Skip to content
Post Views: 8,395
“ஏங்க்கா நம்ம சேனாவும் அந்த மயுவும் லவ் பண்றாங்களா” என்ற கனகத்தை அதிர்ப்பதியாகப் பார்த்தார் பவுனு.
“ஏய் என்ன பேசறதுனு விவஸ்த்தை வேண்டாம்” என்ற செந்திலின் அதட்டலில் அவரைப் பார்த்த கானகம் “இப்போ என்ன சொல்லிட்டேன் அவங்க லவ் பண்ற விஷயம்தான் தெரிஞ்சிடுச்சே, எனக்கு முன்னாடியே தெரியும் இப்படி ஏதாவது நடக்கும்னு எப்போ பாத்தாலும் நம்ம பையன் பின்னாடியே சுத்திட்டு இருந்தாளே, வெறும் வெள்ளை தோலுதான் வேற என்ன அப்படிலாம் ஒன்னும் அழகும் இல்ல” என்ற கனகத்தின் வார்த்தைகளில் மயூவின் மீதான பொறாமையும் வன்மமும்.
Advertisement
மாமியார் ஜாதகத்தை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்துவிட்டார் என்பதே அவருக்கு அத்தனை சந்தோசம், அவர்கள் வேறு இனம், தந்தை யார் என்று தெரியாது இது அனைத்தும் காரணமாக இருக்கும் வெளியில் சொல்லும்போது ஜாதகத்தை கூறி இருக்கிறார் என்பது கனகத்தின் கணிப்பு.
“ஏண்டி நேத்து சமைஞ்ச பொண்ணும் மீசை முளைக்காத பையனும் வயசு கோளாறுல பழகுன மாதிரி பேசுற, சின்ன வயசுல இருந்து நாம பாக்க வளைந்த பிள்ளைங்க ரெண்டு பேர் மனசுலயும் அப்படி ஓர் ஆசை இருக்குன்னா அதுல என்ன தப்பு”.
Advertisement
Advertisement
“அந்தப் பிள்ளையைக் கட்டிக்கணும்னு சேனாவுக்கு ஒரு நெனப்பு வந்திருக்கு அதுக்கு இப்படி பேசுவியா, சொல்ற சேதி ஒன்னு தான் ஆனா போடுற வார்த்தை ரொம்ப முக்கியம் வார்த்தை மாறிப் போன அர்த்தமே மாறிப் போவும், அவங்க வாழ்க்கையை முடிவு பண்ற வயசெல்லாம் எப்போவோ நம்ம பிள்ளைக்கு வந்துடுச்சு சேனா என்ன முடிவு எடுத்தாலும் சித்தப்பானா நான் கூட நிப்பேன்” என்றவர் தாயை திரும்பிப் பார்த்தார்.
Advertisement
“இத்தனை வருஷத்துக்கப்புறம் காலம் போன கடைசில உங்களுக்கு என்னமா ஜாதகத்து மேல ஒரு பிடிப்பு எதையாவது சொல்லிச் சின்னப்பிள்ளைகள சங்கடப்படுத்தாதீங்க, குடும்பம் வேணும்னு பாத்து பாத்து செய்ற பிள்ளையை நம்ம யாருமே வேண்டாம்னு போக வெச்சுடாதீங்க அம்புட்டுதான் நான் சொல்லுவேன்” என்றவர் மனைவியிடம் “இந்தாடி என்னத்துக்கு வந்தியோ அத மட்டும் பேசிட்டு கெளம்பு” என்றதோடு அண்ணனை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார்.
