Skip to content
Post Views: 5,579
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் . 2
Advertisement
“மீனுக்குட்டி, மீனுக்குட்டி, ” என்று சொல்லியபடியே வீட்டிற்கு வேகமாக நுழைந்தாள் இனியா.
Advertisement
தன் பாட்டியைத் தேடிக்கொண்டே வர மீனாட்சி வீட்டின் பின் கட்டில் அமர்ந்து இருந்தார்.
Advertisement
இனியாவின் சத்தம் கேட்ட மீனாட்சி. “வீட்டின் பின் கட்டில் இருக்கேன்டி. இங்கே வா”! என்று தன் பேத்தியை அழைக்க.
Advertisement
அங்கே வந்த இனியா.
மீனாட்சியைப் பார்த்து. “இங்கே என்ன பண்ணுற? மதியம் சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே” என்று பின் கட்டில் உள்ள படியில் அமர்ந்தாள்.
தூங்கத்தான் போனேன்டி தூங்கம் வரல. பால் கறக்க மருது வந்தான். அவன்கிட்ட பேசிட்டு இங்கேயே உங்கார்ந்துட்டேன்.
பால் கறந்தாச்ச ?
கறந்தாச்சு, நமக்கு வேண்டியதை வச்சுட்டு இப்போ தான் போனான்.
மீனாட்சி, இனியாவைப் பார்த்து. “என்னைய, ஏன்டி? மீனுக்குட்டி , மீனுக்குட்டின்னு கூப்பிடுற, அப்படி கூப்பிடாத” என்று சொல்ல.
ஏன் நான் கூப்பிட்டா என்ன வந்துச்சு உனக்கு.
ஏய் நான் என்ன சின்ன பொண்ணா என்னையப் போய் மீனுக்குட்டின்னு கூப்பிடுற.
என் பாட்டி நான் அப்படி தான் கூப்பிடுவேன்.
ஏய், நீ கூப்பிடுறது என்னைய.
ஆமா , என் தாத்தா உன்னை எப்படி கூப்பிடுவாறு சொல்லு. மீனுக்குட்டின்னு தானே அப்போ நான் கூப்பிட்டா என்னவாம்.
இனியாவைப் பார்த்த பாட்டி, நீ கூப்பிடுறதும். என் புருஷன் கூப்பிடுறதும் ஒன்னா!
” சரி அப்போ” உன்னை நான் மீனுக்கட்டின்னு கூப்பிடக் கூடாது அது தானே.
ஆமாம் அதுதான்.!
தாத்தா தாத்தா என்று சத்தம் போட்ட இனியா தன் தேவேந்திரன் தாத்தாவை அழைக்க.
” ஏய் ஏன்டி இறந்து போனவரை கூப்பிடுற”.
இரு பாட்டி நான் அவரை கேட்டுட்டு வாரன் என்று கிழம்பியவளைப் பிடித்து நிறுத்தியவர்.
எங்கே போற?
என் தாத்தா சமாதிக்கு.
அடியே கூறுகெட்டவளே! என் புருஷனை சமாதியில் கூடா நிம்மதியா இருக்கவிட மாட்டியா?. நீ.
என்ன இப்போ சமாதிக்கு போகக் கூடாது அவ்வளவு தானே என்றவள். ஹாலின் மேல் சுவரில் . தன் தாத்தாவின் புகைப்படத்தை பார்த்தவள். “தாத்தா ” இந்த மீனுக்குட்டியை என்னனு கேளு என்னைய திட்டிக்கிட்டே இருக்கு.
“நீ தான சொன்ன . நான் இறந்ததர்க்கு அப்புறம் , என் மீனாட்சியைப் எந்த குறையும் இல்லாம , நான் பார்த்துகனும்முனு. இப்போ பார் இந்த பாட்டி மீனுக்கட்டின்னு கூட சொல்ல விட மாட்டிங்குது. வா வந்து என்னனு கேளு ” என்று தன் தாத்தாவிடம் புகார் வாசிக்க.
” மீனாட்சி ” இனியாவின் சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்தவர். தன் கணவரின் நியாபகம் தனக்கு வருத்தத்தை கொடுக்கும் . என்று இனியா செய்யும் சின்ன சின்ன கலாட்டாக்களை மிகவும் ரசிப்பார்.
என்ன கிழவி சிரிக்கிற என்றவளை.
யாரடி கிழவின்னு கூப்பிடுற, வந்தேனுவையு. கிழவியின்னு சொன்ன வாய ஊசி வச்சு தச்சுறுவேன்.
மறுபடியும் தாத்தாவிடம் சென்றவள்.” பாரு தாத்தா இந்த பாட்டி என் வாயை தச்சுறுவேன் சொல்லுது” என்று வராத கண்ணீரைத் துடைக்க.
