நீ எனக்கு தந்த காதல் – 3.
நிலா மருமகளாய் தமிழின் வீட்டில் எடுத்து வைக்கும் முதல் அடி.
தமிழ் நிலாவை ஆபீஸ் முடிந்ததும் தன் வீட்டிற்கு கூட்டி வருகிறான்.
இனி,
Advertisement
‘நிலா ஓகே தான. தயவு செஞ்சு எப்டியாவது என்ன காப்பாத்திருங்க ப்ளீஸ்’ என்று தமிழ் கூற,
Advertisement
‘ம் பாத்துக்கலாம் வாங்க’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
Advertisement
‘வாங்க உள்ள.போலாம். ராஜி, அப்பா’ என தமிழ் கூப்பிட இருவரும் வந்தார்கள்.
Advertisement
‘ராஜி, அப்பா இது தான் நான் லவ் பண்ற பொண்ணு. நிலா இவங்க தான் என் அப்பா, அம்மா. சரி பேசிக் கிட்டு இருங்க. நான் வந்தறேன்’ என்று சொல்லி நழுவினான் தமிழ்.
சிறிது நேர அமைதிக்குப் பின், ‘நிலா வாம்மா இங்க வந்து உட்காரு’ என்று தமிழின் அப்பா கூப்பிட நிலா வந்து அவர்கள் இருவர் அருகிலும் உட்கார தமிழின் அம்மா அவளிடமிருந்து கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தார்.
‘என்னம்மா சாப்பட்ற காபி, டீ’ என தமிழ் அப்பா கேட்க,
‘பரவால்ல அங்கிள் இப்ப தான் ஆபீஸ்ல சாப்ட்டோம்’ என்றாள் நிலா.
‘ஆமா என் பையன எப்ப எப்டி உனக்கு தெரியும்’ என தமிழ் அம்மா தனது இன்வஸ்டிகேஷனை ஆரம்பிக்க,
‘ஆறு மாசமா தான் ஆன்டி அவர எனக்கு தெரியும். அவரு ஆபீஸ்ல பி.ஏ. வா சேந்ததுக்கு பிறகு தான். அவரு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவருக்கு நான் வொர்க்ல சின்சியறா இருக்கனால பிடிச்சு போச்சு’ என நிலா தாங்கள் பேசியபடியே அனைத்தையும் சொல்லி முடித்தாள்,.
‘சரி யாரு முதல்ல லவ்வ சொன்னீங்க’ என தமிழ் அம்மா மீண்டும் கேட்க, அதற்கு நிலா பதில் சொல்வதற்குள் அங்கு வந்த தமிழ்,
‘சரி நிலா லேட்டாயிருச்சு வாங்க உங்கள வீட்ல விட்டறேன்’ என்று சொல்ல,
‘ஆமா தமிழ் இந்தா கிளம்பிட்டேன். ஆன்டி, அங்கிள் சாரி லேட்டாயிருச்சு இன்னொரு நாள் நான் வரேன். நீங்க எங்கிட்ட என்னவெல்லாம் தெரிஞ்சுக்கனுமோ கேளுங்க தாராளமா பதில் சொல்றேன்’ என்று நிலா கிளம்ப,
‘இருடா என்ன அவசரம் . எப்டியும் நீ தான கூட்டிட்டு போகபோற அப்புறம் ஏன் அவசரப்படற’ என தமிழ் அம்மா கூற,
‘அது இல்ல ராஜி வந்து’ என தமிழ் இழுக்க அவன் அம்மா விடுவதாக இல்லை.
‘நிலா இங்க வா. உனக்கு சமைக்க தெரியுமா. வீட்ல அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவியா. அப்புறம் நீங்க வெஜ்ஜா நான் வெஜ்ஜா’ என கேள்விகளை அடுக்கிக் கொண்டே நிலாவை சமையலறைக்குள் கூட்டிக் கொண்டு போக தமிழோ நிலா எப்படி தனது அம்மாவை சமாளிக்க போகிறாளோ என பயந்து கொண்டிருக்க,
‘ டேய் பொண்ணு அழகா இருக்கா. பாத்தா அமைதியான அறிவான பொண்ணு மாதிரி தெரியுது. அதனால தான் உனக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்’ என தமிழ் அப்பா சொல்ல,
‘ ம் ஆமா டாடி’ என பதில் சொன்னான் தமிழ்.
