நீ எனக்கு தந்த காதல் – 32.
நிலாவின் ஆசையை அவள் வாயிலாகவே தெரிந்து கொள்ளும் தமிழ்.
தமிழ் அப்பா வேலை முடிந்து ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வந்தார்.
Advertisement
இனி,
‘ஏங்க போய் கை, கால், மூஞ்சி கழுவிட்டு வாங்க காபி சாப்டலாம்’, என தமிழ் அம்மா சொல்ல தமிழ் அப்பா சென்றார்.
Advertisement
Advertisement
‘நிலா, தமிழ் வாங்க காபி குடிக்கலாம்’, என தமிழ் அம்மா கூப்பிட இருவரும் மேலிருந்து இறங்கி வந்தனர்.
தமிழ் அப்பாவும் பிரஷப் ஆகி வர அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டே காபி குடித்தனர்.
Advertisement
‘டாடி ரொம்ப நாள் கழிச்சு ஆபிஸ்கு போனீங்களே எல்லாம் செட் ஆயிருச்சா. சாரி டாடி’, என தமிழ் கேட்க,
‘டேய் நான் சமாளிச்சுக்குவேன். பத்தாததுக்கு நிலா கூட இருக்கா. நீ எப்டி இருக்க. உனக்கு இப்ப பரவால்லயா.’, என தமிழ் அப்பா கேட்க,
‘நிலா என்ன டியூவல் ரோலா. அப்பாக்கு ஹெல்ப் பண்ற, என்னைய பாத்துக்கற’, என தமிழ் கேட்க நிலா முறைக்க,
‘அவரு அப்டி தான் அங்கிள். அவர விட்டா அந்த கம்பெனிய யாருமே பாத்துக்க முடியாத மாதிரி ஃபீல் பண்ணுவாரு. ஆனா ஒன்னு மறந்தறாரு அவருக்கு சொல்லிக் குடுத்து வழி காட்னதே நீங்க தான்னு’, என நிலா கிண்டல் செய்ய,
‘சரி சரி அப்பா கஷ்டப் படுவாருன்னு நினச்சேன்.’, என தமிழ் சொல்ல,
‘நிலா ஆனா சும்மா சொல்லக் கூடாது. என்ன தான் நான் வழிகாட்னாலும் கம்பெனிய சூப்பராவே ரன் பண்றான்’, என தமிழ் அப்பா சொல்ல,
‘அது தான் ஊருக்கே தெரியுமே. உங்களுக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கு’, என தமிழ் அம்மா சொல்ல,
‘நிலா அம்மாவும் பையனும் ஒன்னு சேந்துட்டாங்க நாம அமைதியாக வேண்டியது தான்.’, என தமிழ் அப்பா சொல்ல,
‘ஆமா அங்கிள் இப்ப தான் உங்க கஷ்டம் எனக்கு புரியுது ரெண்டு பேரையும் எப்டி தான் தனியா சமாளிச்சீங்களோ’, என நிலா சொல்ல,
‘நிலா உன்ன’, என தமிழ் எழுந்து நிலாவை அடிக்க வர நிலா அங்கிருந்து ஓட தமிழ் அவளை துரத்தும் போது தலைசுற்ற சிறிது தடுமாற நிலா வேகமாக வந்து அவனை பிடித்து ஷோபாவில் உட்கார வைத்தாள்.
‘தமிழ் என்னாச்சு’, என நிலாவும், தமிழ் பெற்றோரும் கேட்க,
தமிழ் தனக்கு தலைசுற்றியதை பற்றி சொல்லாமல் நிலாவை பிடித்து கொண்டு, ‘இப்ப எப்டி ஓடுவ. எங்கிட்ட நல்லா மாட்டி கிட்டியா’, என தமிழ் சொல்ல,
‘தமிழ் ப்ளீஸ் தயவு செஞ்சு இன்னொரு தடவ இப்டி பண்ணாதீங்க. ஆன்டி நான் போய் நைட் டிபன் ரெடி பண்றேன்’, என சொல்லி நிலா அழுது கொண்டே சமையலறைக்கு சென்றாள்.
