Skip to content
Post Views: 7,406
மதுவினும் இனியாள்- 34
அத்தியாயம் 34.
சரியாக பதினைந்து நாட்களில் தஞ்சாவூரின் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் வாசலில், வரவேற்பில் நின்று சந்தனம் குங்குமம் கொடுத்து கொண்டிருந்த பெண்களில், ரோஜா பூக்களை பிளேட்டில் வைத்து கொடுத்து கொண்டிருந்த பெண்ணிடம் “மிஸ். பூ” என்று பூவை கேட்டான் சத்யன்.
அதற்கு அந்த பெண் “எஸ். நான்தான் பூ. பூங்குழலி” என்றாள். சிரிப்பு வந்துவிட்டது சத்யனுக்கு.
Advertisement
“ஓ உங்க பேரும் பூதானா. பாக்க பூ மாதிரி அழகாத்தான் இருக்கீங்க” என்று ரோஜா நிற சேலையில் இருந்தவளை ரசனையாக பார்த்தான் சத்யன்.
“ஹலோ கிண்டலா. இதெல்லாம் என்னட்ட வச்சுக்காதீங்க. எங்கண்ணன் வர்றாங்க. அவங்க பாத்தாங்கன்னா பிரச்சனை. ஒழுங்கா இடத்தை காலி பண்ணுங்க” என்று அவள் கூறியதும் எவன் அவன் என்று தெனாவட்டாக திரும்பி பார்த்தால், வந்தது பார்த்தி.
ஐயையோ இவன் தங்கச்சியா என்று பயந்து போனவன் பூங்குழலியிடம் அவசரமாக “ஏங்க. நா உங்கள பாக்கல, பேசல, உங்க அழக ரசிக்கல, இதோட என்ன மறந்துடுங்க” என்றவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டான்.
Advertisement
அதுவரை அவனை எவனோ ஒருவன் என்ற ரீதியில் பார்த்தவள் அவன் இறுதியாக சொன்ன டையலாக்கை கேட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அதை பார்க்கத்தான் அவன் அங்கு இல்லை. அன்று முழுக்க பூங்குழலி அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் பக்கமே அதற்கு பிறகு திரும்பவில்லை சத்யன்.
Advertisement
அன்று ஹேரி ரிச்சர்ட் – மதுமிதா திருமண வைபவம்.
மேடையில் சத்யனும் பார்த்தியும் கஷ்ட்டப்பட்டு கட்டி, பெல்ட் மாட்டி விட்டிருந்த வேட்டி சட்டையில் , நெற்றியில் சந்தனமும், கண்ணில் ஒளியும் திகழ மதுவின் வரவை எதிர் பார்த்து கொண்டிருந்தான் ஹேரி.
ஆங்கிலம் தெரிந்த ஐயர் மந்திரம் சொல்ல அவர் சொல்வதை கேட்டு தடுமாற்றமில்லாமல் அழகாக சடங்குகளை செய்து கொண்டிருந்தான் ஹேரி.
Advertisement
ஜானும் வேட்டி கட்டி அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். கீழே முதல் வரிசையில் ஹேரியின் ஸ்டெப் பாதர் வில்லியம் அமர்ந்திருந்தார். மது பிடிவாதமாக சொல்லிவிட்டாள் அவரை அழைக்க வேண்டுமென்று. ஒலிவியாவும் வந்திருக்கிறாள். மதுவின் ரூமில் இருக்கிறாள்.
ஹேரியை அதிக நேரம் காக்க வைக்காமல் மதுமிதா ரூமை விட்டு வெளியே வந்தாள். அடர்ந்த சிகப்பு வண்ணத்தில் பட்டு புடவை. ஒரிஜினல் தங்க ஜரிகை வேய்ந்தது. உடல் முழுவதும் தங்க புட்டாக்கள்.