நிலா காபி போட்டு எடுத்துக் கொண்டு வர தமிழின் அம்மாவும் கூட வந்தார்.
‘அங்கிள் இந்தாங்க, தமிழ் எடுத்துக்குங்க, ஆன்டி இது உங்களுக்கு. எங்க வீட்ல போடற மாதிரி போட்ருக்கேன். எதுவும் குறை இருந்தா மன்னிச்சிருங்க. சொன்னா நான் மாத்திக்கறேன்’ என நிலா சொல்ல,
‘காபி பெர்பெக்டா இருக்கும்மா நிலா’ என்றார் தமிழ் அப்பா.
‘ம் நல்லா தான் போட்ருக்க. சரி உங்க வீட்ல சொல்லிட்டியா. என்ன சொன்னாங்க’ என தமிழ் அம்மா கேட்க,
‘இல்ல ஆன்டி இன்னும் சொல்லல. அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. நம்ம தகுதிக்கு மேல ஆசைப்படக் கூடாதுன்னு சொல்லுவாங்க. முதல்ல எனக்கும் தயக்கமா தான் இருந்துச்சு. அப்புறம் தமிழ் தான் அவரு எவ்வளவு உண்மையா காதலிக்கிறாருன்னும் எங்க அம்மா கிட்ட வந்து சொல்லி புரிய வைக்கிறேன்னும் சொன்னாரு. அதுக்கு பிறகு தான் எனக்கும் தோனுச்சு’ என நிலா தாங்கள் பேசியவாறே ஒப்பிக்க,
‘அப்ப எப்ப கல்யாணம் பண்றதா இருக்கீங்க’ என விடாமல் தமிழ் அம்மா கேட்க,
‘ராஜி நிலா தம்பி படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போகனும். நிலா இப்ப தான் வேலைக்கு வந்துருக்காங்க. கொஞ்சம் நாள் வேலை பாக்கனும். எனக்கும் கொஞ்சம் டைம் தேவைபபடுது. அதனால இப்பத்திக்கு கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணிருக்கோம். நாங்க லவ் பண்ற விசயம் கூட ஆபீஸ்லயும் சரி வெளியிலையும் சரி யாருக்கும் தெரியாது’ என்று மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் சொல்லி முடித்தான் தமிழ்.
‘என்னவோ பண்ணிக்கங்க ஆனா வாரத்துல ஒரு நாள் கண்டிப்பா நிலா இங்க வரனும்’ என தமிழ் அப்பா சொல்ல
‘டாடி அது வந்து அவங்க வீட்ல’ என தமிழ் இழுக்க,
‘ம் இன்னிக்கு என்ன சொல்லிட்டு வந்தாளோ அதையே சொல்லிட்டு வர சொல்லு’ என தமிழ் அம்மா கூற,
‘பரவால்ல தமிழ் வீட்ல நான் சமாளிச்சுக்கறேன். கண்டிப்பா வாரத்துல ஒரு நாள் நான் இங்க வந்தறேன். சரி அபபோ நான் கிளம்பட்டும்மா’ என்றாள் நிலா.
‘சரிம்மா நிலா போயிட்டு வா’ என தமிழ் அப்பா சொல்ல தமிழின் அம்மா, அப்பா இருவர் கால்களிலும் விழ இருவரும் ஆசிர்வாதம் செய்கின்றனர்,
தமிழோ இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என பார்த்துக் கொண்டிருக்க,
‘தமிழ் பாத்து பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வா’ என்று தமிழ் அம்மா சொல்ல,
‘சரி ராஜி’ என்று சொல்லி விட்டு நிலாவுடன் அங்கிருந்து கிளம்பினான் தமிழ்.
