Skip to content
Post Views: 7,907
அத்தியாயம் 22:
கிறிஸ்துமஸ், நியூ இயர் ஹாலிடேஸ் எல்லாம் முடிந்து வழமை போல் ஆபீஸ் சென்று வர ஆரம்பித்தாள் மது.
அவளிடம் உள்ள மாற்றம் அவளிடம் பழகும் அனைவருக்கும் புரிந்தது. டோமிங் கூட மதுவிடம் கேட்டான்.
“என்ன மது. உடம்பு சரியில்லையா. இல்லை ஊரில் ஏதும் ப்ராபளமா” என்று.
Advertisement
அவனுக்கே தெரியும் போது சத்யனுக்கும், ஊர்வசிக்கும் புரியாமல் இருக்குமா. ஆனால் காரணம் தான் புரியாமல் குழம்பி கொண்டார்கள்.
சத்யன் பார்த்தியிடம் கூட கால் பண்ணி கேட்டான். “என்ன பார்த்தி. மதுக்கு எதாவது ப்ராபலமா. உங்களுக்கு ஏதாவது தெரியுமா. முன்னாடி மாதிரி இல்ல அவ. என்னட்ட கூட வம்பு பண்றது இல்ல. ஊர்வசிட்டையும் அப்படிதான்”
ஹேரியிடம் இருந்து விலகியிருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறாள் என்று தெரிந்திருந்த பார்த்தியும் “என்னன்னு தெரியல சத்யன். என்னட்ட ஒழுங்காதான் பேசிட்டுருக்கா. ஊர்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல” என்று ஒன்றும் தெரியாதவாறு பதில் சொல்லி நழுவி கொண்டான்.
Advertisement
ஆனால் ஊர்வசிக்கு அன்று சந்தித்த ஹேரி மூலமாக ஏதாவது இருக்குமோ என்று மனதின் ஓரம் சிறு சந்தேகம் இருந்தது.
Advertisement
அவனை பற்றி மதுவிடம் கேட்டதற்கு “அதான் பிரண்ட்னு அன்னைக்கே சொன்னேனே ஊர்” என்று முடித்து கொண்டாள்
முழு விவரம் தெரியாமல் ஏதும் உளறிவிட கூடாது என்று சத்யனிடமும் ஹேரியை பற்றி சொல்லவில்லை ஊர்வசி.
இவ்வளவு பேரையும் குழப்பத்தில் ஆழ்த்திய மது ஆஃபிஸில் வேலை பார்த்து கொண்டே யோசித்து கொண்டிருந்தாள். ஹேரியை பற்றித்தான். சுத்தமாக நம்மை வெறுத்து விட்டானா. பத்து நாட்களாக அவனை பார்க்க வில்லை. பேசவில்லை. எதையோ இழந்தது போல் இருந்தது மதுவிற்கு. ஆமா நீ பேசின பேச்சுக்கு திரும்ப உன் முன்னாடி வந்து நிப்பானா என்று மது யோசித்து கொண்டிருக்கும் போது சத்யன் அங்கு வந்தான்.
Advertisement
மதுவின் டீமிடம் “ஹலோ கைஸ். இன்னைக்கு ஆபீஸ்க்கு நம்ம பாஸ் வர்றார். நம்ம டீம்ல நிறைய பேர் ஏற்கனவே அவர பாத்துருக்கீங்க. பாக்காதவங்க நம்ம மதுவும் ஊர்வசியும் தான். சோ அவர்க்கு டைம் இருந்தா உங்கள மீட் பண்ணாலும் பண்ணுவார். ரெடியா இருந்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு மதுவை பார்த்தான்.
அவள் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அவனை கவனித்து விட்டு திரும்பவும் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சத்யன் ஊர்வசியை பார்த்தான். அவளும் அவனை பார்த்து உதட்டை பிதுக்கினாள்.
சத்யன் மதுவிடம் போய் “ஹே குட்டி சாத்தான். நம்ம பாஸ் எனக்கு ரொம்ப நல்ல பிரண்ட் . உனக்கு எதாவது ஆப்லிகேசன் இருந்தா சொல்லு. பாஸ்ட்ட சொல்லி ஐயா முடிச்சு தர்றேன்” என்றான்.
“அப்ப என் வேலைய இந்தியாவுல இருந்தே முடிச்சு தர்ற மாதிரி ஆப்சன் இருந்தா கேட்டு பாருங்கண்ணா” என்றாள்
அவளை ஆச்சரியமாக பார்த்த சத்யன் “என்ன மது அம்மா அப்பா பாக்கணும் போல இருக்கா.வேணுனா ஒன் மந்த் ஊருக்கு போயிட்டு வாயேன்” என்றான்.
