Skip to content
Post Views: 4,252
உன் காதல் ஒரு வரமாய்….16
ஒரு வருடம் கடந்து இன்று,
“அடியே அமிர்தா….சீக்கிரம் வா….மூணாவது பந்தி நடக்குது இதையும் விட்டோம்னா நமக்கு சோறு கிடைக்காது….”என்று கீதா அமிர்தாவை இழுத்துக் கொண்டு வந்து பந்தியில் அமர்ந்துவிட்டாள். பாரதியின் திருமணத்திற்கு தென்காசி வந்திருந்தனர் இருவரும்.
“க்கா ஏன்கா மானத்த வாங்குற….உன்னால பாரு எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க……”என்று அமிர்தா கூற,
Advertisement
“யாரு பார்த்தா நமக்கென்ன…..நமக்கு சோறு தான் முக்கியம்….சாப்பிடு…..கறி கேட்டு வாங்கிக்கடீ…..ஏம்பா இன்னும் கொஞ்சம் கறி வைப்பா….”என்று கூற,
“அச்சோ போதும்…க்கா நீங்க ரொம்ப பண்ணுறீங்க….நல்லாயில்லை சொல்லிட்டேன்….”என்று அமிர்தா கூற,
“அடி போடி….நல்லா சாப்புடு….இதுக்கு அப்புறம் எப்ப நமக்கு நல்ல சோறு கிடைக்குமோ…..”என்று கூற,அமிர்தாவின் கை நின்றுவிட்டது.மனதில் பாரம் அதிகரித்தது திரும்பி கீதாவை பார்த்தாள் ஒடுசலான தேகம் இந்த ஒரு வருடத்தில் மேலும் ஒடுங்கியிருந்தது.நல்ல கலையான முகம் தான் தூசி படிந்தது போல் கலையிழந்து இருக்க கழுத்தில் திருமணம் ஆனதற்கான அறிகுறியாக ஒரு மஞ்சள் கயிறு ஏனோ தானோவென்று தொங்கியது.
Advertisement
“என்னடீ என் மூஞ்சியே பார்த்துக்கிட்டே இருக்க….சாப்பிடு….பாரதியை வேற பார்த்துட்டு நாம கிளம்பினா தான் விடியற்காலையில சென்னைக்கு போக முடியும்…..சீக்கிரம்…..”என்று கூற,
Advertisement
“ம்ம் சரிக்கா….பாரதிக்கா இன்னைக்கு அழகா இருக்காங்கல்ல….முகம் முழுக்க வெட்கம்….”என்று கூற,
“இருக்காத பின்ன கல்யாண பொண்ணு வெட்கபடாம இருக்க முடியுமா….”என்று கீதா கூறிக் கொண்டே இருவரும் உண்டு முடித்து கை கழுவும் பகுதிக்கு வந்திருந்தனர்.அமிர்தாவிடம் பேசிக் கொண்டே வந்த கீதா திடீரென ஒருவர் மீது மோதி கீழே விழ பார்க்க,அவள் கீழே விழாமல் தாங்கி பிடித்தது ஒரு வலிமையான கரம்.
முகம் முழுக்க பாதி தாடியிலேயே ஒளிந்து கொண்டு இருக்க கண்கள் மட்டும் கோவைப் பழம் போல சிவந்திருந்தது.
Advertisement
“க்கா பார்த்துக்கா…..”என்று அமிர்தா கூறிக் கொண்டே வந்தவள்.எதிரில் ஜாம்பவான் போல நின்றவனைக் கண்டவுடன் இரண்டடி பின்னுக்கு செல்ல,
“என்ன மைனா தப்பிச்சிக்கிட்டே இருந்த…..இன்னைக்கு மாட்டிக்கிட்ட….”என்று அவளின் இடையை கச்கிக் கொண்டே கூற,கீதா பயத்துடன் திமறியபடி அவனை தள்ளிக் கொண்டு நின்றாள்.அமிர்தாவிற்கு அதிர்ச்சி ஆச்சிரியம் இரண்டும் ஒன்றாக வந்தது.தன்னிடம் யாரையும் அத்தனை எளிதில் கீதா நெருங்கவிட்டதில்லை குறிப்பாக ஆண்கள்.அவள் கடந்து வந்த பாதை அவளை அனைவரிடமிருந்து தள்ளியே நிறுத்தியிருந்தது.