‘டேய் எதுல விளையாடறதுன்னு உனக்கு விவஸ்தையே இல்லடா’, என சொல்லி தமிழ் அம்மாவும் நிலா பின்னாடியே சென்று அவளை சமாதானப் படுத்த இருவரும் சேர்ந்து நைட் டிபன் செய்தனர்.
‘அவ கூட விளையாடறது உனக்கு அவ்ளோ பிடிக்குமா’, என தமிழ் அப்பா கேட்க,
‘டாடி அது என்னவோ தெரியல அவ எனக்காக அழறத பாத்துகிட்டே இருக்கனும்னு தோனுது. அதுக்காகவே காலம் பூராவும் உடம்பு சரியில்லாம போனா கூட பரவால்லன்னு ஆசையா இருக்கு’, என தமிழ் சொல்ல,
‘டேய் நிலா உனக்கு தர அரவணைப்ப நீ அனுபவிக்க ஆரம்பிச்சிட்ட. இதுவும் கூட நீ நிலா மேல வெச்சிருக்க அன்பு தான். சரி போ நிலாவ சமாதான படுத்து.’, என தமிழ் அப்பா சொல்ல,
‘ம் நீங்க கவலைப்படாதீங்க. என்னால அவ கூட பேசாம இருக்க முடியாது. அதனால எப்டியும் அவள சமாதானம் பண்ணிருவேன்.’, என தமிழ் சொல்ல,
‘சரி வா நியூஸ் கேக்கலாம்’, என தமிழ் அப்பா சொல்ல இருவரும் சேர்ந்து பார்த்தனர்.
டிபன் ரெடி ஆனதும் நிலா கூப்பிட எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
பிறகு அவரவர் அறைக்கு சென்று உறங்க போயினர்.
நிலா தமிழுக்கு மாத்திரை தர அதை வாங்கி போட்டு விட்டு, ‘ நிலா என் மேல கோவமா’, என தமிழ் கேட்க,
‘அதெல்லாம் ஒன்னுமில்ல நீங்க படுத்து தூங்குங்க ‘, என நிலா சொல்ல,
‘நிஜமாவா நான் என்ன செஞ்சாலும் எம்மேல உனக்கு கோபம் வராதா’, என தமிழ் கேட்க,
‘என்னோட எல்லாமே நீங்க தான். அதே மாதிரி நான் யார்கிட்டயும் கோபமா நடந்துக்க மாட்டேன். கோபம் ஒரு கெட்ட ஆயுதம் அது மத்தவங்களயும் அழிச்சிரும், கோபப்படுற அவங்களையும் அழிச்சிரும்னு எங்க அப்பா சொல்லுவாரு. நீங்க எப்பவும் என்னை கோபப் படுத்தர மாதிரி நடந்துக்க மாட்டீங்க.’, என நிலா சொல்ல,
‘ம் உன்ன லவ் பண்றதுக்கு முன்னாடி கூட நான் நடந்துக்கிட்டது இல்லயா’, என தமிழ் கேட்க,
‘ம் ஒரே ஒரு தடவ ஒரு டெண்டர் விசயத்துல நான் தான் அமவுண்ட லீக் பண்ணிட்டேன்னு தப்பா புரிஞ்சு கிட்டு கோபத்துல நீ காசுக்காக எத வேனா பண்ணுவ. அதான் என் கேர்ள் ப்ரெண்டா நடிக்கவே கான்ட்ராக்ட்ல சைன் பண்ணியே அப்டின்னு என்ன திட்னீங்க. அப்ப கூட உங்க மேல கோபத்த விட என்னை நம்பலையேன்னு வருத்தம் தான் நிறைய இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சதும் நீங்களே ரெண்டு மூனு தடவ சாரி சொல்லி மெசேஜ் அனுப்புச்சீங்க. சாரி கேக்கறவன் மனுசன் மன்னிக்கறவன் பெரிய மனுசன்னு உங்கள மன்னுச்சுட்டேன்’, என நிலா சொல்ல,
