுவினும் இனியாள் – 17

அத்தியாயம் 17:

மது போனை கொடுத்ததும் வாங்கி பேசிய பிரபஞ்சன் மதுவிடம் போனை கொடுத்து விட்டு “ரொம்ப தேங்க்ஸ் மது. ஹேரி சொன்ன மாதிரி அவங்கள ஊருக்கே அனுப்பிடறேன். நானும் இனிமே உன் கண்லயே பட மாட்டேன். பை” என்று சென்று விட்டான்.

மதுவும் பார்த்திபனும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவரும் ஆளுக்கொரு யோசனையில் இருந்தார்கள். மதுவிடம் ஹேரியின் போன் நம்பரை வாங்கி கொண்டான் பார்த்தி. பிறகு இருவரும் ஒன்றாக கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்றார்கள்.



Advertisement

வீட்டிற்கு வந்த மது முதல் வேலையாக ஹேரிக்கு கால் பண்ணி “உண்மைய சொல்லு. யார் நீ. இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிக்கிட்டு இருந்த” என்றாள்.

“என்ன சொல்ற ஹனி. உனக்கு என்னாச்சு”  

“எனக்கு ஒண்ணுமாகல. உனக்கு என்னாச்சு. எங்க ஊர் ஹீரோக்கள் மாதிரி வில்லன்களை தூக்கற. என் கூடத்தான இருந்த. இதெல்லாம் எப்ப எப்படி பண்ண. உண்மையிலேயே IT லதான் ஒர்க் பண்றியா நீ” 

Advertisement

“இதுக்கெல்லாம் ஹீரோதான் வரணுமா பேபி. தப்பு நடந்தா யார் வேணுனா தட்டி கேக்கலாம். எனக்கு போலீஸ்ல என் கூட படிச்ச பிரண்ட் இருக்கான். அவன் ஹெல்ப் பண்ணான். அப்புறம் நா உண்மையிலேயே IT தான். வேணுனா நாளைக்கு என் கூட ஆபீஸ் வந்து பாக்கறியா”

Advertisement

“ச்ச ச்ச உன் மேல சந்தேகம்லாம் இல்ல. திடீர்ன்னு ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பாத்தியா. அதான் சும்மா கேட்டேன். அப்புறம் பார்த்தி அண்ணா உன் நம்பர் கேட்டார்னு  குடுத்தேன். உனக்கு ஓகே தான. ப்ராப்லம் இல்லைல”

“அதெல்லாம் இல்ல பேபி. பார்த்திபன் சிட்னியில இருந்து வந்துட்டாரா. நீ எப்ப அவர்ட்ட  நம்பர் குடுத்த”

“இன்னைக்குத்தான் வந்தார். அவரை பாக்க போனப்ப தான் ரெஸ்டாரண்ட்க்கு பிரபஞ்சன் வந்து பேசினான். உன்னட்ட பேசிட்டு பிரபஞ்சன் கிளம்புனதுக்கு அப்புறம் நானும் பார்த்தி அண்ணாவும் சேந்துதான் வீட்டுக்கு வந்தோம். அவர் வீட்டுக்கு கிளம்புன உடனேதான் நா உனக்கு கால் பண்ணி பேசிட்டு இருக்கேன்”.

Advertisement

ஹேரி அலர்ட் ஆகி கொண்டான். அப்ப கண்டிப்பா பார்த்தி இன்வெஸ்டிகஷன ஸ்டார்ட் பண்ணிடுவான் . கேட்காமலேயே அனைத்தையும் சொன்ன மதுவின் பேச்சை கேட்டு சிரிப்பாக வந்தது அவனுக்கு.

“சோ க்யூட் பேபி நீ” என்றான்.

“இப்ப எதுக்கு அனாவசியமா என்ன கொஞ்சுகிட்டு இருக்க. அப்புறம் முக்கியமா உன்னட்ட சில விஷயங்கள் பேசணும். எப்ப எங்க நாம மீட் பண்ணலாம்”

“உன்னோட மீட்டிங்னா நா எப்பவும் ரெடி பேபி. நாளைக்கே மீட் பண்ணலாமா”

“ஹலோ அல்ரெடி ஃப்ரைடே லீவ் போட்டுட்டேன். நாளைக்கு ஆபீஸ் போகணும். நாளைக்கு மட்டுமில்ல தொடர்ந்து போகணும். இன்னுமே சாட்டர்டே கோயில்தான் போவேன். நம்ம போன கோயில்தான். அங்கேயே வந்துட்றியா”

“ம் ஓகே பேபி பட் உன்ன பாக்கறதுக்கு நா இன்னும் ஒன் வீக் வெயிட் பண்ணனுமா” என்று ஒரு பெருமூச்சு விட்டான் ஹேரி.

