Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் மனதில் பூத்த ஒற்றைப் பூவே

அத்தியாயம் 5

நிவாஷினியும் ஹரிதாவும் சூப் குடித்து முடிக்க, பேரர் பிரியாணியைக் கொண்டு வந்து வைத்தார். இருவரும் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி பாதி பாதியாக எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்க, ஹரிதா பேச்சை ஆரம்பித்தாள்,”அப்புறம் பிஸ்னஸ் எப்படிப் போகுது நிவா?” என்று கேட்டாள்.

 

“அதெல்லாம் நல்லா போகுது ஹரி.”

 



Advertisement

“ஏன் ஒரு மாதிரி டல்லா பேசுற?”

 

“அதெல்லாம் இல்லை ஹரி வீட்டுல ஏதோ நடக்குது ஆனால் என்னன்னு எனக்குத் தெரியலை.”

Advertisement

 

Advertisement

“என்ன நடக்குது? புரியற மாதிரி சொல்லு நிவா.”

 

“அம்மாவும் அப்பாவும் தனியா என்னமோ பேசுறாங்க. நானோ சரணோ போய் கேட்டால் பேச்சை மாத்திடுறாங்க. அதுவுமில்லாம இந்த ஒரு மாசமா செவ்வாய்க் கிழமை துர்கை அம்மனுக்கும் அப்புறம் புதன் கிழமை எங்க குலதெய்வத்துக்கும் விளக்குப் போட்டுட்டு இருக்கேன். ஏன்னு கேட்டால் ஏதோ ஜோசியர் சொன்னார். என்னோட நல்லதுக்குனு சொல்றாங்க.” என்று நிவாஷினி கூற, ஹரிதாவுக்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.

Advertisement

 

“ஹேய் உனக்கு வீட்டுல கல்யாணம் ஏற்பாடு பண்றாங்கனு நினைக்கிறேன்.” என்றாள்.

 

“ஏய் என்ன சொல்ற?”

 

“ம் அப்படித் தான் இருக்கனும். நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு அப்படித் தான் தோணுது.” என்று ஹரிதா கூறவும் நிவாஷினி மனதில் பல யோசனைகள். சுத்தமாக இதை அவள் எதிர்பார்க்கவில்லை. தனக்குத் திருமணமா? நினைக்கையில் ஏனோ மனதில் பயம் பரவியது. சொல்ல முடியாத உணர்வு ஒன்று அவளைப் போட்டு வாட்டி எடுத்தது.

 

ஹரிதா தான் பேசியும் நிவாஷினி எதுவும் பதில் பேசாமல் பிரியாணியில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவர் அவளது இடது கையில் அடிக்க, உணர்வுப் பெற்ற நிவாஷினி ஹரிதாவைப் பார்த்து,”ஹரி எனக்குக் கல்யாணமா? கேட்கவே ஒரு மாதிரி இருக்கு.” என்றாள்.

 

“ஹேய் எதுக்கு இவ்ளோ டென்ஷன்? நான் என்னுடைய கெஸ்ஸை தான் சொன்னேன். ஒரு வேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம். நீ தேவையில்லாம பயப்படாத.”

 

“இல்லை ஹரி அப்படித் தான் இருக்கனும்னு நீ சொன்னதுக்கு அப்புறம் எனக்கும் தோணுது.”

 

“ப்ச் நிவா நீ இப்போவே வருத்தப்படுறதுக்கு தேவையே இல்லை. ஏனா இன்னும் எதுவும் கன்ஃபார்ம் ஆகலை. அப்புறம் என்ன?”

 

“கனஃபார்ம் ஆகலைத் தான் ஆனால் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.”

 

“ஏய் நீ ஏன் இவ்ளோ பயப்படுற? எனி ரீசன்? கல்யாணம்னா எல்லார் லைஃப்லயும் நடக்குறது தானா? ஏன் இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்லையா?”

 

“ப்ச் ஹரி நீ உன்னோட அத்தைப் பையனைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போற. அவரை உனக்கு முன்னாடியே தெரியும். ஆனால் எனக்கு அப்படி இல்லையே. யாருனே தெரியாத ஒருத்தரோட எப்படி என் லைஃப்பை ஷேர் பண்ணுவேன்?” என்று கேட்டாள்.

 

“ஓ அது தான் உன் கவலையா? அப்போ லவ் பண்ணா உனக்கு ஓகே வா?”

 

“ஏய் சும்மா இரு ஹரி அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.”

