Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 28

கவின், யாழினி வீட்டில் தமிழ், நிலா.

 

கவின், யாழினி வீட்டுக்கு போவதற்காக முதல் நாள் நிலாவும், தமிழும் ஸ்வீட், பூ, இருவருக்கும் டிரஸ்  வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தனர்.

 



Advertisement

இனி,

 

‘நிலா ஏன் மா இவ்ளோ லேட்டு’, என தமிழ் அம்மா கேட்க,

Advertisement

 

Advertisement

‘நாளைக்கு யாழினிய பாக்க போறதுக்கு எல்லாம் வாங்கிட்டு வர லேட்டாயிருச்சு ஆன்டி’, என நிலா சொல்ல,

 

‘சரி போய் ரெண்டு பேரும் பிரஷப் ஆகிட்டு வாங்க சாப்டலாம்’, என தமிழ் அம்மா சொன்னார்.

Advertisement

 

இருவரும் போய் பிரஷப் ஆகி விட்டு வர அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

 

‘நாளைக்கு எத்தன மணிக்கு போறோம் தமிழ்’, என தமிழ் அப்பா கேட்க,

 

‘டாடி காலைல பத்து மணிக்கு போய்ட்டு பாத்துட்டு அப்புறம் உங்கள கொண்டு வந்து விட்டுட்டு நானும் நிலாவும் ஆபீஸ்க்கு கிளம்பிடுவோம்’, என தமிழ் சொல்ல அனைவரும் பேசி கொண்டே சாப்பிட்டு விட்டு படுக்க சென்றனர்.

 

‘தமிழ் லைட் ஆஃப் பண்ணவா’, என நிலா கேட்க,

 

‘நிலா எனக்கு லைட்டா தலை வலிக்குது. தைலம் தேச்சு விடறயா’, என தமிழ் கேட்க,

 

‘எப்பைல இருந்துங்க. ஹாஸ்பிடல் போலாமா’, என நிலா பதட்டமாக கேட்க,

 

‘நிலா ஒன்னுமில்ல லைட்டா தான் வலிக்குது. நீ தைலம் மட்டும் தேச்சு விடு. தூங்கி எழுந்தா சரியாகிடும்’, என தமிழ் சொல்ல,

 

நிலா தைலத்தை தடவி விட்டு தலையை அமுக்கி விட தமிழ் தூங்கி போக பிறகு அவளும் தூங்கினாள்.

 

காகாலையில் எழுந்து அனைவரும் ரெடியாகி சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

 

‘தமிழ் கார நீ ஓட்டாம ஏன் நிலா கிட்ட குடுத்துட்ட’,  என தமிழ் அம்மா கேட்க,

 

‘அதான் ஆன்டி கேக்கறாங்கல்ல பதில் சொல்லுங்க ‘, என நிலா சொல்ல,

 

‘அது ஒன்னுமில்ல ராஜி நிலாவுக்கு கார் ஓட்டனும்னு ஆசையாம். எங்கிட்ட கெஞ்சி கேட்டா அது தான் சரி நீயே ஓட்டுன்னு விட்டுட்டேன்’, என தமிழ் சமாளிக்க,

 

‘நல்லா சமாளிக்கறீங்க’, என நிலா சொல்ல,

 

‘நல்ல வேளை நீ ஓட்டல. .நீ ஓட்டுனா அப்டியே ஃப்ளைட் ஓட்றவன் மாதிரி ஸ்பீடா போவ.  பின்னாடி யாரு உட்கார்ந்து இருக்காங்கன்னு எல்லாம் பாக்க மாட்ட’,  என தமிழ் அம்மா சொல்ல தமிழ் திரும்பி அவரை முறைத்தான்.

 

பேசிக் கொண்டே வீடு வந்து சேர தமிழ் அம்மாவும், அப்பாவும் காரிலிருந்து இறங்கினர்.

 

நிலா ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுக்க அதை அவன் அவனது அம்மாவிடமும், அப்பாவிடமும் கொடுக்க கடைசியாக ஸ்வீட் பாக்ஸையும், பூவையும் எடுத்துக் கொண்டு  நிலா இறங்க தமிழ் கார் டோரை சாத்தி லாக் செய்து விட்டு வர அனைவரும் உள்ளே சென்றனர்.