தெய்வானை சின்ன அண்ணனையும் அவர்களின் வீட்டிற்கு சென்று அழைத்திருந்தார், அவர் வைத்துக் கொடுத்த விலை உயர்ந்த பட்டிலே மயங்கி விட்டார் கனகம், மூத்தவருக்கு என்ன நிறத்தில் புடவை கிடைத்திருக்கும் ஒரே விலையில் புடவை எடுத்திருப்பாரா இல்லை நமக்கு விலை குறைவாக இருக்குமா, வந்தவர் என்ன பேசியிருப்பார் அதோடு சேனா மயூவின் விஷயத்தைப் பற்றியும் கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்று புடவைக்கு ஜாக்கெட் தைக்க போவதாகச் சாக்கு வைத்து வீட்டிற்கு வந்திருந்தார்.
‘என் புள்ள வாழ்க்கையே அந்தரத்துல நிக்குது இதுல பட்டுக் கட்டி பவுசு காட்டணுமா’ என்று நொந்துகொண்ட பவுனு “இல்ல கனகம் முன்னாடி வாங்கின பட்டுப் புடவையே கட்டாம இருக்கு நான் அதையே கட்டிக்குறேன் இப்போ ஜாக்கெட் தைக்கல” என்றார்.
“என்னக்கா நீங்கப் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வரக் கல்யாணம் தாய்மான் அத்தைங்களா நாமதான் முன்னாடி நிக்கணும், அவர் நம்மள கூப்பிடலானும் முறை செய்யத் தாய் மாமன் தானே நிக்கணும் நம்ம உரிமையை ஏன் விட்டுக் குடுக்கணும், நாம ஒன்னும் அவங்களுக்கு கொறஞ்சவங்க இல்லனு காட்டணும் உங்களுக்கு வர இஷடமில்லைனா விடுங்க அளவு பிளவுசும் புடவையும் குடுங்க நானே தைச்சுட்டு வரேன்” என்றார்.
அப்படியாவது புடவையைக் கண்ணில் காட்டுவாரா என்று பார்த்திருந்தார், ஆனால் கனகத்தின் சூது வாது ஒன்றும் பவுனுக்கு கிடையாது அவருக்கு அது தெரியவும் தெரியாது கல்யாணத்திற்கு போவதோ சபையில் மரியாதையோ ஒன்றுமே பவுனின் நினைவுகளில் இல்லை.
மகனைப் பார்த்தே இரண்டு நாட்கள் ஆகிறது அன்று “அவளை விட்டுடேனா நான் பொணத்துக்கு சமம்” என்று கூறி சென்றவன்தான் இன்னும் வீடுவரவில்லை பேசவும் இல்லை என்ற கவலையில் இருக்கிறார்.
“அவதான் வேண்டாம்னு சொல்றாளே கனகு நீ போய் ஆகவேண்டியதை பாரு” என்றார் கோசலை அதனபிறகு பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் தையல் கடைக்குக் கிளம்பிவிட்டார் கனகம்.
“அந்தப் பிள்ளைக்கு என்னத்த தங்கமான பொண்ணுதானே,
எதுக்குத்த பிடிவாதமா வேண்டாம் சொல்றீங்க நீங்கச் சொன்னதுதான் காரணமா இல்ல மயூரி வேற ஆளுங்கன்னு ஜாதகத்தை காரணமா சொல்றீங்களா, என் புள்ள முகத்தைப் பாக்க முடியலத்த” என்ற பவுனை பார்த்த கோசலை.
“உனக்குக் கல்யாணம் முடிஞ்சு நீ இந்த வீட்டுக்கு வந்து நாப்பத்தஞ்சு வர்ஷம் ஆகுது, இத்தனை வருஷத்துல நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதானா… நான் சொன்னதுல இருக்குற உண்மை உன் புருஷனுக்கு புரிஞ்சிருக்கு அதான் அவன் பேசாம இருக்கான் இல்லனா அவன் பிள்ளை ஆசைப்பட்டதை செய்யாம விடுவானா” என்றவர்.
