Skip to content
Post Views: 1,040
மைவிழி – 6(b)
சற்று நேரம் இருவரிடமும் பேச்சில்லை.
Advertisement
என்ன பேசுவது என்ற தடுமாற்றத்திலும், தயக்கத்திலும் வேதவி மௌனத்தை தத்தெடுத்துக் கொள்ள,அழைத்தவளே பேசட்டும் என நினைத்தபடி வாசன் அமைதியாய்.
‘ஐயோ! இவர் என்ன ரெண்டு ரிங்லயே எடுத்துட்டார்.?என்னனு ஆரம்பிக்கிறது?அடேய் அட்டென்ட் பண்ண நீயாவது ஏதாவது பேசேண்டா!!’
Advertisement
Advertisement
“ஹூக்கும்!” என்ற கீர்த்தியின் செருமல் வேதவியின் மனக் குமுறல்களை தடை செய்தது.
ஆனால் வாசன் பேசவில்லை.
Advertisement
அவன் பேச மாட்டான் எனப் புரிந்தோ என்னவோ, நெடு மூச்சொன்றை இழுத்து விட்டவளாய்,
“ஸாரி!”என்றாள் வேதவி.
கீர்த்தி வாசனின் அதரங்கள் தானாக விரிந்து கொண்டது.
அவன் எதிர் பார்த்தது ‘ஹலோ’ என ஆரம்பிப்பாள் என தான்.
இப்படி எடுத்த உடன்(!) மன்னிப்பு கேட்க, நேற்று தன்னை தெரியாது பேசியதற்கு கேட்கிறாள் என புரிந்தது.
“ம்ம்ம்!” என்று மட்டும் சொல்லிக் கொண்டான் வாசன்.
“நேத்து தூக்க கலக்கத்துல யார்னு தெ..தெரியல..”
“ம்ம்ம்”
“ப்ச்! இல்ல,உங்க பேர் நியாபகம் இல்ல” – வேதவியிடம் உண்மை.
“ம்ம்ம்ம்ம்ம்” என்றவனிடம் பெரிதாயொரு புன்னகை.
‘அடேய் அந்த ‘ம்ம்’ தவிர ஏதாவது பேசேன்டா!கடுப்பேத்துறான்(ர்!) மை லார்ட்!’
அதற்கு மேலும் அவளை தவிக்க விடாது,
“அதிகமா ஸாரி சொல்லி பழக்கம் இல்ல போல?”என அடக்கப்பட்ட சிரிப்புடன் வினவினான் வாசன்.
அவளின் அந்த ‘ஸாரி’ அப்படி தான் இருந்தது. வேதவி அதை செப்புவதற்குள் பட்ட அவஸ்தை அவள் குரலில் வெளிப்பட்டதிலே அவளை அளவிட்டிருந்தான் இவன்.
“ம்ம்” என ஒப்புக் கொண்டவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் பட்டென.
தன்னைப் பற்றி சொல்லும் போது, வீட்டில் இதையும் சொல்லி வைத்து விட்டார்களோ என அடித்துக் கொண்டது அவளுக்கு.
“ஹா ஹா” பெரிதாய் நகைத்தான் கீர்த்தி.
“?!?!?”
“உங்க வீட்ல ஒன்னும் சொல்லித் தரல. உங்க குரல்ல தெரிஞ்சது” என்றான்.
“ம்ம்”என்றவளுக்கு வெட்கமாகி விட்டது.
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” – அவன்.
‘ஐயோ மொதல்ல இருந்தா?’
“இப்போ மட்டும் எப்டி என் பேர் தெரிஞ்சது?” தெரிந்து கொள்ளும் ஆர்வம் வாசனிடம்.
“அம்மா கிட்ட கேட்டேன்” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஹா ஹா”
“..?!?..”