 

‘அம்மா தமிழ் வீட்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க. யாழினி, டாடி’, என கவின் கூப்பிட அனைவரும் வந்து வாசலில் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

”அன்னிக்கு படத்துக்கு போனதுக்கு அப்புறம் இப்ப தான் பாக்குறோம்’, என எல்லாரும் சேர்ந்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

‘யாழினி உண்டாயிருக்கற விசயத்த கேட்டதும் எங்களுக்கு  ரொம்ப சந்தோஷம். அதான் அவளயும் கூடவே உங்க எல்லாரையும் பாத்துட்டு போலாம்னு வந்தோம். யாழினி இங்க வா’, என தமிழ் அம்மா சொல்ல யாழினியும் அருகில் வர,

 

நிலா அந்த பூவ எடுத்து யாழினி தலைல வச்சு விடு’, என தமிழ் அம்மா சொல்ல நிலாவும் வைத்து விட்டு ‘கங்க்ராஜூலேசன்ஸ் யாழினி, கவின்’, என நிலா சொல்ல,

 

‘நிலா சும்மா சொன்னா எப்டி. இந்தா நீ தான குடுக்கனும்னு வாங்கன.’, என தமிழ் சொல்லி டிரஸ்ஸை நிலாவிடம் குடுக்க,

 

அதை வாங்கி தமிழ் அம்மா, அப்பாவிடம் குடுத்து, ‘ஆன்டி, அங்கிள் இந்தாங்க இத கவின், யாழினிக்கு குடுத்து ஆசீர்வாதம் பண்ணுங்க ‘, என நிலா சொல்ல,

 

‘எதுக்கு இவ்ளோ தயக்கம் . தமிழ், நிலா ரெண்டு பேரும் வாங்க ‘,என  தமிழ் அப்பா கூப்பிட நால்வரும் சேர்ந்து அந்த கிஃப்டை குடுத்து ‘கங்க்ராஜூலேசன்ஸ் கவின், யாழினி’, என கத்த கவின் பெற்றோரும் சந்தோஷப்பட்டு அவர்களும் சேர்ந்து வாழ்த்த யாழினிக்கு சந்தோஷத்தில் அழுகையே வந்தது.

 

எல்லோரும் சேர்ந்து சமாதான படுத்த யாழினி அமைதியானாள்.

 

‘நிலா, தமிழ் தேங்க்ஸ் . ‘, என கவின், யாழினி சொல்ல,

 

‘பார்ரா நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்’, என்றான் தமிழ்.

 

‘நாங்க குடுத்த கிஃப்ட வாங்கிக்கிட்டதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்னும்.’  என நிலா சொல்ல,

 

‘தமிழ் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எப்ப குட் நியூஸ் சொல்லப் போறீங்க. நாங்க அதுக்காக தான் வெய்ட் பண்றோம்’, என கவின் அம்மா கேட்க,

 

‘அதுக்கென்ன ஆன்டி சீக்கிரமா சொல்லிட்டா போச்சு’, என தமிழ் சொல்ல அனைவரும் அவனையே பார்த்தனர்.

 

‘சரி எல்லாம் வாங்க சாப்டலாம்’, என கவின் அம்மா கூப்பிட்டு விட்டு உள்ளே செல்ல நிலாவும் அவர்களுக்கு உதவி பண்ண பின்னாடி சென்றாள்.

 

தமிழ் மற்றும் கவின் பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்தனர்

 

‘டேய் தமிழ் இங்க வா. ஆன்டி கேட்ட கேள்விய புரிஞ்சு கிட்டு தான் நீ அந்த பதில் சொன்னியா’, என யாழினி கேட்க,

 

‘நீ வேற யாழினி இவனுக்கு எல்லாமே விளையாட்டு தான். இன்னும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள சார் சீக்கிரமா குட் நியூஸ் சொல்றாராம்’, என கவின் சொல்ல,

 

‘தமிழ் இங்க பாரு. இன்னும் எதுக்காக வெய்ட் பண்ற. நிலா மாதிரி ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைச்சிருக்கா. உன் சொந்தங்களை தன் சொந்தம் மாதிரி நினக்கற குணம், கல்யாணம் ஆகியும் உனக்காக காத்துக்கிட்டு இருக்குற பொறுமை, எல்லார் கிட்டயும் காட்ற அன்பு, அக்கறை இதெல்லாம் பாத்துமா இன்னும் நிலாவ உன் வைஃபா ஏத்துக்க தோனல’,  என யாழினி கேட்க,

 