அவனிடம் பதில் சொல்ல போன மதுவின் பார்வை அவனுக்கு பின்னால் ஒரு இடத்தில் நிலை குத்தியது. அங்கு ஹேரி முழு ஃபார்மல் உடையில் நான்கைந்து பேர் புடை சூழ வந்து கொண்டிருந்தான். நேவி ப்ளூ பேண்ட், பிளாக் சர்ட், மேலே நேவி ப்ளூ சூட் , பிளாக் ஷூ , கையில் ரோலெக்ஸ் வாட்ச், கண்ணில் குளிர் கண்ணாடி அணிந்து ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு, ஜான் மற்றும் இன்னும் நான்கைந்து பேர் சுற்றி வர, அட்டகாசமாக வந்து கொண்டிருந்தான்.
பார்த்து கொண்டிருந்த மதுவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
மதுவின் பார்வையை பார்த்து விட்டு திரும்பி பார்த்த சத்யன் “என்ன மது ஸ்டன் ஆய்ட்ட. அவர்தான் நம்ம பாஸ்” என்று சொன்ன சத்யனை மொழி புரியாத குழந்தை போல் பார்த்து வைத்தாள் மது.
அவர்கள் பேசுவதை கவனித்து திரும்பி பார்த்த ஊர்வசியும் அதிர்ச்சி ஆகி விட்டாள்.
“ஹே என்ன ஊர்வசி. நீயும் ஃபிரீஸ் ஆயிட்ட. சும்மாவா. நம்ம பாஸோட அட்ராக்சன் அப்படி. எப்படி இருக்கார் பாத்தியா. எனக்கே பொறாமையா இருக்குப்பா. நா அவர் வீட்டுக்கு போயிருக்கேன், அவரோட நெருங்கி பழகிருக்கேன்னு சொன்னா நீங்கல்லாம் என்ன ஆவிங்க” என்று சத்யன் சொல்லி கொண்டிருக்கும் போதே ஹேரியின் படை இவர்கள் பக்கம் வராமல், இவர்களுக்கு ஐந்து அடிக்கு முன் உள்ள திருப்பத்திலேயே வளைந்து சென்றது.
அவர்கள் சென்றவுடன் “ஓகே கேர்ள்ஸ். எனக்கும் வேலையிருக்கு. பாஸ் வேற வந்துருக்காரு. நா கிளம்புறேன். டைம் இருந்தா பாஸ்ட்ட உங்கள அறிமுக படுத்தி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு சத்யனும் கிளம்பி விட்டான்.
அவன் சென்றவுடன் அமைதியாக அமர்ந்திருந்த மதுவிடம் ஊர்வசி “இவரத்தான அன்னைக்கு கோயில்ல உன் பிரண்ட்னு இன்ட்ரோ கொடுத்த மது” என்று கேட்டாள்.
அவளுக்கு ஆம் என்று தலையாட்டினாள் மது. ஊர்வசிக்கு நன்றாக புரிந்தது மதுவின் மாற்றத்திற்கும் , திரென்று ஆஃபீஸிற்கு வந்திருக்கும் ஹேரிக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்று.
புரிந்து கொண்டவள் மதுவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினாள்
வெளியில் அமைதியாக அமர்ந்திருந்த மதுவின் உள்ளே பிரளயம் வெடித்து கொண்டிருந்தது.
ITல வேல பாக்றேன்னு சொன்னவன் இன்னைக்கு என்ன பாஸ்னு வேஷம் கட்டி வந்துருக்கான். இவ்வளவு நாளா நம்ம நல்லா ஏமாத்தியிருக்கான். பார்த்தி அண்ணா சொன்ன மாதிரி அவன் சொன்னது எல்லாத்தையும் உண்மைன்னு நம்பி நான்தான் ஏமாந்திருக்கேன். இப்போ எதுக்கு இங்க வந்திருக்கான். வரட்டும் வரட்டும் அவனுக்கு இருக்கு. பெரிய பாஸா அவன். என்ன கிழிக்கிறான்னு பாக்கிறேன் என்று, மது பழைய பார்ம்க்கு திரும்பி கொண்டிருந்தாள்.
ஒரு ஒருமணி நேரம் சென்று சத்யன் வந்து அழைத்தான். “பாஸ் உங்கள பாக்கிறேன்னு சொல்லிருக்கார். ஏ மது அந்த ஜான் வந்துருக்கான். அவனும் அங்கதான் இருக்கான். ஏற்கனவே பண்ண மாதிரி அவன்கிட்ட ஏதும் வம்பு பண்ண கூடாது. ஒழுங்கா பாஸ்ட்ட மட்டும் அறிமுக படுத்திகிட்டு வந்துடனும். வாங்க” என்று சொல்லி அழைத்து போனான்.