தங்க கலரில் முட்டி வரையிலான கை வைத்து ப்ளௌஸ். சிகப்பு கலரில் ஸ்டோனும், த்ரெட்டும் வைத்து ஆரி ஒர்க் செய்திருந்தனர்.தலையில் நெத்திச்சுட்டி முதல் மதுவின் முடி நீளத்திற்கு தங்கத்திலேயே பூ வில்லைகள், கழுத்தில் நான்கு அடுக்கு மாலைகள், இடுப்பில் ஒட்டியாணம் அனைத்தும் வாங்கி கொடுத்திருந்தான் ஹேரி. இன்று மது அணிந்திருந்த நகைகள் புடவை ஒப்பனை அனைத்தும் சென்னையில் உள்ள ஸ்பெஷல் டிசைனர் மேக்கப் ஆர்ட்டிஸ்டை கொண்டு செய்திருந்தான் ஹேரி.
கால் கொலுசு மெட்டி இரண்டும் வெள்ளியில்தான் அணிய வேண்டும் என்று மீனாட்சி கூறிவிட்டார்.
இவைகளை அணிந்து தேவலோக கன்னியை போல் வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் ஹேரி. ஐயர்தான் “பொண்ணு எங்கேயும் போய்ட மாட்டா மாப்பிள்ளை. இங்கதான் வர்றா. நீங்க சடங்குகளை கவனிங்க” என்றார். அவரை யாரடா நீ மானுடா என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தான் ஹேரி.
அதற்குள் ஜனனியும், சிவநேசன் மனைவி ஜானகியும் , அழைத்து வர அவன் அருகில் வந்து அமர்ந்தாள் மதுமிதா. அவளிடம் குனிந்து “யு லுக் ஸ்டன்னிங் பேபி” என்றான்.
“நீயும் வேட்டி சட்டையில் அழகா இருக்க கண்ணா” என்றாள்
திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மதுவின் அழகை பார்ப்பதா, இல்லை ஹேரியின் கம்பீரத்தையும் நீல கண்களையும் ரசிப்பதா என்று புரியவில்லை. இருவரையும் சுற்றி மதுவின் சுற்றங்களுடன் ஜான், பார்த்தி, சத்யன், ஜனனி, ஊர்வசி நின்றிருந்தனர். ஒலிவியாவின் கையில் நாத்தி விளக்கை கொடுத்து பின்புறம் நிப்பாட்டியிருந்தனர். அவளும் மது எடுத்து கொடுத்த பிரவுன் கலர் ஹாப் சேரி அணிந்து விளக்கை பிடித்து பெருமையாக நின்றிருந்தாள். தோழியாக பழகும் மதுவை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கள்ளம் கபடமில்லாமல் அண்ணி என்று மழலை தமிழில் கூறுபவளை மதுவுக்கும் பிடித்துவிட்டது.
செல்லத்துரையின் பங்காளிகள் சில பேர் எப்படி நீ பெண்ணை வெளிநாட்டவனுக்கு கொடுக்கலாம் என்று அவரிடம் சண்டை போட்டனர்.
“சரி நீங்கல்லாம் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்க. ஆனா வர மாப்பிள்ளைதான் என் பொண்ணு பேர்ல சொத்து எழுதி குடுத்து கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அவர் சொன்னதும் அனைவரும் பறந்து விட்டனர்.
பார்த்தியின் குடும்பத்தார்கள், சத்யனின் குடும்பத்தார்கள் கீழே அமர்ந்திருந்தனர். பூங்குழலி கீழே அமர்ந்து சத்யனைதான் கவனித்து கொண்டிருந்தாள். இது எதையும் கவனிக்காமல் திருமண ஜோடி தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தனர். இருவரின் கனவும் பூர்த்தியாக போகும் தருணம்.
ஹேரிக்கு சத்யன் நிறைய தமிழ் சினிமாக்களில் வரும் திருமண சீனை போட்டு காட்டியிருந்தான். அதனால் அவனுக்கு ஒன்றும் புதிதாக இல்லாமல் தெளிவாக எல்லா சடங்குகளையும் செய்தான்.