‘அதில்ல யாழினி எனக்கு அவள ரொம்ப பிடிக்குது. அத அவகிட்ட எப்டி சொல்றதுன்னு தெரியல.’, என தமிழ் சொல்ல,

 

‘போடா நீ சொல்றதுக்குள்ள முதல்ல மாதிரி அவளே கண்டுபிடிச்சு வந்து சொல்லிருவா’, என கவின் சொல்ல,

 

‘சரி போதும். சீக்கிரமா அவளும் நானும் சேந்துருவோம். அத விடு கிஃப்ட பிரிச்சு பாரு’, என தமிழ் சொல்ல யாழினி பிரிக்க கவின் உதவி செய்தான்.,

 

‘அய் பர்ப்பிள் கலர்’, என யாழினி குழந்தை மாதிரி கத்த,

 

‘எனக்கு புரிஞ்சுருச்சு இப்ப நீ என்ன சொல்ல போறேன்னு. இது உன் பேவரைட் கலர்னு சொல்ல போற. அதான’, என தமிழ் கேட்க,

 

‘ஆமா அதே தான். எனக்கு இந்த சேரி ரொம்ப பிடிச்சிருக்கு.’, என யாழினி சொல்ல,

 

‘தமிழ் எப்படிடா  உனக்கு தெரியும் யாழினிக்கு இந்த கலர் தான் பிடிக்கும்னு. நானே நாலு, அஞ்சு தடவ கேட்டும் சொல்லாம நீயே கண்டிபிடின்னு சொல்லி அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு கெஞ்சி கேட்டப்ப தான் சொன்னா.’, என கவின் ஆச்சர்யமாக கேட்க,

 

‘அதான உனக்கு தெரிய சான்ஸே இல்ல. அந்த அளவுக்கு நீ இதெல்லாம் கவனிக்க மாட்ட, கேக்கவும் மாட்ட. அப்புறம் எப்டி கரெக்டா’, என யாழினி கேட்க,

 

‘நீங்க வேற எனக்கும் இது ஷாக்கா தான் இருக்கு. நிலா தான் உன்ன பாத்ததுல்ல நீ போட்ருக்க, வெச்சிருக்க பொருள வச்சு இந்த கலர் உனக்கு பிடிக்கும்னு கெஸ் பண்ணி எடுத்தா.’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன டா சொல்ற. என்னை ஒரு மூனு, நாலு தடவ பாத்திருப்பாளா. அத வச்சே கரெக்டா கெஸ் பணாணிருக்கா. இன்ட்ரஸ்டிங்க் டா கூட இருக்கவங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு தெரிஞ்சு நடந்துக்குறா. யூ ஆர் ஸோ லக்கி’, என யாழினி சொல்ல,

 

‘இவன் லக்கி தான். ஆனா அந்த பொண்ணு நிலா தான் பாவம்’, என கவின் கிண்டல் செய்ய தமிழ் முறைக்க யாழினி சிரித்தாள்.

 

‘நிலா எல்லாரையும் கூட்டிட்டு வா சாப்பிட’, என கவின் அம்மா சொல்ல,

 

‘சரி வாங்க ரெடி ஆயிடுச்சு எல்லாம் சாப்பிடலாம்’, என நிலா கூப்பிட எல்லாரும் சந்தோஷமாக பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

 

தமிழ் அம்மா விடம், கவின் அம்மா , ‘நிலா மருமகளா கிடச்சதுக்கு  நீங்க  ரொம்ப குடுத்து வச்சிருக்கீங்க ‘, என கவின் அம்மா சொல்ல தமிழ் அம்மா நிலாவை பார்த்தார்.

 

எல்லோரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர்.

 

‘சரி கவின், யாழினி நாங்க கிளம்பறோம். ஆபிஸ்க்கு லேட்டாச்சு’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன டா சொல்ற ‘, என கவின் கேட்க,

 

‘ஆமா டா இன்னொரு தடவ லீவு நாள்ல வறோம்’, என தமிழ் சொல்ல,

 

‘கண்டிப்பா கூட்டிட்டு வரனும் சரியா’,  என யாழினி சொல்ல,

 

‘ஓகே ஓகே. சரி எல்லாம் கிளம்பலாமா’, என தமிழ் கேட்க,

 

எல்லோரும் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

தமிழ் சொன்ன மாதிரியே தன் காதலை நிலாவிடம் சொல்வானா?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!