மது எல்லாவற்றிற்கும் அமைதியாக நின்று கொண்டிருந்ததால் சரி நம்ம சொல்றது கேக்கறா போல இருக்கு என்று சத்யனும் நிம்மதியாக அவர்களை அழைத்து போனான. ஆனால் மதுவை கவனித்து கொண்டிருந்த ஊர்வசி , ரைட்டு இன்னைக்கு பஞ்சாயத்து இருக்கு என்று சிந்தித்து கொண்டே போனாள்.
சேர்மன் ரூமிற்கு சென்ற சத்யன் அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்றான். மதுவும் ஊர்வசியும் கூடவே சென்றனர். உள்ளே ஜானும் டேபிளின் சைடில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தான். மெயின் இருக்கையில் அமர்ந்திருந்த ஹேரி சத்யனைத்தான் பார்த்தான்.
சத்யன் “ஹலோ பாஸ். இவங்க ரெண்டு பேரும் …… ப்ரொஜெக்ட்காக லாஸ்ட்டா சென்னைல இருந்து வந்தவங்க. எங்க ஊர். உங்கட்ட அறிமுக படுத்தலாம்னு கூட்டிட்டு வந்தேன்”
“ஓ அப்படியா சத்யன். பாத்தா ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க மாதிரி தெரியுதே”
சத்யன் ஜானைதான் பார்த்தான். அவனுக்குத்தான் மதுவை பற்றி தெரியுமே . அதனால் ஹேரி சொன்னதற்கு சத்யன் எல்லா பக்கமாகவும் தலையாட்டி வைத்தான்.
ஹேரி கேள்வி எல்லாம் சத்யனிடம் கேட்டாலும் பார்வை என்னவோ மதுவின் மேல்தான் வைத்திருந்தான். கண்ணில் கண்ணாடியும் இல்லை. ஆனால் மது அவனை தவிர ரூமில் இருந்த எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தாள்.
சத்யன் “ரெண்டு பேருமே என் சிஸ்டர் மாதிரிதான் பாஸ்” என்று அறிமுக படுத்தினான்.
“ஓ அப்படியா சத்யன். உங்களுக்கு சிஸ்டர்ன்னா எனக்கும் ரிலேஷன் மாதிரிதான் என்ற ஹேரி சேரில் இருந்து எழுந்து வந்தான். முதலில் நின்ற ஊர்வசியிடம் ஹாய் என்று சொல்லி கை குலுக்கினான். ஊர்வசியும் திரும்ப “ஹாய் சார், ஐயம் ஊர்வசி” என்று மரியாதையாக கை குலுக்கினாள்.
அடுத்து மதுவிடம் ஹாய் சொல்லி கையை நீட்டினான். அவன் நீட்டிய கையை பற்றாமல் இரு கைகளையும் குவித்து “வணக்கம்” என்று நெஞ்சு வரை குனிந்து வணக்கம் வைத்தாள்.
ஹேரி திரும்பி சத்யனை பார்த்தான். அவனுக்குத்தான் சங்கடமாகி விட்டது. இந்த குட்டி பிசாசு ஏன் நாடகம் போடுது என்று பல்லை கடித்து கொண்டவன், ஹேரியிடம் “அது எங்க ஊர் வழக்க படி விஷ் பண்றா பாஸ்” என்றான்.
அதுக்கு ஹேரியும் “நா திரும்ப என்ன பண்ணனும்” என்ன கேட்டான்
சத்யன் அவனுக்கு வணக்கம் சொல்லும் முறையை சொல்லி கொடுத்தவன் மதுவிடம் தமிழில் “ஷ் மது. ஏன் இப்படி பண்ற. அவர் எவ்ளோ பெரிய பிசினஸ் மேன் தெரியுமா”
“என்னண்ணா பெரிய பிசினஸ் மேன். புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவன்லாம் பிசினஸ் மேனா. வர வர இந்த பிசினஸ் மேனுங்க தொல்லை தாங்க முடியலப்பா” என்றாள் மது.
இருவரையும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஹேரி, ஜானிடம் ஈ என்று பல்லை காட்டிய சத்யன் “ஒண்ணுமில்ல உங்களுக்கு எங்க ஊர் முறை தெரியாதுன்னு சொல்லி குடுத்தாளாம்” என்று ஆங்கிலத்தில் கூறினான்.
இருவரும் திரும்பி மதுவை பார்த்தனர். மது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ரூமை சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
இது சரி வராது என்று நினைத்த சத்யன், மதுவை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்று நினைத்து “அப்ப நாங்க வரோம் பாஸ்” என்று கிளம்பினான்.
“என்ன சத்யன். இன்னும் இவங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே” என்றான் ஹேரி மதுவை காட்டி.
மது எதுவும் சொல்வதற்கு முன்பாக “அவ பேர் மதுமிதா பாஸ்” என்றான் சத்யன்.
ம..து… மி…தா…என்று ஒவ்வொரு சொல்லாக ரசனையாக உச்சரித்தான் ஹேரி.