ஹேரியின் கையில் மாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர். கடவுளை வணங்கி கட்ட சொன்னார் மதுவின் கழுத்தில். கையில் மாங்கல்யத்தை வைத்து கொண்டு மதுவின் கண்களை பார்த்தான் ஹேரி. அவளும் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள். கண்ணோடு கண் கலக்க தாலியை அவள் கழுத்தில் கட்டினான் ஹேரி. பெற்றவர்கள், சுற்றங்கள், பந்துக்கள், கடவுள்கள்,மற்றும் தேவர்களின் ஆசியுடன் மாங்கல்யம் அணிவித்து மதுவை தனது மனையாளாக மாற்றி கொண்டான் ஹேரி. குங்குமத்தை அவள் நெற்றி வகிட்டில் வைக்க சொன்னபடி வைத்தான். பிறகு இருவரையும் எழுந்து அக்னியை சுற்றிவர செய்து அம்மி மீது மதுவின் காலை வைத்து மெட்டியை அணிந்து விட சொன்னார். சலங்கை வைத்த மெட்டியை அவள் முயல்குட்டி பாதங்களை மென்மையாக பிடித்தபடி அணிவித்தான்.
பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ள சொன்னார். அப்பத்தா மதுவின் பெற்றோர்கள் தாய்மாமா பெரியோர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
ஜான் ஹேரியை கட்டி அணைத்து “சாதிச்சிட்ட மேட் நீ” என்றான். பிறகு பார்த்தி சத்யன் ஜான் மூவரையும் நிற்க வைத்து மது மட்டும் அவர்கள் கால்களில் விழுந்தாள். மூவருக்கும் கண்கள் கலங்கி விட்டது.
பார்த்திதான் ஹேரியிடம் கேட்டான்.
“எப்படி எல்லா சடங்கையும் தெரிஞ்ச மாதிரியே செஞ்சிங்க”
ஹேரி “என் தமிழ் டீச்சருக்குத்தான் நன்றி சொல்லணும்” எனும்போதே , சத்யன் சும்மா இல்லாமல் “டீச்சர் நாங்களாச்சே” என்று காலரை தூக்கி விட்டு கொண்டான்.
எல்லோரும் அமைதியாகி விட்டதை பார்த்த சத்யன் பிறகுதான் தான் சொன்னதை யோசித்தான். மதுவையும் பார்த்தியையும்தான் பார்த்தான். இருவரும் கண்களாலேயே அவனை எரித்து கொண்டிருந்தனர். தானாகவே உண்மையை சொல்லி மாட்டிக்கொண்டவனை பார்த்து ஜான்தான் சிரித்து கொண்டிருந்தான். சத்யன் அதற்கு பிறகு ஏன் அங்கே நிற்கிறான். அங்கிருந்து நழுவியவன் அதற்கு பிறகு மது, பார்த்தியின் கண்களில் சிக்கவில்லை.
திருமணம் முடிந்து மதுவின் வீட்டிற்கு மணமக்களை அழைத்து வந்து பால் பழம் கொடுத்தனர். பிறகு இருவரையும் தனி தனி அறையில் ஓய்வெடுக்க வைத்தனர்.
மதுவின் வீடு பழைய காலத்து பெரிய இரண்டு அடுக்கு மாடி வீடு. பெரிய ஊஞ்சல் சோபா செட் போடப்பட்டிருக்கும் ஹால், பெரிய அடுப்பங்கரை அதை ஒட்டிய ஸ்டோர் ரூம் கீழேயே ஏழு எட்டு அறைகள் இருக்கும். மேலேயும் அட்டாச்ட் பாத்ரூம் மற்றும் பெரிய பால்கனியுடன் கூடிய அறைதான் மதுவுடையது. வீடு முழுக்க சிமெண்ட் போட்டு ரெட் ஆக்சைட் போடப்பட்டிருக்கும். இன்றைய காலத்திற்கு ஏற்ப சில வசதிகள் செய்திருந்தாலும் வீடு முழுக்க பழமை மாறாமல் இருக்கும்.