என்னடி என் புருஷன் கிட்ட கம்பிளைன்ட். பண்ணுறியா, பண்ணு பண்ணு அவர், எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு தெரியுமா?
இல்ல எனக்கு தான் . என் தாத்தா சப்போர்ட் பண்ணுவாரு.
என்ன இனியா எப்பையும் காலையில் என் கிட்ட வம்பு பண்ணுவ. இன்னைக்கு சாயங்காலமே ஆரம்பிச்சுட்டியா ஆமாம். என்றவளைப் பார்த்து சிரித்தார் மீனாட்சி பாட்டி.
இனியாவும் சிரிக்க.
பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்ட இனியா, எப்பையும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் சரியா.
சரிடி.
என்ன ஞாபகம் பாட்டி உனக்கு என்று கேட்க?
தெரியலடா, காலையில் இருந்து. உன் தாத்தாவின் ஞாபகமா இருத்துச்சு, தாத்தாவை பத்தி நினச்சு கிட்டு இருந்தேனா. அதுதான் மதியம் தூங்கக் கூட இல்ல.
தெரியும் உன்னைப் பார்த்தாலே தெரிஞ்சது. நீ வேணா அத்தை வீட்டுக்கு போய்டு வர்ரீயா. இல்ல உன் மருமக கோமதியை வர சொல்லவா?
இல்லடி வேணாம் அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.
அப்போ ஏதாவது கோவில் போறிங்கல பாட்டி.
நான் எங்கேயும் போகல.
சரி ” எனக்கு பசிக்குது சோறு போடுவியா மாட்டியா?
ஏன்டி இன்னும் சாப்பிடாம இருக்க. மணி 4 ஆச்சு பாரு. வா வந்து சாப்பிடு என்று அழைத்துச் சென்றார்.
நீ சாப்பிட்டியா பாட்டி , அதுயெல்லாம் 1 மணிக்கே சாப்பிட்டேன் மா . நீ சாப்பிடு என்று உணவு பரிமாற , இருவரும் பேசிக்கொண்டே இருக்க.
இனியாவின் போன் ஒலித்தது . போனை எடுத்தவள் சாப்பிட்டு கொண்டே, சொல்லு குமரா தேங்காய் லோடு கிளம்பிடுச்சா.
இப்போ தான் அக்கா தேங்காய் லோடு கிளம்புச்சு. நானும் கூடப் போய் லோடு இறங்கனதும். பார்த்துட்டு காசு வாங்கிட்டு வரேன்.
ஓகே குமரா. கடலைச் செடியை, கம்பெனிக்கு அனுப்பியாச்சா?
அனுப்பிட்டேன் கா.
டேய் இரண்டு நாள் கலத்துல காயப்போடச் சொல்லு. செடி பதமா இருக்கு. ஈரம் கொஞ்சம் போகனும். அப்போறமா மெசினில் போடச் சொல்லு.
சரிக்கா.
டேய் போய்ட்டு வர்ரப்போ மேலக்காட்டுல சோளம் எப்படி இருக்குனு பார்த்துட்டு வா. பருவமா இருந்தா சோளச்செடியை அறுத்துடலாம். 3 நாள்ளுல மழை வரும்முன்னு சொன்னாங்க.
சரிக்கா.
என்னடா சரிக்கா, சரிக்கா சொல்லுற இன்னும் நீ சாப்பிடலையா? இல்லக்கா சாப்பிட்டேன்.
நீங்க ஒரு வேலை சொன்ன பரவாயில்லை. அடுத்து அடுத்து பல வேலை சொல்லிக்கிட்டே போனா எனக்கு எல்லாம் மறந்துடும்.
குமரா , நீயெல்லாம் படிச்சியா இல்லையா. போன் இருக்குல, போன் போட்டு கடலையை. வேனுல ஏத்துரவன் கிட்ட சொல்லு.
வேலையை முடிச்சுட்டு வர்ரப்போ சோளத்த பார்த்துட்டு வா. இதுல என்ன இருக்கு.
சரிக்கா, இப்படி வெலக்கமா சொன்னா பரவாயில்லை.
டேய் ,வந்தேன்னு வை, போய் சொன்ன வேலையைச் செய். என்று திட்டியவளை.
மீனாட்சி பாட்டி இனியாவிடம் சாப்பிடும் போதும் போன் பேசுவியா? ஏன்டி குமரன திட்டுற.
திட்டல வேலை வாங்குறேன்.” அவன் ரொம்ப அமைதியான பையன் பாட்டி . என்னை விட 2 வருடம் பெரியவன், ஆனாலும் என்னை அக்கானுதான் கூப்பிடுவேன்”. ஆனா சொன்ன வேலையைச் சரியா செய்வான்.
சரி ,சரி நல்ல சாப்பிடு . சாப்பிடும் போது போன் பேசாதே.
