நீ எனக்கு தந்த காதல் – 24.
நிலாவின் தந்தையாக மாறும் தமிழ்.
தமிழும் நிலாவும் ரிசப்ஷனை அட்டண்ட் பண்ணி விட்டு திரும்பி வரும் போது இருவரும் மனது விட்டு பேசிக் கொண்டு வந்தனர்.
Advertisement
இனி,
‘நிலா நான் ஒன்னு கேக்கறேன் தப்பா நினச்சுக்க மாட்டியே’, என தமிழ் கேட்க,
Advertisement
Advertisement
‘அப்டி என்ன கேக்க போறீங்க ‘, என்றாள் நிலா.
‘அது ஒன்னுமில்ல நான் எந்த பொண்ணு கூடவாவது தொட்டு பேசுனாவோ இல்ல எந்த பெண்ணாவது என்னை தொட்டு பேசுனாவோ உனக்கு கோபம் வருமா’, என தமிழ் கேட்க,
Advertisement
அதற்கு நிலா சிரித்துக் கொண்டே, ‘கோபமா எதுக்கு. நீங்க என்ன கேக்க வறீங்கன்னு புரியல ‘, என்றாள்.
‘ம் புரிஞ்சாலும் புரியாத மாதிரியே கேக்கறது. ‘, என தனக்குள் தமிழ் பேசிய படி ‘அதாவது பொறாமைப் படுவியான்னு கேட்டேன்’, என்றான்.
‘ஆமா பின்ன யாராச்சும் என் புருஷன தொட்டு பேசுனா எனக்கு பொறாமையா தான் இருக்கும். ஆனா உங்க மேல எனக்கு நம்பிக்கை ஜாஸ்தி. நீங்க தான் அப்டி யார் கூடவம் பேச மாட்டீங்களே. உங்களுக்கு தான் கேர்ள் ப்ரெண்ட்ஸ் கம்மி தான. யாழினி கிட்ட பேசும் போது கூட நீங்க நல்ல ப்ரெண்டா அன்பா, அக்கறையா, ஜாலியா இருக்கிறது எனக்கு நான் என் ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா இருக்கிறத ஞாபகப்படுத்தும். எனக்கு தமிழ் புருஷனா இருக்கறத விட நல்ல ப்ரெண்டா இருக்கிறது ரொம்ப பிடிக்கும். ஆமா நீங்க ஏன் இப்ப இந்த கேள்விய கேட்டீங்க.’, என நிலா கேட்க,
‘இல்ல எனக்கு மட்டும் தான் அப்டி தோனுதா உனக்கும் அது மாதிரி தான் தோனுதான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்’, என தமிழ் சொல்ல,
‘உங்களுக்கு எப்டி தோனுச்சு.’, என நிலா கேட்க,
‘ம் அத விடு. சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சில்ல’, என தமிழ் டாப்பிக்கை மாற்ற,
‘அப்போ நம்ம ப்ரெண்ட்ஸ் கூட அடிச்சு விளையாடறதையும், ஜாலியா சிரிச்சு பேசறதயும் பார்த்து சாருக்கு பொசசிவா இருந்திருக்கு. அதான் நமக்கும் அப்டி தான் தோனுமான்னு கேக்கறாரு. ‘, என நிலா தனக்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
‘நிலா அப்புறம் உங்க அப்பாவ உனக்கு ரொம்ப புடிக்குமா. நீ அவர ரொம்ப மிஸ் பண்றியா’, என தமிழ் கேட்க,
திடீரென நிலாவின் முகம் மாறியது. பிறகு , ‘என்னப்பா கேள்வி இது. எல்லா பசங்களுக்கும் அம்மாவ ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் அப்பாவ ரொம்ப பிடிக்கும். இது உலக வழக்கந்தான. இதுக்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன. அதுவும் வீட்டுக்கு முத பொறந்த பொண்ணு. நம்ம வீட்டோட மகாலட்சுமி இவன்னு அடிக்கடி சொல்லுவாரு எங்க அப்பா. ஒரு நாள் யாரும்மா எனக்கு நிலான்னு பேரு வச்சதுன்னு எங்கம்மா கிட்ட கேட்டதுக்கு , ‘உங்க அப்பா தான். நீ அந்த நிலா மாதிரி அழகா இருந்ததால உனக்கு அந்த பேர தான் வைக்கனும்னு சொல்லி வச்சாரு’, ன்னு சொன்னாங்க. நாங்க மிடில் கிளாஸ் பேமிலியா இருந்தா கூட எந்த குறையும் இல்லாம எங்கள வளத்தாரு. என்னையும் என் தம்பியையும் சமமா தான் பாத்து கிட்டாரு. எனக்கு எங்க அப்பாவ நினக்கறப்ப எல்லாம் ஒரு கவிதை தான் ஞாபகத்துக்கு வரும். ‘கடவுள் கூட கேட்டா தான் குடுப்பாரு. கனவுல நினச்சா கூட போதும் உடனே குடுக்கும் என் அப்பா அந்த கடவுளுக்கும் ஒரு படி மேல்’, என் அப்பா கூட அப்டி தான்’, என நிலா தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சொல்ல,
‘சாரி நிலா உங்க அப்பாவ பத்தி கேட்டு உன்ன கஷ்டப் படுத்திட்டேன்’ என தமிழும் அவள் கண்ணீரை துடைக்க,
‘இல்லப்பா எங்க அப்பாவ பத்தி நீ தெரிஞ்சுக்க ஆசை பட்டுதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்’, என்றாள் நிலா.