அங்குதான் மது ஹேரிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜான், சத்யன், ஒலிவியா, ஜனனியின் கணவன் சந்தோஷ் அனைவரும் கீழேதான் தங்கியிருந்தனர்.பார்த்தி இரவு சாப்பிட்டுவிட்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
ஊர்வசி ஊருக்கு சென்றுவிட்டாள். ஒலிவியாவின் தந்தை தஞ்சாவூரில் ரூம் போட்டு தங்கியிருந்தார்.
ஜனனிதான் மதுவை ரெடி பண்ணி கொண்டிருந்தாள்.
“நா ஊர்ல இருந்து வந்த ரெண்டே மாசத்தில் நீ ஒரு ஆள கரெக்ட் பண்ணிட்டியே மது. என்னால நம்பவே முடியல”
“ஹா ஹா. என்னாலையும்தான் நம்ப முடியல ஜனனி செல்லம் . என் கண்ணனை பாத்து ரெண்டு மாசம்தான் ஆகுதுன்னு” என்று சொன்ன மதுவின் முகம் புது மஞ்சள் கயிறோடு ஜொலித்தது.
அவளை திருஷ்டி எடுத்த ஜனனி “நல்ல நாள்லயே பேரழகி நீ. இப்ப காதல், கல்யாணம்ன்னு அழகு கூடி தெரியரடி” என்று அவளை அறைக்கு அழைத்து சென்றாள்.
ஹாப் வைட்டில் மெரூன் பார்டர் வைத்த சாப்ட் சில்க் சேரி கட்டி, காதில் குட்டி ஜிமிக்கி போட்டிருந்தாள். கழுத்தில் மஞ்சள் தாலி மட்டும்தான். தலைக்கு குளித்து கிளிப் போட்டு முடியை விரித்துவிட்டு நிறைய மல்லிகை சரம் சூடியிருந்தாள். முகத்தில் ஒப்பனை எதுவும் இல்லை. பொட்டு வைத்து நெற்றி வகிட்டில் குங்குமம் மட்டும் வைத்திருந்தாள்.
மதுவின் ரூமில் அவளுக்காக வெகு நேரமாக காத்திருந்தான் ஹேரி . வீட்டுக்கு வந்ததிலிருந்து அவன் பேபியை யாரும் கண்ணிலேயே காட்டவில்லை. அவளின் கட்டில் முழுக்க மல்லி முல்லை ரோஜாவால் அலங்காரம் பண்ணியிருந்தனர். அந்த வாசமே அவனுக்கு தலையை கிறு கிறுக்க வைத்தது. உள்ளே வந்து கதவை தாள் போட்டு திரும்பிய மதுவை பார்த்தவன் முழு மயக்கத்திற்கு சென்றான். அவன் அருகில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் பாலை வைத்தவள் அவன் முன் வந்து நின்று “எழுந்திரு கண்ணா” என்றவள் அவன் காலில் விழுந்து வணங்கினாள். அவன் சொன்னதும் எழுந்து நின்றவன் அவள் காலில் விழுந்ததும் “என்ன பேபி செய்ற” என்று அவளை தூக்கி நிறுத்தினான்.
“சம்பிரதாயம்ன்னு சொன்னாங்க. அதையும் செஞ்சுருவோமேன்னுதான்” என்றவள் அவன் பக்கத்தில் அமர்ந்தாள். மயங்கிய விழிகளால் அவ்ளை முழுதாக பார்வையால் அளந்தான்.
“என்ன இப்படி பாக்கிற” என்று கேட்ட மதுவின் வாயிலிருந்து பாதி காத்துதான் வெளியே வந்தது.