“என் பேரனை மிஞ்சி எதுவும் இல்ல பவுனு எனக்கு அது உனக்குப் புரியாது” என்றவர் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
மலைக்கோவில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறினான் சேனா, வெளியில் எங்கும் அவளைக் காணவில்லை உள்ளே சென்று பார்க்க விழிகள்மூடி தீவிரமாக அம்மனை வேண்டிக்கொண்டிருந்தாள், முகம் எல்லாம் சிவந்திருந்தது விழியிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது, கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்துகொண்டே நின்றுவிட்டான்.
“இந்தாம்மா பிரசாதம்” என்ற பூசாரியின் குரலில் விழிகள் திறந்தவள் முன்னில் நின்றவனை பார்த்து ஒரு நொடி தடுமாறினாள், பிறகு பூசாரியின் கையிலிருந்து தட்டை வாங்கிக்கொண்டாள் உள்ளே செல்லத் திரும்பியவர் “அம்மாடி வீட்டுக்குப் போயிட்டு மஞ்சள் பத்து போட்டுக்கோ இதெல்லாம் உங்களுக்குப் பழக்கம் இல்லாதது உடம்புக்கு முடியாம போய்டப்போவுது” என்ற உள்ளே சென்றார்.
என்ன என்று தெரியாமல் அவளைப் பார்த்து நின்றவன் அவள் சொல்லமாட்டாள் என்று புரிய “அய்யா எது பழக்கமில்லன்னு சொன்னீங்க” என்க.
“படிபூஜை செஞ்சிருக்குப்பா இந்தப் பொண்ணு அதும் முட்டிபோட்டுட்டே ஏறியிருக்கு, அதுக்காகச் சொன்னேன்” என்றவர் நகர்ந்துவிட அவன் உடல் இறுகியது.
வேகமாக அவள் அருகில் நெருங்கினான் சிவப்பு நிறத்தில் டாப்ஸ் அணிந்திருந்தாள் அதை விலக்கிப் பார்க்கக் கீழே அணிந்திருந்த மஞ்சள் நிற லெக்கின்ஸ்ன் முட்டிப் பகுதியில் ரத்தம் கசிந்திருந்தது “கிறுக்காடி பிடிச்சுருக்கு உனக்கு” என்றவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நின்றிருந்தாள், ஏனோ அழுகை மட்டும் நிற்கவில்லை.
அப்படியே அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டவன் வேகமாகப் படிகளிறங்கினான், வழியில் ஒரு துணிக்கடையில் நிறுத்திக் கையில் கிடைத்த பிராக் ஒன்றை எடுத்துக்கொண்டான், அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை நேரே தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.
அவளைக் கைகளில் அவன் தூக்கி வருவதை பார்த்த பெரியசாமி தாத்தா அவசரமாக மனைவி பவளத்தை அழைத்தார் “ஏய் புள்ள இங்க வா” என்றவர் “என்னாச்சு தம்பி” என்க.
“ஒண்ணுமில்ல கொஞ்சம் மஞ்சள் வேணும் பத்து போட” என்றான், கேட்டுக்கொண்டு வந்த பவளம் மீண்டும் குடிசைக்குள் நுழைந்தார் அந்தச் சிறிய குடிசைக்குள் இருந்த படுக்கையைத் தட்டி விரித்தார் பெரியசாமி அவளை அதில் அமரவைத்தவன் அருகில் அமர்ந்துகொண்டான்.
மஞ்சளோடு கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து அரைத்து எடுத்துவந்த பவளம் அதை அவன் கையில் கொடுத்துவிட்டு “நாங்க வெளில போயிட்டு வந்துடுறோம் தம்பி” என்று கணவனுக்குக் கண் காண்பிக்க அவரும் எழுந்து கதவை நன்றாகச் சாற்றிவிட்டு சென்றார்.
கவரிலிருந்து அந்த உடையை எடுத்தவன் “இந்தா இதை மாத்திட்டு வா” என்றான், அதைக் கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்திருக்க “என்ன நானே மாத்தி விடட்டுமா” என்க.