‘கண்டிப்பா நீ பெரிய மனுசி தான். அப்ப நீ எவ்ளோ கஷ்டப் பட்ருப்பேன்னு எனக்கு புரியுது. சாரி நிலா’, என தமிழ் சொல்ல,
‘அதான் அப்பவே சொல்லிட்டீங்களே. இப்ப வேற எதுக்கு’, என நிலா கேட்க,
‘சரி ஒரு கேம் விளையாடலாமா. மாத்தி மாத்தி ரெண்டு பேரும் கேள்வி கேக்கனும் அதுக்கு இன்னொருத்தவங்க பதில் சொல்லனும். யார் அதிகமா மத்தவங்கள பத்தி தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு பாப்போம். கம்பேட்டபிளிட்டி டெஸ்ட். ஓகே வா’ என தமிழ் சொல்லி விட்டு தனக்குள் ‘எப்டியும் நீ தான் ஜெயிப்பேன்னு எனக்கு தெரியும் நிலா. ஆனாலும் உன்ன பத்தி நான் தெரிஞ்சுக்க தான் இந்த கேம்’, என சொல்லிக் கொண்டான்.
‘ம் ஓகே. நீங்க தான் ஃபர்ஸ்ட்’, என நிலா சொல்ல,
‘எனக்கு பிடிச்ச சாப்பாடு’, என தமிழ் கேட்க,
‘டிபன்ல சப்பாத்தி, ரைஸ்ல தக்காளி சாதம். தூக்கத்துல குடுத்தா கூட எழுந்து சாப்டுட்டு அப்புறமா தூங்குவீங்க’, என நிலா சொல்ல,
‘ம் கரெக்ட். சரி இப்ப நீ கேளு’, என தமிழ் சொல்ல,
‘அதே தான் எனக்கு பிடிச்ச சாப்பாடு எது’, என நிலா கேட்க,
‘ம் புரோட்டா, பிரியாணி’, என தமிழ் யோசித்து சொல்ல,
‘புரோட்டா கரெக்ட். ஆனா எனக்கும் தக்காளி சாதம் தான் ரொம்ப பிடிக்கும்’, என நிலா சொல்ல இப்படியே இருவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
‘சரி லாஸ்ட் க்வசின் என்னோட ஆசை என்ன ‘, என தமிழ் கேட்க,
‘சோ சிம்பிள் க்வசின் மிஸ்டர் தமிழ். இவ்ளோ நாள் உங்க கூட இருக்கேன் இது கூட தெரியலன்னா எப்டி. உங்க கம்பெனிய பெஸ்ட் கம்பெனி ஆக்கனும். எல்லா ரேஞ் மக்களும் உங்க ப்ராடக்ட்ஸ யூஸ் பண்ணனும் , என நிலா சொல்ல,
‘ம் சூப்பர். சரி உன்னோட லாஸ்ட் க்வசின்’, என தமிழ் கேட்க,
‘அதே கேள்வி தான் என்னோட ஆசை என்ன ‘, என நிலா கேட்க,
‘ம் சாரி நிலா. இந்த தடவ நீ சொல்லு. அப்புறம் கடைசி வரைக்கும் நான் ஞாபகம் வச்சுக்கறேன்’, என தமிழ் சொல்ல,
‘உங்க அளவுக்கு என் ஆசை பெருசு இல்ல. உங்க கூட சந்தோஷமா வாழனும். நீங்க கேட்ட மாதிரி ஒரு பொண்ணு, என் ஆசைக்கு ஒரு ஜூனியர் தமிழ், ரெண்டே குழந்தைங்க. நாம, நம்ம குழந்தைங்க, நம்ம பேரண்ட்ஸ், நம்ம ப்ரெண்ட்ஸ் ஜாலியா உங்க கூட லைஃப என்ஜாய் பண்ணனும். அவ்ளோ தான்’, என நிலா சொல்ல,
‘அவ்ளோ தான நிறைவேத்திட்டா போச்சு.’, என தமிழ் சொல்ல,
‘சரி லேட்டாச்சு தூங்கலாமா’, என நிலா கேட்க,
”ம் ஓகே’, என தமிழ் சொல்ல நிலா லைட் ஆஃப் செய்து விட்டு வந்து படுக்க இருவரும் தூங்கினர்.
