Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 23.

தமிழ், நிலாவின் தனிமை பயணம்.

 

தமிழும் நிலாவும் ரிசப்ஷனுக்கு காரில் செல்கின்றனர்.

 



Advertisement

இனி,

 

‘நிலா இதுக்கு முன்னாடி நான் உனக்கு கிஃப்ட் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணி இருக்கனா’, என தமிழ் கேட்க,

Advertisement

 

Advertisement

‘ம் என்னோட பர்த்டேக்கு ப்ரபோஸ் பண்ண ஒரு ரிங் வாங்கி வச்சிருந்தீங்க’, என நிலா சொல்ல,

 

‘அப்போ பர்ஸ்ட் ப்ரபோஸ் பண்ணது நான் தானா. ‘, என தமிழ் கேட்க,

Advertisement

 

‘இல்ல நான் தான்’, என நிலா சொல்ல,

 

‘எப்டி நீ தான இப்ப சொன்ன. நான் கிஃப்ட் வாங்கி ப்ரபோஸ் பண்ணுனேன்னு’, என சுவாரஸ்யமாய் தமிழ் கேட்க,

 

‘கிஃப்ட் வாங்கனது என்னவோ நீங்க தான். ஆனா என்னோட ஆசைய நிறைவேத்தறதுக்காக அத எங்கிட்ட குடுக்காம நீங்களே வச்சுகிட்டீங்க. ஆமா எனக்கு எங்க ஹோட்டல பெரிய லெவல்ல கொண்டு வரனும்னு ஆசைன்னு நந்தினி கிட்ட நான் புலம்பி கிட்டு இருந்தத நீங்க கேட்டுட்டு ஹோட்டல திருப்பி வாங்கி குடுத்தீங்க. அத சும்மா குடுத்தா வாங்கிக்க மாட்டேனு என்னை பத்தி நல்லா தெரிஞ்சு கிட்டு வட்டி இல்லாம கடனா குடுத்தீங்க. நீங்க எனக்கு குடுத்த முதல் கிஃப்ட் அது தான். அது எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு தெரிஞ்சு குடுத்தீங்களா இல்ல தெரியாம குடுத்தீங்களா தெரியாது.ஆனா ரொம்ப ப்ரீஸியஸான கிஃப்ட்’, என அழுது கொண்டே நிலா சொல்ல,

 

‘ஏய் நிலா ப்ளீஸ் அழாத.’, என நிலாவின் கண்ணை துடைத்து விட்டு, ‘ நான் அப்பவே உன்ன ரொம்ப காதலிச்சிருக்கேன்னு நினக்கறேன். இல்லன்னா என் ஆசைய ப்ரபோஸ் பண்ணாம உன் ஆசை நிறைவேற உனக்கு ஹெல்ப் பண்ணிருப்பேனா.  அது இருக்கட்டும் அப்ப எப்ப தான் நான் லவ்வ சொன்னேன்’, என ஆர்வமாக தமிழ் கேட்க,

 

‘ம் நீங்க எப்ப சொன்னீங்க. ஆன்டி தான் நீங்க எனக்காக வாங்கி வச்சிருந்த லவ் ப்ரபோசல் கார்டையும், ரிங்கையும் குடுத்து உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா தமிழ் உன் பர்த்டே கிஃப்டா வாங்கிட்டு உனக்கு குடுக்காம கொண்டு வந்துட்டான். ஏன்டா குடுக்கலைன்னு நான் கேட்டதுக்கு அதுக்கு இன்னும் டைம் வரல ராஜி ன்னு சொன்னான்னு சொல்லி எங்கிட்ட குடுத்தாங்க. அதய நான் வாங்கிட்டு வந்து உங்களுக்கு ஒரு ரிங் வாங்கி அந்த க்ரீட்டிங் கார்டோட சேர்த்து உங்க கிட்டு குடுத்து பர்ஸ்ட் லவ் ப்ரபோஸ் பண்ணினேன்’, என நிலா சொல்ல,