“ஹலோ என்ன பெருமூச்சு பலமா இருக்கு. உனக்கு  நா முன்னாடியே சொல்லிருக்கனா இல்லியா சென்டிமென்ட்டை கட்டு படுத்த சொல்லி”

“முடியலியே பேபி. உன்ன எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா. அதுலயும் உன் டான்ஸ் ஸ்டெப் இருக்கு பாரு. உன் கண்ணு எக்ஸ்ப்ரெசன்லாம் மறக்கவே முடியல தெரியுமா. அதுலயும் உன் உதட்டோர மச்சம் இருக்கு பாரு. தட்ஸ் கில்லிங் மீ  பேபி.  ஏன் பேபி நீ இவ்ளோ அழகா பொறந்த” என்று உளறி கொண்டிருந்தவனின் இடையில் புகுந்து

 “அது ஒண்ணுல்லப்பா எங்க அப்பத்தா கிழவி செம அழகு. நா அத மாதிரி பிறந்ததனால அழகா இருக்கனாம்” என்றாள் மது.

சிறிது நேரம் அமைதியாயிருந்த ஹேரி பின்பு பலமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

“நா எவ்ளோ அழகா ரொமான்ஸ் பண்ணிக்கிட்ருக்கேன். நீ என்ன பேபி இடையில புகுந்து காமெடி பண்ணிட்டிருக்க”

“எதே, நீ உளறிக்கிட்டு இருந்ததுக்கு பேரு ரொமான்ஸா. அப்புறம் நா பண்ணதுக்கு பெரு காமெடியா. அது இருக்கட்டும் நீ ரொமான்ஸ் பண்ண நான்தான் கிடைச்சனா. உங்க ஊர்ல பொண்ணுங்க எவ்ளோ அழகா இருக்காங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு நீ ஏன் என்கிட்ட மொக்க போட்டுட்டு இருக்க”

“அவங்கள்லாம் செயற்கையா இருக்காங்க மடு. நீ மட்டும்தான் நேச்சுரலா இருக்க” 

“உனக்கு ஒரிஜினல் பீஸ் தான் வேணுன்னு சொல்ற. அப்ப மேக்கப் போடாத இந்திய பொண்ணுங்கள உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறன். நீ ஏன் அப்படி ஒருத்திய தேடக்கூடாது”

“நீ இருக்கும் பொது நா ஏன் வேற ஒருத்திய தேடறேன் பேபி” 

“ம்ஹும் நீ சரிப்பட்டு வரமாட்ட. இத பத்தி பேசத்தான் உன்ன மீட் பண்ணனும்னு சொல்றேன். நாம நேர்ல பேசிக்கலாம்” என்று போனை வைத்துவிட்டாள் மது.

ஒரு வாரம் மதுவிற்கு பிஸியாக சென்றது. ஆனால் பார்த்தி மறுநாளே ஹேரியிடம் கால் செய்து உங்களை சந்திக்க வேண்டுமென்று கூறினான். ஹேரியும் அவனது வீட்டு முகவரியை கொடுத்து மறுநாள் ஐந்து மணிக்கு வந்து பார்க்குமாறு சொன்னான்.

பார்த்தியும் ஷார்ப்பாக ஐந்து மணிக்கு மறுநாள் சென்றவன் வீட்டை பார்த்தே பிரமித்து விட்டான். உள்ளே சென்றவனை மியா வரவழைத்து லீவிங் ஏரியாவில் அமர வைத்தார்.