சட்டென்று எழுந்துகொண்டவள் வலியில் முகத்தைச் சுருக்கினாள் “மச்… மெதுவா செஞ்சா” என்ன என்றவன் கைபிடித்து அழைத்துச்சென்று அங்கிருந்த தடுப்பின் பின்னே நிறுத்தினான்.
“மாத்திட்டு வா” என்றவன் அந்தக் குடிசையின் ஒரு மூலையில் சமையல் அறையாக இருந்த சிறிய இடத்தில் இருந்த விறகடுப்பை பற்றவைத்து பிளாக் டீத்தயார் செய்தான், அதைச் சூடோடு அவன் எடுத்து வரக் கட்டிலில் அமர்ந்திருந்தாள் மயூரி.
“குடி” என்று அவளிடம் அதைக் கொடுக்க “வேண்டாம்” என்றாள் தலை அசைத்து, அவன் அப்படியே நிற்க வாங்கிக்கொண்டவள் கையிலே பிடித்து அமர்ந்திருக்க சிந்திய இருதுளி கண்ணீர் அந்தச் சுடுநீரில் விழுந்து சிதறியது, அவள் கையிலிருந்து அந்தத் தேநீரை வாங்கியவன் தன் கையில் இருந்த கிளாஸை அவள் கையில் வைத்தான்.
அவள் நிமிர்ந்து பார்க்க அவளிடமிருந்து வாங்கிய தேநீரை பருகிக்கொண்டிருந்தான் மீண்டும் குனிந்துகொண்டவள் அவன் குடித்துவிட்டு தந்த மிச்ச தேநீரால் தொண்டையை நனைத்துக்கொண்டாள்.
அவள் கால்களை எடுத்து மடியில் வைத்தவன் பிராக்கை கொஞ்சமாக மேலேற்றி மஞ்சளை எடுத்துத் தடவ அவன் முழங்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் எரிச்சலில், பால் நிறத்தில் பஞ்சு போன்ற மென்மையான மேனியில் நன்றாகக் காயம் செய்திருந்தது கல்படிகள், மஞ்சளை தேய்த்துக்கொண்டே “என்ன சொன்னாங்க அப்பத்தா” என்க.
மீண்டும் அழுகை மட்டுமே பதிலானது அவளை அப்படியே தன்னை நோக்கி இழுத்து அணைத்தான் “போதும்டி இன்னும் எவ்ளோ அழுவ” என்றான் குரல் இடற.
“நான் சொன்ன பொய் உண்மையாவே இருந்திருக்கலாம் என்கிட்டயிருந்து உங்களை யாரும் பிரிச்சுருக்க மாட்டாங்க” என்றாள் வயிற்றில் கைவைத்து.
“அப்பா யாருன்னு தெரியலையே அம்மாவது உயிரோட இருந்திருக்கலாம் இப்போ நான் யார்கிட்ட போய்க் கேப்பேன் என்னோட பொறந்த டைம் எல்லாம், எனக்கு அது எதுவும் தெரியாதே நான் ஒண்ணுமே தப்பு செய்யலையே” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை.
“நீ எப்போவும் தப்பில்ல… நாள் நேரம் அப்பா யாரு அம்மா யாரு எதுவும் எனக்குத் தெரியவும் வேண்டாம்” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி “நான் என் குட்டிமாவை மட்டுமும்தான் நேசிக்கிறேன் வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை”.
“மொத மொதலா உன்னைக் கைல தூக்கினப்போ நீ யாரு என்னனு எதுவும் எனக்குத் தெரியாது அன்னைக்கே என்னைக் கட்டிபோட்டவடி நீ, உன் கிராண்ட்பா சொன்னாலோ என் அப்பத்தா சொன்னாலோ எதுவும் மாறாது இந்தத் தேவசேனாபதி பொண்டாட்டி நீதான் அதுல மாத்தமில்ல இந்த ஜென்மத்துல, அப்படியென்ன என்மேல நம்பிக்கை இல்லையடி உனக்கு உன்னைத் தூக்கி குடுத்துடுவேனா எவனுக்காது” என்றவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“போலீஸ்…”.