‘நிலா கவலப்படாத நான் உன்னை உங்க அப்பா மாதிரி பாத்துக்க ட்ரை பண்றேன்’, என தமிழ் சொல்ல,
‘ம் ஓகே டாடி’, என்று நிலா சொல்ல இருவரும் சிரித்தனர்.
‘நிலா நமக்கும் ஒரு பொண்ணு பொறந்தா நானும் அவளும் இப்டி ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருப்போம் போல’, என தமிழ் சொல்ல,
‘ம் நானும் அதெல்லாம் நடந்துராதா ன்னு தான் வெய்ட் பண்ணி கிட்டு இருக்கேன்’, என தனக்குள் சொல்லிக் கொண்டாள் நிலா.
‘சரி நீங்க ரொம்ப நேரமா வண்டிய ஓட்றிங்க. குடுங்க நான் ஓட்டறேன்’, என நிலா கேட்க,
‘பரவால்ல லேட் நைட் ஆகுது. நானே ஓட்றேன்.’, என்றான் தமிழ்.
‘ஆமா தமிழ் என்னைய உங்களுக்கு பிடிச்சிருக்கா.’, என நிலா கேட்க,
‘உன்னை போய் பிடிக்காம இருக்குமா. உன்னை எல்லாருக்கும் பிடிச்சரும் நிலா’, என தமிழ் சொல்ல,
‘இந்த மழுப்பல் எல்லாம் செல்லாது. எனக்கு உங்க மனசுல இருந்து பதில் சொல்லுங்க ப்ளீஸ்’, என நிலா கேட்க,
‘உண்மைய சொல்லனும்னா எனக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல நம்பிக்கையே இல்ல. ஆனா உன்ன பர்ஸ்ட் ஹாஸ்பிடல்ல பாத்தப்பவே என்னவோ உன் கூட ரொம்ப பழகுன ஒரு ஃபீல் இருந்துச்சு. அப்புறம் உன் கூட பழக எனக்கு தயக்கமே வரல. என்ன தான் எல்லாத்தையும் மறந்து இருந்தாலும் என்னவோ தெரியல முன் ஜென்ம பந்தம் மாதிரி உன் கூட இருக்கறப்ப மட்டும் நான் ரொம்ப கம்பர்டபுளா பீல் பண்றேன். இதுக்கு பேர் தான் காதலான்னு எனக்கே தெரியல. ஆனா இந்த நிமிஷம் உங்கூட சந்தோஷமா இருக்கேன்.’, என தமிழ் சொல்ல,
‘எனக்கு இது போதும் தமிழ். உனக்கு எல்லாம் ஞாபகம் வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி. நம்ம காதல் மேல நம்பிக்கை இருக்கு.’, என நிலா தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘தமிழ் எனக்கு எந்த அவசரமும் இல்ல. உங்களுக்கு எப்ப என் கூட உங்க வாழ்க்கைய தொடங்கனும்னு தோனுதோ அப்ப ஸ்டார்ட் பண்ணலாம். அது வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு நல்ல ப்ரெண்ட்ஸா, லவ்வர்ஸா இருக்கலாம்.’, என சொல்ல,
‘நிலா நீ எனக்காக சொன்னாலும் உள்ளுக்குள்ள எவ்ளோ கஷ்டப் படறேன்னு எனக்கு நல்லா தெரியும். உன்ன கஷ்டப் படுத்தறதுக்கு என்னை மன்னிச்சிடு. சீக்கிரமே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம லைஃப ஸ்டார்ட் பண்ணிரலாம். ‘,என தமிழ் தனக்குள் நினைத்த படி, ‘நிலா ஒரு ப்ரெண்டா உன் கூட என் லைஃப் ரொம்ப ஜாலியா இருக்கு. எப்பவும் இப்படியே நீ என் கூட இருக்கனும்னு ஆசை’, என தமிழ் சொல்ல
”வேற வழியில்ல இந்த ஜென்மத்துல உங்க கூட தான் குப்பை கொட்டனும்’, என நிலா சிரித்துக் கொண்டே சொல்ல தமிழும் சேர்ந்து சிரித்தான்.
அப்படியே பேசிக் கொண்டே இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தமிழ் காலிங் பெல் அடிக்க அவன் அம்மா வந்து கதவை திறந்தார்.