சிறிது நேரத்தில் ஹேரியும், ஜானும்  லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தார்கள். இருக்கையில் இருந்து எழுந்த பார்த்தியை பார்த்து “வெல்கம்  பார்ட்டிபன், ப்ளீஸ் உக்காருங்க” என்று சொல்லிய ஹேரி அவனும் வந்து பார்த்தியின் அருகில் அமர்ந்தான். ஜான் எதிர் இருக்கையில் அமர்ந்தான். ஜானை பார்த்திபனுக்கு அறிமுகப்படுத்திய ஹேரி “என்ன சாப்பிடறிங்க பார்த்திபன்” என்று கேட்டான்.

ஒன்றும் வேண்டாம் என்று சொன்னவனுக்கு கேட்காமல் ஆப்பிள் ஜுஸ் வர வைத்து கொடுத்தான்.

பார்த்தி ஜூஸை குடிக்காமல் ஹேரியிடம் “இது உங்க வீடா” என்றான். அதற்கு ஹேரியும் ஆம் என்று கூறினான்.

“இவ்வளவு பணக்காரனா இருந்துட்டு எதுக்கு மதுட்ட IT ல ஒர்க் பன்றேன்னு பொய் சொன்னிங்க”

“நா பொய் சொல்லல பார்ட்டி. IT தான் என்னோட பேஸ். அதிலேருந்து வந்ததுதான் மத்ததெல்லாம் என்று அவன் கம்பெனிகளை பற்றியும், மது வேலை செய்யும் கம்பெனியும் அவனதுதான் என்று முழு உண்மையை கூறினான்.

“சரி அப்ப எதுக்கு நீங்க மதுக்கூட உங்க அடையாளத்த மறைச்சு பழகுறீங்கண்ணு நேரடியா பதில் சொல்லுங்க”

“எனக்கு மடுவ ரொம்ப பிடிச்சிருக்கு”

பார்த்தி கோபமாக “மதுவ உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா  நீங்க உங்க வழக்கப்படி டேட்டிங், லீவிங் டுகெதர்ன்னு சொல்விங்க . அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது” என்றான் 

“ஏன் அவசர படறீங்க பார்ட்டி. மதுவோட பழகுன உடனே நானும் புரிஞ்சிக்கிட்டேன் அதெல்லாம் அவளுக்கு ஒத்து வராதுன்னு” 

 “ஓ தெரிஞ்சும் ஏன் அவளை விட்டு விலகாம அவ வழில வர்றிங்க” 

“ஏன்னா மடுவ என்னால விட்டு கொடுக்க முடியாது”

“வாட் யு மீன்”

“நா அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்” என்று  ஹேரி கூறியதும்  பார்த்தி வாயடைத்து போய் விட்டான். 

“இது நடக்கிற காரியம்னு நினைக்கிறீங்களா”

“ஏன் நடக்காது”

“முதல்ல மது ஒத்துக்கணும்”

“அவளுக்கும் என்ன பிடிக்கும். நீங்க குறுக்க வராம இருந்திங்கன்னா அவளை ஈஸியா என்னால சம்மதிக்க வைக்க முடியும்”

“சரி அவ சம்மதிச்சாலும், அவ பேரன்ட்ஸ் சம்மதம் இல்லாம உங்கள எந்த காலத்திலும் கல்யாணம் பண்ணிக்க மது ஒத்துக்க மாட்டா. அதுக்கு என்ன பண்ணுவீங்க” 

“அங்கதான் உங்க ஹெல்ப் எனக்கு வேணும். மதுவோட பேரன்ட்ஸ் சம்மதம் வாங்க நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும்”

பார்த்தி புருவத்தை உயர்த்தினான். “இவ்ளோ சின்ன வயசுல எப்படி இவ்ளோ அச்சீவ் பண்ணீங்கன்னு எனக்கு இப்ப புரியுது. எப்படியெப்படி மதுவுக்கு குறுக்க நா வரக்கூடாது. மது பேரன்ட்ஸ் குறுக்க நா வரணும். வெரி கிளவ்ர்”

“ஆமாம் பார்ட்டி. லவ்ல ஜெயிக்கணும்னா சும்மாவா. மது எனக்கு கிடைக்க சாம தான  பேத தண்டம் னு எல்லா முயற்சியும் எடுப்பேன்” என்று சாம தான பாத தண்டத்தை தமிழில் கூறியவனை பார்த்து “தமிழும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல. ஆனா இன்னும் மடு, பார்ட்டி தான் சொல்றிங்க”

