Skip to content
Post Views: 3,829
வாழ்க்கை ஒப்பந்தம் ஆரம்பம்.
தமிழ் நிலாவிடம் காண்ட்ராக்ட் கேர்ள் ப்ரெண்டாக தனது பெற்றோர்களிடம் நடிக்க கேட்பதற்காக தனது அறைக்கு வரச் சொல்கிறான்.
இனி,
Advertisement
‘மே ஐ கமின் சார்’ என நிலா கேட்க,
‘வாங்க நிலா. எனக்கு ஒரு ஹெல்ப். உங்களால முடிஞ்சா ஓகே சொல்லுங்க. இல்லைன்னா பரவால்ல. ஆனா தயவுசெஞ்சு என்னை தப்பா நினைக்காதீங்க’ என தமிழ் சொல்ல,
‘அப்டி என்ன சார் கேக்க போறீங்க’ என்றாள் நிலா.
Advertisement
‘சரி நேரா விசயத்துக்கு வரேன். ஒரு சின்ன ப்ராப்ளம். அத சரிபண்ண நீங்க என்னோட காண்ட்ராக்ட் கேர்ள் ப்ரெண்டா கொஞ்ச நாள் என் பேரண்ட்ஸ் கிட்ட நடிக்கனும். அதுக்கு நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன்’ என்று படபடவென வேகமாய் சொல்லி விட்டு சட்டென்று இரு கைகளையும் தன் கன்னத்தில் வைத்து மறைத்துக் கொள்கிறான்.
Advertisement
சிறிது நேரம் யோசித்த நிலா, ‘சார் நீங்க திடீர்னு கேட்டதால என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேனும். நாளைக்கு பதில் சொல்லவா’ என நிலா சொல்ல,
இதை எதிர்பார்க்காத தமிழ் ஆச்சர்யத்துடன், ‘ கண்டிப்பா நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க’ என்றான்.
‘சரி சார் நான் கிளம்புறேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நிலா கிளம்பினாள்.
Advertisement
‘என்னடா இது கனவா நனவான்னே தெரியல. இந்த கேள்விய யார்கிட்ட கேட்ருந்தாலும் கண்டிப்பா நான் யோசிச்ச மாறிதான் அறைஞ்சிருப்பாங்க. ஒன்னும் புரியல. சரி நம்ம பிரச்சனை தீந்தா ஓகே’ என தனக்குள் பேசிக் கொள்கிறான்.
நிலாவும் அதைப்பற்றியே ஆபீஸிலும் சரி வீட்டுக்கு வந்தும் சரி தீவிரமாக யோசித்தாள்.
‘இதுக்கு ஓகே சொன்னா தமிழ் சார் என்னை தப்பா நினைப்பாரோ. அவரு என்ன நினைச்சா என்ன. நமக்கு இப்ப பணம் தான் ரொம்ப முக்கியம். அதுவுமில்லாம அவரே தான கேட்டாரு. பாத்துக்கலாம்’ என ஒரு முடிவு செய்து விட்டு உறங்க சென்றாள் நிலா.
அடுத்த நாள் நிலா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் சீக்கிரமாய் ஆபீஸ்க்கு கிளம்பி வந்தான் தமிழ்.
ஆபீஸ்க்கு வந்ததும் நந்தினியிடம் ‘நிலா வந்தாச்சா’ என தமிழ் கேட்க,
‘ம் வந்தாச்சு சார் கூப்டவா’ என்றாள் நந்தினி.
‘இல்ல பரவால்ல நான் கூப்டுக்கறேன் தேங்க்ஸ்’ என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று எப்டி நிலாவை கூப்டுவது என்று தமிழ் யோசித்துக் கொண்டிருக்க,
‘மே ஐ கமின் சார்’ என நிலா கேட்க,
‘எஸ் கமின்’ என்றான் தமிழ்.
‘சார் இந்த பைல்ஸை செக் பண்ணிட்டு சைன் பண்ணிருங்க . அப்புறம் நீங்க நேத்து கேட்டதுக்கு எனக்கு ஓகே. உங்களுக்கு எப்டி ஏதோ ப்ராப்ளமோ அது மாதிரி எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதான்’ என்றாள் நிலா.
‘ரொம்ப தேங்க்ஸ் நிலா. காண்ட்ராக்ட் ரெடி பண்ணிட்டு உங்கள கூப்டறேன். அப்புறம் ஒரு நிமிஷம்’ என்று செக் எடுத்து ஐந்து லட்சத்துக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தான் தமிழ்.
‘சாரி சார் எனக்கு ரெண்டு லட்சம் மட்டும் போதும் மீதி எங்கிட்ட இருக்கு’ என அந்த செக்கை நிலா திருப்பிக் கொடுக்க,
‘பரவால்ல நிலா வச்சுக்குங்க’ என மீண்டும் தமிழ் நிலாவிடம் செக்கை நீட்ட,
‘ப்ளீஸ் சார் தயவு செஞ்சு எனக்கு ரெண்டு லட்சம் மட்டும் குடுங்க போதும்’ என்றாள் நிலா.