“அவங்க ஒன்னும் சொல்லலையா?” என கேட்டவனிடம் சிரிப்பு மிச்சமிருக்க,
“திட்டி விட்டிருச்சு சரஸு!”என பற்களை நறநறத்தவள்,
“ஸ்ஸ்,அம்மா பேரு சரஸ்வதி.” என்றாள் அவசரமாய்.
“ம்ம், ம்ம்ம்” என்றான் நகைப்புடன்,கீழுதடு கடித்தபடி.
“அ.. அது நீங்க நேத்து கால் பண்ணிருந்தீங்க?” என வேதவி கேட்க,
“ஆமா, பண்ணிருந்தேன்” என்றான் இவன் அமர்த்தலாக.
“எ.. எதுக்கு?”
“கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூட பேசனும்னு தோணுச்சு” என்றவனின் அலட்டிக் கொள்ளாப் பேச்சில்,
“ஹாஆஆஆ!”வென திகைத்தாள் வேதவி.
தோள் குலுங்க அப்படி ஒரு சிரிப்பு கீர்த்தி வாசனிடம்.
“ஏங்க பண்ணக்கூடாதா?”என கேட்டும் வைக்க,
“ஹாங்! பண்ணலாம் பண்ணலாம்!”என தலையாட்டி வைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை வேதவிக்கு.
அவன் குரலில் இருந்த சீண்டலை கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை பெண். அவன் பேசும் போது இதயம் பட படவென அடித்துக் கொண்டிருக்க, உள்ளங்கைகள் இரண்டும் வியர்வையில் குளித்திருந்தது.
அனைவரையும் ஆட்டிப் படைப்பவளையே, ஆட் கொண்டிருந்தான் வாசன்.
அவள் படும் அவஸ்தை சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தது இவனுக்கு.
“பொண்ணுக்கு பாடத் தெரியுமான்னு கேட்கலாம்னு தான் கால் பண்ணிருந்தேன்” எனக் கூற,
“எதே!!” அதிர்ச்சியில் கூவிருந்தாள் வேதா.
“உங்களை நேரா பார்க்க வாய்ப்பு கிடைக்கல. பொண்ணு பார்க்க போகும் போது சம்பிரதாயம்னு ஒன்னு இருக்கே. பொண்ணை பாட சொல்றது” என சொல்ல,
“ஐயோ! எனக்கு பாடவெல்லாம் வராது” என அவசரமாய் பதில் சொன்னாள்.
“ஹா ஹா”
“…… ”
பின் விளையாட்டை கை விட்டவனாக,
“வேதவி!”என அழைத்தான்.
“ஹா!”என்றாள் வேதவி. அவன் அழைக்கும் போது தன் பெயர் சற்றே வித்தியாசமாய் இருப்பது போலானத் தோற்றம்.
“முக்கியமா சில விசயம் பேசணும்,கேட்கணும்” என்றான் கீர்த்தி.
“என்ன? சொல்லுங்க!”என தெளிவான குரலில் இவள் கேட்க, இப்போது வாசனுக்குள் பெரும் தடுமாற்றம்.
சிவாவிடம் சொல்லும் போதிருந்த தெளிவு இப்போது இல்லை இவனிடம். நேரடியாக சொல்ல முடியாது, மறைமுகமாக கேட்டு வைத்தான்.
“உங்களுக்கு இந்த கல்யாணத்துல முழு மனசா சம்மதம் தானே?”
“…..”
அவள் அமைதி சிறு பயத்தை விதைத்ததில்,
“இல்ல, வீட்ல ஒன்னும் கட்டாயப்படுத்தலையே?”என வினவினான். பையனிடம் கொஞ்சம் நடுக்கம் இருந்ததோ?
“இல்ல!அப்டியே கட்டாயப்படுத்தினாலும் ஒத்துக்கற ஆள் நான் இல்ல”என்றாள்.
அவள் பதிலில் குறுநகை வாசனிடம்.