“அவ்ளோதான உங்களுக்கு பிரச்சனை . நாளைக்கே வாங்க உங்க ஜாதகத்தையே தமிழ்ல  சொல்றேன் “

“அது பிரச்சினையில்ல. மதுவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க என் சம்மதமே உங்களுக்கு கிடையாது. இதுல நா எப்படி மது அம்மா அப்பாட்ட உங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியும்”

“சரி உங்க சம்மதம் கிடைக்க நா என்ன பண்ணனும்”

“என்னோட எதிரிக்கு நா எப்படி ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்கிறீங்க” 

“உங்க ஹெல்ப் இல்லாம கூட மதுவை கல்யாணம் பண்ணிக்க என்னால முடியும். ஆனா மதுக்கு கடைசிவரை அவ உறவுகள் கூட என்னால எந்த பிரச்னையும் வரக்கூடாது. நா மடு பேபிக்கு கணவனா வர்ரதால அவ எதையும் இழந்திட கூடாது. முக்கியமா உங்கள மாதிரி ஒரு மச்சான் எனக்கும் அவசியம் வேணும்” என்று மச்சானை அழகாக தமிழில் கூறி  பார்த்தியை பார்த்து கண் சிமிட்டினான் ஹேரி 

அவனை முறைத்து பார்த்த பார்த்தி “எல்லாம் சரி மது மேல உள்ள இந்த லவ் எத்தனை நாள் உங்களுக்கு இருக்கும்னு நா எப்படி தெரிஞ்சுகிறது. பாதியிலே உங்க லவ் காணாம போய்ட்டுன்னா, அதுக்கு அப்புறம் மதுவோட வாழ்க்கை”

“நா சாகிற வரை மதுவோடதான் என் வாழ்க்கைன்னு  சொன்னா உங்களால ஒத்துக்க முடியுமா” 

“கண்டிப்பா நம்ப முடியாது. அது மட்டுமில்லாம இப்பவரை உங்க லைஃப்ல எத்தனை பொண்ணுங்க வந்துட்டு போனாங்களோ. மது மாதிரி ஒரு பியூர் தேவதை பொண்ணுக்கு நீங்க எப்படி மேட்ச் ஆவிங்க”

“என் இந்த முப்பது வயது வரை எந்த பொண்ணும் என் லைஃப்ல இல்ல நா லவ் பண்ற முதல் பொண்ணு மடு தான். என் வாழ்க்கையில வர்ற முதல் பொண்ணும் மடு தான்”

“அதையும் என்னால நம்ப முடியாது”

“என்னால வெர்ஜின் டெஸ்ட் எடுத்து காட்ட முடியும்”

சிறிது அதிர்ச்சியான பார்த்தி “இந்த ஊர்லயே பொய் கேசு போட்டு உள்ள தள்ளி, ஈஸியா வெளிய எடுக்க முடிஞ்சா உங்களுக்கு வெர்ஜின் டெஸ்ட் எடுக்கறது என்ன பெரிய காரியமா”

“சரி உங்க ஊர்ல நீங்க சொல்ற டாக்டர்ட்ட உங்க வழிக்காட்டுதல் படி டெஸ்ட் எடுக்க நா ஒத்துக்கிறேன்”

“எதுக்கு இந்த அனாவசிய பேச்சு. உங்களையெல்லாம் நம்பி எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது”

“இப்படி ஒரே அடியா சொன்னா எப்படி. வாய்ப்பு கொடுத்தாதான தெரியும்”

“வாய்ப்பு கொடுக்க இது விளையாட்டல்ல. என் தங்கையோட வாழ்க்கை”

“உங்களுக்கு நம்பிக்கை வரத்துக்கு நா என்ன செய்யணும். அதையாவது சொல்லுங்க”

“எதுக்கு இந்த சிக்கல். அவ வாழ்க்கை சிக்கலில்லாம எந்த வலியுமில்லாம அவ அம்மா அப்பா பாக்கிற மாப்பிள்ளையோட அமையட்டுமே”

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹேரி பார்த்தியின் கண்களை ஆழ்ந்து பார்த்து , “எந்த மாப்பிள்ளையாலும் நா என் பேபிக்கு  கொடுக்கற லவ், கேர் , வாழ்க்கையை கொடுக்க முடியாதே பார்ட்டி. மது உங்ககிட்ட அவ என்ன மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு  ஒரு நாள் சொன்னா அப்ப என்ன பண்ணுவீங்க பார்ட்டி”