கடுப்பான மது “அண்ணா எனக்கு பசிக்குது. லஞ்சுக்கு லேட் ஆச்சு. நா கிளம்புறேன்” என்று அவள் பாட்டுக்கு கிளம்பி கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.
சத்யன் மது மது என்று கூப்பிட கூப்பிட வெளியில் சென்று விட்டாள். சத்யன் ஒன்றும் புரியாமல் யோசித்து கொண்டு நின்றிருந்தான். ஊர்வசிதான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தவள் ஒரு வழியாக ஹேரியிடம் “தேங்க் யூ சர்” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஹேரியும், ஜானும் ஹா ஹா என்று சத்தம் போட்டு சிரித்தார்கள்.
சத்யன் இருவரையும் வித்தியாசமாக பார்த்துவிட்டு “உங்க பிரண்ட தான மதுவுக்கு தெரியும். உங்களையும் ஏற்கனவே தெரியுமா பாஸ்” என்றான்.
அதற்கு ஹேரி “தப்பு சத்யன். முதல்ல எனக்குதான் மதுவை தெரியும். அப்புறம் தான் ஜானுக்கு தெரியும்” என்றான்.
“எப்படி பாஸ்” என்ற சத்யனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு “முதல் முதலா மதுவை ட்ரைன்ல வச்சுதான் பாத்தேன்” என்றான்.
அவன் பார்வையை பார்த்துக்கொண்டே “ட்ரைனில் என்று ஆரம்பித்த சத்யன் “பாஸ்” என்று அதிர்ச்சியில் கூவினான். .சத்யனுக்கு ஒரு வழியாக பல்ப் எறிந்துவிட்டது. அவனுக்குத்தான் ஹேரியின் காதல் கதை தெரியுமே. பிறகு ஒன்றுமே பேசாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சத்யன் “என் கைய வச்சு என் கண்ணையே குத்திட்டிங்க பாஸ்” என்றான் மிக வருத்தமாக.
வேகமாக அவன் அருகில் வந்த ஹேரி அவனை எழுப்பி கட்டி பிடித்து கொண்டான்.
“நா உங்கள ஏமாத்தணும்னு அப்படி பண்ணல சத்யன். சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு”
“எனக்கொண்ணும் பிரச்சனையில்லை பாஸ். ஆனா மது. அவ இதுனால எவ்வளவு பிரச்சனைய சந்திக்கணும் தெரியுமா”
“நா இருக்கேனே சத்யன். அவளை அப்படி விட்ருவனா. என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு”
“மத்தவங்கனால வர்ற கஷ்டத்தை விடுங்க. இப்ப கொஞ்ச நாளாவே அவ அவளாவே இல்ல. என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியவே இல்ல. இப்பதான் புரியுது. உங்க காதல்தான் காரணம்னு. எதுக்கு இதெல்லாம். இப்பதான் அவளே கேட்டா. நா சென்னைக்கு போறேன்னு. அத மாதிரி அவளை அனுப்பி விட்ரலாம். அவ இங்க இல்லைன்னா நீங்களும் கொஞ்ச நாள்ல அவளை மறந்துட்டு உங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுருவிங்க” என்று பேசிய சத்யனை கையை கட்டி கொண்டு ஆழமாக பார்த்தான் ஹேரி.
சத்யனால் அவன் பார்வையை சந்திக்க முடியவில்லை. ஹேரி “யாரோ ஒரு பொண்ணுன்னா, என் காதல ஏத்துக்க முடிஞ்சது உங்களுக்கு. ஏன் சத்யன். நா உங்க தங்கச்சிக்கு ஏத்தவனில்லேன்னு நினைக்கிறீங்களா. எல்லாத்துக்கும் மேல என் காதல் மட்டுமில்ல உங்க தங்கையோட காதலும்தான் இது” என்றான்.
அவன் பக்கத்தில் இருந்து பார்த்ததால் அவன் காதலை சத்யனும் உணர்ந்துதான் இருந்தான். இருந்தாலும் என்று நினைத்தவன் “மதுவும் உங்கள வெளிப்படையா லவ் பன்றேன், உங்கள மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாதான் என்னால முழு மனசா ஒத்துக்க முடியும் பாஸ்” என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டான்.
ஜான் தான் வாயை பிளந்து விட்டான். “டேய் இவனுங்கெல்லாம் தங்கச்சின்னு வந்துட்டா ஒரே மாதிரி பேசுறானுங்க. இன்னும் கொஞ்ச நாள் போனா, நானே உன்ன, என் தங்கச்சி அந்த குட்டி கோலாட்ட இருந்து தள்ளி இருன்னு சொல்லிடுவேன் போல” என்றான்.
(வருவாள்…)
error: Content is protected !!