நீ வேற பாட்டி வேலை தலைக்கு மேல் இருக்கு. என் தேவேந்திரன் தாத்தா என்னைய நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு போய் இருக்காரு. அதை ஒழுங்கா பார்த்துகனுமுல.
ஏன் இனியா உனக்கு கஷ்டமா இருந்த , இன்னும் ஆள் போட்டு செய்திடு. நீ இப்படி சாப்பிடாமா உடம்ப கெடுத்துக்காத. முடிஞ்சத செய்த, உன்னையும் பார்த்துக்கோ.
நீ வேற பாட்டி. நான் நல்ல தான் இருக்கேன். நம்ம செல்லமா, மதினி மதியம் குடிக்க கம்பு கூல் குடுத்தாங்க . அதான் சாப்பிட லேட் .
இங்கே வா பாட்டி , ஆமாம் உன் புருஷனுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தானா , இல்ல அவருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா. 5 ஹவர்ஸ் இருக்கா.
முடியுல பாட்டி என்னால முடியலா. எல்லா. வேலையும் தாத்தா எப்படி தான் பார்த்துக்கிட்டார்ன்னு.
ஒன்னா , இரண்டா . காலையில எழுந்த அவர் நடத்துன. சிலம்பம் கிளாஸ் போய் பார்த்துட்டு. சிலம்பம் கிளாஸ் பக்கத்துல இருக்குற மாட்டுபண்ணைய , தென்னந்தோப்பு , விவசாய நிலம் , எனக்குனு கட்டி கொடுத்த. ஹாஸ்பிட்டல் இது இல்லாம. நா வேற கடலை , உளுத்து , சோளம் எல்லாம் பிரித்து சுத்தம் பண்ணுற மிஷின வாங்கி போட சொன்னது.
இதை எல்லாத்தையும் பார்த்து, சரி பண்ணி வேலை பார்த்து. கணக்கு எழுதி.
ஆலுங்கல போட்டு பார்த்தாலும் .அவங்க சரியா பண்ணுறாங்கலா,பார்க்கணும். எப்பா, எப்பா இந்த தாத்தா ஒருத்தர் இத்தனை வேலையையும் எப்படி பார்த்தாருனு தெரியுல.
இதை நான் பார்த்த மட்டும் போதாது. இதை மெய்டேன் பண்ணுறதுக்கு ரொம்ப மூளை வேணும் பாட்டி.
நான் டாக்டருக்கு படிக்காம , விவசாயம் படிச்சு இருக்கலாம்.
ஒன்ன உருவாக்கறது கஷ்டம். அதை மெய்ன்டேன் பண்ணுறது அத விட கஷ்டம். என் தாத்தா உருவாக்குனத இன்னும் பெருசா பண்ணனும் பாட்டி.
நல்ல பண்ணுடாம . தன் பேத்தி பேசியதை கேட்ட மீனாட்சிக்கு சந்தோஷம். தன் கணவர் விட்டு சென்ற அனைத்தையும்.இவள் பார்த்து கொள்வாள். என்று நிம்மதி கொண்டார்.
இனியாவுக்கு, குமரனிடம் இருந்து போன் வர. என்ன குமர என்று இனியா கேட்க.
அக்கா ,சுமதிக்கு உடம்பு சரியில்லையாம், மயக்கமா இருக்காம். நீங்க போய் என்னன்னு பார்க்க முடியுமா?
என்ன ஆச்சு சுமதிக்கு?
“நேத்துல இருந்து வாமிட் பண்ணிட்டே இருந்தா. அம்மா சொன்னாங்க மாசமா இருக்குற சில பொண்ணுங்களுக்கு இப்படி தான் வாமிட் நிக்காது. 4 இல்ல 5 மாசத்துல சரியா ஆகிடும்னு சொன்னாங்க . நானும் சரியா ஆகிடும்னு நெனச்சேன். இப்போ ரொம்ப உடம்பு முடியலயாம்.
சரி குமரா நீ வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு வா.
நான் போய் பாக்கறேன் என்று கிளம்பியவளை. மீனாட்சி எங்கடி இவ்வளவு அவசரமா போற? பாட்டி, ” குமரன் பொண்டாட்டி மாசமா இருக்கு உடம்பு முடியலையாம்”.
நான் போய் என்னனு பார்த்து சொல்லுறேன் என்றவள். தனது ரூம் சென்று ஒரு சிறிய பேகை எடுத்து சென்றாள்.
மீனாட்சி,” காரில் போ இனியா” என்று சொல்ல.
காரை எடுத்துக் கொண்டு , குமரனின் வீட்டுக்குச் செல்ல. குமரனின் அம்மா வாசலில் நின்று கொண்டு இருந்தார்.
இவளைப் பார்த்தவுடன், “வாம்மா வா ! ” என்று அழைக்க.