“வேறன்ன?” அவளே கேட்க,
“வீட்ல எல்லாம் சொன்னாங்களா?” என அழுத்திக் கேட்டவனைப் புரியாது,
“ம்ம்,சொன்னங்களே” என்றவள்,
“உ..உங்களுக்கு எதுவும் சொல்லனுமா?”எனக் கேட்டாள். இம்முறை இவளிடம் சிறு தவிப்பு.
“ஆமா சொல்லனும்”
“எ.. என்ன?”
“எனக்கும் இந்த கல்யாணத்துல முழு சம்மதம்”
“…..” எழுந்த தவிப்பு மறைவது போலிருந்தது, இவளுக்கு.
“வேதவி” இப்போது அவன் அழைப்பில் ஒரு உரிமை வந்திருந்ததோ? அவளின் சம்மதம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருந்தது என்பது மட்டும் உண்மை.
“ஹா?” – வேதவி.
“இல்ல,கூப்பிட்டு பார்த்தேன் உன்னை” என்றவனின் பேச்சு ஒருமைக்கு தாவிருக்க, வேதவி அதை அறியவில்லை.
“ம்ம்ம்”
“நீயும் கேட்கலாம் எங்கிட்ட!” என அவன் நிறுத்த,
“என்ன கேட்கனும்?” என புரியாது வினவினாள்.
“பையனுக்கு பாடத் தெரியுமான்னு தான்!” என்றான் சிறு சிரிப்புடன்.
“ஹா!!”
“ம்ம், சூப்பரா இல்லைன்னாலும் கொஞ்சம் சுமாரா பாடுவேன்”
“ஹாஆஆஆஆ!”
எழும் பெரும் சிரிப்பை கட்டுப்படுத்தும் வழியாக மீசையோடு மேலுதடு கடித்து பின்னந்தலை கோதினான் கீர்த்தி வாசன்.
“வேதவி”
“…..”
“சரி பயப்பட வேண்டாம். நான் பாடல”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்? அப்போ எங்குரல் கேவலமா இருக்கும்னு நினைச்சிருக்க, ரைட்?”
‘நான் எங்கடா நெனச்சேன். இந்த வேதவிக்கே வார்த்தை வரமாட்டேங்குதேன்னு கவலைல இருக்கேன்’
“வேதா”
இவன் என்ன குரலில் இத்தனை மோடுலேஷன் (modulation) காட்டுகிறான்?
“ம்ம், அப்டிலாம் நினைக்கல!” என்றாள் வேதவி.
சிரித்தவன்,
“ஓகே. அப்டின்னா வைக்கறேன் வேதவி” எனவும்,
“என்ன வைக்கறீங்களா?” எனக் கேட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் இவள்.
“வைக்க வேணாமா? அப்போ பேசு!”
“இல்ல,இல்ல. வைங்க”
சிரிப்புடன்,
“அப்பறமா கால் பண்றேன்” என்றவன்,
‘அப்பறமாவா???’ என்றவளின் திகைப்பை அறியாது,
“ஐ லைக் யுவர் ஹானஸ்ட்டி” என்று அழைப்பை துண்டித்து விட்டுப் புன்னகையுடன் திரும்ப,
நண்பனை ‘பே’ வென பார்த்தபடி நின்றிருந்தான் சிவா.
‘இவனை எப்டி மறந்தேன்’
“கீர்த்தி?”
“என்னடா சிவா?நீயெப்ப மச்சா வந்த?”
“நீ கடலையே கடலளவு போடும் போது வன்டேன்”
“சும்மா பேசிட்டு..”
“ஓஹோஓஓ..”என்றவன் கேலியில் இவன் முறைக்கவும்,
“நிஜமா, ஐம் ஹேப்பி ஃபோர் யூ மச்சான்”என அணைத்துக் கொண்டான் சிவா.
