வேள்வி செய்கிறாய் விழியிலே – ஒரு சின்ன முன்னோட்டம்
Post Views:3,190
“கஷ்டப்படுவதற்காகவே, கடவுள் ரொம்ப கஷ்டப்பட்டு கஸ்டமைஸ்டா(Customized – பிரத்யேகமாக) உருவாக்கிய டிசைன் என் லைப்!
அதனால, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல!” என்று, எத்தனை கஷ்டங்கள், பிரச்சினைகள் வந்தாலும், அப்படியே நீலகண்டன் மாதிரி எடுத்து விழுங்கி விட்டு,
வெளியே சிரித்துக்கொண்டே அத்தனையையும் லெப்டில் ஹாண்டில் பண்ணுகிற –
Advertisement
“எவ்வளவோ பார்த்துட்டோம், இத பாக்க மாட்டோமா?” என்று போராட்ட வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் பின்னணியில் இருக்கும் மதுமிதா அலைஸ் மில்லெட் மது! – நம் நாயகிக்கும்
ஒரு சின்ன கஷ்டத்தையோ, தோல்வியையோ, அவமானத்தையோ வாழ்வில் பார்த்தேயிருக்காத, பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படாத,
Advertisement
“born with a silver spoon” வகையறாவான நம் நாயகன் டாக்டர் ரகுநந்தன் ராமநாதனுக்கும்
Advertisement
இடையே ஏற்படும் பந்தம்.. அவர்கள் வாழ்க்கைப் பயணம் .. நாமும் சேர்ந்துப் பயணிப்போமா?
குட்டி டீசர்
Advertisement
“என்ன வெங்கடேஷ் சொல்ற, அந்த மது, ஏற்கனவே நம்ம ஹாஸ்பிட்டல் கான்டீன் காண்ட்ராக்ட்டுக்கு அப்ளை பண்ணி ரிஜெக்ட் ஆனவளா?”
கோபத்தில் ரகு நந்தனின் முகம் சிவந்தது!
ஆமா சார், அவங்க பர்சனல் இன்போர்மேசன்களை நம் சிஸ்டத்தில் ஏற்றும் போது தான் தெரிந்தது!
ரகுநந்தன் ராமநாதன் – நகரத்தின் பேர் சொன்னால் அறியக் கூடிய பிரபல டாக்டர்!
காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் – Gastroenterology – இரைப்பை குடல் சம்பந்தமான நோய் களையும் நிபுணன்!
அவன் குடும்பமே டாக்டர் குடும்பம்! அப்பா, பெரியப்பா, தாத்தா, அத்தை, மாமா, அக்கா, அத்தான், அண்ணன் அப்புறம் அண்ணி கூட!
நகரின் புறநகர் சென்னை பைபாஸ் சாலையில் அமைந்து இருந்தது அவர்கள் மருத்துவ சாம்ராஜ்ஜியம்!
அவன் இரைப்பை நோய் சம்பந்தப்பட்ட டாக்டர் என்பதால், ஹாஸ்பிட்டல் கான்டீன் காண்ட்ராக்ட் மட்டும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது!
மற்ற மானேஜ்மென்ட் விசயங்களை எல்லாம் அவன் அண்ணன் டாக்டர் ராகவன் தான் பார்த்துக் கொள்வான்!
இப்போ அந்த காண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து இருப்பவள் மேல் தான் இவ்வளவு கோபம் அவனுக்கு!
அவள் எங்கே எடுத்தாள்?
இவர்கள் அல்லவா கூப்பிட்டு கொடுத்தார்கள்!
கொடுக்கும் படி செய்து விட்டாளே!
கடைசியில் நாம் ஏற்கனவே ரிஜெக்ட் செய்த ஒருவளுக்கா, நாம் வலிய போய் டீல் பேசி , தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது போல காண்ட்ராக்ட்டை கொடுத்து இருக்கோம்?
பேசப் போன ஹாஸ்பிட்டல் அட்மின் ஆபிசர் கமலா ஆண்ட்டி கூட இதைப் பற்றி சொல்லவே இல்லையே!
என்னமோ அவன் சொல்வதற்காகவே காத்து இருந்த மாதிரி ஓடிப்போய் அவளிடம் காண்ட்ராக்ட் போட்டு விட்டு வந்து விட்டாரே!
“பெரிய கை காரி தான் போல இந்த மது! உன் க்ளோஸ் பிரெண்ட் நான் எடுத்து இருந்த காண்ட்ராக்ட்டை எப்படியோ என் கிட்ட இருந்து பிடுங்கி விட்டாளே!” என்று ஏற்கனவே அங்கே காண்டீன் நடத்தி வந்த அவன் ஸ்கூல் பிரண்ட் பார்த்திபன் சொல்லியிருந்தான்!
எங்கேயோ அவமானப்பட்டு போனது போல் ஆனது அவனுக்கு!
அந்த பெண்ணின் மேல் அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டது!
அவள்.. அந்த பெண்!
மதுமிதா – மில்லெட் மது!
சிறு தானிய உணவு தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்! அவார்ட் வின்னர்!