 

“அப்புறம் மேடம் என்ன பண்றதா உத்தேசம்?”

 

“தெரியலையே!!” என்று உதட்டைப் பிதுக்கிச் சிறு குழந்தை போலக் கூற, ஹரிதாவுக்கு என்ன கூறுவதென்று புரியவில்லை.

 

“சரி நடக்கும் போது அதை எப்படி ஃபேஸ் பண்றதுனு பார்த்துக்கலாம் நிவா. இப்போவே அதை யோசிச்சு உன்னோட நிம்மதியைக் கெடுத்துக்காத.” என்றாள்.

 

“ம் நீ சொல்றதும் சரி தான்.” என்று அவள் கூறிவிட்டாலும் ஏனோ அவளால் அதை அப்படியே விட முடியவில்லை.

 

இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மைக்கேல் உடனே தன் நண்பன் விஷாகனிற்கு அழைத்து நிவாஷினி வந்த விஷயத்தைக் கூற, அடுத்த பத்தாவது நிமிடம் அவன் அங்கிருந்தான்.

 

புயல் வேகத்தில் வந்தவனைப் பார்த்த மைக்கேல்,”மச்சான் அந்நியாயத்துக்கு நீ லவ்வர் பாயா இருக்க டா. உனக்குச் சொல்லி பத்து நிமிஷம் தான் ஆச்சு. அதுக்குள்ள இங்கே வந்து நிக்கிற? இருந்தாலும் நீ பண்றது கொஞ்சம் ஓவர் தான். இன்னும் உன் லவ்வ சிஸ்டர்கிட்ட சொல்லலை. அப்படிச் சொல்லியிருந்தால் இந்நேரம் உன்னைக் கையில பிடிச்சுருக்க முடியாது போல!!” என்று கேலி செய்ய அதை எல்லாம் எங்கு கண்டு கொண்டான் விஷாகன்? அவன் தான் வந்ததிலிருந்து வைத்த கண் வாங்காமல் நிவாஷினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இதைப் பார்த்த மைக்கேல, விஷாகனின் முதுகில் ஒரு அடி வைத்து,”டேய் நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன டா னா ஜொல்லு விட்டுக்கிட்டு நின்னுட்டு இருக்க?” என்று கேட்க, அவனை முறைத்துப் பார்த்தான் விஷாகன்.

 

“என்ன டா அசிங்கமா பேசிக்கிட்டு ஜொல்லு ஜில்லுனு.”

 

“டேய் இதை மட்டும் சூர்யா ஃபேன்ஸ் கேட்டால் உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க.” என்று அவன் கூற, விஷாகனிற்குப் புரியவில்லை.

 

“டேய் என்ன டா லூசு மாதிரி பேசுற? நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசுற?” என்று கேட்டான்.

 

“பின்ன சில்லுன்னு ஒரு காதல் படத்துல சூர்யா ஜோவை ஜில்லுன்னு தான சொல்வார். அதைப் பார்த்துட்டு இப்போ எத்தனைப் பசங்க அவங்க வைஃப்பை லவ்வரை ஜில்லுன்னு சொல்றாங்க. ஆனால் நீ என்னடானா அதைப் போய் அசிங்கம்னு சொல்ற!!”

 

இதைக் கேட்ட விஷாகன் கொலை வெறியுடன் மைக்கேல்லை பார்த்தவன்,”டேய் இனி நீ ஏதாவது பேசுன கண்டிப்பா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஓடிப் போயிறு சொல்லிட்டேன்.” என்றான் கடுப்பாக.

 

“சரி சரி கூல் மச்சான். நீ டென்ஷனா இருந்த அதான் உன்னை கூல் பண்ண அப்படிச் சொன்னேன். சரி அதை விடு. இப்படி இங்கேயே நின்னு என் கூடப் பேசுறதுக்கு போய் நிவாஷினிகிட்ட பேச வேண்டியது தானா!!”

 

“இல்லை டா டக்குனு எப்படிப் போய் பேசுறது?”

 

“டேய் எல்லாமே நானேவா சொல்லி தரது?போ டா போய் பேசு. நானும் வரேன. உனக்கு ஃப்ரண்டாகிட்டேன்னே.” என்று கூறி அவனை இழுத்துக் கொண்டு நிவாஷினியும் ஹரிதாவும் இருக்குமிடம் சென்றான் மைக்கேல்.