“ஹ்ம்ம்”.
“எனக்குக் கண்டுபிடிச்சு குடுப்பீங்களா யாருனு” என்றவளிடம் “வேணுமா” என்றான்.
“ஹ்ம்ம் தெரியணும்… யாரு எதுக்குன்னு எனக்குத் தெரியணும்”.
“அந்த உண்மை ஒருவேளை உன்னைக் காயப்படுத்தலாம் குட்டிமா, அத தோண்டி எடுக்கணுமா” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “தெரியணும்” என்றாள் பிடிவாதம் பிடிக்கும் குழந்தையாக.
வாய்வார்த்தையாக அவளிடம் உறுதி அளிக்கவில்லை, அவளுடைய உச்சசியில் இதழ் பதித்து அவளைத் தன்னுடைய அணைப்பிலே வைத்துக்கொண்டான்.
“இங்க பாரு அப்படிலாம் மத்தவங்களால நம்மளை தோக்கடிச்சுற முடியாது, இப்படி அழற மயூரி எனக்குப் பிடிக்கல என்னை எப்போவும் டென்ஷன் பண்ற அந்த வாலு மயூரிதான் வேணும், வயசானவங்க அப்டித்தான் தேவையில்லாம ஏதாவது யோசிச்சுட்டே இருப்பாங்க எல்லாம் சரியாயிடும் நான் பாத்துக்குறேன் சரியா” என்றவனை மெல்லிய சிரிப்போடு பார்த்து நின்றாள்.
அந்தப் பச்சை நிற விழிகள் இன்னும் கூடுதல் ஒளியோடு அடர் பச்சை நிறத்தில் மிளிர்ந்தது “போ” என்றான் வீட்டில் வாயிலில் நின்றுகொண்டு, அவன் கொண்டுவந்து விட்டதையும் அவனுடைய கை அணைப்பில் நிறுத்திப் பேசுவதையும் பார்த்து நின்றிருந்தார் ஒஸ்கர், அவள் வீட்டிற்குள் சென்றதை பார்த்த பிறகே கிளம்பினான் சேனா, வீட்டிற்குள் நுழைந்தவள் அவரைப் பார்த்தாலும் ஒன்றும் பேசாமல் கடந்து சென்றாள்.
பூஜாவின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது அரசியல்வாதியின் குடும்ப விஷேஷம் கேட்கவா வேண்டும் எங்கும் எதிலும் ஆடம்பரம், பூஜா மிகச் சாதாரணமாகவே இருந்தாள் முழுமனதாக இந்தத் திருமணத்தை அவள் ஏற்றுக்கொள்ள முயன்றாள், தந்தையின் அதிகாரத்திலிருந்து கணவனின் அதிகார எல்லைக்குள் செல்கிறாள் அவளைப் பொறுத்தவரை அவ்வளவுதான் பெரிதாக வித்யாசம் ஒன்றுமில்லை.
தெய்வானைக்கு மகளை நினைத்துக் கொஞ்சம் கவலை இருந்தது எப்படி இந்த வாழ்வோடு பொருந்த போகிறாள் என்று, நிர்மல் அவன் நினைத்ததை மட்டுமே நடத்திக்கொள்பவன் வெளியில் செல்ல வேண்டும் என்று தோன்றினால் கடைசி நிமிடம் அவளுக்கு அழைத்து “ரெடியா இரு வெளியில் போகிறோம்” என்பான்.