அடுத்த நாள் காலையில் எழுந்து தமிழ் அப்பா கிளம்பி சாப்பிட்டு விட்டு ஆபிஸ்க்கு செல்ல நிலா, தமிழ், அவனது அம்மா மூவரும் சாப்பிட்டு விட்டு டிவி பார்க்க கவினிடமிருந்து தமிழுக்கு போன் வர தமிழ் போனை எடுத்துக் கொண்டு வராண்டாவில் நடந்துக் கொண்டு பேசினான்.
‘டேய் தமிழ் ஏன்டா அன்னைக்கு வீட்டுக்கு போய்ட்டு கூப்டவே இல்ல. சரி ஆபிஸ்க்கு போயிருப்ப ஈவ்னிங் வந்ததுக்கு அப்புறம் கூப்டுவன்னு பாத்தா அப்பவும் கூப்டல’, என கவின் கேட்க,
‘அத ஏன்டா கேக்குற’, என ஆரம்பித்து நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் தமிழ்.
‘ஏன்டா இவ்ளோ நடந்திருக்கு எனக்கு ஒரு போன் கூட பண்ணல’, என கவின் கேட்க,
‘நீ வேற நானே நேத்து மதியம் தான் மயக்கத்துல இருந்து கண் முழிச்சேன். ‘, என தமிழ் சொல்ல,
‘பாவம் டா நிலா. தனியாவே எல்லாத்தையும் சமாளிச்சிட்டா. அவ கிட்ட சொல்ல வேண்டிய தான எதாவது ஹெல்ப்னா கவின கூப்டு ன்னு’, என கவின் சொல்ல,
‘டேய் அவ அவளோட தம்பியவே வர வேணான்னு சொல்லிட்டா. இதுல நீ வேற ‘, என தமிழ் சொல்ல,
‘ரொம்ப ஸ்ட்ராங் தான் நிலா. சரி இப்ப எப்டி இருக்கு உனக்கு’, என கவின் கேட்க,
”ம் கொஞ்சம் பரவால்ல. ஆனா அப்பப்ப தலைசுத்தற மாதிரி இருக்கு. டாக்டர் சொல்லி தான் அனுப்புச்சாரு. இன்ஜக்ஷன் எஃபக்ட் ரெண்டு நாளைக்கு அப்டி தான் இருக்கும்னு. அப்புறம் நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். நான் ஆபிஸ்க்கு போனதும் கூப்டறேன்’, என தமிழ் சொல்ல,
‘தனியாவா எத பத்தி’, என கவின் கேட்க,
‘ம் எங்க வாழ்க்கைய பத்தி’, என தமிழ் சொல்ல,
‘என்னது உங்க வாழ்க்கைய பத்தியா. அதுக்கு என்ன ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா தான இருக்கீங்க. ஓ உங்க வாழ்க்கைய புதுசா ஸ்டார்ட் பண்ண போறத பத்தியா’, என கவின் கேட்க,
‘ம் ஆமா. சரி பாய்’, என சொல்லி தமிழ் போனை வைத்தான்.
தமிழ் தங்கள் வாழ்க்கைக்காக எடுக்க போகும் முடிவு என்ன?
தொடரும்…