 

விஷாகனை அங்கு எதிர்பார்க்காத நிவாஷினி ஆச்சரியமாகப் பார்க்க, ஹரிதாவோ யார் டா இவர்கள் என்று சந்தேகத்துடன் பார்த்தாள். அவளது பார்வையை விஷாகன் உணர்ந்தானோ ஏனோ உடனே,”ஹாய் நிவாஷினி இங்கே எங்கே?” என்று கேட்க, மைக்கேல் மானசீகமாக அவனது தலையில் அடித்துக் கொண்டான்.

 

நிவாஷினி பதில் கூறும் முன் ஹரிதா முந்திக் கொண்டு,”ம் இங்கே ஜல்லியும் மண்ணும் விக்கிறாங்கனு சொன்னாங்க. அதான் பார்த்து வாங்கிட்டு போகலாம்னு வந்தோம்.” என்று நக்கலாகக் கூறிவிட்டு சிக்கன் ஸெக் பீஸை அவள் எடுத்துக் கடிக்க, விஷாகன் பேய் முழி முழித்தான்.

 

“ஏய் சும்மா இரு ஹரி.” என்று அவளிடம் கூறிய நிவாஷினி, விஷாகனிடம்,”அவள் என்னோட ஃப்ரண்ட் தான். டோண்ட் மிஸ்டேக் ஹெர். நாங்க இங்கே சாப்பிட தான் வந்தோம்.” என்று கூறினாள்.

 

அவள் கூறிய பின்னர் தான் விஷாகனிற்கு அவனது அபத்தம் புரிய என்ன செய்வதெனப் புரியாமல் ஈ என்று இழித்தான். மைக்கேல் அந்த சூழ்நிலையைச் சமாளிக்க,”இது என் ஹோட்டல் தான் நிவாஷினி. உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க. பில் செலவு என் மச்சானோடது.” என்று கூறி விஷாகன் தோல் மேல் கை போட, ஒரு நிமிடம் திடுக்கிட்டவன் பின்னர் வேகமாக ஆமாம் என்று தலையாட்டினான்.

 

“நீங்க எதுக்கு எங்களுக்கு வாங்கித் தரனும்? நோ நீட். நாங்களே பே பண்றோம்.” என்று சற்றுக் கடுமையாகக் கூறினாள் ஹரிதா.

 

“நிவாஷினி உங்க ஃப்ரண்ட்கிட்ட சொல்லுங்க. நான் உங்களுக்கு பில் பே பண்றது மூலமா நமக்குள்ள ஒரு ஃப்ரண்டஷிப் உருவாகனும்னு நினைக்கிறேன்.” என்றான் விஷாகன்.

 

அதற்கும் ஹரிதா ஏதோ பேச வர, அவளை எதுவும் பேசவிடாமல்,”விஷாகன் நீங்க பில் பே பண்ணித் தான் எங்களுக்கு ஃப்ரண்ட் ஆகனும்னு இல்லை. ஸோ நீங்க பில் எல்லாம் பே பண்ண வேண்டாம். நீங்க அப்படிச் சொன்னதே எங்களுக்குச் சந்தோஷம் தான்.” என்றாள் நிவாஷினி.

 

“சரி அப்போ டெஸர்ட் என்னோட ட்ரீட். ஓகே வா.” என்று கேட்டான்.

 

நிவாஷினி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்தான்,”இங்கே பக்கத்துல ஒரு ஐஸ் க்ரீம் ஷாப் இருக்கு. அங்கே போகலாம். எப்படியும் சாப்பிட்டு ஸ்வீட் சாப்பிட தோணும் தான? ப்ளீஸ் எனக்காக வாங்க. என்னோட ப்ரண்ட்ஷிப்பை ஏத்துக்கிட்டீங்க அப்படினா வாங்க.” என்று கூறினான் விஷாகன்.

 

ஏனோ நிவாஷினிக்கு வேண்டாம் என்று மறுக்கத் தோன்றவில்லை. அவனுடன் போக வேண்டுமென்று தோன்ற ஹரிதா இவளின் யோசனை முகத்தைப் பார்த்து வேண்டாமென வாயைத் திறக்கும் முன் அவளது எண்ணம் புரிந்து வேகமாக,”சரி போயிட்டு வரலாம்.” என்றாள் நிவாஷினி. அதை ஆச்சரியத்தோடு பார்த்த ஹரிதாவிற்கு எதுவும் பதில் சொல்லத் தோன்றவில்லை.

 

“ஓகே நீங்க சாப்பிட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்.” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் விஷாகனும் மைக்கேலும்.