“விவிவி….விடு….விடுங்க…..”என்று அவள் திமிற அவனோ அவளை லட்ஜையின்றி ரசித்துக் கொண்டிருந்தான்.
“அட என்ன மைனா நீ ரொம்ப தான் துள்ளுற….அப்புறம் தூக்கிட்டு போயடுவேன் பார்த்துக்க….”என்று வேறு கூற,கீதாவின் முகம் இன்னும் கலவரமானது.
“அட பயம் வந்திடுச்சு என் மைனாவுக்கு…..ஒழுங்கா நீயா வந்துட்டனா சேதாரம் கம்மியா இருக்கும்…..இல்லை….வருத்தப்படுவ….”என்று விரல் நீட்டி எச்சரித்தவன் அவளை விட்டுவிட்டு செல்ல கீதா பிரம்மை பிடித்து போல நின்றுவிட்டாள்.அமிர்தா அவன் சென்றவுடன் கீதாவின் அருகில் வந்து,
“அக்கா….கீதாக்கா…..”என்று அவளின் தோளை தொட,
“ஆங்….”என்று நிகழ்வுக்கு வந்தவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் திருதிருக்க,
“க்கா….என்னக்கா ஆச்சு….யாரது…..”என்று அமிர்தா கேட்ட பிறகே மீண்டும் வந்தவனின் நினைவுகள் மனதெங்கு ஆக்கரமிக்க நடுக்கம் வந்தது உடலில் அதுவும் அவன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அவளின் நடுக்கத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொடுக்க பயந்து போனாள் அமிர்தா.
“அ…அதெல்லாம் ஒண்ணுமில்ல வா…நாம பாரதியை பார்த்துட்டு கிளம்புவோம்….மணியாகுது பாரு…வா….”என்று கீதா அமிர்தாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.இருவரும் பாரதியிடம் வர,
“எங்க போனீங்க நீங்க இரண்டு பேரும்….”என்று பாரதி கேட்க,
“சாப்பிட போனோம்….”என்று அமிர்தா கூற,
“இவ ஏன்டீ இப்படி பேய பார்த்தமாதிரி இருக்கா….”என்று கீதா வெளிரிய முகத்தை பார்த்து கேட்க,
“அது….வந்து க்கா….ஒரு ஆளு….”என்று அமிர்தா ஆரம்பிக்கும் முன்னே,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாரதி….கொஞ்சம் அதிகமா சாப்பிட்டேன்….அதான் ஒருமாதிரி இருக்கு….சரிடீ நாங்க கிளம்புறோம்….”
“என்ன அதுக்குள்ள கிளம்புறீங்களா….ஏன்???”
“பின்ன நாளைக்கு நாங்க வேலைக்கு போக வேண்டாமா……”என்று கீதா கூற பாரதிக்கும் புரிந்தது தான் இருந்தும் இனி இவர்களை எப்போது பார்க்க முடியுமோ என்ற வருத்தமும் அதிகம் இருந்தது.அவளின் வாடிய முகத்தை பார்த்த அவளின் கணவன் சரவணன்,
“ஏய் பாரதி என்னதிது கண்ணு கலங்கிட்டு….உனக்கு எப்பெல்லாம் அவங்களை பார்க்கனும் தோணுதோ போய் பார்க்கலாம்….என்ன நீ என்னையும் சேர்த்து கூட்டிட்டு போகனும்,அப்புறம் என்கூடவே திரும்பியும் வந்திடனும் அவ்வளவு தான் கண்டீஷன்…..”என்று கூற,
“ஓஓஓ….மாப்பிள்ள சூப்பர் பிளானா சொல்லுராரு…கேட்டுக்கடீ பாரதி….”என்று கீதா கிண்டல் பண்ண,
“போடீ…அங்கிட்டு….”