‘சரி ஓகே’ என்று பழைய செக்கை கிழித்துவிட்டு இரண்டு லட்சத்துக்கு புது செக் போட்டு நிலாவிடம் குடுத்தான் தமிழ்.
‘ரொம்ப தேங்க்ஸ். இந்த பணம் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாது. சரி சார் நீங்க காண்ட்ராக்ட் ரெடி பண்ணிட்டு கூப்டுங்க’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் நிலா.
‘என்ன பொண்ணுடா இவ. அஞ்சு லட்சம் குடுத்தா ரெண்டு லட்சம் போதுன்னு சொல்றா. இவள புரிஞ்சக்கவே முடியலயே. எப்டியோ நம்ம பிரச்சனை இப்பத்திக்கு சால்வாயிடுச்சு’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் தமிழ்.
காண்ட்ராக்ட் பேப்பர் ரெடி பண்ணிவிட்டு நிலாவை போன் பண்ணி வரச் சொன்னான் தமிழ்.
‘நிலா இந்தாங்க காண்ட்ராக்ட் பேப்பர். நல்லா படிச்சிட்டு அதுல உங்களுக்கு எதுவும் சேக்கனும்னாலோ நீக்கனும்னாலோ சொல்லுங்க பண்ணிக்கலாம்’ என தமிழ் சொல்ல,
அந்த பேப்பரை வாங்கி எதையும் படிக்காமலேயே கையெழுத்தை போட்டு விட்டு, ‘சார் பணத்தேவைக்காக தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். நீங்களும் பணத்தை குடுத்து என் தேவைய பூர்த்தி செஞ்சிட்டீங்க. இப்ப நான் உங்களுக்கு திருப்பி செய்ற நேரம். நான் உங்கள முழுசா நம்பறேன்’ என்று சொல்லி அந்த பேப்பரை தமிழிடம் குடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் நிலா.
அடுத்த நாள் நிலாவை தன் அறைக்கு அழைத்தான் தமிழ்.
‘நிலா எங்க அம்மாக்காக தான் இந்த நாடகமே. அவங்கள நம்ப வைக்கறது ரொம்ப கஷ்டம். அதனால நான் என்ன பத்தியும் நீங்க உங்களை பத்தியும் பரிமாறிகிட்டா கொஞ்சம் ஈசியா இருக்கும்’ என்று தமிழ் சொல்ல,
‘ஓகே சார்’ என தன்னைப் பற்றி தமிழிடம் நிலா சொல்ல, தமிழும் தன்னைப் பற்றி நிலாவிடம் பரிமாறிக் கொள்கிறான்.
‘நிலா என்னடி நடக்குது. தமிழ் சார் அடிக்கடி உன்ன கேக்கறாரு, வர சொல்லி பேசறாரு’ என நந்தினி நிலாவிடம் நக்கலாக கேட்க,
‘அட நீ வேறப்பா, இது பெரியகத. அப்புறம் கண்டிப்பா உனக்கு விலாவாரியா சொல்றேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நழுவினாள் நிலா.
இரவு முழுக்க தான் செய்தது சரியா, இல்லை கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ. தமிழ் சார் நம்மள பத்தி என்ன நினைச்சிருப்பாரு. காசுக்காக இந்த பொண்ணு என்ன வேணா செய்யும் போல அப்டின்னு தப்பா நினச்சிருப்பாரா. எது எப்படியோ எல்லாம் முடிஞ்சப் பிறகு இதபத்தி யோசிக்க கூடாது. யாரு என்ன நினைச்சா என்ன நம்மள பத்தி நமக்கு தெரியும். அத யாருக்கும் ப்ரூப் பண்ண வேண்டிய அவசியமில்ல என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு உறங்கினாள் நிலா.
அதே போல் தான் தமிழும் தான் செய்தது சரியா, இல்லை கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ, இந்த பிரச்சனைய வேற மாதிரி டீல் பண்ணி இருக்கலாமோ. தேவை இல்லாம நிலாவ இதுல.இழுத்து விட்டமோ. அந்த பொண்ணு நம்மள தப்பா நினைச்சிருக்குமோ. சரி அந்த பொண்ணுக்கு நாம பணம் குடுத்து உதவி தான பண்ணிருக்கோம். எல்லாம் முடிஞ்சுருச்சு. இனிமே இந்த ப்ளான எப்டி எக்சிக்யூட் பண்ணி நாம நினைச்சபடி எல்லாத்தையும் முடிக்கறதுன்னு மட்டும் யோசிப்போம் என்று தனக்குத் தானே யோசித்துக் கொண்டே உறங்கிப் போனான்.