 

அவர்கள் சென்றவுடன் ஹரிதா நிவாஷினியிடம்,”ஏய் நிவா உனக்கு என்னாச்சு?”

 

“ஏன் ஹரி அப்படிக் கேட்கிற?”

 

“பின்ன எதுக்கு இப்போ அவங்க கூடச் சாப்பிடப் போறேன்னு சொன்ன?”

 

“சொன்னா என்ன தப்பு?” என்று நிவாஷினி கேட்கவும் ஹரிதா அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள்.

 

“புரிஞ்சு தான் பேசுறியா நீ? அவன் யார் என்னன்னு எதுவும் தெரியாமா எப்படி நீ ஒத்துக்கலாம்?”

 

“ஹேய் அது தான் பிரச்சனையா? எனக்கு அவங்களை தெரியும். அப்பா வேலைப் பார்க்கிற கார்மென்ட்ஸ் ஓனர் பையன் தான் இந்த விஷாகன்.”

 

“சரி அவரைப் பத்தி வேற என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டாள்.

 

அந்தக் கேள்விக்கு நிவாஷினியால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் சொல்லாமலும் இருக்கக் கூடாதென்று,”எனக்கு வேற எதுவும் தெரியாது தான். ஆனால் இனிமேல் தெரிஞ்சுக்கலாமே?” என்றாள் நிவாஷினி. இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ஹரிதா.

 

“நிவா என்ன சொல்றனு புரிஞ்சு தான் சொல்றியா?”

 

“நீ இவ்ளோ யோசிக்க எதுவுமே இல்லை ஹரி. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸா இருக்கிறது தப்பில்லையே?”

 

“ஃப்ரண்டா மட்டும்னா எந்தப் பிரச்சனையும் இல்லை நிவா.”

 

“அப்போ விடு நோ பிராப்ளம். நான் போய் கை கழுவிட்டு வரேன்.” என்று எழுந்து சென்றாள்.

 

ஹரிதாவால் நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை. சற்று நேரம் முன்பு தான் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்பதற்காக வருத்தப்பட்டாள். ஆனால் விஷாகன் வந்து பேசியதும் உடனே அவள் சம்மதித்தது ஏனோ ஹரிதாவிற்குச் சந்தேகம் வந்தது. விஷாகனைப் பற்றித் தெரிந்து கொள்ளவாவது அவர்களுடன் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்து அவளும் கை கழுவ எழுந்தாள்.

 

ஹரிதாவும் நிவாஷினியும் வெளியே வர, மைக்கேலும் விஷாகனும் அவர்களுக்காக அங்கே காத்திருந்தனர். இவர்கள் இருவரையும் பார்த்தவர்கள் அவர்களிடம் வந்து,”நீங்க எதுவ வந்தீங்க?” என்று கேட்டான் விஷாகன்.

 

“நாங்க வண்டில தான் வந்தோம்.”

 

“அப்போ உங்க வண்டியை இங்கேயே வைச்சுட்டு வாங்க. நம்ம எல்லாரும் என்னோட கார்லயே போகலாம்.” என்றான்.

 

“இல்லை அதெல்லாம் வேண்டாம். நாங்க எங்க வண்டிலயே வரோம்.” என்று ஹரிதா முந்திக் கொண்டு கூற, விஷாகன் நிவாஷினியைப் பார்த்தான்.

 

அவனது பார்வை என்னவோ செய்ய, நிவாஷினி பதில் கூற வாயைத் திறக்க ஹரிதா வேகமாக அவளது கையைப் பற்றி அவர்கள் வண்டியை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்து வந்து விட்டாள்.

 

“ப்ச் எதுக்கு இப்போ என்னை இப்படி இழுத்துட்டு வர ஹரி? அவர் என்ன நினைப்பார்?” சற்று கடுகடுத்த முகத்துடன் கேட்டாள் நிவாஷினி. அவளது இந்த முகத்தைப் பார்த்த ஹரிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. நிவாஷினி சட்டென்று கோபமோ எரிச்சலோ பட மாட்டாள். அவளிற்குக் கோபம் வருவது அரிது. அப்படிப்பட்ட நிவாஷினி இன்று சற்று எரிச்சலாக அதுவும் இரண்டு முறை மட்டுமே பார்த்த ஒருவருக்காக என்று யோசிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

 