 

‘பார்ரா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே நம்ம லவ் ஸ்டோரி. ராஜி கூட என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காளா’, என தமிழ் சொல்ல,

 

‘உலகத்துலேயே தன்னோட லவ் ஸ்டோரிய லவ்வர் கிட்டயே கேட்டு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான்’, என நிலா கிண்டல் செய்ய,

 

‘எனக்கு தான் மறந்துருச்சு. உன் கிட்ட கேட்டு நம்ம காதல் காவியத்த தெருஞ்சுக்கலாம்னு கேட்டேன். சரி எம்மேல உனக்கு கோபமோ, ஏமாற்றமோ, வருத்தமோ இருக்கா நிலா’, என தமிழ் கேட்க,

 

‘எனக்கு கடவுள் மேல தான் கோபம், காலத்து மேல தான் ஏமாற்றம், என் விதி மேல தான் வருத்தம். உங்க மேல எதுவும் இல்ல. உங்க இடத்துல இருந்து யோசிச்சு பாத்தா தான் தெரியும் நீங்க எவ்ளோ கஷ்டப் படறீங்கன்னு. திடீர்னு யாருன்னு தெரியாத என்னை மனைவியா ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம். ‘, என நிலா சொல்ல,

 

‘ரொம்ப தேங்க்ஸ் நிலா. என் நிலைமைய புரிஞ்சிக்கிட்டதுக்கு. ஆனா எனக்கு தெரியும் நீ எவ்ளோ கஷ்டப் படுவேன்னு. எனக்காவது எல்லாம் மறந்து போச்சு. ஆனா உனக்கு எல்லாம் ஞாபகத்துல இருக்கு. அது ஒவ்வொரு தடவையும் நினைப்புல வந்து நடந்தது கனவா, நினவான்னு மனசுக்குள்ள நீ பட்ற கஷ்டம் எனக்கு புரியுது. கவலப்படாத சீக்கிரம் நமக்கு நல்லது நடக்கும்’, என தமிழ் ஆறுதலாக சொன்னான்.

 

‘ஆமா இப்ப எதுக்கு அத பத்தி பேசி கிட்டு. ஏதாவது கடைல நிறுத்துங்க ஸ்நாக்ஸ் வாங்கனும்’, என சொல்லி நிலா பேச்சை மாற்ற தமிழ் பேக்கரி பார்த்து காரை நிறுத்தினான்.

 

‘நிலா இறங்கு. உனக்கு வேனுங்கறத வாங்கிக்க’, என தமிழ் சொல்ல நிலா வாங்க தமிழ் பில் பண்ணி விட்டு வர இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

 

நிலா சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து தமிழுக்கு குடுக்க அவன் காரை ஓட்டிக் கொண்டிருந்ததால் ஆ காட்ட நிலா சிரித்துக் கொண்டே ஊட்டினாள்.

 

இப்படியே இவர்கள் பேசிக் கொண்டே மண்டபத்தை அடைந்தனர்.

 

காரை பார்க் பண்ணி விட்டு கிஃப்டை எடுத்துக் கொண்டு இருவரும் மண்டபத்தினுள் நுழைந்தனர்.

 

‘நிலா வாம்மா நல்லா இருக்கியா. இது உன் வீட்டுக்காரா.’, என தருணின் அம்மா கேட்க,

 

‘ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்டி. ஆமா ஆன்டி இது தமிழ் என் ஹஸ்பண்ட்’, என நிலா சொல்ல,

 

‘வாங்க. நிலா உள்ள கூட்டிட்டு போம்மா’, என்றார் தருண் அம்மா.

 

நிலா வருவதை பார்த்த அவளது நண்பர்கள் அவளை அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு கூப்பிட நிலா தமிழையும் கை பிடித்து கூட்டிக் கொண்டு அங்கு சென்றாள்.