இனியா தான் கொண்டு வந்த சிறிய பேகை தன்னுடன் எடுத்துச் சென்றாள்.
அரை மயக்கத்தில் இருந்தாள் சுமதி.
இனியா, சுமதியின் கன்னத்தில் கை கொண்டு தட்ட தட்ட அவளிடம் அசைவு தெரிய. அவள் கொண்டு வந்த பேகில் இருந்து. ஒரு ஊசியை எடுத்தவள், அதில் மருந்தை ஏற்றி. சுமதிக்கு ஊசி போட்டு ஐந்து நிமிடம் கழித்து. குமரனின் அம்மாவிடம் ஒரு ஆரஞ்சு சூஸ் கொண்டு வாங்க. என்று சொல்லியவள். தண்ணீர் கொண்டு வந்து சுமதியின் முகத்தை துடைத்து விட்டாள்.
மெதுவாக கண்ணைத் திறந்து. பார்த்த சுமதியிடம் என்னாச்சு என்று கேட்க.
சூஸ் எடுத்து வந்தார் குமரனின் அம்மா அதை வாங்கி சுமதிக்கு பருகக் கொடுத்தவள். பருகியதும்.
இனியாவைப் பார்த்த சுமதி ” இரண்டு நாள வாமிட்டுக்கா எதை சாப்பிட்டாலும் வாமிட் வருது. சாப்பிட முடியல” . என்று கூற.
இனியாவோ, ” ஏன்மா ஏதை சாப்பிட்டாலும் வாமிட் வருதுல, ஹாஸ்பிட்டல் போய். ஒரு மாத்திரை போட்டால், வாமிட் நின்னுரும். படிச்ச பொண்ணு தானே நீயு , இது கூடவா தெரியாத.” என்று கேட்க.
சுமதி அவளின் மாமியாரை பார்க்க.
இனியாவுக்குப் புரிந்தது. அவளின் மாமியார் தான் ஹாஸ்பெட்டல் அழைத்துச் சொல்லவில்லை என்று. சரி கிளம்பு ஹாஸ்பிட்டல் போலாம்.
சுமதி, இல்லக்கா என் வீட்டுக்காரர் வந்தவுடனே போறேன். என்று சொல்லியவளை.
குமரன் தான் போன் பண்ணி உன்னைப் பார்க்கச் சொன்னான்.
“நீ கிளம்பு” என்றவள்.
குமரனின் அம்மாவிடம், சுமதி மிகவும் சோர்ந்து இருக்க ஹாஸ்பெட்டல் போய்யிட்டு வரலாம். தேவையானதை எடுத்துக் கொள்ளுமாறு சொல்லியவள்.
சுமதியை எழுப்பி மெதுவாக காரின் பின் சீட்டில் அமர வைத்து.காரை எடுக்க.
சுமதி மாமியாரைப் பார்த்து அத்தை போன மாதம் ஹாஸ்பெட்டல். போன ரிப்போர்ட்டை எடுத்துட்டிங்களா? என்று கேட்க ” எல்லாத்தையும், எடுத்துக்கிட்டேன் மா. என்று சொல்லி காரின் முன் பகுதியில் , இனியாவின் பக்கத்தில் ஏறிக் கொண்டார்.
கார் மிதமான வேகத்தில் சென்றது. எந்த ஹாஸ்பெட்டல் போறோம், என்று சுமதியின் அத்தை இனியாவிடம் கேட்க.
எங்க ஹாஸ்பெட்டல் தான் என்று கூறியவளிடம்.
அவரோ, அவர் ஊர் பக்கத்தில் உள்ள , அவர்கள் எப்பொழுதும். பார்க்கும் ஹாஸ்பெட்டலுக்கு போகச் சொல்ல.
இனியா, தன் தாத்தா கட்டிய திருச்செல்வன் ஹாஸ்பெட்டலுக்கு அழைக்க.
சுமதியும், அவளின் அத்தையும், ” வேண்டாம் மா அது ரொம்ப பெரிய ஹாஸ்பெட்டல் இங்கே பார்க்கலாமே” என்று கூற.
” ஏன் எங்க ஹாஸ்பெட்டலுக்கு நீங்க வரமாட்டிங்கல”? என்று இனியா கேட்க.
அப்படி என்னும் இல்லமா.
நம்ம ஊரில் இருந்து, திருச்செல்வன் ஹாஸ்பெட்டலுக்கு வர 15 கிலோ மீட்டர் ஆகும் . நம்ம ஊரிலே சின்ன சின்ன, ஹாஸ்பெட்டல் இருக்குல அதான்.
இனியா அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம அங்க தான் போறோம் என்றவள்.
காரை திருச்செல்வன் மல்டி ஸ்பெஷல் ஹாஸ்பெட்டல் முன் நிறுத்தினாள்….
error: Content is protected !!