“சாரி மேடம் நான் உன்னை இப்படி இழுத்துட்டு வந்தது தப்பு தான். நான் வேணா அவர்கிட்ட போய் சாரி கேட்கிறேன்.” என்று கூறிய ஹரிதா விஷாகனிடம் பேசப் போக, நிவாஷினி வேகமாக அவளது கையைப் பற்றி இழுத்து,”ஏய் ஹரி கோச்சுக்காத. டக்குனு நீ இழுத்துட்டு வந்தது அவர் முகத்துல அடிச்ச மாதிரி இருக்கும். அதான் நான் அப்படிச் சொன்னேன். கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம்னு தான் சொல்ல வந்தேன். சரி விடு நீ போய் சாரி எல்லாம் கேட்க வேண்டாம். நீ இங்கேயே இரு நான் போய் சொல்லிட்டு வரேன். நம்ப வண்டிலயே போகலாம் சரியா.” என்று அவளைச் சற்று சமாதானப்படுத்தி விட்டு விஷாகனிடம் சென்றாள்.

 

“சாரி நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க வேண்டாம். அவளுக்கு நீங்க யார்னு தெரியாதுல அதான் அப்படி பிஹேவ் பண்ணிட்டா. டோண்ட் மிஸ்டேக் ஸெர். நாங்க எங்க வண்டிலயே வரோமே.” என்று சற்றுத் தன்மையாக அவள் கூற, அவர்களது பயம் புரிந்து சரியென்று தலை அசைத்தான் விஷாகன்.

 

அவனிடம் பேசிவிட்டு வந்த நிவாஷினி, ஹரிதா வண்டியை எதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அவளிடம்,”என்னாச்சு ஹரி?” என்று கேட்டாள்.

 

“ப்ச் பெட்ரோல் இல்லை. ஆல்ஸோ டயர் பஞ்சர்.” என்று அவள் கூற, இப்போது நன்றாகவே முறைத்தாள் நிவாஷினி.

 

“ஹலோ மேடம் இது உங்க வண்டி. என் வண்டில வரலாம்னு சொன்னதுக்கு நீங்க தான் உங்க வண்டில போகலாம்னு சொன்னீங்க. அப்போ இதெல்லாம் செக் பண்ணாமல் எடுத்தது உங்க மிஸ்டேக்.” என்றாள்.

 

அவள் கூறுவது சரி என்பதால் நிவாஷினியால் பதில் பேச முடியவில்லை. இருவரும் வண்டியைக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த விஷாகனும் மைக்கேலும் அவர்களிடம் வந்து,”என்னாச்சு?” என்று கேட்டான் மைக்கேல்.

 

நிவாஷினி விஷயத்தைக் கூற, உடனே விஷாகன் தனக்குத் தெரிந்த மெக்கானிக்கிற்கு அழைத்து விட்டான்.

 

“அச்சோ எதுக்கு விஷாகன் இதெல்லாம்? நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். அவர் பார்த்துப்பார்.”

 

“இதுல என்ன இருக்கு நிவாஷினி? ஒரு ப்ராப்ளமும் இல்லை. சரி இப்போ வந்துடுவாங்க. பஞ்சர் போடக் கொஞ்ச நேரமாகும். அதனால நம்ம ப்ரோக்ராம அப்புறம் இன்னோர் நாள் பார்த்துக்கலாம்.” என்றான் விஷாகன்.

 

“டேய் மச்சான் ஏன் டா இன்னோர் நாள்? நம்ம கார்ல போகலாமே.” என்றான் மைக்கேல்.

 

“மைக் சும்மா இரு.” என்று அவனிடம் கூறியவன் நிவாஷினியைப் பார்த்து,”உங்களுக்குப் போக ஆட்டோ கூப்பிடுறேன் இருங்க.” என்றான்.

 

“விஷாகன் ஒரு நிமிஷம் இருங்க.” என்று கூறியவள் ஹரிதாவைத் தனியாக அழைத்துச் சென்று,”ஹரி பார் அவர் எப்படி நடந்துக்கிறார். இதுக்கு அப்புறமும் நம்ம போகாமலிருந்தால் நல்லா இருக்காது. ப்ளீஸ் எனக்காக வா.” என்று கூற, ஹரிதாவிற்கும் ஒரு மாதிரியாக இருந்தாலும் சரியென்று தலையசைத்தாள்.

 

சந்தோஷத்துடன் நிவாஷினி விஷாகனிடம் வந்து,”நம்ம இன்னோர் நாள் எல்லாம் ப்ரோகரமை தள்ளிப் போட வேண்டாம். இன்னைக்கே போகலாம். உங்க கார்லயே நாங்க வரோம்.” என்றாள்.