‘ராஜி நிலா அழகா, பணிவான பொண்ணா இருக்கா இல்ல. எனக்கு அவள ரொம்ப புடிச்சிருக்கு’ என தமிழ் அப்பா கேட்க,
‘இல்லங்க எனக்கென்னவோ ரெண்டு பேரும் லவ் பண்ற மாதிரியே தெரியல. ஒருத்தருக்கொருத்தர் மரியாதையா பேசிக்கிறாங்க தவிர அன்பா பேசிக்கல. என்னால இன்னும் நம்ம தமிழ் லவ் பண்றானானு டவுட்டாவே இருக்கு. ஆனா பொண்ணு ஓகே நல்லபொண்ணு மாதிரி தான் தெரியுது.சரி பாக்கலாம்’ என தமிழ் அம்மா சொல்ல,
‘எப்டியும் தமிழுக்கு எது இஷ்டமோ அதான் நீ செய்ய போற. அதனால கண்டிப்பா உனக்கும் அந்த பொண்ண புடிச்சிருக்கும் எனக்கு தெரியும். சரி நான் போய் நியூஸ் பாக்குறேன்’ என சொல்லி தமிழ் அப்பா செல்ல இரவு நேர டிபன் ரெடி பண்ண தமிழ் அம்மாவும் அங்கிருந்து செல்கின்றார்.
தமிழும் நிலாவும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் செல்ல பிறகு, ‘உங்க அப்பா, அம்மாவ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார். நான் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணுனு தெரிஞ்சும் கூட என்னை ஏத்துக்கிட்டு எங்கிட்ட அன்பா நடந்துகிட்டாங்க. எனக்கு தான் அவங்கள ஏமாத்துறோம்னு வருத்தமா இருக்கு’ என நிலா சொல்ல,
‘நீங்க வேற எப்படா அங்கிருந்து கிளம்புவோம்னு ஆயிடுச்சு எனக்கு. இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்திருந்தா நானே உலறி கொட்டிருப்பேன். எங்க அப்பா கூட நம்மள நம்பிருப்பாரு ஆனா ராஜி கண்டிப்பா நம்பிருக்க மாட்டா. எனிவே ரொம்ப தேங்க்ஸ் நிலா’ என தமிழ் சொல்ல,
‘பரவால்ல சார். எனக்கு ஒரு டவுட். கேக்கலாமா’ என நிலா கேட்க,
‘எதுக்கு இந்த நாடகம்ன்னு கேட்க போறீங்க அதானே. நேரம் வரும் போது கண்டிப்பா நானே உங்களுக்கு சொல்றேன்’ என்றான் தமிழ்.
‘அதில்ல சார் உங்கம்மாவ நீங்க ஏன் பேர் சொல்லி கூப்டறீங்க’ என நிலா கேட்க,
‘அதுவா ராஜியோட அப்பா இறந்து கொஞ்ச நாள்ல நான் பிறந்தனாம். அதனால ராஜிக்கு அவங்க அப்பாவே தனக்கு பையனா பிறந்திருக்காருன்னு நம்புறா. சின்ன வயசுல நான் ராஜின்னு கூப்டும் போது அவங்க அப்பா கூப்டற மாதிரியே இருக்குன்னு அப்டீயே விட்டுட்டாங்க. இப்ப வரைக்கும் அது அப்டியே கண்டனியூ ஆகுது’ என்று தமிழ் கதையை சொல்லி முடிக்க,
‘உங்க அம்மா ரொம்ப செண்டிமெண்டா அட்டேச்சாவாங்க போல. உங்க அப்பா எதார்த்தமா பழகுறாரு. அவங்க ரெண்டு பேரயும் இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் எந்த சூழ்நிலையிலயும் நீங்க செஞ்ச உதவிய நான் மறக்க மாட்டேன்’ என நிலா சொல்ல,
‘அப்புறம் ராஜி எதாவது மனசு கஷ்டப்படற மாதிரி பேசியிருந்தா அது எதுவும் மனசுல வச்சுக்காதீங்க ப்ளீஸ்’ என தமிழ் கேட்க,
‘ச்சேச்சே நீங்க வேற ஒரு அம்மாவா அவங்க இடத்துல யோசிச்சு பாத்தா நாமளும் இப்டி தான் ஏன் இன்னும் கொஞ்சம் ஹார்ஷாவே நடந்திருப்போம். அத நான் பெருசாவே எடுத்துக்கல. சரி எங்க வீடு வந்துருச்சு இங்கயே நிறுத்தீருங்க நான் இறங்கிக்கிறேன் ‘ என்று நிலா சொல்ல காரை நிறுத்தி அவளை இறக்கி விட்டான் தமிழ்.