அவன் கண்களையே பார்த்த பார்த்தியும் , “மது உங்கள மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்ற ஒரு நாள் வந்தா, அப்ப உங்க காதலுக்காக நா யோசிப்பேன். ஆனா அதையும் தாண்டி அவ அப்படி சொல்லிட கூடாதுன்னு நா கடவுள்ட்ட வேண்டிப்பேன். அத அவ சொல்லாம இருக்கத்துக்கான தடங்கலாவும் முதல்ல நான்தான் இருப்பேன்” என்றான்

“இது போதும் பார்ட்டி மச்சான்” என்று சந்தோஷத்தில் அவனை கட்டி பிடித்து கொண்டான் ஹேரி.

திரும்பி அவனை கட்டிபிடிக்காமல், கிளம்புவதாக சொல்லிவிட்டு வெளியில் சென்றான் பார்த்தி.

அவன் சென்றவுடன் ஜானும் எழுந்து வந்து ஹேரியை கட்டி அணைத்து கொண்டு “ஜானும் ஹேப்பி மச்சான்” என்றான் 

சத்யன்தான் ஹேரிக்கு எல்லாவற்றையும் கற்று தருவது. சில பல தமிழ் படங்களை போட்டு அவற்றை டப்பிங் பண்ணி காட்டுவான். ஹேரியின் மூலமாக ஜானும் சில வார்த்தைகளை கற்று கொள்கிறான் .

“ஜே நீயும், என்ன மச்சான் சொல்ற”

“ஆமாப்பா பிரண்டையும் மச்சான்னு சொல்வாங்கன்னு நீதான சொன்ன. ஆனா நா அதுக்காக சொல்லல மேட் . அந்த கோலா எனக்கும் தங்கச்சி மாதிரிதான். அதுவுமில்லாம பிரண்டோட லவ்வர், வைப் ன்னாலே சிஷ்டர்தானாம். தமிழ் மூவில பாத்தேன்”

“டேய் வர வர நீதான் என்னோட அதிகமா தமிழ் மூவி பாக்கிற “

“நல்லாருக்குப்பா அது. ஒரே செண்டிமெண்ட் தான் . அழுகையே வருதுன்னா பாத்துக்கயேன். ஆனா நீ சொல்லும்போது நம்பலப்பா இந்த பார்த்திய பத்தி. நீயே எப்பேர்ப்பட்ட ஆளு . உன்னையே கேள்வியால் திணறடிக்கிறானே”

 “ஹா ஹா ஒரு வழியா இவன சமாளிச்சாச்சு. என் பேபியதான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல. என்னட்ட வேற முக்கியமா ஏதோ பேசணும்ன்னு சொன்னா. ஒரு சமயம் ரொம்ப மெச்சூர்டா பேசுவா. ஒரு சமயம் ரொம்ப சேட்டை பண்ணுவா” 

“அதுசரி இப்படி புலம்புறியே. எப்படி அவளுக்கு உன்ன பிடிக்க வைக்க போற”

“ஹா ஹா ஜே . இவ்ளோ கேர்ள் பிரண்ட் மெய்ண்டைன் பண்ணியும் கேர்ள்ஸ் மெண்டாலிட்டி புரியலையே. என் பேபிக்கு என்ன ரொம்ப பிடிக்கும். ஆனா கஷ்ட்டப்பட்டு என்ன பிடிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்ருக்கா அவ மனசுக்கிட்ட. இப்ப எப்படி அவளை ஒத்துக்க வைக்க போறேங்கிறதுதான் பெரிய சவாலே”

“எப்படி மேட் இவ்ளோ நம்பிக்கையா சொல்ற அவளுக்கு உன்ன பிடிக்கும்ன்னு” 

“அதெல்லாம் உணர்வு ரீதியான விஷயங்கள் ஜே. உணரத்தான் முடியும். புரிய வைக்க முடியாது”

“நீயும் தமிழ் சினிமா பார்த்து ரொம்ப சென்டிமெண்டா பேசுற மச்சான்” என்று பேசி சிரித்து கொண்டே மாடிக்கு சென்றார்கள்.

                                                                                                                                                                                                                                          (வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!