“என் பொண்டாட்டி நான் பாப்பேன்” என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமரவைத்து அவளின் மல்லிப்பூ சூடிய தலையில் முகம் பதித்து ஆழ்ந்து சுவாசித்தான். பின் முடியை விலக்கி விட்டு கழுத்திலும் வாசம் பிடித்தான். கூச்சத்தில் நெளிந்தவளை வயிற்றோடு இறுக்கி அணைத்தவன் “உன் சாரீ, இந்த மஞ்சள், குங்குமம், பூ வாசம் அப்புறம் மொத்தமா நீ எல்லாம் சேர்ந்து ஆள கொல்றிங்க பேபி. நான் என்ன பண்ணுவேன் பேபி” என்று புலம்பியவன் கைகள் அவள் மேனியில் அலைய ஆரம்பித்தது. கூச்சத்தில் அவன் கைகளை தடுத்தவளை “ப்ளீஸ் பேபி. ஐ வாண்ட் யூ இம்மீடியட்லி. உனக்கு ஓகே வா” என்று கேட்டவனுக்கு, அவன் புறம் திரும்பி அவனை அணைத்து தன் சம்மதத்தை தெரிய படுத்தினாள். அதற்கு மேல் காத்திராமல் அவளை படுக்கையில் பூ போல் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்.
அவ்வளவு மயக்கத்திலும் அவளை மென்மையாக கையாண்டான். அவளின் வெட்கங்களை தயக்கங்களை கெஞ்சி கொஞ்சி முறியடித்தான். அப்படியும் இறுதியில் பயந்தவளை ஒண்ணுல்ல பேபி, ப்ளீஸ் பேபி என்று குழந்தையை போல் சமாதானபடுத்தி அவளுடன் கலந்தான்.
எல்லாம் முடிந்து விலகி அவளை ஆராய்ந்தவன் “சாரி பேபி. அவசரப்பட்டுட்டேனா. உனக்கு கஷ்டமா இருந்ததா” என்று கேட்டான். அவன் நீல கண்களில் முத்தத்தை கொடுத்து “ஐ லவ் யு கண்ணா” என்று கூறி அணைத்து கொண்டாள்.
அவசரமாக எழுந்து உட்கார்ந்து அவளை மடியில், முகத்தை பார்க்குமாறு அமர வைத்து கொண்டவன் , “என்ன என் பேபி திடீர்ன்னு லவ்வெல்லாம் சொல்றாங்க”
“ஆமா. எனக்கும் உன்ன பாத்த நாள்ளலருந்து பிடிக்க ஆரம்பிச்சுட்டு. என்னையே நா ஏமாத்திட்டு இருந்தேன். அப்புறமும் உன்னட்ட ஒத்துக்கிட்டாலும் அம்மா அப்பா நினைச்சு பயம், குற்ற உணர்ச்சி. தாலி கட்டி இப்ப உன்னோட முழுசா கலந்தோன்னதான் நா நிறைவா உணர்றேன் கண்ணா. நா முழுசா உன்னுடையவளா ஆய்ட்டேன்ல. இனிமே யாரும் இத மாத்த முடியாதுல்ல” என்றாள்.
“இவ்ளோ நேரம் பெட்ல குழந்தையா இருந்த பேபி, இப்ப பெரிய பொண்ணா பேசறாளே”
“ஆமா எனக்கும் இப்ப எல்லா……. விஷயமும் தெரிஞ்சிடுச்சில்ல. நா பெரிய பொண்ணுதான்” என்று கண்ணடித்தவளிடம்,
“பெரிய பொண்ணா இல்ல சின்ன பொண்ணான்னு நா செக் பண்ணி சொல்றேன் பேபி” என்று அவளை அவனுக்குள் சுருட்டி கொண்டான்.
அதற்கு பிறகு விடியலில்தான் தூங்கினார்கள்.
(வருவாள்…)
error: Content is protected !!