 

எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் அவர்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

 

நிலா அருகில் இருந்த நண்பர்களின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

 

‘ஆமா தமிழ் எங்க நிலாவ உங்களுக்கு பிடிச்சிருக்கா’, என நிலாவின் நண்பர்கள் கேட்க,

 

‘ம் ரொம்ப புடிச்சிருக்கு. ‘, என தமிழ் சொல்ல,

 

‘அவ சந்தோசமா இருக்கறதுலயே நீங்க அவள எப்டி பாத்துக்கறிங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். எங்க கேங்க்லயே கம்மி வயசு இவளுக்கு தான். ஆனா எங்க எல்லாரையும் பேர் சொல்லி தான் கூப்பிடுவா. சரியான அருந்த வாளு.  ஆனா ரொம்ப பாசக்காரி  எங்க எல்லாரோட செல்ல புள்ள இவ தான். எப்பவும் அழகா சிரிச்சிட்டே இருப்பா. கூட இருக்கவங்களயும் சிரிக்க வச்சுகிட்டே இருப்பா. எங்களுக்கு எப்ப எந்த உதவினாலும் தயங்காம செய்வா. எங்க கூட ப்ரெண்ட்ஸா இல்ல பேமிலியா பழகுவா. யார் கண்ணு பட்டுதோ தெரியல. அவங்க அப்பா கார் ஆக்சிடண்ட்ல இறந்து போய்டாரு. அதுக்கு அப்புறம் அவ மனசு விட்டு சிரிக்கவே இல்ல. ஆனா இப்ப அந்த பழைய சந்தோசம் எங்க நிலா முகத்துல வந்துருச்சு. அதுக்கு உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்’, என நிலாவின் நண்பர்கள் சொல்ல,

 

‘ஏங்க நிலா என் வைஃப் . அவள சந்தோசமா பாத்துக்க வேண்டியது என் கடமை. அதுக்கு நீங்க எல்லாம் எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்றீங்க. இனிமே நிலா இப்படி தான் சந்தோசமா இருப்பா. நீங்க எல்லாம் கவல படாதீங்க ‘, என தமிழ் சொல்ல,

 

அதற்குள் நிலா அங்கு வந்து, ‘என்னப்பா எப்டி என் தமிழ். நல்லா பழகுறாரா’, என நிலா கேட்க,

 

‘ஓகே தான். ஆனா உன் அளவுக்கு இல்ல ‘, என அவர்கள் கிண்டல் செய்ய அனைவரும் சிரித்தனர்.

 

‘ஆமா நிலா அம்மா, தம்பி நல்லா இருக்காங்களா.’, என தருண் கேட்க,

 

‘ ம் நல்லா இருக்காங்கப்பா’, என்றாள் நிலா.

 

‘சரி உனக்கு எப்ப கல்யாணம்’, என அனைவரும் சேர்ந்து தருணிடம் கோரசாக கேட்க,

 

‘பாத்துகிட்டு இருக்காங்க. நல்ல பொண்ணா கிடச்சதும் பண்ணவேண்டியது தான்’, என தருண் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல,

 

‘ஏய் தருண் வெட்கப்படறான் டா’, என அனைவரும் கத்த,

 

‘சரி சரி வாங்க எல்லாம் பேமிலி யோட மேடைக்கு போய் குரூப் போட்டோ எடுத்துக்கலாம்.’, என தருண் கூப்பிட எல்லோரும் மேடைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்த கிஃப்டை ஒவ்வொருவராக குடுத்து விட்டு அனைவரும் சேர்ந்து போட்டோ பிடித்து விட்டு சிறிது நேரம் நின்று மணமக்களிடம் பேசி விட்டு கீழே வந்தனர்.