‘கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுதா. ‘, என தமிழ் அம்மா கேட்க,
‘ம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது ஆன்டி’, என நிலா சொல்ல,
‘ சரி. ராஜி நீ போய் தூங்கு. நான் கதவ சாத்திக்கறேன்’ என தமிழ் சொல்ல தமிழ் அம்மா சரி என தூங்க சென்றார்.
தமிழ் கதவை சாத்தி விட்டு வர தமிழும் நிலாவும் ரூமுக்கு சென்று மூஞ்சி, கை, கால் கழுவி விட்டு தூங்க சென்றனர்.
‘தமிழ் ரொம்ப தேங்க்ஸ். இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்க காரணம் நீங்க தான். என் லைஃப்ல இன்னிக்கு மறக்க முடியாத நாளா மாத்தி குடுத்த உங்களுக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் தீராது’, என நிலா சொல்ல,
‘நிலா நீ என் வாழ்க்கைல வந்ததுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும்.’, என தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘சரி தேங்க்ஸ் சொன்னது எல்லாம் போதும். தூங்கலாமா’, என தமிழ் சொல்ல,
‘ஆமா இன்னிக்கு நான் ரொம்ப நிம்மதியா தூங்குவேன். குட் நைட்’, என சொல்லி நிலா தூங்க தமிழும் அசதியில் தூங்கினான்.
காலையில் எழுந்து இருவரும் கிளம்பி ஆபிஸ்க்கு சென்றனர்.
நிலாவை பார்த்ததும் நந்தினி ஆர்வமாக வந்து, ‘அப்புறம் எப்டி இருந்துச்சு எல்லாம் ஓகே வா’ என நந்தினி கேட்க,
‘ம் கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுது. என் ப்ரெண்ட்ஸ் கூட நல்லா ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணேன்’, என நிலா சொல்ல,
‘இப்ப அத பத்தி யாரு கேட்டா. நீங்க ரெண்டு பேரும் தனியா போனீங்களே. எதாவது சுவாரஸ்யமா நடந்துச்சான்னு கேட்டா’, என நந்தனி சொல்ல,
‘இரு நாங்க ரெண்டு பேரும் என்ன பர்ஸ்ட் டேட்டிங்கு போனமா, இல்ல ஹனிமூனுக்கு போனமா. நாங்க போனது மேரேஜ் பங்க்ஷனுக்கு. நீ உன் ஆர்வத்த கட்டு படுத்திக்கோ. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல. அங்க என்ன நடந்துச்சுன்னா’, என ஆரம்பித்து நிலா நடந்ததை சொல்லி முடித்தாள்.
‘நிலா இவ்ளோ நடந்திருக்கு. ஒன்னும் நடக்கலைன்னு சொல்ற’, என நந்தினி கேட்க,
‘அப்டி என்ன நடந்து இருக்குனு சொல்ற’, என நிலா புரியாமல் கேட்க,
‘அவரு மேல கோபமா இருக்கியான்னு ஏன் தெரிஞ்சுக்க நினச்சாரு, உன் ப்ரெண்ட்ஸ் கூட நீ ஜாலியா இருக்கறத பாத்து அவரு ஏன் பொறாமை படறாரு, உனக்கு உங்க அப்பாவ எவ்ளோ பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு உன்ன உங்க அப்பா மாதிரி பாத்துக்க ட்ரை பண்றேன்னு ஏன் சொல்லனும், எல்லாத்துக்கும் மேல உன்ன அவருக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உன்ன லவ் பண்றேன்னு சொல்ல தெரியாம முன் ஜென்ம பந்தம் அப்டீன்னு ஏன் சொல்லனும்’, என நந்தினி கேட்டுக் கொண்டே போக,
‘இரு இரு நீ இப்ப என்ன தான் சொல்ல வர. எனக்கு புரியற மாதிரி சொல்லு. இல்ல என் கிட்ட அடி வாங்குவ ‘, என நிலா சொல்ல,
‘மக்கு மக்கு இன்னுமா உனக்கு புரியல. அவரும் உன்ன லவ் பண்றாரு. ஆனா பாவம் அது லவ் தான்னு அவருக்கே தெரியல. கவலப்படாத சீக்கிரமே அவரே வந்து உன்ன லவ் பண்றேன் நிலா அப்டின்னு சொல்லுவாரு’, என நந்தினி சொல்ல,
‘நிஜமாவே உனக்கும் அப்டி தான் தோனுதா. நானும் அப்டி தான் நினச்சேன். பாக்கலாம் என்ன நடக்க போகுதுன்னு. சரி வா வேலய பாக்க போகலாம்.’, என நிலா சொல்ல இருவரும் தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.
நாமும் அவர்களோடு சேர்ந்து நடக்க போவது என்ன என்று காத்திருந்து தெரிந்து கொள்வோமா?
தொடரும்…