“அச்சோ பாரதிக்காக்கு வெட்கம் வந்திடுச்சு….”என்று அமிர்தாவும் கிண்டல் பண்ண சிறிது நேரம் அங்கு கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.பின் ஒருவழியாக மற்ற இருவரும் கிளம்பி வெளியில் வர,
“என்ன மைனா கிளம்பிட்ட போல…..”என்று கீதாவின் முன் வழிமறித்தான் அவன்.அமிர்தாவிற்கு அவனை கண்டாலே பயமாக இருந்தது அதனால் இரண்டடி தள்ளியே நின்றுவிட,கீதாவோ நடுங்கும் உடலை வெளிக்காட்டாமல் நிற்க முயன்று கொண்டிருந்தாள்.
“அப்புறம் எப்ப ஊருக்கு வரதா இருக்க….ம்ம்….ரொம்ப காக்க வைக்காம வந்துட்டா நல்லது….அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல சொல்லிட்டேன்….”என்று மீண்டும் எச்சரிக்கை செய்ய அதுவரை சற்று தூரத்தில் இருந்த அமிர்தா அவன் கீதாவை மிரட்டவும்,
“ஹலோ….யாரு நீங்க????எதுக்கு என் அக்காவை மிரட்டுறீங்க….”என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க,
“தோடா உனக்கு தங்கச்சி கூட இருக்கா….அண்ணன்-ங்க மட்டும் தான் இருக்காங்கனு சொன்னாங்க…..”என்று அவன் அமிர்தாவை மேலிருந்து கீழ் வரை பார்க்க,
“அமிர்தா வா போகலாம்….”என்று கீதா அமிர்தாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நகர,
“அட பொண்ணு நான் யாருனு கேட்டல்ல….நான் உன் அக்கா புருஷன்….உனக்கு மாமா……”என்று போகும் அவர்களை பார்த்து கத்த அமிர்தா அதிர்ந்து கீதாவை பார்க்க அவளோ எதையும் காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு செல்வதிலேயே இருந்தாள்.
“க்கா என்னக்கா அவரு உங்க….”
“ஏய் பேசாம வாடி…..”என்று பல்லிடுக்கில் கூற அதற்கு மேல் அமிர்தா எதுவும் கேட்கவில்லை.
ஒரு வாரம் கடந்திருந்தது இருவரும் சென்னை வந்து.இப்போது கீதாவும் அமிர்தாவும் ஒரே அறையில் தங்கி கொண்டனர்.பாரதி அளவிற்கு கீதா வாயடிக்கமாட்டாள் எப்போதும் எதிலும் ஒரு கண்டிப்பு இருக்கும்.அதிலே சில நேரங்களில் அமிர்தா திணறுவாள் ஆனாலும் எதும் கூற மாட்டாள்.தனக்கென்று இப்போது இருக்கும் ஒரே நட்பு கீதா மட்டும் தான் அதனால் அமைதியாக கடந்து சென்றுவிடுவாள்.
அமிர்தாவின் வேலை ஒருபுறம் இருந்தாலும் படிப்பையும் அவள் விடவில்லை.இதோடு இரண்டு முறை பரிட்சை எழுதி தோற்றுவிட்டாள் ஆனால் முன்போல் பயந்து அழவெல்லாம் இல்லை தன்னை தானே தேற்றிக் கொண்டு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள்.அதற்கு சிவாவின் வார்த்தைகளும் அவளை ஓட வைத்துக் கொண்டிருந்தது.அன்று சிவாவை பார்த்தது தான் அதன் பிறகு அமிர்தா அவனை தொடர்பு கொள்ளவில்லை அவனும் அவளை தொடர்பு கொள்ளவில்லை.