 

‘சரி வாங்க எல்லாம் சாப்பிட போலாம்’, என சொல்லி தருண் அனைவரையும் கூட்டிச் சென்று பந்தியில் உட்கார வைக்க அனைவரும் சாப்பிட்டு விட்டு வந்து வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

நிலா அவளது ஆண் நண்பர்களோடு ஜாலியாக  அடித்து விளையாடிக் கொண்டு பேச, அவர்களும் அவளை எப்போதும் போல் தொட்டு, அடித்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

இதை பார்த்த விட்டு முதலில் சாதரணமாக இருந்த தமிழ் கொஞ்ச கொஞ்சமாக பொறாமை பட ஆரம்பித்தான்.

 

‘அடிப்பாவி என்னைக்காவது என் கூட இப்டி ஜாலியா அடிச்சு விளையாடி பேசிருக்கியா. உனக்கு மட்டும் தான் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா. எனக்கும் இருக்காங்க. ஆமா இப்ப நான் ஏன் இப்டி நடந்துக்கறேன். ஒரு வேல இதுக்கு பேரு தான் பொசசிவ் நஸ்ஸோ. தமிழு வர வர உன் போக்கே சரி இல்ல. அவங்க எல்லாம் அவளோட குட் ப்ரெண்ட்ஸ். நீ உன் ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா பேசும் போது அவ என்னைக்காவது எதாவது சொல்லி இருப்பாளா. இது தப்பு’, என தமிழ் தனக்குள் பேசிக் கொண்டிருக்க,

 

‘தமிழ் என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க. போலாமா’ என நிலா கேட்க,

 

‘ம் போலாம் நிலா’, என தமிழ் சொல்ல இருவரும் எல்லோரிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

காரில் செல்லும் போது நிலா, ‘தமிழ் இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.’, என சொல்ல,

 

‘அது உன் முகத்த பாத்தாலே தெரியுது. நீ எவ்ளோ சந்தோஷமா இருக்கைன்னு’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா உங்களுக்கு என் ப்ரெண்ட்ஸ எல்லாம் புடிச்சிருந்துச்சா. அவங்க எப்டி உங்க கூட பழகுனாங்க’, என நிலா கேட்க,

 

‘ம் ஓகே தான். எல்லாரும் மேடம பத்தி புகழ்ந்து தள்ளிட்டாங்க’, என தமிழ் சொல்ல,

 

‘அப்டியா இருக்காதே. சரியான வாளு. எப்ப பாரு எங்க கூட அடிச்சு விளையாண்டு கிட்டே இருப்பா. இருக்கறதுலயே சின்னவ அவ தான் ஆனா எங்க எல்லாரயும்  பேர் சொல்லி தான் கூப்பிடுவா. அப்டின்னு தான சொல்லிருப்பாங்க’, என நிலா கேட்க,

 

‘எப்டி நிலா இவ்ளோ கரெக்டா சொல்ற’, என  தமிழ் சிரித்துக் கொண்டே சொல்ல,

 

‘அதான பாத்தேன். அவனுங்கள அடுத்த தடவ பாக்கும் போது கவனுச்சிக்கறேன்’, என நிலா சொல்ல,

 

‘நிலா நீ சொன்னதையும் சொன்னாங்க. அப்புறம் நீ அவங்க மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கிற அவங்க உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்காங்கன்னும் சொன்னாங்க’, என தமிழ் சொல்ல,

 

‘நிஜமாவா. எனக்கு தெரியும் எம்மேல அவங்க எவ்ளோ பாசமா இருக்காங்கன்னு. தமிழ் எனக்கு கடவுள் அம்மா, அப்பா, தம்பி, ப்ரெண்ட்ஸ், நீங்க,  ஆன்டி, அங்கிள்னு எல்லாரும் என் மேல பாசமா இருக்கவஙகளா குடுத்திருக்காரு. அதுக்கு அவருக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்ருக்கேன்’, என நிலா எமோசனலாக பேச,

 

தமிழ் காரை நிறுத்தி அவளை சமாதானம் செய்தான்.

 

தமிழோடு நிலாவின் இந்த உறவு வலுப் பெறுமா?

 

தொடரும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!