“டேய் டேய் கிரௌண்ட்ல இருக்கோம் டா! நம்ம பசங்க பார்த்தா கிண்டல் பண்ண போறாங்க. பொசுக்கு பொசுக்குன்னு இவன் வேற கட்டி புடிச்சிட்டு” என தள்ளி விட்டவனிடமிருந்து சிரிப்புடன் விலகிய சிவா,
“தங்கச்சி என்ன சொல்றாங்க” எனக் கேட்டான்.
“ம்ம் நல்லா பேசுவா போல”என்றான் இவன் சிரித்த படி.
“அடேய், நீயே நல்லா பேசுவன்னு எனக்கு இப்போ தானே தெரிஞ்சது” என கிண்டல் செய்ய,
“போடா டேய்” என்றபடி பைக்கில் ஏறினான் வாசன்.
“கீர்த்தி,உன்னை இப்படி பார்க்க சந்தோசமா இருக்குடா. சஞ்சனா நியாபகத்துலயே இருந்துடுவேன்னு பயந்துட்டே இருந்தேன்டா” என நெகிழ்வாக சிவா சொல்ல, சட்டென வாசனின் முகம் மாறியது.
தன்னை வெளிக்காட்டாதிருக்க, அவன் செய்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போனதுடன், கண்களில் மெல்லிய நீர்ப் படலம்.
“கீர்த்தி?” நண்பனின் நிலை கண்டு இவன் பதற,
“ஐம் ஆல் ரைட் டா!” என்றவனின் குரல் கரகரத்தது.
“ஸாரிடா டேய்! கீர்த்தி”என பதறிய சிவா, பைக் கியரிலிருந்த அவன் நடுங்கும் கரத்தை கண்டு,
“டேய்,பைக்லருந்து எறங்கு. நீ இப்போ ஓட்ற நிலமைல இல்ல” என அதட்டினான்.
இறங்கியவனுக்கு போத்தலிலிருந்த தண்ணீரைக் கொடுக்க,வாங்கிப் பருகினான் கீர்த்தி வாசன். இப்போது நடுக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தது.
“ப்ச், நான் தான் மடையன் மாதிரி பேசிட்டேன்”என தலையில் அடித்துக் கொண்டான் சிவா.
இவன் அமைதியாக இருக்க,
“யாரை ஏமாத்த பார்க்கற கீர்த்தி?”என நண்பனிடம் ஆதங்கமும் கோபமுமாக வினவினான் அவன்.
“நான் யாரையும் ஏமாத்த நினைக்கல சிவா!”
“டேய்!” என குரல் உயர்த்திய சிவா,
“கெட்ட வார்த்தை வந்துடும் மச்சா. சொல்ட்டேன்”என்றவன்,
“அவ பேரை சொன்னதுக்கே இப்படி ரியாக்ட் பண்ற நீ..! வாழ்க்கை ஒன்னும் விளையாட்டு இல்ல கீர்த்தி. வேற பொண்ணோட உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகப்போகுது” என பற்களை நறநறக்க,
“வேற பொண்ணுல்ல, வேதவி” என்றான் இவன்,சற்றே முறைப்புடன்.
“அடிச்சுடுவேண்டா, ராஸ்கல்!” என கடுப்பாகினான் சிவா.
“…..”
“வேதவியாம்ல வேதவி.” என முனகியவன், வாசன் முறைத்தபடி பைக்கில் ஏறியதை கண்டு,
“எங்க போற நீ? இரு நானே பைக்ல ட்ராப் பண்றேன்” என்றான் கோபம் குறைந்தவனாய்.
“ஒன்னும் வேணா. நீ மூடு!” என கோபப்பட்ட கீர்த்தி, பைக்கின் கைப் பிடியை முறுக்கினான்.
“மயிரே! உன்னை நான் தப்பா நினைக்கலடா”என்ற சிவாவின் கத்தலை கேட்க வாசன் அங்கிருக்கவில்லை.
error: Content is protected !!