அவன் என்ன மாதிரி சொல்கிறானே அப்படியே உடை அணிய வேண்டும், தன்னை அவனோடும் அவனுடைய அதிகாரத்தோடும் பொருத்தப்பட்டு போகத் தயார் செய்துகொண்டிருந்தாள் இதுதான் என்று முடிவான பிறகு அழுது என்ன செய்யபோகிறோம் என்ற எண்ணமே, தன் தாய் தந்தையை எப்படி சமாளிக்கிறாரோ அப்படி தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு தெய்வானைக்கு கணவனோடு வாக்குவாதம் நடந்தது “ஏங்க மாப்பிளை குடிப்பாரா? டாக்டரா இருந்துட்டு இது தப்புனு அவருக்குத் தெரியலையா, உங்களுக்கு இது தெரியுமா” என்றவரை பார்த்த ராஜேந்திரன் “ஏன் டாக்டர்னா குடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா என்னமோ டாஸ்மார்க்குல குடிச்சுட்டு ரோட்ல கிடக்குறவன் மாதிரி பேசுற, அவர் குடிக்கிறது பாரின் சரக்குடி ஒன்னொன்னும் எவ்ளோ விலை தெரியுமா” என்றவரை அட அர்ப்பமே என்று பார்த்துநின்றார் தெய்வானை.
“ காசு அதிகமா குடித்து குடிச்சா குடி தப்பில்லையா அடிக்கடி பார்டிலாம் கூடப் போறாராம் அங்க என்னலாம் நடக்கும்னு நமக்கு எப்படி தெரியும், நம்ம பிள்ளையோட வாழ்க்கைங்க கொஞ்சம் விசாரிச்சிருக்கலாம்ல” என்றதும் அவரை அடிப்பதை போல எழுந்து அருகில் வந்தார் ராஜேந்திரன்.
“ஏண்டி நானும்தான் குடிக்கிறேன் என்கூட வாழ்ந்து இப்போ என்ன கொறஞ்சுபோச்சு உனக்கு, உன் பொறந்த வீட்டில இருந்ததைவிட சொகுசாதான கொட்டிக்கிட்டு வாழுற” என்றார்.
“அதையேதான் நானும் சொல்றேன் எந்தப் பெத்தவளும் தான் அனுபவிச்ச கஷ்டத்தைத் தன் பிள்ளைங்க அனுபவிக்க கூடாததுனு தான் நினைப்பாங்க” என்று சொல்லிமுடிக்கும்முன் ராஜேந்திரன் கை இடியென அவர் கன்னத்தைப் பதம் பார்த்தது, முதல்முறையாக ராஜேந்திரனின் சிறிய மகள் பூர்விக தந்தையை வெறுப்போடு பார்த்தாள்.
“அக்கா நீ ஏன் பேசாம இருக்க பாக்க நல்லா இருந்தா காசு இருந்தா போதுமா, அவன் கேரக்டரே எனக்குப் பிடிக்கல நீ அப்பாகிட்ட பேசு உனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கல சொல்லு” என்ற தங்கையைப் பார்த்தவள் “அப்பா எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்குதான் செய்வார் அப்புறம் என்ன பூர்வி, இதுவும் நல்லதுதான்னு நான் நம்புறேன் நீயும் நம்பு” என்றவள் புன்னகை அவள் விழிகளை எட்டவில்லை.
கனகம் எதிரார்த்தபடி அங்கு ஒரு மரியாதையும் கிடைக்கவில்லை, தெய்வானையின் ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன் வசதிப்படைத்தவன் அவனைத் தாய்மாமனாக முன்னிறுத்தி திருமணத்தை நடத்தி முடித்தான் ராஜேந்திரன்.
கோசலையும் கந்தசாமியும் பவுனும் கை நனைக்காமலே மண்டபத்திலிருந்து வெளியேறினர் “சாப்பிட்டு போகலாம்” என்ற மனைவியை அங்கேயே விட்டுவிட்டு மகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றார் செந்தில், என்ன செய்ய என்று தெரியாமல் நின்ற கனகம் தனியே ஆட்டோ பிடித்து அவர்களின் பின்னையே சென்றார்.
error: Content is protected !!