‘சரி பாத்து போய்டு வாங்க’ என சொல்லி வீட்டிற்குள் நிலா செல்ல தமிழும் அங்கிருந்து கிளம்பினான்.
அடுத்த நாள் ஆபீஸில் தமிழ் வேலை பார்த்துக் கொண்டிருக்க கவினிடமிருந்து தமிழுக்கு போன் வந்தது.
‘டேய் கவின் எப்டிடா இருக்க எப்ப ஊருக்கு வற்ர’ என தமிழ் கேட்க,
‘நல்லா இருக்கேன்டா. நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க. அப்புறம் சார் லவ்லாம் பண்றீங்க போல. அப்ப உன் கல்யாணத்துக்கு வந்து தான ஆகனும்’ என கவின் கேட்க,
‘அதுக்குள்ள யாருடா உனக்கு சொன்னது. நீ ஏன்டா பேச மாட்ட. உன்னால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா’ என்றான் தமிழ்.
‘அடப்பாவி அப்ப நீ லவ் பண்றேன்னு சொன்னது உண்மை இல்லயா. நான் கூட உண்மைன்னு நம்பிட்டேன். ஆனா யாழினி உன்ன பத்தி கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கா. நீ அவ்வளவு சீக்கிரம் யாரயும் லவ் பண்ண மாட்டேன்னு அடிச்சு சொன்னா’ என கவின் சொல்ல,
‘அப்ப யாழினி தான் உனக்கு இத சொன்னாளா. அவள நான் பேசிக்கறேன்’ என்றான் தமிழ்.
‘அது இருக்கட்டும் இந்த விசயத்துல ஏன்டா பொய் சொன்ன’ என்று கவின் கேட்க,
‘ஏன்டா கேக்க மாட்ட உன்னால தான்டா. எனக்கும் யாழினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எங்க ரெண்டு பேர் வீட்லயும் முடிவு பண்ணிட்டாங்க. அத எப்டி நிறுத்தருதுன்னு தெரியல. அதான் இப்டி ஒரு நாடகம் நடத்த வேண்டியதா போச்சு’ என்றான் தமிழ்.
‘சாரிடா, சரி உனக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸே அதிகம் இல்ல. அப்புறம் யாரு உன்னோட லவ்வரா நடிக்க ஒத்துக்க வச்ச’ என கவின் கேட்க,
‘அத ஏன்டா கேக்குற அது பெரியகத. என் ஆபீஸ்ல வேல பாக்குற பி. ஏ. கிட்ட தான் கேட்டேன். அவங்களுக்கு ஏதோ ரொம்ப அவசரமா பணம் தேவப்பட்டுதால அவங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க’ என தமிழ் கூற,
‘சரி அம்மா, அப்பா நம்பிட்டாங்களா’ என்றான் கவின்.
‘தெரியல பாப்போம்’ என தமிழ் கூற,
‘சரிடா நான் இதுக்கு ஒரு முடிவு கட்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ ப்ளீஸ்’ என கவின் சொல்ல,
‘ம் ஓகே டேக் கேர் பாய்’ என்று சொல்லி தமிழ் போனை கட் செய்தான்.
கவின் எப்படி தமிழ் பிரச்சனைக்கு காரணமானான்?
தமிழ், நிலா இடையே காதல் மலறுமா?
தொடரும்…