ஆக சிவா என்பவன் அவளின் வாழ்வில் இல்லாமல் போனான் என்று தான் கூற வேண்டும்.ஆனால் அவளின் நினைவுகளில் அவளுடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான் அந்த நினைவுகள் தான் அவளை உயிருடன் வைத்துக் கொண்டிருந்தது.அந்த கனவு வாழ்வை அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை தன்னுடன் தனக்குள் மட்டும என்று நிறுத்திக் கொண்டாள் அதில் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
சிலருக்கு இது பைத்தியக்கார தனமாக தெரியும் ஆனால் அவளிற்கு அது தான் வாழ்க்கை ஆம் சிவாவை தான்டி அவள் மனதில் இன்னொருவன் வர வாய்பில்லை என்று முடிவெடுத்துவிட்டாள்.பொதுவாக பார்த்தால் இது தவறு என்று கூறுவார்கள் ஆனால் அவளை பொறுத்தவரை அது சரி.தன்னுடைய நினைவுகள் மற்றவர்களை காயம் செய்யாதவரை அது நல்லதாகவே இருக்கும் என்ற ஒரு எண்ணம் அதே எண்ணத்துடன் அவள் ஓடிக் கொண்டிருக்கிறாள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“ம்மா…என்னம்மா என்ன பிரச்சனை ஊருல…..”என்று கீதா கேட்டுக் கொண்டிருக்க,மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ அவளின் முகம் வெளிறியது.அப்போது தான் வேலை முடித்து உள்ளே வந்த அமிர்தா கீதாவின் முகம் மாறுதலை பார்த்துவிட்டு என்ன என்று கண்களால் கேட்க,கையமர்த்தி தன் அம்மா கூறுவதை முதலில் கேட்டவிட்டு பேசியை வைத்தவள் முகம் முழுவதும் பயத்துடன் இருக்க,
“க்கா என்னக்கா என்ன பிரச்சனை…..”
“…..”
“க்கா….கீதாக்கா….”என்று அவளின் தோளை உலுக்க,
“ஆங்….அமிர்தா அவன் என் அண்ணனை அடிச்சிட்டானாம்….அண்ணனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம்…..அவன் நல்லா இருப்பானா….ஏன் என் உயிரை எடுக்குறான்…..ஏற்கனவே நானே செத்துக்கிட்டு தான் இருக்கேன்….இப்ப இவன் இன்னும் சீக்கிரம் சாகடிச்சிடுவான் போல….”என்று கீதா புலம்ப,
“க்கா முதல்ல நீ இப்படி உட்காரு….இந்தா இந்த தண்ணிய குடி….அப்புறம் சொல்லு….”என்று அமிர்தா கூற கீதாவும் அவள் கொடுத்த நீரை பருக,
“இப்ப சொல்லு….”
“என்னத்த சொல்ல….எல்லாம் நான் கட்டுனவனால தான் பிரச்சனை….”என்ற கீதாவின் முகத்தில் அத்தனை எரிச்சல்.கீதாவிற்கு திருமணம் முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது.ஆம் அவளின் அண்ணன் திருமணத்திற்கு சென்றவள் திரும்பி வரும் போது திருமணமாகி தான் வந்தாள்.அவளிடம் பாரதி கேட்ட போது கீதா அதை பற்றி பேசவே மறுக்க அதன் பிறகு அவளின் திருமணத்தை பற்றி பாரதியும் கேட்கவில்லை.பாரதியின் திருமணத்தில் தான் அமிர்தா கீதாவின் கணவனை பார்த்தது.
“என்ன பண்ணாரு….”என்று அமிர்தா கேட்க,
“என்னை வரவைக்க அண்ணன் மேல கை வச்சிருக்கான் படுபாவி….இப்பதான் என் குடும்பத்துல என்னை கொஞ்சம் ஏத்துக்கிட்டாங்க இப்ப இந்த கடன்காரனால என்னை தான பேசுவாங்க….”என்று கூற,
“அக்கா நீங்க கோச்சிக்கலனா நான் ஒண்ணு கேட்கவா….”