அடுத்த நாள் காலை தமிழ் கிளம்பி கீழே வர, ‘என்னங்க இன்னிக்கு புதன் கிழம உங்களுக்கு ஞாபகம் இருக்கா’ என அவனது அம்மா அவனது அப்பாவிடம் குத்தலாக கேட்க,
அதற்கு தமிழ் டைனிங் டேபிளில் உள்ள டிபனை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே, ‘ம் ஞாபகம் இருக்கு டாடி. அதெப்படி மறப்பேன். என் ராஜிக்கு அவளோட மருமகள இன்ட்ரடியூஸ் பண்ற நாள். எனக்கு புடிச்சா கண்டிப்பா என் ராஜிக்கும் பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும். அப்டி தான டாடி. ஈவ்னிங் கூட்டிட்டு வரேன். என்ன பேசனுமோ பேசிக்க சொல்லுங்க டாடி’ என்று நக்கலாக தன் அப்பாவிடம் சொல்ல,
‘உங்க ரெண்டு பேருக்கும் நான் தான் கிடச்சனா. அந்த பொண்ணு வரட்டும் அவள வச்சே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்றேன். சரி அந்த பொண்ணு பேரு என்ன. அவ யாரு, எங்க இருக்கா, அப்பா, அம்மா யாரு, என்ன பண்றாங்க’ என்று தமிழின் அப்பா வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக, அவனது அம்மாவும் அந்த கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்த வண்ணம் அவனை பார்க்கிறார்.
‘டாடி வெய்ட் பண்ணுங்க. அவ பேரு நிலா. அவளுக்கு அப்பா இல்ல அம்மாவும், தம்பியும் தான். அம்மா ஒரு ஹோட்டல்ல வேல பாக்குறாங்க. தம்பி ட்வள்த் படிக்கிறான். அவங்க அப்பா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கார் ஆக்சிடண்ட்ல இறந்து போய்டாரு. இப்ப என்னோட பி.ஏ. வா நம்ம ஆபீஸ்ல வேலை பாக்குறா. போதுமா மீதிய அந்த பொண்ணு வந்ததும் அவகிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கங்க. இப்ப நான் கிளம்புறேன். என்னை ஆளவிடுங்க’ என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான்
‘என்னங்க நம்ம தமிழா இது. இவன் லவ் பண்றான்றத என்னால நம்பவே முடியலங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல எத்தன கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அப்ப வராத லவ் இப்ப எப்டி இவனுக்கு வந்துச்சு. அந்த பொண்ணு என்ன அவ்ளோ பேரழகியோ. அத நானும் பாக்க தான போறேன். என் பையன எந்தளவுக்கு மயக்கி வச்சிருக்கா’ என தமிழின் அம்மா புலம்ப,
‘என்னாலையும் தமிழ் லவ் பண்றான்றத முழுசா நம்பமுடியல ராஜி. பரவால்ல இவனையும் ஒரு பொண்ணு லவ் பண்ண வச்சிருக்கு. அவன் சொன்னத வச்சு பாத்தா அந்த பொண்ணு மிடில் கிளாஸ் பேமிலி மாதிரி இருக்கு. அப்பா இல்லாத குடும்பத்த ஒரு பொண்ணா இருந்து எடுத்து நடத்திக் கிட்டிருக்கு. ம் சம்திங் இண்ட்ரஸ்டிங். பாப்போம் என்ன தான் நடக்குதுன்னு’ என்றார் தமிழின் அப்பா.
ஆபீஸ்க்கு வந்ததும் வராததுமாய் நிலாவை தன் அறைக்கு வரச் சொல்கிறான் தமிழ்.
‘நிலா எல்லாம் ஓகே தான. அம்மா காலைலயே பஞ்சாயத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா கேள்வியா கேட்டு கொன்னு எடுத்துட்டாரு. எதோ சொல்லி சமாளிச்சிட்டு வரதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிருச்சு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும்ல’ என்று தமிழ் கேட்க,
‘சார் பதட்டபடாதீங்க. நான் நல்லா பிரிப்பேர் பண்ணிருக்கேன். எப்படியாவது சமாளிச்சிடலாம். ஆனா ஒன்னு உங்க பேரண்ட்ஸ ஏமாத்தறமேன்னு தான் கொஞ்சம் கில்டியா இருக்கு’ என நிலா கூற,
‘வேற வழி எனக்கு தெரியல நிலா. அத பத்தி யோசிக்க இப்ப டைமும் நம்மகிட்ட இல்ல. கவலைப்படாதீங்க நான் ஏன் இப்டி பண்ணேன்ற உண்மை அவங்களுக்கு தெரிய வரும் போது அவங்க நம்மள மன்னிச்சுடுவாங்க. சரி ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும் ரெடியா இருங்க. நான் போன் பண்றேன்’ என்று தமிழ் சொல்ல,
‘ம் ஓகே சார்’ என்று சொல்லி தன் வேலையை பார்க்க சென்றாள் நிலா.
தமிழின் பெற்றோரிடம் தமிழ் நிலாவின் நாடகம் பலிக்குமா?
ராஜி நிலாவை ஏற்றுக் கொள்வாரா?
தொடரும்…
‘
error: Content is protected !!