 

இதைக் கேட்டவுடன் விஷாகன் சந்தோஷமாக நேரம் தாழ்த்தாமல், மைக்கேலின் உணவக காவலாளியிடம் நிவாஷினியின் வண்டிச் சாவியைக் கொடுத்து விவரத்தைக் கூறிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு ஐஸ் க்ரீம் பார்லர் நோக்கிச் சென்றான்.

 

பக்கத்தில் என்று கூறப்பட்ட கடை பத்து நிமிடத்தில் வர, நால்வரும் இறங்கி உள்ளே சென்றனர். சிறு கடையாக இருக்கும் என்று நினைத்த ஹரிதாவிற்கும் நிவாஷினிக்கும் ஆச்சரியமாக இருந்தது. இருக்கைகள் எல்லாம் போடப்பட்டுக் கிட்டத்தட்ட பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்குச் சற்று பெரிதாகவே இருந்தது.

 

காலியான இருக்கையைப் பார்த்து நால்வரும் அமர, விஷாகன் அங்கு என்னென்ன நன்றாக இருக்கும் என்று கூற ஆரம்பித்தான்.

 

“இங்க எல்லாமே நல்லா இருக்கும். ஐஸ் க்ரீம் சாப்பிடுறீங்களா இல்லை ஷேக் ஆர் ப்ரௌனீ(brownie) சாப்பீடுறீங்களா?” என்று கேட்டான்.

 

“எனக்கு ப்ரௌனீ. நீ என்ன சாப்பிடுற ஹரி?” என்று கேட்டாள் நிவாஷினி.

 

“எனக்கு ப்ளூபெர்ரி ஐஸ் க்ரீம் போதும்.” என்றாள்.

 

உடனே விஷாகன் சென்று என்ன வேண்டுமென்று ஆர்டர் தந்து விட்டு வந்தான். அங்கு செல்ஃப் சர்விஸ் தான். பத்து நிமிடத்தில் அவர்கள் கேட்டது வந்துவிட, பேசிக் கொண்டே சாப்பிட்டனர். ஹரிதாவால் மட்டும் சட்டென்று பேச முடியவில்லை. மற்ற மூவரும் ஏதோ பல நாள் பழக்கம் போலப் பேசினார்கள். இதில் ஒன்று நிவாஷினியும் விஷாகனும் தங்களது கைப்பேசி எண்களை மாற்றிக் கொண்டார்கள். அதை ஹரிதாவால் ஏற்க முடியவில்லை என்றாலும் எதுவும் கூறவில்லை. இது எவ்வளவு தூரம் செல்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்து எதுவும் கூறவில்லை.

 

அவர்கள் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பி மீண்டும் மைக்கேலின் உணவகத்திற்கு வர வண்டியும் தயாராக இருந்தது. ஆச்சரியமாக நிவாஷினி பார்க்க,”நான் தான் உடனே வேணும்னு சொன்னேன்.” என்று விஷாகன் கூற, அவனிற்கு நன்றி தெரிவித்து விட்டு ஹரிதாவுடன் அங்கிருந்து சென்றாள் நிவாஷினி.

 

அவர்கள் சென்றதும் மைக்கேல், விஷாகனிடம்,”என்ன மச்சான் நிவாஷினியோட ஃப்ரண்ட் இப்படிப் பண்றாங்க?” என்று கேட்டான்.

 

“டேய் விடு டா. முதன் முதல்ல இன்னைக்கு தான் பார்க்கிறாங்க. டக்கன்னு நாமலும் போய் பேசவும் அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடுச்சு. இதைத் தப்புச் சொல்ல முடியாது. விடு பார்த்துக்கலாம். ஷினூ நல்லா தான பேசுனா. அது தான் மச்சான் முக்கியம்.” என்றான் விஷாகன்.

 

“நீ சொல்றதும் சரி தான் மச்சான். நிவாஷினி தப்பா நினைக்கலை. அது வரைக்கும் போதும்.” என்று கூறியவன் விஷாகனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 

நிவாஷினி ஹரிதாவுடன் தன் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் இதோ இப்போது விஷாகனிடம் விடைபெற்றுச் சென்றது வரை அனைத்தையும் மறைந்து நின்று ஒருவன் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து ரேவந்திற்கு அனுப்ப, முதலில் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டே வந்தவன் விஷாகனுடன் சிரித்துப் பேசும் புகைப்படத்தைப் பார்த்ததும் கோபத்தில் மேஜை மேலிருந்த பொருட்களை எல்லாம் வெறி கொண்டு தட்டிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!