“ம்ம் என்ன???”
“க்கா உங்க வீட்டுகாரை பார்த்தா முரடு போல தெரியுறாரே தவிர அவருக்கு உங்களை பிடிச்சிருக்குனு நினைக்கிறேன் அதான்….”என்று மேலும் ஏதோ கூற வந்தவள் கீதாவின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.
“எதாவது பேசுன அடிச்சே கொன்னுடுவேன்….போய் படிக்கிற வேலைய பாரு….அடுத்தவாரம் உனக்கு பரிட்சை தான….”என்று கூறிவிட அமிர்தாவும் அமைதியாக தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.ஆனால் அதன் பின் வந்த நாட்களில் கீதா தான் ஊரில் இருந்து வரும் செய்திகளை கேட்டு மிகவும் சோர்வுடன் இருக்க ஒருகட்டத்தில் அமிர்தா,
“க்கா என்ன தான் பிரச்சனை முழுசா சொல்லு…ப்ளீஸ்…..எனக்கு உன்னை இப்படி பார்க்க முடியல…..”என்று கெஞ்சி கேட்கவும் கீதா தனக்கு நடந்த திருமணத்தை பற்றி கூறி அதன் பின் நடந்தவற்றையும் கூறியவள்,
“இப்ப நீயே சொல்லு அமிர்தா என் மேல என்ன தப்பு இருக்கு….அவன் செஞ்சதுக்கு எல்லாரும் என்னை தான் திட்டுறாங்க…..”என்று கூற,
“இல்லக்கா இந்த தடவையும் நீங்க தப்பு தான் பண்ணுறீங்க….”
“என்னடீ நீ….நீயும் அதையே சொல்லுற…”
“க்கா நான் சொல்லுறத நீ கொஞ்சம் பொறுமையா கேளு….எனக்கு என்னமோ உன் புருஷன் உன்னை காப்பத்தான் இதெல்லாம் செய்யுறாருனு தோணுது….அவரு நினைச்சிருந்தா அன்னைக்கே உங்களை தூக்கிட்டு போயிருக்க முடியும்…ஆனா அவர் உங்களை விட்டுட்டாரு தான…”
“அதான் இப்ப அண்ணனை அடிச்சி வச்சிருக்கானே…இது போதாது…”என்று கீதா கொதிக்க,
“ப்ச்….க்கா இது தான் உங்க கிட்ட எனக்கு பிடிக்கலை….ஏன் எல்லாதிலேயும் அவசரப்படுறீங்க….நீங்க யோசிங்க…அவரு நீங்களா அவர்கிட்ட வருவீங்கனு பார்த்தாரு ஆனா வரலை அதான் இப்படி செஞ்சிருக்காரு…”
“ஓ….அடுத்தவன் காலை உடைக்கிறது சரினு சொல்லுறீயா….அவனை பத்தி பேசாத அமிர்தா அவனை பத்தி உனக்கு தெரியாது….சரியான பொறுக்கி….”என்ற கீதாவின் விழிகளில் அத்தனை வெறப்பு,
“க்கா…இதை நிறுத்த ஒரே வழி நீங்க அவர் கிட்ட போறது தான்….இல்ல இன்னும் தான் பண்ணுவார்….அது தான் அவரு அன்னைக்கு சொன்னாரு….நீங்களே நல்லா யோசிங்க….”என்று கூறி சென்றுவிட்டாள்.கீதாவும் தலைபிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.அவளிற்குமே அமிர்தா கூறுவது தான் சரியென பட்டது தான் செல்லவில்லை என்றால் இன்னும் என்னவேணாலும் செய்வான் என்று நினைத்தவள் அவனை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் பெட்டியை கட்டிவிட்டாள் அடுத்த இரண்டு வாரத்தில்.
error: Content is protected !!